Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கி புலிகளின் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைக்க வேண்டும்: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

Featured Replies

புலிகளின் பிரதிநிதிகளை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைக்க வேண்டும்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்கி அந்த அமைப்பின் பிரதிநிதிகளை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற அழைக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசாங்கத்தை அந்நாட்டு அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கை இனப்பிரச்சனை தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

புதிதாக அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவினர் அமைதிப் பேச்சுக்களை முன்னெடுக்க தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானிய அரசாங்கத்தின் தடையை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண பேச்சுக்களை நடத்துவதனை தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை தடுக்கிறது என்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களினால் தமிழர்கள் தங்களது கருத்தை வெளிப்படுத்த தயங்குகின்றனர் என்றும் ஆளும் தொழிலாளர் கட்சி மற்றும் எதிர்க்கட்சியும் பிரித்தானியாவின் மூன்றாவது பெரிய கட்சியுமான லிபரல் டெமொக்கரட்ஸ் ஆகியவற்றின் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இலங்கை பிரச்சனை தொடர்பான விவாதத்தின் போது பிரதான எதிர்க்கட்சியான கொர்ன்சவடிக் கட்சியானது புலிகளின் மீதான தடைக்கு ஆதரவு தெரிவித்தது. ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்த ஒப்புதல் தெரிவித்தது.

மூன்று மணிநேரம் நடைபெற்ற விவாதத்தின் தொடக்கதில் பேசிய வெளிவிவகார அமைசர் ஹிம் ஹாவல், பிரித்தானியாவில் புலிகள் மீதான தடை நீக்கப்படுவதற்கு முன்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றார்.

இருப்பினும் இலங்கை விவகாரங்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவின் தலைவரான தொழிலாளர் கட்சியின் கெய்த் வஜ் மற்றும் பிரதித் தலைவரான லிபரல் டெமொக்கரட்சின் ஹக்ஸ் உள்ளிட்டோர் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

"இலங்கை பிரச்சனைக்கு முட்டுக்கட்டையாக புலிகள் மீதான தடை உள்ளது. புலிகள் மீதான தடையை நீக்க அரசாங்கம் தயாராக உள்ளதா? என்பதனை உள்துறைச் செயலாளருடன் விவாதிக்க வேண்டும்" என்றனர் அவர்கள்.

இதற்குப் பதிலளித்த ஹாவல்ஸ், "உள்துறை செயலாளர் ஜோன் ரெய்டுடன் இதுவரை விவாதிக்கவில்லை. இருப்பினும் அது ஒரு நல்ல யோசனை. நிச்சயம் நான் செய்வேன்" என்றார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளை பிரித்தானிய அதிகாரிகள் தொடர்ந்து சந்தித்து வரும் நிலையில் தடையானது அர்த்தமற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பால் மோர்பி பயணம் மேற்கொண்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் சிறிலங்கா அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் இருதரப்பினருக்கும் நடுநிலைத் தரப்பாகவே பிரித்தானியா செயற்படும் என்றும் அவர்கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சைமன் ஹக்ஸ் எழுப்பிய கேள்விக்கு ஒன்றுக்குப் பதிலளித்த ஹாவெல், தடை விதிப்பது என்பது அந்த இயக்கங்கள் ஆயுதங்களை தொடர்ந்து கையிலெடுக்க வகை செய்யும். கொன்செர்ட்டிவ் அரசாங்கத்தால் சின் பென் இயக்கம் தடை செய்யப்பட்டது. ஆனால் அதன் ஆதரவு குறைந்ததா? இல்லை. உண்மையில் அதற்கான ஆதரவு வளர்ந்தது என்றார்

-Puthinam-

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான ஒரு சூழ்நிலை விரைவில் ஏற்பட வாய்ப்புள்ளது.

யார் கும்பிடால் என்ன குத்துகரணம் போட்டால் என்ன சிங்கள அரசாங்கம் மனம் வைத்தால் தானே எல்லாம். நோர்வேயே அலுத்துக்கொள்ளும் போது ஆங்கிலேயர் என்ன பரம சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பா?

Edited by mathuka

  • தொடங்கியவர்

இலங்கைத்தீவில் மிகநீண்ட காலமாக நடைபெற்றுவரும் இனப்பிரச்சினை சர்வதேசசமூகத்தின் கவனத்தினை முழு அளவில் ஈர்த்துள்ளது.

இனப் பிரச்சினைக்கு யுத்தம் மூலமாக அல்லாமல் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணப்பட வேண்டும் என சர்தேச சமூகம் வலியுறுத்தி வருகின்றது. சர்வதேசத்தின் ஆலோசனைகளை பொருட்படுத்தாத இலங்கை அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என கூறுவதுடன் பயங்கரவாதத்திற்கு இராணுவத் தீர்வு என்றும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் என்றும் கூறி தமிழ் மக்களுக்கு எதிரான போரை முழு அளவில் முன்னெடுத்து வருகின்றது. இந் நிலையில் கடந்த 30-04-2007 அன்று சுதந்திரக் கட்சியின் தீர்வு யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் சிங்கள ஆட்சியாளர்களினால் மிக மோசமாக அடக்கி ஒடுக்கப்பட்டு, இன அழிப்பிற்கு உட்படுத்தப்பட்டவர்கள் வடக்கு கிழக்கில் வாழ்ந்த தமிழ் மக்களாவர்.

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களது அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடியதாகவே எந்தவோரு தீர்வுத் திட்டமும் வைக்கப்படுதல் அவசியமானதாகும்.

அவ்வாறு தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படுகின்ற போது பாதிக்கப்பட்ட மக்களின் அபிலாசைகள் என்ன என்பதைனை அறிந்து அதனை பூரணப்படுத்தக் கூடிய தீர்வுத் திட்டத்தினை தயாரிக்கு முகமாக பாதிக்கப்பட்ட மக்களிடம், அவர்களால் பாராளுமன்றத்திற்கு பெரும்பான்மை ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்ட பிரதி நிதிகளிடம் அல்லது தமிழ் மக்களின் ஏகப் பிரதி நிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளிடம் ஆலோசனைகள் பெறப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் சுதந்திரக் கட்சியின் தீர்வுத் திட்டம் எந்த அடிப்படையில் வெளியிடப்பட்டது. அந்த யோசனை தயாரிக்கப்பட்ட போது தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளான தமிழீழ விடுலைப் புலிகளிடமோ தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடமோ அல்லது பொது மக்களிடமிருந்தோ பொது மக்கள் அமைப்புக்களிடமிருந்;தோ எவ்விதமான ஆலோசனைகளும்

பெறப்படவில்லை.

மாறாக தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பு எனக் கூறிவரும் அரசு அவர்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் இடையிலான இராஐதந்திர தொடர்புகளை துண்டித்துள்ளதுடன் பல நூற்றுக்கணக்கான உறுப்பினர்களையும் படுகொலை செய்துள்ளது.

இலங்கையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் மூலம் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரை படுகொலை செய்துள்ள அரசு ஏனையவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்தி நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு அல்லது பதவி விலகச் செய்வதற்கு முயன்று

வருகினறது.

கடந்த 2001.01.17 அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ‘’பொங்குதமிழ்’’ நிகழ்வினை தொடர்ந்து தமிழர் தாயகப் பிரதேசங்களிலும், புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் வாழ்ந்த நாடுகளிலும் தமிழ் மக்கள் இலட்சக் கணக்கில் ஒன்று கூடி தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

இத்தகயதொரு நிலையில் தமிழ் மக்களின் ஆலோசைனை இல்லாமல் ஓர் தீர்வுத் திட்டம் தயாரிப்பதற்கு சுதந்திரக் கட்சிக்கு சுமார் ஓராண்டுகள் தேவைப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியல் என்ன நடைபெற்றது.

தமிழ் மக்கள் தரப்பிலிருந்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் என்ன என்பதனை தான் வாழும் மக்கள் கூட்டம் சார்பாக வெளிப்படுத்தக் கூடிய அரசியல் தெளிவும், துணிச்சலும் சலுகைகளுக்கு விலைபோகாத மன உறுதிதியும் மிக்க சமூகத்தின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் உள்ளனர்.

குறிப்பாக 16 - 38 வயது வரையான இளம் தலைமுறையினர் சுமார் 4000 வரையானோர் கடந்த 18 மாத காலப்பகுதியல் மகிந்த அரசினால் நன்கு திட்டமிட்ப்பட்டு இராணுவத்தினராலும் துணை இராணுவக் குழுவினராலும் அவ்வாறு கொலை செய்யப்பட்டும் கடத்தப்பட்டுமுள்ளனர்.

இவ்வாறான கொலகைள் கடத்தல்களின் மூலம் நிராயுதபாணிகளாக வாழும் எஞ்சியுள்ள தமிழ் மக்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் மரண பயத்தில் உறைய வைத்து அரசு விரும்பும் தீர்வுத் திட்டத்தினை தமிழ் மக்கள் மீது திணிப்பதே நோக்கமாகும்.

அதே போன்று தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக உலகிற்கு காட்டி அவர்களை அழிப்பதற்கு அல்லது பலவீனப்படுத்துவதற்கு அரசு பகீரதப் பிரயத்தனம் செய்கின்றது. அவ்வாறு செய்வதன் மூலம் தமிழ் மக்களின் பேரம் பேசும் சக்தியை அழிக்க முயல்கின்றது.

இந்த வகையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாகைகளை கருத்தில் கொள்ளாத ஒற்றையாட்சி அரசியல் அமைப்பினுள் உருவாக்கப்பட்ட சுதந்திரக் கட்சியின் தீர்வுத் திட்டத்தினை நாம் ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.

அந்த தீர்வுத்திட்ட யோசனை என்பது தமிழ் மக்களை இழிவுபடுத்தி சீண்டி ஆத்திரப்படுத்தும் நோக்கிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்னையின் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பிற்கு வெளியே தமிழ் மக்களின் தலை விதியை தாமே நிர்ணயித்துக் கொள்ளும் பலம் தமிழ் மக்களின் கையில் இருப்பதனை உறுதிப்படுத்துவதுடன், தமிழர் தாயகத்திலுள்ள சிங்களப் படைகளை வெளியேற்றி, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணயம், என்பவற்றினை உள்ளடக்கிய வகையிலான தீர்வுத் திட்டம் ஒன்றினை முன்வைத்து அதனடிப்படையில் தீர்வைக்காண முயல்வதே மீண்டும் இத் தீவில் இரத்த ஆறு ஓடுவதனை தவிர்ப்பதற்கான ஒரே வழிமுறையாகும். எமது இந்த ஆலோசனையை கருத்திலெடுப்பது ஆட்சியளர்களின் நலனிற்கு உகந்ததாகும்.

-Sankathi-

Edited by யாழ்வினோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபாஷ்! சரியான போட்டி!!

ஒரு பக்கம் பிரித்தானியா-நோர்வே முடக்கப்பட்டபின் அந்த இடத்தை நிரப்ப சர்வதேச வலைப்பின்னலின்

சூத்திரதாரிகளினால் தெரிவுசெய்யப்பட்ட நாடு.புலிகளை தடை செய்த முதல் ஐரோப்பியநாடு.ஐரோப்பிய

யூனியன் புலிகளைத்தடை செய்ய தனது ஐரோப்பிய யூனியன் தலைமைப்பதவியை பயன் படுத்திய பிரித்தாளும் தந்திரத்தின் பிதாமகன்.

மறுபக்கம் இந்தியா- நோர்வேயின் முடக்கத்தை நீண்ட நாட்களாக எதிர்பார்த்து மௌனவிரதம் காத்திருந்த

(இரகசிய வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு) நாடு.இன்று சந்தர்ப்பம் வந்ததும் அந்த இடத்தை நிரப்ப

அல்லது நிரப்ப வருபவர்களை விரட்டும் வேலைகளை மிக மிக வேகமாக முடுக்கி விட்டிருக்கும் பஞ்சசீலத்தின்

பிதாமகன்.

இவர்களின் இந்த திடீர் வரவுகளினாலும்,அறிக்கைகளாலும

  • தொடங்கியவர்

தமிழர் தரப்பு தனது நியாயத்தை விளக்குவதற்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றில் வாய்ப்புக் கிடைக்கும்.

இலங்கைத் தமிழர்கள் தாம் நடத்தும் உரிமைப் போராட்டத்தின் நியாயத்தை, பிரிட்டிஷ் நாடாளு மன்றத்தில் (ஹவுஸ் ஒவ் கொமன்ஸ் சபையில்) எடுத்து விளக்குவதற்கு வாய்ப்புக் கிடைக்கும். இலங்கைத் தமிழர் பிரச்சினை இனப்பிரச்சினை சம்பந்தமாக கடந்த புதன்கிழமை மே மாதம் இரண்டாம் திகதி நான்கரை மணி நேரம் இங்கு நடை பெற்ற விவாதத்தின் போது இது தொடர்பாகக் கோடி காட்டப்பட்டுள்ளது. அன்றைய விவாதத்தின் போது, அனைத் துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலை வரும் முன்னாள் வெளிவிவகார அமைச் ச ரும், தொழிற்கட்சி எம்.பியுமான கெய்த் வாஸ் தமது குழுவின் மூன்றம்சத் திட்டத்தை எடுத்து விளக்கினார்.

அவர் வெளியிட்ட மூன்றம்சத் திட்டம் வருமாறு:

* இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் நோர்வே அரசு ஆகிய முத்தரப்பினரும் கலந்துகொள்ளும் உச்சி மாநாட்டை எதிர்வரும் ஜூலை மாதத்தில் லண்டனில் நடத்து வது.

* பிரிட்டனின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் களைக் கொண்ட தூதுக்குழு ஒன்று எதிர்வரும் செப்ரெம்பர் மாதத் தில் இலங்கைக்குச் சென்று பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சு நடத்துவது. விடுதலைப் புலிகளின் பிரதேசங்களுக்கும் சென்று பேச்சு நடத்துவது.

* விடுதலைப் புலிகளின் பிரதம பேச்சாளர் (அனேகமாக அவர் களின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன்) தமிழர் தரப்பு நியாயங்களை நாடாளுமன்றத்தில் எடுத்து விளக்க வாய்ப்பு வழங்குவது.

இம்மாதம் இரண்டாம் திகதி கொமன்ஸ் சபையில் நடைபெற்ற இலங்கைப் பிரச்சினை சம்பந்தமான விவா தத்தில் மொத்தம் அறுபது எம்.பிக்கள் கலந்து கொண்டு உரை யாற்றினர்.

அங்கு பேசுகையில் கெய்த் வாஸ் குறிப்பிட்டதாவது:

விடுதலைப் புலிகள் மீது பிரிட்டன் தடைவிதித்து ஆறு வரு டங்கள் கழிந்துவிட்டன. தடை குறித்து மறுபரிசீலணை செய் வதற்கான காலம் வந்துவிட்டது. அவ்வாறு செய்வதன் மூலமே தீர்வுக்கான பேச்சுவார்த்தையை நிச்சயப்படுத்திக் கொள்ள முடி யும் என்றார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெரிம கோர்பயின், சைமன் ஹியு ஆகியோரும் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு வதே பேச்சுமூலமான தீர்வுக்கு உதவும் என்று தெரிவித்தனர். அமைப்பு ஒன்று சட்டரீதியற்றது என்று பிரகடனப்படுத்துவது சமாதானப் பேச்சுக்கு உதவமாட்டாது. மோசமான சரித்திரத்தை அழுத்திப்பிடித்துக் கொண்டிருப் பதன் மூலம் ஒரு தரப்புடன் பேச்சு நடத்தாமல் பின்னடிப்பதால், எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. ஐ.ஆர்.ஏ. அமைப்பை தடைசெய்ததன் மூலம் வட அயர்லாந்துப் பிரச்சினை கூர்மையாக்கப் பட்டதை நாமே அனுபவத்தில் கண்டிருக்கிறோம் என்று அவர் கள் இருவரும் எடுத்துக் காட்டினர்.

ஆனால் கொன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த கிளேய்ரன் பிறவுண் என்ற எம்.பியைத் தவிர அக்கட்சியின் ஏனைய பல உறுப்பினர்களும் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படக் கூடாது என்று அடித்துக் கூறினார்கள்.

வெளிவிவகார அமைச்சர் மறுப்பு

வெளிவிவகார அமைச்சர் கிம் ஹவெல்ஸ் பேசுகையில், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க முடியாது என்று வலியுறுத்தினார். பயங்கரவாதம் சொல்லிலும் செயலிலும் துறக்கப்படும் வரைக்கும் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது என்ற கேள்விக்கே இடமில்லை. தற்கொலைக் குண்டுத்தாரிகளுக்கும் கொலைகாரர்களுக்கும் சித்திரவதைக் காரருக்கும் சட்ட அங்கீகாரம் வழங்குவது என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

விடுதலைப் புலிகளுடன் உத்தியோக பூர்வமற்ற பேச்சுகள் நடைபெற்ற போதிலும் உத்தியோக ரீதியாக பேச்சுகளைப் போன்று பயன்தரமாட்டா. ஆகவே விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது அவசியம் என்று ஜோன் மக்டொனால்ட் (தொழிற்கட்சி) எம்.பி. எடுத்துரைத்தார். இந்தத் தடை இலங்கை இனப்பிரச்சினையை மேலும் பூதாகாரமாக்கியது என்பதனை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய வெளிவிவகார அமைச்சர், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதனால் இனப்பிரச்சினைக்கான சமாதானப் பேச்சுக்களை முன்னெடுத்துச் செல்ல முடியுமாயின் அது குறித்து அக்கறையுடன் ஆராயலாம் என்று கூறினார்.

உள்நாட்டு அமைச்சரின் நிலைப்பாடுஉள்நாட்டு அமைச்சர் பேசுகையில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்து அரசுக்கு வெறுப்பு எதுவும் இல்லை. வேண்டுமானால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உள்ள சரத்துக்களைப் பயன்படுத்தி அவர்கள் தம் மீதான தடையை நீக்குவதற்குப் பயன்படுத்த முடியும். அதற்கான சாத்திய நிலை ஒன்று அண்மையில் உருவாகியுள்ளது. சட்டத்துக்கான எதிராக ஏற்கனவே எழுந்த ஒரு சவால் விடுதலைப் புலிகளை "புதிய எல்லைக்குள்' கொண்டு வந்துவிட்டுள்ளது என்றார்.

-Uthayan-

Edited by யாழ்வினோ

மகிந்த ஐனாதிபதியானதின்ர மகிமை இப்ப தான் எங்கட சில தமிழ் ஆட்களிற்கு புரியப்போகுது இந்தவேளையில் தேசத்தின் குரல் பாலசிங்கம் இருந்திருந்தால் சீறிலங்காவுக்கும் மகிந்தவுக்கும் இன்னும் பெரிய ஆப்பாய் இருந்திருக்கும்

தமிழர் தரப்பு தனது நியாயத்தை விளக்குவதற்கு

பிரிட்டிஷ் நாடாளுமன்றில் வாய்ப்புக் கிடைக்கும்

புதனன்று அங்கு நடந்த விவாதத்தின்

மூன்று விளைவுகளில் இதுவும் ஒன்று

லண்டன், மே 5

இலங்கைத் தமிழர்கள் தாம் நடத்தும் உரிமைப் போராட்டத்தின் நியாயத்தை, பிரிட்டிஷ் நாடாளு மன்றத்தில் (ஹவுஸ் ஒவ் கொமன்ஸ் சபையில்) எடுத்து விளக்குவதற்கு வாய்ப்புக் கிடைக்கும்.

இலங்கைத் தமிழர் பிரச்சினை இனப்பிரச்சினை சம்பந்தமாக கடந்த புதன்கிழமை மே மாதம் இரண்டாம் திகதி நான்கரை மணி நேரம் இங்கு நடை பெற்ற விவாதத்தின் போது இது தொடர்பாகக் கோடி காட்டப்பட்டுள்ளது.

அன்றைய விவாதத்தின் போது, அனைத் துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலை வரும் முன்னாள் வெளிவிவகார அமைச் ச ரும், தொழிற்கட்சி எம்.பியுமான கெய்த் வாஸ் தமது குழுவின் மூன்றம்சத் திட்டத்தை எடுத்து விளக்கினார்.

அவர் வெளியிட்ட மூன்றம்சத் திட்டம் வருமாறு:

* இலங்கை அரசாங்கம் தமிழீழ விடுதலைப் புலிகள் நோர்வே அரசு ஆகிய முத்தரப்பினரும் கலந்துகொள்ளும் உச்சி மாநாட்டை எதிர்வரும் ஜூலை மாதத்தில் லண்டனில் நடத்து வது.

* பிரிட்டனின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் களைக் கொண்ட தூதுக்குழு ஒன்று எதிர்வரும் செப்ரெம்பர் மாதத் தில் இலங்கைக்குச் சென்று பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சு நடத்துவது.

விடுதலைப் புலிகளின் பிரதேசங்களுக்கும் சென்று பேச்சு நடத் துவது.

* விடுதலைப் புலிகளின் பிரதம பேச்சாளர் (அனேகமாக அவர் களின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன்) தமிழர் தரப்பு நியாயங்களை நாடாளுமன்றத்தில் எடுத்து விளக்க வாய்ப்பு வழங்குவது இம்மாதம் இரண்டாம் திகதி கொமன்ஸ் சபையில் நடைபெற்ற இலங்கைப் பிரச்சினை சம்பந்தமான விவா தத்தில் மொத்தம் அறுபது எம்.பிக்கள் கலந்து கொண்டு உரை யாற்றினர்.

அங்கு பேசுகையில் கெய்த் வாஸ் குறிப்பிட்டதாவது:

விடுதலைப் புலிகள் மீது பிரிட்டன் தடைவிதித்து ஆறு வரு டங்கள் கழிந்துவிட்டன. தடை குறித்து மறுபரிசீலணை செய் வதற்கான காலம் வந்துவிட்டது. அவ்வாறு செய்வதன் மூலமே தீர்வுக்கான பேச்சுவார்த்தையை நிச்சயப்படுத்திக் கொள்ள முடி யும் என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெரிம கோர்பயின், சைமன் ஹியு ஆகியோரும் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கு வதே பேச்சுமூலமான தீர்வுக்கு உதவும் என்று தெரிவித்தனர்.

அமைப்பு ஒன்று சட்டரீதியற்றது என்று பிரகடனப்படுத்துவது சமாதானப் பேச்சுக்கு உதவமாட்டாது.

""மோசமான சரித்திரத்தை'' அழுத்திப்பிடித்துக் கொண்டிருப் பதன் மூலம் ஒரு தரப்புடன் பேச்சு நடத்தாமல் பின்னடிப்பதால், எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. ஐ.ஆர்.ஏ. அமைப்பை தடைசெய்ததன் மூலம் வட அயர்லாந்துப் பிரச்சினை கூர்மையாக்கப் பட்டதை நாமே அனுபவத்தில் கண்டிருக்கிறோம் என்று அவர் கள் இருவரும் எடுத்துக் காட்டினர்.

ஆனால் கொன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த கிளேய்ரன் பிறவுண் என்ற எம்.பியைத் தவிர அக்கட்சியின் ஏனைய பல உறுப்பினர்களும் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்படக் கூடாது என்று அடித்துக் கூறினார்கள்.

வெளிவிவகார அமைச்சர் மறுப்பு

வெளிவிவகார அமைச்சர் கிம் ஹவெல்ஸ் பேசுகையில், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க முடியாது என்று வலியுறுத்தினார்.

பயங்கரவாதம் சொல்லிலும் செயலிலும் துறக்கப்படும் வரைக்கும் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது என்ற கேள்விக்கே இடமில்லை.

தற்கொலைக் குண்டுத்தாரிகளுக்கும் கொலைகாரர்களுக்கும் சித்திரவதைக் காரருக்கும் சட்ட அங்கீகாரம் வழங்குவது என்பதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

விடுதலைப் புலிகளுடன் உத்தியோக பூர்வமற்ற பேச்சுகள் நடைபெற்ற போதிலும் உத்தியோக ரீதியாக பேச்சுகளைப் போன்று பயன்தரமாட்டா. ஆகவே விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது அவசியம் என்று ஜோன் மக்டொனால்ட் (தொழிற்கட்சி) எம்.பி. எடுத்துரைத்தார். இந்தத் தடை இலங்கை இனப்பிரச்சினையை மேலும் பூதாகாரமாக்கியது என்பதனை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய வெளிவிவகார அமைச்சர், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதனால் இனப்பிரச்சினைக்கான சமாதானப் பேச்சுக்களை முன்னெடுத்துச் செல்ல முடியுமாயின் அது குறித்து அக்கறையுடன் ஆராயலாம் என்று கூறினார்.

உள்நாட்டு அமைச்சரின் நிலைப்பாடு

உள்நாட்டு அமைச்சர் பேசுகையில்

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது குறித்து அரசுக்கு வெறுப்பு எதுவும் இல்லை. வேண்டுமானால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் உள்ள சரத்துக்களைப் பயன்படுத்தி அவர்கள் தம் மீதான தடையை நீக்குவதற்குப் பயன்படுத்த முடியும். அதற்கான சாத்திய நிலை ஒன்று அண்மையில் உருவாகியுள்ளது. சட்டத்துக்கான எதிராக ஏற்கனவே எழுந்த ஒரு சவால் விடுதலைப் புலிகளை "புதிய எல்லைக்குள்' கொண்டு வந்துவிட்டுள்ளது என்றார். (அ)

உதயன்

quote name='mathuka' date='May 4 2007, 05:17 PM' post='297625']

யார் கும்பிடால் என்ன குத்துகரணம் போட்டால் என்ன சிங்கள அரசாங்கம் மனம் வைத்தால் தானே எல்லாம். நோர்வேயே அலுத்துக்கொள்ளும் போது ஆங்கிலேயர் என்ன பரம சிவன் கழுத்தில் இருக்கும் பாம்பா?

அண்ணல் பாலசிங்கம் அவர்களின் இழப்பு......... இக்கட்டான இந்த சூழ் நிலையில் பேரிழப்பாக உள்ளது...

எப்படி ஆயினும் இது போண்ற வாய்ப்பை இழக்க இயலாது. இந்த முறை அனைத்தையும் தக்க சான்றுகளுடன் முன்வைக்கவேண்டும்.

ஒருவேளை இலங்கை அரசின்மேல் தடை ஏற்பட கூட வழியுண்டு.

:P

விடுதலைப்புலிகளின் மேல் உள்ள தடையை நீக்க முடியாது என்பதற்கு கூறும் காரணங்களை இலங்கையரசுகளும் இன்றும் செய்துகொண்டு இருக்கிறது....அப்படியானால் ஏன் இலங்கையரசை

தடைசெய்யவில்லை?

நீதியான அரசு என்றால் எல்லோருக்கும் ஒரே நியாயங்களாக இருக்கவேண்டும்.

வான் புலிகளின் தாக்குதல் காரணம், புலம் பெயர் மக்களின் பிரச்சாரங்களும், மனிதவுரிமையமைப்புகளின் வெளிப்படையான அறிவிப்புகளும் தற்போது பலனாடுகள் கண்களைத்திறக்க வைத்திருக்கிறது.

எது எப்படியோ நமது போரட்ட வேகங்கள் எந்தவிதத்திலும் பாதிக்காத பின்னடைவை ஏற்படுத்தாதவரை

நமக்கு சாதகமாக காய்களை நகர்த்தலாம்..

கூடிய நிபந்தனைகள் விதிக்க வேண்டும்

1 புலிகளின் தடைகளை நீக்க வேண்டும்

2.கிழக்கு மாகண முழு இராணுவமும் வாபஸ் பெற வேண்டும்.

3.ஏ 9 பாதை உடன் திறக்கப்படவேண்டும்..

4,ஒட்டுப்படைகள் முற்றாக அகற்றப்படவேண்டும்..

இவளவு நிபந்தனைகளையும் இவர்களால் செய்து முடித்தபின் பேச்சுக்களில் ஈடுபட முயற்சிக்கு யோசிப்போம் என்பதில் உறுதியாக எவன் வந்தாலும் இருக்கவேண்டும்..அது வரைக்கும் மீட்பு தொடரட்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.