Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருக்குறள் பொது நூலா?

Featured Replies

  • தொடங்கியவர்

திருவள்ளுவ நாயனார் சித்தாந்த சைவரே

சித்தாந்த சைவர், உள்ளது செயலுறுதலாகிய (சற்காரிய) வாதங் கொண்டு, காட்சி, கருதல் (அனுமானம்), உரை (ஆகமம்) எனும் மூவகை அளவைகளால் (மூவித பிரமாணங்களால்) கடவுளொருவருண்டென்றும், அவர் சித்தாந்தத் தெய்வமாகிய சிவமே (சிவபரம்பொருளே) என்றும், அக்கடவுளுக்கு வேறாய் எண்ணில்லாத உயிர்கள் உண்டென்றும், அவைகளைப் பந்தித்த ஆணவமல மொன்றுண்டென்றும், அம்மலத்தின் காரணமாக உயிர்களுக்குக் கன்மமலம் தொன்மையே (அநாதியே) உண்டென்றும், மலக் கட்டுடையவர்களான (சம்பந்திகளான) உயிர்களுக்கு உறைவிடமாக மாயை மலமொன்று உண்டென்றும், மலத்தைச் செலுத்துகின்ற 'ஆதிசத்தி' யாகிய 'திரோதான' மலமும், அதனாலான மாயைக் காரியங்களாகிய 'மாயேய மலமும்' உண்டென்றும், கன்ம மலமானது ஏறுவினை (ஆகாமியம்), இருப்பு வினை (சஞ்சிதம்), ஏன்ற வினை (பிரார்த்தம்) என முத்திறப்படும் என்றும், கன்ம பல போகங்களை நுகர் (அனுப) விக்கும் இடங் (தானங்க) ளாகிய துறக்க (சுவர்க்க), இருளுலகங்கள் ( நரக லோகங்கள்) உண்டென்றும், அங்ஙனம் நுகருங் (அனுபவிக்குங்) கால் அடையத்தக்க தேவர், அலகை முதலிய பிறவி (யோனி) பேதங்கள் உண்டென்றும், இங்ஙனம் இறந்து பிறந்து வருவதால் மறுபிறப்புக்கள் உண்டென்றும், அழிப்பு (சங்காரம்) இளைப்பொழித்தலாகும் என்றும், பிறவிப் பெருங்கடலைக் கடக்கத்தக்க வாயில்களை (உபாயங்களை) அறிவிக்கும் விதி நூல்களாகிய வேத சிவாகமங்கள் உண்டென்றும், அவற்றிற் கீடாக ஒழுகுங்கால் செய்யப்படுங் கன்மங்கள் நல்வினை தீவினைகளென இருதிறப்படூஉ மென்றும், இவைகளும் 'திருஷ்ட சன்ம போக்கியம்', 'அதிருஷ்ட சன்ம போக்கியம்', 'திருஷ்டாதிருஷ்ட சன்ம போக்கிய்' மென மூவகைப்படும் என்றும், அக் கன்ம பேதங்களால் போக பேதங்கள் உண்டென்றும், கன்ம பயன்கள் நுகர்ச்சியாவது உறுதி (அனுபவமாவது நிச்சயம்) என்றும், அப் பயன்களையும் இறைவனே உயிர்களுக்குக் கொடுப்பன் என்றும், அங்ஙனமாயினும் சிவாகமங்களின் வழி ஒரு வினைக்கு மற்றோர் வினையால் அழிவுண்டென்றும், கடமை (தருமங்) களைச் செய்யவேண்டுமென்றும், அவற்றைத் தக்கவர் தகாதவர் (பாத்திரா பாத்திரம்) அறிந்து செய்யவேண்டுமென்றும், கடமை (தருமங்) குள்ளே வேள்வி சிறந்ததென்றும், அதனினும் உயிரிரக்கம் (சீவகாருணியம்) மிகச் சிறந்ததென்றும், அதுவும் அருளில்லாதவழி கூடாதாகையால் உயிர்கள் மாட்டு அருள் வேண்டுமென்றும், அவ்வருள் இல்லாதவர் எத்தகையரானாலும், அவர்கள் வீடுபேற்றுத் திளைப்பு (மோட்சலோகாநுபவம்) இல்லையென்றும், அங்ஙனஞ் செய்கின்ற வினைகளும் ஒருவன் செய்தது அவனைச் சார்ந்தார்க்கும் ஆகுமென்றும், முத்தியுலகமானது தேவலோகத்துக்கு மேலுள்ள தென்றும், அதனை அடைவதற்கு நிலையும் நிலையாமையும் அறியும் ஞானம் (நித்தியா நித்திய வஸ்து விவேகம்) முதலாவதான காரண (சாதன) மென்றும், வேறு சிறந்த சாதனங்களும் உண்டென்றும், அவைகளைக் கடைப்பிடித்து மனம் வாக்குக் காயங்களால் முதல்வனை வழிபட வேண்டும் என்றும், அங்ஙனம் வழிபட்டார்க்குப் பிறவி (பெத்த) நீக்கமும் வீடு (முத்தி) பேறும் உண்டென்றும், முத்தியிலும் முப்பொருள்களும் முதல்வன் உதவியும் (உபகாரமும்) உண்டென்றும், முதல்வனின் அடிசேர் முத்தியே சித்தாந்த முத்தி என்றுங் கூறுவர். நாயனார்,

  • Replies 130
  • Views 25.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு. 1

என்ற திருக்குறளால் 'சற்காரியவாதம்' கூறுகின்றதனானும், மேற்படி குறளில் உலகு என்றதனால் காட்சியளவையும் (காட்சிப் பிரமாணத்தையும்,) 'ஆதிபகவன் முதற்றேயுலகு' என்றதனால் கருதலளவையும் (அனுமானப் பிரமாணத்தையும்).

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல். 543

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்வார்க்குத்

தள்ளாது புத்தே ளுளகு. 290

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு. 610

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. 322

என்ற திருக்குறள்களால் உரையளவையும் (ஆகமப் பிரமாணத்தையும்) உடம்படுதலானும், கடவுள் வாழ்த்து என்ற அதிகாரம் கூறியதனாலும்,

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார். 10

என்பது முதலிய திருக்குறள்களானும் கடவுள் ஒருவரே உண்டென்றும்,

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு. 1

என்ற திருக்குறளால் அக்கடவுள் சித்தாந்தத் தெய்வமாகிய ஆதிசத்தியாரோடு கூடிய சிவமே (சிவபரம்பொருளே) என்றும் கூறுதலானும்,

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது

இன்னுயிர் நீக்கும் வினை. 327

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்

நன்மை குறித்தது சால்பு. 1013

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. 322

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. 22

என்ற திருக்குறளால் எண்ணில்லாத உயிர்கள் உண்டென்று கூறுதலானும்,

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு. 352

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்

சார்தரா சார்தரு நோய். 359

காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்

நாமம் கெடக்கெடும் நோய். 360

என்ற திருக்குறள்களால் ஆணவமலம் ஒன்றுண்டென்று கூறுதலானும்,

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்

கருமமே கட்டளைக் கல். 505

என்ற திருக்குறளால் கரும மலத்தை உடம்படுதலானும்,

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு. 1

என்ற திருக்குறளால் உலகுக்கு முதற்காரணமாகிய மாயா மலத்தையும், "ஆதி பகவன்" என்றதனால் "ஆதி சத்தியாகிய திரோதான மலத்தையும்', "உலகு" என்றதனால் மாயைக் காரியமாகிய 'மாயேய' மலத்தையும் உடம்படுதலானும்,

  • தொடங்கியவர்

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்

தவாஅப் பிறப்பீனும் வித்து. 361

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அஃதுண்டேல்

தவாஅது மேன்மேல் வரும். 368

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின். 369

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும். 370

என்ற திருக்குறள்களால் 'ஆகாமிய' கன்மத்தையும்,

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை. 36

என்ற திருக்குறள்களால் 'சஞ்சித' கன்மத்தையும்,

  • 1 month later...
  • தொடங்கியவர்

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்

போகூழால் தோன்றும் மடி. 371

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால

ஊட்டா கழியு மெனின். 378

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று

சூழினுந் தான்முந் துறும். 380

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

மெய்வருத்தக் கூலி தரும். 619

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

தாழாது உஞற்று பவர். 620

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்

பலரறியார் பாக்கியத் தால். 1141

என்ற திருக்குறள்களால் 'பிராரத்த' கன்மத்தையுங் கூறதலானும்,

  • தொடங்கியவர்

பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு. 58

செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்

வானகமும் ஆற்றல் அரிது. 101

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே

ஒப்புரவின் நல்ல பிற. 213

நல்லாறு எனினுங் கொளல்தீது மேலுலகம்

இல்லெனினும் ஈதலே நன்று. 222

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு. 234

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்

தள்ளாது புத்தேள் உலகு. 290

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்

தாமரைக் கண்ணான் உலகு. 1103

புலத்தலின் புத்தேள்நா டுண்டோ நிலத்தோடு

நீரியைந் தன்னார் அகத்து. 1323

என்ற திருக்குறள்களால் 'துறக்கம்' உண்டென்று கூறதலானும்,

  • தொடங்கியவர்

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும். 121

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும். 168

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல். 243

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு. 255

என்ற திருக்குறள்களால் நிரயத்தைக் கூறதலானும்,

  • தொடங்கியவர்

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்

தெய்வத்துள் வைக்கப் படும். 50

பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்

புத்தேளிர் வாழும் உலகு. 58

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல். 84

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்

நல்விருந்து வானத் தவர்க்கு. 86

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை

ஆரிருள் உய்த்து விடும். 121

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்

தவ்வையைக் காட்டி விடும். 167

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்

போற்றாது புத்தேள் உலகு. 234

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்

ஆற்றல் தலைப்பட் டவர்க்குல். 269

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்

செல்லாது உயிருண்ணுங் கூற்று. 326

  • தொடங்கியவர்

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்

தாஅய தெல்லாம் ஒருங்கு. 610

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை

மாதர்கொல் மாலும் என் நெஞ்சு. 1081

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்

பெண்டகையால் பேரமர்க் கட்டு. 1083

என்ற திருக்குறள்களால் தேவர்கள் உண்டெனக் கூறுதலானும்.

  • தொடங்கியவர்

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து

அலகையா வைக்கப் படும். 850

என்ற திருக்குறள்களால் அலகை உண்டெனக் கூறுதலானும்.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்

விழுமந் துடைத்தவர் நட்பு. 107

உறங்குவது போலும் சாக்காடு உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு. 339

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்

தவாஅப் பிறப்பீனும் வித்து. 361

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டாமை வேண்ட வரும். 362

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு

எழுமையும் ஏமாப் புடைத்து. 398

இன்மை எனவொரு பாவி மறுமையும்

இம்மையும் இன்றி வரும். 1042

இம்மைப் பிறப்பின் பிரியலம் என்றேனாக்

கண்ணிறை நீர்கொண் டனள். 1315

என்ற திருக்குறள்களால் மறுபிறப்புக்கள் உண்டெனக் கூறுதலானும்.

  • தொடங்கியவர்

மன்னுயி ரெல்லாம் துயிற்றி அளித்திரா

என்னல்லது இல்லை துணை. 1168

என்ற திருக்குறளால் அழிப்பும் அருளலின் (சங்கராமும்) அநுக்கிரகத்தின் பொருட்டே எனக் கூறுதலானும்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்

பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். 134

என்ற திருக்குறளால் நான்மறையை உடம்படலானும்,

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார். 6

என்ற திருக்குறளால் சிவாகமத்தை உடம்படலானும்,

  • தொடங்கியவர்

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்

நின்றது மன்னவன் கோல். 543

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்

வடுவன்று வேந்தன் தொழில். 549

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்

களைகட் டதனொடு நேர். 550

என்ற திருக்குறள்களால் சாதி (வருண) பேதங்களைக் கூறுதலானும்,

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை. 41

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றிற் புறத்தாற்றின்

போஒய்ப் பெறுவது எவன் 46

அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்

பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. 50

வேண்டின் உண்டாகத் துறக்க துறந்தபின்

ஈண்டுஇயற் பால பல. 342

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி

வலைப்பட்டார் மற்றை யவர். 348

என்ற திருக்குறள்களால் நிலைகள் 'ஆச்சிரம' பேதங்களை உடம்படலானும்,

  • தொடங்கியவர்

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின் 96

என்ற திருக்குறளால் கன்ம பேதங்களாகிய நல்வினை தீவினைகளைக் கூறுதலானும்,

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்

எண்ணின் தவத்தான் வரும். 264

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்

ஈண்டு முயலப் படும். 265

என்ற திருக்குறளால் எடுத்த பிறப்பின் (திருஷ்ட ஜன்ம) போக்கிய கன்மமும்,

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்

இம்மையும் இன்பந் தரும். 98

என்ற திருக்குறளால் இம்மை மறுமைப் பிறப்புக்களின் (திருஷ்டாதி திருஷ்ட ஜன்ம) போக்கிய கன்மமும்,

  • தொடங்கியவர்

தவமுந் தவமுடையார்க்கு ஆகும் அவமதனை

அஃதிலார் மேற்கொள் வது. 262

என்ற திருக்குறளால் தவப் பிறப்பின் (அதிருஷ்ட ஜன்ம) போக்கிய கன்மமும் உண்டெனக் கூறதலானும்.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. 37

இலர்பல ராகிய காரணம் நோற்பார்

சிலர்பலர் நோலா தவர். 270

என்ற திருக்குறள்களால் கன்ம பேதத்தால் போக பேதங் கூறுதலானும்,

  • தொடங்கியவர்

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை

வீயாது பின்சென்று அடும். 207

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா

பிற்பகல் தாமே வரும். 319

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால

ஊட்டா கழியு மெனின். 378

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்

வேறாகும் மாந்தர் பலர். 514

என்ற திருக்குறள்களால் கன்ம பலன்கள் அனுபவமானது நிச்சயமென்று கூறுதலானும்,

இறுதி முடிவிற்கு வந்துவிட்டீர்கள். திருக்குறள் சைவ நூல் அதுதானே. அப்படியென்றால் பொதுமறை என்ற பெயரை எப்படி இல்லாமல் செய்வது. வேதம் ஓதுதல், பைபிள் படித்தல், குர்ரான் ஓதுதல், திருக்குறளும் ஓதுதல். அப்படியெனில் திருக்குறள் எந்த மதமும் சாரா நூல்தான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பக்திப் பரவசத்துடன் இருப்பவர்கள் ஆராய்கிறார்கள் - நல்லது

மீண்டும் குருடர்கள் யானையைப் பார்த்த கதையாகிப் பதிவாகிறது.

:rolleyes:

  • தொடங்கியவர்

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. 377

என்ற திருக்குறளால் இறைவனே கன்ம பலனைக் கொடுப்பனெனக் கூறுதலானும்,

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை

நாடி இனிய சொலின் 96

என்ற திருக்குறளால் ஒரு வினைக்கு மற்றொரு வினையால் கூறுதலானும்,

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை. 36

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்

வாழ்நாள் வழியடைக்குங் கல். 38

என்பது முதலிய திருக்குறள்களால் கடமைகளைச் (தருமத்தைச்) செய்ய வலியுறுத்தலானும்,

  • தொடங்கியவர்

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன். 87

உதவி வரைத்தன்று உதவி உதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து. 105

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்தெரி வார். 104

என்ற திருக்குறள்களால் அறத்துக்குத் தக்கார் தகாதாரை (தருமத்துக்குப் பாத்திரா பாத்திரத்தை ) உடம்படலானும்,

  • தொடங்கியவர்

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்

துணைத்துணை வேள்விப் பயன். 87

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று. 259

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்

ஆன்றாரோ டொப்பர் நிலத்து. 413

என்ற திருக்குறள்களால் வேள்வியை உடம்படலானும்,

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்

அறஞ்சூழம் சூழ்ந்தவன் கேடு. 204

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண

அண்ணாத்தல் செய்யாது அளறு. 255

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்

உயிர்செகுத் துண்ணாமை நன்று. 259

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி

ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. 252

என்ற திருக்குறள்களால் உயிரிரக்கம் கட்டாயமானது ( சீவகாருணியம் அவசியம்) என்றும், வேள்வியினும் சிறந்த தென்றுங் கூறுதலானும்,

  • தொடங்கியவர்

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல். 243

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு. 247

என்ற திருக்குறள்களால் வீட்டுலகத்தை (மோட்ச லோகத்தை) அடைய உயிர்களிடத்து அருள் பாலித்தல் கட்டாயம் (அவசியம்) எனக் கூறுதலானும்,

  • தொடங்கியவர்

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின். 62

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்

தம்தம் வினையான் வரும். 63

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்

நாணுடையான் சுட்டே தெளிவு. 502

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை

தீரா இடும்பை தரும். 508

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்

உண்பதூஉம் இன்றிக் கெடும். 166

என்ற திருக்குறள்களால் ஒருவன் செய்த வினை அவனைச் சார்ந்தார்க்கும் ஆகும் எனக்

Edited by ArumugaNavalar

  • தொடங்கியவர்

கூறுதலானும்,

யான்எனது என்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும். 346

என்ற திருக்குறளால் தேவலோகங்களுக்கு அப்பாற்பட்டு மேலுள்ளது முத்தியுலகம் எனக் கூறுதலானும்,

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்

மருளானாம் மாணாப் பிறப்பு. 351

என்ற திருக்குறளால் 'நித்தியா நித்திய வஸ்து விவேகம்' கூறுதலானும்,

  • தொடங்கியவர்

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன். 341

யான்எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும். 346

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்

பற்றுக பற்று விடற்கு. 350

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி

மாசறு காட்சி யவர்க்கு. 352

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்

மற்றீண்டு வாரா நெறி. 356

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது

வேண்டாமை வேண்ட வரும். 362

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்

துன்பத்துள் துன்பங் கெடின். 369

  • தொடங்கியவர்

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே

பேரா இயற்கை தரும். 370

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. 24

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு. 27

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்

எழுமையும் ஏமாப் புடைத்து. 126

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்

நன்குடையான் கட்டே தெளிவு. 513

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்

சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. 267

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய

மன்னுயி ரெல்லாந் தொழும். 268

என்ற திருக்குறள்களால் முத்தியடைதற்குரிய சிறந்த காரணங்களை (சாதனங்களை)க் கூறுதலானும்,

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.