Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழகத்தின் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி காலமானார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருநெல்வேலி: தமிழகத்தில் கடைசி ஜமீனான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி (வயது 89) உடல் நலக்குறைவால் காலமானார். . திருநெல்வேலி மாவட்டம் சிங்கம்பட்டியின் 31-வது ஜமீனாக இருந்தவர் முருகதாஸ் தீர்த்தபதி வயது 89. இவர் தான் தமிழகத்தின் முடிசூட்டப்பட்ட கடைசி ஜமீன் ஆவர், இந்தியா சுதந்திரம் அடைந்த பின் 1952-ல் ஜமீன் ஒழிப்புச் சட்டம் வந்தது. இந்தச் சட்டம் வருவதற்கு முன் பட்டம் சூட்டிய ராஜாக்களில் தமிழகத்தில், சிங்கம்பட்டி ஜமீன் பரம்பரையை சேர்ந்த தீர்த்தபதி தான் முருகதாஸ் தீர்த்தபதி.

பெரும் கெடையாளர்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகாவில் உள்ள சொரிமுத்து அய்யனார் கோயிலை சிங்கம்பட்டி ஜமீன்தான் நிர்வகித்து வந்தது. இந்த ஜமீன் பரம்பரையின் 31-வது மற்றும் கடைசி ஜமீனான முருகதாஸ் தீர்த்தபதி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலாமனார். தமிழகத்தில் கடைசி ஜமீனாக சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி இருந்தார். இவரும் இப்போது உயிரிழந்துவிட்டார். சிங்கம்பட்டி ஜமீன் அதிக வனப்பகுதியைக் கொண்ட பகுதி. சிங்கம்பட்டி ஜமீனுக்கு 1000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உள்ளதாக கூறப்படுகிறது. சிங்கம்பட்டி ஜமீன் மறவர்கள் பாண்டியர்களின் வழித் தோன்றல்கள் என்றும் நாயக்கர் காலத்தில் சிங்கம்பட்டி பாளையமாக மாறியது என்றும், பின்னர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அது ஜமீனாக மாறியது என்றும் சொல்கிறார்கள்.

18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் திருவாங்கூர் சமஸ்தானத்தைத் தோற்றுவித்த ராஜா மார்த்தாண்ட வர்மாவுக்கும், எட்டு வீட்டு பிள்ளைமார்களுக்கும் ஆட்சி அதிகாரத்தைப் பிடிக்க நடந்த போரில், நமது சிங்கம்பட்டி ஜமீனைச் சேர்ந்தவர்கள் கேரள ராஜா பக்கம் நின்று போர் செய்து வெற்றி பெறச் செய்ததனர். அதற்கு நன்றிக் கடனாக, ராஜா மார்த்தாண்ட வர்மன் தன்னுடைய ராஜ்ஜியத்திலிருந்து 74,000 ஏக்கர் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீனுக்குக் கொடையாக அளித்தார் என்று சொல்லப்படுகிறது. சிங்கம்பட்டி ஜமீன் கதையை வைத்து சிவகார்த்திகேயன் நெப்போலியன் நடிப்பில் சீம ராஜா படம் வெளியாகி இருந்தது.

Singampatti Jameen Murugadoss Tirthapati has passed away

3 வயதில் ராஜாவாக மூடிசூட்டப்பட்டவர்.. சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதியின் வாழ்க்கை வரலாறு

திருநெல்வேலி: 
உடல் நலக்குறைவால் காலமான சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதிதான் (89) தமிழகத்தின் கடைசி ஜமீன் ஆவார். அதாவது இந்திய சுதந்திரம் அடையும் முன்பு சிங்கம்பட்டி ஜமீன் ராஜாவாக மூடிசூட்டப்பட்டவர் ஆவார். இவருக்கு 3 வயதிலேயே ராஜாவாக மூடிசூட்டினார்கள். இவரது தந்தை இறந்துவிட்ட நிலையில், அந்த நேரத்தில் சிங்கம்பட்டியின் 31-வது ராஜாவாக டி.என்.எஸ். முருகதாஸ் தீர்த்தபதிக்கு மூடி சூட்டினார்கள். முருகதாஸ் தீர்த்தபதி தான் சிங்கம்பட்டி சமஸ்தானத்தின் கடைசி ஜமீன்தார் ஆவார் இவருக்கு மூன்றரை வயதில் முடி சூட்டப்பட்டது. முருகதாஸ் தீர்த்தபதிக்கு மகன்கள் மகேஸ்வரன், சங்கராத் பஜன், மகள்கள் அபராஜிதா, சுபத்ரா, மௌலிகேஸ்வரி ஆகியோர் உள்ளனர்.

74 வருடங்களாக ராஜா

பரம்பரை அறங்காவலர்
1952-ம் ஆண்டு ஜமீன் ஒழிப்பு சட்டம் வரும் வரையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் 74,000 ஏக்கர் நிலங்கள் ஜமீன் ஆளுகையில் இருந்தது சிங்கம்பட்டி ஜமீன் ஆளுகையில்தான் அம்பாசமுத்திரம் அருகே உள்ள காரையார் சொரிமுத்து அய்யனார் கோயில், அகமகாதேவர் கோயில், முத்தாரம்மன் கோயில், வல்லப கணபதி கோயில், வெயில் உகந்த அம்மன் கோயில், முப்புடாதி அம்மன் கோயில், சுப்பிரமணியசாமி கோயில், ஊத்துக்குளி சாஸ்தா ஆகிய 8 கோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு முருகதாஸ் தீர்த்தபதி பரம்பரை அறங்காவலராக இருந்து நிர்வகித்து வந்தார். இவரது குடும்பத்தினர் நிர்வகித்து வருகிறார்கள்.

74 வருடங்களாக ராஜா காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவில் ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி பக்தர்களுக்கு ராஜ உடையில் காட்சியளித்து வந்தார். தொடர்ந்து 74 வருடங்களாக சொரிமுத்து அய்யனார் கோயிலில் இவர் ராஜஉடையில் காட்சி அளித்திருக்கிறார். ஆங்கிலேயே ஆட்சி காலத்தில் சிங்கம்பட்டி ஜமீன்தாரர்கள் அன்றைய பிரிட்டிஷ் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 8 ஆயிரம் கிஸ்தி செலுத்தி வந்துள்ளார்கள்.

1,000 குதிரைகள் இருந்தது

1,000 குதிரைகள் இருந்தது 
ஜமீன் சிங்கம்பட்டியில் சிங்கம்பட்டி அரண்மனை 5 ஏக்கரில் அமைந்துள்ளது. 1,000 குதிரைகளை வைத்து சிங்கம்பட்டி ஜமீனில் பராமரித்து வந்துள்ளனர். 5 தங்கப் பல்லக்குகள் இருந்தன. ஜமீன்சிங்கம்பட்டி அரண்மனையில் கிங் ஜார்ஜ் தொடக்கப் பள்ளி இப்போதும் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி. தற்போது விவசாயம் செய்து வந்தார் ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதி.அரண்மனை அருங்காட்சியகத்தில் திவான் பகதூர் பயன்படுத்தி வந்த உடைகள், குறுநில மன்னர்கள் எழுதிய கடிதங்கள், அவர்கள் பயன்படுத்தி வந்த பொருள்கள் உள்ளன.

மாஞ்சோலை எப்படி வந்தது

பெரும் கெடையாளர் 
சிங்கம்பட்டி ஜமீன்தார் திவான்பகதூர் தென்னாட்டுப்புலி நல்லக்குத்தி சிவசுப்பிரமணிய தீர்த்தபதி 29-வது தலைமுறையில் தோன்றியவர் ஆவர். இவர் நிறைய பொன் பொருட்களை வாரி வழங்கியிருக்கிறார் என்று வரலாறுகள் சொல்கின்றன. அம்பாசமுத்திரத்தில் அரசு பொது மருத்துவமனை, அரசுப் பள்ளி கட்டுவதற்கு நிலம் கொடுத்ததால், இவ்விரண்டும் தீர்த்தபதி என அவரது பெயரில் தான் அழைக்கப்படுகிறது.

மாஞ்சோலை 
எப்படி வந்தது மாஞ்சோலை எஸ்டேட் இருக்கும் இடமும் சிங்கம்பட்டி ஜமீனுக்கு சொந்தமானதாக இருந்தது. சிங்கம்பட்டி ஜமீனின் 30-வது பட்டமான சங்கர சிவசுப்பிரமணிய தீர்த்தபதி சென்னை கல்லூரியில் படித்து வரும்போது ஒரு கொலைக் குற்றவாளியாக சட்டத்தின் பிடியில் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த வழக்கின் போது ஜமீனுக்கு மிகப்பெரிய அளவில் பணம் விரயம் ஆனதாம். இதனால் ஏற்பட்ட கடனை சரி செய்ய அவரின் பிதா, மலை நாட்டில் உள்ள 8,000 ஏக்கர் நிலத்தை பிரிட்டிஷார் நடத்தி வந்த கம்பெனிக்கு தேயிலை பயிரிட குத்தகைக்குக் கொடுத்தார். இவ்வாறுதான் மாஞ்சோலை தேயிலைத் தோட்டம் உருவாகியது என்று சொல்கிறார்கள்.


 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சமாஸ்தானம் தான் மனிச  தோல் உரித்து  தண்டனை கொடுப்பதை கண்டுபிடித்த கூட்டம் .பின் அதையே கருணா வுக்கு எதிரானவர்கள் இருவர் மீது பெயர் உடனே நினைவுக்கு வருதில்லை பிரயோகித்து பார்த்தவர்கள் .ஆட்டு தோலின் உள்பக்கமாய் கோடையில் கண்டலாய்  விளைந்த உப்பை உள்ளே வைத்து ஆளை சுத்தி கட்டி போட்டு வெயிலில் இரண்டு நாள் போட்டபின் கடைசியாய் ஆட்டு தோலை பிடித்து இழுக்க தோலும் சேர்ந்து பிய்ந்து  வரும் உலகத்தில் இல்லாத கொடூர  சித்திரவதை அது .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, பெருமாள் said:

இந்த சமாஸ்தானம் தான் மனிச  தோல் உரித்து  தண்டனை கொடுப்பதை கண்டுபிடித்த கூட்டம் .பின் அதையே கருணா வுக்கு எதிரானவர்கள் இருவர் மீது பெயர் உடனே நினைவுக்கு வருதில்லை பிரயோகித்து பார்த்தவர்கள் .ஆட்டு தோலின் உள்பக்கமாய் கோடையில் கண்டலாய்  விளைந்த உப்பை உள்ளே வைத்து ஆளை சுத்தி கட்டி போட்டு வெயிலில் இரண்டு நாள் போட்டபின் கடைசியாய் ஆட்டு தோலை பிடித்து இழுக்க தோலும் சேர்ந்து பிய்ந்து  வரும் உலகத்தில் இல்லாத கொடூர  சித்திரவதை அது .

இனிமேல் இருக்க முடியாத ஒரு பழம் சம்பிரதாயம் ஒன்றின் கடைசி அத்தியாயம் என்பதாலேயே பதிந்தேன்....

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

இனிமேல் இருக்க முடியாத ஒரு பழம் சம்பிரதாயம் ஒன்றின் கடைசி அத்தியாயம் என்பதாலேயே பதிந்தேன்....

இந்த பரம்பரையிலை ஒன்று பட்டம் வேண்டாம் என்று விட்டு குறுக்காலை  வந்து கண்டியிலை  கூத்தடிசது ஆங்கிலம் படிக்கிறேன்  என்று . உன்மையில் ஜமீன்தார் மன்னர் உடமைகளை ஹிந்திய  கள்வர்களால் 1952ல் சூறையாடப்பட்டது காரணம் இந்தியா உடைய கூடாது என்பதற்காக . இரண்டாவது மாநில  எல்லைகள் பிரிக்கும்போது இவர்களின் சமஸ்தானம்களின்  எல்லைகள் பாரிய இடையூறாக அமைந்தன.

  • கருத்துக்கள உறவுகள்

இவரது இறப்புடன் தமிழர், தமிழ்நாட்டின் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது.😢

சரி பிழைகளுக்கு அப்பால் வரலாற்றின் ஒரு அத்தியாயம் முடிவுக்கு வந்தது என்பதால் இவரது மரணம் (தவிர்க்க முடியாதது என்றாலும்) எனக்கு கவலையை உண்டாக்குகிறது. 😢

இவரது ஆன்மா அமைதியில் உறங்கட்டும். 🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்

Prabhakaran met Singampatt Zamin in 1980s- KS Radhakrishnan

விடுதலை புலிகளுக்கு பயிற்சி... சிங்கம்பட்டி ஜமீன்தாரை சந்தித்த பிரபாகரன்.. கே.எஸ். ராதாகிருஷ்ணன்

1980களில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பயிற்சி கொடுப்பதற்கான இடம் குறித்து சிங்கம்பட்டி ஜமீன்தார் முருகதாஸ் தீர்த்தபதியை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சந்தித்து பேசினார் என்று மூத்த வழக்கறிஞரும் வரலாற்று ஆய்வாளருமான சமூக செயற்பாட்டாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நெல்லை மாவட்டம் சிங்கம்பட்டி ஜமீன்தார் டிஎன்எஸ் முருகதாஸ் தீரத்தபதி உடல் நலகுறைவால் காலமானார். ஜமீன்தாரி முறை ஒழிப்புக்கு பின்னர் இந்தியாவில் முடிசூட் டி பட்டம் கட்டிய மன்னர்களில் கடைசி மன்னர் இவர்தான். இவரோடு திருநெல்வேலி பாளையங்கோட்டையில் படித்த காலத்தில் இருந்து அறிமுகம்.

கடந்த 1972ல் நடந்த மாணவர் போராட்டத்தில், பேரணியை காவல்துறையினர் தாக்கும் போது, சேலம்_லூர்துநாதன், பி.காம் படிக்கும் மாணவர், வண்ணாரப்பேட்டை சுலோசனா_முதலியார் பாலத்திலிருந்து கீழே விழுந்து மரணமடைந்தார். அந்த சம்பவம் நடந்த மாலை அவரை சந்திக்கும் போது அதைக் குறித்து மிகுந்த கவலையோடு அவர் விசாரித்த போது தான் முதல் நெருக்கமான அறிமுகம்.

அதன் பின் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு பகுதிகளுக்கு செல்லும்போது அவர் ஊரில் இருந்தால் அவரை சந்திப்பது வாடிக்கை. கடந்த1983 ஈழப் பிரச்சினை கடுமையாக இருந்த போது இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி முகாம் அமைத்துக் கொடுக்கவும் அதற்கான உதவிகளைச் செய்யவும் மத்திய அரசு செயலில் இறங்கியது.

இவருடைய சிங்கம்பட்டி எஸ்டேட்டுக்கு உட்பட்ட பாபநாசம் மலைப்பகுதியில் விடுதலைப்புலிகளுக்கு பயிற்சி முகாம் நடத்த நல்ல இடம் என்று நெடுமாறனுடைய பரிந்துரையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், பேபி சுப்ரமணியம் நானும் சென்று இவரை பார்த்த போது, அந்த இடம் பயிற்சிக்கு ஏற்ற இடமாக இல்லை. அதைப் பார்த்துவிட்டு அவர் வீட்டுக்கு அழைத்து உபசரித்து அனுப்பியது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது.

ஸ்ரீவில்லிப்புத்தூர் தானிப்பாறை அருவி அருகில் மற்றுமொரு பயிற்சி இடம் பார்க்கலாம் என்று முடிவெடுத்தோம். எங்களிடம் இருந்தது ஒரே வாகனம் தான். எங்களோடு இந்திய முன்னாள் ராணுவ வீரர்கள் அம்பாசமுத்திரத்தில் வந்து சிலர் சேர்ந்தார்கள்.

அவர்களை அழைத்துச் செல்ல வாகனம் வேண்டும். நாங்கள் ரகசியமாக வாகனம் வாடகைக்கு எடுக்கலாம் என்று பேசிக்கொண்டிருந்ததை அவர் கேட்டு விட்டு என்ன உங்களுக்கு தயக்கம் என்னுடைய காரை கொண்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் வழியாக மதுரை வரை செல்லுங்கள் என்று கம்பீரமான குரலில் சொன்னது இன்றைக்கும் நினைவில் இருக்கிறது.

இப்படியான தொடர்புகள் அவரோடு நீடித்தன. 2004ல் நிமிர வைக்கும் நெல்லை என்று ஒன்றுபட்ட நெல்லை மாவட்டத்தின் வரலாற்றையும் சிறப்புகளையும் தொகுத்து என்னுடைய நூல் வெளியானது. அந்த நூலை படித்து விட்டு , "நம் மண்ணிற்கு சிறப்பு செய்து விட்டீர்கள், சபாஷ் தம்பி" என்றார். அதுமட்டுமல்ல சிங்கம்பட்டி ஜமீனை குறித்தும் சிறப்பான பதிவு செய்துள்ளீர்கள் என்றார். நல்ல மனிதர். பண்பாளர். கம்பீரமானவர். அவர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்.

Read more at: https://tamil.oneindia.com/news/chennai/prabhakaran-met-singampatt-zamin-in-1980s-ks-radhakrishnan-386457.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.