Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்டாய திருமணத்துக்காக டி.வி.நடிகை கடத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கட்டாய திருமணத்துக்காக டி.வி.நடிகை கடத்தல்

சென்னை, மே.10-

சென்னை வியாசர்பாடி சர்மா நகர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் வசித்து வருபவர் செல்வராஜ். கொரட்டூரில் இரும்பு பட்டறை வைத்துள்ளார். இவரது மகள் தீபா (வயது16).

சிறுவயதிலேயே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு இருந்து வந்தது.

இதனால் எஸ்.எஸ்.எல்.சி.யுடன் படிப்புக்கு முழுக்கு போட்ட தீபா. பின்னர் சினிமாவில் நடிப் பதற்காக வாய்ப்பு தேடினர். இதன் மூலம் வசந்தம் வந்தாச்சு, வம்பு சண்டை, சிறு கதை போன்ற படங்களில் 2-வது கதாநாயகியாக நடித்தார்.

அதே நேரத்தில் டி.வி. தொடர்களில் நடிப்பதற்கும். தீபாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. மலர்கள், கிரிஜா எம்.ஏ. ஆகிய டி.வி. தொடர்களில் நடித்துள்ள இவர் ஒரு சில சினிமாக்களில் சின்ன சின்ன வேடங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில் படப்பிடிப்பில் கலந்து கொள் வதற்காக சென்ற தீபா வீடு திரும் பவில்லை. கட்டாய திருமணம் செய்வதற்காக கடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தீபாவின் தந்தை செல்வராஜ் எம்.கே.பி நகர் போலீசில் புகார் செய்துள் ளார். அதில் எனது மகள் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். அவளை மீட்டு தாருங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத் தினார்.

அப்போது தீபாவுக்கும் ஆழ்வார் திருநகரை சேர்ந்த துணை நடிகர்கள் ஏஜெண்ட் தனநாயகம் என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் இருந்து வந்தது தெரியவந்தது. இலங்கையில் இருந்து கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு சென்னை வந்த இவர் திருவொற்றி ïரில் வசித்து வந்த 2 குழந்தைகளின் தாயை திருமணம் செய்துள்ளார். இதன்பிறகு அனுசுயா என்ற டி.வி. நடிகையையும் திருமணம் செய்ததாக கூறப் படுகிறது. எனவே இவர் தான் நடிகை தீபாவை கடத்திச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் தனநாயகம் ஐப்பன் தாங்கலில் உள்ள ஒரு வீட்டில் தீபாவை அடைத்து வைத்துள்ளதாகவும். கட்டாய திருமணம் செய்து கொள்ள கடத்தி இருப்பதாகவும். தகவல் கிடைத்தது.

இதையடுத்து தனநாயகத்தை பிடிக்க தனிபடை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக நடிகை தீபாவின் தாய் சரோஜா மாலைமலர் நிருபரிடம் கூறியதாவது:-

நான் ஒரு துணைநடிகை சில படங்களில் நடித் துள்ளேன். அப்போது எனது மகள் என்னுடன் வருவாள். அவளை பார்த்த சிலர் உங்கள் மகள் சினிமாவுக்கு வந்தால் நல்ல எதிர் காலம் உள்ளது. கதாநாயகியாக நடிக்கலாம்.

நிறைய சம்பாதிக்கலாம் என ஆசை காட்டினர். எனது மகளுக்கும் நடிப்பில் ஆர்வம் இருந்தது. நன்றாக நடனம் ஆடுவாள். அதனால் அவள் விருப்பப்படியே சினிமாவில் நடிக்க வைத்தோம்.

`வசந்தம் வந்தாச்சு' என்ற படத்தில் கதாநாயகி நந்திதாவின் தோழியாக நடித்தார். பின்னர் நடிகர் சத்யராஜ் நடித்த `வம்பு சண்டை' படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்தார். அதனை தொடர்ந்து `சிறுகதை' என்ற படத்தில் கதாநாயகிக்கு இணையான முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க புக் செய்தனர்.

அப்போது தான் தனநாயகம் என்ற ஜீனியர் ஆர்ட்டிஸ்ட் ஏஜெண்டின் அறிமுகம் கிடைத்தது. அவர் என் மகள் மீது தனி கவனம் செலுத்தினார். நன்றாக பேசினார். அன்றைய சம்பளம் மற்றும் பேட்டாவை உடனுக்குடன் கொடுத்துவிடுவார் என் மகளுடன் ஷூட்டிங்குக்கு நானும் செல்வேன் தனநாயகம் சிரிக்க சிரிக்க பேசுவார். இதற்கிடையே சிறுகதை படத்தின் படப்பிடிப்பு இடையில் நின்று போனது.

இதனால் என்மகள் மலர்கள், கிரிஜா எம்.ஏ. உள்ளிட்ட டெலிவிஷன் தொடர்களில் நடித்து வந்தார். அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை அவளே வைத்துக் கொண்டாள். அவளின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது.

புதிதாக ஒரு செல்போன் ஒன்று வாங்கினாள். அதில் இரவு பகல் பாராமல் எப்பொழுதும் பேசிக் கொண்டிருந்தாள். அதில் யாரிடம் பேசுகிறாள் என்று விசாரித்தபோது அவள் தனநாயகத்திடம் தான் பேசுகிறாள் என்றும் 2 பேரும் காதலிப்பதும் தெரியவந்தது.

நாங்கள் அதனை எதிர்த்தோம் "அவர் ஏற்கனவே 2 பெண்களை திருமணம் செய்து அவர்களை தெருவில் நிறுத்தி விட்டார். எனவே அவரை மறந்து விடு. இன்னும் ஒரு சில மாதங்களில் புது படங்களின் மூலம் கதாநாயகி ஆகிவிடலாம் என எடுத்து கூறினோம். உனக்கு 16 வயது தான் ஆகிறது முடிவெடுக்கும் பக்குவம் கிடையாது. தனநாயகத்துடன் பேசுவதை குறைத்துக் கொள் எனவும் எச்சரித்தோம் ஆனால் தீபா கேட்கவில்லை.

ஒரு கட்டத்தில் இரவு 1 மணி அதிகாலை 4 மணி என நாங்கள் தூங்கிய பின்னர் கட்டிலுக்கு அடியில் படுத்துக் கொண்டு ரகசியமாக தனநாயகத்துடன் பேசிவந்தாள். அவர் எனது மகளை ஏதோ வசியம் செய்து மயக்கி விட்டார். என்று நினைக்கிறேன். அந்த அளவிற்கு தீபா தனநாயகத்தின் மீது பைத்தியமாக கிடந்தாள். தனநாயகத்தை கண்டித்தோம் அவர் கேட்கவில்லை.

சம்பவத்தன்று எனது வீட்டில் அருகில் உள்ள கோவிலில் வைத்து தீபாவும் தனநாயகமும் பேசிக் கொண்டிருந்தனர். அதை பார்த்த நான் 2 பேரையும் சத்தம் போட்டேன். தீபாவை வீட்டிற்கு இழுத்து வந்து திட்டினேன் ஆனால் அவளோ தனநாயகம் நினைவாகவே இருந்தாள்.

"சிறுகதை'' என்ற படத்தின் படபிடிப்பு மீண்டும் தொடங்கி விட்டது எனவும் அதில் நடிக்க செல்கிறேன் என்றும் கூறிவிட்டு அன்று இரவு வீட்டிலிருந்து தீபா புறப்பட்டு சென்றாள். பின்னர் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே சிறுகதை படத்தில் நடிப்பதற்காக எனது மகளுக்கு அழைப்பு வந்தது அதன் பிறகுதான் அவள் மாயமான தகவல் கிடைத்தது.

அவளை கட்டாய திருமணம் செய்வதற்காக ஆசைவார்த்தை கூறி தனநாயகம் கடத்தி சென்றுவிட்டார். இது பற்றி போலீசில் புகார் செய்துள்ளோம்.

ஏற்கனவே 2 பெண்ணின் வாழ்க்கையை நாசமாக்கிய தனநாயகம் 3வதாக எனது மகளின் வாழ்க்கையை சீரழிக்கும் முன் தடுத்து நிறுத்தி தீபாவை மீட்கவேண்டும் தனநாயகத்தை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.

இவ்வாறு சரோஜா கண்ணீர் மல்க கூறினார்.

மாலைமலர்

இலங்கைத்தமிழனா :angry:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவன் நிச்சயமாக தமிழீழ தமிழனாக இருக்க வாய்ப்பில்லை.. சிறீலங்கா தமிழன் என்றே அழையுங்கள்

ஏன் அண்ணா கிசான் தமிழீழத்து தமிழர்கள் எல்லோரும் ஏதோ உத்தமர்கள் மாதிரியல்லோ பேசுகின்றீர்கள் இவர்கள் ஏதும் மொள்ளமாரித்தனம் பண்ணுவதில்லையோ? உதாரணத்துக்கு ஒரு சம்பவத்தை தருகிறேன். புலம் பெயர்ந்து இருக்கும் இளைஞர்கள் இங்கு குறுகிய கால விடுமுறையில் வந்து அவசர அவசமாக திருமணம் செய்துவிட்டு பின்னர் வெளிநாடு செலவது வழமை. இதனை இப்ப்ழுது எமது உள்ளூர் வாசிகளும் பயன் படுத்திக்கொள்கின்றனர். அண்மையில் இப்படித்தான் வவுனியாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஒருவர் இங்கு இருக்கும் திருமணத்தராகரிடம் வந்து நான் வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறேன். ஆனால் என் சொந்த இடம் திருமலை அங்கு இப்பொழுது என்னால் செல்ல முடியாது. நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகின்றேன். எனக்கு ஒரு நல்ல பிள்ளை இருந்தால் சொல்லுங்கள் என்று தரகருக்கு கூறினாராம்.

தரகரோ ஒருமாதிரி ஒரு பகுதியை இவருக்கு அறிமுகம் செய்து வைத்தாராம். அத்தோடு தனக்குத்தெரிந்த் ஒரு வீட்டில் இந்த பையனையும் தங்க ஏற்பாடு பண்ணிவிட்டாராம் அந்த தரகர். ஒரு மாதிரி திருமணமும் முடிந்தது பையனுக்கு சீதனமாய் காணி, நகை, அத்தோடு ஒரு பெருந்தொகைப்பணம் என்பன வழங்கப்பட்டதாம். எல்லாமே முடிந்து விட்டது. பையன் வெளிநாடு செல்லும் நாளும் நெருங்கிவிட்டது. கொழும்பு சென்று விமானப்பயணச்சீட்டை உறுதிப்படூத்திவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு கொழும்புக்குச் சென்றவர் மீண்டும் திரும்பி வரவே இல்லை.

எனவே பெண் வீட்டார் சிலநாட்கள் கழித்து அந்த பையன் கொடுத்த அந்த ஐரோப்பிய நாட்டு தொலை பேசி இலக்கத்துக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியபோது தான் விபரீதம் தெரிந்தது. அந்த பையன் உண்மையில் அந்த ஐரோப்பிய நாட்டில் இருந்தவர் தானாம். ஆனால் அவரின் வதிவிட அனுமதி நிராகரிக்கப்பட்டபடியால் அவர் அந்த நாட்டு அரசாங்கத்தால் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டாராம்.

ஆஹா..... அருமையான ஒரு ஆசாமி. ஒரு 18 வயது யுவதியின் வாழ்க்கைய அழித்ததோடு மட்டுமலாது மொத்த சொத்தையும் சுருட்டிக்கொண்டு இப்பொழுது எங்கு அடுத்த கட்ட திட்டத்தோடு நகருகின்றாரோ கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

Edited by mathuka

மாதுகா அத முல்லைமாரித்தனம் இல்லை

மொள்ளமாரித்தனம்..

மாதுகா அத முல்லைமாரித்தனம் இல்லை

மொள்ளமாரித்தனம்..

அப்படியா? விகடகவியாரே இப்படி தான் நாம் பேசிப் பழகிகொண்டோம் இனி திருத்திக்கொள்கிறோம். ஆனால் சம்பவம் எப்படி? பின்னிடான் பையன் என்ன? :P :P :P :P

கேவலமாக ஏதாவத செய்து சந்தோசமாக இருக்கமுடியும்..

மக்களோட அசண்டையீனத்தால உலகம் தலைகீழா போறத..

சுய ஒழுக்கம் யார்கிட்டயும் இல்ல..

ஊருக்கு 10 அந்நியன் ரோபா செய்யணும்..

அட...என்னமா பண்ணுறாங்கா...

என் கண் முன்னாலே கொழும்பு விடுதியொன்றில் பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர்

சாதுரியமாக ஆங்கிலம் பேசுவார்..நல்ல நிறமுயைடயார்....அந்த விடுதியில் தங்கியிருந்தவாறு..பிரித்தானி

Edited by vanni mainthan

  • கருத்துக்கள உறவுகள்

மாதுகா சொன்னது போல பல சம்பவங்களைக் கேள்விப் பட்டிருக்கிறேன். தண்டிக்கப் பட வேண்டிய தறுதலைகள் இதுகள். ஆனால், வெளிநாட்டு மணமகனைக் குறிப்பாகத் தேடும் பெற்றோரும் சில இளம் பெண்களும் கூட இது போன்ற அநியாயங்களுக்குத் தூண்டுதல்கள் அல்லவா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆஹா..... அருமையான ஒரு ஆசாமி. ஒரு 18 வயது யுவதியின் வாழ்க்கைய அழித்ததோடு மட்டுமலாது மொத்த சொத்தையும் சுருட்டிக்கொண்டு இப்பொழுது எங்கு அடுத்த கட்ட திட்டத்தோடு நகருகின்றாரோ கடவுளுக்குத் தான் வெளிச்சம்.

ம்.. மிகவும் வருத்தத்திற்குரிய விடயம்.. இதில் தவறு இரண்டு பக்கமும் இருக்கிறது..

வெளிநாட்டு மாப்பிளை என்றால் ஏதோ ஆகா ஒகோ என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும்.. இதுபோன்று ஆயிரம் சம்பவங்கள் நடக்கதான் செய்யுது..

முதலில் தாயக பெண்கள் வெளிநாட்டு மாப்பிளை என்றால் ஏதோ கடவுள் என்று நினைப்பதை கைவிட வேண்டும்..

எனக்கு தெரிய தாயகத்தில் இருந்து வெளிநாட்டு மாப்பிளைகளை நம்பி இங்க வந்து சொல்லொணா துன்பங்களை அனுபவிப்பதை பல இடங்களில் பார்த்திருக்கிறேன்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.