Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் சுயதனிமைப்படுதல் நடைமுறையில் இருக்கிறதா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் சுயதனிமைப்படுதல் நடைமுறையில் இருக்கிறதா?

  • ரொரன்ரேவிலிருந்து குரு அரவிந்தன்

உலகத்திலே அதிக நிலப்பரப்பைக் கொண்ட நாடுகளில் கனடா இரண்டாவது இடத்தை வகிக்கின்றது. முதலாவது இடத்தை ரஷ்யா எடுத்துக் கொண்டது. தமிழர்கள் அதிகமாக வாழும் மூன்றாவது முக்கிய நாடாக இன்று கனடா இருக்கின்றது. 1983 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இனக்கலவரத்தைத் தொடர்ந்து பெருமளவிலான தமிழ் மக்கள் உயிருக்கு அஞ்சிப் பல நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தார்கள். இதில் பொருளாதார மேம்பாட்டிற்காக இந்தக் கலவரத்தைக் காரணமாகக் காட்டிப் புலம்பெயர்ந்தவர்களும் உண்டு. அதிகளவிலான தமிழர்களை கனடா அவ்வப்போது உள்வாங்கிக் கொண்டது.

979-9.jpgகனடாவுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்களும் தங்கள் திறமைகளினால் சர்வதேசத்தின் பார்வைத் தம்பக்கம் திருப்பிக் கொண்டனர். குறிப்பாக அரசியலிலும், முத்தமிழ் என்று சொல்லப்படுகின்ற இயல், இசை நாடகத்திலும் கனடா தமிழர்கள் கணிசமான பங்கை வழங்கிக் கொண்டிருப்பதும் காரணமாகும். வாழ்க்கைத் தொழிலரும் இதற்குள் ஈடுபாடு கொண்டிருப்பதால் காத்திரமான படைப்பாகக் கனடா தமிழ் இலக்கியம் இன்று இருக்கின்றது. சமீபத்தில் கனடா நாடு பற்றி பத்திரிகைகளிலும்இ இதழ்களிலும் வெளிவந்த ‘ஆறாம்நிலத்திணை’ என்ற கனடா பற்றிய எனது கட்டுரை பலரின் கவனத்தையும் திருப்பியிருந்ததும், கனடா எழுத்தாளர் இணையம் நடத்திய சர்வதேச தமிழ்ச் சிறுகதைப் போட்டியில் உலகெங்கும் இருந்து பிரபல எழுத்தாளர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்ததன் மூலம் தமிழ் இலக்கிய உலகம் அறிந்த ஒரு நாடாகக் கனடா இன்று இருப்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

1918 ஆம் ஆண்டுஇ இப்பொழுது உலகத்தை ஆட்டிப் படைக்கும் கொரோனா வைரஸ்போல ஸ்பானிஷ் புளு ஜுரம் பரவியபோது மக்கள் படித்த பாடம் இப்பொழுது பயன்படுகின்றது. எச்சரிக்கையைப் பின்பற்றாது சுயதனிமைப் படுத்தலை அசட்டை செய்த பிலடெல்பியா என்ற இடத்தில் ஆறு கிழமைக்குள் 12,000 போர் மரணமாகியிருந்தார்கள். இதே சமயம் சென்.லூயிஸ் என்ற இடத்தில் முதல் மரணம் சம்பவித்தபோது, பொதுமக்கள் ஒன்றாகக் கூடுவது தடுக்கப்பட்டு உடனடியாகவே பாடசாலைகள்இ விளையாட்டு மைதானங்கள்இ நூலகங்கள், நீதிமன்றங்கள், தேவாலயங்கள் எல்லாமே மூடப்பட்டதால் பெரிய அழிவில் இருந்து தப்பிக் கொண்டது. வீட்டுக்குள் இருப்பதும்இ சுயதனிமைப் படுத்தலும், கைகளை அடிக்கடி கழுவிச் சுத்தமாக இருப்பதும் இச்சந்தர்ப்பத்தில் கொரோனா வைரஸ்ஸின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்கு மிகவும் முக்கியமானதாகும்.

கடைசியாகக் கிடைத்த வைத்தியர்களின் அறிக்கையின்படி இந்தக் கொரோனா வைரஸகள் நுரையீரல்களை மட்டுமல்ல, அதையும் கடந்து இருதயத்தையும் தாக்குவதாகத் தெரிகின்றது. நோயாளி சுவாசிப்பதற்குக் கஸ்டப்படும்போது செயற்கை முறையில் பிராணவாயுவைக் கொடுத்தாலும், இந்த வைரஸ்சுகள் இருதயத்தைத் தாக்குவதால், அதனால் ஹாட் அட்டாக் வருவதாகவும், இதுவே சில கொரோனா நோயாளியின் மரணத்திற்கு காரணமாகுவதாகவும் தெரிகின்றது. இந்த வைரஸின் பாதிப்பால் உடம்பில் பிராணவாயுவின் நிலை 94க்குக் கீழே இறங்கினால் செயற்கைச் சுவாசம் கொடுப்பது முக்கியமாகும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் இதுவரை 208 உலகநாடுகளுக்குப் பரவி இருக்கின்றது. இந்த வைரஸ் தாக்குதலால் 69,503 பேர் இறந்திருக்கிறார்கள். 15 லட்சம் பேர் நோய்வாய்ப் பட்டிருக்கிறார்கள். நோய்வாய்ப் பட்டவர்களில் அமெரிக்காவில் உள்ள 3 லட்சம் பேரும் அடங்குவர். இத்தாலி, ஸ்பெயின், ஜேர்மனி ஆகிய நாடுகளில் 1 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பிரான்ஸ் சீனா ஈரான் ஆகிய நாடுகளில் 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இத்தாலியில் 15 ஆயிரம்இ ஸ்பெயின் 12ஆயிரம்இ பேர்வரையில் மரணத்தை தழுவியிருக்கிறார்கள். மரணமடைந்தவர்களை மயானத்திற்கு எடுத்துச் செல்வதற்கு இராணுவ வண்டிகளைப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையை இத்தாலியின் கொரோனா வைரஸ் மரணங்கள் ஏற்படுத்தியிருந்தன.

கனடாவில் 2020 ஏப்ரல் 7 ஆம் திகதி 17,896 பேர் பாதிக்கப்ட்டிருக்கிறார்கள். இதில் ஒன்ராறியோவில் 4726 பேர்இ கியூபெக்கில் 9340, பிரிட்டிஸ் கொலம்பியாவில் 1291 பேர், அல்பேட்டா 1373 பேர், பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏனையவர்கள் மிகுதி மாகாணங்களில் அடங்குவர். ஒன்ராறியோவில் 153 பேர், கியுபெக்கில் 150 பேர், அல்பேட்டாவில் 26 பேர், பிரிட்டிஸ் கொலம்பியாவில் 43 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். கனடாவில் 7 ஆம் திகதி வரை 381 பேர் மரணமடைந்திருக்கிறார்கள்.

கனடாவில் 2020 ஏப்ரல் 9 ஆம் திகதி மாலை கிடைத்த அறிக்கையின்படி 20இ748 பேர் பாதிக்கப்ட்டிருக்கிறார்கள். அதாவது எட்டு நாட்களுக்கு முன் இருந்ததைவிட இரண்டு மடங்காகியிருப்பதை அவதானிக்க முடிகின்றது. இதில்; ஒன்ராறியோவில் 5,759 பேர், கியூபெக்கில் 10,912, பிரிட்டிஸ் கொலம்பியாவில் 1336 பேர், அல்பேட்டா 1423 பேர், பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். ஏனையவர்கள் மிகுதி மாகாணங்களில் அடங்குவர். ஒன்ராறியோவில் 200 பேர், கியுபெக்கில் 216 பேர், அல்பேட்டாவில் 29 பேர், பிரிட்டிஸ் கொலம்பியாவில் 48 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். மிகுதி ஏனைய மாகாணங்களில் மரணமடைந்தவர்கள். கனடாவில் 9ஆம் திகதி வரை 509 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். 5311 பேர் சுகமடைந்திருக்கிறார்கள்.

கனடாவில் நனுவிட் என்ற வடக்கே உள்ள சுமார் 40,000 மக்கள் வசிக்கும் ஆட்சிப்பகுதி மட்டும் கொரோனா வைரஸ் பரவாமல் இதுவரை தப்பி இருக்கின்றது. வடதுருவத்திற்கு அருகே இருப்பதால் பனியால் மூடப்பட்டிருக்கின்றது. கனடாவின் முதற்குடி மக்கள் அதிகமாக இங்கே வசிக்கிறார்கள். மாணவப்பருவத்தில் ‘எஸ்கிமோ’ என்று பனிவீடுகளில் வசிப்பவர்களைப்பற்றிப் படித்தது உங்களுக்கு ஞாபகம் வரலாம். இப்பொழுது அந்தப் பெயரைச் சொல்லி அழைப்பதில்லை. அவர்களுக்கு அது பிடிப்பதுமில்லை. இவர்களை முதற்குடி மக்கள் என்றே அழைக்கிறார்கள். இங்கிருந்தும் நோதேன்லைட்டைத் தெளிவாகப் பார்க்க முடியும்.

கனடாவில் சுயதனிமைப்படுத்தல் பொதுவாக நல்ல முறையில் நடைமுறைப்படுத்தப் படுகின்றது. தகுந்த நேரத்தில் அரசு எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. முக்கியமாக அமெரிக்க எல்லைகளை மூடியது. காரணம் அமெரிக்காவில் 402,000 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 13,000 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். கனடாவுடன் அதிக தொடர்புடைய எல்லையில் உள்ள நியூயோர்க்கில் மட்டும் 161, 780 பேர் வைரஸ்ஸால் பாதிக்கப்பட்டு 7,067 பேர் மரணமடைந்திருக்கிறார்கள். எல்லையை மூடாவிட்டால் இந்த நிலைதான் கனடாவுக்கும் ஏற்பட்டிருக்கும். ஓரளவு புரிந்துணர்வு இருப்பதால், ஊரடங்குச் சட்டம் இல்லாமலே கனடிய மக்கள் சுயதனிமைப் படுத்தலைக் கடைப்பிடிக்கின்றார்கள். ஏற்கனவே பரவிய நோய்தான் இப்போது உச்சக்கட்டத்தை அடைந்திருக்கின்றது. வளர்ப்புப் பிராணிகளை வெளியே கொண்டு செல்பவர்கள் மட்டும் முகக்கவசம் அணிந்து சிறிது தூரம் செல்லப் பிராணிகளுடன் தினமும் நடக்கிறார்கள். நடப்பதன் மூலம் செல்லப் பிரணிகளைச் சாட்டித் தங்கள் ஆரோக்கியத்தையும் பேணுகின்றார்கள். இதனால் செல்லப்பிராணிகள் இருக்கும் வீட்டுப் பிள்ளைகளுக்கு நன்றாகப் பொழுது போகின்றது. சின்னத்திரை நாடகங்கள் நின்றுவிட்டதால், திரைப்படங்களைப் பார்த்துப் பொழுதைப் போக்குகிறார்கள். பழைய படங்களைத் திரும்பவும் பார்ப்பதற்குச் சந்தர்பம் தானாகவே கிடைத்திருக்கின்றது.

சென்றவாரம் நான் குறிப்பிட்து போல மேடைகளிலும், இரவு விடுதிகளிலும் ஆட்டம் பாட்டம் போட்டவர்கள் கொரோனாவின் பயத்திலாவது அடங்கிக் கிடப்பார்கள் என்றுதான் நினைத்தேன். ஆனால் அவர்களால் அப்படி ரொம்ப நாட்களுக்கு அடங்கிக் கிடக்க மாட்டார்கள் என்று சென்ற வாரம் இங்கே நடந்த ஒரு சம்பவம் நிரூபித்து விட்டது. தமிழர்களின் மரணம் எப்பொழுதும் இரண்டு விதமானதாகவே இருக்கின்றது. ஒன்று வயது முதிர்ந்து நோய்வாய்ப்பட்டு இறப்பது, மற்றது நீபெரிதா, நான்பெரிதா என்ற வெறியால் ஏற்படும் மானப்பிரச்சனையால் மடிவது. கொரோனா வைரஸ்ஸால் யாராவது தமிழர்கள் பாதிக்கப்பட்டார்களா என்று எல்லோரும் பயந்து கொண்டிருந்த போது, முதலாவது தமிழர் கொல்லப்பட்டார் என்று செய்தி இருந்தது. உணவகம் ஒன்றில் ஏற்பட்ட வாய்ச்சண்டையைத் தொடர்ந்து சென்ற ஞாயிற்றுக்கிழமை அவர் மரணமானதாகச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. உணவகத்திற்கு வெளியே இருந்த வீடியோ பதிவைப் பார்த்த போது, இவரை மற்றவர் தள்ளிவிடுவதும், இவர் பிடரி அடிபட விழுவதும் வீடியோபடமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. கொக்குவிலைச் சேர்ந்த இவர் 1985 ஆம் ஆண்டு கனடா வந்தவர் என்றும் செய்தியில் குறிப்பிடப் பட்டிருந்தது. வீட்டுக்குள் அடைந்து கிடப்பதால் இதுபோலஇ அனேகமானவர்கள் விரக்தி அடைந்து இருப்பதும் தெரிகின்றது. 

மிகஅதிகமாகப் பாதிக்கப்பட்ட இத்தாலியில் சேவையில் ஈடுபட்ட 94 மருத்துவர்களும்இ 26 தாதியர்களும் இதனால் இதுவரை மரணமாகியிருப்பது மிகப்பெரிய வேதனை. இதே போல ஒவ்வொரு நாட்டிலும் தம்மை அர்பணித்தவர்கள் இருக்கிறார்கள். யாரும் வெளியிலே இருந்து கொண்டு தங்களை முன்னிலைப்படுத்தி ஆயிரம் கதைகள் சொல்லாம்இ ஆனால் உண்மையாகவே களத்தில் இறங்கித் தங்கள் உயிரைக் கொடுத்த இவர்கள் தான் உயிர்க்கொடை தந்த உண்மையான தியாகிகள். வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் மக்களுக்குச் சரியானஇ உண்மையான தகவல்களைத் தம்மை வருத்தி இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருக்கும் சகல ஊடகங்களுக்கும் எமது மனிதாபிமான பாராட்டுக்கள் உரியது.

லண்டனில் இருந்து ஒருவர் முகநூலில் ‘அடுத்த வருடம் நடிகர், நடிகை, பாடகர், பாடகி, விளையாட்டு வீரர்கள், அழகுராணிகள் என்று அவர்களுக்கு சிகப்புக் கம்பளம் விரிப்பதையும், அவர்களுக்கு விருதுகள் கொடுப்பதையும் நிறுத்திவிட்டு, வைத்தியர்கள், தாதிகள், மருத்துவமனை ஊழியர்கள், இதனோடு தொடர்புடையவர்கள் போன்றவர்களுக்கு ஏதாவது இந்த சமூகம் செய்ய வேண்டும்’ என்று கேட்டிருந்தார். அதை நல்ல யோசனை என்று பாராட்டி, ‘தளத்தில் நின்று உண்மையாகவே பாடுபட்டவர்கள்’ என்று அதிலே ஒரு சின்னத் திருத்தம் செய்தால் நன்றாக இருக்கும் என்று எழுதியிருந்தேன். ஏனென்றால் உண்மையாக யாரோ உழைக்கஇ சிபார்சின் பெயரில் யாரோ பெயரைத் தட்டிச்செல்லும் காலமிது என்பது பலருக்குத் தெரியாது. பாதிக்கப்பட்டவர்கள் கூடிய விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்.

 

http://thinakkural.lk/article/38870

8 hours ago, உடையார் said:

வீட்டுக்குள் அடைந்து கிடப்பதால் இதுபோலஇ அனேகமானவர்கள் விரக்தி அடைந்து இருப்பதும் தெரிகின்றது. 

 

9 hours ago, உடையார் said:

தமிழர்கள் அதிகமாக வாழும் மூன்றாவது முக்கிய நாடாக இன்று கனடா இருக்கின்றது. 1983 ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இனக்கலவரத்தைத் தொடர்ந்து பெருமளவிலான தமிழ் மக்கள் உயிருக்கு அஞ்சிப் பல நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தார்கள். இதில் பொருளாதார மேம்பாட்டிற்காக இந்தக் கலவரத்தைக் காரணமாகக் காட்டிப் புலம்பெயர்ந்தவர்களும் உண்டு. அதிகளவிலான தமிழர்களை கனடா அவ்வப்போது உள்வாங்கிக் கொண்டது.

 

ஆம், தமிழர்கள் இந்த சிக்கலில் இருந்து கனடாவில் சிறப்பாக மீள வேண்டும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.