Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அனைத்துலக நிதி உதவி எங்களுக்குத் தேவையில்லை: மகிந்த ராஜபக்ச அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலக நிதி உதவி எங்களுக்குத் தேவையில்லை: மகிந்த ராஜபக்ச அறிவிப்பு

[புதன்கிழமை, 16 மே 2007, 17:01 ஈழம்] [ப.தயாளினி]

அனைத்துலக நிதி உதவி எங்களுக்குத் தேவையில்லை என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரின் மனித உரிமை மீறல்களைத் தடுக்க இயலாத சிறிலங்கா அரசாங்கத்துக்கு பிரித்தானிய நிதி உதவியை இடை நிறுத்தி உள்ளது.

அதேபோல் அமெரிக்காவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது தொடர்பாக மகிந்த கூறியுள்ளதாவது:

தாமாக முன்வந்து விருப்பத்தின் பேரில் கொடுக்கப்படும் நிதி உதவியை நாம் பெற்றுக்கொள்ளலாம். இல்லையெனில் அதனை நாம் மறந்துவிட்டு நமது வேலையைச் செய்ய வேண்டும். நாம் உதவிகளைச் சார்ந்து இருக்கக் கூடாது. தேவையெனில் எமது அரசாங்கம் சுயாதீனமாகவே செயற்படும்.

ஆழிப்பேரலையால் இடம்பெயர்ந்த அல்லது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்வது என்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும். நாம் உதவிகளைப் பெற்றாலும் பெறாவிட்டாலும் இதனைக் கட்டாயம் செய்தாக வேண்டும் என்றார் மகிந்த ராஜபக்ச.

புதினம்

அனைத்துலக நிதி உதவி எங்களுக்குத் தேவையில்லை: மகிந்த ராஜபக்ச அறிவிப்பு...

இதில் எங்களுக்கு என்று மகிந்து எதை சொல்கின்றது?

மகிந்துவின் தாம்பத்திய வாழ்க்கைக்கா? அல்லது

மகிந்துவின் முழு குடும்பத்திற்குமா? அல்லது

மகிந்துவின் சுதந்திரக் கட்சிக்கா?

AFP யிலும் இச் செய்தி வந்துள்ளது.

அநேகமாக இதுதான் 2007 இன் மெகா நகைச்சுவையாக இருக்கும்.

என்ன செய்ய பிச்சை எடுக்க இன்னும் கனக்க இருக்கு மகிந்தவுக்கு அதுக்குள்ள இப்படி எல்லாம் அறிக்க்கை விடுறது ரெம்பதப்பு

Edited by ஈழவன்85

ஆமாண்டா இன்னொரு அடி அடிச்சா பிச்சையில்லை... பேச்சுமூச்சில்லாம் கிடப்ப...

இவனுக்கு யாரோ மேசைக்கு கீழால கொடுக்கிறான்பா...

திமிரப்பாரு..எருமை எருமை

ஸாரி

மேன்மைதங்கிய எருமை அவர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவனுக்கு சீனாமறைமுகமாக உதவிகளை செய்யப்போகின்றது போல அதனாள்த்தான் இப்படி அறக்கைவிடடுள்ளான் இதனாள் மேற்குலகம் என்னநடவடிக்கையைசெய்யப்போகி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(மேலதிக இணைப்பு)அனைத்துலக நிதி உதவி எங்களுக்குத் தேவையில்லை: மகிந்த ராஜபக்ச அறிவிப்பு

[புதன்கிழமை, 16 மே 2007, 17:01 ஈழம்] [ப.தயாளினி]

அனைத்துலக நிதி உதவி எங்களுக்குத் தேவையில்லை என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.

சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரின் மனித உரிமை மீறல்களைத் தடுக்க இயலாத சிறிலங்கா அரசாங்கத்துக்கு பிரித்தானிய நிதி உதவியை இடை நிறுத்தி உள்ளது.

அதேபோல் அமெரிக்காவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் கொழும்பு அலரி மாளிகையில் இன்று புதன்கிழமை காலை ஊடக நிறுவன ஆசிரியர்கள் மற்றும் நடத்திய சந்திப்பின் போது மகிந்த கூறியதாவது:

நாட்டின் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதற்காக முன்வைக்கப்பட்டுள்ள தீர்வுத்திட்டங்களை வெளியில் இருந்து விமர்சிப்பவர்கள் எங்களுடன் ஒன்றிணைந்து எமது முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சி முன்வைத்துள்ள அரசியல் தீர்வு யோசனைகள் இந்நாட்டின் அதிகாரப் பரவலாக்கலுக்கு ஒரு பலமான அத்திவாரமாக இருக்கும்.

நாட்டின் அபிவிருத்திக்காக நாம் எமது சொந்தப் பணத்தை பயன்படுத்துவோம். எமது பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு எந்தவொரு அமைப்பில் இருந்தும் உதவி கிடைக்கும் வரை நாம் காத்திருக்க முடியாது.

எமக்கு உரியமுறையில் நிதியுதவி வழங்கப்பட்டால் நாம் அதனை ஏற்றுக்கொள்வோம் இன்றேல் நாம் வெளிநாட்டு உதவி குறித்து சிந்திக்காது எமது பணியைச் செய்வோம். நாம் அதில் தங்கியிருக்கவில்லை.

பிரித்தானிய அரசாங்கத்தின் உதவி நிறுத்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது இலங்கைக்கான ஆழிப்பேரலைக்குப் பின்னரான உதவி பற்றியதாகவே இருக்க முடியும்.

உள்நாட்டில் இடம் பெயர்ந்தவர்களை மீள்குடியமர்த்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அவை வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றன. கிழக்கில் பல இலட்சக்கணக்கானோர் இடம்பெயர்ந்திருப்பதாக ஊடகங்கள் தெரிவித்திருக்கின்றன. ஆனால் அதன் உண்மையான தொகை மிகவும் குறைவானது என தற்போது தெரியவந்திருக்கிறது. இவர்களை மீளக் குடியமர்த்துவதில் ஏற்பட்ட தாமதத்திற்கான காரணம் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்டிருக்கும் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியிருந்தமையும் மீள்குடியமர்த்துகைக்கு முன்னர் தேவையான அடிப்படை வசதிகள் வழங்கப்பட வேண்டியிருந்தமையுமாகும்.

இன்று மீள் குடியமர்த்துகைக்காக நாம் எமது சொந்தப் பணத்தை பயன்படுத்துகிறோம். அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்கள் வரும்வரை நாம் காத்திருக்கவில்லை. இப்பணி வெற்றிகரமாக நடைபெறுகிறது. மீள் குடியமர்த்தப்படும் மக்களுக்கு நாம் மின்சாரம் வழங்கி வருகிறோம். இப்பகுதிகளில் புதிய பாதைகள் அமைக்கப்படுகின்றன. இவையே தாமதத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் இவை ஊடகங்களில் வெளிவருவதில்லை.

வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு மக்களுக்கு எந்த பாரபட்சமும் காட்டப்படாது இப்பணி நடைபெற வேண்டும் என சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் நான் அறிவுறுத்தல் வழங்கியிருக்கிறேன். அவர்கள் அனைவரும் சமமாக நடத்தப்படல் வேண்டும்.

ஆழிப்பேரலையால் இடம் பெயர்ந்தவர்களாக இருக்கட்டும் அல்லது யுத்தத்தினால் இடம் பெயர்நதவர்களாக இருக்கட்டும் அவர்கள் அனைவரையும் மீள்குடியமர்;த்துவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். நாம் வெளியிலிருந்து உதவி கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் இந்தப் பொறுப்பை நிறைவேற்றியே தீருவோம் என்றார் மகிந்த.

புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவன் கணக்குப் பார்த்துத்தான் கதைக்கிறான். நாங்கள் தான் சும்மா கத்துகிறோமோ? :unsure:

Balance of Payment Surplus

Commenting on the economy, the bank said the country’s balance of payments recorded a 207 million dollar surplus for the six months to June, despite a 68 percent jump in trade deficit from Jan-May.

The country's official reserves also rose to 2.5 billion dollars from Jan-June, helped by a 26 percent growth in private remittances by Sri Lankans living overseas.

The next monetary policy announcement is scheduled for Wednesday August 16.

ஆதாரம்:

http://www.lankabusinessonline.com/fullsto...;SEARCH_TERM=16

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

AFP யும் அதையே சொல்கிறது

Remittances rescue Sri Lanka's balance of payments

Sri Lanka's exports in the first three months of 2007 earned 1.71 billion dollars while imports cost 2.37 billion dollars, leaving a deficit of 659.5 million dollars, the Central Bank of Sri Lanka said on Wednesday.

The bank said the trade deficit for the same period in 2006 was 783.8 million dollars.

It added that the overall balance of payments for the first quarter of this year was a surplus of 240 million dollars, thanks to private remittances.

The money sent home by Sri Lankans employed abroad rose by 12.4 percent to 648 million dollars in the first quarter, containing the current account deficit. Over a million Sri Lankans are employed abroad.

COLOMBO (AFP) - Sri Lanka recorded a trade deficit of 659.5 million dollars in the first quarter, but foreign remittances pushed the overall balance of payments into positive territory, the central bank said.

The export growth in the first quarter of this year was led by textiles and garments, the bank said, adding imports were slower because of a sharp decline in oil imports.

Sri Lanka's gross official reserves stood at 2.76 billion dollars, equivalent to 3.2 months of imports.

Sri Lanka's 26-billion-dollar economy grew by 7.4 percent in 2006, the best in 28 years, ahead of 6.0 percent reported in 2005.

President Mahinda Rajapakse has said that "terrorism" -- a reference to the Tamil Tiger rebel insurgency -- was no threat to the country's economy, which expects eight percent growth this year.

More than 4,800 people have died since violence began escalating in December 2005. The 35-year-old conflict has claimed at least 60,000 lives.

http://news.yahoo.com/s/afp/20070516/wl_st...de_070516052719

Edited by பண்டிதர்

  • கருத்துக்கள உறவுகள்

இது நகைச்சுவையான விடயமே அல்ல.

இப்படி மகிந்த துணிந்து கூறுகின்றார் என்றால், அதற்குப் பின்புலத்தில் ஒரு சக்தி உதவி செய்யத் தயாராக இருக்கின்றது என்பதே அர்த்தம். அது நன்கொடை என்றபெயரில் இரகசியமாகப் பணஉதவி செய்யக் கூடும். அரச கணக்கில் அது வெளிநாட்டு உதவிகள் என்று மட்டுமே இடம்பெறலாம். நாட்டின் பெயர் மறைக்கப்படலாம்.

எனவே, ஒரு பக்கம் நிதி உதவிகள் நிறுத்தப்பட்டது மகிழ்்ச்சி தந்தாலும், அது நிரந்தரமான நிறுத்தி வைத்தல் அல்ல என்று பொருள் அல்ல. அதற்காக நாம் நிறைய உழைக்க வேண்டும்.

வெளிநாட்டு உதவிகளை எதிர்பார்த்து அதை நம்பியிருக்கப் போவதில்லை ஜனாதிபதி மஹிந்த நேற்று அறிவிப்பு

""வெளிநாட்டு உதவிகளை எதிர்பார்த்து அதை நம்பி அரசு காத்துக்கொண்டிருக்கப் போவதில்லை. நியாயமான வழியில் உதவி கிடைக்குமானால் அதை ஏற்போம். ஆனால் அதை நம்பி அதற்காகப் பார்த்திருந்து, அதில் தங்கியிருக்க மாட்டோம். கிடைக் காவிட்டால் அதை மறந்துவிட்டு, எமது வேலையை நாமே பார்த் துக்கொள்வோம்''

இப்படி அரசின் நிலைப்பாட்டை அறிவித்திருக்கிறார் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷ.

தேசிய ஊடகங்களின் பொறுப்பாளர்களை நேற்றுக்காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அலரிமாளிகையில் சந்தித்துக் கலந் துரையாடினார். அப்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கையின் பாதுகாப்புச் சூழ்நிலை, மனித உரிமைகள் பேணப்படும் நிலைவரம் ஆகியவற்றை மேற்கோள்காட்டி, உத வித் திட்டங்களை சில நாடுகள் முடக்கத் தீர்மானித்திருப்பது குறித்துக் அங்கு கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளிக்கையிலேயே ஜனாதிபதி இப்படிப் பதிலளித்தார்.

அங்கு ஜனாதிபதி மேலும் கூறியதாவது:

நாட்டில் ஆள்கடத்தல் சர்ச்சை குறைந்து வருகின்றது. கடத் தப்படுவோர் எண்ணிக்கை வீழ்ச்சி கண்டுள்ளது. நாட்டில் பல குழுக்கள் ஆட்கடத்தல்களில் ஈடுபடுகின்றன. அவற்றைப் பிடித்து சட்டத்தின் முன் நிறுத்த உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றோம். ஆனால் சாட்சியங்கள், தகவல்கள், ஆதாரங்கள் கிடைப்பதுதான் கஷ்டம்.

கப்பம் கேட்டு மேற்கொள்ளப்பட்ட சில ஆட்கடத்தல்களுடன் புலிகளுக்கும் தொடர்புகள் இருக்கலாம் என்று தெரிகின்றது. ஏனெனில் கப்பப் பணம் கோரும் தொலைபேசி அழைப்புகள் லண்டனிலிருந்து அந்த நாட்டு இலக்கத்தில் வந்திருக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இப்போது தமிழர்களை மட்டும்தான் கொண்டது என்று கூறிவிடமுடியாது. அதில் சிங்களவர்களும் இருக்கின்றார்கள். முஸ்லிம்களும் இருக்கின்றார்கள். விசாரணைகளிலிருந்து இந்த விவரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழர்கள் அல்லாத குழுக்களினால் மேற்கொள்ளப்படும் கடத்தல்களுக்கும் புலிகளுக்கும் சம்பந்தம் இல்லை என எடுத்த எடுப்பிலேயே கூறிவிடமுடியாது.

ஆதாரங்கள் இல்லாமல் என்ன செய்ய முடியும்?

ஆனால் சாட்சியங்கள், ஆதாரங்கள் தராமல் முன்வைக்காமல் நாம் எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? அதுதான் பிரச்சினை. சாட்சியங்களை முன்வைக்கப் பின்னடித்துக் கொண்டு எம்மை விமர்சிப்பதில் அர்த்தமில்லை.

திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் படுகொலை தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நான் உறுதியளித்தேன். சாட்சியங்களை முன்வையுங்கள் என்று வலியுறுத்தினேன். சிலர் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் சாட்சியங்கள் முன்வைக்கப்படவில்லை. அதனால் அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

வெள்ளை வானில் வந்து கடத்துகின்றார்கள் என்கிறார்கள். ஊன்றி விசாரித்தால் அப்படி ஒன்றும் இல்லை என்றாகின்றது. ஓட்டோவில் கடத்தப்பட்டாலும், வெள்ளை வானில் வந்தார்கள் என்று தகவல் தந்தால் எப்படிப் புலனாய்வை மேற்கொள்வது?

வெளிநாட்டு விசாக்களைப் பெறுவதற்காகவும் சிலர் கடத்தல் நாடகம் ஆடுகின்றார்கள். கடத்தப்பட்டனர் என்று கூறப்பட்ட சிலர் வெளிநாடு சென்றுவிட்டனர் என்றும் தெரியவருகின்றது.

எப்படி என்றாலும் இப்போது கடத்தல் விவகாரம் குறைந்து வருகின்றது. சட்டம் தனது கடமையைச் செய்யும்.

நீங்கள் (ஊடகவியலாளர்கள்)எப்படி என்னிடம் கேட்பது என்று தெரியாமல் மேலே மேலே பார்ப்பது எனக்கு நன்கு புரிகிறது. புலிகளின் விமானங்கள் குறித்துத்தான் நீங்கள் கேட்க விழைகின்றீர்கள்

புலிகள் இந்த விமானங்களை இப்போது சுவீகரிக்கவில்லை. ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்த விமானங்களை அவர்கள் வைத்திருப்பது பற்றிய செய்திகள் படங்களுடன் வந்துள்ளன. எனவே நான் அதிகாரத்துக்கு வர முன்னரே இவற்றைப் புலிகள் பெற்றுவிட்டார்கள்.

ஏதோ நான் 25 கோடி ரூபா பணம் புலிகளுக்கு வழங்கினேன் என்றமாதிரியும், அந்தப்பணத்தில்தான் புலிகள் விமானங்கள் கொள்வனவு செய்தார்கள் என்ற தோறணையிலும் பேசப்படுவது முழுவதும் பொய்.

புலிகளின் விமானத்தாக்குதலுக்காக சர்வதேச விமான நிலையத்தை நாங்கள் இரவில் மூடியமையை சிலர் விமர்சிக்கின்றார்கள். விமானசேவை நிறுவனங்கள் கேட்டுக் கொண்டமையால்தான் அந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை நாம் எடுத்தோம். சர்வதேச காப்புறுதி நிறுவனங்களும் இம்முடிவை வரவேற்றுள்ளன. எமது இந்தத் தீர்மானத்தால் விமானசேவை தொடர்பான காப்புறுதிக் கட்டணங்கள் அதிகரிப்பது தவிர்க்கப்பட்டிருக்கின்றது.

சர்வதேச விமான நிலையமும், விமானப்படைத்தளமும் அருகருகே இருப்பதுதான் பிரச்சினை என்று சிலர் கூறுகின்றார்கள். அது குறித்து ஆராய்ந்து உரிய காலம் வரும்போது சரியான நடவடிக்கை எடுக்கலாம்.

புலிகளின் விமானங்களைச் சமாளிப்பதற்காக இப்போது ஏதோ திடீரென "மிக் 29' விமானங்களை நாங்கள் வாங்கப் போகின்றோம் என்பது போலவும்

கரத்தை வண்டியை இடிப்பதற்கு "மேர்ஸிடஸ் பென்ஸ்' கார் வாங்குவது போன்ற வேலை இது என்பது போலவும் சிலர் விமர்சித்திருக்கின்றார்கள்.

""மிக்29'' விமானங்களை வாங்குவது புலிகளின் வான்கலன்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு அல்ல

அப்படிக் கூறுவது தவறு.

புலிகளிடம் விமானங்கள் இருப்பது பற்றிய தகவல் கிடைத்தவுடனேயே ஏற்கனவே வான் பாதுகாப்புத் திட்டத்தை விமானப்படை விருத்தி செய்யத் தொடங்கிவிட்டது. அது கொஞ்சம் கொஞ்சமாக மேம்பாடடைந்து வருகின்றது. "மிக் 27' இலிருந்து "மிக் 29' வரையான உயர்வு அந்த விருத்தியின் ஓர் அங்கமாக அமையுமே தவிர, புலிகளின் விமானத்தைக் கண்டு திடீரென எடுக்கும் நடவடிக்கை அல்ல.

வெளிநாட்டு உதவித்திட்டங்கள் முடக்கப்படுகின்றன என்று கூறப்படுவது எமக்குப் பிரச்சினையல்ல.

நன் நோக்கத்துடன் உதவித் திட்டங்கள் தரப்படுமானால் அவற்றை நாம் வரவேற்போம். ஏற்றுக் கொள்வோம். கிடைக்காவிட்டால், அதை மறந்துவிட்டு நாங்கள் எங்கள் வேலையைச் செய்வோம். உதவிகளில்தான் நாம் தங்கியிருக் வேண்டும் என்பதல்ல.

ஆழிப் பேரலைத் தாக்கத்தாலோ அல்லது இனப்பிரச்சினை விவகாரத்தாலோ இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்துவதில்முழுப் பொறுப்பும் அரசையே பொறுத்தது. எனவே உதவிகள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அரசு தனது பொறுப்பை நிறைவேற்றும்.

இப்போது கிழக்கில் மீள்குடியேற்றத்தை நாம் முன்னெடுக்கிறோம். எந்த அரச சார்பற்ற தொண்டர் அமைப்பும் எமக்கு உதவ முன்வரவில்லை. நாமே(அரசே) எமது பாட்டில் இந்த விவகாரத்தைக் கவனிக்கிறோம். எனவே உதவிகளில் தங்கிநின்றுதான் எமது காரியத்தை நாங்கள் ஆற்றவேண்டும் என்பதல்ல.

வாகரையில் 75 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்தனர் என்றனர். பின்னர் அது ஒரு லட்சத்துக்கும் அதிகம் என்றனர். எல்லாம் உங்கள் (ஊடகங்களின்) வேலை. பின்னர் நேரில் போய் பார்த்தால் அந்த எண்ணிக்கை மிகைப்படுத்தப்பட்டது என்ற உண்மை தெரியவந்தது.

அரசின் யோசனை ஒன்றை உருவாக்கி

புலிகளுடன் பேசித் தீர்மானிக்க வேண்டும்

அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு எனது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் யோசனைகளை முன்வைத்துள்ளது. இவை எல்லாவற்றையும் ஆராய்ந்து அரசின் யோசனைத்திட்டம் ஒன்றை நாம் உருவாக்க வேண்டும். அதனை நாம் புலிகளிடமும் சமர்ப்பித்துப் பேசி ஒரு தீர்மானத்துக்கு வரவேண்டும்.

அப்படி புலிகளிடம் சமர்ப்பித்துப் பேசுவதற்கு இவர்களின் ("உதயன்' , "சுடர் ஒளி' ஆசிரியரைச் சுட்டிக்காட்டி) உதவியை நாம் நாடலாம்.

செய்திகளைப் பிரசுரிக்கும்போது புலிப் பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் வகையில் உணர்ச்சியைத் தூண்டும் விதத்தில் செயற்பட வேண்டாம் என்று நான் உங்களை(ஊடகவியலாளர்களை) கேட்டுக்கொள்கிறேன்.

எமது நாட்டை நாம் இழக்கக் கூடாது. அதற்காக ஊடகவியலாளர்கள் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும்.

என்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. (உ)

uthayan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Date: 2007-05-17

சர்வதேச நாடுகளின் உதவிகளை துச்சமென மதிக்கும் இலங்கை

இனப்பிரச்சினை கொடூரப் போராக வெடிக்கும் மோசமான கட்டத்தை அடைந்துள்ள இன்றைய நிலையில், நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கின்றது. எரிபொருள், எரிவாயு, உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பேன்றவற்றின் விலைகளும், போக்குவரத்து முதலிய அத்தியாவசிய சேவைகளின் கட்டணங்களும் எகிறிப்போய் நிற்கின்றன. விலைவாசி உயர்வை எதிர்கொள்ள முடியாது இலங்கைத் தீவு தடுமாறித் தவிக்கின்றது.

நாட்டின் வருமானத்தின் பெரும் பகுதியை போர்ச் செலவினம் கபளீகரம் செய்ய, மறுபுறத்தில் போராலும், இயற்கை அனர்த்தங்களாலும் பேரவலங்களைச் சந்தித்து இடம்பெயர்ந்து, அல்லற்பட்டு நிற்கும் மக்களுக்கு இயல்பு வாழ்வை மீள ஏற்படுத்திக் கொடுக்க முடியாத பேரிடர் தொடர்கின்றது.

இத்தகைய மனிதப் பேரவலங்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு தாண்டி மக்களுக்கு இயல்பு வாழ்க்கையை மீளப்பெற்றுக்கொடுப்பதாயின் அதற்கு சர்வதேச உதவி என்ற கற்பகதரு அத்தியாவசியமானதும், அவசரமானதும் என்பது பாடசாலைக்கே செல்லாத பாமரனுக்கும் கூட தெரிந்த விவகாரம்தான்.

ஆனால் சர்வதேச உதவிகளை அலட்சியப் போக்கோடு உதறித் தள்ளி விமர்சிக்கின்றார் நாட்டின் தலைவர்.

""உண்மையில் நன்நோக்குடன் உதவிகள் கிடைத்தால் வரவேற்போம். இல்லாவிட்டால் அது குறித்து நாம் அலட்டிக் கொள்ளமாட்டோம். (அவர்கள் தர மறுத்தால்) அந்த உதவிகளை மறந்துவிட்டு நாம் எங்கள் வேலையை எங்கள் பாட்டில் பார்த்துக்கொள்வோம். நாங்கள் எந்தச் சமயத்திலும் உதவிகளில் தங்கி அதில் நம்பி இருக்கப் போவதில்லை.'' இப்படி சர்வதேச உதவிகளைத் தூக்கி எறிந்து, உதாசீனப்படுத்தி, மமதையோடு பேசியிருக்கின்றார் நாட்டின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ.

இலங்கையில் மனித உரிமை நிலைவரம் சீர்கெட்டுச் செல்வதைக் காரணம் காட்டி சில கடன் உதவித் திட்டங்களை பிரிட்டன் முடக்கியிருக்கின்றது. இது பற்றிய அறிவிப்பு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டது.

""இலங்கையில் பாதுகாப்புச் சூழ்நிலை மற்றும் மனித உரிமைகள் பேணப்படும் நிலைவரம் ஆகியவற்றைக் கவனத்தில் எடுத்து, உதவித் திட்டம் ஒன்றை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.'' என்று அமெரிக்காவும் கடந்தவாரம் அறிவித்திருந்தது.

ஜேர்மனி ஏற்கனவே இத்தகைய முடிவை எடுத்து அறிவித்துவிட்டது.

பிரிட்டன்; ஜேர்மன்; அமெரிக்கா போன்ற நாடுகளைத் தொடர்ந்து மேலும் பல வெளிநாடுகள் இதே முடிவை மேற்கொள்ளும் ஏது நிலைகள் அதிகம் தென்படுகின்றன.

இவ்வாறு வெளிநாட்டு உதவிகள் முடக்கப்படுவது குறித்து ஊடக நிறுவனம் ஒன்றின் பிரதிநிதி நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேரடியாகச் சுட்டிக்காட்டிக் கேள்வி எழுப்பினார். அப்போது பதில் தருகையிலேயே இவ்வாறு சர்வதேச உதவிகளை "கிடைத்தால் நல்லது; கிடைக்காவிட்டால் போய்விட்டுப் போகட்டும்' என்ற சாரப்பட புறமொதுக்கினார் ஜனாதிபதி.

தம்முடைய அரசின் கீழ் மனித உரிமைகள் பேணப்படுகின்றமையை சர்வதேசம் விசனத்துடன் விமர்சித்து, அதற்குத் தண்டனையாக தண்டமாக உதவித் திட்டங்களை முடக்குகின்றது என்ற யதார்த்தத்தைப் புறமொதுக்கி விட்டு அல்லது மறைத்து அல்லது மறந்து "எட்டாப் பழம் புளிக்கும்' என்பதுபோல, சர்வதேச உதவித்திட்டங்கள் கிடைக்காவிட்டால் அது குறித்து கவலைப்பட மாட்டோம் என்கிறார் ஜனாதிபதி.

கிழக்கில் அகதிகளை மீள் குடியேற்றும் நடவடிக்கையைத் தமது அரசு சர்வதேசத் தொண்டு நிறுவனங்கள் எதன் உதவியுமின்றி தனித்து முன்னெடுப்பதைச் சுட்டிக்காட்டி பீற்றிக் கொள்ளவும் ஜனாதிபதி தவறவில்லை.

அந்த மீள்குடியேற்ற நடவடிக்கையை மஹிந்தரின் அரசு விரைந்து மேற்கொள்ள முயல்வதற்கும்

அந்த நடவடிக்கையில் பங்குகொள்ளாமல் சர்வதேசம் தள்ளி நிற்பதற்கும்

தெளிவான வெவ்வேறு காரணங்கள் உள்ளன.

பௌத்த சிங்களப் பேரினவாத மேலாண்மை சக்திகளைத் திருப்திப்படுத்தும் நோக்கிலான நிகழ்ச்சி நிரல் ஒன்றின் ஓர் அங்கமாகவே அந்த மீள் குடியேற்ற முயற்சிகளை அரசுத் தலைமை அவசர அவசரமாக முன்னெடுக்கின்றது என்பதை ஏற்கனவே இப்பத்தியில் நேற்று விலாவாரியாகத் தெளிவுபடுத்தியிருந்தோம்.

அதேபோல, இடம்பெயர்ந்த தமிழ் அகதிகளின் கௌரவமான கண்ணியமான வாழ்வு மற்றும் பாதுகாப்புக்கு உறுதி வழங்கப்படாத நிலையில், அரசு தனது அரசியல் உள்நோக்கங்களை எட்டுவதற்காக, அகதிகளைப் பெரும் பாதுகாப்பு ஆபத்துக்குள் மூழ்கடிக்கச் செய்யும் வகையில் இந்த மீள்குடியேற்ற நடவடிக்கைகளை விரைந்து ஒரு பக்க நோக்கோடு முன்னெடுக்கின்றது என சர்வதேச சமூகம் கருதுகின்றது. அதனாலேயே இந்த மீள் குடியேற்ற நடவடிக்கையின் எந்தக் கட்டத்திலும் சர்வதேச தொண்டர் அமைப்புகள் பங்குபற்றாமல் தள்ளி நிற்கின்றன என்பதும் நோக்கற்பாலது.

"எட்டாப் பழம் புளிக்கும்' என்று உரைத்த நரியைப்போல சர்வதேச உதவியைத் தூக்கி எறிந்து நடக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் போக்கினால் அவரது தலைமையிலான அரசின் இத்தகைய விட்டேத்தியான செயற்பாட்டினால் சர்வதேச உபகாரங்களுக்காகக் கையேந்தி நிற்கும் மூன்றாம் மண்டல நாடுகளுள் ஒன்றான இலங்கையின் நிலைமை மேலும் பரிதாபகரமான கட்டத்தை அடையப் போகின்றது என்பது நிச்சயம்.

உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.