Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பலாப்பழப் பண்பாடு போல பல்கலைக்கழக பகிடிவதை

Featured Replies

பலாப்பழம் எவ்வளவுதான் பழுத்தாலும் அதன் பால் கையில் ஒட்டிக்கொள்வதை விலத்துவதே இல்லை. முதிர் மரங்கள் தரும் பலாக்கனிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. இதனாலேயே பலாப்பழப் பண்பாடு என்றுரைத்தோம்.
 
ஆக, எவ்வளவுதான் முதிர்ச்சியடைந்தும் இயற்கையின் அனுபவங்களை உள்ளுணர்ந் தும் ஏனைய கனிதரும் மரங்களின் கூட்டத்தில் கலந்திருந்தும் பால் விலத்தி, பலாச் சுளை தரமுடியாத அளவிலேயே பலா மரங்களின் பண்பாடு உள்ளது. இத்தகைய பலாப்பழப் பண்பாடு போலவே பல்கலைக்கழகங்களில் நடைபெறும் பகிடிவ தைக் கொடுமையும் அமைந்துள்ளது.
 
ஆம், நிறைந்த போட்டிகளுக்கு மத்தியில் பரீட்சையில் உயர்பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகத்துக்குச் செல்வதென்பது பெருமைக்குரியது.
என் பிள்ளை பல்கலைக்கழகத்தில் படிக்கிறான் என்று கூறி ஆனந்தமடையாத பெற் றோர் எவரும் இருக்க முடியாது. எனினும் பல்கலைக்கழகத்துக்கு வருகின்ற புதுமுக மாணவர்களை பகிடிவதை செய் கின்ற வக்கிரம் பல்கலைக்கழக மாணவர் களிடம் இருக்கிறதெனில் அது பலாப்பழப் பண்பாடு போன்றது எனக் கூறுவதைவிட வேறு வழியில்லை.
 
படித்து, பரீட்சையில் சித்தியடைந்து பல் கலைக்கழகத்துக்கு புதுமுக மாணவர்களாக நுழைந்த அனுபவங்களைக் கொண்டிருக்கக் கூடிய சிரேஷ்ட மாணவர்கள்; புதுமுக மாண வர்களை பகிடிவதை செய்கின்ற மனநிலையில் உள்ளனர் எனும்போது இவர்களுக்கு பக்கு வம் என்பதை பல்கலைக்கழகம் பயிற்றுவிக்க வில்லையோ என்று எண்ணத் தோன்றும்.
 
இதுதவிர, அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்து மாணவர்கள் சிலர் செய்த விரசமான பகிடிவதை தொடர்பில் வெளிவரு கின்ற செய்திகளைப் பார்த்து வேதனையடைவ தைத் தவிர வேறுவழியில்லை என்றே கூற வேண்டும். ஏனெனில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தனித்துவமானது. இது தமிழ்ப் பண்பாட்டுப் பசளையில் முளைத்த பல்கலைக்கழகம். எனவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு அனுமதி கிடைப்பது பேறு என்று நினைக்கக் கூடிய வகையில் எங்கள் பல்கலைக்கழகத் தின் பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும்.
 
ஆனாலும் ஒரு சில மாணவர்கள் தங்கள் விரச புத்தியைக் காட்டி விடுவதால், ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் தலைகுனிய வேண்டியுள்ளது.
பெற்று, வளர்த்து, படிப்பித்து பல்கலைக் கழகத்துக்கு அனுப்பி வைத்து; என் பிள்ளை பட்டத்தோடு வீடு வருவான் என்று பெற்றோர் கனவு கண்டிருக்கையில், பகிடிவதை செய்ததால் பல்கலைக்கழகத் தில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்படுகின்றீர்  என்ற கடிதமே வீட்டுக்கு வருமாயின் இதை விட்ட பேரிடி பெற்றோருக்கு வேறு எதுவாக இருக்க முடியும். அதனால் யாழ்.பல்கலைக்கழக மாணவர் கள் எங்கள் பண்பாட்டைப் பாதுகாப்பதை தங் களின் இன மானப் பணியாகச் செய்ய வேண்டும் என்பதே நம் தாழ்மையான கோரிக்கை.  
 

Edited by ampanai

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ampanai said:
ஒரு சில மாணவர்கள் தங்கள் விரச புத்தியைக் காட்டி விடுவதால், ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் தலைகுனிய வேண்டியுள்ளது.
பெற்று, வளர்த்து, படிப்பித்து பல்கலைக் கழகத்துக்கு அனுப்பி வைத்து; என் பிள்ளை பட்டத்தோடு வீடு வருவான் என்று பெற்றோர் கனவு கண்டிருக்கையில், பகிடிவதை செய்ததால் பல்கலைக்கழகத் தில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்படுகின்றீர்  என்ற கடிதமே வீட்டுக்கு வருமாயின் இதை விட்ட பேரிடி பெற்றோருக்கு வேறு எதுவாக இருக்க முடியும். அதனால் யாழ்.பல்கலைக்கழக மாணவர் கள் எங்கள் பண்பாட்டைப் பாதுகாப்பதை தங் களின் இன மானப் பணியாகச் செய்ய வேண்டும் என்பதே நம் தாழ்மையான கோரிக்கை.  

பகிடி வதை செய்வதற்கு... நாம் எதிர்ப்பல்ல.
அதுவே... காமக் கண்ணோத்துடன், ஒரு சகோதர தமிழ்ப் பெண்ணை...
தற்கொலை முயற்சி செய்யும் அளவிற்கு போகும் போது... ஆத்திரம் தான் வருகின்றது.

இதனால்... இரண்டு பகுதிகளில் உள்ள பெற்றோரும், 
எவ்வளவு... மிகவும் மன வேதனைப் பட்டு இருப்பார்கள், 
என்பதனை நினைத்துப் பார்க்கவே... கஸ்ரமாக உள்ளது.  

அடுத்த சந்ததிக்கு... முன் உதராணமாக இருக்க வேண்டிய,  மாணவர்களே...
வரம்பு மீறி, எதனையும்.. செய்யாதீர்கள். ப்ளீஸ். :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.