Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க அதிபர் டிரம்பின் பதவி தப்பியது மற்றும் பிற செய்திகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க அதிபர் டிரம்பின் பதவி தப்பியது மற்றும் பிற செய்திகள்

டொனால்டு டிரம்ப்Getty Images டொனால்டு டிரம்ப்

கருத்தியல் ரீதியாக அமெரிக்காவையே இரண்டாக பிரிய வைத்த அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்பை பதவியிலிருந்து நீக்கும் ஜனநாயக கட்சியினரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்துள்ளது. 

அமெரிக்காவின் 45ஆவது அதிபரான டிரம்பின் குடியரசு கட்சியினர் பெரும்பான்மை வகிக்கும் செனட் சபையில் நடந்த, டிரம்புக்கு எதிரான பதவிநீக்க தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடந்தது.

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் நாடாளுமன்ற நடவடிக்கைக்கு முட்டுக்கட்டையாக இருத்தல் ஆகிய இரு குற்றச்சாட்டுகளில் முறையே 52-48, 53-47 என்ற வாக்குகளின் அடிப்படையில் தோல்வி அடைந்தது.

இந்தாண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடவுள்ள ஜோ பிடன் மற்றும் அவரது மகன் ஹண்டர் பிடன் மீது ஊழல் விசாரணை நடத்துவதற்கு உத்தரவிடுமாறு உக்ரைன் அதிபருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்ததாக கூறி கடந்த டிசம்பர் மாதம் இந்த பதவிநீக்க விசாரணையை ஜனநாயக கட்சி முன்மொழிந்திருந்தது. 

வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம், பதவிநீக்க நடவடிக்கைக்கு உட்பட்டு அதன் பிறகு மீண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் அமெரிக்காவின் முதல் அதிபராக டொனால்டு டிரம்ப் உருவெடுத்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது சாட்டப்பட்ட இரண்டில் ஒரு குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தாலும் அவர் தனது பதவியை இழந்திருப்பார். ஒருவேளை அப்படி நடந்திருந்தால் அமெரிக்காவின் அதிபராக தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் பதவியேற்றிருப்பார்.

ஏற்கனவே நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் பதவிநீக்கத் தீர்மானம் நிறைவேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

https://www.bbc.com/tamil/global-51395555

 

  • கருத்துக்கள உறவுகள்
%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF
 
குற்றவியல் பிரேரணையில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி
 
 
தனக்கு எதிரான குற்றவியல் பிரேரணையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சியினரின் பெரும்பான்மையைக் கொண்டுள்ள செனட் சபையில், குற்றவியல் பிரேரணை நேற்று தோற்கடிக்கப்பட்டது.

அதிகார துஷ்பிரயோகம் மற்றும் காங்கிரஸின் செயற்பாடுகளை தடுத்தமை உள்ளிட்ட இரண்டு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் டொனால்ட் ட்ரம்புக்கு எதிராக ஜனாநாயக கட்சியினரால் குற்றவியல் பிரேரணை முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான குற்றச்சாட்டு, 52 க்கு 48 என்ற வாக்குகளின் அடிப்படையில் செனட் சபையில் தோற்கடிக்கப்பட்டது.

இதேநேரம், காங்கிரஸின் செயற்பாடுகளை தடுத்தமை தொடர்பான குற்றச்சாட்டு, 53 க்கு 47 என்ற வாக்குகளின் அடிப்படையில் தோற்கடிக்கப்பட்டது.

இந்த நிலையில், எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடவுள்ளார்.

குற்றவியல் பிரேரணை முன்வைக்கப்பட்டு, தேர்தலுக்கு செல்லும் முதலாவது அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் வரலாற்றில் இடம்பிடிக்க உள்ளார்.

முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி, ஜனநாயக கட்சியினரை பெரும்பான்மையைக் கொண்டுள்ள பிரதிநிதிகள் சபை, குற்றவியல் பிரேரணையை ஆதரித்திருந்தது.

எவ்வாறிருப்பினும், செனட் சபையில் அது தோற்கடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, டொனால்ட் ட்ரம்பை பதவியிலிருந்து வெளியேற்றும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினரின் முயற்சியை, ஆளும் கட்சியான குடியரசுக் கட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.