Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யார் மேல் குற்றம்?

Featured Replies

- கருணாநிதி, தி.மு.க. தலைவர்

கடற்கரையோரம் நின்று

கவிதைப் பயிர் விளைக்க

கற்பனைக் கலப்பை பிடித்து

கடல் அலையில் கவின் நிலவொளியில்

ஏரோட்டிய பாராட்டுக்குரிய கவிஞர்களே!

சீராட்டும் தமிழில் என்னை

கொள்ளையழகு காட்டுகின்ற கோலப்பெண்ணால் என்றும்...

அலைச் சிரிப்புக்காரி ஆடவர் பெண்டிர் மழலையர்

அனைவரையும் நனைத்து மகிழும் நாட்டியக்காரி என்றும்

கிலுகிலுப்பை ஆட்டி ஒலி எழுப்பிக் குதிக்கும் குழந்தைகளின்

கலகலப்புச் சிரிப்புக்குப் போட்டியாக கிளிஞ்சல்களால் ஒலியெழுப்பும்

தரங்கம்பாடி யென்றும் தழுவிடுவீர் எனைத் தமிழ்க் கவியால்!

கொஞ்சு மொழி இப்படி அந்த நாள் பேசியதெல்லாம்

ஏடெடுத்துப் பாட்டெழுதி என் எழிலைப் புகழ்ந்ததெல்லாம்

திடீரென ஒரு நாள் தீப்பிடித்த கற்பூரம் போல்

தீய்ந்து போனதேனோ?

"சுனாமி" என எனக்கோர் புதுப்பெயர் வைத்தீர்!

"பினாமி" என்றீர்! பிணந்தின்னி என்றீர்!

சுனாமியும் சுந்தரி போல் சுகந்தி போல் சுகன்யா போல்

சுகந்தரு மெல்லிய பெண்ணின் பெயர் தான் என எண்ணாமல்

சுடுகாட்டுக் காட்டேரி என்றும் மூதேவியென்றும்

மூளி அலங்காரி என்றும் முணுமுணுத்து

மூன்று நாளாய் முன்னூறு நானூறு கவிதை எழுதி விட்டீர்

கோலத் தமிழ் விடுத்து கோபத் தமிழால் எனைச் சுடுகின்றீர்;

குற்றம் நான் என்னதான் செய்துவிட்டேன்

கொற்றவன் பாண்டியன் முன் நீதி கேட்ட கண்ணகி போல்

குலவிளக்கு நான்;கவிஞர் காள்! உம்மிடம் கேட்கின்றேன்.

உயிர்கள் லட்சத்தை நான் உண்டு மகிழ்ந்தேன் என்கின்றீர்-

உண்மையா? உண்மையா? அது உண்மையா? உரைத்திடுக!

ஊமையாய் வீழ்ந்து உயிர் துறந்த பாண்டிய மன்னன் ஆகாதீர்!

கடற்கோள் என்று பெயர் இட்டதாலே;அது

கடலாம் என் குற்றம் ஆகி விடுமா?

நீவிர் அறிந்திடுக; "கடற்கோள்" அல்ல இது;

"நிலக்கோள்!"

நில மடந்தையின் சீற்றத்தால்தான்

"சுனாமி"யெனும் கொந்தளிப்பு சுமத்ராவில் தோன்றியது.

ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு

ஆவேசங் கொண்டு பூமி தேவி ஏன் வெடித்தாள்?

அந்த வெடிப்புக்குள்ளே வீழ்ந்த நானும்

தலையில், தோளில், கையில் தாங்கியிருந்த சுமையை

நிலை கொள்ளாமல் கீழே போட நேர்ந்தது-

அலைகடல் நான்;பொறுமைக்கு எல்லையுண்டே

பூமிதேவி செயல் தவிர்க்கத் தற்காப்புப் போர்க் கவசம்

பூண்டு நான் கிளம்பியது "காரணக்கோள்;"-

"கடற்கோள்" அல்ல!

கவிஞர்காள்! கவனமாகக் கேளுங்கள்-

காதலியை அணைத்துக் கொண்டு நீவீர்

கடற்கரை மதிற்சுவரில் அமர்ந்திருக்கும் போது

மதிற்சுவர் இடிந்து காதலி, உமது கை விட்டுக்

கடலில் வீழ்ந்திறந்தால்-அது

மதிலின் குற்றமா? இந்தக் கடலாள் குற்றமா?

மதிற்சுவர் வெடித்தது போல் மண் மாதா

ஆயிரம் கிலோ தொலைவு அழிவு வேலை செய்திட

அந்தோ நான் பழிகாரி ஆகி விட்டேன்

சதிகாரி எனும் சாபத்திற் காளாகி விட்டேன்-

கோபத்திற்காளான குவலயத்தார் என் மீது

கொட்டுகின்ற பழிச் சொற்கள் உம்மால் பரிமாறப்படுவதை

பார்க்கச் சகிக்கவில்லை;கேட்கப் பொறுமையில்லை-

பழைய நாள் ஞாபகம் மறவாதீர்-கவிஞர்காள்!

நானும் உமது கவிதைக்குக் கருப்பொருளாய் உதவியதை

கணத்தில் மறந்து விட்டு சுடுகணை தொடுக்காதீர்!

அடுக்காது இயற்கையின் தாண்டவம் எனினும்;

பூமி தான் இதற்குப் பொறுப்பாளி; மறவாதீர்!

:lol::lol::lol:

யார் இவர்? நினைவுக்கு வருகுதில்லை.. மறந்துவிட்டது...

  • தொடங்கியவர்

யார் இவர்? நினைவுக்கு வருகுதில்லை.. மறந்துவிட்டது...

முத்தமிழ் முதல்வனாம்-

தமிழ் நாட்டின் முதல்வராம்

இத்தரை மீதுமே

இவர் புகழ் அறியுமாம்...

அத்தனை பெரியாரை

ஜயா நீ அறியலயோ...??

இனிய தமிழ் நூலகமே

இவரென்றால் பொய்தானோ...??

கல் நெஞ்ச காரரும்

கையெடுத்து வணங்குமிந்த

வித்தக கலைஞரை

விடலையுளன்கு தெரியலயோ...??

போதுமய்யா போதும்- உந்தன்

பொய்யதனை கொளுத்தும

;கல்லெடுத்து அடிக்குமுன் - இவரே

கலைஞரென சொல்லும்....

மாப்பு............ :D:lol: :P :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நடிப்பிற்குப் புது இலக்கணம் வகுக்கப் போகும் கலைஞரும் இவர் தான்! :rolleyes:

தமிழக மீனவரின் நலனைப் புறந்தள்ளி றோவுக்கு வக்காளத்து வாங்கும் வங்குரோத்து அரசியல் வாதி

அரசியல் என்னும் சாக்கடையில் வீசப்படும் வார்த்தைகள் எல்லாம் மாயை

தமிழுக்காய் எழுதுவதெல்லாம் வெறும் கற்பனைக்காவியங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அடுக்கு மொழியில் வசனம் பேசுவதும் கவிதை, காவியம் எழுதுவதும் மட்டுமே தமிழுக்குச் செய்யும் பெரும் சேவை என்று கருணாநிதியும் அவரை உலகத் தமிழர் தலைவர் என்று அழைப்போரும் நம்பிக் கொண்டிருக்கிறார்கள். தனது இளமையையும் உயிரையும் தமிழனுக்காகக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு புலிப் போராளிக்கு அருகில் வைத்துப் பார்க்கக் கூடத் தகுதியற்றவர் அல்லவா இந்த நபர்?

எனக்கும் இந்தப் பொய்யனின் படைப்புக்களை வாசித்து பழக்கமில்லை...

ஒருவேளை இவர் அரசியலினுள் வராது இருந்திருந்தால் இவரது படைப்புக்களை விரும்பி வாசித்திருக்கக்கூடும்..

  • தொடங்கியவர்

தேசத்தின் குரலதை

தேகத்தில் இருத்தி

நண்பனாய் உரைத்த

நாளதை மறந்தீர்...

பகைவனாய் தமிழரை

பாரதம் பார்க்கையில்

சட்டத்தை மறந்தொரு

சாட்சி சொன்னவர்....

உலகத்து முதல்வர்கள்

உரைத்தீரா செய்தியை

தன்னிலை மறந்தங்கு

தமிழுக்காய் சொன்னவர்...

இன்னார் ஆட்சியை

இழித்தா உரைத்தீர்...??

சட்ட சபையதில்

சாகசம் செய்தவர்...

நிறைவேற்று நிகழ்வுகள்

நிறையவே செய்தவர்

இத்தனை மறந்தா

இத்தனை உரைத்தீர்...???

கலைஞரின் ஆட்சியல்

கடிவாளம் கழிவு

இம்சையாள் ஆட்சியில்

இன்னல்கள் ஆயிரம்...

இனியெனும் தமிழரே

இரங்களல் செய்யுங்கள்...

மனு நீதி தர்மத்தை

மனதிலே காருங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் பல உலக நாடுகளில் தடை செய்யப் படாமல் இருந்த போது, வெற்றிக் கொடிகளைத் தொடர்ந்து பறக்க விட்டுக் கொண்டிருந்த போது சிவசேனைத் தலைவர் பால் தக்கரே கூடத் தான் தேசியத்தலைவரையும் போராட்டத்தையும் புகழ்ந்தார். அந்த நேரம் மத்தியில் பிஜேபி ஆட்சியென்று ஞாபகம். ஆனால் பல சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்று ஈழத்தமிழர்களும் எமது தலைமையும் துன்பங்களை எதிர் கொள்ளும் வேளையில் ஒரு துரும்பைக்கூட அசைக்காமல் இருக்கும் கருணாநிதியை நீங்கள் தலையில் வைத்துக் கொண்டாடுவது மிகை! அது சரி அது என்ன சாட்சி? விளக்க முடியுமா?

மனு நீதியை நாம் மறக்கக் கூடாது தான். ஆனால் நன்றியுணர்வை சாதாரண தமிழக சகோதரங்களிடம் காட்டுங்கள். எம்மோடு துன்பத்தையும் மகிழ்ச்சியையும் பகிரும் வெங்கட், ராஜசேகரம், ஜனனி போன்றவர்களிடம் காட்டுங்கள். பழநெடுமாறன் ஐயாவைப் போற்றுங்கள். ஏன் ஒரு சில்லறை அரசியல் வாதிக்கு மெனக்கெட்டுக் கவிதை?

  • தொடங்கியவர்

புலிகள் பல உலக நாடுகளில் தடை செய்யப் படாமல் இருந்த போது, வெற்றிக் கொடிகளைத் தொடர்ந்து பறக்க விட்டுக் கொண்டிருந்த போது சிவசேனைத் தலைவர் பால் தக்கரே கூடத் தான் தேசியத்தலைவரையும் போராட்டத்தையும் புகழ்ந்தார். அந்த நேரம் மத்தியில் பிஜேபி ஆட்சியென்று ஞாபகம். ஆனால் பல சர்வதேச நெருக்கடிகளுக்கு மத்தியில் இன்று ஈழத்தமிழர்களும் எமது தலைமையும் துன்பங்களை எதிர் கொள்ளும் வேளையில் ஒரு துரும்பைக்கூட அசைக்காமல் இருக்கும் கருணாநிதியை நீங்கள் தலையில் வைத்துக் கொண்டாடுவது மிகை! அது சரி அது என்ன சாட்சி? விளக்க முடியுமா?

மனு நீதியை நாம் மறக்கக் கூடாது தான். ஆனால் நன்றியுணர்வை சாதாரண தமிழக சகோதரங்களிடம் காட்டுங்கள். எம்மோடு துன்பத்தையும் மகிழ்ச்சியையும் பகிரும் வெங்கட், ராஜசேகரம், ஜனனி போன்றவர்களிடம் காட்டுங்கள். பழநெடுமாறன் ஐயாவைப் போற்றுங்கள். ஏன் ஒரு சில்லறை அரசியல் வாதிக்கு மெனக்கெட்டுக் கவிதை?

நீதி கெட்ட மானென்று

தீர்ப்பெழுத வந்தவரே

ஊனமுள்ள உம் மனசை

ஊரசிக் கொஞ்சம் நீர்கழுவும்…

கல்லாகி உலகமது

காலமுன் நிற்கையிலே

கருணை கொண்ட வார்த்தைகளை

காலமுன்னே ஏவி நின்றார்…

எம் தமிழை காத்திடவே

தன் பணியை ஆக்கி நின்றார்

அத்தனையோர் பெரியாரை

அவமதித்தல் சரியன்றோ….???

கலைஞரது ஆட்சியென்றால்

களப் புலிகள் ஆடிடுவார்

எத்தனையோ இன்னலிலே

எம்தமிழை காத்தவர்கள்…

கொடுங்கோலான் அரியனைகள்

கொடுமைகளை ஆடையிலே

எம் தமிழை காத்திடவே

எண்ணியெண்ணி குரல் கொடுத்தார்…

அன்னியத்து சிங்களமே

ஆடியது அன்று காண்….

இத்தனையும் விளங்காமல்

இங்கென்ன நீயுரைத்தாய்…???

  • கருத்துக்கள உறவுகள்

இது கவிதைக் களம் என்பதால் நீங்கள் எதுகை மோனை என்பவற்றை மட்டும் கவனித்து எழுதுகிறீர்கள். எதுகை மோனைக்காக இல்லாததை இருப்பதாக எழுதுவது நல்ல கவிதையா எனத் தெரியவில்லை எனக்கு. நீங்கள் இந்தக் கவிதையில் செய்தார் செய்தார் என்பதெல்லாம் எப்போது செய்தார் என (எதுகை மோனை தப்பாமல்!) அடுத்த கவிதையில் நீங்கள் சொன்னால் அதற்குப் பதில் கருத்து எழுத எனக்கு நேரமிருக்கும். இல்லையேல் எனது நேரம் வீண்.

  • தொடங்கியவர்

இது கவிதைக் களம் என்பதால் நீங்கள் எதுகை மோனை என்பவற்றை மட்டும் கவனித்து எழுதுகிறீர்கள். எதுகை மோனைக்காக இல்லாததை இருப்பதாக எழுதுவது நல்ல கவிதையா எனத் தெரியவில்லை எனக்கு. நீங்கள் இந்தக் கவிதையில் செய்தார் செய்தார் என்பதெல்லாம் எப்போது செய்தார் என (எதுகை மோனை தப்பாமல்!) அடுத்த கவிதையில் நீங்கள் சொன்னால் அதற்குப் பதில் கருத்து எழுத எனக்கு நேரமிருக்கும். இல்லையேல் எனது நேரம் வீண்.

குறையதை குறையென்று

குலையாமல் சொல்லுங்கள்

நிறைகுடம் தளும்பாது

என்பதை புரியுங்கள்...

ஆவண களஞ்சிய

ஆவணம் புரட்டுங்கள்

வரலாறு கண்முன்னே

வரலாறு சொல்லும்.....

தமிழுக்காய் தமிழ்நாடு

குரலது கொடுத்தால்

தட்டியே கரகோசம்

பட்டாசு செய்வீர்...

அரசியல் நெருக்கடி

அவருக்கு வந்தால்

குலைத்தே குலைத்தே- அவர்

குரலவளை அறுப்பீர்....

இதை தான எம் தமிழ்

இதுவரை செய்தார்

இனியெனும் திருந்திய

இதயங்கள் காட்டுங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

பதில் இல்லை. ஆவணம் புரட்டிய பிறகு தான் நாம் கருத்தே எழுதுகிறோம். நிறைகுடம் யார்? தழும்பாத கருணாநிதியா அல்லது பதில் தராத நீங்களா? நாம் இருவரும் புரட்டிய ஆவணங்கள் வெவ்வேறாக இருக்கலாம், ஆனால் உண்மை வரலாறு ஒன்று தான். அதை எமது தலைமையின் ஒட்டாத ராஜதந்திரப் பேச்சும் யாழ் கள உறவுகளின் கருத்துகளுமே சுட்டிக் காட்டும். நீங்கள் ஒரு நல்ல கவிஞர் என்பது என் முடிவு. பாராட்டுகளும் வணக்கங்களும்! வருகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.