Jump to content

ஒவ்வொரு குடிமகன் மீதும் 23 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கடன்


ampanai

Recommended Posts

கடனில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள் : ஒவ்வொரு குடிமகன் மீதும் 23 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கடன் உள்ளதாக சர்வதேச நிதியம் அறிக்கை வெளியீடு

உலகத்தில் உள்ள ஒவ்வொருவர் மீதும் 23 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கடன் இருப்பதாக சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.உலக நாடுகள் வாங்கும் கடனின் அளவு ஒவ்வொரு ஆண்டும் பன்மடங்கு அதிகரிப்பதாக சர்வதேச நிதியம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உலகின் 770 கோடி மக்கள் தொகையில், ஒவ்வொருவர் மீதும் 23 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் கடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டு வரையிலான உலக நாடுகளின் மொத்த கடன் 255 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பில் இது 18 ஆயிரத்து 360 லட்சம் கோடி ரூபாய் ஆகும். இதில் 2019-ம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் மட்டும் உலக நாடுகள் 5 ஆயிரத்து 40 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளன. இதில் 2.7 சதவிதம் இந்தியா பெற்ற கடன். அதாவது நடப்பு ஆண்டின் மொத்த கடன் தொகையில் இந்தியாவின் கடன் 1.36 லட்சம் கோடி ஆக உள்ளது. உலக நாடுகளின் கடன் அதிகரிப்பதில் அமெரிக்கா மற்றும் சீனாவின் பங்கு மிக அதிகமாக இருக்கிறது என்றும் மொத்த கடனில் 60 சதவிதம் இந்த இரண்டு நாடுகளால் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கங்கள் மட்டும் கடந்த 11 ஆண்டுகளில் 2,160 லட்சம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும் நிறுவனங்கள் தரப்பில் 1,800 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு தேவைகளுக்கான கடனாக 648 லட்சம் கோடி ரூபாயும், வங்கிகள் தரப்பில் 144 லட்சம் கோடி ரூபாயும் கடனாக பெறப்பட்டுள்ளதாக Bank of America Merrill Lynch மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.வட்டி விகிதங்கள் மிகவும் குறைவாக இருப்பதே கடனின் அளவு அதிகரிக்க முக்கிய காரணங்களாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இனி வரும் காலங்களில் வட்டி குறைய வாய்ப்புகள் இல்லை என்பதால், வாங்கிய கடனை திரும்ப செலுத்த உலக நாடுகள் சிரமப்படும் நிலை வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=541333

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.