Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பத்துப்பேரின்  இருபது பிரதிநிதிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பத்துப்பேரின்  இருபது பிரதிநிதிகள்!

இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் அரசியல் போட்டிகள் மீண்டும் சூடு பிடித்துள்ளன. தெற்கைவிட வடகிழக்கில் சூடு அதிகம் என்று சொல்லலாம்.

இவர்கள் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும்முறை சரிதானா? முறையான சனநாயக முறையில் வேட்பாளர்களைத் தெரிவு செய்யத் பிரதான தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்குத் தைரியம் இருக்கிறதா?

ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடத் தகுதியுள்ள நபர்களிடையே உட்கட்சித் தேர்தல் மூலம் அதாவது கட்சி உறுப்பினர்களை வாக்களிப்பின்மூலம் தகுதிவாய்ந்த ஒருவரை ஒவ்வொரு தொகுதிக்கும் தெரிவு செய்ய முடியாதா?. 

தேர்தலில் போட்டியிட அடிப்படைத் தகுதிகளாக கல்வித்தகமை, குற்றப்பின்னணி இன்மை, போட்டியிட விரும்பும் தொகுதியை நிரந்தர வதிவிடமாக கொண்டிருக்க வேண்டும் அல்லது குறைந்தது ஐந்து வருடங்கள் குறித்த தொகுதியில் சமூக சேவையாற்றி இருக்கவேண்டும் போன்ற தகுதிகளைக் கட்டாயமாகினாலே ஓரளவுக்கு தகுதியானவர்களைத் தேர்தலில் நிறுத்த முடியும். ஆனாலும் இவர்கள் அதைச் செய்யமாட்டார்கள்.

ஆனால் தகுதியானவர்கள் தெரிவாகும்போதுதானே மக்களும் வாக்களிக்க முன்வருவார்கள். மக்களுக்காக தன்னலமற்று பணியாற்றும் ஆட்கள் தெரிவாகாதவரை யார் போட்டியிட்டும் தமிழ் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை.

தற்போது நடப்பது என்ன? பதினோரு வீதம் மட்டுமே (அதிலும் எழுபது வீதமே வடக்குக் கிழக்கில் உள்ளது) உள்ள தமிழர்களின் சார்பாக பாராளுமன்றம் செல்ல EPDP, TNA, TMK, TNPF என்று நான்கு தமிழ்க்கட்சிகள் மல்லுக் கட்டுகின்றன! கிழக்கில பிள்ளையான் கட்சி வேறு!

தமக்கு விருப்பமானவர்களை தனிச்சையாக வேட்பாளர் ஆக்குகிறார்கள். மறுபுறம் சமூகத்தில் ஏற்கனவே பிரபலமானவர்களை வேட்பாளர்களாக்கும் வேட்டையும் நடக்கிறது. இதற்குள் ஒவ்வொரு கட்சியும் தாங்களே தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று உரிமைகோரல் வேறு!!

கட்சித் தலைமை அல்லது தளபதிகளின் விருப்பு வெறுப்புக்கு அமையவே கட்சிகள் அதன் தலைமைகளால் வழிநடத்தப்படுவதும் வேட்பாளர்களை தெரிவும், கட்சிப் பதவி வழங்குவதும் நடந்து வருகிறது. 

குறைந்த பட்ச சனநாயகம் தமிழ் கட்சிகளிடம் இல்லை.

தலைவர்களின் நிலைப்பாடு இப்படியிருக்க, கட்சி உறுப்பினர்களும் கட்சி சாரா தேசியம் பேசுவோரும் நடந்து கொள்ளும் முறை இன்னும் கேவலமாக இருக்கிறது.
(தொடரும்....)
 

 

  • கருத்துக்கள உறவுகள்

6-E16-A7-CC-20-B7-4-B19-B3-C6-58-A956-B0

  • கருத்துக்கள உறவுகள்

ஓராயிரம் கருத்தால் சொல்ல முடியாததை ஒரு கருத்துப் படம் சொல்லி விடுகின்றது.... சூப்பர் கவி அருணாசலம்.படத்துடன் விறகும் கயிற்றின்முறுக்கும் தும்புகளும் சொல்லி வேல இல்ல.....!   👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பத்துப் பேரின் இருபது பிரதிநிதிகள்! – பகுதி 2 (களத்தில் பெண் வேட்பாளர்கள்)

குறைந்தபட்ச சனநாயகம் என்பது வடக்கு கிழக்கின் தமிழ் கட்சிகளிடம் இல்லை. கட்சித் தலைவர்களின் நிலைப்பாடு இப்படியிருக்க, கட்சி உறுப்பினர்களும், கட்சி சாராத, பொதுவெளியில் தேசியம் பேசுவோர் சிலரும் நடந்து கொள்ளும் முறை இன்னும் கேவலமாக இருக்கிறது.

ஒருபுறம் சாதனை செய்யும் பெண்களை “சிங்கப் பெண்ணே” என்று வாழ்த்துவதும் மறுபுறம் சமூக, அரசியல் களத்திற்கு வரும் பெண்களை “அசிங்கப் பெண்”ணாக்குவதுமாக தமது ஆணாதிக்க திமிரை நன்றாகவே காட்டுகிறார்கள்.

குறித்த ஒரு கட்சி சார்பாக நிற்பதால்தான் எதிர்க்கிறார்கள் என்றோ அந்தப் பெண்களுக்கு வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சனைகள் எதுவுமே தெரியாது என்பதால் எதிர்கிறார்கள் என்றோ நீங்கள் நினைத்தால், அது உண்மையல்ல. கடந்த காலங்களிலும்  கொழும்பிலிருந்து  பல வேட்பாளர்கள் வடக்கில் களம் இறக்கப்பட்டுள்ளார்கள். 

இன்னமும் பெண்களை ஆணுக்கு இரண்டாம் நிலையில் வைத்து நோக்குவதும், அவர்களை சகமனிதர்களாகவோ  மற்றும் சமமனிதர்களாக ஏற்க விரும்பாததும்தான் இந்த எதிர்ப்புக்கு முக்கிய காரணங்களா என்றே நினைக்க வேண்டியுள்ளது. 
போரில் மட்டுமல்ல அரசியலிலும் எதிரியின் பக்கம் உள்ள பெண்களே இவர்களுக்கு இலகு-இலக்காக இருக்கிறார்கள். 

சமூகப் பணிகளிலும் போராட்டங்களிலும் ஏனைய பொதுவாழ்க்கையிலும் ஈடுபடும் பெண்களை இழிவுபடுத்துதல், ஆணாதிக்கத்தில் ஊறிப்போன தமிழ்ச் சமூகத்துக்கு கைவந்த கலைதானே?

தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிடும் இரு பெண்களான அம்பிகா சற்குணநாதன் மற்றும் நளினி ரட்ணராஜா ஆகிய இருவரும் பலரும் சொல்வதுபோல கூட்டமைப்பின் பின்வாசல் வழியாக சுமந்திரனின் செல்வாக்கால் அரசியலுக்கு வந்திருக்கலாம். அவர்களின் தகுதி போததாக இருக்கலாம். 

ஆனால் அது அவர்களின் உட்கட்சிப் பிரச்சனை. அதை அவர்களே தீர்த்துக் கொள்ள வேண்டும். பகுதி ஒன்றில் நான் குறிப்பிட்டது போன்று சனநாயகத் தெரிவின் மூலமே கட்சிகள் வேட்பாளர்களைத் தெரிவு செய்யும்முறை கொண்டு வரப்படவேண்டும். 

அரசியலுக்கு வருபவர்கள் பொதுவாழ்க்கைக்கு வரும்போதோ விமர்சனங்களைத் தவிர்க்க முடியாது. ஆனால் அந்தப் பெண்களின் மீதான தனிநபர் தாக்குதல் மிகவும் கண்டிக்கத் தக்கது. தமிழர்களாகிய நாமே சக தமிழ் பெண்ணின் நடத்தையை கேள்விக்கு உள்ளாக்குவதும் அவமானப்படுத்தும் மிகவும் கீழ்த்தரமான அரசியல் உத்தி மட்டுமே.

சுமந்திரனின் செல்வாக்கால் உள்ளே வந்தவர்கள் என்பதால் அவர்களை சுமந்திரனோடு இணைத்துப் பேசுவது சரிதானா? நளினி என்பவர் குடிகாரி என்றும் பரப்புரை செய்கிறார்கள். அப்படிச் சொல்லும் இவர்கள்தான் நளினிக்கு தினமும் வார்த்துக் கொடுத்தார்களா? இதுவே தங்களின் நெருங்கிய உறவினரான பெண்ணொருவர் தேர்தலில் போட்டியிட முன்வந்தால் அவரையும் இப்படிதான் விமர்சிப்பார்களா? 

“தமிழ்தேசத்தில் பெண்களுக்கு எதிரான சகல அடக்குமுறைகளும் அடியோடு இல்லாமல் செய்வதன் ஊடாகவே #பெண்_சமத்துவத்தை பேணிப் பாதுகாக்க முடியும். #கஜேந்திரகுமார்_பொன்னம்பலம்.”

இவ்வாறு பெண் சமத்துவம் பேசிய கஜேந்திர குமாருக்கு சாமரம் வீசும் சிலர்தான் குறைந்தபட்ச அரசியல் நாகரீகமோ, கண்ணியமோ இன்றி நேரில் பார்த்தவர்கள் போல அப்பெண்களை இழிவுபடுத்தி பேசிக் கொண்டிருக்கிறார்கள். கஜேந்திரகுமார் தனது உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இது தவறென்று அறிவுறுத்தினாரா என்று தெரியவில்லை.

ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான நடத்தையை விமர்சிப்பது அரசியல் நாகரீகமும் இல்லை, ஒரு பண்பட்ட சமூகத்தின் வெளிப்பாடும் இல்லை. 

தமிழ் தேசியத்தை ஆதரிப்பதாகவும், தமிழ் மண்ணை தம் தாயாக நினைப்பதாகவும் சொல்லிக் கொள்ளும் சில மறத்தமிழர்களும் தம்மை சிறந்த அரசியல் விமர்சகர்கள் என்று எண்ணிக்கொள்ளும் சிலரும் இவ்வாறான தனிநபர் தாக்குதலில்தான் மும்முரமாக இருக்கிறார்கள். 
இவர்களால், தாம் பொதுவெளியில் எழுதும் பேசும் விடயங்களை தம் தாயிடமோ, மனைவியிடமோ, மகளிடமோ காட்டித் தமது பதிவைப்பற்றிக் கலந்துரையாட முடியுமா?  

பொது வாழ்க்கைக்கு வரும் எவருக்குமே தனிநபர் ஒழுக்கம் அவசியமானது. ஆனால் அது பெண்கள்மீது மட்டும் திணிக்கப்படுவது தவறானது. இந்த விமர்சகர்கள் ஏன் கடந்தகாலங்களில் ஆண் வேட்பாளர்களை இவ்வாறு விமர்சிக்கவில்லை? 

ஆண்கள் எதுவும் செய்யலாம், பெண்கள்மட்டும்தான் இவர்கள் கிழித்த கோட்டுக்குள் நிற்க வேண்டும் என்று நினைக்கிறார்களா? 

இவர்களை விமர்சிக்க அரசியல் தொடர்பான வேறு விடயங்களே இல்லையா? இல்லாமல் இல்லை. ஆனால் அவர்கள் அதைப்பற்றி பேசமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் முட்டுக்கொடுக்கும் மற்றக் கட்சியின் வேட்பாளர்களுக்கும் அதே அரசியல் பலவீனங்கள் உள்ளன. அதனால்தான் அதைப்பற்றி வாய் திறப்பதில்லை. 

இதற்கு முன்னரும் விஜயகலா மகேஸ்வரனைப் பற்றியும் இவ்வாறு அவதூறு பேசியிருக்கிறார்கள். ஆனந்தியையும் கேவலப்படுத்த முயன்று இருக்கிறார்கள். ஆகவே எம்மில் சிலருக்கு இதுவொன்றும் புதியதல்ல. நளினி ரட்ணராஜா இவ்வாறு  தாக்கப்படுவது இது முதல் தடவையல்ல. 2018உள்ளூராட்சி தேர்தலின்போது அவர்மீதான அவதூறுத்  தாக்குதல், தொலைபேசி மிரட்டல் என்பன நடைபெற்றன. 

பேச்சிலும் செயலிலும் அடிப்படை நாகரீகமும் பண்பும் இல்லாத நிலையில், நாம் பல ஆயிரம் வருட வரலாறு கொண்டவர்கள், உலகுக்கே நாகரீகம் கற்றுக் கொடுத்தவர்கள் என்று சொல்லிக்கொண்டே எம்மவர்களையே எம் காலில் மிதித்தபடிதான் தமிழர் அரசியல் செய்ய விளைகிறார்கள். 

இவர்களின் இன்னொரு ஆயுதம்தான் “துரோகிப் பட்டம்”.  அதைப்பற்றியும் விரிவாகப் பேசுவோம்!..........
 
(தொடரும்....)

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.