Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரணத்தை வெல்லுதல் பற்றிய உரையாடல். - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

மரணத்தை வெல்லுதல் பற்றிய உரையாடல்.
 
CONQUERING DEATH - A CONVERSATION
*
Image result for v. i. s. jayapalan
*
Ranjakumar Somapala S*
*
மச்சான் உனக்கும் எனக்கும் என்ன பயம். பதினாறு தானே இப்ப. அப்ப. எப்பவும்.
**
ஜெயபாலன். Jaya Palan
*
Jaya Palan Ranjakumar Somapala S மச்சான், உனக்கு என்னை தெரியும்தானே. சாவுக்கு அஞ்சினவங்களா நாங்க? என்ன ஒரு மக்கள் பிரச்சினையில போராடி சாகிற விருப்பம் நிறைவேற இன்னும் வாய்ப்பில்லாம போச்சு. மரணத்தை வெல்லுதல் என்பது அஞ்சாமல் மரணத்தோடு விளையாடுவதுதான். 
*
கொழும்பில் இராணுவத்தோடும் தலைவர்களோடும் சரி, வன்னியில் போராளிகளோடுசரி சுட்டா சுடுங்க என்றுதான் நியாயம் பேசினேன். நான் மக்கள்சார்பாக பிழைகளை சுட்டிக்காடி சண்டைபோடாத இயக்கங்களே இல்லை. இராணுவ அதிகாரிகளோடு தமிழனாகவும் பல்வேறு அமைப்புகளோடு மனிதனாகவும் நிமிர்ந்து நின்று விவாதித்திருக்கிறேன். அவற்றுள் முஸ்லிம்களதும் எல்லைக்கிராம சிங்களவரதும் பிரச்சினைகளும் அடங்கும். ஆனா கடைசிவரைக்கும் என்னை ஒருத்தரும் சுடவில்லை. என் பல்கலைக்ழக காலத்திலும் அப்படித்தான் இருந்தேன் என்பது நித்திக்கும் நிர்மலாவுக்கும் சிவலிங்கராசாவுக்கும் என் நண்பர்களுக்கும் தெரியும்.
*
ஒடுக்குமுறைக்கு எதிரான என் பணியாமையை வாழ்பவர்களுள் பசீர் சேகுதாவுத், கிங்ஸ்லி பெரரா தயா மாஸ்ட்டர். ராதேயன் கவிஞர் கருணாகரன். வாசுகி ஜெயபாலன் போன்ற பலருக்குர் தெரியும். நினைச்சுப்பார்த்தா 25க்கும் அதிகமான கொலை முயற்ச்சிகளில் தப்பித்திருக்கிறேன் என்பதை உணர்கிறேன்.
*
1984ல் அதி உயர் போராளி தலைவர் ஒருவரை உமாமகேஸ்வரனின் புலநாய்வுத்துறை தமிழ்நாடு பட்டுக்கொட்டையில் வைத்து பிடித்து இரவு சுட்டுகொல்ல வைத்திருந்தார்கள். அது உட்கொலைகள் தொடர்பாக நான்  உமாமகேஸ்வரனை விமர்சித்து பகமைபட்டிருந்த நாட்கள். அதனால் உமாமகேஸ்வரனின் புலநாய்வுப் பிரிவு தலைவர்  டம்பிங் கந்தசாமி என்னை கொல்ல சந்தர்ப்பம் பார்த்துகொண்டிருந்தார்.   அகபட்டவர் டம்பிங் கந்தசாமியின் முதல் எதிரி. தகவல் கிடைத்ததும்  டம்பிங் கந்தசாமியின் எதிர்ப்பையும் தாண்டி உமாமகேஸ்வரனின் மெய்காப்பாளர்களை தள்ளிக்கொண்டு உமாமகேஸ்வன் இருந்த பொருளாலர் மாதவன் (தற்போது பிரான்ஸ்) வீட்டு வரவேற்பறையுள்  நுளைந்தேன். உமாமகேஸ்வரனோடு சண்டைபிடித்து அந்த தலைவரை உடனே விடுதலை செய்ய வழிவகுத்தேன்.  இதனால் 1984 மே மாதத்தில் தமிழகத்திலும் இலங்கையிலும் இயக்க மோதல்களும். பலநூறு ஈழத் தமிழ் இளைஞர்கள் கொலையுண்ணும் சூழலும் தடுக்கப்பட்டது. இச்சம்பவம் 1984 மே மாதம் நடந்தது என்பதை சம்பவத்தை நேரில் பார்த்த தோழர் சிவா சின்னபொடியிடம் (Siva Sinnapodi) விசாரித்து ஞாபகப்படுத்திக் கொண்டேன். குறிப்பிட்ட  தலைவர் மேற்படி சம்பவத்தை ஒருபோதும்  மறந்துவிடவில்லை. பதிலுக்கு  எனக்கு தெரியாமல் அவரும் என்னைக் காப்பாற்றியிருக்கிறார். 
,
ரஞ்சகுமார், நான் ஒன்றும் கொரோனா வைரசுக்கு அஞ்சவில்லை. ஆனால் ஒன்று கொரோனா வைரசோடு உயிரைப் பணயம்வைத்து போராடவோ, சதுரங்கம் விளையாடவோ முடியாது. அதுதான் சோகம். ஒரு வீரமோ விழையாட்டோ இல்லாமல் சாக விருப்பம் இல்லையடா.
* ..
 
  2013ல் மரணத்தோடு சதுரங்கம் விளையாடும் கடைசி சம்பவம் நிகழ்ந்தது. திரு கோத்தபாயாவின்  ஆணையில் பயங்கரவாத தடைப் பிரிவு (ரி.ஐ.டி) அதிகாரிகள் காட்டுக்குள் வைத்து இரகசியமாக என்னை கைதுசெய்ய வடகாட்டில் காத்திருந்தனர். நான் அம்மாவின் சமாதியில் அஞ்சலிசெய்ய காரில் வடகாட்டுக்குள் நுழைந்தேன். அந்த தருணத்தில் அரை நூற்றாண்டாக அம்மா தன்னைப் பார்க்க வரும்போது வன்னிவிளான்குளம் அம்மன் கோவிலில் விளக்கு வைத்துவிட்டு வரும்படி சொல்லுவதும் நான் கிண்டல் செய்வதும் ஞாபகம் வந்தது. காரை வன்னிவிளாங்குளம் திருப்பும்படி சொன்னப்போது இருளப்போகிறது என சாரதி மறுத்தாபோதும் நான் நிர்பந்தித்து காரை திருப்பச் செய்தேன். திட்டமிட்டு வடகாடு காட்டுக்குள் காத்திருந்த பயங்கரவாத தடைப் பிரிவு அதிற்ச்சி அடைந்தது..  வன்னிவிளான்குளம் கோவிலில்  வைத்து கோத்தபாயாவின் ஆணையில் பயங்கரவாத தடைப் பிரிவு என்னை சுற்றி வழைத்தபோது நான் தெருக் கோவிலுக்கு கற்பூரம் கொழுத்தினேன். பின்னர் தடையை மீறி சற்று தூரத்தில் இருந்த பெருங்கோவிலுக்கு சென்றேன். அன்று  அஞ்சி தடையை மீறி மக்கள்கூடும்வரை காலம் கடத்துவதற்க்காக காய்நகர்த்தாமல் இருந்திருந்தால்  நான் இரகசியமாக கைதுசெய்யப்பட்டிருப்பேன்  கொல்லபட்டுமிருக்கலாம். நானோ அஞ்சாமல் வளமைபோல சுட்டால் சுடட்டுக்குமென்றுதான் கத்தி சண்டைபோட்டேன். என் சத்தத்தில் சனங்கள் நோர்வேயில் இருக்கும் வன்னியை சேர்ந்த என் மைத்துணி சோதியின் கணவன் சுந்தரலிங்கத்துக்கு “ஜெயபாலனை ஆமி பிடிச்சு வைச்சிருக்கு. ஜெயபாலன் ஆமி கொமாண்டர் மாதிரிக் கத்திறான். ஆமி தமிழர் மாதிரி பேசாம நிக்கிறாங்க என சொல்லியிருக்கிறார்கள். சுந்தரி குளோபல் தம்ழ் ரேடியோ குருவுக்கும் வேறு பத்திரிகையாளர்களுக்கும் தகவல் தந்திருக்கிறான். அடுத்த சில நிமிடங்களில் எங்கள் இழுபறி ஓயமுன்னமே பி.பி.சி, சி.என்.என் போன்ற சர்வதேச ஊடகங்களில் சேதி ழுத்தில் ஓடியிருக்கு. கொழும்பு பயங்கரவாத தடை பிரிவில் இருந்து திகைப்புடன் “என்ன நடக்குது” என பதற்றத்துடன் கேட்டபிந்தான் நான் உயிரை பணயம் வைத்து ஆடிய சூதாட்டத்தில் எப்போதும்போல அப்போதும் வென்றதை உணர்ந்தேன்....
*
 
..சாவுக்கு அஞ்சியிருந்தா சின்ன வயசில் சாதி எதிர் வன்முறைகளின்போதே வெள்ளாள சண்டியர்களால் கொல்லப்பட்டிருப்பேனடா. இயமனோடு சூதாடுவது எப்பவும் பிடிக்கும். மச்சான், தாய்மண்ணில் சுடப்பட்டு இறப்பதுதான் எப்பவும் என் விருப்பத் தெரிவு. மச்சான் எனக்கு கொரோனா வந்தாலும் தலைபணியாமல் புன்முறுவலோடுதான் கண்மூடுவேனடா.

 

 

 

 

Edited by poet

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ் இணைய நிர்வாகத்துக்கு அன்பான வேண்டுகோள். மேற்படி உரையில் சிறு எடிற்றிங் செய்ய வேண்டியுள்ளதால் தயவுசெய்து எடிற்றிங் தெரிவை திறக்கும்படி விண்ணப்பிக்கின்றேன். - வ.ஐ.ச.ஜெயபாலன்

  • கருத்துக்கள உறவுகள்
On 3/20/2020 at 6:02 AM, poet said:
சாவுக்கு அஞ்சியிருந்தா சின்ன வயசில் சாதி எதிர் வன்முறைகளின்போதே வெள்ளாள சண்டியர்களால் கொல்லப்பட்டிருப்பேனடா. இயமனோடு சூதாடுவது எப்பவும் பிடிக்கும். மச்சான், தாய்மண்ணில் சுடப்பட்டு இறப்பதுதான் எப்பவும் என் விருப்பத் தெரிவு. மச்சான் எனக்கு கொரோனா வந்தாலும் தலைபணியாமல் புன்முறுவலோடுதான் கண்மூடுவேனடா.

 

வாழும் வரைகாதல் செய்து 

மரணத்தை வென்ற கவிஞ்ஞன் உமக்கு 

சாவுவருமோடா 

பண்டாரவன்னியன் படை நடந்த காடு 

பணியாது ஒரு போதும் 

என்று பாடிய உனக்கு ஏதுசாவு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.