Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொரோனாவினால் இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பது தவிர்க்க முடியாத விடயம் – பேராசிரியர் சிறிமால் அபயரட்ண

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88.jpg

கொரோனாவினால் இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பது தவிர்க்க முடியாத விடயம் – பேராசிரியர் சிறிமால் அபயரட்ண

கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பது தவிர்க்க முடியாத விடயம் என கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் பேராசிரியர் சிறிமால் அபயரட்ண தெரிவித்துள்ளார்.

வறுமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நகரப்பகுதிகளில் வாழும் வறிய மக்களே இவ்வாறு வறுமையினால் அதிகளவு பாதிக்கப்படப்போகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் நாளாந்தம் உழைப்பவர்கள், முறைசார தொழில்துறைகளில் உள்ளவர்கள் மேலும் கிராமங்களில் உள்ள வறியவர்கள் போல இவர்கள் விவசாயத்திலும் ஈடுபடுவதில்லை எனவும் பேராசிரியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கங்கள் குறுகிய கால நீண்ட கால நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் பேராசிரியர் சிறிமால் அபயரட்ண சுட்டிக்காட்டியுள்ளார்.

குறுகிய காலத்தில் வறுமையை கட்டுப்படுத்துவதற்காக பல வழிகளில் நிதியை செலவிடவேண்டியிருக்கும் எனவும், பல நாடுகளில் வேலைவாய்ப்பற்ற நிலையில் உள்ளவர்களிற்கு கொடுப்பனவுகளை வழங்கவேண்டியிருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

அத்துடன், வறியவர்கள் குறித்து கவனம் செலுத்தவேண்டிய கடப்பாடு அரசாங்கத்திற்கு உள்ளது எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

http://athavannews.com/கொரோனாவினால்-இலங்கையில-2/

7 hours ago, தமிழ் சிறி said:

இந்த நிலையை தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கங்கள் குறுகிய கால நீண்ட கால நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் பேராசிரியர் சிறிமால் அபயரட்ண சுட்டிக்காட்டியுள்ளார்.

உந்த ஆலோசனைகளை சகோக்கள் புரிந்துகொண்டதன் விளைவே இராணுவமயமாக்கல். 

99282818_10158080722386855_2148871235969220608_n.jpg?_nc_cat=105&_nc_sid=dbeb18&_nc_ohc=KnLAWFcxaHIAX91aJmQ&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=eef135c9184d6daa5596fa9c626468f0&oe=5EF172D0

இந்த வைரசு அதன் உலக பொருளாதார தாக்கம் காரணமாக, இலங்கை மிகவும் நெருக்கடியான பொருளாதார நிலைக்குள் செல்வதை தவிர்க்க முடியாது. மகிந்த அண்ட் கோ, அவர்களின் இராணுவ மயமாக்கல் மற்றும் இனவழிப்பு கொள்கைகளும் இந்த வறுமை நிலைக்கு காரணம். 

தமிழ் பேசும் மக்களும் பாதிக்கப்படுவார்கள். இன்றும் பாதிக்கப்பட்டே வாழ்ந்து வருகிறார்கள். 

ஆனால், அதிகளவில் சிங்கள மக்கள் பாதிக்கப்படும்பொழுது அவர்கள்  தமிழ் பேசும் மக்கள் போன்று அமைதியாக இருக்கமாட்டார்கள். 

மலேசியா சிங்கப்பூரை பொருளாதார சுமை என 'கழட்டி விட்டது' போன்று சிங்களமும் தமிழ் பேசும் மண்ணை விட்டு ஓடவேண்டும்.  

Sri Lankan President Gotabaya Rajapaksa has requested India to provide a special USD 1.1 billion currency swap facility to boost the country’s draining foreign exchange reserves in view of the economic slowdown due to the coronavirus pandemic.
 
1 hour ago, ampanai said:

இல்லாத பொல்லாத பொய்கள் எல்லாம் சொல்லி ஆட்சியை பிடித்ததன் தண்டனையை அனுபவிக்கிறார்கள்.

ஜ தே கவும் ஆட்சியை இவர்களிடம் ஒப்படைத்ததனால் குற்றம் சுமத்த யாரும் இல்லை.

100506457_10158084781891855_4718534922032119808_n.jpg?_nc_cat=103&_nc_sid=dbeb18&_nc_ohc=2hv187G4oZYAX_HE78B&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=71e4830350316b940c2ed436e1e6f5c4&oe=5EF11B8A

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ampanai said:

100506457_10158084781891855_4718534922032119808_n.jpg?_nc_cat=103&_nc_sid=dbeb18&_nc_ohc=2hv187G4oZYAX_HE78B&_nc_ht=scontent-yyz1-1.xx&oh=71e4830350316b940c2ed436e1e6f5c4&oe=5EF11B8A

நல்லதொரு கேலிச்சித்திரம். 👍🏼

வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் அனுப்பும்பணத்தில் ஏப்பிரலில் 32.3% வீழச்சி

சிறீலங்கா 2020இல் 19% வீழ்ச்சியைக் காணும் - உலகவங்கி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.