பலம்மிக்க நாடுகளின் மோதல்களால் சிறிலங்காவின் இறைமை பாதிப்பு – கோத்தா

gota-1-300x200.jpg

இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த நாடுகளுக்கிடையிலான மோதல்களில், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஈடுபாட்டினால், சிறிலங்காவின் இறைமை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக, பொதுஜன பெரமுனவின் அதிபர் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடந்த லங்கா சமசமாசக் கட்சியின் மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

“எதிர்கால அரசாங்கம் நாட்டின் இறைமையை மீளமைக்க வேண்டும்.

சிறிலங்காவைப் போன்ற சிறிய நாடு, சக்திவாய்ந்த நாடுகளின் மோதல்களுக்குள் தலையிடக் கூடாது.

பல்வேறு சக்திகளின் தலையீட்டினால் அணிசேராக கொள்கை  அழிக்கப்பட்டுள்ளது.

முறையான பாதுகாப்புத் திட்டத்தினால் தான் தீவிரவாதத்தை தோற்கடித்தோம்.

தற்போதைய அரசாங்கத்திடம் முறையான பாதுகாப்புத் திட்டமோ, பொருளாதாரத் திட்டமோ கிடையாது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2019/09/30/news/40291