Jump to content

எங்கள் கதைகளை எழுதுவதே எனக்கு பிடித்த எழுத்துப்பணி - வெற்றிச்செல்வி.!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

எங்கள் கதைகளை எழுதுவதே எனக்குப் பிடித்தமான எழுத்துப் பணி : வெற்றிச்செல்வியுடன் சில நிமிடங்கள்..

Vetti-2.jpg

எழுத்திலும் சரி, வாழ்விலும் சரி, போராட்டத்திலும் சரி முன்னூதாரணமாக இருப்பவர் போராளி வெற்றிச்செல்வி.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 18 வருடங்கள் போராளியாக செயற்பட்ட வெற்றிச்செல்வி வெடி விபத்தொன்றில் ஒற்றை கையையும் கண்ணையும் இழந்த மாற்றுத்திறனாளி.

நாவல், கவிதை, சிறுகதை என ஆக்க இலக்கியங்களை படைத்து வரும் இவர், இப்போது கொரோனா பேரிடர் காலத்தை எப்படி கடந்து வருகிறார் என வினாவினோம். வணக்கம் லண்டனுக்கு போராளி வெற்றிச்செல்வி அளித்த சிறு நேர்காணல் இது. -ஆசிரியர்

கொரோணா காலத்தை எப்படிக் கடக்கிறீர்கள்?

பெருமளவான காலம் வீட்டில் இருக்கக் கிடைத்ததை நல்லதொரு வாய்ப்பாக அமைத்துக் கொள்ள முடிந்தது. என்னையும் என்னைச் சுற்றியும் இயற்கையின் அற்புதங்களை, மேலும் மேலும் உணர பெரும் வாய்ப்பாக இக்காலத்தைப் பயன்படுத்த இயலுமாக இருந்தது. இயற்கை விவசாயத்தின் மீதான பெரும் ஈர்ப்புடன் ஆரம்பித்திருந்த செயற்பாடுகளுக்கு இக்காலம் பெரும் வரவேற்பை வழங்கியிருக்கிறது.

Vetti1.jpg

தொண்டர்களுடன் தொலைபேசியிலேயே வேலை செய்யும் இணைப்புத் திறன் வளர உதவியிருக்கிறது. வீட்டில் இருந்துகொண்டே வேறு மாவட்டங்களில் வாழும் மாற்றுத்திறனாளிகளுக்காகவும் வேலை செய்ய முடிந்திருக்கிறது. நல்ல பல நட்புறவுகளைக் கட்டியெழுப்பியிருக்கிறது. போதுமானளவு சக்தியை மீதப்படுத்தியும் இருக்கிறது.

இக்காலத்தில் என்ன இலக்கிய முயற்சிகள் நடக்கின்றன?

“எங்களின் கதைகளை எழுதுதல்” என்பது எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்துப்பணி. அதனால் எழுத விரும்புவோர் அனைவரும் எழுதுவதற்கான வாய்ப்புகளை வழங்குவதில் ஈடுபாடுண்டு. வாழ்வியல் பதிவுகளை உள்ளது உள்ளபடி பதிவாக்கும் தொகுப்பு முயற்சியின் 3 ஆவது படியில் ஏறிக்கொண்டிருக்கிறேன்.

“பங்கர்” வாழ்வியல் பதிவுகள் எனும் தலைப்பின்கீழ் சேர்க்கத் தொடங்கிய வாழ்வியல் பதிவுகளில் இதுவரை 28 பதிவுகள் சேர்ந்துள்ளன. மிகவும் பெறுமதியான வாழ்வியல் பதிவுகள் அவை. நூல் வடிவமைப்பு வேலையை அரம்பித்து விட்டோம்.

புதிய இளம் எழுத்தாளர்களாக வளர்ந்துவரும் சித்ரா மற்றும் குணவதனி ஆகியோரது சிறுகதை நூல்கள் இரண்டிலும் தற்போது வேலை செய்து கொண்டிருக்கிறேன். அவையும் விரைவில் வெளிவரும்.
போருக்குப் பின்னான வாழ்வியல் குறித்து நாவல் ஒன்றை எழுத ஆரம்பித்துள்ளேன்.

சில அத்தியாயங்கள் நகர்ந்துள்ளன. அத்துடன் மதிப்பார்ந்த நண்பர் வசீகரன் குலசிங்கம் அவர்களது வழிப்படுத்தலில் நடைபெறும் ‘எங்கட புத்தகங்கள்’ படைப்புகள் சார்ந்த போட்டிகளிலும் இயன்றளவு ஒத்தாசைகளை வழங்கி வருகிறேன்.

இச்சுழலில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் எவை?

உண்மையிலேயே சிக்கல்கள் இருக்கின்றன. அதில் அரைவாசிக்கு மேலுள்ள சிக்கல்கள் மனச் சிக்கல்கள். அச்சிக்கல்களை அவர்கள் அவர்களை அவர்களுக்குள் அறிந்தால் மட்டும்தான் நிவர்த்தி செய்ய முடியும்.

உடல்நிலையில் பாரிய சவால்களை உடைய மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவர்களதும் நண்பர்களதும் குடும்ப உறவினர்களதும் அன்பும் ஒத்துழைப்பும் சிகிச்சையும் அக்கறையும் மிக மிக அவசியமாகும். அவற்றை ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளதும் பார்வை வட்டத்திற்குள் உள்ள சக மனிதர்கள் பொறுப்பெடுக்க வேண்டும்.

சுயதொழில்களில் ஈடுபட்டுவரும் மாற்றுத் திறனாளிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான சவால்கள் இருக்கின்றன. தற்போதைய சூழலுக்கு விற்பனை செய்ய முடியாத உற்பத்திகளால் அவர்கள் வருமானம் ஈட்ட இயலாது.

vetty.jpg

மாற்றுத்திறனாளிகளும் ஒன்றுக்கு மேற்பட்ட கைத்தொழில்ககளைச் செய்யத் தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக பசுக்களை வைத்திருப்பவர்கள் பால் பண்ணைக்கு பால் வழங்க முடியாத சூழல் எனில் தயிருக்குப் போட்டுவிட்டு, மலிந்துபோய்க்கிடக்கும் பச்சை மிளகாயை வாங்கி வரலாம். தயிரை மோராக்கி மோர் மிளகாய் போட்டு சேமிக்கலாம்.

மோரை எடுக்கும்போது மிகப்பெறுமதியான பசு நெய்யையும் தயாரிக்கலாம். கிராமத்தில் இருந்தே ராஜ வாழ்க்கை வாழ்வதற்கான வழிகளை கண்டடைய தன்னம்பிக்கையும் முயற்சியும்தான் முதல் முதலீடுகள்.

இவை இரண்டையும் யாரும் யாரிடமிருந்தும் வாங்க முடியாது. அன்றாடம் உணவுக்கு உலருணவு அன்பளிப்புகள் தாராளமாகக் கிடைக்கின்றன. (அப்படி யாருக்கும் கிடைக்கவில்லை எனில் அறியத்தாருங்கள்.)

நேர்காணல் – பார்த்தீபன்

http://www.vanakkamlondon.com/vettychelvi-25-04-2020/

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • இந்திய மீனவர்கள் செய்வது திருட்டு , திருட்டுக்கு எப்படி நட்டஈடு கோருவது?  திருட்டுக்கு தண்டனை அடி உதை , சிறை,பறிமுதல்தான். மஹிந்த ஆட்சிக்காலத்தில் சுப்பிரமணி சுவாமி கொடுத்த ஐடியாவில் படகுகளை பறிமுதல் செய்து இலங்கை மீனவர்களுக்கு ஏலம் விடுவது,கடற்படை பாவனைக்கு வழங்குவது, கரைகளில் நிறுத்தி வைத்து ஒன்றுக்கும் உதவாமல் பண்ணுவது என்று அது ஒரு சிறந்த திட்டம்தான். இந்திய இழுவைப்படகுகள் வலைகள்  இலங்கை பெறுமதியில் கோடிகளில் பெறுமதியானவை, ஓரிரு லட்சம் பெறுமதியான மீனை திருட வந்து குத்தகைக்கு எடுத்துவரும் கோடி பெறுமதியான படகை இழப்பது மீனவர்களுக்கும், ஆபத்து படகின் உரிமையாளர்களுக்கும் ஆபத்து & பெரு நஷ்டம். பின்னாளில் இந்திய அரசின் அழுத்தத்தால் அது கைவிடப்பட்டது. அது ஒருகாலமும் சாத்தியம் இல்லை, யுத்தம் நடக்கும் ஒருநாட்டுக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபடும்போது அந்நாட்டு படைகளால் கொல்லப்பட்டால் அதற்கு இருநாட்டு அரசுகளும் எந்த பொறுப்பும் ஏற்காது. எந்த நட்ட ஈடும் தராது. யுத்த பூமிக்குள் அத்துமீறி நுழைந்து உயிரைவிட்டுவிட்டு, செத்துபோனோம் காசு தாருங்கள் என்றால் எந்த தெய்வம்கூட அவர்களுக்கு உதவாது. இலங்கை மீனவர்களை  சிங்களவன் கொத்தி குதறி மீன்பிடியை முற்றாக தடை செய்த காலத்தில் அந்த இடைவெளியை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் இலங்கை பரப்பில் வந்து மீனள்ளி போவது ஒருவகையில் தண்டிக்கப்படவேண்டிய இரக்கமற்ற நியாயம்தான். சில தமிழக செய்தி தளங்களில், இலங்கை அகதிகளுக்கு எப்படியெல்லாம் நாங்கள் உதவி செய்தோம், அவர்கள் நன்றிகெட்ட தனமாக இப்போது இலங்கை கடற்படைக்கு ஆதரவாக நின்று எம்மை கொல்கிறார்கள், கைது செய்கிறார்கள் என்று பின்னூட்டம் இடுகிறார்கள். அதாவது பசிக்கு சோறுபோட்டால், அவனை பட்டினிபோட்டு கொல்லவும் நமக்கு உரிமை இருக்கு என்கிறார்கள். பட்டினி போட்டு கொல்வதை நீங்கள் நியாயப்படுத்தினால் அப்புறம் ஏன் அவன் பசிக்கு சோறு போட்டதை பெருமையாக சொல்கிறீர்கள் என்பதை அவர்களிடம் கேட்டுத்தான் தெளிவு பெறவேண்டும்.
    • தமிழர்களுக்குள் இருக்கும் மொழி சார்பான புரிதல் சிங்களவர்களுக்குள் இல்லை.  எந்த விடயமாகினும் தமிழர்கள் முக்கித்தக்கி சிங்களத்தில் கதைக்க முயற்சிப்பார்கள். அவர்கள் அப்படியல்ல.
    • என்ன செய்யிறது கோதாரி பிடிச்ச அரசியல்வாதிகள் ...என்னை குசும்புக்காரன்களாக மாற்றி விடுகிறார்கள்... அவனை மாற சொல்லுங்கள் நான் மாறுகிறேன்😅
    • வஞ்சகத்தையும் கபடத்தனத்தையும் பற்றி எழுதுவதற்கும் ஒரு யோக்கியதை வேணுமெல்லோ என்று பட்சி  ஒன்று சொல்லுது........🤣
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.