Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனா ஆக்கிரமிப்பு வல்லரசுகள் சராணாகதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • நஜீப் பின் கபூர்

பரினாம வளர்ச்சிப்படிகளின் ஒர் கட்டம் மனிதன். இப்படிக் கடவுள் கொள்கைக்கு சவால்விட்டு ஒரு போட்டை போட்டார்கள் உயிரியல் விஞ்ஞானிகள். ஆனால் உலகிலுள்ள அனைத்து மதங்களும்-மனிதர்களும் பொதுவாக இந்தப் பரினாம கொள்கைகளுடன் ஒத்துப்போகவில்லை. அவற்றை ஏற்றுக் கொள்ளவுமில்லை. எனவே தான் உலகில் எல்லா நாடுகளிலும் தேவாலயங்கள் மசூதிகள் கோயில்கள் விகாரைகள் இன்னும் வலுவாக இருந்து வருகின்றன. உயிரியல் வாதிகளின் இந்த சேட்டைகளை சீண்டல்களைக் கண்ட இறைவன் எப்போதுமே அதற்காக கோபப்படவில்லை. என்னதான் விஞ்ஞானத்தின் உச்சப்படிகளில் நாங்கள்தான் நின்று கொண்டிருக்கின்றோம் என்று கடவுளை மறந்து சொல்லிக் கொண்டாலும் வல்லரசுகள் தங்களை விட்டால் ஆள்கிடையாது தங்களால் எதை வேண்டுமானாலும் சாதித்துக் காட்ட முடியும் என்று ஒரு நம்பிக்கை நவீன உலகத்தில் ஏற்பட்டிருந்தது.

trump-us-1024x436.jpg

 

விஞ்ஞானத்தின் உச்சிப்படிகளில் நிற்கின்ற நாம் அனைத்துத் துறைகளிலும் சாதித்துக் காட்டியிருக்கின்றோம். வைத்தியத்துறையிலும் அதனைச் செய்திருக்கின்றோம்;. இதயத்தையே மாற்றிக் காட்டியிருக்கின்றோம். ஒருவன் கண்களை எடுத்து மற்றவனுக்கு பொருத்தி பார்வையையே கொடுத்திருக்கின்றோம். உள்ளுறுப்புக்களை மாற்றி இருக்கின்றோம் புற உறுப்புக்களை மாற்றி இருக்கின்றோம் மனித உடல்பாகங்களை வேர் அறுத்து வேல்டிங் பண்ணுவது போல் செய்து காட்டி இருக்கின்றோம்.

இப்படி எல்லாம் வைத்தியத் துறையில் சாதித்துக்காட்டிய மனிதனுக்கு இந்த கொரனாவுக்குத் தாக்குப்பிடிக்க முடியாது அலறி அடித்துக் கொண்டு ஓடுவதை நாம் இந்த நவீன உலகில் பார்த்துக் வருகின்றோம். யாரெல்லாம் உலகில் நம்பர் வன் என்று சொன்னார்களோ அவர்களை எல்லாம்தான் இப்போது அகோரமாக இந்த கொரானா கொவிட் 19 துரத்துகின்றது.

அரசத் தலைவர்கள் கண்ணீர் விட்டு கதறுகின்றார்கள் அவர்களது உறவுகளைக் கூட இது விட்டு வைக்கவில்லை. வல்லரசுகள் என்று தம்மட்டம் அடித்தவர்கள் மரணப்படுக்கையில் உயிருக்காகப் போராடி வருகின்றார்கள். எனவே நானும் ஒரு ஒதுக்குப் புறமாக இருந்து உலகத்தவர்களின் நடப்புக்களைப் பார்த்துக் கொண்டுதான் ஒதுங்கி இருந்தேன். மனிதர்கள் அட்டகாசங்கள் கட்டுக்கடங்காது எல்லை மீறி செல்வதால் எச்சரிக்கை பண்ணிப்பார்க்கலாம் என்றுதான் எட்டிப் பார்த்துவிட்டுப் போகலாம் என்று வந்தேன். இப்படி இறைவன் மனிதனை கேட்பது போல் இன்று உலக நடப்புக்கள் போய்க் கொண்டிருக்கின்றன.

இது இறைவனின் சாபக்கேடு என்று சொல்கின்றவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். அப்படியானால் அது எதற்காக ஏன்? எங்களுக்குப் புரிகின்ற படி கொரனாவுக்கு பின்னர் மக்கள் ஆன்மீகத்தில் பால் அதிகம் ஈடுபாடு கொள்ள இடமிருக்கின்றது என்ற ஒரு நம்பிக்கையும் இருக்கின்றது. இதற்காக கொரோனா பீதியை மதபோதகர்கள் தமக்கு ஏற்றவாறு வடிவமைத்துக் கொள்ள நிறையவே இடமிருக்கின்றது. சீனாவில் முஸ்லிம்களை மிக மோசமாகத் தண்டிக்கின்றார்கள் நோவினை செய்கின்றார்கள் அதனால்தான் அவர்களுக்கு இப்படி கடவுள் பண்ணிப்போட்டார் என்றும் துவக்க நாட்களில் சிலர் மார்க்க உபதேசங்களைப் பண்ணி இருந்ததையும் நாம் பார்த்தோம்.

இப்போது மிகப் பெரிய கொரோனா அச்சுறுத்தல் சீனாவில் இருந்து நீங்கி அது மேற்கு நாடுகளின் பக்கம் நகர்ந்து கொண்டிருக்கின்றது. தற்போது உலகில் மிகப் பெரிய கொரோனா அச்சுறுத்தல் அமெரிக்காவில் மையம் கொண்டிருக்கின்றது. இது சீனாவில் பொருளாதர வளர்ச்சி மீது பொறாமை கொண்ட அமெரிக்காவின் செயல் என்றும் அதே போன்று சீனா அமெரிக்காவுக்கு ஒரு பாடம் கற்பிக்க மேற்கொண்ட ஒரு நடவடிக்கை இது என்ற பேச்சுக்களும் கடந்த காலங்களில் சொல்லப்பட்டுக் கொண்டிருந்தன.

ஆனால் இப்போது அவை எல்லாம் பொய்யாகி யாரெல்லாம் மனிதாபிமான மனிதர்கள் நல்ல நாடுகள் என்று பெயர்வாங்கி இருந்தார்களோ அவர்களையும் இது விட்டு வைக்கவில்லை. அவர்களையும் இன்று கொவிட்19 போட்டு உருட்டி உருட்டி பந்தாடிக் கொண்டிருக்கின்றது. நல்ல மனிதர்களை கடவுள் தண்டிக்க மாட்டார் என்றால் இப்படி எல்லாம் எப்படி நடக்க முடியும் என்று கேட்பவர்களும் நம்மில் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

எப்படியோ நாத்தீகர்களும் ஆத்திகர்களும் இன்று ஒற்றுமைப்பட்டு நிற்க்கின்றார்கள் என்றுதான் எண்ணத்தோன்றுகின்றது. இனவாதிகளும் வன்முறையாளர்களும் மூச்சின்றி நிற்க்கின்றார்கள். எமக்குத் தெரிந்த மற்றுமொரு கணக்குப்படி கடந்த காலங்களில் மனிதன் மனிதனாகவே வாழவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். நீதி நியாயம் மனிதநேயம் மண்மீதான பற்று பாசம் உறவுகள் ஊரவர்கள் இனம் சொந்த பந்தங்கள் என்ற பிணைப்பு ஏழை எளியவன் மீதான அனுதாபம் பரிவு என்பவற்றிலிருந்து அவன் நெடுந்தூரம் தள்ளி வாழ ஆசைப்பட்டு வந்திருக்கின்றான். என்பதனையே கடந்த கால் நூற்றாண்டுகளுக்கும் மேலான நமது வரலாற்றுப் பதிவுகளில் பார்க்க முடிந்திருக்கின்றது.

மனிதனிடத்தில் இந்த விலகள்களுக்கும் அவன் பக்கத்தில் சில நியாயங்களும் இருந்ததையும் நாம் மறந்துவிட முடியாது. என்னதான் நியாயங்கள் இருந்தாலும் இந்த நெருக்கடியான நேரத்திலாவது சிலபேருக்கு தான் பிறந்த மண்ணிலிருந்து தள்ளி நின்ற வேதனை வெளிப்பட்டிருப்பது நல்ல செய்தி என்று எடுத்துக் கொள்ள முடியும்.

இந்தக் கட்டுரையை நாம் எழுதிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் கொவிட்19 தாக்குதலுக்கு இலக்கானவர்கள் இலட்சக் கணக்கைத் தாண்டி மில்லியன் கணக்கில் தகவல்கள் வெளிப்பட ஆரம்பித்திருக்கின்றன. வைரஸ் தாக்குதல்களினால் தினம் பலியாகும் உயிர்களின் எண்ணிக்கை பல்லாயிரக் கணக்கில் தினம் பதிவாகி வருகின்றன.

இந்த வைரஸ் பாதிப்புக்கு இலக்காக நாடுகளே உலகில் இல்லை என்ற நிலை வந்திருக்கின்றது. அபிவிருத்தியடைந்த நாடுகளின் மீது இதன் அட்டகாசம் தற்போது கொடிகட்டிப் பறந்து கொண்டிருக்கின்றன. இது வரைக்கும் நோய் தொற்றுக்கள் என்றால் அங்குபோனால் பிழைத்துக் கொள்ள முடியும் என்ற ஒரு நிலை உலகில் காணப்பட்டது. இது வெறும் மாயை என்று இப்போது உலகம் புரிந்து கொள்ள வேண்டி இருக்கின்றது. இந்த இடத்தில்தான் மீண்டும் இறை சக்தி மேலோங்கி வல்லரசுகள் நவீன விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்கள் எல்லாம் வெறும் புண்ணாக்கு என்ற நிலையில் மீண்டும் இறைவனிடத்தில் மனிதன் உயிருக்கு பிச்சை கேட்டு ஒப்பாறி வைக்கின்ற காட்சிகள் பரவலாக நமக்குத் தெரிகின்றன.

சில தினங்களுக்கு முன்னர் இத்தாலியில் இருக்கின்ற பெருந்தொகையான நோயாளர்கள் அங்குள்ள வைத்தியர்களிடம் இப்படி ஒரு கோரிக்கையை முன்வைத்தார்கள். விஞ்ஞானமும் மருத்துவமும் எங்களை ஏமாற்றி விட்டது. தாங்கள் உயிர் வாழ்ந்தாலோ எமது உயிர்கள் பறிக்கப்பட்டாலோ அதற்கு முன்னர் எங்களுக்கு மதப்போதகர்களை அழைத்துவந்து ஏதாவது ஆறுதல் சொல்லுங்கள்- பிராத்தனை பண்ணுங்கள் என்று பகிரங்கமாகக்கோரி இருந்தார்கள்.

இதிலிருந்தும் இறைவன் நலமாகவும் வளமாகவும் இன்னும் இருக்கின்றான் என்பதுதான் மனிதனது இதயங்களில் இருக்கின்ற அடிப்படை நம்பிக்கைகளாக இருந்து வருகின்றன. அவர்களது கோரிக்கைகளை நிருவாகம் நிறைவேற்றியும் வைத்தது. எனவே மனிதன் பரிணாமத்தில் பிறப்பு என்ற கதை நவீன உலகத்தில் மீண்டும் ஒரு முறை பட்டுப்போய்விட்டது என்றுதான் நாமும் பதிய வேண்டி இருக்கின்றது. இதனால்தான் கொரனாவுக்கு பின்னர் ஆன்மீகம் பலம் பெற ஒரு வாய்ப்பு இருக்கின்றது என்று நாம் வாதிடுகின்றோம். சுனாமி வந்தபோதுகூட மனிதன் இறைவனுடன் கோபப்படவில்லை. கொரோன உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்திலும் மனிதனுக்கு இறைவன் மீது எந்தக் கோபமும் ஏற்படவில்லை. விஞ்ஞானத்தின் மீதும் வைத்தியத்திலும்தான் அவனிடத்தில் நம்பிக்கை இழக்கப்பட்டிருக்கின்றது. இது கூட விஞ்ஞானத்தைவிட இறைவன் சக்தி மிக்கவன் என்ற வாதம் இன்னும் வலுவாக நிற்க்கின்றது.

இது சீனா உலக பொருளாதாரதத்தை தமது கைகளுக்குள் சிக்க வைப்பதற்கு எடுத்த அதிபயங்கரத் திட்டம் என்று சிலர் செய்திகளைப் பரப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.இதற்கிடையில் சீனாவும் அமெரிக்கவும் சேர்ந்து ஒரு தடுப்பு மருந்தை உற்பத்தி செய்திருக்கின்றது இது தற்போது பரீட்சித்துப்பார்க்கப்பட இருக்கின்றது என்ற ஒரு செய்தி வந்த சில மணித்தியாலங்களில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவை நம்ப முடியாது அவர்கள் கொரோனா விவகாரங்களில் எமக்கு உண்மையான தகவல்களை வழங்கப் பின்னடித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்ற ஒரு மோசமான குற்றச்சாட்டையும் பகிரங்கமாக முன்வைத்திருக்கின்றார். இதற்கடையில் அமெரிக்காவுக்கு கைகொடுக்க ட்ரம்ப்பின் வேண்டுகோளுக்கினங்க பல நூறு சீன விமனங்கள் தேவையான உபகரணங்கள் வைத்தியர்களுடன் அமெரிக்காவில் இறங்கி இருக்கின்றது.

கொரோனா விவகாரத்திலும் அரசியல் ரீதியான குற்றச்சாட்டுக்களையே மேலோங்கிக் கொண்டு வருகின்றன. இது ஒரு நாகரிகமான செயலாக கருத முடியாது. அத்துடன் எங்களை விட உங்களுக்குத்தான் கொரோனா விவகாரத்தில் முன்னறிவு இருக்கின்றது எனவே தற்போது அதனை நீங்கள் ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டு வந்தும் இருக்கின்றீர்கள் எனவே இது விவகாரத்தில் நீங்கள் எங்களுக்கு கை கொடுக்க வேண்டும் என்று தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவிடம் கெஞ்சி வருகின்றார். இதற்குக் காரணம் கொரோனா பாதிப்பில் தனது நாடு சீனாவை விஞ்சிவிட்டது அங்கு மனிதர்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிவதால் சீனாவிடம் மண்டியிட்டு வருகின்றார் ட்ரம்ப். ஆனால் சீனாவில் இந்த வைரஸ் தொற்றிய போது அதனை நாகரிகமில்லாது விமர்சனம் செய்த தலைவர்தான் இந்த ட்ரம்ப். எதை எடுத்தாலும் மனிதன் முட்டிக் குனிகின்ற ஆள் என்று சீனா அவருக்கு உதவுமா? அல்லது காலங் கடத்தி காரியத்தில் இறங்குமா என்று தெரியவில்லை.

இதற்கிடையில் இந்தக் கொரோனா பாதிப்புக்களில் குறைந்தளவு தாக்கம் செலுத்துகின்ற ர~;யா முழுப்பலத்துடன் இத்தாலிக்கு உதவிக்கரம் நீட்டி இருக்கின்றது. தனது சிறப்பு வைத்தியக் குழுவையும் இராணுவப்படைப் பிரிவொன்றையும் அது அங்கு அனுப்பி வைத்திருக்கின்றது. இத்தனைக்கும் இத்தாலி நேட்டோ கூட்டு நாடு அமெரிக்கா கூட இப்படி ஒரு உதவியை இத்தாலிக்கு இது வரை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஆனால் பிந்திய தகவல்கள் மொஸ்கோவுககுள்ளும் கொரோனா கடுமையாக ஊடூருவி விட்டது என்ற அறிவிப்பு வந்திருக்கின்றது.

 

நமது தேர்தல் ஆணைக் குழுவின் ஹீரோ மஹிந்த தேசப்பிரிய ஒருமுறை நமக்கு இப்படி ஒரு கருத்தை ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லி இருந்தார். தேர்தலை ஒத்திவைக்க எவராலும் முடியாது உலக அழிவு ஒன்று வந்தால் மட்டுமே அப்படி ஒரு வாய்ப்பு இருக்கின்றது. அந்தக் கூற்றுப்படி நமது நாட்டில் எப்போது தேர்தல் நடக்கும் என்ற கேள்விக்கு பதிலை கெரோனாவிடம்தான் கேட்க வேண்டும் என்று சொல்லி இருந்தார். எனவே நிருவாகி என்னதான் திறமைசாலியாக இருந்தாலும் அவரது கட்டுப்பாடுகளையும் மீறிக் காரியங்கள் நடந்து வருகின்றது. யாரும் இருக்குமிடத்தில் இருந்து கொண்டால் அனைவருக்கும் நலம் என்ற நிலை இப்போது நாட்டில் மட்டுமல்ல உலகத்தின் நிலையும் இதுதான்.!

இந்தக் கொரோனா முதல் முதலில் பரவியது தொடர்பான பல்வேறுபட்ட கதைகள் இருந்தாலும் சீனாதான் அதன் தாயகம் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தக்கள் கிடையாது. சீனா வுஹான நகரத்தில் மாமிசச் சந்தையில் 57 வயதுடைய வெய் குவாய்ஜி என்ற பெண் இரால் விற்று வந்திருக்கின்றார். இவருக்கு கடந்த டிசம்பர் 10 திகதி காய்;ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இது தனக்கு வழக்கமாக வருகின்ற சராசரிக் காய்ச்சல்தான் என்று இவர் இதனைக் கருதி இருக்கின்றார். இதற்காக அவர் மருத்துவமனையில் மருந்தையும் வாங்கிக் கொண்டு வழக்கம் போல் தனது சந்தை வியாபாரத்தையும் கவனித்து வந்திருக்கின்றார். இவர் மூலமாகவே இன்று முழு உலகிற்கும் இந்த நோய் பரவியது என்று புதிய தகவல்களில் சொல்லப்படுகின்றன. என்றாலும் இதனைத் திட்டமிட்டுத்தான் சீனா பரப்பியது என்ற கருத்தும் இதற்கிடையில் சொல்லப்பட்டு வருகின்றன.

எப்படியும் சீனாவிலிருந்து பரவிய இந்த கொரோன ஏறக்குறைய ஐந்து மாதங்களாகியும் இன்றும் சீனாவிலிருந்து அது முழுமையாக மறைந்து விடவில்லை. இன்று கூட புதிய நோயளிகளும் இறப்புக்களும் அங்கு தொடர்ந்து கொண்டு வருகின்றன. ஆனால் சீனா அதனை கட்டுக்குள் கொண்டுவந்திருக்கின்றது. பூரணமாக அது கூட இன்னும் அந்த நெருக்கடியிலிருந்து மீள வில்லை. சீனா மட்டுமல்ல அபிவிருத்தி அடைந்து அனைத்து நாடுகளும் போல் இன்று இந்த அழிவு புயல் போல் துரத்திக் கொண்டு வருகின்றன. எனவே இந்த அழிவிலிருந்து யாரெல்லாம் தப்பிப் பிழைப்போம் என்று எவராலும் சொல்ல முடியாது யாதார்த்தத்தை சொல்வதானால் இதிலிருந்து இலட்சக் கணக்கான உயிர்களைப் பறி கொண்ட பின்னராவது உலகம் இதிலிருந்து மீள்வதற்கு இன்னும் பல காலங்கள் போகும். எமது கணக்குப்படி அது ஆறுமாதங்கள் என்றோ ஓரிருவருடங்கள் என்றோ அல்லது அதற்கு மேலும் காலத்தை எடுத்தாலும் எடுக்கலாம்.

ஆனால் கொரோனே பற்றிய அடிப்படையே தெரியாதவர்கள் எல்லாம் மக்களுக்கு செய்திகளை வழங்கிக் கொண்டிருப்பதால், படு முட்டால் தனமான செய்திகளை அவை பெரிய இசுவாக எடுத்து மக்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறான சில தகவல்களை இப்போது பார்ப்போம். அண்மையில் ஒரு பௌத்த துரவி தான் கொரோனாவுக்கு ஒரு ஆயுல் வேத மருந்தை கண்டு பிடித்திருப்தாகவும் ஜனாதிபதி ஜீ.ஆர். ஒத்துக் கொண்டால் தனக்கு இந்த மருந்தை மக்களுக்கு வழங்க முடியும் என்று ஊடகங்கள் வாயிலாக துவக்க நாட்களிலே சொல்லி இருந்தார். இந்த செய்தி தொடர்பாக இப்போது சற்றுப் பேசுவோம்.

உண்மையில் துரவி மருந்தை கண்டறிந்திருக்கின்றார் என்று எடுத்துக் கொள்வோம். அப்படியானால் அது ஜனாதிபதி சொன்னால்தான் தரமுடியும் என்றால் இந்த நாட்டில் வைத்திய ஆய்வுகள் வைத்திய ஆலோசனை சபைகள் எல்லாம் எதற்கு? அவரும் ஜனாதிபதியும் இந்த சர்வதேசப் பிரச்சினையைத் தீர்த்துப்போடலாம் அல்லவா என்றுதான் எமக்குக் சொல்லத் தோன்றுகின்றது. அப்படி சாதனை படைத்த அந்த மருந்தை முழு உலகிற்கும் கொடுத்து நாட்டை இந்த உலகத்திலேயே ஒரே இரவில் ஜனரஞ்சகப்படுத்தி விடலாம். அத்துடன் பல பில்லியன் டொலர்களை ஓரிரு நாட்களிலேயே சம்பாதித்து நாட்டை செல்வந்த நாடாக மாற்றிப்போடலாம் அல்லவா. அந்த செய்தி அப்படி இருக்க 14 வயது சிறுவன் ஒருவன் கொரோனாவுக்கு மருந்து கண்டறிந்து விட்டான் என்று ஒரு கதையும் செய்திகளாக சொல்லப்பட்டிருந்தன. இதற்கும் நாம் மேற் சொன்ன கதையைத்தான் சொல்ல வேண்டி இருக்கின்றது.

மேலும் இஸ்ரேல் மருந்து கண்டறிந்து விட்டது. யப்பானும் அதனைச் செய்து விட்டது. ஜேர்மனும் கண்டறிந்து விட்டது. ஏன் சீனாவும் அமெரிக்காவும் கூட்டாக மருந்து கண்டுவிட்டது என்ற கதைகள் கூட இன்னும் கானல் நீராக இருந்து கொண்டிருக்கின்ற போது சந்தையில் பொருட்களை விற்பனை செய்து கொள்ளும் நோக்கிலும் சில கதைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று எந்தத்துறையை எடுத்துக் கொண்டாலும் மக்களை ஊடகங்கள் பொய்யான செய்திகளை சொல்லிச் சொல்லியே வஞ்சித்து வருகின்றன என்றுதான் நாமும் குற்றம் சாட்ட வேண்டி இருக்கின்றது.

இன்னும் கொரோனாவுக்கு மருந்து கண்டறியப்படவில்லை என்ற நிலையில் இருக்கும் போது மருந்து கண்டறியப்பட்டு விட்டது என்று மக்களுக்கு நம்பிக்கை கொடுப்பதும் ஆபத்தானது. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி ஒருவர் கருத்துப்பபடி இந்த கொவிட் 19 வைரசானது 80 மில்லியன்பேரை கொல்லும் என்று குறிப்பிடுக்கின்றார். அவர் கணக்குப்படி இந்த எண்ணிக்கை நமது நாட்டில் இரண்டு இலட்சம் பேருக்கு மேல் பலி எடுக்க இடமிருக்கின்றது.

கொரோனா விவகாரத்தில் விஞ்ஞாத்தை வைத்தியத்தை நம்பி இன்று வரை மனிதன் ஏமாற்றப்பட்டிருக்கின்றான். அரசுகளும் தங்களுக்குத் தெரிந்த அத்தனை வித்தைகளையும் காட்டி மக்களைப் பாதுகாத்துக் கொள்ள முனைகின்றன. ஊரடங்குச் சட்டம் இராணுவம் வைத்தியத் துறையினரைக் கொண்டு இதற்கு அரசு தீர்வுகளை வழங்க முற்பட்ட போதிலும் இந்த நிமிடம் வரை உலகம் இது விடயத்தில் வெற்றி பெறவில்லை என்பது நாம் மக்களுக்கு சொல்கின்ற செய்தி. ஒரு முறை ஜே.ஆர். சொன்னது போல் அவரவர் பாதுகாப்பு அவரவர் கைகளில் என்றது போல் நிலை இருக்கின்றது. எனவே தத்தமது கடவுள்களைப் பிரார்த்தனை செய்து கொண்டு அரசு விதிக்கின்ற கட்டுப்பாடுகளையும் மதித்து வைத்தியத்தையும் பண்ணிக் கொண்டால் பறிக்கப்படுகின்ற உயிர்கள் போக ஏஞ்சியோர் வையகத்தில் இன்னும் சில காலம் வாழலாம் என்பது கொரோனா விவகாரத்தில் நாம் மக்களுக்குச் சொல்லக் கூடிய செய்தியாக இப்போதைக்கு இருக்கின்றது.

எப்படியோ நாடும் உலகும் கொரோனா பிடியிலிருந்து தப்பிக் கொண்டு விட்டது என்று வைத்துக் கொள்வோம். அப்போது நமது வாழ்வு எப்படிப் போகப் போகின்றது? இந்த அழிவிலிருந்து உலகம் மீண்டு வருவதற்கு இன்னும் பல வருடங்கள் தேவைப்படும். குறிப்பாக நமது நாட்டுக்கு பல தசாப்தங்கள் தேவைப்படும். அதுவரையும் பதவியிலிருப்போர் கொரோனாவை சொல்லிச் சொல்லியே தமது காலத்தை ஓட்டிக் கொள்வார்கள். விN~டமாக இந்த காட்சிகள் நமது நாட்டில் மிக வெற்றி கரமாக அரங்கேரும் என்பதனை மட்டும் எம்மால் உறுதியாகச் சொல்ல முடியும்.

எப்படியும் இந்த உலகு நிலைக்கும் வரை இறைசக்தி வலுவாகவே இருக்கும். அதனை வல்லரசுகளோ விஞ்ஞானமோ வெற்றி கொள்ள முடியாது என்பதற்கு கொரோனா கூட ஒரு நல்ல படிப்பினை. இதனை ஜீரணிக்க முடியாதவர்கள் வேண்டுமானால் அதற்கு இயற்கையின் சீற்றம் என அதற்குப் பெயர் சூட்டிக் கொள்ள முடியும். முதலில் மனிதன் மனிதனாக வாழ இன்னும் நிறையவே கற்றுக் கொள்ள வேண்டி இருக்கின்றது. எனவே இனம், மதம், குலம் கோத்திரம் என்பற்றிலிருந்து அவனால் முற்றுமுழுதாக விடுபட முடியாவிட்டாலும் அவனிடத்தில் மனிதநேயம் இன்னும் நிறையவே வளர வேண்டி இருக்கின்றது.

http://thinakkural.lk/article/38492

 

 

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.