Jump to content

இந்திய பொருளுதார மந்தமும் அதற்குள் சிக்காமல் தப்ப முயலும் தமிழகமும்


ampanai

Recommended Posts

இந்தியா என்ற பன்முகங்களை கொண்ட நாட்டில் பொருளாதார வளர்ச்சி என்பது சீராக எல்லா மாநிலங்களிலும் இல்லை. சில மாநிலங்கள், குறிப்பாக தென் மாநிலங்கள் தமது சனத்தொகை வளர்ச்சியை ஓரளவிற்கு வெற்றிகரமாக கட்டுப்படுத்தியும் பலவேறு முன்னேற்றகரமான திட்டங்களையும் அறிமுகப்படுத்தி நகருகின்றது. பொருளாதார பின்தங்கிய மாநிலங்களில் இருந்து மக்களும் தென் மாநிலங்களுக்கு நகருகிறார்கள். 

மத்திய அரசும், பொருளாதார ரீதியில் முன்னேறிய மாநிலங்களில் இருந்து பணத்தை எடுத்து சனத்தொகையில் பெரிதாகவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்களுக்கு கொடுத்து வருகின்றது.    

சமீபத்தில் லண்டன், அமெரிக்கா, துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியுள்ளார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்காகப் பல்வேறு முதலீடுகளை ஈர்த்துள்ளதாக அறிவித்துள்ள முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்தின் அடிப்படையில் தமிழகம் இந்திய பொருளாதார சிக்கலுக்குள் அகப்படாமல் இருக்கு முயலுகின்றது. 

 

தமிழக முதலவரின் அண்மைய பயணமும் பொருளுதார நன்மை தரக்கூடிய சில புள்ளி விபரங்கள்   

Edappadi Palanisamy foreign visits

 

Edappadi Palanisamy foreign visits

Edappadi Palanisamy foreign visits

Edappadi Palanisamy foreign visits

Edappadi Palanisamy foreign visits

Edappadi Palanisamy foreign visits

Edappadi Palanisamy foreign visits

Edappadi Palanisamy foreign visits

Edappadi Palanisamy foreign visits

Edappadi Palanisamy foreign visits

Edappadi Palanisamy foreign visits

Edappadi Palanisamy foreign visits

Link to comment
Share on other sites

 

தமிழக அரசிற்கு அதன் பொருளாதார கொள்கை சார்ந்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களும் 

Edappadi Palanisamy foreign visits

 

 

Edappadi Palanisamy foreign visits

 

 

Edappadi Palanisamy foreign visits

 

Edappadi Palanisamy foreign visits

 

 

Edappadi Palanisamy foreign visits

 

 

மூலம் : சுய வரிகளும் இந்த இணைப்பும் 
https://www.vikatan.com/government-and-politics/politics/plus-and-minus-of-edappadi-k-palaniswamis-foreign-trips

Link to comment
Share on other sites

1967 ஆம் ஆண்டு பீகாரை போன்று பொருளாதார நிலையில் இருந்த தமிழகம், கடந்த 50 ஆண்டுகளில் தனக்கென பொருளாதார கொள்கையை வகுத்து தற்போது 2வது நிலையில் உள்ளது... ஆனால், ஜி.எஸ்.டி யால், மாநில சுயாட்சியை இழந்து மிகபெரும் பொருளாதார பிரச்சனையை நோக்கி தமிழகம் செல்லவிருக்கிறது... காணொளியை முழுமையாக காணவும்...

 

மேலுள்ள காணொளி இரண்டு வ்ருடங்களுக்கு மேற்பட்டதாயினும்,  பொருளாதார விளக்கங்கள் இன்றைய நிலைக்கும் பொருந்தும்.  

Link to comment
Share on other sites

  • 1 month later...

தங்கள் இன்னல்களை தாங்களே விவரிக்கிறார்கள் இந்த வடமாநிலத் தொழிலாளர்கள். பிழைப்பு தேடி வந்த தமிழகம் வந்துள்ள வடமாநிலத் தொழிலாளர்களுக்கு தற்போது வருவாய் இல்லை. தொழில் வளர்ச்சி பெற்ற கோவையில் மட்டுமல்ல வேலைதேடி புலம்பெயரும் தொழிலாளர்களின் முக்கிய புகலிடமான திருப்பூரிலும் இதே நிலைதான். விற்பனை இல்லாமல் அங்குள்ள கடைகள் காற்று வாங்குகின்றன. 

 

 

Link to comment
Share on other sites

6 ஆண்டுகளில் 90 இலட்சம் பேர் வேலையிழப்பு

இந்திய வரலாற்றில் முதல் தடவையாக

பொருளாதாரம் மிக மோசமான  அளவில் பாதிக்கும் என்று தெரிவிப்பு

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 6 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு மிக மோசமான அளவில் சரிந்துள்ளது. 2011,-12 முதல் 2017-,18 வரையிலான 6 ஆண்டுகளில் மட்டும் 90 இலட்சம் பேர் வேலை இழந்து உள்ளதாக அஸிம் பிரேம்ஜி பல்கலைகழகம் வெளியிட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2011,-12 ம் ஆண்டில் இந்தியா முழுவதும் மொத்தமாக 47.4 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்று இருந்தனர். அந்த எண்ணிக்கை 2017-,18 ஆண்டில் 46.5 கோடியாக குறைந்துள்ளது. இந்திய வரலாற்றில் இந்த அளவிலான வேலையிழப்பு ஏற்பட்டு இருப்பது இதுவே முதன் முறை என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த 6 ஆண்டு காலகட்டத்தில் சராசரி யாக ஒவ்வொரு ஆண்டும் 26 இலட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்.

 

 
 

2004,-05 ஆண்டில் 45.9 கோடி நபர்கள் வேலைவாய்ப்பு பெற்று இருந்தனர். அந்த எண்ணிக்கை 2011,-12 ஆண்டில் 47.4 கோடியாக உயர்ந்தது. இந்நிலையில் 2017,- 18-ல் 46.5 கோடியாக குறைந் துள்ளது. இந்த கால இடைவெளியில் வேளாண் தொடர்புடைய துறை யில் வேலைவாய்ப்பு 49 சதவீதத்தில் இருந்து 44 சதவீதமாகவும், உற்பத்தித் துறையில் 12.6 சதவீதத்தில் இருந்து 12.1 சதவீதமாகவும் குறைந்துள்ளது. இந்த காலகட்டத்தில் உற்பத்தி துறையில் 35 இலட்சம் அளவில் வேலை இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.

கட்டுமானத் துறையிலும் வேலைவாய்ப்பு கணிசமான அள வில் குறைந்துள்ளது. 2004,-05 முதல் 2011,-12 வரையிலான கால கட்டத்தில் ஆண்டுக்கு 40 இலட்சம் வேலைவாய்ப்புகள் கட்டுமானத் துறையில் உருவாக்கப்பட்டன. ஆனால் 2011,-12 முதல் 2017,-18 வரையிலான காலகட்டத்தில் ஆண்டுக்கு 6 இலட்சம் அளவிலேயே அந்த துறையில் வேலைவாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

உற்பத்தி துறையில் வேலை வாய்ப்பு குறைவது மிக ஆபத்தானது. அது நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமான அளவில் பாதிக்கும் என்று அந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்கு உற் பத்தி துறையின் வளர்ச்சி மிக அவசியமானது. மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, ஏழ் மையை குறைக்க உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையில் வேலைவாய்ப்புகள் உருவாக்கப் படுவது அவசியம். தவிர, இத் துறைகளின் மூலமே நாட்டின் உள் நாட்டு உற்பத்தியை பெருக்க முடியும் என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கால இடைவெளியில் சேவை துறையில் மட்டும் ஓரளவு வேலைவாய்ப்பு உருவாகி உள் ளது. ஆண்டுக்கு 30 இலட்சம் வேலை வாய்ப்பு சேவைத் துறைகளில் உருவாகி உள்ளது. ஆனால் ஊதிய அளவிலும், பணிச் சூழல் அடிப்படையிலும் அவற்றின் தரம் மிக மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.thinakaran.lk/2019/11/05/இந்தியா/43289/6-ஆண்டுகளில்-90-இலட்சம்-பேர்-வேலையிழப்பு

Link to comment
Share on other sites

இன்ஃபோசிஸ் நிறுவனம்: 10,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்க முடிவு - நடப்பது என்ன?

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "10,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்க இன்ஃபோசிஸ் முடிவு"

இன்ஃபோசிஸ் நிறுவனம்: 10,000 ஊழியர்களை பணியில் இருந்து நீக்க முடிவு - நடப்பது என்ன?படத்தின் காப்புரிமைGETTY IMAGES

காக்னிஸண்டைத் தொடர்ந்து இன்ஃபோசிஸ் நிறுவனமும் ஆயிரக் கணக்கில் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்பத் (ஐ.டி) துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் இன்ஃபோசிஸ், 10,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பிட்ட படிநிலையில் பணிபுரியும் ஊழியர்கள் என இல்லாது பல்வேறு படிநிலைகளில் இருந்தும் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளனர்.

இது தொடர்பாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இன்ஃபோசிஸ் நிறுவனத்தை மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டது.

"ஒரே சமயத்தில் அதிகளவில் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட போவதில்லை. அதிக உற்பத்தி கொண்ட நிறுவனமென்பதால், சில சமயங்களில் உற்பத்தி திறன் குறைவது இயல்பானது. இதனை பணி நீக்கத்துடன் குழப்பிக் கொள்ளக்கூடாது," என விளக்கம் அளித்துள்ளது.

https://www.bbc.com/tamil/india-50312105

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.