Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழின அழிப்பில் முஸ்லின் ஆயுதக்குழுக்களின் உருவாக்கமும் பயன்பாடும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 4 people, people sitting

Image may contain: 3 people, people sitting

Image may contain: 1 person, crowd

Image may contain: one or more people and people sitting

தமிழின அழிப்பு நோக்கோடு கிழக்கில் தமிழ் - முஸ்லீம் பகைமூட்டி.. தமிழ் மக்களின் இருப்பை அழிக்க முஸ்லிம் மதவாதக் குழுக்களுக்கு ஆயுதமும் பயிற்சியும் அளித்துள்ள சிங்களப் பேரினவாத அரசு.. ஆயுதக் கையளிப்பு தொடர்பான படங்கள். 

இந்த இன அழிப்பு வடிவத்தை வடக்கில் தமது ஆதிக்கத்தை இழந்திருந்த நிலையில்.. முஸ்லிம்கள் மூலம் செய்ய முற்பட்டு.. அது கண்டறியப்பட்ட நிலையில் தான் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் 1990 இல் விடுதலைப்புலிகளால்.. பாதுகாப்பு நகர்த்தலுக்கு இலக்காகினர். 

இன்று உண்மைகள் காட்சிகளாக வெளிவருகின்றன. 

மேலும்.. 

=====================================

பேரினவாதத்துடன் கைகோர்த்த சில முஸ்லீம்களால் சிதைந்து போன தென்தமிழீழம்,
********************************************
தென்தமிழீழத்தின் சம்மாந்துறை படுகொலை, சித்தாண்டி படுகொலை, பொத்துவில் படுகொலை, கல்முனை படுகொலை, துறைநீலாவணை படுகொலை, ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை, கோராவெளி ஈச்சையடித்தீவு படுகொலை, ஏறாவூர் படுகொலை, நற்பிட்டிமுனை படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை என தென்தமிழீழத்தில் திட்டமிடப்பட்டு இன அழிப்பு மேற்கொள்ளப்பட்டது.

ஊர்க்காவல் படையினர் ஆயுதம் தாங்கிய புலிகளை எதிர் கொள்ள இயலாத முஸ்லிம் ஊர்க்காவல் படையினர், சிங்கள இராணுவத்துடன் சேர்ந்து அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்ய ஆரம்பித்தனர். 1990 ஆம் ஆண்டு ஆகஸ்டு 6 ஆம் தேதி இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் “திராய்க்கேணி” என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலை சிறப்பு அதிரடிப் படையினரின் ( STF) உதவியுடன் முஸ்லிம் ஊர்க்காவல் படையினரால் 47 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். திராய்க்கேணி கிராமம் மட்டக்களப்பு நகரில் இருந்து தெற்கே 70 கிமீ தொலைவில் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. STF உதவியுடன் திராய்க்கேணி கிராமத்தினுள் நுழைந்த முஸ்லிம் ஊர்க்காவல் படை அங்குள்ள கோயிலில் தஞ்சமடைந்திருந்த 47 தமிழர்களைப் படுகொலை செய்தனர். வீடுகளினுள் வைத்து முதியவர்கள் பலர் உயிருடன் தீவைத்துக் கொளுத்தப்பட்டனர். 350 வீடுகள் முஸ்லிம் ஊர்க்காவல் படையால் தீக்கிரையாக்கப்பட்டன.

அங்கு சரோஜா என்ற 13 வயதுச் சிறுமி ஒருத்தி கடத்தப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டாள். காலை ஏழு மணிக்கு ஆரம்பமான இப்படுகொலைச் சம்பவம் மதியம் வரை நீடித்திருந்தது. இப்படுகொலைகளை அடுத்து அக்கிராமத்தில் இருந்து வெளியேறிய மக்கள் காரைத்தீவு அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டு 4 ஆண்டுகளுக்குப் பின்னரே ஊர் திரும்பினர். இப்படுகொலைகள் குறித்து முழுமையான விசாரணைகள் வேண்டும் எனக் குரல் கொடுத்த திராய்க்கேணி கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஈ. மயிலைப்போடி என்பவர் 1997 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார்.

1990 செப்டம்பர் 9ஆம் தேதி மட்டக்களப்பில் மிகப்பெரிய இனப்படுகொலை நடைபெற்றது. சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, திராய்மடு கிராமங்களை சேர்ந்த 198 பொதுமக்கள் அன்று மாலை “சத்துருக்கொண்டானில்” இருந்த இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டதாக காயங்களுடன் தப்பி வந்த சிவகுமார் என்ற இளைஞர் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார். கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்கியிருந்தன. எட்டு மாத குழந்தை விஜயகுமார், 3 மாத குழந்தைகளான பிரியா, வேணுதாஸ் ஆகியோரையும் இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினரும் இரண்டு துண்டுகளாக வெட்டி எரியும் நெருப்பில் போட்டனர் என இச்சம்பவத்தை நேரில் கண்டவர் தெரிவித்திருந்தார்.

இச்சம்பவத்தில், 8வயதுக்கு உட்பட்ட 68 சிறுவர்கள் படுகொலை செய்யப் பட்டிருந்தனர். கொல்லப்பட்டவர்களில் 80க்கு மேற்பட்டவர்கள் பெண்கள். இவர்கள் மிகக்கொடுமையாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

25 வயதுடைய ஜீவமலர் என்ற பெண்ணின் கையில் இருந்த மூன்று மாதக் குழந்தை பிரியாவை பறித்தெடுத்து வெட்டி வீசிய படையினர் அப்பெண்ணை இழுத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த பின் வெட்டி கொன்றனர். இந்தப் படுகொலையில் இராணுவத்துடன் முஸ்லீம் ஊர்க்காவல் படையும் இனப் படுகொலை புரிந்தனர் என்பது பின்னர் தெரிய வந்தது.

காயங்களுடன் தப்பிச் சென்ற சிவகுமார் என்ற இளைஞரை இராணுவம் தேடிய போது மட்டக்களப்பு மக்கள் குழுவும் ஆயர் இல்லமும் அவரை மறைத்து வைத்து வைத்தியம் செய்து காப்பாற்றியிருந்தனர். இதன் பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் அவர் இந்த படுகொலைகள் பற்றி சாட்சியம் அளித்திருந்தார்.

சம்மாந்துறை படுகொலை, சித்தாண்டி படுகொலை, பொத்துவில் படுகொலை, கல்முனை படுகொலை, துறைநீலாவணை படுகொலை, ஏறாவூர் வைத்தியசாலை படுகொலை, கோராவெளி ஈச்சையடித்தீவு படுகொலை, ஏறாவூர் படுகொலை, நற்பிட்டிமுனை படுகொலை, புதுக்குடியிருப்பு படுகொலை, கொக்கட்டிச்சோலை படுகொலை என கிராமம் கிராமமாக ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1990ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா விசேஷ அதிரடிப்படையினருடன் சேர்ந்து சம்மாந்துறை மற்றும் அதனை சூழவுள்ள முஸ்லீம்கள் வீரமுனை தமிழ் மக்களை வெட்டிக்கொலை செய்து அக்கிராமத்திலிருந்து வெளியேற்றியிருந்தார்கள்.

தற்போது அண்மைக் காலத்தில் தான் அவர்கள் மீண்டும் வீரமுனையில் குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.

1990களில் வீரமுனை பிள்ளையார் கோவில் உட்பட சைவ ஆலயங்களில் தஞ்சம் அடைந்திருந்த தமிழ் மக்களை முஸ்லீம் ஊர்க்காவல் படையினர் ஈவிரக்கமின்றி வெட்டிக் கொலை செய்தனர். பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். கைக்குழந்தைகளைக் கூட இரண்டு துண்டாக வெட்டி வீசினர். வீரமுனை தமிழ் கிராமத்தில் தமிழர்கள் மீது 1990ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு சில படுகொலைகள்.. தேதி வாரியாக…

20.06.1990 வீரமுனை பிள்ளையார் கோவில் படுகொலை அதிரடிப்படை மற்றும் முஸ்லீம் ஊர்க்காவல் படைகளால் 69 தமிழர்கள் படுகொலை

05.07.1990 வீரமுனையில் 13 தமிழர்கள் படுகொலை .

10.07.1990 வீரமுனையில் 15 தமிழர்கள் படுகொலை .

16.07.1990 மல்வத்தை இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினருமாக சுமார் 30 பேர் 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர்.

26.07.1990 வீரமுனையில் 23 சிறுவர்கள் உட்பட 32 இளைஞர்கள் முஸ்லீம் ஊர்காவல்படையினராலும் விசேட அதிரடிப்படையினராலும் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர்.

29.07.1990 ஆசிரியர் ஒருவர் குடும்பத்துடன் பஸ் ஒன்றில் வீரமுனையை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த போது கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

01.08.1990 சவளக்கடையில் 18பேர் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர்.

12.08.1990 வீரமுனை அகதி முகாமில் புகுந்த முஸ்லீம் ஊர்க்காவல் படை குழு வாள்களால் வெட்டி தாக்குதல் நடத்தியது. இதில் கோவில் தர்மகர்த்தா தம்பிமுத்து சின்னத்துரை உட்பட 14பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். வீரமுனையில் 600வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி கணபதிபுரம், மல்வத்தை ஆகிய கிராமங்களில் இருந்த 1352 தமிழர்களின் வீடுகள் முஸ்லீம்களால் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது.

20.06.1990க்கும் 15.08.1990க்கும் இடைப்பட்ட காலத்தில் வீரமுனையில் மட்டும் 232 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 1600க்கு மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது. அயல் கிராமமான சம்மாந்துறையை சேர்ந்த முஸ்லீம்களே சிங்கள இராணு உதவியுடன் இப்படுகொலையினை செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கிழக்கு மாகாணத்தில் மோசமான தாக்குதலுக்கு உள்ளான பிரதேசங்களாக வாழைச் சேனை, செங்கலடி, ஆரையம்பதி, நீலாவனை, பாண்டிருப்பு முதலானவை காணப்படுகின்றன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களால் தமிழ்க் கிராமங்கள் பல அழிவுற்றன. பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வாழ்ந்து சூறையாடப்பட்டு இன்று சிதைவுக்குள்ளான கிராமங்களாகப் பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், நிந்தவூலீ, சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டா வெட்டுவான், பூரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் முதலானவை காணப்படுகின்றன.

தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் அழித்தொழிக்கப்பட்டு இக்கிராமங்கள் இன்று முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன. இச்சூழலில் அம்பாறை மாவட்டத்தில் படிப்படியாக முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் தமிழ்க் கிராமங்களாக அட்டைப்பள்ளம், சவளக்கடை, திராய்க்கேணி, சொறிக்கல்முனை, மீராச்சோலை முதலானவற்றைக் கூறலாம். இப்பூர்வீகக் கிராமங்களில் பிறந்த தமிழர்கள் பலர் இவ்வன்முறையோடு தாக்குதல்களுக்கு உள்ளானவராகவும் தம் சுயமிழந்து அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்படாதவர்களாகவும் காணப்படுகின்றனர் .

முஸ்லிம் ஊர்க்காவல் படைகளால் இக்கிராமப் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதோடு மிலேச்சத்தனமான முறையில் படுகொலையும் செய்யப் பட்டனர்.

1990களில் திராய்க்கேணி, நிந்தவூர், வீரமுனை முதலான தமிழ்ப் பிரதேசங்களில் முஸ்லிம் ஊர்க்காவல் படைகளால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் அறத்திற்குப் புறம்பானவை. திராய்க்கேணி பிள்ளையார் கோயிலில் உயிருக்கஞ்சி அடைக்கலம் புகுந்த தமிழ் இளைஞர்கள், யுவதிகளை அடித்தும் வெட்டியும் கொன்றது முஸ்லிம் ஊர்க்காவல் படை!

சமாதானம் நிலவிய காலப்பகுதியான 2003 அக்டோபர் 12 ஆம் நாள் திராய்க்கேணி பெரியதம்பிரான் கோயில் பகுதியில் இனசுத்திகரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் அங்குள்ள குழி ஒன்றில் மனித எலும்புக் கூடுகள் பலவற்றைக் கண்டுபிடித்தனர். இவை திராய்க்கேணிப் படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களின் எலும்புக் கூடுகளாக இருக்கலாம் என உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகள் எதுவும் இடம்பெறவில்லை.

தொகுப்பு,
ஈழமகன்.

===========================================

சுமந்திரனின் பார்வையில்.. இவை எல்லாம் புலிகள் முன்னெடுத்த இனச்சுத்திகரிப்பு..?????! 

சுமந்திரனின் பித்தலாட்டத்தை அவரே முடித்து வைத்தல் நன்று. 

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு புலிகள் 2002 இல் செய்த பிரதி உபகாரம்..

"Mr Pirapaharan has agreed to invite all displaced Muslims to return to their own places in the northeast," Mr. Hakeem said. Likewise, it was decided that a suitable environment should be created for people displaced from villages in the east to resettle in their homes, SLMC sources said.

Mr. Pirapaharan was assisted by Mr.Anton Balasingham, the LTTE's political advisor, Mr. S. P. Thamilchelvan, head of the movement's political wing. Col. Karuna and Col. Pathuman, the LTTE's military commanders for the Batticaloa-Amparai and Trincomalee respectively. (https://www.tamilnet.com/art.html?catid=13&artid=6845)

Image may contain: 7 people, people standing
 
இந்த உண்மைகள் கூட இனச்சுத்திகரிப்பு குற்றம் சுமத்தும்..  சுமந்திரன் வகையறாக்கள் அறியாதவை போலும்..!!

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.