(ஆர்.யசி)

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையினால் கடந்த 2015 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 30/1 பிரேரணையை ராஜபக்ஷ அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது எனவும் பிரேரணையை நிராகரிக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாவும் வெளிவிவகார அமைச்சர்  தினேஷ் குணவர்தன மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கள்  இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த ஆகியோர் மீண்டும் வலியுறுத்தினர். 

சர்வதேச ஒத்துழைப்புக்கள்  இராஜாங்க அமைச்சராக வெளிவிவகார அமைச்சில் இன்று கடமை பொறுப்பேற்ற அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் இதனைக் கூறினார். 

எமது  அரசாங்கத்தின் சர்வதேச கொள்கைகள் எவ்வாறானது என்பதை ஜனாதிபதி தெளிவாக கூறியுள்ளார். இந்த சந்தர்ப்பம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவிற்கும் அரசாங்கத்திற்கும் சவால் நிரந்த தருணமாக கருதுகின்றோம். சர்வதேச விவகாரங்களில் நாம் கவனமாக பயணிக்க வேண்டியுள்ளது. எமது சர்வதேச கொள்கையானது சர்வதேசதுடன் பிளவுபடாத கொள்கையாகும். 

அதேபோல் எந்த சர்வதேச சக்திக்கும் சாயாது சுயாதீனமான நாடாகவும், எந்தவொரு நாட்டுக்கும் எமது உள்ளக விவகாரங்களில் தலையிட முடியாத வகையிலும் செயற்பட  வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். சகல நாடுகளுடனும் நட்புறவு ரீதியில் பயணிக்க வேண்டுமே தவிர எந்த முகாமையும் சார தயாராக இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளனர். 

https://www.virakesari.lk/article/69974