Jump to content

முதலீடுகள் செய்வதற்கும், எளிதாக தொழில் புரிவதற்கும் இந்தியாவுக்கு வாருங்கள்...பிரதமர் மோடி அழைப்பு..!


Recommended Posts

முதலீடுகள் செய்வதற்கும், எளிதாக தொழில்புரிவதற்கும் இந்தியாவுக்கு வாருங்கள் என தாய்லாந்தில் தொழில்துறையினருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

தாய்லாந்து சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு ஆதித்ய பிர்லா தொழில்குழுமத்தின் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றினார். இந்தியாவில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை சுட்டிக்காட்டி பேசிய அவர், முதலீடுகள் செய்வதற்கும் எளிதாக தொழில்புரிவதற்கும் உலகிலேயே மிகவும் சிறந்த இடம் இந்தியா எனக் குறிப்பிட்டார்.

எளிதாக தொழில்செய்வதற்கான சூழல், வாழ்க்கைத் தரம், உள்கட்டமைப்பு, உற்பத்தித் திறன், காப்புரிமைகள், வனங்களின் பரப்பு என பல விஷயங்கள் வளர்ந்திருப்பதாகவும், அரசு அதிகாரிகளின் தலையீடு, வரிகள், வரி விகிதங்கள், ஊழல் போன்றவை குறைந்திருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

தொழில் தொடங்குவதற்கும், சிறந்த சுற்றுலா தலங்களை கண்டு ரசிப்பதற்கும் இந்தியா வருமாறும், அப்படி வருபவர்களை இருகரம் விரித்து வரவேற்பதற்கு தயாராக இருப்பதாகவும் மோடி கூறினார்.

2014ஆம் ஆண்டில் பாஜக அரசு பொறுப்பேற்றபோது இந்தியா 2 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருந்தது என்றும், 5 ஆண்டுகளில் அது 3 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்ந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

65 ஆண்டுகளில் 2 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக இருந்த நிலையை, 5 ஆண்டுகளில் 3 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்த்த முடிந்தது என்றும் மோடி குறிப்பிட்டார். இதன் மூலம், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை விரைவில் எட்ட முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாகவும் பிரதமர் கூறினார்.

https://www.polimernews.com/dnews/87248/முதலீடுகள்-செய்வதற்கும்,எளிதாக-தொழில்-புரிவதற்கும்இந்தியாவுக்குவாருங்கள்...பிரதமர்-மோடிஅழைப்பு..!

Link to comment
Share on other sites

ஜெர்மனியில் 10 லட்சம் மின்சார கார் சார்ஜிங் மையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் - ஏஞ்சலா மெர்கல்

157279842587338.jpg

ஜெர்மனியில் 2030ம் ஆண்டுக்குள் 10 லட்சம் எண்ணிக்கையில் மின்சார கார் சார்ஜிங் மையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்கல் வலியுறுத்தியுள்ளார்.

பெட்ரோல், டீசல் வாகனங்களால் காற்று மாசு ஏற்படுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மின்சார வாகன பயன்பாட்டை ஜெர்மனி அரசு ஊக்குவித்து வருகிறது. இதுகுறித்து மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களுடன் ஏஞ்சலா மெர்கல் விரைவில் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இந்நிலையில், ஏஞ்சலா மெர்கல் வீடியோ மூலம் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில் ஜெர்மனியில் தற்போது 20 ஆயிரம் எண்ணிக்கையிலேயே மின்சார கார் சார்ஜிங் மையங்கள் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த எண்ணிக்கை 2030ம் ஆண்டுக்குள் 10 லட்சமாக உயர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும், இதுகுறித்து மின்சார கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் தான் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் மெர்கல் தெரிவித்துள்ளார்.

https://www.polimernews.com/dnews/87338/ஜெர்மனியில்-10-லட்சம்மின்சார-கார்-சார்ஜிங்மையங்கள்-ஏற்படுத்தப்படவேண்டும்----ஏஞ்சலா-மெர்கல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு பக்கம்.....எரிச்சலைக் கிளப்பிறார்..... மை லோர்ட்..!

முழு இந்தியாக்காரரும்....இப்ப இந்தப் பக்கம் தான் !

பொருட்கள் ஏற்றி இறக்குதல்....பார ஊர்தி செலுத்துதல், பல் பொருள் அங்காடி  பொருட்கள்  வினியோகம் போன்ற துறைகள் இப்போது இவர்கள் கையில் தான் உள்ளது!

சில ஏரியாக்களில்....வீட்டு விலைகள் இவர்களால்....விரைவாக  அதிகரிக்கின்றன! !

Link to comment
Share on other sites

உலகின் வாகன வருடாந்த வியாபார தொகை 7 த்ரிலியன் டாலர்கள். 

புதிதாக நுழையும் தொழில்நுட்பங்களில் ஒன்று மின்சார 'ஸ்கூட்டி' 

கனடாவின் 'ஓஜோ' அவ்வாறான ஒரு நிறுவனம்  

காப்புறுதி இல்லை ; எரிபொருள் இல்லை; பணம் செலுத்து... ஓட்டு 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.