Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

’இலங்கை பிரச்சினையில் மோடி தலையிட்டு தீர்வுகாண வேண்டும்’ - மு.க.ஸ்டாலின்

Featured Replies

image_f9f3321b74.jpg

தமிழர்களுக்கு நேர்ந்துள்ள நெருக்கடி குறித்து இந்திய மத்திய அரசு பரிசீலனை செய்து ஈழத்தமிழர்கள் அமைதியாக வாழ்வதற்கு ஆவன செய்திட வேண்டும்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பட்ட காலிலேயே படும் என்பதற்கொப்ப, படமுடியாது இனி துயரம் பட்டதெல்லாம் போதும் என்று, துன்ப துயரங்கள் அனைத்தையும் அனுபவித்துச் சோர்ந்து போயிருக்கும் ஈழத்தமிழர்களை மேலும் அச்சுறுத்திச் செயலிழக்கச் செய்திடும் எண்ணத்துடன், எடுத்த எடுப்பிலேயே, “இலங்கையில் தமிழர் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தினர் இனிமேல் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவார்கள்" என்று அறிவித்துள்ளதற்கும்; தமிழர் பகுதிகளில் உள்ள தெருக்களின் தமிழ்ப் பெயர்களை அழிப்பதற்கும்; திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

“புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பதவிப் பொறுப்பேற்ற ஈரம் காய்வதற்குள், தமிழர்களின் இதயங்களைக் காயப்படுத்தி- அவர்களின் கண்ணியத்தைக் குறைக்கும் பணி வேகமாகத் ஆரம்பித்து விட்டதும், இந்தியாவின் அப்பாவி மீனவர்களின் மீதான தாக்குதல் அதிகரித்து இருப்பதுமான அநியாயம், உலகத் தமிழர் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

“இலங்கையில் அமைந்துள்ள ராஜபக்ஷ குழுமத்தின் புதிய அரசில், தமிழர்களுக்கு நேர்ந்துள்ள இந்த நெருக்கடி குறித்து- மத்திய அரசு உன்னிப்பாகக் கவனித்து, அதன் எதிர்காலப் பரிமாணங்களை ஆழ்ந்து பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கைகளை எடுத்து, ஈழத்தமிழர்கள் கண்ணியத்துடனும் சுயமரியாதையுடனும், அரசமைப்புச் சட்ட ரீதியிலான உரிமைகளுடன் அமைதியாக வாழ்வதற்கும், அவர்கள் விரும்பும் தீர்வு ஏற்படுவதற்கும், ஆவன செய்திட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை, மிகுந்த அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

“இலங்கையில் தேர்தல் முடிந்தவுடன், தமக்கு வாக்களித்தவர்கள் வாக்களிக்காதவர்கள் என வேறுபடுத்திப் பார்க்காமல் அனைவரிடத்தும் சமமாக நடந்து கொள்வேன் என கோட்டாபய அளித்த வாக்குறுதியை நினைவு கூர்ந்திடக் கேட்டுக் கொள்கிறேன். '

“பிரதமர் மோடி, ஈழத்தமிழர் பிரச்னையை கோட்டாபய ராஜபக்ஷவிடம் உரிய முறையில் எடுத்துரைத்து, அவரின் உள்ளத்தின் ஓரத்தில் இருக்கும் தீயை அணைத்து, அவரை நியாயவழிப்படுத்தி, ஈழத் தமிழர்களுக்கு உதவிடும் அக்கறையான நடைமுறையை மேற்கொள்ள பெரிதும் வலியுறுத்துவார் என நம்புகிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/இலஙக-பரசசனயல-மட-தலயடட-தரவகண-வணடம/175-241430

 

  • தொடங்கியவர்

Vaiko to lead protest against Gotabaya’s visit

MDMK General Secretary Vaiko on Saturday said he will lead a demonstration in New Delhi on November 28, against newly elected Sri Lakan President Gotabaya Rajapaksa’s visit to the country, the Hindu reported.

Mr. Vaiko alleged that Mr. Rajapaksa was, in his capacity as Defence Minister in then President Mahinda Rajapaksa’s Cabinet, during the Sri Lankan civil war.

http://www.dailymirror.lk/breaking_news/Vaiko-to-lead-protest-against-Gotabayas-visit/108-178372

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா ஒதுங்கி இருந்தாலே அரைவாசிப் பிரச்சனை தீர்ந்தமாதிரி. 

  • கருத்துக்கள உறவுகள்

DnzIzzUXoAUNOHB.jpg

முதலில் ரி.ஆர் பாலுக்கு கண்டனம்

தெரிவிக்குக..

  • தொடங்கியவர்

தமிழர்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு! ராமதாஸ்
 

 

ஈழத்தமிழர்களுக்கு தனித்தமிழீழம்  அமைத்துத் தருவது தான் ஈழப் பிரச்சினைக்கு சிறந்தத் தீர்வாக அமையும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில், ஈழத் தமிழர்களின் எதிர்காலப் பாதுகாப்பு கருதி, எது நடக்கக்கூடாது என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வேண்டினார்களோ, அது நடந்து விட்டது. ஆம்.... தமிழினத்தின் எதிரியான கோத்தபாய ராஜபக்சே அமோக வெற்றி பெற்று இலங்கையின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது இலங்கையில் அமைதியை ஏற்படுத்த எந்த வகையிலும் உதவாது.

இலங்கையில் நேற்று நடைபெற்ற 8-ஆவது அதிபர் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் இலங்கை பொதுஜன கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சேவுக்கும், இலங்கை முன்னாள் பிரதமர் பிரேமதாசாவின் புதல்வரும், ஐக்கிய தேசிய முன்னணி வேட்பாளருமான சஜித் பிரேமதாசாவுக்கும் இடையில் தான் கடுமையான போட்டி நிலவியது. இவர்கள்  இருவருமே தமிழர்களுக்கு ஆதரவானவர்கள் அல்ல என்ற போதிலும், இந்த இருவரில் எவர் மிகவும் மோசமானவர், எவர் கொஞ்சம் மோசமானவர் என்ற அடிப்படையில் தான், அதிபர் தேர்தலில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை இலங்கையில் வாழும் தமிழர்கள் தீர்மானிக்க வேண்டியிருந்தது.

https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/sri-lanka-election-results-pmk-ramadoss-statement

  • தொடங்கியவர்

அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றம்...!

 

நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோருவது உட்பட 23 தீர்மானங்கள் அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி மண்டபத்தில் நடைபெற்றது. அக்கட்சியின் அவை தலைவர் மதுசூதனன் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியும் முன்னிலை வகித்தனர். 

இந்த கூட்டத்தில் மாநில சுயாட்சி மற்றும் இருமொழி கொள்கையில் அதிமுக உறுதியாக இருக்கும் என்பதை வலியுறுத்தியும், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்துவது உட்பட 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மேலும், ஈழத்தமிழர்கள் சம உரிமை பெற்று வாழ வழிவகை செய்ய மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்ஜிஆரின் பெயர் சூட்டிய மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்தும், உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை வெற்றி பெற செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. 

https://ns7.tv/ta/tamil-news/tamilnadu/24/11/2019/23-resolutions-has-been-passed-admk-meeting

  • தொடங்கியவர்

டெல்லி (மத்தி) பேசட்டும்

தமிழ்நாடு (மாநிலம்) உதவட்டும்!

- சுமந்திரன்

 

Inline image

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.