Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எழுக தமிழ் எழுச்சிப் பேரணி தமிழ் மக்கள் பேரவை - யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம் கூடி ஆராய்வு

Featured Replies

19379.jpg

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் செப்ரெம்பர் 16ஆம் திகதி நடைபெறவிருக்கும்  எழுக தமிழ் எழுச்சிப் பேரணியை  ஒருங்கிணைந்த வகையில், ஒட்டு மொத்தத் தமிழ் மக்களின் பங்கேற்புடன் நடத்துவது குறித்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளும், தமிழ் மக்கள் பேரவையினரும் கூடி ஆராய்ந் துள்ளனர்.

எழுக தமிழ் எழுச்சிப்பேரணியை முன் எப்போதும் இல்லாத  வகையில் உணர்வு பூர்வமாக நடத்துவது தொடர்பிலும் தமிழ் அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்பைப் பெறுவது தொடர்பிலும் இச் சந்திப்பில் ஆராயப்பட்டதாக தமிழ் மக்கள் பேரவையின் ஊடகப் பிரிவு விடுத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

http://valampurii.lk/valampurii/content.php?id=19379&ctype=news

  • தொடங்கியவர்

 

எமதருமை இளைஞர்களுக்கு ஓர் அன்பு மடல்

என்றும் எங்கள் இனத்தின் பலமும் பாதுகாப்புமாக இருக்கக்கூடிய எமதருமை இளைஞர்களுக்கு அன்பு வணக்கம்.

எங்கள் இளைஞர்கள் எப்போதும் நேர்மையை விரும்புபவர்கள். உண்மையை நேசிப்பவர்கள். அதர்மத்தைக் கண்டு கொதித்தெழுபவர்கள். அநீதியை வெட்டி வீழ்த்தி நீதிக்கு இடம் கொடுக்கத் துடிப்பவர்கள். 

இதனாலேயே பல்லாயிரக்கணக்கான எம் தமிழ் இளைஞர்கள் தங்கள் உயிரை தமிழ் இனத்துக்காக ஈந்தளித்தனர்.

இப்பெரும் தியாகம் சாதாரணமானதன்று. தியாகத்தின் முடிவுகள் எப்படியாயிற்று என்பது கேள்வியல்ல. 

மாறாக செய்யப்பட்ட தியாகமே இங்கு முதன்மையும் முக்கியமுமானது.
ஆம், தன் இனம் வாழ்வதற்காக, தன் தாய் மொழி தமிழ் நிலைத்து நிற்பதற்காக, தன் எதிர்காலச் சந்ததி உரிமை கொண்ட சமூகமாக வாழ்வதற்காக தம்முயிரைத் தியாகம் செய்வ தென்பது எங்கும் நடக்கக்கூடியதன்று.

இதன்காரணமாகவே எங்கள் தமிழினம் தியாகத்தின் உச்சத்தை உலகுக்கு எடுத்தியம்பிய இனம் என்று போற்றப்படக்கூடியது.

ஈழத் தமிழினத்தின் இளைஞர் சமூகம் செய்த தியாகத்தை இந்த உலகம் இன்றோ, நாளையோ பெருமைப்பட்டுப் பேசாமல் இருக்கலாம்.

ஆனால் என்றோ ஒரு காலத்தில் எங்கள் தமிழினத்தின் தியாகத்தை ஒரு பெரும் வரலாறாக இந்த உலகம் கற்றுக் கொண்டிருக்கும். இது நிச்சயம் நடக்கும்.

அதேநேரம் அந்தத் தியாகத்துக்குச் சொந்தமான ஈழத் தமிழினம் தன் பெருமையை மறந்து இழந்து வாழ்வது என்பது தாள முடியாத துன்பத்தைத் தரக்கூடியது.

ஆகவே தான் அன்புக்குரிய எம் இளைஞரகளே! எங்கள் இனத்தின் பெருமையை உங்கள் இதயங்களில் ஏற்றி வையுங்கள்.

எங்கள் மண்ணில் நடந்த தியாகத்தை, அர்ப்பணிப்பை, ஈகையை உங்கள் இளைய சகோதரர்களுக்கு எடுத்துக் கூறுங்கள்.

எங்கள் பெருமையை, எங்கள் மண்ணில் நடந்த விடுதலைப் போராட்டத்தை நாங்களே மறப்போமாயின் அதுவே எங்கள் இனத்துக்கு ஏற்பட்ட மிகப்பெரும் பேரிழப்பாக அமையும்.

ஆகையால் எங்கள் அன்பார்ந்த தமிழ் இளைஞர்கள் தமிழ்ப்பற்றை எப்போதும் தங்கள் இதயங்களில் ஏற்றி வைக்கட்டும். எம் இனம் வாழ வேண்டும் என்பதை உலகம் ஏற்றுக் கொள்ளும் வகையில் எடுத்துக் கூறட்டும்.

இதற்கான ஓர் ஏற்பாடாக எழுக தமிழ் எழுச்சிப் பேரணி எதிர்வரும் செப்ரெம்பர் 16 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதில் ஒட்டுமொத்தத் தமிழ் இளைஞர்களும் அணிதிரண்டால் நிச்சயம் எங்கள் இனத்தின் அவலம் உலகரங்கேறும். அது எங்களுக்கான விடிவைப் பெற்றுத் தரும். 

எனவே அன்பார்ந்த எம் இளைஞர்களே! தமிழினம் வாழ்வதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒருமித்துக் குரல் கொடுப்போம்.

http://valampurii.lk/valampurii/content.php?id=19384&ctype=news

  • தொடங்கியவர்

எழுக தமிழ் பேரணி எந்தவொரு கட்சியையும் சார்ந்தது அல்ல. #கட்சி_பேதங்களை_மறந்து தமிழ் மக்களின் வருங்காலத்தை சிந்தனையில் வைத்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய தருணமிது.

?__tn__=kCH-R&eid=ARAwBo_kHtjGD6Edrh2lXJ

14 hours ago, ampanai said:

எழுக தமிழ் பேரணி எந்தவொரு கட்சியையும் சார்ந்தது அல்ல. #கட்சி_பேதங்களை_மறந்து தமிழ் மக்களின் வருங்காலத்தை சிந்தனையில் வைத்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய தருணமிது.

?__tn__=kCH-R&eid=ARAwBo_kHtjGD6Edrh2lXJ

கஜேந்திரன்-கஜேந்திரகுமார் கோஷ்டி இதில் யாரும் கலந்துகொள்ளக் கூடாது, இந்த பேரணி தோல்வியடைய வேண்டும் என்டு மிகக்கடுமைய முக்கி முனகுவதாக தகவல்கள் சொல்கின்றன.

 

யாரிட்ட காசை வாங்கிக்கொண்டு இப்பிடிச் செய்றாங்களோ தெரியல?

  • தொடங்கியவர்

எழுக தமிழ் எழுச்சிப் பேரணி வரலாற்று பெரும் நிகழ்வாகட்டும்-தாய்த் தமிழ் உறவுகளுக்கு சீமான் பேரழைப்பு

 

தமிழீழ தாயகத்தை சிதைத்து அழித்த சிங்கள அரசு போரின் பேரழிவுக்கு பிறகு தமிழர் தாயகத்தில்  திட்டமிட்டு சிங்கள குடியேற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.

 நமது வழிபாட்டுத்தலங்களை இடித்து தகர்த்த சிங்கள அரசு இன்று புத்த விகாரைகளை நமது நிலமெங்கும் நிறுவி வருகிறது.

இராணுவ குடியேற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்துவதற்கு வழியற்ற நிலையில் நிர்க்கதியாக நம் தமிழ் மக்கள் நின்று கொண்டிருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் தட்டிக்கேட்பதற்கு தமிழ்மக்கள் ஒன்றுசேர்கின்ற ஒரு அரிய வாய்ப்பாக எழுக தமிழ் என்ற புரட்சிகர எழுச்சிமிகுந்த பேரணியை நமது தமிழ் சொந்தங்கள் ஈழத்தில் முன்னெடுக்கிறார்கள்.

தமிழ் மக்கள் பேரவையால் முன்னெடுக்கப்படுகின்ற இந்த எழுக தமிழ் நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு பேரெழுச்சியான நிகழ்வாக நிகழ்த்திக் காட்டவேண்டும்.

இந்த எழுக தமிழ் பேரெழுச்சியின் மூலம் சர்வதேசமும் இந்திய பெருநாடும் இலங்கை அரசும் நம்மை திரும்பிப் பார்க்க வேண்டும்.

நாம் முன்வைக்கின்ற கோரிக்கைகளை ஏற்று அதை நிறைவேற்றித்தர வேண்டும். 
எனவே இந்த நிகழ்வு ஒரு வரலாற்றுப் பெருநிகழ்வாக நிகழவேண்டும். 

அதை நாம் நிகழ்த்திக் காட்ட வேண்டும். இதற்கு எழுக தமிழ் பேரெழுச்சியில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என சீமான் கேட்டுக் கொண்டுள்ளார்.                             

http://valampurii.lk/valampurii/content.php?id=19399&ctype=news

  • தொடங்கியவர்

எழுக தமிழ் பேரணியின் ஊடாக முக்கிய கோரிக்கைகளை முன்வைக்கும் சிவசக்தி ஆனந்தன்

தமிழ் மக்களின் தீர்வுகளுக்கான முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து  "எழுக தமிழ்" பேரணியின் ஊடாக சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

பல கோரிக்கைகளை முன்னிறுத்தி எதிர்வரும் யாழ்ப்பாணம் முற்றவெளியில் நடைபெற இருக்கும் எழுக தமிழ் பேரணிக்கு வலு சேர்க்கும் முகமாக பொது அமைப்புக்கள் உடனான சந்திப்பொன்று இன்றையதினம் வவுனியாவில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

http://www.hirunews.lk/tamil/223809/எழுக-தமிழ்-பேரணியின்-ஊடாக-முக்கிய-கோரிக்கைகளை-முன்வைக்கும்-சிவசக்தி-ஆனந்தன்

  • தொடங்கியவர்

எழுகதமிழ் எழுச்சி பேரணிக்கு ஆதரவு கோரி மாபெரும் விழிப்புணர்வு பேரணி

எழுக தமிழ் மக்கள் எழுச்சி போராட்டத்திற்காக மக்களை அணி திரட்டும் முகமாக விழிப்புணர்வு பேரணி ஒன்று இன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.

IMG-632d2c3e64aabad3c30d5288d96e457b-V.j

இந்நிகழ்வானது வவுனியா நகரை அண்டிய பகுதிகள் மற்றும்  பஸ் நிலையங்கள், சனநடமாட்டம் உள்ள பகுதிகள் அத்துடன் செட்டிகுளம்  பகுதிகளிலும் இவ் பிரச்சார நடவடிக்கை வவுனியா மாவட்ட  ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் தமிழ்மக்கள் கூட்டணியினரால் இன்று காலை 9மணியிலிருந்து மாலை 3.30மணி வரையும் இடம்பெற்றிருந்தது.

IMG-20190911-WA0005.jpg

இந் நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அரசியல் கைதிகளின் உறவினர்கள், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் உறுப்பினர்கள் , தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா மாவட்ட உறுப்பினர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

IMG-e4da1c4a51f62ce49312ac9f8e21cc86-V.j

https://www.virakesari.lk/article/64590

  • தொடங்கியவர்

’எழுச்சிப் பேரணிக்கு ஆதரவு’

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணத்தில் செப்டெம்பர் 16ஆம் திகதி இடம்பெறவுள்ள எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவு வழங்குவதாக, யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் தலைமையில் செப்டெம்பர் 16ஆம் திகதி, யாழ். முற்றவெளியில் நடைபெறவிருக்கின்ற எழுக தமிழ் பேரெழுச்சிக்கு. யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தனது ஆதரவினை வழங்குவதென, செப்டெம்பர் 9ஆம் திகதி நடைபெற்ற ஆசிரியர் சங்க விசேட பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மக்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக நிறுத்து, சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடாத்து, தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய், வலிந்த காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பில், உடனடி விசாரணை நடாத்து, வடக்கு - கிழக்கு இராணுவ மயமாக்கலை நிறுத்து, இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் மீளக் குடியமர்த்து ஆகிய கோசங்களை முன்னிறுத்தி எழுக தமிழ் எழுச்சிப் பேரணி நிகழ்த்தப்படவுள்ளது.

இந்தக் கோரிக்கைகளில் முக்கியத்துவம் கருதி, யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவளிப்பதெனத் தீர்மானித்துள்ளது.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/எழுச்சிப்-பேரணிக்கு-ஆதரவு/71-238329

  • தொடங்கியவர்

தமிழ் மக்களின் கோரிக்கையை வலுப்படுத்த எழுக தமிழ் எழுச்சிப் பேரணியில் அனைவரும் அணிதிரள்க-யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவிப்பு

19434.jpg

தமிழ் மக்களின் கோரிக்கைகளினை வலுப்படுத்த எழுக தமிழ் எழுச்சிப்பேரணியில் அனைவரையும் ஒன்றிணையுமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித் துள்ளது. 

தமிழ்த் தேசியத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் எவருமே இத்தகைய மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்காமல் பின்நிற்க முடியாது என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. 

எழுக தமிழ் மக்கள் எழுச்சி பேரணிக்கு ஆதரவாக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றி யத்தால் விடப்பட்ட அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது வருமாறு, தமிழ்த்தேசிய பரப்பில் மக்கள் எழுச்சிப்போராட்டங்கள் வலுப்பெற வேண்டியது இன்றைய காலத்தின் தேவையாகும். 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது தமிழ்த் தேசிய உரிமைப் போரட்டத்திற்கு தன்னாலான பங்களிப்பை என்றும் வழங்கி வந்துள்ளது. 

ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கான மக்கள் எழுச்சி போராட்டமாகிய எழுக தமிழிற்கும் காலத்தின் தேவை உணர்ந்து நாம் பூரண ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்குகின்றோம். 

வரலாற்றில் இருந்து பாடங்கற்றுக்கொள்ள தமிழ் மக்கள் தவறியதன் விளைவாகவே இன்று வரையில் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு கொண்டிருக்கின்றோம். 

தமிழ் மக்களின் பூர்வீக தமிழர் தாயகத்தில் தொடர்ச்சியாக இனப்பரம்பலை மாற்றியமைக்கும் வகையிலான திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்களினையும் திட்ட மிட்ட வகையிலான விகாரைகள் அமைக்கப்படுவதனையும் தடுக்க முடியாத துர்ப்பாக்கிய நிலையில் நாம் இருக்கின்றோம் என்பதனை அறிந்து கொள்ளாதவர்களாய் எமக்குள் நாம் கட்சிகளாக பிரிந்து நின்று அடிபடுவது ஆரோக்கியமானதா? எமது அரசியல் உரிமைகளினை வென்றெடுக்கும் வரையிலாவது குறைந்தபட்சம் நாம் போராட்டகளத்தில் என்றாலும் ஒன்றுபட்டு நிற்க வேண்டியது தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் எங்கள் ஒவ்வொரு வரினதும் தார்மீக கடமையாகும். 

தமிழ் மக்களின் கோரிக்கைகளினை வலுப்படுத்த எழுக தமிழ் போன்ற மக்கள் எழுச்சிப் போராட்டங்களும் தமிழ் மக்கள் பேரவை போன்றதான மக்கள் இயக்கம் என்பதுவும் காலத்தின் கட்டாய தேவையாக உள்ளது. 

தமிழ் மக்கள் பேரவை உருவாக்கப்பட்ட காலம் தொடக்கம் இன்று வரையில் மக்கள் தாமாகவே முன்னெடுத்த தன்னெழுச்சி போராட்டங்களில் பேரவை எத்தகைய வகிபாகங்களினை கொண்டிருந்தது என்பது கேள்விக்குரிய ஓர் விடயமாக உள்ளது. 

அதுமட்டுமன்றி இன்று பேரவை மீது சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுகளில் இருந்து பேரவை மீண்டெழுவதற்கு தன்னை சுயவிமர்சனம் செய்து கொண்டு அதன் ஊடாக தன்னை மறுசீரமைத்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாய கடமையாகும். 

இதனை தமிழ் மக்கள் பேரவையினரும் ஏற்றுக் கொண்டு எழுக தமிழிற்கு பிற்பட குறுகிய காலத்தில் மறுசீரமைப்பை மேற்கொள்வதாக அளித்த வாக்குறுதியின் மீது மாணவர் ஒன்றியம் நம்பிக்கை கொள்கின்றது. 

தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளினை வென்றெடுக்கும் வரையிலாவது குறைந்தபட்சம் தமிழ் மக்களினை ஓரணியாக ஒன்றுதிரட்டி ஓர் குடையின் கீழ் வைத்திருக்க இன்றைய காலச்சூழலில் அரசியல் கட்சிகளினால் முடியாதுள்ளது. 

மாறாக அத்தகைய கடமையினை ஓர் மக்கள் இயக்கம் ஒன்றின் மூலமாகவே சாத்தியப்படுத்த முடியும். 

இத்தகையதொரு சூழலில் தான் மக்கள் இயக்கம் ஒன்றினை பலப்படுத்த வேண்டிய இக்கட்டான ஓர் காலகட்டத்தில் இன்று தமிழ் சமூகம் உள்ளது என்பதை மறுதலிக்க முடியாது. 

நாம் எமது அரசியல் உரிமைகளினை வென்றெடுப்பதற்கு அரசியல் ரீதியாக ஈழத்தமிழர்களாகிய நாம் எம்மை பலப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. 

இன்று எமது பிரதிநிதித்துவ பலத்தை சிதறடிக்கின்ற வகையில் தமிழ்த் தேசிய பரப்பில் மூன்று தரப்புகளாக பிளவுபட்டு நிற்கின்றோம். 

உண்மையாக தேசியத்தை நேசிப்பவர்களாக இருந்தால் மூன்று தரப்புகளாய் பிளவுபட்டு நிற்கும் அரசியல் கட்சிகள் ஒற்றுமைப்பட முடியும். 

இங்கு தமிழ்த் தேசியத்தின் நலனை விட கட்சிகளின் நலன்களே முதன்மை பெறுவதனாலேயே இத்தகைய பிளவுகள் ஏற்படுகின்றன. இன்றைய சூழலில் தேசியத்தை நேசிக்கும் தரப்புகள் ஒற்றுமைப்பட வேண்டியது மிக மிக அவசியமானதாகும். 

போர்க்;குற்றவாளிகள் சர்வதேச நீதிமன்றில் முன்னிறுத்த வலியுறுத்தியும், அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாத்தில் உரிய தீர்வினை பெற்றுத்தர வலியுறுத்தியும், திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக போராட்டங்களினை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அத்தகைய போராட்டங்களினை கண்டு கொள்ளாது தென் னிலங்கை அரசியல்வாதிகள் தாம் ஆட்சி அதிகாரத்தினை கைப்பற்றுவதிலேயே அதிக கரிசணை செலுத்துவதோடு அதற்காக போர்க்குற்றங்களோடு தொடர்புடையவர்களினை முன்னிலைப்படுத்தும் போக்கும் காணப்படுகின்றது. 

இதனை தட்டிக்கேட்கும் திராணி தமிழ்த் தேசிய பரப்பில் உள்ளவர்களிடம் இல்லாதுள் ளமை வேதனைக்குரிய விடயமாகும். 

எனவே இன்றைய தேர்தல் கால சூழலினை கையாளுவதற்கு எழுக தமிழ் மக்கள் எழுச்சி ஓர் காத்திரமான செய்தியினை தென்னிலங்கைக்கு வழங்க இவ்மக்கள் எழுச்சியினை பலப்படுத்த வேண்டும். 

தமிழ்த் தேசியத்தின் மீது உண்மையான அக்கறை கொண்டவர்கள் எவருமே இத்தகைய மக்கள் எழுச்சி போராட்டத்திற்கு ஆதரவு வழங்காமல் பின்னடிக்க முடியாது என்பதனாலேயே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினராகிய நாம் எமது பூரண ஆதரவினை வழங்க முன் வந்துள்ளோம். 

அது போல தமிழ்த் தேசியத்தினை நேசிக்கும் தரப்புகள் பாகுபாடுகளினை மறந்து தமிழ்த் தேசியத்தினை வலுப்படுத்த அணி திரள வேண்டும். 

எழுக தமிழ் பேரணியில் வலியுறுத்தப்படும் பிரதான கோரிக்கைகளான, 
1. சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக நிறுத்து. 
2. சர்வதேச போர்க்குற்ற விசாரணையை நடாத்து. 
3. தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்.
4. வலிந்து காணமலாக்கப்பட்டோர் தொடர்பில் உடனடியாக விசாரணை நடாத்து. 
5. வடக்கு - கிழக்கில் இராணு வமயமாக்கலை நிறுத்து. 
6. இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய வாழ்விடங்களில் மீள குடியமர்த்து. 

என்பவை தமிழ்த் தரப்பு மீதான ஒடுக்கு முறைக்கு நிகழ்கால சான்றுகளாகும். இத்தகு கோரிக்கைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளும் எழுக தமிழ் மக்கள் எழுச்சி பேரணி யானது, தமிழ் மக்கள் தமது நிலைப்பாடுகளில் தெளிவாக உள்ளார்கள் என்ற செய்தியினை இலங்கை அரசிற்கும் சர்வதேசத்திற்கும் வலியுறுத்தும் வகையிலான பேரெழுச்சியாக இடம்பெற தமிழ் தேசியத்தை நேசிக்கும் மேற்குறித்த கோரிக்கைகள் தமிழர் தேசத்தில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரானவை எனும் கருத்தில் உடன்படும் அனைத்து தரப்பினரையும் செப்டெம்பர் 16ஆம் திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் இருந்து ஆரம்பமாகும் எழுக தமிழ் பேரணியில் கலந்து கொண்டு மக்கள் எழுச்சியினை வலுப்படுத்துவதனூடாக எழுக தமிழ் மக்கள் எழுச்சி பேரணியின் கோரிக்கைகளை வலுவாக ஓங்கி ஒலிக்க வலுச் சேர்க்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

http://valampurii.lk/valampurii/content.php?id=19434&ctype=news

  • தொடங்கியவர்

’இணைந்து செயற்பட வேண்டும்’

 

-எஸ்.நிதர்ஷன்

தமிழ் மக்களின் உரிமை சார்ந்து நடத்தப்படுகின்ற எழுக தமிழ்ப் பேரணியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் கலந்துகொண்டிருக்க வேண்டுமெனத் தெரிவித்த அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம், ஆகையால் அவர்கள் கலந்து கொள்ளாதது கவலையளிக்கிறதெனவும் கூறினார்.

ஆகவே, இன்னும் காலம் கடந்து போகவில்லை என்பதால் இணைந்து செயற்பட வேண்டுமெனவும், அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

image_b3d90c46f2.jpg

மேலும் தேர்தல் காரணமாக அரசியல் கட்சிகளிடத்தே முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் பொது மக்களின் பொது நலன்களின் அடிப்படையில் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென்றும், அந்த வகையில் எழுக தமிழ் பேரணிக்கு தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சமூக விஞ்ஞான ஆய்வு மையமும் வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழுவும் இணைந்து யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/இணைந்து-செயற்பட-வேண்டும்/71-238444

  • தொடங்கியவர்

‘எழுக தமிழ் பேரணிக்கு முழு ஆதரவு’

-மு.தமிழ்ச்செல்வன்   

எழுக தமிழ் பேரணிக்கு, நாம் முழுமையான ஆதரவினை  வழங்கி அதில் கலந்கொள்வோம் என, வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அமைப்பு தெரிவித்துள்ளது.

இது  தொடர்பில் அவ்வமைப்பின் தலைவி  யோ. கனகரஞ்சனி, இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்ததாவது,

image_12a5f04ce6.jpg

எழுக தமிழ் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணிக்கு எமது பூரண ஆதரவை வழங்குவதுடன், இதில்  தனிப்பட்ட மத, கட்சி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து தரப்பினனர்களையும் கலந்துகொள்ளுமாறும், அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழ் மக்களின் குரலாக கருதியே தாம் பூரண ஆதரவைவழங்குவதாகவும், எதிர்மறையான, காழ்புணர்வுகளை கடந்து அனைவரும் இதில் கலந்துகொண்டு தமிழ் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/வன்னி/எழுக-தமிழ்-பேரணிக்கு-முழு-ஆதரவு/72-238454

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.