Jump to content

ஈழத் தமிழரின் அரசியல் தீர்வும் அபிவிருத்தியும்-பா.உதயன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழரின் அரசியல் தீர்வும் அபிவிருத்தியும்-பா.உதயன் 

அபிவிருத்தி அபிவிருத்தி என்று ஒரு சொல்லைக் காட்டி அந்த மக்களின் அடிப்படை உரிமைகளை இல்லாது ஒழிப்பது இந்த அரசின் தந்திரமாகும். அன்று ஒரு நாள் அண்ணன் 13க்கு மேல் தமிழருக்கு தருவோம் என்றார் இன்று ஒரு நாள் தம்பி சொல்கிறார் தமிழருக்கு தர ஒன்றும் இல்லையாம் ஏற்றுக்கொள்ளப்படாத தீர்வு ஒன்றை இனியும் கதைப்பது பிரயோசனம் இல்லையாம்.சிங்கள மக்களின் பெரும்பான்மை அரசியல் தீர்வுக்கு எதிர் எனின் அதுவே ஜனநாயகம் எனின் தமிழ் மக்களின் பெரும் பான்மை சொல்லும் தீர்வுக்கு என்ன பதில்.அரசியல் வேறு பொருளாதாரம் வேறு என்று பிரித்து பார்க்க முடியாது.இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை.தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சனை தீர்க்கப்படும் பொழுது அவர்களின் பொருளாதார பிரச்சினையில் இருந்து அவர்கள் விடு பட முடியும் .அடிப்படை வசதிகள் அற்று வாழும் மக்களுக்காக சில புனர்வாழ் அமைப்புகளும், தனிப்பட்டவர்களும் இந்த மக்களுக்காக உதவி வருகிறார்கள் இது வரவேற்கத்தக்க விடையமாகும்.ஆனால் அவிவிருத்தி என்ற பெயரில் தங்கள் தனிப்பட்ட நன்மையும் வியாபார நோக்கு கொண்டவர்களோடும்  மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

காசுப் பெட்டிகளுக்கு 
பூசை செய்து கொண்டு 
ஆட்சி மாற்றத்தோடு 
அறுத்துத் தின்னும் ஆசையோடு 
பெருச்சாளிகள் இனி வருவார்கள் 
நிலத்திலும் புலத்திலும் இருந்து 
அபிவிருத்தி என்ற பெயரில்
காசு மரம் ஏறி 
கனி தின்னும் ஆசையோடு 
இல்லாதவனுக்காய் ஏதோ 
கொடுப்பவன் போல 
இனிப்பு வார்த்தைகளுக்குள் 
ஒளிந்திருக்கும் நரித்தந்திரங்கள்.

On the issue of rights for Tamil-majority areas, Mr. Gotabaya said he intends to focus on development of the region, not political issues as the previous push for “devolution, devolution, devolution” has not changed the situation there. Full devolution of powers as promised by the 13th Amendment to the Constitution in 1987 could not be implemented “against the wishes and feeling of the majority [Sinhala] community.” He added: “No Sinhala will say, don’t develop the area, or don’t give jobs, but political issues are different.”
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.