Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியாவில் மே 03 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் மே 03 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு

இந்தியாவில், கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த மே மாதம் 3ஆம் திகதி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மார்ச் மாதம் 25ஆம் திகதியிருந்து இன்று வரை 21 இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில், நினைத்தது போன்று கொரோனா வைரஸ் கட்டுக்குகள் வரவில்லை.

இந்த 21 நாள் காலக்கட்டத்தில்தான் கொரோனா வைரசின் வீரியம் அதிகமாக இருந்து வருகிறது. இன்று காலை இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இதனால் பெரும்பாலான மாநிலங்கள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தியது. இந்நிலையில், பிரதமர் மோடி இன்று (14) காலை மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இதன்போது பிரதமர் மோடி கூறியதாவது, “மக்களின் ஒத்துழைப்பால் கொரோனாவை கட்டுப்படுத்த முடிந்தது. கொரோனாவை ஒழிக்க நாட்டு மக்கள் அனைவரும் இணைந்து போராடி வருகிறோம். ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களை என்னால் உணர முடிகிறது. மக்கள் அனைவரும் ராணுவ வீரர்கள் போன்று செயல்பட்டு வருகின்றனர். அவர்களைப் போன்று ஒழுக்கத்துடன் கண்ணியத்துடன் இருக்கிறார்கள்.

“இந்தியாவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. வீட்டில் இருந்து நாட்டு மக்களை காப்பாற்றி இருக்கிறீர்கள். இந்தியா தைரியமாக கொரோனாவுக்கு எதிரான போரை எதிர்கொண்டு வருகிறது. தமிழ் புத்தாண்டு உள்பட்ட பண்டிகைகளை வீட்டுக்குள்ளேயே இருந்து கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

“உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா சிறந்து விளங்குகிறது. கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் இருக்கிறது. உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருந்திருக்கும்.

“ஊரடங்கு தொடங்கும்போது 500 பேருக்கு தொற்று இருந்தது. நடவடிக்கை எடுக்காவிடில் எண்ணிப்பார்க்க முடியாது விளைவு ஏற்பட்டிற்கும். தனி மனித இடைவேளி முக்கிய பங்கு வகிக்கிறது. பொருளாதார ரீதியாக வீழ்ச்சி அடைந்தாலும் உயிர் இழப்பை தடுத்துள்ளோம்.

“கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கை நீட்டிக்க வேண்டியது அவசியமாக உள்ளது. இதனால் மே 3ஆம் திகதி வரை நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது” என்றார்.
 

http://www.tamilmirror.lk/செய்திகள்/இநதயவல-ம-03-வர-ஊரடஙக-உததரவ-நடடபப/175-248511

  • கருத்துக்கள உறவுகள்

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இனி கொரோனா பாதிப்பு கூட போகின்றது

  • கருத்துக்கள உறவுகள்

Corona lockdown

கொரோனா ஊரடங்கு: மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில் குவிந்த வெளிமாநில தொழிலாளர்கள்

இன்று ஊரடங்கு முடிந்து ரயில்கள் மீண்டும் இயங்கும் என நம்பி மும்பையின் பாந்த்ரா ரயில் நிலையத்தில் பெரும் கூட்டம் கூடியது.

பல்லாயிரம் பேர் அடங்கிய அந்தக் கூட்டத்தில் இருந்த பெரும்பாலானவர்கள் வெளிமாநில தொழிலாளர்கள்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @ANI
ani_mic_logo_normal.jpg
 
 

Mumbai: A large group of migrant labourers gathered in Bandra, demanding for permission to return to their native states. They later dispersed after police and local leaders intervened and asked them to vacate.

View image on TwitterView image on Twitter
 
 
 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @ANI

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமலாக்கப்பட்ட 21 நாள் ஊரடங்கு இன்றுடன் முடிகிறது.

எனினும், இன்று காலை நாட்டு மக்களிடம் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி இந்த ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீடிக்கும் என்று அறிவித்தார்.

ரயில் நிலையத்தில் கூட்டம் கூடிய தகவல் கிடைத்ததும் காவல் துறையினர் அங்கு விரைந்தனர். கூட்டத்தைக் கலைக்க காவல் துறை தடியடியும் நடத்தியது.

தவறான தகவலால் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் அங்கு கூட்டம் கூடியது எப்படி என்று காவல்துறை விசாரித்து வருகிறது.

இந்தியாவிலேயே அதிகமானவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் அதிகம் உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது.

இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் தரவுகளின்படி அந்த மாநிலத்தில் இதுவரை 2337 பேர் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களில் 160 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

இப்போது அங்கு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப் பட்டுள்ளதாகவும் அங்கு இருந்த கூட்டத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் மகாராஷ்டிர மாநில அமைச்சர் ஆதித்ய தாக்ரே தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம் நாடு தழுவிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டபின் டெல்லியில் இருந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள், குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், ஆனந்த் விகார் பேருந்து முனையத்தில் ஆயிரக்கணக்கில் குவிந்ததால் கொரோனா வைரஸ் தொற்று சமூகப் பரவல் மூலம் உண்டாகுமோ என்ற அச்சம் எழுந்தது.

பின்னர் அவர்கள் டெல்லி மற்றும் உத்தரப்பிரதே மாநில அரசுகள் இயக்கிய சிறப்புப் பேருந்துகள் மூலம் சொந்த ஊர் திரும்பினர்.

 

https://www.bbc.com/tamil/india-52283460

கிந்தியா பல தேசங்களாக உடையலாம். 

வளம் மிக்க மாநிலங்கள் அதிக இழப்பை விரும்ப மாட்டா. பிரிவினை கோசங்கள் வலுக்கலாம். இந்த செயற்கை தேசமும் ஒவ்வாத இணைப்பும் சரிவராது.  

கிந்தியா பல தேசங்களாக உடையலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

ஊரடங்கு நீட்டிப்பால் அதிருப்தி; மும்பை வீதியில் திரண்ட வெளிமாநில தொழிலாளர்க

ஊரடங்கு நீட்டிப்பால் அதிருப்தி; மும்பை வீதியில் திரண்ட வெளிமாநில தொழிலாளர்கள்

சொந்த ஊருக்கு அனுப்பி வைக்குமாறு மும்பையில் 1,000-க்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் வீதியில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பதிவு: ஏப்ரல் 15,  2020 05:00 AM
மும்பை, 
 
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக மராட்டியத்தில் வேலையிழந்த ஏராளமான வெளி மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களில் பலர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
 
மும்பையில் குடிசைப்பகுதிகளையும் விட்டு வைக்காமல் கொரோனா தாக்கி வருவதால் ஏழை மக்கள், வெளிமாநில தொழிலாளர்கள் பீதியில் உறைந்து உள்ளனர்.
 
ஏற்கனவே நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு நேற்றுடன் முடிந்தது. இந்தநிலையில் நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி நாடு முழுவதும் ஊரடங்கு மே 3-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.
 
ஊரடங்கு நீட்டிப்பு காரணமாக மராட்டியத்தில் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்தனர். நேற்று மதியம் 3 மணியளவில் மும்பை பாந்திரா ரெயில் நிலையம் அருகே வீதியில் 1,000-க்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் திரண்டனர். அவர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க அரசு வாகன வசதி செய்து தரவேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து போலீசார் குவிக்கப்பட்டனர்.
 
ரெயில் நிலையம் அருகே திரண்டவர்கள், அருகே உள்ள குடிசைப்பகுதிகளில் வசித்து வரும் தினக்கூலிகள் ஆவர். இவர்கள் பெரும்பாலும் மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள்.
 
போராட்டத்தில் ஈடுபட்ட இந்த தொழிலாளர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
 
முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளி ஒருவர் கூறுகையில், “தற்போது எங்களுக்கு உணவு வேண்டாம். நாங்கள் எங்களது சொந்த ஊருக்கு செல்ல விரும்புகிறோம். ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை” என்றார்.
 
மேற்கு வங்கத்தை சேர்ந்த அசதுல்லா சேக் கூறும்போது, “கையில் இருந்த பணத்தை செலவு செய்துவிட்டோம். தற்போது சாப்பிட எங்களிடம் எதுவுமில்லை. நாங்கள் சொந்த ஊருக்கு செல்லவே விரும்புகிறோம். அரசு அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்” என்றார்.
 
அப்துல் காயுன் என்ற தொழிலாளி, “நான் மும்பையில் பல ஆண்டுகளாக உள்ளேன். இதுபோன்ற ஒரு நிலையை பார்த்ததே இல்லை. நாங்கள் எங்கள் சொந்த ஊருக்கு செல்ல அரசு ரெயில் சேவையை தொடங்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
 
11 minutes ago, ampanai said:

கிந்தியா பல தேசங்களாக உடையலாம். 

வளம் மிக்க மாநிலங்கள் அதிக இழப்பை விரும்ப மாட்டா. பிரிவினை கோசங்கள் வலுக்கலாம். இந்த செயற்கை தேசமும் ஒவ்வாத இணைப்பும் சரிவராது.  

கிந்தியா பல தேசங்களாக உடையலாம். 

உடைந்தால் மிக்க மகிழ்ச்சி, விரைவில் கிந்திய உடையனும் 

  • கருத்துக்கள உறவுகள்

உணவு வேண்டாம்.. சொந்த ஊர்களுக்கு போக வேண்டும்!’- மும்பை பந்த்ராவில் குவிந்த மக்கள்

மும்பை

முக கவசங்கள், சமூக இடைவெளி எதையும் பின்பற்றாமல் மக்கள் சாலைகளில் கூடியது மகாராஷ்டிரா அரசுக்கு பெரும்சங்கடத்தை ஏற்படுத்தியது.

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை மே 3-ம் தேதி வரை நீட்டித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்று சமூகப்பரவலாக மாறாமல் இருப்பதற்காகதான் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊடரங்கு உத்தரவு காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்தான். கூலிக்காக வேலைக்கு வந்த தொழிலாளர்கள் தங்களது கைகளில் இருந்த சிறிய சேமிப்பு தொகையை கொண்டு இந்த 21 நாள் ஊரடங்கை கடந்துவிட்டனர். ஊரடங்கு தளர்த்தப்படும் நாம் சொந்த மாநிலங்களுக்கு சென்றுவிடலாம் என நம்பிக்கையுடன் இருந்தவர்களுக்கு பிரதமர் அறிவிப்பு கலக்கத்தை ஏற்படுத்தியது.

 
மோடி

இந்நிலையில் தான் மும்பையின் பந்த்ரா பகுதியில் நூற்றுக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் திடீரென இன்று மாலை போராட்டத்தில் இறங்கினர். அவர்கள் எல்லாம் பீகார் மற்றும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் எனத் தெரியவந்துள்ளது. எங்களுக்கு வேலையும் இல்லை உணவும் இல்லை. உடனடியாக ரயிலை இயக்குங்கள் எங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்புங்கள் எனக் கூறி போராட்டத்தில் இறங்கினர். கொரோனா சமூகப்பரவலாகாமல் இருப்பதற்குதான் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முக கவசங்கள், சமூக இடைவெளி எதையும் பின்பற்றாமல் மக்கள் சாலைகளில் கூடியது மகாராஷ்டிரா அரசுக்கு பெரும்சங்கடத்தை ஏற்படுத்தியது.

தொழிலாளர்கள் சிலர் பேசுகையில்,’ தன்னார்வலர்களும் , தொண்டு நிறுவனங்களும் எங்களுக்கு உணவுகளை வழங்குகிறார்கள். ஊரடங்கு உத்தரவு காரணமாக எங்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாங்கள் எங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப விரும்புகிறோம். எங்களுக்கு இப்போது உணவு வேண்டாம். நாங்கள் எங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப வேண்டும். ஊரடங்கு உத்தரவு நீட்டித்தது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. எங்களுடைய சேமிப்புகள் அரசு அறித்த அந்த 21 நாள் ஊரடங்கு உத்தரவுகளிலே காலியாகிவிட்டது. சாப்பிடுவதற்கு கூட வழியில்லை. நாங்கள் எங்கள் சொந்த ஊர்களுக்கு போக விரும்புகிறோம். அரசாங்கம் அதற்கான வசதியை செய்துதர வேண்டும்” என்றனர்.

 
 
மோடி

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களுடன் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதையடுத்து போலீஸார் அங்கிருந்தவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இதுகுறித்து பேசிய காவல்துறை அதிகாரிகள், “பந்த்ரா ரயில் நிலைய பகுதியில் 1000க்கும் மேற்பட்ட தினக்கூலிகள் குவிந்துவிட்டனர். இவர்கள் எல்லாம் பக்கத்தில் இருக்கும் குடிசைப்பகுதியில் வசித்து வருகிறார்கள். அவர்கள் எல்லாம் மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரை சேர்ந்தவர்கள். நாங்கள் எங்கள் சொந்த ஊர்களுக்கு போக வேண்டும் போக்குவரத்தை ஏற்படுத்தி தாருங்கள் என கோரி போராட்டத்தில் ஈடுபடத்தொடங்கிவிட்டனர்” என்றனர்.

 

3 மணிக்கு தொழிலாளர்கள் அங்கு கூடி போராட்டத்தில் ஈடுபடத்தொடங்கினர். 5 மணி வாக்கில் தடியடி நடத்திய போலீஸார் போராட்டக்காரர்களை கலைத்தனர். தற்போது அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மகாராஷ்ட்ரா அமைச்சர் அஸ்லாம் ஷேக் பேசுகையில், “உணவுக்கெல்லாம் இங்கு எந்தப் பற்றாக்குறையும் இல்லை. அவர்களுக்கு தேவையான ரேஷன் பொருள்களும் வழங்கப்பட்டு விட்டது. ஊரடங்கு நீட்டித்தது தான் அவர்களது பிரச்னை” என்றார்.

 
 
மும்பை

மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் பேசுகையில், “ மும்பையில் ஏராளமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு இன்று தளர்த்தப்படலாம் நாம் அனைவரும் ஊருக்கு திரும்பிவிடலாம் என அவர்கள் நினைத்திருந்தனர். ஆனால் அவர்களது எதிர்பார்ப்புக்கு மாறாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டது. இவர்கள் இங்கிருந்து சொந்த ஊர்களுக்கு நோயுடன் செல்லப்போகிறார்களா. பந்த்ரா ரயில்நிலையத்தில் ஒன்று கூடிவிட்டால் பிரதமர் மோடி மாநில எல்லைகளை திறக்க உத்தரவிடுவார் என தொழிலாளர்கள் நினைத்திருக்க கூடும்:” எனத் தெரிவித்துள்ளார்

https://www.vikatan.com/government-and-politics/protest/migrant-labourers-gather-at-bandra-station-to-leave-mumbai

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.