Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவிலிருந்து கருணா தப்பி ஓட்டம்.

Featured Replies

சிறிலங்காவிலிருந்து கருணா தப்பி ஓட்டம்.

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களில் ஒன்றின் பொறுப்பாளரான கருணா, சிறிலங்காவிலிருந்து தப்பி ஓடிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கருணாவின் குழுவுக்குள் உள்மோதல்களானவை படுகொலைகளாக வெடித்துள்ளன. இதனையடுத்து கருணாவை சிறிலங்காவை விட்டு தப்பி ஓடுமாறு சிறிலங்கா புலனாய்வுத்துறை அறிவுறுத்தியிருக்கிறது.

இது தொடர்பில் கொழும்பு ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தி விவரம்:

கிழக்கில் வலுத்துள்ள கருணா மற்றும் பிள்ளையான தரப்புக்களுக்கு இடையிலான மோதல் வெளிப்படையான மோதல்களாக வெடித்துள்ளதுடன் கடந்த இரு வாரங்களில் பலர் பலியாகியும் உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அதன் தலைவர் கருணாவை அவரது சகாக்களுடன் நாட்டை விட்டு தப்பி ஓடும்படி சிறிலங்கா புலனாய்வுத்துறை வழங்கிய ஆலோசனையை தொடர்ந்து அவர் தனது நெருங்கிய சகாக்களுடன் வெளிநாடு ஒன்றிற்கு இந்த வாரம் தப்பிச் சென்றுள்ளார்.

கிழக்கில் தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு அரசாங்கம் எண்ணியுள்ள வேளையில் கருணாவின் பிரசன்னம் இடைஞ்சலாக இருக்கலாம் என்ற கருத்தும் அரசிடம் உண்டு. கருணா குழுவுடன் அரசுக்கு உள்ள தொடர்புகளை பல அனைத்துலக நிறுவனங்கள், மற்றும் இராஜதந்திரிகள் சுட்டிக்காட்டி இருந்தனர். அண்மையில் பயணம் செய்த அமெரிக்காவின் பிரதி வெளியுறவுச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர், பிரித்தானிய பிரதிநிதி ஹிம் ஹாவல் ஆகியோரும் சிறிலங்காவில் நடைபெறும் மனித உரிமை மீறல்களுக்கு கருணா குழுவினரே காரணம் என தெரிவித்திருந்தனர்.

கிழக்கில் ஒரு இடைக்கால அரசை அமைத்து அதற்கு தன்னை தலைவராக்க வேண்டும் என கருணா விரும்பியிருந்தார். கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராகவும் தன்னை கற்பனை செய்திருந்தார்.

கருணா குழுவிற்குள் ஏற்பட்டுள்ள இந்த பிளவு சிறிலங்கா இராணுவத்தினரால் ஏற்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. கருணாவின் புதிய கட்சியின் பெயரில் இருந்து ஈழம் என்னும் சொல்லை அகற்றிவிடுமாறு அரசு முன்னர் பணித்திருந்தது. இப்படியான பணிப்புரை ஈ.பி.டி.பிக்குக் கூட விடுக்கப்படவில்லை.

கருணாவை விட பிள்ளையானுடன் இராணுவத் தரப்பிற்கு உறவுகள் அதிகம். மேலும் பிள்ளையானின் அரசியல் ஆசைகளும் குறைவு என்பதுடன் அனைத்துலக ரீதியிலும் பிரபலமற்றவர் என்பது அரசின் கருத்து. எனவே தான் கருணாவை அகற்ற முடிவு செய்யப்பட்டது.

கருணா குழுவின் பேச்சாளரான அசாத் மௌலானாவும் காணாமல் போயுள்ளார். அவரது செல்லிடப்பேசி வேலை செய்யவில்லை. அவரும் மங்களன் மாஸ்ரரும் நடுநிலைமையில் இருந்தவர்கள். பின்னர் அவர்கள் பிள்ளையான தரப்புடன் கட்டாயமாக இணைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

கருணா தரப்பில் உள்ள இனியபாரதி, றியாசீலன், சின்னத்தம்பி, ஜெயதான், சந்திவெளி மாமா, மகிலன், திலீபன் ஆகியோர் உள்ளனர். பிரான்சில் இருந்து வழங்கப்பட்ட பணத்தின் மூலம் அவர்கள் கருணா குழுவுக்குள் பிளவை உண்டு பண்ணியதாக இராணுவம் கூறுகின்றது.

ஆனால் இராணுவப் புலனாய்வுத்துறையால் பிரித்தானியாவில் இருந்து வரவழைக்கப்பட்ட கிருஸ்ணன் என்னும் முன்னைய ஈ.என்.டி.எல்.எஃப் நபர் மூலம் கருணா குழு உடைக்கப்பட்டதாக சிலர் தெரிவித்துள்ளனர்.

கூட்டம் ஒன்றிற்காக அழைக்கப்பட்டிருந்த சிந்துஜனும் அவரது நான்கு சகாக்களும் இனியபாரதியினால் படுகொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து கருணாவுடன் சந்திப்புக்காக கொழும்பு சென்று கொண்டிருந்த பிள்ளையான் இடைநடுவில் தனது பயணத்தை கைவிட்டு கிழக்குக்கு திரும்பியிருந்தார். இதில் காயமடைந்த சீலன் மருத்துவமனையில் உள்ளார்.

சிந்துஜனின் கொலையை பாரதியே செய்தது என்பதற்கு சாட்சியாக இருந்த சிந்துஜனின் தந்தையாரும் இந்த வாரம் கல்லாறில் கருணா தரப்பினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பிள்ளையான் தரப்பு பொலநறுவை, திருமலைப் பகுதிகளிலும், கருணா குழு மட்டக்களப்பிலும் தங்கியுள்ளது. இரு குழுக்களும் இராணுவ பாதுகாப்பில் உள்ளனர்.

கருணா குழுவில் உள்ள முக்கால் பங்கு உறுப்பினர்கள் பிள்ளையானுடன் உள்ளனர். பிரதீப் மாஸ்ரர், ஜெயத்தான் ஆகியோரும் பிள்ளையானின் ஆதரவை நாடியுள்ளனர். கருணா தனது பிடியை முற்றாக இழந்துள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-Puthinam-

கோடிக்கனக்கான காசு அடிச்சு இருப்பான் இனி அவன் ஒரு தொழில் அதிபர் தானே இந்தியா போன்ற **** நாடுகளில்( தயவு செய்து தமிழ்நாட்டு மக்கள் தப்பாக எடுக்க வேண்டாம்)

( சாருமதி நீதான் சொந்தமடி )

இது என்ன புதுக்கதை வினித்?? :P :P :P :P

அது தான் விடுதலைப்ப்புலிகள் கருணாவை பற்றி கவலைப்படவில்லை. ஏனெனில் அவர்கள் தாங்களே எலும்புகளுக்காக கடிபட்டு கடைசியில் எஜமானர்களாலாலேயே கொலைசெய்யப்டுவார்கள் இது அவர்களுக்கு தெரிந்த விடையம் தானே

Edited by mathuka

மீண்டும் ஓடிய கருணா!

தமிழீழ மக்களுக்கு பெரும் வரலாற்றுத் துரோகம் இழைத்து மூன்று வருடங்கள் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் கருணா இப்பொழுது மீண்டும் வெளிநாட்டிற்கு தப்பி ஓடி விட்டதாக செய்திகள் வருகின்றன. இம் முறை அவர் ஓடியதற்கு காரணம் விடுதலைப் புலிகள் அல்ல. கருணா குழுவினரே கருணாவை வேட்டையாடுவதற்கு தேடி வருகிறார்கள்.

கருணா குழு இரண்டாக உடைந்து விட்டது. இந்தச் செய்தி கருணா குழுவை ஊன்றிக் கவனித்து வருபவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்காது. கருணா குழு என்பது கருணாவின் விசுவாசிகளை மட்டும் கொண்ட அமைப்பாகவோ, கருணாவின் கட்டுப்பாட்டில் இயங்கிய அமைப்பாகவோ இருந்ததில்லை.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா பிரிந்து சென்ற பொழுது, கூடச் சென்றவர்களில் பலர் விடுதலைப் புலிகளிடம் மீண்டும் வந்து சரணடைந்து விட்டார்கள். பலர் கொல்லப்பட்டு விட்டார்கள். பலர் வெளிநாடுகளுக்கு ஓடி விட்டார்கள்.

இந்த நிலையில் கருணா குழுவின் ஆட்பற்றாக் குறையை நிவர்த்தி செய்வதற்கு இந்திய, சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ராசிக் குழு போன்ற ஒட்டுக்குழுக்களில் இருந்தவர்கள் கருணா குழுவுடன் இணைக்கப்பட்டார்கள். இந்தியாவில் இருந்து செயற்பட்ட ஈஎன்டிஎல்எவ் அமைப்பும் இணைக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான ஈஎன்டிஎல்எவ் உறுப்பினர்கள் விடுதலைப் புலிகளின் தாக்குதலை சமாளிக்க முடியாது திரும்பிச் சென்று விட்டார்கள்.

சிறிலங்கா இராணுவமும் கருணா குழுவும் ஆட்களை சேர்ப்பதற்கு பிள்ளை பிடிக்கும் வேலையில் இறங்கியது. பல சிறுவர்கள் வலுக்கட்டாயமாக கருணா குழுவில் இணைக்கப்பட்டார்கள். சில இளைஞர்களும் பண ஆசை காட்டி கருணா குழுவில் சேர்க்கப்பட்டார்கள். கிழக்கின் பெரும்பகுதியை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்ததன் பின்னர் வெளிநாடுகளில் இருந்த சில கருணா விசுவாசிகளும் மீண்டும் வந்து கருணா குழுவில் இணைந்து கொண்டார்கள்.

அனுபவம் மிக்க உறுப்பினர்கள் என்று பார்க்கின்ற பொழுது, இருபதுக்கும் குறைவாவர்களே கருணா குழுவில் இருக்கிறார்கள். இதற்குள் மற்றைய ஒட்டுக் குழுக்களில் இருந்து கருணா குழுவுடன் இணைக்கப்பட்டவர்களும் அடக்கம். வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்தவர்களும் அடக்கம்.

இரண்டாம் கட்டத் தலைவர்கள் என்று வகைப்படுத்தப்படும் இவர்களுக்கு சிறிலங்காப் புலனாய்வுத்துறை ஒவ்வொரு பகுதியையும் பிரித்துக் கொடுத்தது. பிரித்துக் கொடுக்கப்பட்ட பகுதிகளில் அவர்கள் குறிநில மன்னர்களாக அட்டகாசம் புரிந்து வந்தார்கள். இவர்கள் கருணாவின் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. இவர்களை வழிநடத்துபவர்களாக சிறிலங்கா புலனாய்வுத்துறையின் அதிகாரிகள் இருந்தார்கள்.

இப்படி சிறு சிறு குழுக்களாக சிறிலங்கா புலனாய்வுத்துறையின் கட்டளைப்படி செயற்பட்டுக் கொண்டிருந்தவர்களின் அடையாளப் பெயராக மட்டுமே "கருணா குழு" என்பது இருந்தது. மற்றையபடி அவர்கள் கருணாவின் கட்டளைப்படி இயங்குகின்ற ஒரு அமைப்பாக இருக்கவில்லை.

கருணா சிறிலங்காவில் இருப்பது வெகு குறைவு, அதுவும் கிழக்குப் பக்கம் செல்வதே இல்லை என்ற நிலையில் கருணா குழு கருணாவின் பிடியில் இருந்து விடுபட்டு சென்று விட்டது. இதை சற்றுப் பிந்தியே உணர்ந்த கருணா சில நடவடிக்கைகளை மேற்கொண்டார். கடைசியில் அதுவே கருணாவிற்கு வினையாகியும் விட்டது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் கருணா குழுவின் சந்திப்பு ஒன்று நடந்தது. இதில் கருணாவும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்தச் சந்திப்பில் கருணா குழுவின் முதன்நிலைப் பொறுப்பாளராக பிள்ளையான் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் கருணா குழுவினது இரண்டாவது தலைவராக பிள்ளையான் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டார். முதன்நிலைப் பொறுப்பாளர் என்ற அடைமொழியோடு பிள்ளையானின் பேட்டிகளையும் சிங்கள சார்பு ஊடகங்கள் வெளியிட்டன.

முதன்நிலைப் பொறுப்பாளராக பிள்ளையான் தேர்ந்தெடுக்கப்பட்டது இனியபாரதி போன்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. இனியபாரதிக்கு நிதிப் பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டது. கடத்தல் மற்றும் கொள்ளைக் கும்பலாகிய கருணா குழுவில் "நிதிப் பொறுப்பாளர்" என்பது உண்மையில் மிக உயர்ந்த பதிவிதான். அந்த வகையில் இனியபாரதி சமாதானம் அடைந்தாலும், போகப் போக பிரச்சனைகள் பெரிதாகின.

முதன்நிலைப் பொறுப்பாளர் என்ற ரீதியில் நிதிவிடயங்களில் தலையிட்ட பிள்ளையான் பின்பு அந்தப் பொறுப்பையும் தானே பார்த்துக்கொள்ளவும் தொடங்கினார். அமைப்பின் பணத்தை பிள்ளையான் கையாடுவதாக குற்றச்சாட்டுகளும் எழுந்தன. இதை விட வேறு சில பிரச்சனைகளும் தோன்றின. வெளிநாடுகளில் இருந்து திரும்பிய கருணா விசுவாசிகள் கருணா குழுவில் முக்கிய பொறுப்புக்களில் வருவதை பிள்ளையான் விரும்பவில்லை. வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த கருணா விசுவாசி ஒருவர் பிள்ளையான் அணியினரால் கொல்லப்பட்டார்.

இந்தச் சம்பவங்களை அடுத்து பிள்ளையானின் அதிகாரங்களை குறைக்க கருணா முயன்ற போது மோதல் பெரிதாகியது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் கருணா குழுவின் முகாமுக்கு கருணா விஜயம் செய்ததாக சில புகைப்படங்களை சிங்கள சார்பு ஊடகங்கள் வெளியிட்டன. அதில் கருணா குழுவின் முக்கிய தலைவர்கள் இடம்பெற்றிருந்தார்கள்.

அந்தப் புகைப்படங்களில் கருணாவை வரவேற்று அழைத்து வரும் குழுவில் பிள்ளையான் இல்லை. கருணா நின்று கொண்டு பேசுகின்ற புகைப்படங்களில் முதன்நிலைப் பொறுப்பாளராகிய பிள்ளையான் மிகத் தள்ளி ஒரு சாதரண பாதுகாவலர் போல் நின்று கொண்டிருக்கிறார். கருணாவுடன் அருகில் இருக்கும் புகைப்படத்தில் பிள்ளையானின் முகத்தில் எந்த ஒரு உணர்வும் இல்லை. உள்விடயங்கள் தெரியாதவர்களுக்கும் அந்தப் புகைப்படங்கள் கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதலை படம்பிடித்துக் காட்டின.

கருணாவின் விஜயம் நடந்து ஓரிரு நாளில் கொழும்பின் முத்துராஜவெல பகுதியில் 5 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்தச் சடலங்கள் மட்டக்களப்பை சேர்ந்தவர்களுடையது என்று இனம் காணப்பட்டன. அப்பாவித் தமிழ் மக்கள் சிங்களப் புலனாய்வுத்துறையினரால் கொல்லப்பட்டுள்ளார்கள் என்ற சந்தேகம் ஆரம்பத்தில் எழுந்தது. ஆனால் அவர்கள் கருணா குழுவைச் சேர்ந்தவர்கள் என்று பின்னர் தெரிய வந்தது.

கொழும்பில் 5 கருணா குழு உறுப்பினர்கள் கொல்லப்பட்ட விடயம் சிறிலங்கா தரப்பால் பெரிதுபடுத்தப்படவில்லை. விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்தும் எந்தச் செய்தியும் வெளியாகவில்லை. தற்பொழுது நடைபெறும் சம்பவங்களை வைத்துப் பார்க்கும் போது இந்த ஐவரும் கருணா-பிள்ளையான் மோதலில் கொல்லப்பட்டவர்களாகவே இருக்க முடியும்.

பிள்ளையானையும் கருணாவையும் முரண்பட வைத்ததில் சிறிலங்காப் புலனாய்வுத்துறைக்கும் பெரும் பங்கு உண்டு. கருணா குழு ஒரு அளவிற்கு மேல் வளர்வதை சிறிலங்காப் புலனாய்வுத்துறை விரும்பவில்லை. பல ஆண்டுகளாக விடுதலைப்புலிகளோடு இருந்தவர்கள் தனித்துவமாக இயங்குவது தமக்கு ஆபத்து என்று சிறிலங்கா புலனாய்வுத்துறை நம்பியது. கருணா குழு பலம் பெறுவதை தடுப்பதற்காகவே கருணா குழுவை பல சிறிய குழுக்களாக இயங்கச் செய்தது.

ஆனால் கருணா குழு இப்படி இரண்டாக உடைவதையும் சிறிலங்காப் புலனாய்வுத்துறை விரும்பியிருக்கவில்லை. கருணா பிள்ளையான் தரப்பை சமாதானம் செய்ய விரும்பிய சிறிலங்கா புலனாய்வுத்துறை மட்டுஅம்பாறையை இரண்டாக பிரித்து பிரச்சனையை தீர்க்க முயன்றது. மட்டக்களப்பின் ஆரயம்பதியில் இருந்து தெற்காக பொத்துவில் வரை கருணா குழுவுக்கும், வடக்கே வெருகல் வரைக்கும் பிள்ளையான் குழுவுக்கும் பிரித்துக் கொடுத்தது. ஆனால் இது பிரச்சனையை மேலும் அதிகரித்ததே தவிர குறைக்கவில்லை.

சிறிலங்காஅரசு கிழக்கை கைப்பற்றி தன்னிடம் ஒப்படைக்கும் என்று கருணா பகல் கனவு கண்டு கொண்டிருக்க, சிறிலங்கா புலனாய்வுத்துறையின் செயற்பாடுகள் கருணா குழுவையே இல்லாமல் செய்து விட்டது.

கருணா குழுவில் ஏற்பட்ட பிளவின் போது நடந்த சம்பவங்கள் சில புருவத்தை உயர்த்த வைப்பவையாக இருக்கின்றன.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கருணா மீது வைக்கப்பட்ட நிதி சம்பந்தமான குற்றச்சாட்டுக்கள் பற்றிய விளக்கத்தை பெறுவதற்கு விடுதலைப்புலிகளின் தலைமை கருணாவை வன்னிக்கு அழைத்தது. கருணா வன்னிக்கு செல்லாது அந்நிய சக்திகளுடன் இணைந்து தனி அமைப்பை உருவாக்கினார்.

தற்பொழுது நிதி சம்பந்தமான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க பிள்ளையானை கொழும்பு வரும்படி கருணா அழைத்தார். பிள்ளையான் கொழும்பு செல்லாது, தனி அமைப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கருணா குழுவால் கடத்தப்பட்ட புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கொடுரமாகக் கொல்லப்பட்டார்கள். இந்த கொடிய செயலை தலைமை தாங்கி நடத்தியவன் கருணா குழுவின் முக்கிய உறுப்பினனாகிய சிந்துயன். புனர்வாழ்வுக் கழகத்தின் பெண் பணியாளர் பிறேமினி சிந்துயனால் மற்றைய கருணா குழு உறுப்பினார்களாலும் வல்லுறுவுக்கு உட்படுத்தப்பட்டு பின் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

தற்பொழுது அதே சிந்துயன் பிள்ளையானுக்கு ஆதரவாக இருந்த காரணத்தால் கருணாவை ஆதரிக்கின்ற இனியபாரதியால் சுட்டுக் காயப்படுத்தப்பட்டு பின்பு சித்திரவதை செய்யப்பட்டு வெட்டிக் கொல்லப்பட்டுள்ளான். சிந்துயனின் தந்தையும் கருணா ஆதரவு அணியினரால் கொல்லப்பட்டுள்ளார்.

கருணா - பிள்ளையான் மோதலில் தற்பொழுது பிள்ளையானின் கையே ஓங்கி உள்ளது. முக்கிய உறுப்பினர்கள் பிள்ளையானின் பக்கமே நிற்கிறார்கள். அத்துடன் கிழக்கில் உள்ள இராணுவ அதிகாரிகளும் பிள்ளையானையே ஆதரிக்கின்றார்கள். பிள்ளையான் களத்தில் நின்று செயற்படுவதாக கூறி இவர்கள் அனைவரும் பிள்ளையானை ஆதரிக்கிறார்கள்.

தற்பொழுது பிள்ளையான் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்களுடன் திருகோணமலையில் நிற்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பில் கருணாவிற்கு ஆதரவான அணியனர் நிலை கொண்டுள்ளனர். ஆனால் இவர்களில் பலர் தினமும் பிள்ளையான் அணிக்கு மாறி வருகிறார்கள். மட்டக்களப்பில் அடையாளம் தெரியாத உடல்கள் கிடப்பதாக வெளிவருகின்ற செய்திகள் இந்தக் குழுக்களின் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதை காட்டுகிறது.

இதுவரை பத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு விட்டார்கள். கருணா ஆதரவு அணியினர் தோல்வி முகத்தில் நிற்கிறார்கள். அவர்களின் தலைவர் கருணாவோ வழக்கம் போல் வெளிநாட்டிற்கு ஓடி விட்டார். விடுதலைப் புலிகளுக்கு சவால் விடப் புறப்பட்ட கருணா இன்றைக்கு கேவலம் பிள்ளையானையே சமாளிக்க முடியாது தோற்றுப்போய் ஓடிப் போனதானது கருணா என்பது வெறும் மாயையே என்பதை மீண்டும் ஒரு முறை உறுதி செய்துள்ளது.

- வி.சபேசன் (13.05.07)

http://www.webeelam.com/

சபேசன் அவர்கள் எழுதியதில் பல உண்மைகல் இருக்கு

அதை விட சபேசன் எழுதாம சில விடயங்களும் இருக்கு

உதாரணமாக கருணாகுவில் சில வயது குறைந்த( 17 18) பெடியங்கள் சில தமிழ் பெண்களை காதலிப்பது வெருட்டுவதுமாக இருப்பது அப்படி ஒரு பெடியனை காதலிதால் அந்த பெடியனுக்கு பொறுப்பாளராக இருப்பவர் கேள்விபட்டா திடிர் என்று அந்த பெண்ணின் வீட்டுக்கு போவது தங்குவது என்று 2 3 சம்பவங்கள் நடைபெற்றது இதௌ அறிந்து காதலித்த பெடியன் இயக்கத்திஅ விட்டு வெளியேறினா அவனை போட்டு தள்ளுவது என்று பெரிய சீரழிவை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

இருகூறுகளாக சிறீலங்கா துணைப்படை கருணா குழு பிளவுபடுத்தப்பட்டதன் பின்னணியில், படைப் புலனாய்வுப் பிரிவின் முஸ்லிம் உயர் அதிகாரிகள் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன(IBC)

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பொறுக்கிகளின் பெயரைக்கூட உச்சரிக்கக்கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.