Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொற்றுத்தடுப்புத் திட்டங்களின் சமூக பொருளாதார விளைவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொற்றுத்தடுப்புத் திட்டங்களின் சமூக பொருளாதார விளைவுகள்

கொரோனா தொற்றுப் பரம்பல் முழு உலகத்திற்கும் பேரதிர்ச்சியாக வந்திருக்கிறது. தொற்றுப்பரம்பலைக் கட்டுப்படுத்துவதற்கான பரந்துபட்ட திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளன. நோர்வேயில் அத்திட்டங்கள் இதுவரை வெற்றிகரமான விளைவுகளைத் தந்துள்ளன. ஆயினும் பெரும்பகுதி சமூகம் இயக்கம் முடக்கப்பட்டமையினால் மிக மோசமான சமூக விளைவுகளை இத்திட்டங்கள் ஏற்படுத்தியிருக்கின்றன.

தொற்றுப்பரம்பல் கட்டுப்படுத்தல் திட்டங்களின் சமூக பொருளாதார விளைவுகளை ஆராய்வதற்கென மார்ச் 25, நோர்வேயின் சுகாதாரத் திணைக்களம் ஒரு நிபுணர் குழுவை அமைத்தது. கட்டுரையாளரை (பேராசிரியர் Steinar Holden) அதன் தலைவராகக் கொண்டு, நோர்வேயின் மத்திய கருத்தாய்வு நிறுவனம், மத்திய வங்கி, நோர்வே தொழில்நுட்ப மற்றும் இயற்கை அறிவியல் பல்கலைக்கழகம் (NTNU), இரண்டு அரசாங்க அமைச்சகங்கள் (நிதி, தொழிற்துறை), சுகாதாரத் திணைக்களம், ஒஸ்லோ Economics ஆய்வகம், நோர்வே அரச ஆய்வு மையம் (Research Council of Norway), பொது சுகாதார மையம் ஆகியனவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் இந்நிபுணர் குழுவில் உள்ளக்கப்பட்டிருந்தனர்.

பிரஸ்தாபிக்க வேண்டுமென்பது குழு அமைக்கப்பட்டதன் நோக்கமாகும்.

இரண்டு முதன்மைத் தெரிவுகள்

பிரதான மூலோபாயத் தெரிவு அறிக்கையின் முக்கிய இலக்கு. பின்வரும் இரண்டு முதன்மைத் தெரிவுகளின் அடிப்படையில் கணிப்பீடுகளை நாங்கள் முன்னெடுத்தோம்:

1. ‘தொற்றுக்கட்டுப்படுத்தல்’ மூலோபாயம் – சுகாதாரத் துறையின் தாங்குதிறனுக்கு அதிகமான சுமையை ஏற்படுத்தாத வகையில் தொற்றுப்பரம்பலைக் கட்டுப்படுத்துதல்

 

முற்றுமுழுதான தொற்றுமுறியடிப்பு’ மூலோபாயம் – இது தொற்றுப்பரம்பலை முற்றுமுழுதாக கட்டுக்குள் கொண்டுவருவதும் தொடர்ச்சியாக அதனை மிகச்சொற்ப அளவில் வைத்திருப்பதும்.

முற்றுமுழுதான முறியடிப்பு மூலோபாயத்தில், வெவ்வேறு கால அளவுகளைக் கொண்ட விரிவுபடுத்தப்பட்ட பாதுகாப்புத் திட்டங்களுக்குரிய இரண்டு சூழ்நிலைகளை நாம் சுட்டிக்காட்டினோம். குறைந்தளவு பரம்பலைப் பேணுவதற்குரிய விரிவுபடுத்தப்பட்ட பொதுவான திட்டங்களின் காலநீட்சி தொடர்பான தெளிவற்ற நிலையை வெளிப்படுத்துவதற்காக அதனைக் கோடிட்டுக் காட்டினோம்.

சமூக பொருளாதாரத் தாக்கம் பற்றிய கணிப்பீடு என்பது ஒன்றேடொன்று தொடர்புடைய பல்பரிமாணமுடைய பல்வேறு தாக்கங்கள் பற்றிய மதிப்பீட்டினைக் குறிக்கின்றது. அவை முற்றுமுழுதான பொருளாதாரச் செலவுகளிலிருந்து மனித உயிர் இழப்புகள் வரை குறிக்கின்றன. இது அநாகரீகமாதத் தோன்றலாம். ஆனால் மருத்துவத்துறை உட்பட்ட பல்வேறு இடங்களில் கூடுதல் வளத்தினைப் பயன்படுத்தி மனித உயிர்களைக் காப்பது தொடர்பான தீர்மானங்கள் தொடர்ந்து எடுக்கப்படுகின்றன. மனித உயிர்கள் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சமத்துவமாக மதிக்கப்படுவதையும் – அதிக பயன் தரக்கூடிய வகையில் வளங்கள் பயன்படுத்தப்படுவதையும் இத்தகைய மதிப்பீடுகள் மூலம் உறுதிப்படுத்த முடியும்.

நோய் மற்றும் தொற்றுப்பாதுகாப்பு நடவடிக்கைகளால் ஏற்பட்டிருக்கும் பிற சுமைகள் தொடர்பான அளவீடுகளை நாம் மேற்கொள்ளவில்லை. பிற சுமைகள் என்பது குறைக்கப்பட்ட சமூகத் தொடர்பு, ஒன்றுகூடல், முக்கிய ஓய்வுநேரச் செயற்பாடுகளின் முடக்கம், வேலையிழப்பு, பொருளாதார இழப்பு, இவற்றின் எதிர்காலம் தொடர்பான நிச்சயமின்மை ஆகியவற்றால் ஏற்படக்கூடிய எதிர்மறையான சமூக மற்றும் உளநலத் தாக்கங்கள் அடங்குகின்றன. ஒட்டுமொத்த விளைவுத் தாக்க மதிப்பீட்டில் இவற்றின் அளவீடுகளும் உள்ளடக்கப்பட வேண்டும்.

பாரிய சமூக ரீதியான சேதவிளைவுகள்

எமது மதிப்பீடுகளின்படி, தீவிரமான தொற்றுப்பாதுகாப்பு நடவடிக்கைகளுடனான ஒரு ‘முறியடிப்பு அணுகுமுறை’ ஆறு மாதங்கள அல்லது அதற்குச் சற்றுக் கூடுதலான காலமும் பின்னர் தளர்த்தப்பட்ட நடவடிக்கைகளுடன்கூடிய நீண்டகால அணுகுமுறையைக் குறிக்கின்றது. இந்த அணுகுமுறை குறுகியகால கட்டுப்படுத்தல் அணுகுமுறையிலும் பார்க்க ஆழமான சமூகச் தேசங்களை ஏற்படுத்தக்கூடியன.

நீண்டகால ‘முறியடிப்பு அணுகுமுறை’ என்பது தொழிற்சந்தை வீழ்ச்சி, முதலீட்டு வீழ்ச்சி காரணமாக எதிர்காலத்தில் ஏற்படுத்தப்படும் வேலையில்லாப் பிரச்சனை, உற்பத்திச் சரிவு என்பன பாரிய நீண்டகால இழப்புகளுக்கு வழிகோலும்.

பொருத்தமான அணுகுமுறைத் தெரிவு

முந்தைய பொருளாதார வீழ்ச்சிகளின் அனுபவத்திலிந்து மதிப்பிடும்போது, 2020 – 2030 காலப்பகுதியில் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross domestic product), ‘கட்டுப்படுத்தல் அணுகுமுறையில்’ 2 வீத வீழ்ச்சியும், ‘நீண்டகால முறியடிப்பு அணுகுமுறை’யில் 4 வீத இழப்பும் ஏற்படும் என்ற தீர்மானத்திற்கு வரமுடிகிறது.
இத்தகைய கணிப்பீடுகளில் பாரிய தெளிவின்மைகளுக்கு இடமுண்டு. குறிப்பாக நீண்டகால விளைவுத்தாக்கம் தொடர்பான தெளிவின்மைகள் அதிகம். ஏனெனில் நாம் கடந்தகாலத்தில் அனுபவித்திராத முற்றிலும் வேறுபட்ட நெருக்கடி இது. இருப்பினும் நீண்டகால ‘முறியடிப்பு அணுகுமுறை’யின் இழப்புகள் ‘கட்டுப்படுத்தல் அணுகுமுறை’யின் இழப்புகளை விட அதிகமானவை.

பொதுவான தொற்றுப்பாதுகாப்புத் திட்டங்களுடன் அண்ணளவாக 3 மாதங்களுக்கான முறியடிப்பு மூலோபாயம் அமுற்படுத்த முடியுமாயின், அதனை கட்டுப்படுத்தல் அணுகுமுறையின் விளைவுகளுடன் ஒப்புநோக்க முடியும். ஓட்டுமொத்தமாக மூலோபாயத் தேர்வென்பது, தீவிரமானதும், தெளிவான இலக்குகளைக் கொண்டதும், தொற்றுப்பரம்பலை அதிகுறைந்த நிலையில் பேணுவதற்குரிய வாய்ப்புகள் எவை என்ற எமது நம்பிககைகளின் அடிப்படைகளிலுமே தங்கியுள்ளது

ஓப்பீட்டளவில் ஒரு முறியடிப்பு அணுகுமுறை, குறிப்பிட்ட குறுகிய காலத்திற்குள் குறைந்தளவு பாதிப்புகளைக் கொண்ட திட்டங்களோடு – பரந்துபட்ட தொற்றுப்பரிசோதனை, தொற்றுக்கண்காணிப்புகளோடு அடுத்தநிலைக்கு நகர்த்தப்படுமாயின் அது உகந்த தெரிவாக இருக்கும். ஆனால் இன்றைய சூழ்நிலையில் அதன் சாத்தியப்பாடு கேள்விக்குரியது.

நன்மைகளும் தீமைகளும்

இரண்டு மூலோபாயத் தெரிவுகளிலும் நன்மைகளும் தீமைகளும் உள்ளன. கட்டுப்படுத்தல் மூலோபாயம் தொற்றுத்தடுப்பு சார்ந்த அதீத தாக்கங்களை ஏற்படுத்தும் சில திட்டங்களில் நெகிழ்வுப்போக்கிற்கு இடமளிக்கிறது. பெருமளவு மக்களுக்குக் தொற்றினைப் பரவவிடுவதன் மூலம் கூட்டு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகுவதோடு, புதிய பரம்பலை எதிர்ப்பதற்குரிய வலு பெறப்படுகின்றது.

இது தொற்றுப்பரம்பலின் காலநீளத்தைக் மட்டுப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்துகிறது. அதேவேளை ‘முறியடிப்பு அணுகுமுறை’ மனித உயிரிழப்புகளையும், பிற விளைவுகளையும் குறைக்கின்றது. எமது அறிக்கை சமர்;ப்பிக்கப்பட்டதை அடுத்து, நோர்வேயின் பொது சுகாதார மையம் தொற்றுப் பெருக்க விகிதாசாரம் தொடர்பான புதிய மதிப்பீட்டினை முன்வைத்துள்ளது. அதில் தொற்றுப்பெருக்க எண் (Reproduction number) அண்ணளவாக 0.7 என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடே சிறார்பராமரிப்பு முன்பள்ளிகள், ஆரம்பப் பாடசாலைகள் போன்ற அதிக சமூகப்பாதிப்பை ஏற்படுத்திய முடக்கத் திட்டங்களைப் படிப்படியாகத் திறப்பதென்ற அரசாங்கத்தின் முடிவுக்கான அடிப்படையாகக் கொள்ளப்படுகின்றது. இது எமது கணிப்பீடுகளைவிடக் குறைந்த செலவுகளுடையது.

இதுவும் நாம் வெளிப்படுத்தாத முக்கிய தெளிவின்மைகளைக் கொண்டுள்ளது. தொற்றுக்கு உள்ளாகிக் குணமாகிய நோய், எதிர்ப்புசக்தியைக் கொடுக்கின்றது என்பதை எமது மதிப்பீட்டில் அடிப்படையாகக் கொண்டோம். இது அனுமானம், ஆனால் இன்றைய சூழலில் உறுதிப்படுத்தப்படாதது. முற்றாகக் நீக்கி அழித்தல் மூலோபாயம் ஒருகட்டத்தில் தடுப்பூசி கண்டடையப்படும் என்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆயினும் அதுவும் உறுதிப்படுத்த முடியாதது. குணமாகிய தொற்று, எதிர்ப்புசக்தியை வழங்கவில்லையெனும் பட்சத்தில், தடுப்பூசி பயனளிக்கும் என்பதுவும் ஐயத்திற்குரியது. எமது தெரிவுகள் சார்ந்த வாய்ப்புகளில் ஏனைய நாடுகளின் நிலைமைகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்கள் மற்றும் அவற்றின் தீர்மானங்களும் தாக்கத்தை ஏற்படுத்தின.

மருத்துவத்துறை தாங்குசக்தியுடையதாக இருத்தல் வேண்டும் 

மூலோபாயத் தெரிவுகளுக்கு அப்பால், மருத்துவத்துறை துரிதகதியில் இயங்குவதற்குரிய வளங்களையும் செயல்வலுவினையும் தாங்குசக்தியினையும் கொண்டிருப்பது முக்கியமானதாகும். தற்போது நாம் ஒரு முறியடிப்பு மூலோபாயத்தினைக் கைக்கொள்ளினும், அடுத்த இன்னொரு கட்டத்தில் தொற்றினைக் கட்டுப்படுத்தும் மூலோபாயத்திற்கு மாற்றவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம். அத்தகைய சூழலில் அதனைக் கையாள்வதற்கு உரிய தாங்குசக்தியை மருத்துவத்துறை கொண்டிருக்க வேண்டும்.
அதேவேளை தொற்றுப்பரம்பலை நுணுக்கமான முறையில் கண்காணிப்பதற்கும், தெளிவான விளைவுத்தாக்கம் மிக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குமுரிய தொழில்நுட்ப வளம், ஆய்வுகள், மதிப்பீடுகளில் கவனம் செலுத்துவது அவசியமானது.

Steinar Holden
பேராசிரியர், பொருளியல் பீடம், ஒஸ்லோ பல்கலைக்கழகம்

தமிழாக்கம்: ரூபன் சிவராஜா

http://thinakkural.lk/article/39275

 

 

 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.