Jump to content

11ஆவது யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி 2020 ஜனவரியில்


ampanai

Recommended Posts

வடக்கிற்கான பல்துறை நுழைவாயிலான யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி இலங்கையில் மிகவும் அபிமானம் பெற்ற வர்த்தகநாமங்கள் மற்றும் சேவைகள் பலவற்றை ஒன்றாக சேர்த்து வழங்கவுள்ளது.

விற்பனைக்கும், கண்காட்சிக்கும் வைக்கப்படவுள்ள பல்வேறு வகைப்பட்ட உற்பத்திகள் இலங்கையில் இன்னமும் முழுமையான வாய்ப்புக்களை அடையப்பெறாமல் காணப்படும் பாரிய சந்தைகளில் ஒன்றில் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரும் காலடியெடுத்து வைப்பதற்கு வாய்ப்பளிக்கவுள்ளது.

11 ஆவது தடவையாகவும் இடம்பெறவுள்ள யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி நிகழ்வானது 2020 ஜனவரி 24 முதல் 26 வரை யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் (யாழ் கோட்டைக்கு அருகாமையில்) இடம்பெறவுள்ளது. “வடக்கிற்கான நுழைவாயில்“ என அறியப்படுகின்ற இந்நிகழ்வானது உள்நாட்டு மற்றும் சர்வதேச வணிகர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் ஒன்றாக சந்திக்கின்ற ஒரு முக்கியமான களமாக அமையும். மிகவும் வேகமாக அபிவிருத்தி கண்டு வருகின்ற யாழ் குடாநாட்டில் அனைத்து வர்த்தக நிறுவனங்களும் சங்கமிக்கும் ஒரே மேடையாக இது மாறியுள்ளதுடன், பல்வேறுபட்ட உற்பத்திகள் மற்றும் சேவைகளுடன் 350 வரையான கண்காட்சிக்கூடங்கள் அமைக்கப்படவுள்ளன.

யாழ் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்துடன் இணைந்து, யாழ் மாநகர சபை, சர்வதேச வர்த்தக மன்றம், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகியவற்றின் ஆதரவுடன், வருடந்தோறும் ஜனவரி மாதத்தில் இக்கண்காட்சி நிகழ்வினை ஏற்பாடு செய்து நிர்வகிக்கும் பணியை Lanka Exhibition & Conference Services (Pvt) Ltd (LECS) முன்னெடுத்து வருகின்றது.

http://www.thinakaran.lk/2019/11/25/வர்த்தகம்/44340/11ஆவது-யாழ்-சர்வதேச-வர்த்தக-கண்காட்சி-2020-ஜனவரியில்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.