Jump to content

அத்தான் என்னத்தான்..!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

அத்தான்..என்னத்தான்..!

 

IhO81d.gif

 

"கொரானா" தொற்றை தவிர்க்க உலகமெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வீட்டில் அடைந்து கிடக்கும் குடும்பஸ்தர்கள், மனைவியை கவர பின்வரும் அருமையான யுக்திகளை கையாண்டால், எப்பொழுதும் இன்பமே..!

21 வாழ்வியல் சூத்திரங்கள்.

1. வீடு மனைவியின் அதிகார வரம்பிற்குட்பட்டது. அங்கு நீங்கள் அதிகாரம் செலுத்த முயலாதீர்கள். கிட்டாதாயின் சட்டென மற.

2.எப்போதும் அடக்கத்தை கடைப்பிடியுங்கள். அடங்காமை ஆரிருள் உய்த்து விடும்.

3.வீடு என்பது நீங்கள் தங்குவதற்கு விசா பெற்றுள்ள இடம். குடியுரிமை பெற முயற்சிக்காதீர்கள். வினாச காலம் விபரீத புத்தி.

4.உங்கள் அன்றாட கடன்களையும் கடமைகளையும் அனுமதி பெற்று கைக்கொள்ளுங்கள். அனுமதி ஒரு வெகுமதி.

5.உணவும் பானங்களும் உங்களுக்கு உகந்த நேரத்தில் உடனடியாக கிடைக்க வேண்டும் என்று  எப்போதும் நினைத்து விடாதீர்கள். கிடைக்கும் நேரத்தில் மறக்காமல்  கடவுளுக்கு நன்றி செலுத்துங்கள். ஆசைப் பட்டால் அவஸ்தை.

6. சும்மா இருக்குறதுக்கு ஒட்டடை அடிக்கலாமுள்ள என்ற கேள்வி வரும்முன் ஒட்டடை அடித்து விடுங்கள். இப்போது நீங்கள் மதிப்புயர்வுக்கான முதல் கட்டத்தை நிறைவு செய்து விட்டீர்கள். முந்தினால் முதலுக்கு மோசமில்லை.

7. சும்மா இருக்குறதுக்கு ஃபேன் துடைக்கலாமுள்ள என்ற கேள்வி வரும்முன் ஃபேன் துடைக்க ஆரம்பியுங்கள். ஏங்க ஜாக்கிரைதைங்க, பாத்து க்ளீன் பண்ணுங்க என்று கரிசன வாசகம் உங்கள் காதுகளை எட்டும்.  இப்போது நீங்கள் மதிப்புயர்வுக்கான இரண்டாவது  கட்டத்தை நிறைவு செய்து விட்டீர்கள். சுத்தம் சோறு போடும்.

8. சும்மா இருக்குறதுக்கு அந்த பாத்ரூமை க்ளீன் பண்ணலாமுள்ள என்ற கேள்வி வரும்முன் பாத்ரூம் க்ளீன் பண்ண ஆரம்பியுங்கள். ஏங்க இதையெல்லாம் நீங்க பண்றீங்க, வேலையாள் வச்சி பண்ணிக்கலாங்க  என்று கரிசன வாசகம் உங்கள் காதுகளை எட்டும்.  இப்போது நீங்கள் மதிப்புயர்வுக்கான மூன்றாவது  கட்டத்தை நிறைவு செய்து விட்டீர்கள். சுத்தம் சுபம்.

9. இப்போது சிங்க்கில் இருக்கும் பாத்திரங்களை கழுவ துவங்குங்கள். ஏங்க, இதெல்லாம் நீங்க செய்யிற வேலையாங்க, போயி பேப்பர் படிங்க, டீ போட்டு எடுத்துட்டு வர்றேன் என்று ஒரு வாசகம் வரும். அது திருவாசகம். இப்போது உங்கள் மதிப்புயர்வு உறுதியாகி விட்டது. பாத்திரம் அன்புக்கு பாத்திரம்.

10.  அழுக்கு துணி களை சேகரித்து வாஷிங் மிஷினில் போடுங்கள். பின், இன்னும் ஏதாவது இருக்காம்மா என்று தணிந்த குரலில் கேளுங்கள். பின்னர் வாஷிங் மிஷினை இயக்கி விட்டு நாற்காலியில் அமருங்கள்.இப்போது நீங்கள் கால்மேல் கால் போட்டு தைரியமாக அமரலாம். உங்கள் மதிப்புயர்வு ஏற்கனவே உறுதியாகி விட்டதால் உங்களுக்கு ஒன்றும் ஆகாது. காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்.

11. இனி வாஷிங் மிஷின் துவைத்த துணிகளை மாடிக்கு எடுத்து சென்று கொடியில் கிளிப் போட்டு காய வையுங்கள்.இது மிக முக்கியமான செயல். தவறினால்  கஷ்டப்பட்டு கிடைத்த மதிப்புயர்வு பரமபத பாம்பிடம் சிக்கியதைப்போல் சர்ரென சருக்கி விடும். கவனம் கவசம்.

12. துணி காய வைத்தபின் வீட்டுக்குள் (கால்மேல் கால் போட்டு) அமர்ந்து அடுத்து  என்ன செய்யலாம் என்று யோசியுங்கள். இப்போது உங்களுக்கு ஒரு டீ அன்பு கொஞ்சம் தூக்கலாக வழங்கப்படும். அசந்து விடக்கூடாது. மெல்ல எமுந்து, பெட்ஷீட், தலையனை போன்றவற்றை ஒழுங்கு படுத்த வேண்டும். அதற்காகத்தான் அந்த டீ வழங்கப்பட்டது என்பது பிறிதொரு யோசனையில்தான் புரியவரும். காரணமில்லாமல் காரியமில்லை.

13. சாப்பாட்டு நேரம். ஆச்சரியமாயிருக்கும். உங்களுக்கு பிடித்த உணவு வகைகள் வரிசை கட்டி நிற்கும். இந்த உள்ளடங்கு காலத்துல எதுக்கும்மா இவ்வளவு சிரமம் எடுத்துக்கிறே என்று (சம்பிரதாயமாகவாவது மறக்காமல்) கூற வேண்டும். புகழோடு தோன்றின் இகழ் இல்லை.

14. உண்டபின் அமைதியாக  உறங்கி ஓய்வு எடுக்க அனுமதி உண்டு. வாய்திறக்க அனுமதி இருந்தாலும் அந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் இருப்பது சிறப்பு. ஆதலின் மௌனமாய் இருத்தல் நன்று.

15. உறங்கி எழுந்த பின் அற்புதமாய் ஒரு டீ வரும். நீங்கள் ஆனந்தமாய் அதை பருகலாம். அதன்பின், காயப்போட்ட துவைத்த துணிகளை எடுத்து வந்து விட வேண்டும். இதில் காலதாமதம் வேண்டாம். நீங்கள் ஆனந்தமாய் பருக வழங்கப்பட்ட டீ இதற்காகத்தான் என்பது விரைவில் புரிய வரும். செய்கை நன்றே.

16. இப்போது அதி தீவிரமான கண்கானிப்புக்கு ஆட்படுவீர்கள். நீங்கள் காய வைத்து எடுத்து வந்த துணிகளை மடித்து வைக்க வேண்டும். இல்லையேல் பரமபத பாம்பு வேலை நடந்து உங்கள் அறிவு கூறாக்கப்பட்டுவிடும் ஜாக்கிரதை. முடிவே விடிவு.

17. நீங்கள் இப்போது ஆல் பாஸ் கேட்டகரியில் உள்ளீர்கள். நிம்மதி நிச்சயம். இரவு உணவு ஏக சுவையாய் பரிமாரப்படும். எப்பிடித்தான் இவ்வளவு வேலையை இழுத்துப்போட்டு செய்றியோம்மான்னு சொல்லீட்டி ( இங்க ரிப்பீட் அனுமதிக்கப்படும்) உறங்கப் போயிரனும் நல்ல பிள்ளையாய். புகழுரை தெளிவுரை.

18. இந்த தினசரி யதார்த்தங்களைத்தவிர, உங்கள் கவனத்தை பரண் மேல் ஒரு நாள் இருத்த வேண்டும். பரண் சுத்தம் பரம சௌக்கியம்.

19. இதேபோல் அலமாரியின் மேல்  கவனம் செலுத்த வேண்டும்.அற்புத பலன் தரும். அற்புத பலன் தரும் அலமாரி சுத்தத்தை அவ்வப்போது மேற்கொள்வதால் இல்லத்தில்  ஆனந்தம்  தாண்டவமாடும். அலமாரி அருள் மாரி.

20. கொஞ்சம் கஷ்டமானாலும் கடினம் பாராமல் செய்ய வேண்டிய முக்கியமான ஒன்று, ஒவ்வொரு நாளும் வீட்டின் ஏதாவது ஒரு  மூலையை தேர்வு செய்து மூலை சலவை, அதாவது மூலையை சுத்தம் செய்ய வேண்டும். மூலை சலவை மூளை சலவை போக்கும்.

21. நீங்கள் அறிவாளி🤔 என்பதையோ, புத்திசாலி🥱 என்பதையோ எப்போதும் நினைவில் கொள்ளாதீர்கள். கொண்டது கொல்லும்.

 

மேலே உள்ள 21 சூத்திரங்களையும் வாழ்வின் ஒவ்வொரு  நொடியும் நினைவில் இருத்துங்கள்.

சூத்திரம் சாத்திரம்,  21 நாட்கள் மட்டுமல்ல, 21 யுகங்கள் கூட நீங்கள் வெற்றிகரமான குடும்பஸ்தனாக இருக்கலாம்.

வாழ்த்துக்கள்..!

 

-வாட்ஸ்அப்பில் வந்தது..

  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.