Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை

March 17, 2020

gotttttta-800x533.jpg

சங்கைக்குரிய மகாநாயக்க தேரர்கள் உள்ளிட்ட மகா சங்கத்தினரின் அனுமதியுடனும், இந்து, கத்தோலிக்க, இஸ்லாமிய மற்றும் ஏனைய மதத் தலைவர்களின் அனுமதியுடனும், தாய்மார்களே, தந்தைமார்களே, பிள்ளைகளே,

நான் இன்று உங்கள் முன்னிலையில் உரையாற்றுவது கொரோனா வைரஸ் என்ற COVID -19  வைரஸ் தொடர்பாக மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிலைமைகள் பற்றி உங்களை தெளிவுபடுத்துவதற்கேயாகும்.

இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக உலகத்தின் அவதானம் செலுத்தப்பட்டதோடு, சீனாவின் வூஹான் பிரதேசத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த இலங்கை மாணவர்கள் 34பேரை இலங்கைக்கு அழைத்துவர நான் முடிவெடுத்தேன். அந்நேரம் எந்வொரு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவரும் இலங்கையில் பதிவு செய்யப்படாது இருந்தாலும், இந்த வைரஸினால் எதிர்காலத்தில் ஏற்பட முடியுமான ஆபத்தான நிலைக்கு முகங்கொடுப்பதற்காக ஜனவரி மாதம் 26ஆம் திகதி விசேட தேசிய செயலணி குழுவொன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஜனவரி மாதம் 27ஆம் திகதி இலங்கையில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவராக இலங்கைக்கு சுற்றுலாவுக்காக வருகை தந்திருந்த சீன பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டார். அவரை உடனடியான ஐடிஎச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. அவர் பெப்ரவரி 19ஆம் திகதியாகும்போது முழுமையாக குணமடைந்து இலங்கையிலிருந்து தனது நாட்டுக்கு சென்றார்.

விசேட விமானமொன்றின் மூலம் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இலங்கை மாணவர்கள் மத்தளை விமான நிலையத்தில் கண்காணிப்பு நடவடிக்கைக்குட்படுத்தப்பட்டு தியத்தலாவையில் விசேடமாக அமைக்கப்பட்ட கண்காணிப்பு நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்கள் முகாமில் 14 நாட்கள் கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி பாதுகாப்பாக தமது வீடுகளுக்கு சென்றனர். இக்காலத்தில் விமான நிலையத்தினூடாக வருகை தருபவர்களின் சுகாதார நிலைமை தொடர்பாக அடிப்படை பரிசோதனைகள் விமான நிலையத்திலேயே மேற்கொள்வதற்கும் அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பெப்ரவரி 26ஆம் திகதி தொற்றுக்குள்ளான சீன பெண் அடையாளம் காணப்பட்ட பின்னர் ஒரு மாதகாலம்வரை வேறு எந்தவொரு நோயாளி பற்றியும் அறியக் கிடைக்கவில்லை. சீனாவிற்கு வெளியே வேறு நாடுகளிலும் வைரஸின் தாக்கம் பரவியதன் காரணமாக இத்தாலி, தென்கொரியா, ஈரான் போன்ற நாடுகளிலிருந்து வருகைதரும் விமானப் பயணிகள் 14 நாட்களுக்கு கண்காணிப்புக்குட்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டது. அத்தீர்மானம் மார்ச் மாதம் 19ஆம் திகதி எடுக்கப்பட்டது. இதன்படி கந்தகாடு, மட்டக்களப்பு கண்காணிப்பு நிலையங்களுக்கு பயணிகளை உள்வாங்குதல் ஆரம்பமாகியது. இது ஆரம்பிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் இத்தாலி அல்லது கொரியாவிலிருந்து வருகை தந்த ஒரு சிலர் அதற்கு பலத்த எதிர்ப்பை தெரிவித்ததோடு கண்காணிப்பு நிலையங்களுக்கு அழைத்து செல்லும் வழியில் திரும்பிச் செல்லவும் ஒரு சிலர் முற்பட்டனர்.

மார்ச் மாதம் 11ஆம் திகதி எமக்கு கொரோனா தொற்றுக்குள்ளனா முதலாவது நபர் இலங்கையில் அடையாளம் காணப்பட்டார். அவர் இத்தாலி சுற்றுலா குழுவொன்றிற்கு வழிகாட்டக்கூடிய சுற்றுலா ஆலோசகராவார்.

கண்காணிப்பு நிலையத்தினுள் மற்றும் அதற்கு வெளியே எம்மால் மேற்கொள்ளப்படுகின்ற பரிசோதனைகளின் மூலம் மேலும் பல தொற்றுக்குள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டதோடு, தற்போது 34 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் ஜேர்மனியிலிருந்து வருகை தந்த நான்கு பேரைத் தவிர ஏனைய அனைவரும் இத்தாலியில் இருந்து வருகை தந்தவர்கள் அல்லது அவர்களுடன் தொடர்புபட்டிருந்தவர்களாக இருந்தமை மிக முக்கிய விடயமாகும்.

மார்ச் 13ஆம் திகதி முதல் தென்கொரியா, இத்தாலி மற்றும் ஈரானிலிருந்து வருகை தருபவர்களும் கண்காணிப்புக்கு உள்வாங்கப்படுவது ஆரம்பமானது.

இவற்றுள் பிரான்ஸ், ஸ்பெயின், ஜேர்மன், சுவிட்சலாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன் மற்றும் அவுஸ்திரேலியாவும் ஒன்று சேர்ந்தது.

தற்போது இங்கிலாந்து, பெல்ஜியம், நோர்வே, கனடா, கட்டார் மற்றும் பஹ்ரேன் போன்ற நாடுகளிலிருந்து வருகை தருபவர்களும் கண்காணிப்புக்குள்ளாக்கப்படுகின்றனர். நாளை முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து சுற்றுலா பயணிகளும் வருகை தருவது இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 10ஆம் திகதி கந்தகாடு மற்றும் பூனானி கண்காணிப்பு நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டது முதல் இதுவரை 16 கண்காணிப்பு நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை ஆறு மணியாகும்போது 1882 பயணிகள் இக்கண்காணிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அதில் 92 பேர் தற்போது பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எமக்கு தற்போது காணப்படும் அடிப்படை பிரச்சினை என்னவெனில் மார்ச் மாதம் 10ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு முன்னர் இரண்டு வாரங்களுக்குள் நோய்த் தொற்று ஏற்பட்டிருந்த நாடுகளிலிருந்து 2000 பேரளவில் இலங்கைக்கு வருகை தந்திருந்தமையாகும்.

தற்போது இனங்காணப்பட்டுள்ள தொற்றுக்குள்ளான 34 பேரில் 19 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பது கண்காணிப்பு நிலையங்களிலிருந்தாகும். அவர்கள் அனைவரும் இத்தாலியில் இருந்து வருகை தந்தவர்கள். ஏனையோர் கண்காணிப்பு நடவடிக்கைக்கு முன்னர் இலங்கைக்கு வருகை தந்திருந்தவர்கள் அல்லது வருகை தந்தவர்கள் மூலம் தொற்றுக்குள்ளனாவர்கள்.

நாம் கண்காணிப்பு  நடவடிக்கைகளை ஆரம்பிக்க முன்னர் மேலே குறிப்பிட்ட நாடுகளிலிருந்து வருகை தந்த அனைவரும் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களை இனங்கண்டு அவர்களின் வீடுகளிலேயே சுயகண்காணிப்புக்குட்படுத்த நாம் தீர்மானித்துள்ளோம்.

இதற்காக பொலிஸார், முப்படையினர், சுகாதார பரிசோதகர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர்களை ஈடுபடுத்துவதோடு, அவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.

ஏனைய நாடுகளிலிருந்து வருகை தந்துள்ள இலங்கையர்கள் பொறுப்புடன் செயற்படுமாறும் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

நாம் அரசாங்கத்தினால் விசேட விடுமுறையை வழங்கியதற்கான காரணம் வைரஸ் தொற்று பரவுவதை குறைப்பதற்காகவாகும். அதன் உரிய பயன்பாட்டை பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் பயணங்கள், கூட்டாக ஒன்று சேர்தல் மற்றும் விழாக்களிலிருந்து முழுமையாக ஒதுங்கிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இந்நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக இதுவரை நாம் மேற்கொண்டிருந்த செயற்பாடுகள், உங்களுக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகளை நீங்கள் பின்பற்றுவதன் மூலம் இப்பிரச்சினையை முழுமையாக கட்டுப்படுத்த எம்மால் முடியும்.

அரசாங்கம் என்ற வகையில் நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை தொடர்ந்து முன்னெடுக்க வழியமைப்பது எமது அடிப்படை பொறுப்பாகும்.

மக்களின் பல்வேறு தேவைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தலையீடு செய்ய வேண்டும்.

நாட்டில் சில மாகாணங்களில் தற்போது வரட்சி நிலவுகின்றது. அப்பிரதேச மக்களுக்கு நாம் குடிநீரைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

பல பிரதேசங்களில் சிறுபோக பயிர்ச் செய்கை நடவடிக்கைகளை ஆரம்பிக்க சேற்றுப் பசளை வழங்கப்பட வேண்டும். மேலும் பல பிரதேசங்களில் அறுவடை மேற்கொள்வதனால் அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மரக்கறிகளை உரிய நேரத்தில் கொள்வனவு செய்யாதவிடத்து மரக்கறி விவசாயிகள் பாதிக்கப்படுவர். அதேபோன்று மரக்கறிகளை தொடர்ச்சியாக சந்தைக்கு கொண்டு சேர்ப்பதும் அவசியமாகும். அதேபோல் வாழ்க்கைச் செலவையும் நாம் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது.

அரச ஊழியர்கள் கடமைகளில் ஈடுபடாதவிடத்து அவை அனைத்தும் பாதிப்புக்குள்ளாகும். அனைவரின் மீதும் அவதானத்தை செலுத்தியே நாம் தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். நவம்பர் 16ஆம் திகதி நாம் பெற்ற வெற்றியின் பின்னர் எமக்கு அதிகாரம் குறைந்த அரசாங்கம் ஒன்றை எம்மால் உருவாக்க முடிந்தது. நான் பதவிக்கு வரும்போது கடந்த அரசாங்கத்தின் மூலம் வரவுசெலவு திட்டமொன்று முன்வைக்கப்பட்டிருக்கவில்லை. நாட்டை இடைக்கால வரவுசெலவு திட்டமொன்றின் மூலமே முன்னெடுக்கப்பட்டிருந்தது. பல்வேறு அத்தியாவசிய கொடுப்பனவுகளுக்காக நிதி ஒதுக்கீடுகளுக்கு அனுமதி பெற்றிருக்கவில்லை. உரம், மருந்து வகைகள், உணவு வழங்குனர்கள் மற்றும் நிர்மாணத்துறையினருக்காக நிதி ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. நாம் இதற்காக இடைக்கால நிதி ஒதுக்கீட்டினை பெற்றுக்கொள்ள முயற்சி எடுத்தோம். அதற்கு எதிர்க்கட்சி ஒத்துழைப்பு வழங்கவில்லை. இந்நிலைமையின் கீழ் நான் உங்களுக்கு வாக்களித்த பொறுப்புக்களை நிறைவேற்ற முடியாமல் போனது. அதிகாரம் குறைந்த அரசாங்கத்தினால் இந்நிதிகளை பாராளுமன்றத்தில் முன்வைத்து அனுமதியை பெற முடியாது.

அதனால்தான் எனக்கு கிடைத்த முதல் சந்தர்ப்பத்திலேயே பாராளுமன்றத்தை கலைத்து உறுதியான புதிய அரசாங்கமொன்றை அமைப்பதற்காக தேர்தலை நடத்த உத்தேசித்தோம். பாராளுமன்றத்தை கலைத்ததுடன், அரசியலமைப்பின் மூலம் கிடைத்துள்ள அதிகாரத்திற்கமைய நான் இடைக்கால நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதியளித்தேன்.  அதன்படி அத்தியாவசிய செலவுகளுக்காக நிதிக்கொடுப்பனவுகள் வழங்க ஆரம்பித்தோம். அதனாலேயேதான் தற்போதைய அசாதாரண சூழ்நிலைக்கு முகங்கொடுப்பதற்கும் எம்மால் முடியுமாகவிருந்தது.

அதனால் தேர்தல் ஒன்றை நடத்தி புதிய நிலையான அரசாங்கம் ஒன்றை அமைத்து புதிய வரவுசெலவு திட்டமொன்றை முன்வைத்து “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் நான் உங்களுக்கு வழங்கிய வாக்கின் பிரகாரம் நிவாரணங்களை வழங்குதல், தொழில் வழங்குதல், விவசாயத்தை ஊக்குவித்தல் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். அதனால் அனுபவ முதிர்ச்சியுள்ள அரசியல்வாதியான, மக்கள் மனங்களை வெற்றிகொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் பலமான அரசாங்கத்தை உருவாக்குவதற்கு எம்மோடு ஒன்றிணையுமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.

இச்சந்தர்ப்பத்தில் எமது பொறுப்பானது அரசாங்கத்தை உரிய முறையில் நடாத்தி செல்வதாகும். எக்காரணம் கொண்டும் அரசாங்கத்தை செயலிழக்கச் செய்வதற்கு இடமளிக்க முடியாது நாம் தூரநோக்கிற்கு செயற்பட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிப்படையும். தலைவர்கள் முழுமையான நம்பிக்கையோடு செயற்பட வேண்டும். மக்களுக்குள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தக்கூடாது.

நாம் இச்சந்தர்ப்பத்தில்  நாட்டினுள் வைரஸ் உள்நுழைதல் மற்றும் அதை நாட்டிற்குள் பரவுவதற்கு உள்ள சந்தர்ப்பத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக செய்ய வேண்டியவைகளை நாம் ஏற்கனவே அடையாளம் கண்டு முன்னெடுத்திருக்கின்றோம். அதற்காக அவசியமான அதிகாரங்களை செயலணிக்கு வழங்கியுள்ளோம்.

நாம் இதற்கு முன்னரும் சவால்களுக்கு முகங்கொடுத்து வெற்றிபெற்றுள்ளோம். நாம் சவால்களுக்கு முகங்கொடுக்கத் தயார். அதற்காக எமக்கு அவசியமானது ஒற்றுமையாகும் அதனால் இச்சந்தர்ப்பத்தில் பொறுப்புடன் நடந்துகொள்ளுமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.

இதற்கிடையில் மக்களின் அன்றாட வாழ்க்கையை இலகுபடுத்துவதற்காக  அவர்களின் நுகர்வு நிலையை உறுதி செய்வதற்கு நான் உத்தேசித்துள்ளேன். அரிசி வழங்கும் நடவடிக்கைகளை ஏற்கனவே  நிலை பெறச் செய்துள்ளோம். நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தடையாக அமையாதவாறு அரச சேவைகள், வங்க நிதி நடவடிக்கைகள், போக்குவரத்து செயற்பாடுகளை குறைந்தளவிலானோரைக் கொண்டு முன்னெடுப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அனைத்து வியாபார நிலையங்களுக்கும் இன்று இரவு முதல் பருப்பு ஒரு கிலோவிற்கான அதிகபட்சம் 65 ரூபாவிற்கு விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோன்று டின் மீன் ஒன்று நூறு ரூபாவிற்கு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும் பல நிவாரணங்களை எதிர்காலத்தில் வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் வணிக நடவடிக்கைகளுக்கு பாரிய பாரமாகக் காணப்படும் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களினால் வழங்கப்பட்டுள்ள கடன்களை மீளப் பெற்றுக்கொள்ளல் 6 மாத காலத்திற்கு இடைநிறுத்துவதற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். அதேபோன்று வங்கியினால் வழங்கப்படும் பணி மூலதனம் 4% வட்டிக்கு பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு எச்சந்தர்ப்பத்திலும் பங்கம் ஏற்படாதவாறு செயற்படுவேன் என உறுதியளிக்கின்றேன் உங்களதும் எனதும் நாடு இன்று பாதுகாப்பானது.          #கொரோனா  #சீனா #இத்தாலி  #சுற்றுலாகுழு    #கண்காணிப்புநிலையங்கள்
 

http://globaltamilnews.net/2020/138533/

3 hours ago, கிருபன் said:

இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக உலகத்தின் அவதானம் செலுத்தப்பட்டதோடு, சீனாவின் வூஹான் பிரதேசத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த இலங்கை மாணவர்கள் 34பேரை இலங்கைக்கு அழைத்துவர நான் முடிவெடுத்தேன். அந்நேரம் எந்வொரு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவரும் இலங்கையில் பதிவு செய்யப்படாது இருந்தாலும், இந்த வைரஸினால் எதிர்காலத்தில் ஏற்பட முடியுமான ஆபத்தான நிலைக்கு முகங்கொடுப்பதற்காக ஜனவரி மாதம் 26ஆம் திகதி விசேட தேசிய செயலணி குழுவொன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

கோட்டாவின் பேச்சு பொறுப்பற்றது
Gavitha   / 2020 மார்ச் 18 , பி.ப. 08:39 - 0      - 18


தற்போது நாட்டிலுள்ள கொரோனா அச்சத்தையடுத்தான ஜனாதிபதியின் முதலாவது பேச்சு, பொறுப்பானதாக அமைந்திருக்கவில்லை என, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமைக் காரியாலயத்தில், இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமுள்ளது என்றும் எதிர்காலத்தில் இது இன்னும் அதிகரிக்கப்படலாம் என்றும் கூறிய அவர், இதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு, அரசாங்கத்தால் சுயமாக மாத்திரம் செயற்பட முடியாது என்றும் கூறினார்.

இதற்காக, தேசிய அளவிலாள நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தைத் தவிர்ந்த மற்றைய அரசியல் தரப்பினரையும் இணைத்துக்கொண்டு செயற்பட்டால், இதை விரைவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்று தான் நம்புவதாகவும் கூறினார்.

நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றி தற்போது சிந்திப்பதை விடுத்து, நாட்டு மக்களின் உயிரையும் சுகாதாரத்தையும் பாதுகாப்பதே, தற்போதுள்ள முக்கிய தேவையாக உள்ளது என்று கூறிய அவர், நேற்றைய தின ஜனாதிபதியின் தொலைக்காட்சி உரையாடல், பொறுப்பற்ற தன்மையாகவே காணப்பட்டது என்றும் அவர் கூறினார்.

கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்பட்டமை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி ஆகியவற்றை பற்றி மாத்திரம் உரையாடிய அவர், இறுதியில், பருப்பு, டின்மீன்களின் விலையைக் குறைப்பதாக அறிவித்தமை, தற்போதுள்ள சூழ்நிலையக்கு உகந்தது இல்லை என்றும் கூறினார்.

இதற்கிடையே பொதுத் தேர்தலின் மூலம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் ஒன்றை அமைக்கவேண்டும் என்று அவர் கூறியிருந்தார் என்றும் அச்சத்தில் இருக்கும் மக்கள், பாதுகாப்புத் துறையினர், சுகாதாரப் பிரிவினக்கு தைரியம் கொடுக்கவேண்டிய தருணத்தில், தேர்தல் பற்றி உரையாடுவது, பொறுத்தமானதாக இருக்கவில்லை என்றும் கூறினார்.

டின்மீன்கள் பல வகைகளிலும் பல கிராம், கிலோகிராம் வகைகளிலும் இருக்கும் நிலையில், எந்த டின்மீன் 100 ரூபாய்க் குவிற்பனை செய்யப்படும் என்று ஜனாதிபதி கூறினார் என்பது விளக்கமில்லாமலே உள்ளது என்று கூறிய அவரை, கொரோனா பாதிப்புக்கான தீர்வாக அன்றி, இது ஒரு பொதுத் தேர்தல் உறுதிமொழியாகவே காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய கடன்களை, 6  மாதங்களுக்கு வசூலிக்கவேண்டாம் என்று  ஜனாதிபதி கூறியுள்ளமையைக் குறிப்பிட்ட அவர், அப்படியாயின், இந்த 6 மாதத்துக்கான வாடிக்கையாளர்கள் வழங்கும் வட்டித் தொகையை, அரசாங்கம் வங்கிக்கு வழங்குமா என்றும் கேள்வியெழுப்பினார்.

கட்டுநாயக்க விமான நிலையம் வழியாகவும் துறைமுகம் வழியாகவும் மாத்திரமே, வெளிநாட்டவர்கள் உள்நுழைய முடியும் என்ற நிலையில், விமானநிலையத்தில் இருந்து, இத்தாலியர்கள் தப்பிச் சென்றுவிட்டனர் என்று கூறுகின்றமையானது, அரசாங்கத்தின் இயலாமையையே எடுத்துக் காட்டுவதாகவும் இதற்கு, அரசாங்கமே பொறுப்புக் கூறவேண்டும் என்றும் அவர் கூறினார்.  

இதேவேளை, 19ஆம் திகதி வேட்புமனுக்கள் அனைத்தும் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், தேர்தலை நடத்துவதாக இல்லையா எனும் முடிவை தேர்தல்கள் ஆணையகம் எடுத்தாலும் அவ்வாறு தேர்தல் நடத்தப்படாத பட்சத்தில், தற்போதைக்கு நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கு இந்த அரசாங்கம் விரும்பவில்லை என்று கூறிய அவர், மாறாக, நாடாளுமன்றம் இன்றி, தற்போதைக்கு நாட்டை வழிநடத்தவேண்டும் என்பதிலேயே கருத்தாக இருந்து வருவதாகவும் அவர் கூறினார்.

http://www.tamilmirror.lk/செய்திகள்/கடடவன-பசச-பறபபறறத/175-247179

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.