Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ரமதான் 2020 Apr 23 - May 23

Featured Replies

 

 

ரமலான் (Ramadan) (/ˌræməˈdɑːn//ˌræməˈdɑːn/; அரபு மொழி: رمضان Ramaḍān, IPA: [ramaˈɮˤaːn]  

இசுலாமிய நாட்காட்டியின் ஒன்பதாவது மாதமாகும். இம்மாதம் ரம்ஜான், ரமஜான் எனவும் அழைக்கப்படுகிறது. இம்மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இசுலாமியர்கள் நோன்பை அனுசரிக்கிறார்கள். இசுலாமிய நம்பிக்கையின்படி முகம்மது நபிக்கு முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் விதமாக இந்த நோன்பை அனுபவிக்கிறார்கள். ஆண்டுக்கொரு முறை அனுசரிக்கப்படும் இந்த நோன்பு இசுலாத்தின் ஐந்து தூாண்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த மாதமானது நிலவின் பிறைக்காட்சியின்படியும், ஹதீஸ்களில் தொகுக்கப்பட்டுள்ள பல்வேறு வாழ்க்கை வரலாறுகளின்படியும் 29–30 நாட்கள் இருக்கலாம்.

ரமதான் என்ற வார்த்தையானது, அராபிய வார்த்தை ரமிதா அல்லது அர்-ரமத் (சுடும் வெப்பம் அல்லது உலர்தன்மை என்ற பொருைளத் தரக்கூடியது) என்பதிலிருந்து வருவிக்கப்பட்டுள்ளது. நோன்பானது வயது வந்த இசுலாமியர்களுக்கு கட்டாயமான கடப்பாடு ஆகும்.

நோய்வாய்ப்பட்டவர்கள், பயணத்தில் உள்ளோர், வயது முதிர்ந்தோர், கர்ப்பிணிப் பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள், நீரிழிவு நோயாளிகள், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாதவிடாய் காலத்தில் உள்ளோர் ஆகியோர் மட்டுமே நோன்பிருப்பதிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள் ஆவர்.

 மக்காவில் இருந்து மதீனாவிற்கு இசுலாமியர்கள் குடியேறிய இரண்டாம் வருடத்தில், ஷப்பான் மாதத்தில் ரமலான் நோன்பு நோற்க வேண்டும் என்பது கட்டாயமான கடப்பாடாக இருந்தது. நள்ளிரவு சூரியன் அல்லது துருவ இரவு போன்ற இயற்கை நிகழ்வுடன் வாழும் முஸ்லிம்கள் மக்காவின் கால அட்டவணையைப் பின்பற்ற வேண்டும் என்று ஃபத்வாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன., ஆனால், பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து என்னவென்றால், அந்தந்தப் பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் பகலிலிருந்து இரவை வேறுபடுத்த இயலக்கூடிய நாளிலிருந்து தமக்கு நெருங்கிய நாட்டின் கால அட்டவணையை பின்பற்ற வேண்டும் என்பதாகும்.

விடியற்காலையிலிருந்து சூரிய மறைவு வரை உண்ணாநோன்பு இருக்கும் போது, முஸ்லிம்கள் உணவு உட்கொள்ளல், நீர் மற்றும் திரவங்களை அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் பாலியல் உறவுகளில் ஈடுபடுதல் ஆகியவற்றைத் தவிர்த்து விடுகிறார்கள். தவறான பேச்சு (அவமதிப்பு, புறம்பேசுதல், சபித்தல், பொய் போன்றவை) மற்றும் சுய-பாதுகாப்புக் காரணங்களுக்காக அல்லாமல் பிறருடன் சண்டையிடுவது போன்ற பாவ காரியங்களில் ஈடுபட்டால் அவை நோன்பின் பலனைக் குறைத்து விடுமென்பதால் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதிலிருந்தும் தங்கள் நடத்தையை தவிர்த்து விடுகிறார்கள். நோன்பு தொடங்குவதற்கு முன்னதாக எடுக்கப்படும் உணவானது ஸஹர் எனவும் நோன்பு முடிந்த பின் எடுத்துக் கொள்ளப்படும் உணவானது இப்தார் எனவும் குறிப்பிடப்படுகிறது.நோன்பிற்கான ஆன்மீக வெகுமதி (தவாப்) மேலும் ரமலான் மாதத்தில் பெருக்கப்படும் என நம்பப்படுகிறது. ரமலான் மாதத்தில், பொதுவாக பிரார்த்தனைகளை அதிகப்படுத்துதல்,  திருக்குர்ஆனைப் பாராட்டுதல், பாராது ஒப்புவித்தல் மற்றும் நல்ல செயல்களையும் தொண்டுகளையும் அதிகரித்தல் ஆகியவை அறிவுறுத்தப்படுகிறது.

https://ta.wikipedia.org/wiki/ரமலான்

Corona Virus : ''ரமலான் நோன்பு அவசியமில்லை'' Iran Supreme Leader | Ayatollah Khamenei

 

  • தொடங்கியவர்

 

ரமலான் ஏற்பாடு குறித்து இஸ்லாமியர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!

ரமலான் மாதத்தின் சிறப்புத் தொழுகைகளை இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளிலேயே மேற்கொள்ளுமாறு தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் முஹம்மது அய்யூப் தெரிவித்துள்ளார்.

ஆண்டு தோறும் இஸ்மாமியர்கள் கடைபிடிக்கும் ரமலான் நோன்பு சில நாட்களில் தொடங்க இருக்கிறது. ரமலான் காலத்தில் பள்ளிவாசல்களுக்கு நோன்புக் கஞ்சிக்கான அரிசி வழங்குவது குறித்த அலோசனைக் கூட்டம், நேற்று, தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சன்னி பிரிவு தலைமை ஹாஜி சலாவூதீன் முகம்மது அய்யூப், ஷியா பிரிவு தலைமை ஹாஜி குலாம் முகம்மது உட்பட இஸ்லாமியத் தலைவர்கள் பலர் பங்கேற்றனர்.

கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த, தலைமை ஹாஜியின் பிரதிநிதி நூருல் அமீன், இஸ்லாமியர்கள் நோன்பு காலத்தில் ரமலான் சிறப்புத் தொழுகை மற்றும் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகைகளை வீட்டிலிருந்தே தொழுது கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைச் செயலாளர் சண்முகம், ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் 5 ஆயிரத்து 450 டன் பச்சை அரிசி வரும் 19 ம் தேதிக்குள் வழங்கப்பட்டு விடும் எனவும், பள்ளிவாசல்களில் நோன்புக் கஞ்சி தயாரிக்காமல் அரிசியாக வீடுகளில் சென்று தன்னார்வலர்கள் வழங்குவார்கள் எனவும் தெரிவித்தார்.

https://www.newsj.tv/view/Chief-Secretary-consults-with-Muslims-on-Ramadan-38159

  • தொடங்கியவர்

ரம்ஜான் மாதத்தில் சமூக விலகலை கடைப்பிடிப்பது அவசியம்: முஸ்லிம்களுக்கு மத்திய அமைச்சர் நக்வி வலியுறுத்தல்

கரோனாவில் இருந்து தப்பிக்க ரமலான் மாதத்தில் சமூக விலகலை முஸ்லிம்கள் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி வலியுறுத்தி உள்ளார்.

இஸ்லாமியர்களின் ரமலான் மாதம் ஏப்ரல் 24-ம் தேதி தொடங்குகிறது. இதில் 30 நாட்கள் நோன்பு இருக்கும் முஸ்லிம்கள் அதன் இறுதியில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

இம்மாதத்தில் தினமும் மாலையில் நோன்பு முடிக்க அனைவரும் ஒன்றாகக் கூடுவதுடன், இப்தார் நிகழ்ச்சிகளும் நடைபெறுவது உண்டு. இதுமட்டுமின்றி இரவில் மசூதிகள் அல்லது தனியார் இடங்களில் ஒன்றுகூடிதராஹவீ எனும் சிறப்பு தொழுகையும் நடத்துவார்கள்.

ரமலான் மாதத்தில் கடைப்பிடிக்கப்படும் இதுபோன்ற வழக்கங்களால் கரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது. இதை முஸ்லிம்களிடம் எடுத்துக் கூற, மத்திய வஃக்பு வாரியத்தின் தலைவருமான நக்வி நேற்று முன்தினம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

சன்னி மற்றும் ஷியா வஃக்பு வாரியத் தலைவர்கள் மற்றும் அவைகளின் நிர்வாக அதிகாரிகள் 30-க்கும் மேற்பட்டோட் அதில் கலந்து கொண்டனர். அப்போது ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் சமூக விலகலை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மத்திய அமைச்சரான நக்வி மேலும் கூறும்போது, “ஊரடங்கு காலத்தில் மத்திய, மாநில அரசுகளின் விதிமுறைகளை அனைவரும் கவனமாக பின்பற்ற வேண்டும்.

வீட்டில் இருந்தபடியே நோன்பு மற்றும் தொழுகையில் ஈடுபட்டு சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும்.இது தொடர்பான பொய்ச் செய்திகள், கைப்பேசி மற்றும் சமூகவலைதளங்களில் பரவாமல் தடுப்பதும் அவசியம். இந்த நடவடிக்கையில் வஃக்பு வாரியங்கள் முன்னின்று செயல்படவேண்டும்.

ரமலான் மாதத்தில் உலகின் பெரும்பாலான நாடுகளில் மசூதிகள் மற்றும் இதர இடங்களில் கூடுவதுதடைசெய்யப்பட்டுள்ளது. கரோனா தொடர்பான பாதுகாப்பு

நடவடிக்கையில் இந்து, சமணர் கோயில்கள், கிறிஸ்தவ தேவாலாயங்கள், சீக்கிய குருத்துவாராக்கள் ஆகியவற்றிலும் பக்தர்கள் கூடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே கரோனா பரவலை மனதில்கொண்டு அதை தடுப்பதில் ரமலான் மாதத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்றார். மத்திய வஃக்பு வாரியத்தின் கீழ் நாடு முழுவதிலும்

சுமார் 7 லட்சம் பதிவுபெற்ற மசூதிகள், ஈத்காக்கள், இமாம்பாடாக்கள் மற்றும் தர்காக்கள் செயல்படுகின்றன. இவற்றிலும் ரமலானுக்காக இஸ்லாமியர்கள் கூடுவதற்கு அனுமதிக்கக் கூடாது, இதில் எந்தவித பாரபட்சமும் பார்க்கக் கூடாது எனவும் அமைச்சர் நக்வி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் வழக்கமான நோன்பு கஞ்சி காய்ச்சுவதிலும், அதை விநியோகிப்பதிலும் கரோனா பரவும் அபாயம் இருப்பதாகவும் அமைச்சர் நக்வி குறிப்பிட்டார்.

https://www.hindutamil.in/news/india/550205-coronawarriors-2.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.