Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்றாம் உலக யுத்தத்தை ஆரம்பித்துவிட்டதா கொரோனோ அரசியல்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம்

கொரோனா உயிரியல் கிருமியின் தொற்றினால் உலக அரசியலின் ஒழுங்கு மாற்றத்திற்குள்ளாகிறது. ஆசியாவை விட ஐரோப்பாவே அதிக இழப்புக்களை எதிர் கொண்டு வருகிறது. சீனாவில் தோன்றியது எனக் கூறினாலும் ஐரோப்பாவே பலியிடப்படும் தேசமாக மாறிவருகின்றது. இருபதாம் நூற்றாண்டின் இறுதி தசாப்தங்களில் இவ்வகை போர் ஒன்று பற்றிய எச்சரிக்கைகளும் ஆங்காங்கே சிறிய அளவிலான தாக்குதல்களும் நடந்தேறியிருக்கின்றன. இவ்வகை யுத்தம் ஒன்று பற்றிய எதிர்வு கூறல்கள் நிகழ்ந்தே வந்துள்ளன. இது ஒரு மூன்றாம் உலக யுத்தமாக மாறியுள்ளது என்பதை புரிந்து கொள்ள முயல்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

982-8.jpgஇரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்பு ஆயிரக்கணக்கான சிறிய யுத்தங்கள் நிகழ்ந்தன. அவை அனைத்தும் பலத்துக்கும் பலவீனத்திற்குமான ஆயுத மோதலாக அமைந்திருந்தது. ஆனால் ஆயுத தாக்குதலின்றி உலகமே ஒடுக்கப்பட்டிருக்கும் ஒரு யுத்தம் கொரோனா அரசியல் யுத்தமாக மட்டுமே இருக்க முடியும். இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்பு ஐரோப்பாவின் அவசரகால நிலையும் மனித அழிவுகளும் பொருளாதார நெருக்கடியும் உணவின்றி தவிக்கும் மனித சமூகமும் ஏறக்குறைய மூன்றாவது உலக யுத்தத்தினை நினைவுபடுத்துகிறது. இதனால் ஏற்படும் இழப்பீடுகள் அடுத்துவரும் தசாப்தங்களை பாதிக்குமளவுக்கு சென்றுவிட்டது.

982-8.jpg
 
இன்றைய உலகப் பொருளாதாரத்தின் இருப்பு மக்கள் தொகையிலேயே தங்கியிருக்கிறது. அதனாலேயே சிறந்த பிரஜைகள் ஒரு தேசத்தின் தேசிய அதிகாரத்தின் மூலக்கூறு என வரையறைத்துக் கொண்டனர் அரசியல் விஞ்ஞானத்திற்கான கோட்பாட்டாளர்கள். அத்தகைய மக்கள் கூட்டமே ஐரோப்பாவினது மட்டுமல்ல உலகம் முழுவதும் பொருளாதாரத்தின் மூலவேராக காணப்பட்டனர். அவ்வகை மக்கள் கூட்டம் அழிகின்ற போது உலகப் பொருளாதாரமும் அழிவடைய வாய்ப்புள்ளது.

சீனாவில் மக்கள் தொகை கூடிய தேசம் என்பது யதார்த்தமானது தான். ஆனால் தற்போது அந்த நாட்டின் மக்கள் தொகையும் சீன அரசு வகுத்த கொள்கையினால் வீழ்ச்சி கண்டுள்ளது. அடுத்துவரும் தசாப்தத்தில் சீனாவின் மக்கள் தொகையை இந்தியா விஞ்சிவிடும் என்று ஐ.நா மதிப்பீட்டிருந்தது. அதுமட்டுமல்ல வூஹான் மாகாணத்தில் சீன அரசாங்கம் குறிப்பிட்டதைவிட அதிக மரணம் நிகழ்ந்திருக்கலாமென நியூயோர்க்கில் வசிக்கும் ஹாங்கொங்கை சேர்ந்த ஜெனியர் ஜெங் வெளியிட்ட தகவல் அதிர்ச்சியானதாகவே உள்ளது. ஏறக்குறைய 1.5 கோடி வாடிக்கையாளர்களை தாம் இழந்துள்ளதாக தொலைபேசி சேவையினை சீனாவில் மேற்கொள்ளும் மூன்று நிறுவனங்களது புள்ளிவிபரங்ளைக் கொண்டு அவர் தெரிவித்துள்ளார். சைனா மொபைல் நிறுவனம் (81லட்சம்), சைனா யூனிகார்ன் நிறுவனம் (10 லட்சம்) மற்றும் சைனா டெலிகாம் யூனிவர்னல் (56 லட்சம்) என்பனவற்றை ஆதாரப்படுத்தியுள்ளார். இதில் உள்ள குழப்பம் மேற்படி உண்மைத்தன்மையானதா என்பதை உறுதிப்படுத்துவதில் குழப்பமாக உள்ளது.

980-13-1024x576.jpgஒன்று ஜெனியர் ஜெங் ஒரு ஹொங்காங் நாட்டவர். இரண்டாவது அவர் நியூர்யோர்க்கில் இருந்து செயல்படுபவர். அதனைக்கடந்து அவதானித்தால் இத்தகவல் சரியானதாகவே அமையும். காரணம் 1989 இல் தினமென் சதுக்க படுகொலையில் இரண்டு மாணவர்களே கொல்லப்பட்டதாகவே சீன அரசாங்கம் அறிவித்தது. ஆனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பல ஆயிரக்கணக்கில் காணப்பட்டது.

ஐரோப்பாவில் இத்தாலியும், ஸ்பெயினும் மரண எண்ணிக்கையில் அதிக இழப்புக்களை சந்தித்து வருகின்றனர். இதனையும் அமெரிக்கா கடந்துவிடும் போல் அதன் மரண எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே உலகம் முழுவதும் யுத்தகளத்தில் நிகழும் மரணத்திற்கு சமமான இழப்பீடுகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. போரில் மனித இழப்பீட்டை விட இது சற்று வித்தியாசனமானது. அதாவது போரில் கொல்லப்படுவர்கள் இளம் நடுத்தர வயதினராக இருப்பார்கள். ஆனால் கொரோனா அரசியல் யுத்தத்தில் வயயோதிபர்கள் மற்றும் நடுத்தர வயதினரே அதிகம் கொல்லப்படுகின்றனர்.

நலன்பேணும் அரசுகளின் இயலாமையும் இத்தகைய இழப்பீட்டிற்கு காரணமெனக் கூறப்படுகிறது. எல்லையற்ற சுதந்திரம், கட்டுப்பாடற்ற வாழ்க்கை முறைமை, அரசு கட்டுப்பாடற்ற தனியார் பொருளாதார ஆதிக்கம் என்பன எல்லாம் ஒன்று சேர்ந்தன் விளைவாகவே இத்துயரம் ஏற்படுகிறது. ஐரோப்பா எங்கும் கொரோனாவை பரப்புவர்கள் வீதியோரத்தில் வாழ்க்கையை களிப்பவர்களும் களியாட்டத்திலும், கேளிக்கைகளிலும் அதிகம் ஈடுபடுவர்களும் அரசாங்கத்தின் கட்டளைக்கு அடிபணிய மறுப்பவர்களுமே அதிகம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக சீனாவிலும் அதன் நட்பு நாடுகளான ர~;சியா, வடகொரியா, சிரியா போன்ற நாடுகளில் கொரோனா தொற்று மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாடுகள் அனைத்தும் ஏறக்குறைய அரை சர்வாதிகார நாடுகளே. அதிலும் வடகொரியா முழுமையாக சர்வாதிகார அரசாக விளங்குவதனால் இலகுவில் தொற்றினை கட்டுப்படுத்திவிட்டது. சீனாவின் இன்னோர் நட்பு நாடான ஈரான் அதிகமாக இழப்பீடுகளை எதிர் கொண்டுள்ளது. இதன் அரசியலை புரிந்து கொள்வதில் அதிக குழப்பம் நிலவுகிறது. சில தவறான புரிதலும் பதிவிடப்படுகிறது. அது ஒரு அரசியலாக அமையலாம் என கருதுகின்றனர். ஆனால் சீன – ஈரான் உறவின் நெருக்கம் அதற்கான காரணமாகக் கொள்ளப்படலாம்.

ஈரானின் இராணுவத் தளபதி சுலைமானியின் மரணத்திற்கு பின்பு ஈரான் ஆட்சியாளர், ஆத்மீகவாதிகள் பலர் கொரோனா அரசியல் தொற்றால் கொல்லப்பட்டுள்ளனர். அத்தகைய விபத்தான அரசியலை எந்த நாட்டு ஆட்சியாளரும் மேற்கொள்ள முயலமாட்டாளர்கள். ஆனால் ர~;சியா, வடகொரியா என்பன உடனடியாகவே எல்லைகளை மூடிவிட்டன. அவ்வாறு உலகில் பல நாடுகள் செயல்பட்டன. விமானப்போக்குவரத்தையும், எல்லைகளையும் மூடிய நாடுகள் அதிகம் பாதுகாக்கப்பட்டுள்ளன. அவ்வாறே தீவு நாடுகள் அதிகளவில் கொரோனா தொற்றை தவிர்த்துள்ளனர். ஆசியாவில் சீனா, இந்தியா தவிர ஏனைய ஒரு கட்சி அரசியல் அதிகாரமுடைய நாடுகள், இராணுவ அதிகாரமுடைய நாடுகள், அரைச் சர்வாதிகாரமுடைய நாடுகள் கொரோனா தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துள்ளன.

விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சியடைந்த மற்றும் தாராள ஜனநாயகத்தை அதிகம் பேணும் ஐரோப்பிய நாடுகள் தொற்றின் பரவல் வேகம் கட்டுப்படுத்த முடியாதளவுக்கு அதிகரித்துவருகிறது. கொரோனா இழப்பானது உலக அரசியலை பொருளாதார ரீதியில் பாதிப்புக்கு உள்ளாக்க ஆரம்பித்துள்ளது. பொருளாதார வீழ்ச்சி படிப்படியாக உலக ஆதிக்கத்திலிருந்து முதன்மை பெறும் அரசுகளை பலவீனப்படுத்தும். அதனால் புதிய சக்திகள் எழுச்சியடைய வாய்ப்பு அதிகம் உண்டு.

குறிப்பாக சீனா மீளும் நிலையிலும் ரஷ்;சியா அதிக பாதிப்பு இன்றியும் காணப்படுவதனால் இந்நாடுகளது பொருளாதார இருப்பு சாதகமானதாக அமையும். ஆனால் நாட்டின் பொருளாதாரம் என்பது உலகப் பொருளாதாரம் என்பதனால் அந்நாடுகளுக்கும் கொரோனா அரசியல் பாதிப்பினை ஏற்படுத்தக்கூடியதாக அமைய வாய்ப்புள்ளது. ஆனாலும் பலமான இராணுவ கட்டமைப்பையும், உயிரியல் ஆயுதத்தையும் பொருளாதாரத்தையும் கொண்டிருக்கக்கூடிய நாடுகளாக ரஷ்சியா, சீனா காணப்படுவது தவிர்க்கமுடியாத விடயமாகும்.

இதனடிப்படையில் உலகத்தினை ஆதிக்கம் செய்யப் போகும் நாடுகளாக அவை மாறுமாக அமைந்தால் அதன் விளைவுகள் ஆபத்தானவை. கொரோனோவை வைத்து ஒரு அரசியல் யுத்தம் நிகழ்த்தப்பட்டது என்பது முடிவாகுமாக இருந்தால் அந்நாடுகளின் தலைமையில் உலகம் அகப்பட்டால் விளைவுகள் எப்படியானதாக அமையும் என்பதே தற்போதைய குழப்பமாகும். உயிரியல் ஆயுதத்தால் தான் அதிகாரம் கைப்பற்றப் போகிறது என்றால் உலகத்தின் எதிர்காலம் பூச்சியமாகவே அமையும். அப்படியான உலகத்தின் அரசியல் பொருளாதார சமூக நியமங்களுக்கான வரைவிலக்கணம் அனைத்தும் காலாவதியாவதுடன் புதிய வரைபுகளுக்குள் உலகம் நகர்த்தப்பட வேண்டிய நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்படும். அத்துடன் சர்வாதிகாரத்தின் பிடிக்குள் உலகம் தள்ளப்படும் நிலை தவிர்க்க முடியாததாகும்.

இன்றைய உயிரியல் ஆயுதமாக கொரோனோவின் பரவல் ஒரு அரசியல் பொருளாதார போட்டியில் பரப்பட்டது. இதுவே ஒரு போர்க்களத்தில் பரப்பப்பட்டிருந்தால் விளைவு மிகப்பாரதூரமானதாக மாறியிருக்கும்;; தடுக்க முடியாததொன்றாக அமைந்திருக்கும். அந்தவகையில் தற்போதைய நெருக்கடி அரசுகளாலும் மக்களது விழிப்பினாலும் கட்டுப்படுத்திவிடலாம். ஆனால் எதிர்கால போர் களங்கள் பாதுகாப்பானவையாக அமைய வாய்ப்பில்லை. இதனாலேயே இதனை மூன்றாவது உலக யுத்தமாக கருத வேண்டிய நிலைக்குள் உலகம் நகர்கிறது. ஐரோப்பா முழுமையாக யுத்தகளமாக மாறிவருகிறது.

எனவே உலகமயவாக்கம் தந்த அனைத்து வாய்ப்புக்களின் சிதைவுகளையும் உலக மக்கள் அனுபவிக்க ஆரம்பித்துள்ளன. எதிர்கால உலகம் தேசிய எல்லையுடனும் சர்வாதிகார அல்லது இராணுவ ஆதிக்கத்தின் இருப்புக்குள்ளாலும் இயங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளப்படப்போகிறது. கொரோனோ அரசியலின் எஜமானார்கள் ஆபத்தான உலகத்தை உருவாக்கிவிட்டனர்.

 

http://thinakkural.lk/article/38396

 

9 hours ago, உடையார் said:

இதனாலேயே இதனை மூன்றாவது உலக யுத்தமாக கருத வேண்டிய நிலைக்குள் உலகம் நகர்கிறது. ஐரோப்பா முழுமையாக யுத்தகளமாக மாறிவருகிறது.

எனவே உலகமயவாக்கம் தந்த அனைத்து வாய்ப்புக்களின் சிதைவுகளையும் உலக மக்கள் அனுபவிக்க ஆரம்பித்துள்ளன.

1. ஐரோப்பா மட்டுமல்ல, அமெரிக்க நாடும் தான். ஏன், உலகம் முழுவதுமாக இருக்கும். பல நாடுகளில் தாக்கங்கள் பற்றிய தரவுகள் சரியாக வெளியிடப்படுவது இல்லை, அந்த நிலை. 

2. உலகமயமாக்கல் என்பது இந்த பரவலுக்கு முக்கிய காரணம். அதேவேளை, மேற்குலக நாடுகளின் செல்வத்திற்கும் உலகமயமாக்கல் காரணம். ஆக, உலகமயமாக்கல் மந்தமாகி விடும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.