Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி கோட்டாவின் அதிகாரங்களை பலப்படுத்த 22 ஆவது திருத்தம் தயார்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

gota-cabinet.jpg

ஜனாதிபதி கோட்டாவின் அதிகாரங்களை பலப்படுத்த 22 ஆவது திருத்தம் தயார்!

பாதுகாப்பு அமைச்சு மற்றும் வேறு அமைச்சுக்களையும் ஜனாதிபதி தமது வசம் எடுத்துக் கொள்வதற்கு அதிகாரம் அளிக்கும் வகையில், நாடாளுமன்றத்தில் தனிநபர் சட்டமூலம் ஒன்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷவினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

சபையில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர், அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் என இந்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 19 ஆவது திருத்தத்தின் கீழ், சாம்பல் நிறப் பகுதியாக மாறியுள்ள ஜனாதிபதிக்கான அமைச்சுகள் ஒதுக்கீடு செய்யப்படுவது குறித்து தெளிவுபடுத்தும் நோக்கில் இந்த திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் அவர் கூறினார்.

அந்தவகையில் அரசியலமைப்பின் 43 வது பிரிவின், திருத்தமாக கொண்டு வரப்படும் இந்த விதியின் கீழ், ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சு மற்றும் வேறு எந்த அமைச்சுகளையும் வைத்திருக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

19 ஆவது திருத்தச்சட்டம் நடைமுறைக்கு வரும் வரையில்ஜனாதிபதியிடம், பாதுகாப்பு அமைச்சு இருந்து வந்தது. இருப்பினும் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் கீழ், ஜனாதிபதி தனக்கு கீழ் பாதுகாப்பு அமைச்சையும் இரு அமைச்சுக்களையும் வைத்திருக்க முடியாது.

எனவேதான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சு பதவி தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இருப்பினும் பொலிஸ், அரச புலனாய்வு சேவை, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், ஆட்பதிவு திணைக்களம் மற்றும் தேசிய மருந்துகள் கட்டுப்பாட்டு சபை மற்றும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு உள்ளிட்ட முப்பத்தொன்று அரச நிறுவனங்கள் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவரப்பட்டன.

அந்தவகையில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்தால் 19 வது திருத்தத்தை ரத்து செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

ஆகவே ஜனாதிபதிக்கான அதிகாரங்களை அதிகரிக்கும் முகமாக அரசியலமைப்பின் 22 ஆவது திருத்ததை கொண்டுவர அரசாங்கம் முயற்சிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/private-members-bill-to-bring-defence-ministry-under-president/

"அந்தவகையில் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் தனது கட்சிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்தால் 19 வது திருத்தத்தை ரத்து செய்வதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்."

ஆளும்போழுது அதிகாரம் தங்கள் கையில் இருந்தால் நாட்டை பொன்கொழிக்கும் பூமியாக்குவோம் எனக்கூறுவதும் அதற்கு அதிகாரம் தாருங்கள் என கேட்பதும் வழமை. அதேபோன்று, எதிர்க்கட்சியில் இருக்கும்பொழுது இந்த மாற்றம் சர்வாதிகாரத்தை உருவாக்கும் என கூறுவதும் வழமை. 

பல இலவசங்கள், மலிவுகள், ஆசை வார்த்தைகள் மற்றும் இனவாதம் தரப்பட்டு பெரும்பான்மை ஆட்சியை சிங்கள மக்கள் தருவது ஒரு சிக்கலான எதிர்காலத்தை உருவாக்கும்.   

உருசிய அதிபர் பூட்டின் பல அரசியல் சாசன மாற்றங்களை உருவாக்கி கிட்ட்டத்தட்ட இருபது ஆண்டுகள் ஆட்சியில் உள்ளார். அந்த நாட்டு மக்களை பொறுத்தவரையில் அவர் ஒரு பலமான விருப்பமான அதிபராக உள்ளார். 

அமெரிக்க அதிபர் ட்ரம்பும் நீண்ட காலம் ஆட்சி செய்ய விரும்பும் தலைவர். ஆனால், எப்படித்தான் முயற்சித்தாலும் அவரால் எட்டு ஆண்டு காலத்திற்கு மேலாக அதிபராக இருக்க முடியாது. அமெரிக்க அரசியல் அமைப்பு, உலகின் தலைசிறந்த ஒரு வடிவமைப்பாக பார்க்கப்படுகின்றது. சனநாயகத்தை பேணும் ஒரு சாசனமாக உள்ளது. 
 

"எனவேதான் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக சமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சு பதவி தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை."

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் உள்ள எல்லா அமைச்சும் இவருக்கு கீழ் வருமட்டும் அரசியலமைப்பு திருத்தம் வந்துகொண்டே இருக்கும். எதிர்க்கட்சியினர், தட்டிக்கேட்ப்போர் சிறையில் அடைக்கப்படுவர். அதனால எல்லோரும் கேக்க முன்னமே அவர் பக்கம் சாய்ந்து விடுவார். பேராசை பிடித்த பூதம், ஓடியோடி எந்தெந்த அமைச்சை தன் வசம் கொண்டு வரலாம் எனத்தேடுது. அண்ணன் தான் எதை எடுக்கலாம்? என்று அவர் வேறு தீவிர யோசனை.  அடுத்த ஹிட்லர் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

'22ஆவது திருத்த யோசனையை தோற்கடிக்க வேண்டும்'

தனிநபர் பிரேரணையாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் மீண்டும் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் காலத்துக்கு பயணிப்பதாகும் என, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் வலைதளத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர், நீதிபதிகள்,  சட்டமா அதிபர், கணக்காய்வாளர் நாயகம், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பதவிகளுக்கான நியமனங்கள் ஜனாதிபதியால் வழங்கப்படுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நடவடிக்கை பொதுமக்களின் விருப்பத்துக்கு அமைய ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன அமைப்புளை சீர்குலைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்த நடவடிக்கை சர்வாதிகார போக்கு என்று கூறியுள்ள அவர் இந்த யோசனை தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் மேலும் கூறியுள்ளார்.

22nd Amendment!Back to JR!
Bill suggests appointment of Judges,Auditor general,IGP,AG etc by the president.This will completely destroyed the relatively independent systems established by will of the people.This dictatorship mania should be defeated irrespective of party lines. pic.twitter.com/SScolczVBZ

— Bimal Rathnayake (@BimalRathnayake) January 2, 2020
 

http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/22ஆவத-தரதத-யசனய-தறகடகக-வணடம/150-243398

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.