Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரபாகரனை கொண்டு வராதது ஏன்? சுவாமி கேள்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனை கொண்டு வராதது ஏன்? சுவாமி கேள்வி

மே 21, 2007

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நாடு கடத்திக் கொண்டு வர காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முயற்சி எடுக்காதது ஏன் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி கேட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

பிரபாகரன் உத்தரவின் பேரிலேயே ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. பிரபாகரனை முதல் குற்றவாளியாகவும் விசாரணை நீதிமன்றம் அறிவித்துள்ளது.

பிரபாகரனுக்கு எதிராக சர்வதேச போலீஸும் அபாய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இத்தனைக்குப் பிறகும் மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு பிரபாகரனை கைது செய்து இந்தியாவுக்குக் கொண்டு வர முயற்சி எடுக்காமல் உள்ளது தேசத்திற்கே அவமானமாகும்.

மாறாக, பிரபாகரனுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள கட்சிகளுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைத்துள்ளது. பிரபாகரனை கொண்டு வர முயற்சிக்காமல், பல ஆண்டுகளாக மெளனம் சாதிப்பது ஏன் என்பதற்கு சோனியா காந்தி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் பிரபாகரன்.

இன்று ராஜீவ் காந்தியின் நினைவு தினம் என்பது நினைவிருக்கலாம்.

http://thatstamil.oneindia.in/news/2007/05/21/swamy.html

முதலில் இந்த சாமியாரை விசாரிக்க தமிழீழத்துக்கு கொண்டு வரனும்

Edited by கறுப்பி

  • Replies 56
  • Views 8.2k
  • Created
  • Last Reply

சாமி என்னவோ ஒரு போலீஸ் குழுவை அனுப்பி பிரபாகரனைக் கைது செய்யுங்கள் என்ற ரீதியில் அறிக்கை விட்டுள்ளார்.

அந்த எண்ணத்தில் யாராவது வன்னிக்குள் காலடி வைக்க நினைத்தால் உங்க படை போதாதுங்க சாமியோவ்.

ஒரு சாதாரண முகவர் குவத்ரோச்சியை கொண்டுவரவே முடியலை. இதுல ஒரு நாட்டின் அதிபரை கைது செய்யின்னு சொல்றது எப்படின்னு புரியல.

சாமி பொழுது போகலன்னா குவாட்டர் அடிச்சிட்டு படுக்க வேண்டியதுதானே? ஆமாம் நீங்க எங்க இருக்கிங்க? தமிழ்நாட்டுல இல்லையா? வேற நாட்டுல இருந்திங்கன இப்படி வாங்க விசால்லாம் வேண்டாம்! டாஸ்மாக் ல நாங்களே வாங்கி தரோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அடிக்கடி தான் இருப்பதைச் சுப்பிரமணிய சாமியார் இப்படி இடையிடையே அறிக்கை விடுவதன் மூலம் மக்களுக்குக் காட்டிக் கொள்ள முனைகின்றார்.

சுப்பிரமணிய சாமி.

ஒரு மதி கெட்ட ஆசாமி. :huh:)

இவருக்கு நாக்கில் சனி.

:huh::o:lol:

இந்திய அரசியலில் மட்டுமல்ல உலக அரசியலில் இருக்கும் மிகப்பெரும் கோமாளி இதுதான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மத்திய அமைச்சர் குடும்பத்தால் 'தீட்டு':

குருவாயூர் கோவிலில் தண்ணீர் தெளித்து பூஜை!

மே 21, 2007 RSS

சென்னை: மத்திய அமைச்சர் வயலார் ரவியின் மகன் மற்றும் அவரது கிறிஸ்தவ மனைவி வந்து சென்றதால் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் பரிகாரப் பூஜை நடத்தப்பட்டது. இது கேரளாவில் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

வெளிநாடு வாழ் இந்தியர் விவகாரத் துறை அமைச்சராக இருப்பவர் வயலார் ரவி. இவரது மருமகள் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்.

ரவி, அவரது மகன் ரவிகிருஷ்ணா, மனைவி மற்றும் அவரது பேரன் ஆகியோர் வெள்ளிக்கிழமை குருவாயூர் கிருஷ்ணர் கோவிலுக்குச் சென்றனர். அங்கு ரவியின் பேரனுக்கு சோறு ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ரவியின் மருமகள் இந்து சமயத்தவர் அல்லாத காரணத்தால், அவர்கள் சென்ற பின்னர் கோவிலில் பரிகார பூஜை நடத்தப்பட்டு, கோவில் சுத்தப்படுத்தப்பட்டதாக செய்திகள் வெளியானது.

தூய்மைப்படுத்தும் பூஜை நடந்ததை கோவில் நிர்வாகம் உறுதி செய்துள்ளது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதுகுறித்து வயலார் ரவி பெரும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இது தேவையில்லாத ஒன்று. பக்தர்கள் கோவிலுக்கு வரக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை. இது எனக்கு மிகவும் வேதனையைக் கொடுத்துள்ளது. என்னையும், எனது குடும்பத்தையும், எனது பரம்பரையையும் கோவில் நிர்வாகம் அவமானப்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் எனது ஒட்டுமொத்த பரம்பரையே கோவிலுக்கு வரக் கூடாது என்று கூறுவது போல உள்ளது என்றார்.

ரவிகிருஷ்ணா இதுகுறித்துக் கூறுகையில், இந்த சம்பவம் அவசியமற்றது. இதுகுறித்து பொது விவாதம் நடத்தப்பட வேண்டும். அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்து யோசித்து வருகிறேன் என்றார்.

-thatstamil.com

சுப்பிரமணிய சுவாமிகள் ஏன் இப்படியான விடையங்களுக்குக் கருத்துக் கூறுவதில்லை?

- சுப்பிரமணிய சுவாமி தும்மியதைக்கூட பதிவு செய்வதேன்?

இருபத்தொராம் நூற்றாணடிலும் தொடரப்படும் இவ்வகை மானுடக் கொடுமை, கேவலம்.... செய்தியாக வரும்போதே வெட்கப்படவைக்கிறது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவுக்குள்ள இருந்த வீரப்பனையே பிடிக்க வக்கில்லாமல் இருந்தவை.. எங்கடை தலைவரை கைது செய்யப்போகினமாம்..! கோமாளிகள்!

வக்கில்லாமாலா வீரப்பனை சுட்டார்கள் தமிழக போலிசார்,

வக்கில்லாமாலா வீரப்பனை சுட்டார்கள் தமிழக போலிசார்,

காட்டிற்குப் போய் போரிட்டு வீரப்பனைச் சுடவில்லை. நோயாளியான அவனை மனிதாபிமானமின்றி நரித்தனமாக சுற்றிவர நின்று சுட்டார்கள்.

வீரப்பனை சுட்டதாக மார்தட்டிக்கொள்ளும் நீங்கள், அவனை ஏன் உயிரோடு பிடிக்க முடிந்தும் பிடிக்கவில்லை என்பதற்குப் பதிலளியுங்கள்.

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை நாடு கடத்திக் கொண்டு வர காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முயற்சி எடுக்காதது ஏன் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி கேட்டுள்ளார்.

ஒரு விசாரணை என வந்தால் அதை முறைப்படி நடத்துவதாயின் முதலில் சம்பவங்கள் நடைபெற்ற ஒழுங்கில் விசாரசணை நடைபெறவேண்டும். அதாவது chronological order இல்.

எனவே, chronological order இன் படி பார்த்தால் முதலில், பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தினால் கொல்லப்பட்டதற்கும், காயப்படுத்தப்பட்டு, அங்கவீனமாக்கப்பட்டதற்கும், அப்பாவி தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதற்கும், கோடிக்கணக்கான பெறுமதியுடைய அப்பாவி தமிழ் மக்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டதற்கும், எமது நிம்ம்மதியான வாழ்வு குலைக்கப்பட்டதற்கும் காரணமான இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் அவரது சகாக்களும் முதலில் விசாரிக்கப்பட வேண்டும். சர்வதேச நீதிமன்றத்தில் இதற்காக ஒரு வழக்கு நடாத்தப்பட்டால் இதற்கு என்னால் கூட நேரடி சாட்சியம் ஆதாரங்களுடன் சொல்ல முடியும்.

வக்கில்லாமாலா வீரப்பனை சுட்டார்கள் தமிழக போலிசார்,

சுட்டார்களா!!! :lol:

ஒரு தலைமுறைக்குமேல் காட்டில பதுங்கி வாழ்ந்த வீரப்பன், சர்க்கரை வியாதியில் இருந்து அத்தனை வியாதிகளும் அவனை கொண்றபின். செத்த பாம்பை அடித்திருக்கிறார்கள்.

வாழ்க உமது வீரம். :angry:

Rajiv1987hit.jpg

முற்றிலும் இலங்கை மக்களால் அடிக்கப்பட்டு அவமானபடுத்தப்பட்டு கடைசியில் சிதைக்கப்பட்ட ஒரு மாபெறும் மனிதர் ராஜிவ் காந்தி. ராஜிவ் தன் ரத்தத்தின் மூலம் தமிழக மக்களுக்கு செய்துவிட்டு போன ஒரு எச்சரிக்கைதான்,

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறு ராஜிவிற்கு அடித்தவர்கள் சிங்களப் படையினர். முக்கியமாகச் சிங்களக்கடற்படை வீரன் தான் இவ்வாறு ராஜிவ் தலையில் அடித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஙரழவந யெஅநஸ்ரீ'சஅளயஉhiவாய' னயவநஸ்ரீ'ஆயல 22 2007இ 09:24 யுஆ' pழளவஸ்ரீ'305647'ஸ

வக்கில்லாமாலா வீரப்பனை சுட்டார்கள் தமிழக போலிசார்இ

ஜஃஙரழவநஸ

வீரப்பனை எப்படிச்சடடார்கள் ஏன் சுட்டார்கள் என்ற கதை தெரிந்தும் நீங்கள் இப்படி வீறாப்பு கதைக்கக் கூடாது

இந்தியனாக இருப்பதில் மகிழுங்கள் தப்பில்லை

நீதி நியாயம் உண்மையை உணருங்கள் கதையுங்கள்

நான் ஆட்டைக்கு வரல.

சிங்களவர்கள் அடி கொடுத்தார்கள் ஆனால் அவர் சிதைத்தது தமிழர்களைத்தான் அதனால் அவர் தன்னைதானே சிதைத்தார்

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஆட்டைக்கு வரல.

ஆட்டை என்ற சொல்லை வடிவேலும் பாவிக்கின்றதைப் பார்த்துள்ளோம். ஆட்டை என்றால் என்ன? :lol:

ஆட்டை=விளையாட்டு

சில சமயம் வில்லங்கத்தில் இருந்து தப்ப இப்படி பாவிப்பது வழக்கு

வரலாறு தெரியுமா.

ராசிவ் காந்தியை முதலில் கொல்ல முயன்றது சிங்கள ராணுவமே. அதுவும் ராணுவ அணிவகுப்பில். இந்த தக்குதலில் காயங்களுடன் தப்பினார்.

வீரப்பனை எப்படிச்சடடார்கள் ஏன் சுட்டார்கள் என்ற கதை தெரிந்தும் நீங்கள் இப்படி வீறாப்பு கதைக்கக் கூடாது

இந்தியனாக இருப்பதில் மகிழுங்கள் தப்பில்லை

நீதி நியாயம் உண்மையை உணருங்கள் கதையுங்கள்

கத்தியை எடுத்தவன் கத்தியாலே சாவான் என்ப்துபோல வீரப்பனின் முடிவு அமைந்து இருக்கிறது. ஒரு கொலைகாரன் கொள்ளைக்காரன் எப்படி செத்தால் என்ன ஒரு பிரச்சனை ஒழிந்தது அவ்வளவுதான். வீரப்பன் போன்ற கொலைகாரர்களால் தமிழ நாட்டு தமிழர்களுக்கு பெறிய அவப்பெயறை ஏற்ப்படுத்தி வந்தாவர்கள்.

முற்றிலும் இலங்கை மக்களால் அடிக்கப்பட்டு அவமானபடுத்தப்பட்டு கடைசியில் சிதைக்கப்பட்ட ஒரு மாபெறும் மனிதர் ராஜிவ் காந்தி. ராஜிவ் தன் ரத்தத்தின் மூலம் தமிழக மக்களுக்கு செய்துவிட்டு போன ஒரு எச்சரிக்கைதான்,

மாபெரும் இந்திய தலைவி இந்திரா காந்தி இறந்தபோது, இத்தாலியிலிருந்து ராஜீவ் காந்தியைக் கொண்டு வந்து பிரதமராக்கினார்கள். இந்திரா காந்தியின் மகன் என்பதைத் தவிர 'மாபெரும் மனிதர்' என்பதற்கு தகுதியுடையவருமல்ல, சாதனையாளருமல்ல.

(எத்தனை தடவைதான் இந்தப் படத்தைப் பிரசுரிப்பீர்கள். அடிக்கடி பார்க்க வேண்டுமானால் வீட்டில் பிரேம் போட்டு வைத்துப் பார்க்க வேண்டியதுதானே.)

...ஒரு கொலைகாரன் கொள்ளைக்காரன் எப்படி செத்தால் என்ன ஒரு பிரச்சனை ஒழிந்தது அவ்வளவுதான்....

ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களின் சாவுக்குக் காரணமானவர் ராஜீவ் காந்தி.

கத்தியை எடுத்தவன் கத்தியாலே சாவான் என்ப்துபோல வீரப்பனின் முடிவு அமைந்து இருக்கிறது.

ஆகா தத்துவம் என் 00000 :lol::lol::huh:

ஆமா நீங்க எப்பதான் தமிழ் கத்துக்கபோறீங்க. சொல்கிற கருத்தை பிழையில்லாமல் சொல்லலாமே. :angry:

  • கருத்துக்கள உறவுகள்

கத்தியை எடுத்தவன் கத்தியாலே சாவான் என்ப்துபோல வீரப்பனின் முடிவு அமைந்து இருக்கிறது. ஒரு கொலைகாரன் கொள்ளைக்காரன் எப்படி செத்தால் என்ன ஒரு பிரச்சனை ஒழிந்தது அவ்வளவுதான். வீரப்பன் போன்ற கொலைகாரர்களால் தமிழ நாட்டு தமிழர்களுக்கு பெறிய அவப்பெயறை ஏற்ப்படுத்தி வந்தாவர்கள்.

கத்தி எடுத்தவன் கத்தியால் சாகாமலும் போகலாம்..! உதாரணம் ஜெ. ஆர். ஜெயவர்த்தன

கத்தி எடுக்காதவரும் கத்தியால் சாகலாம்.. உதாரணம் மகாத்மா காந்தி..

இதிலிருந்து தெரிவது, இந்தப் பழமொழியில் அர்த்தமில்லை.. :lol:

கத்தி எடுத்தவன் கத்தியால் சாகாமலும் போகலாம்..! உதாரணம் ஜெ. ஆர். ஜெயவர்த்தன

கத்தி எடுக்காதவரும் கத்தியால் சாகலாம்.. உதாரணம் மகாத்மா காந்தி..

இதிலிருந்து தெரிவது, இந்தப் பழமொழியில் அர்த்தமில்லை.. :huh:

:lol::lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.