Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

''கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கலாம்..!'' - சார்க் நாடுகளுக்கு மோடி அழைப்பு

Featured Replies

பிராந்திய நலனுக்கான தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு ஆங்கிலத்தில் சுருக்கமாக சார்க் என்று அழைக்கப்படுகிறது. இதில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியவை உறுப்பினர்களாக உள்ளனர்.

சார்க் நாடுகள் ஒன்றிணைந்து கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க வேண்டும் என்றும், கொரோனாவை எதிர்கொள்வது தொடர்பாக திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது-

சார்க் நாடுகள் தங்களது குடிமக்களின் உடல்நிலை குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆலோசனை நடத்தலாம். ஒட்டுமொத்த உலகமே கொரோனா வைரசுக்கு எதிராக போராடி வருகிறது. பல்வேறு அமைப்புகள், அரசுகள் சேர்ந்து முயற்சித்தால், கொரோனாவுக்கு எதிராக நம்மால் சிறப்பாக செயல்பட முடியும். 

I would like to propose that the leadership of SAARC nations chalk out a strong strategy to fight Coronavirus.

கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கான அனைத்து திட்டங்களையும் வகுக்க வேண்டும் என்று சார்க் நாடுகளின் தலைவர்களை கேட்டுக் கொள்கிறேன். நாம் வீடியோ கான்பரன்சிங் வழியே ஆலோசனை நடத்தலாம். இது நம் குடிமக்களின் உடல்நிலையில் முன்னேற்றத்தை ஏற்படுத்த உதவும். 

Our planet is battling the COVID-19 Novel Coronavirus. At various levels, governments and people are trying their best to combat it.

South Asia, which is home to a significant number of the global population should leave no stone unturned to ensure our people are healthy.

நம்முடைய செயல்பாடு மற்ற நாடுகளுக்கு உதாரணமாக அமைவதோடு, பிரச்னைக்கு தீர்வை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கும். 

 

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

பிராந்திய நலனுக்கான தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு ஆங்கிலத்தில் சுருக்கமாக சார்க் என்று அழைக்கப்படுகிறது. இதில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகியவை உறுப்பினர்களாக உள்ளனர்.

https://www.ndtv.com/tamil/coronavirus-pm-narendra-modi-pitches-saarc-leaders-video-call-as-india-pak-battle-coronavirus-2194382?pfrom=home-topscroll

  • தொடங்கியவர்

கொரோனாவை தடுக்க அவசரகால நிதியாக இந்தியா சார்பில் ரூ.74 கோடி வழங்கப்படும்; சார்க் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவிப்பு

 

கொரோனாவை தடுக்க அவசரகால நிதியாக இந்தியா சார்பில் 10 மில்லியன் டாலர் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சீனாவில் இருந்து தொடங்கிய கோவிட்-19 கொரோனா வைரஸ்  உலக முழுவதும் 127 நாடுகளுக்கு பரவி இருக்கிறது. இதுவரை லட்சக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்வதேச அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 6,000 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பது பற்றி ஆலோசனை நடத்த தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பான சார்க் நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக அழைப்பு விடுத்திருந்தார். அழைப்பை ஏற்ற சார்க் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

சார்க் நாடுகளின் தலைவர்களுடன் காணொலி காட்சி மூலம் பேசிய பிரதமர் மோடி, கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்கு அவசர நிதியாக இந்தியா சார்பில் 10 மில்லியன் டாலர் நிதி வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்திய மதிப்பில் ரூ.74 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பேசிய பிரதமர் மோடி, முன்னோக்கிப் பார்க்கும்போது, நமது தெற்காசிய பிராந்தியத்தில் தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஆராய்ச்சியை ஒருங்கிணைக்க ஒரு பொதுவான ஆராய்ச்சி தளத்தை உருவாக்க முடியும். இதுபோன்ற ஒரு பயிற்சியை ஒருங்கிணைக்க இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உதவ முடியும் என்றார்.

சாத்தியமான வைரஸ் கேரியர்களையும் அவர்கள் தொடர்பு கொண்ட நபர்களையும் சிறப்பாகக் கண்டறிய ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு போர்ட்டலை அமைத்துள்ளோம். இந்த நோய் கண்காணிப்பு மென்பொருளை சார்க் கூட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம், இதைப் பயன்படுத்துவதற்கான பயிற்சியாக இருக்கும். சோதனை கருவிகள் மற்றும் பிற உபகரணங்களுடன், இந்தியாவில் உள்ள மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களின் விரைவான மறுமொழி குழுவை நாங்கள் கூட்டி வருகிறோம். தேவைப்பட்டால், அவை உங்கள் வசம் தெரிவிக்கப்படலாம்.

எங்கள் மக்களுடன் உறவுகள் பழமையானவை, நமது சமூகங்கள் ஆழமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. எனவே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து, ஒன்றாகச் செயல்பட வேண்டும், ஒன்றாக வெற்றி பெற வேண்டும் என்றார். பல்வேறு நாடுகளில் இருந்து 1,400-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்டுள்ளோம். சார்க் நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள நிலையில், நாம்  விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கொரோனா குறித்து அச்சப்பட தேவையில்லை. நாம் அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா தாக்குதலை எதிர்கொள்வோம் என்றும் தெரிவித்தார்.

தலைவர்கள் பங்கேற்பு:

காணொலி ஆலோசனையில் பூடான் பிரதமர் லொதே ஷெரிங், மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் மொகம்மத் சோலிஹ், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா,  ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி, பாகிஸ்தான் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஜாபர் மிர்சா, சார்க் அமைப்பு நிர்வாகி உள்ளிட்டோர் பங்கேற்றனர். சார்க் அமைப்பில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், வங்கதேசம், பூடான்,  மாலத்தீவு, ஆப்கானிஸ்தான் உள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=571741

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கோ மாதா ஜூஸ் என்னாச்சு Mr. Modi jiiii 😂

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kapithan said:

அப்ப கோ மாதா ஜூஸ் என்னாச்சு Mr. Modi jiiii 😂

விடுங்க பாஸ் இப்படியான பயித்திய கூட்டம் இந்தியாவை அடுத்து வரும் 10 வருடம் ஆண்டாள் காணும் தானகவே  தமிழ்நாடு சுதந்திரம் பெற்று விடும் அப்படியே எங்களுக்கும் விடிவு வரும் .

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, பெருமாள் said:

விடுங்க பாஸ் இப்படியான பயித்திய கூட்டம் இந்தியாவை அடுத்து வரும் 10 வருடம் ஆண்டாள் காணும் தானகவே  தமிழ்நாடு சுதந்திரம் பெற்று விடும் அப்படியே எங்களுக்கும் விடிவு வரும் .

நானும் அந்த நம்பிக்கையில்தான் இருக்கிறேன்.😀

  • தொடங்கியவர்

மோடி கொடுத்தது பத்து மில்லியன்கள் அமெரிக்க டாலர்கள் 
முகநூல் நிறுவனம் கொடுத்தது இருபது மில்லியன்கள் அமெரிக்க டாலர்கள்.  

பின் குறிப்பு : ஆனால் ஆயுதம் வாங்க இந்த நாடுகள் செலவழிப்பது பில்லியன்களில் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.