Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இடையில் மாற்றமடைந்ததா சீனாவின் உணவுக் கலாசாரம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இடையில் மாற்றமடைந்ததா சீனாவின் உணவுக் கலாசாரம்?

உணவு பழக்கவழக்கமென்பது நாட்டுக்கு நாடு மாறுபடக்கூடியவொன்றுதான் . என்றாலும் தென்கிழக்காசியாவின் உணவுக்கலாசாரம் என்பது மற்றைய நாடுகளில் உள்ள பலரையும் மிரளவைத்து விடுகின்றதென்றால் அது மிகையில்லை!

அவ்வகையில் சீனர்கள் ஏன் நமக்கு அருவருப்பாக தெரியக்கூடிய பலவற்றையும்கூட உணவாக உண்ணுகின்றனர் என்பதே இன்றைய இக்கட்டுரையின் கரு .

இன்றைய சூழலில், உலகில் உள்ள அனைவருக்குமே China என்றாலே கடுங்கோபம் வருமளவிற்கு அந் நாட்டிலிருந்து பரவிய covid19 கொரோனா வைரஸ் இந்த உலகத்தையே ஆட்டி படைத்து வருகின்றது! கொரோனா மட்டுமல்ல இதற்கு முன் பரவிய சார்ஸ் (2002) போன்ற வைரஸ்களும்கூட சீனாவின் whuhan மானிலத்திலுள்ள ” wildlife market ” என்கிற வனவிலங்குகளின் இறைச்சி சந்தையிலிருந்தே உருவாகி பரவியிருக்கின்றது எனக்கூறப்படுகின்றது .

சராசரியாக நூறு வயதுவரை வாழக்கூடிட சீனர்கள் அதிகப்படியான அசைவ உணவுப்பிரியர்கள் . அசைவம் என்றால் நாம் உண்ணும் கோழி , ஆடு ,மாடு , பன்றி போன்றதன்று இது ! தேள் , பூரான் , வெட்டுக்கிளி , வண்டு,சிலந்தி , ஜெல்லி பிஷ் , கடல்குதிரை , தவளை தொடங்கி வன விலங்குகளான எறும்புண்ணி , முதலை , நாய் , பூனை யார்க் , ஒட்டகம் என இன்னும் என்னென்னவோ எல்லாம் உணவாக உற்கொள்ளப்படுகிறதெனலாம்

 

காலங்காலமாக கண்ட விலங்குகளையெல்லாம் பிடித்துத் தின்றவர்களில்லை சீனர்கள் (எனினும் புராதன சீன உயர்குடி மக்கள் விதிவிலக்காக சில உணவுகளை மட்டும் எடுத்துக்கொண்டார்களாம். உதாரணத்திற்கு சுறாவின் துடுப்புப் பகுதியினை உண்பதன் மூலம் தாங்கள் வளத்துடன் வாழ்வதாக நம்பிக்கை கொண்டிருந்தனராம்) எனினும் பிற்காலத்தில் வனவிலங்குகளையும், விஷ ஐந்துக்களையும் உண்ணும் பழக்கம் அவர்களிடம் உருவானதெப்படி ?

இந்த சோகமான வரலாறு ஆரம்பித்தது 1959இன் இறுதிப்பகுதியில்தான் ! இதற்குமுன் இந்த கட்டுரையினை வாசித்துக்கொண்டிருக்கும் உங்களிடம் ஓர் கேள்வி , நம்மை யாரோ ஓரிடத்தில் பிடித்து உணவோ குடிநீரோ இன்றி பல நாட்களாக அடைத்து வைத்துவிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம் இன்னும் நாம் உயிர்வாழப்போவது சில மணிநேரங்கள் மட்டுமே என்ற நிலையில் , அவ்விடத்தே ஓர் எலியையோ , பாம்பையோ கண்ணுறுகின்றோம், அப்போது நமக்கு என்ன செய்யத்தோன்றும் ? உயிர் வாழ்ந்தேயாக வேண்டும் என்ற எண்ணம் வந்தால் நிச்சயமாக அந்த பாம்பினையோ எலியையோ பிடித்து உன்றுவிடத்தான் முனைவோம் இல்லையா ? இந்தமாதிரியான ஓர் இக்கட்டான சூழ்நிலைதான் சீனர்களுக்கு வந்தது .

ஆம் , ‘சீனப் பெரும் பஞ்சம் ‘! 1956 ஆம் ஆண்டிற்குப்பின் யாருமே எதிர்பாராத அளவிற்கு சீனாவில் பெரும் பஞ்சம் ஏற்பட்டது . இந்த பஞ்சத்தினால் பல லட்சக்கணக்கான மக்கள் கொத்துக்கொத்தாக இறந்துபோக ஆரம்பித்தார்கள் ! இந்த பஞ்சமே இன்றுவரையில் உலகில் ஏற்பட்ட மிகப்பெரிய பஞ்சமாக சொல்லப்படுகின்றது . ஏனெனில் இந்த பஞ்சத்தினால் மட்டும் 1959_ 1961 வரையிலான காலப்பகுதியில் கிட்டத்தட்ட மூன்று முதல் நாலரைக்கோடி மக்கள் உணவின்றி இறந்து போனார்களாம் . இது முதலாம் உலகப்போருடன் ஒப்பிடுகையில் இரு மடங்கு உயிர்ச்சேதம் !

1930 களில் ஸ்டாலின் உக்ரைன் மக்களை பட்டினிபோட்டு சாகடித்தாராம் , அதில் இறந்தவர்களில் ஆறு மடங்கு அதிகமான உயிர்ச்சேதம் ! இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரால் இறந்தவர்களைவிட எட்டு மடங்கான உயிர்ச்சேதம் ! அந்த அளவிற்கு கொடுமையாக இருந்திருக்கின்றது இந்தப்பஞ்சம் !

சீனாவின் இந்தப் பஞ்சமானது மோசமான கால நிலையினாலும் , பலதரப்பட்ட சமூக காரணிகளினாலும் , மோசமான பொருளாதார நிர்வாகத்தினாலும், அரசாங்கத்தின் திடீர் கொள்கைமாற்றத்தினாலும் ஏற்பட்டதெனலாம் .

சீன கம்யூனிசக்கட்சி தலைவர் மாசே துங் விவசாய நிலங்களை தனியாரிடமிருந்து பிடுங்கி அரசு மயப்படுத்தினர் , இதன்படி மக்கள் பயிரிடும் விளைச்சலில் நான்கில் மூன்று பகுதியினை அரசிடம் கொடுத்துவிடவேண்டும் , மீறுவது தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டது . மேலும் ” ஆழ உழுதல் ” என்ற கொள்கையின் படி வழக்கமாக உழவர்களால் 15_20 cm வரையில் உழப்பட்ட முறைமை மாற்றப்பட்டு அரசின் புதிய கொள்கையின்படி 1_ 2 அடி வரையில் உழுவதன்மூலம் நிலத்திற்கு அடியில் உள்ள வண்டலை பயிர்களின் வேர்கள் பயன்படுத்தி விளைச்சல் பல்கிப் பெருகும் என்றெதிர்ப்பார்க்கப்பட்டது . ஆனால் , இதனால் தேவையற்ற கற்களும் மணலும் மேலேவந்து பயிர்களின் வளர்ச்சியினை பாதிப்படையச் செய்துவிட்டன .

மேலும் இரும்புத்தாது , இரும்புத்தகடு போன்றவற்றின் உற்பத்தி பொருளாதார முன்னேற்றத்தின் காரணிகளாக கருதப்பட்டதால் கோடிக்கணக்கான உழவர்கள் விவசாயத்தினை விட்டுவிட்டு இரும்பு ஆலைகளில் பணியாற்ற கட்டளையிடப்பட்டனர் . இதுபோன்று விவசாயமும் வணிகமும் அரசால் கட்டுப்படுத்தப்பட்டதால் மக்கள் பெரும் சமூக அழுத்தத்திற்கு உள்ளானார்கள் . அதுமட்டுமன்றி இயற்கையும் இந்த காலகட்டத்தில் விவசாயிகளை கைவிட்டுவிட்டது .

79-1-300x200.jpgஅன்றைய காலகட்டத்தில் சீனாவின் மக்கள்தொகை கிட்டத்தட்ட தொண்ணூறு கோடி ! எவ்வளவு உணவுற்பத்தி செய்தாலும் அது அந்த மக்கள் தொகைக்கு போதுமானதாக இல்லை . நாட்டின் பஞ்ச நிலையினை சீன அரசால் சமாளிக்க முடியவில்லை . அப்போதுதான் சீனமக்கள் ஓர் முடிவுக்கு வந்தனர் . தாம் உயிர் வாழ வேண்டுமாயின் கையில் சிக்கும் எதையாவது பிடித்து தின்று தீர்த்துவிட வேண்டும் .

அப்போதைய நிலையில் உண்ண ஏதேனும் கிடைக்குமா என்றுதான்பார்த்தார்களேயொழிய இதையெல்லாம் தின்றால் நோய் வருமா ? வைரஸ் வருமா என்றெல்லாம் யோசித்திருக்க நிச்சயமாக வாய்ப்பில்லை அல்லவா ?

 

மனிதர்களை மனிதர்கள் உண்டதாகவும் சில குற்றவியல் வழக்குகள் பதியப்பட்டுள்ளது

அப்போதைய அசாதாரண சூழலில் !

இப்படி கிடைப்பதையெல்லாம் சாப்பிட ஆரம்பித்தவர்கள் , உணவுத்தேவைக்காக குறித்த வனவிலங்குகளை வீட்டின் கொல்லைப்புறத்தில் வளர்க்க ஆரம்பித்தனர் . சீன அரசும் எப்படியாவது மக்கள், பஞ்சத்தில் இருந்து மீண்டால் சரி என எண்ணியதால் அவர்களாலும் இதை தடுக்க இயலாது ஆதரிக்க ஆரம்பித்தனர் . 1981 இல் சீனாவில் இயற்றப்பட்ட வன விலங்குப் பாதுகாப்பு சட்டத்தில் article 3 இன் படி வனவிலங்குகளின் வளர்ப்புக்கு அதிகாரபூர்வமாக அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன் , article 17ன் படி வனவிலங்குகளின் இனப்பெருக்கத்தினை அரசு ஊக்குவிப்பதாகவும் சட்டமியற்றப்பட்டது . இச்சட்டத்தின் பின் வீட்டின்கொல்லைப்புறங்களில் வனவிலங்குகளை வளர்த்தவர்களெல்லாம் மிகப்பெரிய பண்ணைகளையே ஆரம்பித்துவிட்டனர் .

அவ்வளவுதான் , அதன்பின் சீனாவின் பொருளாதாரத்தின் மிகப்பெரிய அஸ்திவாரங்களில் ஒன்றாக இந்த வனவிலங்குகளின் இறைச்சி சந்தைகள் மாறத்தொடங்கின . அனைத்துவிதமான வனவிலங்குகளும் வளர்க்கப்பட சீன பொருளாதாரம் வளர்ந்ததோடு மட்டுமன்றி பல வைரஸ்களும் அவற்றோடு இணைந்து பரவத்தொடங்கியது . இதன் முதலடியாய் 2002ல் புழுகுப் பூனையிடமிருந்து உருவாகியதாக சொல்லப்படும் சார்ஸ் வைரஸ் உலகெங்கிலும் பரவத்தொடங்கி பலரது உயிருக்கு உலைவைத்தது . இதனால் சீன அரசாங்கம் 2002 பெப்ரவரி மாதம் இந்த சந்தைகளுக்கு தடை விதித்தது . எனினும் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் இந்த சந்தைகள் திறக்கப்பட்டுவிட்டன . ஆனாலும் இப்போது உருவாகியுள்ள கொரோனா வைரஸ் முன்னைய வைரஸ்களின் பரவும் விகிதத்தினைவிட இது பரவும் விகிதம் மிக மிக அதிகம் .

இதனால் இந்தவருடம் (2020) ஜனவரி மாதம் மீண்டும் இந்த whuhan மாநிலத்தில் உள்ள wildlife market மூடப்பட்டதுடன் , இதுபோன்ற மேலும் பல சந்தைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது . எனினும் இவ்விடத்தே குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் சீன அரசாங்கத்தால் தற்போது மூடப்பட்டுள்ள சந்தைகளின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இருப்பதாயிரத்துக்கும் மேல் , ஆனால் வெறும் 3725 சந்தைகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது . அந்த அளவிற்கு வெறும் பணத்திற்காக இன்றைய காலகட்டங்களில் இந்த சந்தைகள் இயங்கிவந்திருப்பது கண்கூடு !

80-1.jpgஎனினும் இன்னுமோர் விடயத்தினையும் நாம் இங்கே கவனித்தாக வேண்டும் , எப்படி நம்முடைய பொதுப்புத்தியில் இறைச்சிக்காக கோழியையும் , ஆட்டையும் , மாட்டையும் , பன்றியையும் உண்பது தவறில்லை என்று காலங்காலமாக பதியப்பட்டுள்ளதோ , அதேபோல் கிட்டத்தட்ட இந்த 50 வருடங்களில் சீனர்களின் பொதுப்புத்தியில் இறைச்சிக்காக நாய் , பூனை , முதலை , எலி , நரி , என எல்லாவற்றையுமே பக்குவப்படுத்தி உணவாக உண்ணலாமென பதியப்பட்டுவிட்டதென்பதே மறுக்கவியலா உண்மை ! சீனர்களுக்கு இவற்றையெல்லாம் உண்பது தவறில்லை எனத்தோன்றுவது மிக இயல்பானவொன்றே .

எப்படி நம்முடைய அசைவ உணவுப்பட்டியல் நமக்கு அருவருக்கவில்லையோ , அதேபோல் அவர்களுக்கு அவர்களின் அசைவ உணவுப்பட்டியல் அருவருக்க வாய்ப்பேயில்லை அல்லவா ?

சீனர்களின் உணவு முறை விமர்சனத்திற்கு உள்ளான ஒன்றுதான் என்றபோதிலும் , உலகிலேயே அதிகநாள் ஆயுளைக் கொண்டவர்களும் அவர்கள்தான் என்பதையும் நாம் நினைவு கூர்ந்தேயாகவேண்டும் ! இப்படியானதோர் உணவுக்கலாசாரம், சூழ்நிலையால் சீனாவில் அறிமுகமானாலும் , இன்றைய சீனர்கள் இவற்றையெல்லாம் தாம் உண்பதற்கு காரணம் அவற்றில் இருக்கும் மருத்துவ குணமே என்கின்றனர் . ஆனால் அவர்களது கூற்றுக்கு எந்தவிதமான அறிவியல் சான்றுமில்லை என்றே கூறவேண்டும் . இங்கே நாம் மற்றுமோர் விடயமதனையும் கவனிக்கவேண்டும் , என்னவெனில் சீனர்கள் அனைவருமே நாயையும் , பூனையையும் , எலியையும் உண்கின்றார்களா என்றால் , நிச்சயமாக இல்லை . பெரும்பாலானோர் அவற்றை உண்பதில்லை என்பதோடு இம்மாதிரியான சந்தைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களாகவே இருக்கின்றனர் .

எது எப்படியோ ” சீனர்கள் சாப்பிட்ட வன பிரியாணிக்காக , இன்று இந்த உலகமே 20 நொடிகளுக்கு கைகழுவிக்கொண்டிருக்கிறது என்பதே நகைச்சுவையான உண்மை போலும்!

 

http://thinakkural.lk/article/40732

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.