Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது (edited)

Picture1.jpg

அறுபது வருடங்களுக்கு முன்(1960) வந்த படத்தின் (கவலை இல்லாத மனிதன்) நகைச்சுவை காணொளியை இன்று காண நேரிட்டது..

டி.எஸ்.பாலையா, சந்திரபாபு, எம்.ஆர்.ராதா ஆகிய மூன்று நகைச்சுவை ஜாம்பவான்களும், கவிஞர் கே.டி. சந்தானமும் ஒன்று சேர்ந்து கலக்கியிருக்கிறார்கள்..!

என்ன யதார்த்தமான நகைச்சுவை..!

 

 

Edited by ராசவன்னியன்
  • Like 2
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கழுதைக்குப் பிறந்த  பசங்கள் ன்று பாலையா தன்னையே இரண்டு தடவைகள் குத்திக் காட்டுவது  நகைச்சுவை. இதேபாணியில் ஒரு நகைச்சுவை பாடல்

இருவர் உள்ளம் திரைப்படத்தில் இருக்கிறது. அதில்  அசட்டுப்பய பிள்ளை  ஆராரோஎன்று  எம்.ஆர்.ராதா தன்னையே குறிப்பிட்டு பாடுவதாக இருக்கும்

இந்த நகைச்சுவை பகுதிக்குப் பின்னால் வரும் பாடல் என்னைக் கவர்ந்த பாடல்களில் ஒன்று. அதில் வரும் வரிகள் ஆழமானவை

இதயம் காட்டும் கண்ணாடி வதனமில்லையா

இருவிழிகள் படைத்திருந்தும் புரியவில்லையா

சிதறிவரும் வார்த்தைகளில் தெரியவில்லையா

சிந்தையிலே தெளிவுடையோர் யாருமில்லையா

சிரிக்கச் சொன்னார் சிரித்தேன்

பார்ககச் சொன்னார் பார்த்தேன்

நல்ல பாடல்கள் நகைச்சுவைகள் இருந்தும் கண்ணதாசனை கவலையுள்ள மனிதனாக்கிய படம்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

"இதுவரைக்கும் தம்பி பப்ளிக்மேனா இருந்தான்.. இன்னைக்குதான் தம்பி பிஸினஸ்மேன் ஆயிட்டான்..!"

"டேய்.. மீடிங்ல பேசுறையெல்லாம் பிஸினஸில் பேசாதே..!"

 

"மாமா..! பொண்ணுக்கு ஏஜ் என்ன..?" என விசாரிக்க,

"ஐயையோ ..அது யாரையுமே ஏசாது தம்பி, ரொம்ப நல்ல பொண்ணு..!"என அப்பாவியாக பதிலளிக்க,

"ஏன் மாமா.. டான்ஸ் ஏதாவது தெரியுமா..?" என எம்.ஆர்.ராதா திரும்பக் கேட்க,

"ஐயையே..! அதெல்லாம் எனக்கு தெரியாது தம்பி..!" என கே.டி.சந்தானம் நெளிய..

 

அனைத்தும் விரசமில்லாத நகைச்சுவை...!  rire-2009.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted
15 minutes ago, ஈழப்பிரியன் said:

சீ அந்த பாட்டை கேக்க முதலே கட் பண்ணியிட்டாங்களே.

ஒங்க ஆசையைக் கெடுப்பானேன்..?

இதோ..!

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 minutes ago, ராசவன்னியன் said:

ஒங்க ஆசையைக் கெடுப்பானேன்..?

இதோ..!

 

 

நன்றி சார்.

சிரிச்சுகிட்டே பாடும் என்று பார்த்தா அழுவுதே.

நல்ல பாட்டு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
9 minutes ago, ஈழப்பிரியன் said:

நன்றி சார்.

சிரிச்சுகிட்டே பாடும் என்று பார்த்தா அழுவுதே.

நல்ல பாட்டு.

படத்தை யூடுபில் பாருங்கள் புரியும்..!

உங்கள் காலத்து நடிகர்கள் நடித்து, மெருகேற்றியது.  vil-cligne.gif

நானும் இன்றைக்குதான் முழுப்படமும் பார்க்கப் போறேன்..!!

 

 

Edited by ராசவன்னியன்
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 minutes ago, ராசவன்னியன் said:

படத்தை யூடுபில் பாருங்கள் புரியும்..!

உங்கள் காலத்து நடிகர்கள் நடித்து, மெருகேற்றியது.  vil-cligne.gif

நானும் இன்றைக்குதான் முழுப்படமும் பார்க்கப் போறேன்..!!

ஐயா பேரப்பிள்ளைகளுக்கு 2 வயதுக்கு மேல் தான் தொலைக்காட்சி கணனி தொலைபேசி காட்ட வேண்டும் என்ற சட்டம்.அதனாலே இப்போ யாழில் கூட நேரம் போட முடியாமல் இருக்கு.

ஒன்றுக்கு இரண்டுக்கு போய் ஒளித்திருந்து நோண்டினாலும் போன மனிசனைக் காணவில்லையே என்று மனைவி தேடி வாறா.

இப்படி போகுது நம்ம கதை.எப்படி ஐயா படம் பார்ப்பது?

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, ஈழப்பிரியன் said:

சிரிச்சுகிட்டே பாடும் என்று பார்த்தா அழுவுதே.

நகைச்சுவையைப் பார்தது சிரியுங்கள். பாட்டைக் கேட்டு அழுங்கள்.

“சிரிப்பு பாதி அழுகை பாதி

சேர்ந்ததல்லவோ மனிதஜாதி”

  • Haha 1


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.