Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வுகானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முன்னர் அறிவிக்கப்பட்டதை விட 50 வீதம் அதிகம்- சீன அரச ஊடகம்

Featured Replies

சீனாவின் வுகான் நகரத்தில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முன்னர் அறிவிக்கப்பட்டதை விட ஐம்பது வீதம் அதிகம் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

வுகானில் கொரோனா வைரஸ் காரணமாக 2579 பேரே உயிரிழந்தனர் என தெரிவித்திருந்த அதிகாரிகள் இன்று மேலும் 1290பேரை உயிரிழந்தவர்களின் பட்டியலில் சேர்த்துள்ளனர். இதன் காரணமாக வுகானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3869 ஆக அதிகரித்துள்ளது

whuhan_14.jpg


கொரோனா வைரஸ் பரவ தொடங்கிய ஆரம்பநாட்களில்வைத்தியசாலைகளில் நிலவிய பற்றாக்குறைகள் மருத்துவ பணியாளர்களின்பற்றாக்குறைகள் காரணமாக சில மருத்துவமனைகள் சீனாவின் நோய்தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையத்துடன் உரிய தொடர்புகளை ஏற்படுத்தவில்லை என சீனாவின் அரச ஒலிபரப்புஸ்தாபனமான சிஜிடின் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சரியாக மதிப்பிடுவதில் தவறுகள் ஏற்பட்டுள்ளன என அரச ஊடகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டதைவித அதிகமாகயிருக்கலாம் என்ற கருத்து காணப்பட்ட நிலையிலேயே இன்று இந்த தகவல் வெளியாகியுள்ளது.

உயிரிழந்த குடும்பத்தவர்களின் அஸ்தியை பெறுவதற்காகவும், அவர்களிற்கு இறுதிச்சடங்குகளை நடத்துவதற்காகவும் நீண்ட வரிசையில் பெருமளவானவர்கள் காத்திருப்பதை தொடர்ந்தே பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாகயிருக்கலாம் என்றகருத்து அதிகரிக்க தொடங்கியது.

https://www.virakesari.lk/article/80155

  • தொடங்கியவர்
6 hours ago, ampanai said:

வுகானில் கொரோனா வைரஸ் காரணமாக 2579 பேரே உயிரிழந்தனர் என தெரிவித்திருந்த அதிகாரிகள் இன்று மேலும் 1290பேரை உயிரிழந்தவர்களின் பட்டியலில் சேர்த்துள்ளனர். இதன் காரணமாக வுகானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3869 ஆக அதிகரித்துள்ளது

ஒரு வல்லரசு வேண்டும் என்று உயிர் இழப்புக்களை மறைக்கும் என்பது கணிக்கப்பட கூடிய விடயம். 

ஆனால், ஏன் இப்பொழுது சீன அரசு சொல்லுகின்றது? அமெரிக்காவின் இழப்பு அதிகரித்து வரும் நிலையில், தான் இழப்புக்கள் இல்லை என்றால் அது தன் மீதான அமெரிக்க ஆத்திரத்தை குறைக்கும் முயற்சி போல தெரிகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

`உலக நாடுகளின் கேள்வி; ஒரேநாளில் அதிகரித்த எண்ணிக்கை!’ - சீனாவின் கணக்கும் ட்ரம்பின் கருத்தும்

 

சீனாவில் ஒரே நாளில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. அந்நாட்டுத் தரவுகளில் ஏற்பட்ட பிழையே இதற்குக் காரணம் என சீன அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சீனாவின் வுகான் நகரிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் உருவானதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் இன்று மொத்த உலகத்தையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் தொற்றால் சர்வதேச அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,50,689 -ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,54,256 - ஆகவும் உள்ளன. சீனாவில் வைரஸ் உருவாகியிருந்தாலும் தற்போது அங்கு நிலைமை சீராகி மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டனர்.



சீனாவில் மட்டும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82,719-ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,342 - ஆகவும் இருந்தன. ஆனால் நேற்று இந்த மதிப்பில் 1,290 அதிகரித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,632 - ஆக உள்ளதாகக் கூறியுள்ளது சீன அரசு. இது நிச்சயமாக ஒரே நாளில் நிகழ்ந்த உயிரிழப்புகள் இல்லை, சீனாவில் கொரோனா தாக்கம் உச்சநிலையில் இருந்தபோது ஏற்பட்ட உயிரிழப்புகளாகவே இவை தெரிவிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில நாள்களாகவே தங்கள் நாட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சீனா மறைப்பதாக சர்வதேச ஆர்வலர்கள், அமைப்புகள், வல்லுநர்கள் எனப் பலரும் குற்றம்சாட்டி வந்தனர். அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும் சீனாவின் இறப்பு விவகாரத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும் விரைவில் அது கண்டுபிடிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் சீனா தங்கள் நாட்டின் உயிரிழப்பில் திடீரென 50% அதாவது 1,290 பேரை ஒரே நாளில் சேர்த்துள்ளது. இதற்கு விளக்கமளித்துள்ள அந்நாட்டு அதிகாரிகள் ‘கொரோனாவால் பாதிக்கப்பட்டு வெளியில் சொல்லாமல் வீட்டிலேயே இறந்தவர்களின் எண்ணிக்கை எங்களுக்குக் கிடைக்கவில்லை. மேலும் மருத்துவர்கள் அனைவரும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பணிகளில் இருந்ததால் உயிரிழப்புகள் சரியாகக் கணக்கிடப்படவில்லை. தற்போது அனைத்துத் தரவுகளும் முழுமையாகப் பெறப்பட்டுவிட்டதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் இந்த எண்ணிக்கை உண்மையானது இல்லை. சீனாவில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் எனச் சந்தேகிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்ரம்ப் நேற்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சீனா இரட்டிப்பாக அறிவித்துள்ளது. இந்த மதிப்பு இன்னும் அதிகமாக அமெரிக்காவின் மதிப்பை விடவும் அதிகமாக இருக்கலாம் அல்லது அதற்கு சற்று அருகிலாவது இருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்

இதற்கு பதில் அளித்துள்ள சீனா, “ கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை நிச்சயமாகக் குறைக்கப்படவில்லை. அப்படி நடக்கவும் நாங்கள் விடமாட்டோம்’ என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையிலும் அடக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் பல மாற்றங்கள் இருந்ததாகச் சமீபத்தில் ஒரு புகார் எழுந்தது. அதற்குப் பிறகே பலரும் இது தொடர்பாகக் கேள்வி எழுப்பத் தொடங்கினர்.

இதற்கிடையில் சீனாவின் இறப்புத் தரவுகள் பற்றி ஜெனிவாவில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ள உலக சுகாதார அமைப்பின் கொரோனா தொழில்நுட்ப தலைவர் மரியா வான் கெர்கோவ், “ஒரு நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களை அடையாளம் காண்பது பெரும் சவாலாக உள்ளது. பல நாடுகள் இதே போன்ற சூழ்நிலையில் இருக்கப் போகின்றன என நான் நினைக்கிறேன். அவர்கள் தங்கள் தரவுகளை மறு மதிப்பீடு செய்ய வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

இவரைத்தொடர்ந்து பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் அவசரக் கால இயக்குநர் மைக்கேல் ரியான், ‘ எல்லா நாடுகளும் நிச்சயம் இந்தப் பிரச்னையை எதிர்கொள்ளும். ஆனால் அனைத்து நாடுகளும் தங்களின் துல்லிய தரவை விரைவில் தயாரிக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். பாதிப்பு என்பதையும் தாண்டி துல்லிய மதிப்பால் நாட்டின் நிலையை அறிவது அதிலிருந்து வெளியேற உதவும்” என்று பேசியுள்ளார்.

https://www.vikatan.com/government-and-politics/international/china-secretly-has-far-higher-coronavirus-death-toll-trump-said

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா இறப்பு திருத்தம் செய்த சீனா; அனைத்து நாடுகளும் இது போன்றே செயல்படும்- உலக சுகாதார அமைப்பு

கொரோனா இறப்பு திருத்தம் செய்த சீனா; அனைத்து நாடுகளும் இது போன்றே செயல்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
பதிவு: ஏப்ரல் 18,  2020 12:23 PM
ஜெனீவா
 
சீனாவின் உகான் நகரை முதன் முதலில் தாக்கிய கொரோனா, இன்று உலக நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடிவருகிறது.
 
அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியவை ஒவ்வொன்றும் தங்கள் நாட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களை பறிகொடுத்துள்ளன.இந்த நாடுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் பல ஆயிரம் மடங்கு அதிகம்
 
அதேநேரம், கொரோனாவால் பெரிதும் பாதிப்படைந்த உகான் நகரில் கடைசி நிலவரப்படி பலி எண்ணிக்கை 2,579 ஆக இருந்தது. சீனாவின் ஒட்டு மொத்த உயிரிழப்பும் கூட சில வாரங்களாகவே சுமார் 3,300-ல் நிலை கொண்டிருந்தது.
 
கொரோனா விவகாரத்தில் சீனா உண்மையை மறைப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இது குறித்து உலக சுகாதார அமைப்புக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கண்டனம் தெரிவித்தார் 
 
இந்த நிலையில், உகான் நகரின் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் பணிக்குழு சார்பாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.  அதில், உகான் நகரில் கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கையில் திருத்தம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
 
அதாவது, ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த 2,579 என்ற உயிரிழப்பு எண்ணிக்கை 3,869 ஆக மாற்றம் செய்யப்பட்டது. இது 50 சதவீத உயர்வு ஆகும்.
 
அதேநேரம், உகான் நகரத்தில் கொரோனா பலி உயர்ந்ததுபோல் சீனா முழுவதற்கும் எண்ணிக்கை மாறுபடுமா? என்ற எதிர்பார்ப்பும் உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது.
 
இது குறித்து உலக சுகாதார அமைப்பின் கொரோனா வைரஸ்  தொழில்நுட்ப அமைப்பை சேர்ந்த  மரியா வான் கெர்கோவ் கூறியதாவது:-
 
கொரோனா பாதிப்புகள்  மற்றும் இறப்புகள் அனைத்தையும் அடையாளம் காணும் பணி ஒரு சவாலாக உள்ளது
 
பல நாடுகள் சீனா போன்று இதே சூழ்நிலையில் இருக்கப் போகின்றன என்று நான் எதிர்பார்க்கிறேன்,  நாடுகள் கொரோனா பதிவுகளை மறுஆய்வு செய்து பார்க்க வேண்டும் என கூறினார்.
 
உலக சுகாதார அமைப்பின் அவசரகால இயக்குனர் மைக்கேல் ரியான் கூறும் போது  அனைத்து நாடுகளும் சீனாவை போன்றே செயல்படும் ஆனால், துல்லியமான புள்ளிவிவரங்களை சீக்கிரம் தயாரிக்குமாறு அவர் நாடுகளை கேட்டுக்கொண்டார்,
 
 

https://www.dailythanthi.com/News/TopNews/2020/04/18122304/All-Countries-Will-Face-This-WHO-After-China-Revises.vpf

  • தொடங்கியவர்
8 hours ago, உடையார் said:

அதேநேரம், உகான் நகரத்தில் கொரோனா பலி உயர்ந்ததுபோல் சீனா முழுவதற்கும் எண்ணிக்கை மாறுபடுமா? என்ற எதிர்பார்ப்பும் உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ளது.

கை  மீறிப்போன வைத்தியசாலைகளை கொண்ட நகரங்களில் மற்றும் வேண்டும் என்றே இழப்புக்களை குறைக்கும் நகரங்களில் - இழப்புக்களை குறைத்தே கணக்கிலிடப்படும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.