Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏழு நாள்கள் சவால்..!

Featured Replies

image_9b7a58501e.jpg

குடும்பத்துடன் நாள்களைக் களிக்கும் ஏழு நாள்கள் சவாலின் மூன்றாவது நாளான இன்று, தன் தந்தையுடன் (பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ) மகிழ்வாகப் பொழுதைக் கழித்ததாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ, தன்னுடைய பேஸ்புக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.

“ஒவ்வொரு நாளும் என் தந்தையுடன் கவலையற்ற நேரத்தைப் பகிர்ந்து கொள்ளும் பொன்னான சந்தர்ப்பம் எனக்கு இல்லை. ஆனால், வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம், அந்த தருணங்கள் ஆழமாக பொக்கிஷமாக இருக்கின்றன. இன்று இதுபோன்ற ஒரு நாள், நாங்கள் இருவரும் வழக்கமாக பரபரப்பான கால அட்டவணையிலும், ஓய்வு நேரத்தை மகிழ்வாகக் களிக்க சிறிது நேரம் ஒதுக்கியிருந்தோம். சமூக இடைவௌியைப் பேணி, பொன்னான சந்தர்ப்பந்தைப் பேணிய தருணமிது” என, நாமல் ராஜபக்‌ஷ அக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.

image_e40b94e1fa.jpg

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/ஏழ-நளகள-சவல/46-248713

  • தொடங்கியவர்

ஹோட்டல் மும்பாய்" படம் பார்த்தேன், வேறு நல்ல படங்கள் உள்ளனவா? : செய்தி வாசிப்பாளரிடம் கேட்ட ரணில்

 

  • தொடங்கியவர்
31 minutes ago, ampanai said:

நாமல் ராஜபக்‌ஷ, தன்னுடைய பேஸ்புக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.

அப்பனும் மகனும் மக்களை ஏமாற்றும் படங்களை இணைத்துள்ளார். ஒரு கோடீஸ்வரர்கள் போல இல்லாமல் சாதாரண மக்களாக சித்தரிக்கப்படும் நிழற்படங்கள் ... இணைக்கப்ட்டுள்ளன. 

23 minutes ago, ampanai said:

ஹோட்டல் மும்பாய்" படம் பார்த்தேன், வேறு நல்ல படங்கள் உள்ளனவா? : செய்தி வாசிப்பாளரிடம் கேட்ட ரணில்

channel 4 sri lanka genocide - போர்க்குற்ற ஆவண படங்களை பார்த்தீர்களா மிஸ்டர் நரி 😡

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ampanai said:

அப்பனும் மகனும் மக்களை ஏமாற்றும் படங்களை இணைத்துள்ளார். ஒரு கோடீஸ்வரர்கள் போல இல்லாமல் சாதாரண மக்களாக சித்தரிக்கப்படும் நிழற்படங்கள் ... இணைக்கப்ட்டுள்ளன. 

channel 4 sri lanka genocide - போர்க்குற்ற ஆவண படங்களை பார்த்தீர்களா மிஸ்டர் நரி 😡

அது அவர்கள் வீட்டு வேலைகாரர்களுடைய இடமாக இருக்கும் 😁.  நரியும் தானே வழி நடத்தியவர் , அவருக்கு தெரியாமலா

 

image_e40b94e1fa.jpg

  • தொடங்கியவர்

இந்தியாவின் நலன்களுக்கு எதிராக நாம் செயற்படக்கூடாது என்பது தேசியத்தலைவரின் எண்ணமாக இருந்தது. ஆனால் இந்தியாவோ அப்போது அதைச் செவிமடுக்கவில்லை. இந்தியா எம்மை அழித்தால், அது இந்தியாவிற்கே ஆபத்தாகத் திரும்பும் என்பது தலைவரின் தீர்க்கதரிசனம்.......... அது இன்று நிகழ்கிறது.

சிறிலங்காவின் அப்பனும் மகனுமாக (மகிந்தவும் நாமலும்) தொலைக்காட்சி பார்க்கும் நிழற்படமொன்றை நேற்று பலர் முகநூலில் பதிவிட்டுக் கிண்டலடித்துக்கொண்டிருந்தார்கள். அவர்களது குடும்பம்; தமிழீழத்தை அழித்தது மட்டுமல்ல, மொத்த இலங்கையையும் மீளாக் கடனுக்குள் தள்ளி அழித்துவிட்டு தம்மை மறந்த நிலையில் இருக்கிறார்கள்.நாம் 2009 இல் அழிந்தோம். சிங்கள நாடு சீனாவிடம் சிக்கி அழிய, அல்லது மடிப்பிச்சை கேட்க இன்னும் காலமிருக்கிறது. யாருக்காவது ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டிருந்தால் தயவு செய்து கீழ்வரும் செய்தியை வாசிப்பது நல்லதல்ல . கொலைப்பழியை ஏற்றுக்கொள்ள நான் தயாரில்லை.

ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையை மூலமாக வைத்து, இலங்கையை மிரட்டித் தன்கைக்குள் போட்டுக்கொள்ள முயன்ற அமெரிக்கா, 2007 இல் இலங்கைக்கான இராணுவ உதவிகளை நிறுத்தப்போவதாக அறிவிக்க, இதுவே தருணமென்று புகுந்தது சீனா. ஒரு பில்லியன் தொகையான ஆயுதத்தளவாடத்தையும், இலவசமாக F - 7 சண்டை விமானங்களையும் கொடுத்ததுமட்டுமில்லாமல், ஐ.நா வின் securiy Council இலங்கையில் தலையிடாமலிருக்கவும் வழிசெய்தது. இந்த உதவியோடு சீனா நிறுத்திக்கொள்ளும் என்பதுதான் அமெரிக்காவினதும் இந்தியாவினதும் தப்பான கணிப்பு. வெளிநாடுகளில் முதலீடு செய்வதை விட, அந்நாடுகளில் Corporate நிறுவனங்களை உருவாக்கி, அந்த மக்களைக் கொள்ளையிடுவது அமெரிக்காவின் உத்தி. ஆனால் சீனா அப்படியல்ல. தனது முதலீடுகள் மூலமாக அந்நாட்டையே விலைகொடுத்து வாங்கிவிடக்கூடிய திறமை மிகுந்தது.

இங்கே தான் சீனாவிடம் தோற்றுநிற்கிறது அமெரிக்கா.
அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தியின் மேல் இந்தியாவிற்கு ஒரு கண் இருந்தது. ஆனால், இந்தியாவின் உதவாத வெளியுறவுக்கொள்கை அதைக் கோட்டைவிட்டதென்றே சொல்லவேண்டும். குறுகிய நலன்களை அடிப்படையாக வைத்து, நீண்ட கால ஆதாயத்தைக் கணிப்பதில் இந்தியக்கொள்கை வகுப்பாளர்கள் தோற்றுப்போயினர். இதையே மறுபுறமாக; ´´என்ன விலைகொடுத்தேனும் இந்த சூழ்நிலையைச் சரியாகப் பயன்படுத்தாவிடில், எமது பட்டுப்பாதைத் திட்டம் சரியாகச் செயற்படாது´´ என்கிறார், சீனாவின் பட்டுப்பாதை திட்டங்களிற்கான தலைமையை வகிப்பவரான சீனப்பெண்மணி Jin Qi.
´´ஒரு நாடு தான் இறைமையை; எதிரியின் வாள் முனையிடமோ , அல்லது அவர்களிடம் வாங்கிய கடன் காரணமாகவோ இழந்துவிடவாய்ப்பிருக்கிறது´´ என்ற அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி John Adams இன் கூற்றைச் சுட்டிக்காட்டுகிறார் இந்திய கொள்கைவகுப்பாளரும், இந்தியாவின் Think Tank என்று அழைக்கப்படுபவருமான Brahma Chellaney. இதில் இரண்டாவது வகையில், மகிந்த குடும்பம் மூலமாக தனது இறைமையை சீனாவிடம் இழந்து நிற்கிறது இலங்கை.

2015 தேர்தலில் இராஜபக்ச தோற்றபோது, சீனாவிற்குத் திருப்பிக்கொடுக்க வேண்டியநிலையில், இலங்கைக் குடிமக்களின் தலையில் கட்டிவிட்டுச் சென்ற கடன் 44.8 பில்லியன் .
இதில் அவர் தனது தேர்தல் செலவாக 3.7 மில்லியன் ரூபாய்களை செல்வழித்திருக்கிறார். பிரச்சார உடைகளுக்காக 678,000 ரூபாய்களும், பரிசுப்பொருட்களுக்காக 297,000 ரூபாய்களும், மற்றும் இதர செலவுகளும் இதற்குள் அடக்கம். இந்நிதி பெற்றுக்கொள்ளப்பட்டது அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி நிதி வைப்புச்செய்யப்பட்டிருந்த standart - Chartered வங்கியின் சீன நிதியிலிருந்தேயாகும். (Newyork times)
ஏன் அம்பாந்தோட்டைத் துறைமுகம் ..?
இலங்கைத் துறைமுகத்திற்கு வருடந்தோறும் 3695 கப்பல்கள் சராசரியாக வந்துசெல்வதாகவும், அந்த நெருக்கடியை நிவர்த்தி செய்யவுமே அம்பாந்தோட்டைத் துறைமுகம் கட்டப்படுவதாக மகிந்த குடும்பம் தெரிவித்தது. ( மகிந்த ஆட்சிக்கு வந்தபொழுதில், அரச நிர்வாகங்களில் 80 வீதம் அவரது குடும்ப அங்கத்தவர்களே இருந்தார்கள் ) ஆனால் இன்றுவரை 35 - 40 கப்பல்களே அம்பாந்தோட்டைத் துறைமுகத்திற்கு வந்துசெல்கின்றன. அதேபோல மத்தள விமானநிலையமும் வெறிச்சோடிக்கிடக்கிறது. ( மகிந்த குடும்பம் இரண்டாவது தடவையாகப் பெற்ற கடனில் 56 மில்லியன் செலவில் இந்த விமான நிலையம் கட்டப்பட்டதாக கணக்குக் காட்டப்பட்டது). அவ்வாறாயின் ஏன் அம்பாந்தோட்டைத் துறைமுகம் ..?
இப்போது பல்லிளிக்கிறார் சிவசங்கர் மேனன். இலங்கையின் அம்பாந்தோட்டைத் துறைமுகமானது சீனக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்காகக் கட்டப்பட்டிருப்பதாகவும், மத்தள விமான நிலையம் சீனாவின் எதிர்கால நடவடிக்கைகளுக்காகக் கட்டப்பட்டதாகவும் நான் சந்தேகப்படுகிறேன் என்கிறார். சந்தேகமே இல்லை, அதுதான் உண்மை.
கடற்புலிகளின் எத்தனையோ விநியோகக் கப்பல்களைக் காட்டிக் கொடுத்தே அழித்த இந்திய தேசத்தின் இறையாண்மை, இலங்கையிலிருந்தே அடித்துநொருக்கப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை.

2015 இலிருந்து சீனாவின் கடனை மீளச் செலுத்த முடியாத நிலையில், அம்பாந்தோட்டையில் 15,000 ஹெக்ரயர் நிலத்தையும் 99 வருடங்களுக்கு சீனாவிடம் தாரை வார்த்திருக்கிறது சிறிலங்கா. 2015 இல் இலங்கை அரசின் அனைத்துவழி வருமதிகளின் தேறியதொகை 14.8 பில்லியன் ரூபாய்களாக இருக்கும் என்றும், ஆனால் சீனா தவிர்ந்த ஏனைய நாடுகளிடம் பெற்ற கடனான 12.3 பில்லியன் ரூபாய்களை அவசரமாகச் செலுத்த வேண்டிய நிலையில் அரசு இருப்பதாகவும் NEWYORK Times தெரிவிக்கிறது. (அப்போதைய நிலவரம்)

சீனாவின் கடன்தொகை அடைக்க முடியா நிலையை எட்டும்போது, இலங்கையின் அனுமதியின்றியே சீன இராணுவத்தின் செயற்பாட்டுத் தளமாக இலங்கைத் தீவுமாறும். அப்போது, இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் தாமாகவே ´´ கேரளக் கதகளி´´ ஆடுவார்கள். தற்போதைய இலங்கையின் தனிநபர் கடன் 468,613 ரூபாய்கள். இப்போது வந்திருக்கும் அரசாங்கம் இந்தத்தொகையை 10 இலட்சமாக வெகுவிரைவில் மாற்றும் என நம்புவோமாக.

மூலம் :

How China Got Sri Lanka to Cough Up a Port -Newyork Times
The independent இணையம்
Wikileaks இணையம்

-தேவன்

1578177155678622?__tn__=K-R

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.