Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துன்பத்தை தூக்கி போட்டு எழுத்து நில்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வா எதிரில் வா
எதிர்படும் நொடியில்
தலைகள் சிதற
வா விரட்டி வா
விரட்டிடும் விரட்டில்
பகைகள் கதற

வா அழிக்க வா
ஒழிக்க வா
தீயவர் குலைகள் நடுங்க
வா நெறிக்க வா
முறிக்க வா
கொடிய குருதி தெறிக்க

அச்சம் துறந்திடு
துச்சம் அறிந்திடு
உச்சம் கிளர்ந்திடு
மிச்சம் என்று எதுவும் இன்றி
உந்தன் ஆயுதம்
என்னவென்பதை
உந்தன் கைகளில்
ஏந்தி நிற்கிறாய்

அந்த ஆயுதம்
என்ன செய்திடும்
அச்ச கூச்சல் அடங்கும் முன்னே
மொத்தம் கிள்ளி வீசிடு

வா எதிரில் வா
எதிர்படும் நொடியில்
தலைகள் சிதற
வா விரட்டி வா
விரட்டிடும் விரட்டில்
பகைகள் கதற

வா அழிக்க வா
ஒழிக்க வா
தீயவர் குலைகள் நடுங்க
வா நெறிக்க வா
முறிக்க வா
கொடிய குருதி தெறிக்க

ஏலம் போட்டு பிரிக்குது
ஓரம் கட்டி அடைக்குது
பேத பார்வை வேர்வை போல
ஊறி போன உலகிது

இறுகி போன மனமிது
இளகி போக மறுக்குது
பழகி பழகி கெடுக்க நினைக்கும்
கலைகள் களையும் வரம் இது

ஓலம் பரவிடும்
அந்த ராகம் கொடியது
காலம் காலமாய் இங்கு
துன்ப மேகம் பொழியுது

 

  • Replies 62
  • Views 7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து
நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து

தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து
நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து
ஒண்ணு ரெண்டு மூனு எண்ணுவதற்குள்ளே
ஓடி போகும் காலம் நிற்காதே
சுற்றி வரும் பூமி சுற்றிவிடும் முன்னே
சூரியனை தொட்டுவிடலாம் அதாலே

தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து
நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து

வானம் கிடுகிடுங்க பூமி நடு நடுங்க எழுந்து ஆடலாம் தோழா
தேகம் துடி துடிக்க ரத்தம் அணல் அடிக்க வெற்றி சூடலாம் வாடா
சகா காலை விழிது மாலை உறங்கும் வாழ்கையை மறப்போம் வா
சகா நேற்று நாளை கவலை மறந்து இன்றை மட்டும் ரசிப்போம் வா
ஓஹ் வானமா எல்லை ஹெய் இல்லவே இல்லை
வானத்தையும் மீறி போவோம் வா – அதாலே

தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து
நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து

கமாயோ… கமாயோ…

தோளில் வலுவிருக்கு நெஞ்சில் திறமிருக்கு வேறு படை எதற்கு தோழா
உன்னை நீ எடுத்து மின்னல் வாள் எடுத்து விண்ணை கலக்கலாம் வாடா
சகா தாகம் எடுத்தால் மேகம் பிழிந்து தீர்த்தமாய் குடிப்போம் வா
சகா கோர்க துணிந்தால் மழையின் நூலில் நட்சத்திரம் கோர்போம் வா
ஓஹ் வானமா எல்லை ஹெய் இல்லவே இல்லை
வானத்தையும் மீறி போவோம் வா – அதாலே

தாம் தக்க தீம் தக்க தைய தக்க கூத்து
நீயில்ல நானில்ல நாமுண்ணு மாத்து
ஒண்ணு ரெண்டு மூனு எண்ணுவதற்குள்ளே
ஓடி போகும் காலம் நிற்காதே
சுற்றி வரும் பூமி சுற்றிவிடும் முன்னே
சூரியனை தொட்டுவிடலாம் அதாலே

கூத்து… கூத்து… கூத்து…

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆடவேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
(அதோ..)

காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
(அதோ..)

தோன்றூம்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே
போகும்போது வேறுபாதை போவதில்லையே
ஒரே வானிலே ஒரே மன்னிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
(அதோ..)

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
(அதோ..)
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விடியாத இரவென்று எதுவுமில்லை
முடியாத துயரமென்று எதுவுமில்லை
வடியாத வெள்ளமென்று எதுவுமில்லை
வாடாத வாழ்க்கையென்று எதுவுமில்லை
ராரரா...

ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே
ஹே அச்சம் அச்சம் இல்லை இனி அடிமை எண்ணம் இல்லை
நம் காலம் இங்கே கூடிப்போச்சு கண்ணீர் மிச்சமில்லையே

காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு
காலம் மாறிப்போச்சு நம் கண்ணீர் மாறிப்போச்சு
நாளை நல்ல நாளை என்ற நம்பிக்கை உண்டாச்சு

(ஹே அச்சம்)

அந்த நிலா நிலா நிலா நிலா வெகுண்டோடி வா (2)
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்
பட்டாம்பூச்சி சுற்றும் மனிதன் என்ன மட்டம் அட
இன்னும் கொஞ்சும் போனால் என்ன வானம் தலையில் தட்டும்

வாடி இளையசெல்லியே...வாடி இளையசெல்லியே
நம் காலம் சொல்லும் நம்மை வாழச்சொல்லியே
அம்மா அழகுக் கண்ணம்மா அம்மா அழகுக் கண்ணம்மா
இது நம்ம பூமியென்று அழுத்திச்சொல்லம்மா

(ஹே அச்சம்)

லல்லா லல்லல்லல்லோ பட்டாம்பூச்சி (2)

வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
வானம் பக்கம் இனி வாழ்க்கை ரொம்பப் பக்கம்
அச்சம் அச்சம் துச்சம் என்றால் பக்கம் பக்கம் சொர்க்கம்
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு
பூமி தொறந்துகெடக்கு அட மனுசப்பய மனசு பூட்டிக்கெடக்கு

(இனி அச்சம்)

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
பரவட்டும் பரவட்டும் பரவட்டும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்
விடியட்டும் விடியட்டும் விடியட்டும் விடியட்டும்

இன்பக்காற்று வீசட்டும் எட்டுத்திக்கும் பரவட்டும்
மனிதப்பூக்கள் மலரட்டும் மனங்கள் இன்னும் விடியட்டும்
குற்றம் குற்றம் எரியட்டும் சுற்றம் சுற்றம் வாழட்டும்
வட்டம் வட்டம் விரியட்டும் வானம் தொட்டு வளரட்டும் (2)

கோழிச்சிறகில் குஞ்சைப்போலவே பூமிப்பந்து உறங்கட்டும்
ரத்தம் சிந்தா நூற்றாண்டு புத்தம் புதிதாய் மலரட்டும்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்கணும்
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்கணும்
ஓடி ஓடி உழைக்கணும்

வயத்துக்காக மனுஷன் இங்கே கயத்தில் ஆடுறான் பாரு
ஆடி முடிச்சு இறங்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு
வயத்துக்காக மனுஷன் இங்கே கயத்தில் ஆடுறான் பாரு
ஆடி முடிச்சு இறந்கி வந்தா அப்புறம் தாண்டா சோறு
நான் அன்போட சொல்லுறத கேட்டு
நீ அத்தனை திறமையும் காட்டு
இந்த அம்மாவ பாரு அய்யாவ கேளு
ஆளுக்கொண்ணு கொடுப்பாங்க

ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்கணும்
ஓடி ஓடி உழைக்கணும்

சோம்பேரியாக இருந்து விட்டாக்க சோறு கிடைக்காது தம்பி
சுறுசுருப்பில்லாமே தூங்கிக்கிட்டு இருந்தா
துணியும் கிடைக்காது தம்பி
சோம்பேரியாக இருந்து விட்டாக்க சோறு கிடைக்காது தம்பி
சுறுசுருப்பில்லாமே தூங்கிக்கிட்டு இருந்தா
துணியும் கிடைக்காது தம்பி
இத அடுத்தவன் சொன்னா கசக்கும்
கொஞ்சம் அனுபவம் இருந்தா இனிக்கும்
இதுக்கு ஆதாரம் கேட்டால் ஆயிரம் இருக்கு
அத்தனையும் சொல்லி போடு

ஓடி ஓடி உழைக்கணும்

வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்
சட்டம் ஆகணும் தம்பி
வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்
சட்டம் ஆகணும் தம்பி
நல்ல சமத்துவம் உண்டாகணும்
அதிலே மகத்துவம் உண்டாகணும்
நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
படிப்பினை தந்தாகணும் நாட்டுக்கு -
படிப்பினை தந்தாகணும்

ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்கணும்
ஓடி ஓடி உழைக்கணும்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணைக் கட்டிக் கொள்ளாதே கண்டதையெல்லாம் நம்பாதே
காக்கைக் குயிலாய் ஆகாதே தோழா
தாடிகளெல்லாம் தாகூரா மீசைகளெல்லாம் பாரதியா
வேஷத்தில் ஏமாறாதே தோழா
நம் மடியினில் கனமில்லையே…பயமில்லையே…
மனதினில் கரையில்லையே…குறையில்லையே…
நினைத்தது முடியும் வரை…

(கண்ணைக் கட்டிக்)

மக்கள் மக்கள் என் பக்கம் மாலைத் தென்றல் என் பக்கம்
சிட்டுக் குருவிகள் என் பக்கம் செடிகள் கொடிகள் என் பக்கம்
ஏழைத் தமிழர் என் பக்கம் என்றும் தாய்க்குலம் என்பக்கம்
எட்டுத்திக்கும் என் பக்கம் அட கலங்காதே
கோழை மட்டுமே கத்தியெடுப்பாம் வீரன் மட்டும் சத்தியத்தை நம்புவானே
ஏழை வர்க்கமே இணைந்துவிட்டால் கொடிகளும் கோட்டையும் நொடியினில் மாறிவிடும்

(கண்ணைக் கட்டிக்)

வெளியே போகச் சொல்லாதே நான் வீழ்வேன் என்று எண்ணாதே
தங்கக் காசை வீசுவதால் தர்மம் கையை ஏந்தாதே
வெள்ளி மழை சிந்தும் மழை மேகம் விளம்பரம் கொடுத்தால் பொழியாது
மக்கள் சக்தி காசுக்கு வளையாது அட பணியாது
விடிவெள்ளிதான் முளைக்கும்வரை இருள் மட்டும் ஆட்சியில் இருக்குமடா
கிழக்குமுகம் வெளுத்துவிட்டால் இருளுக்கு முடிவுண்டு எங்களுக்கு விடிவுண்டு...

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரே கனா

 

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்கள் தற்கொலைக்கு காரணம் - NEET Needed or Not?

 

 

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோல்விகளால் தன் ஆற்றல்களை அறிந்த பிரபல எமுத்தாளர் ஜெ கே ரோவ்லிங்கின் வெற்றிக்கதை. JK Rowling's life advice on failures Tamil motivational video by Hisham.M

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உனக்கென்று ஒரு அடையாளம் கிடைக்கும்வரை முயற்சி செய்!

 
ant-1.jpg
 55 Views

முயன்றால் முடியாதது என்று எதுவுமே இல்லை என்று கூறுவார்கள். முடியாதது என்னும் சொல்லில்கூட முடி என்னும் சொல் உள்ளது. இவ் உலகில் முயற்சியைவிட வேறு எதுவும் சிறந்த இடத்தைப் பெற முடியாது. நம்மால் இது நிச்சயமாக செய்ய முடியாது என்று கூறும் காரியத்தைக்கூட மீண்டும் மீண்டும் விடா முயற்சியுடன் செய்தால், ஒரு நாள் கட்டாயமாக வெற்றி கிடைக்கும். அது மேலும் நமக்கு தன்நம்பிக்கையை ஊட்டும்.

நாம் தோல்வியை வெல்ல முயற்சி என்னும் ஆயுதத்தை ஏந்தி, தோல்வியுடன் போராட வேண்டும். நமது செயலில் முயற்சி இருந்தால், தோல்வி நம்மிடம் வந்து சேராது. நாம் முயற்சியில் வெற்றிபெற நம்மிடம் மூன்று விடயங்கள் காணப்பட வேண்டும். அதாவது நமது நோக்கம் மிகச் சரியானதாக காணப்பட வேண்டும். மற்றும் நாம் எடுக்கும் முயற்சி தொடர்ச்சியாக இருக்க வேண்டும். அது மட்டுமல்ல, அனைவரும் எடுக்கும் வழியில் முயலாமல் எமது அறிவு, சிந்தனை என்பன தனித்துவமாகக் காணப்பட வேண்டும். இம் மூன்றும் நம் முயற்சியை வெற்றிப் பாதையில் செல்ல வழிவகுக்கும்.

unnamed-2.jpg

நாம் எக்காரியத்தை ஆரம்பிக்கும் போதும் சற்று மலைப்பாகத்தான் இருக்கும். அதாவது குழந்தைகள் நடக்க ஆரம்பிக்க முன் விழுந்து,  எழுந்து தான் நடை பயிலுகின்றனர். கீழே விழுந்து விட்டோமே என்று நடை பயிலாமல் விட்டுவிடுவதில்லை. வெற்றி பெறுவதற்கு முடிவில்லா முயற்சியும், அதீத நம்பிக்கையும் தேவையானதாகும். நன்றாக “உழைத்திரு உனது குறிக்கோளை நீ நிச்சயம் அடைவாய்” என்று விவேகானந்தர் கூறுகின்றார். அது மட்டுமல்ல, “தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்” என்று திருவள்ளுவரின் இரு வரிகளிற்கு ரோஜர் பேனிஸ்டர் வாழ்க்கையானார். அதாவது நாம் மேற்கொள்ளும் செயல் சிறப்பினைத் தரும்என்று உணரும் போது முயற்சி ஆர்ட்டீசியன் ஊற்றுகள் போல் ஊற்றெடுக்கும். விடாமுயற்சி மட்டும் இல்லாவிட்டால், பல சாதனைகள் நிகழ்ந்திருக்க மாட்டாது.

முயற்சி என்பது தொடங்கி விட்டு முடிவு செய்வதல்ல. இலக்குத் தெரியாமல் முயற்சிப்பது தான் கடினம். இலக்கினை மிகச் சரியாக கணித்துவிட்டு, முயற்சித்தால் எல்லாம் எளிதாக வெற்றி பெற்றுத் தரும். உயர உயர குதித்துப் பார்த்து தன்னால் திராட்சைப் பழத்தை உண்ண முடியவில்லை என்று எடுத்த முயற்சியைக் கைவிட்டு, இந்தப் பழம் புளிக்கும் என்று பாதியிலே கைவிடுவது முயற்சியல்ல. தன் குடுவையிலுள்ள நீரைப் பருக முடியவில்லை என்றதும் முயற்சியினால் கற்களை குடுவையில் இட்டு நீரை மேலேறச் செய்து பருகிய காக்கையின் வெற்றிதான் முயற்சி. அதாவது ஒரு செயலினை செய்யத் தொடங்கி, அது முடியாமல் போனதும் கைவிடுவதல்ல முயற்சி. அச் செயலை வெற்றியடையச் செய்ய நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியும் தான் வெற்றி.

துன்பம், வேதனை, சங்கடம், மற்றும் விருந்தோம்பல் அனைத்திற்கும் வரம்புகள் உள்ளன. எனினும் கடுமையான முயற்சி ஒன்றிற்கு மாத்திரமே வரம்புகள் காணப்படாது. சூறாவளி பறவைகளின் கூடுகளை சேதமாக்கி அழித்து விடும். எனினும் பறவைகள் தங்களது முயற்சியால் மீண்டும் கூடுகளை அமைத்துக் கொள்ளும். அதேபோல இரவை காரிருள் சூழ்ந்தாலும் தாரகைகளின் ஒளி இருளோடு போராடி ஒளிரும். அதன் இறுதியில் விடியலும் கண் திறக்கும். ஏனெனில், எல்லைகள் இன்றி செய்தாலே வெற்றி நமக்குக் கிடைத்துவிடும். அதற்கான முயற்சி வரம்பற்றது.

நம்மால் முடிந்தவரை செய்வது முயற்சியல்ல. நாம் நினைக்கும் காரியங்களை முடிக்கும் வரை முயற்சி செய்வதே முயற்சியாகும். ஒருவன் கடலிலே குதித்து முத்து இல்லை என எடுக்காமல் வந்தால், கடலில் முத்து இல்லை என அர்த்தமல்ல, அவன் எடுத்த முயற்சி போதாது. அக்காரியத்தை நிறைவேற்ற அவன் பல முயற்சிகள் எடுக்க வேண்டும். நாம் இளமைக்கு வேலைக்காரனாக இருந்து விடா முயற்சிகளை மேற்கொண்டால், முதுமைக்கு எஜமானாக வாழலாம். முயற்சி இல்லாமல் எதுவுமே இல்லை. முயற்சி தான் சிறப்பான செயற்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.

விடா முயற்சி என்பது இலக்கைக் காதலிப்பதாகும். எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றைத் தாண்டி இலக்கை அடைய முயற்சி செய்ய வேண்டும். விடா முயற்சி உயர்ந்த இடத்தை அடைய உதவி செய்யும். அதேபோல் உயர்ந்த இடத்திலிருந்து கீழே விழாமல் நம்மைப் பாதுகாக்கும். வெற்றி பெறுவதற்கான ஆயுதம் விடாமுயற்சி என்பதைத் தோல்வி நமக்குக் கற்றுத் தருகின்றது. நாம் தோல்வி அடைந்த போது செய்த தவறுகளை எல்லாம் நீக்கி விட்டு, பொறுமையுடன் புதிதாய் முயற்சி செய்யும் போது வெற்றி எமக்கு அருகில் வந்து விடும்.

உலகில் யாரும் தெய்வீகக் குணங்களுடன் பிறப்பது இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் மேற்கொள்ளும் முயற்சிகளை பொறுத்துத் தான் முன்னேற்றமோ, வீழ்ச்சியோ ஏற்படுகின்றது என அம்பேத்கர் கூறியுள்ளார். நாம் இலக்கைத் திட்டமிட்டு நம்மால் திரட்ட முடிந்த அளவில் வளங்களைப் பயன்படுத்தி (பணம், நேரம் முதலியவற்றை) திரட்டி முயற்சி செய்திருப்போம். நம்முடைய முழு உழைப்பையும் கொடுத்து வெற்றி நிச்சயம் என்று நினைத்திருப்போம். வெற்றி என்னும் சிகரத்தில் ஏறும் போது, தோல்வி என்னும் பள்ளத்தாக்கில் வாழ்க்கை நம்மைத் தள்ளிவிடும்.

அப்போது நம் மனதில் நம்பிக்கையின் இடத்தை பயம் எடுத்துக் கொள்ளும் எங்கும் இருள் சூழ்ந்திருக்கும். அப்போது நாம் இருட்டை சபித்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு முயற்சி என்னும் மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும். முயற்சியே கனவுகளை நிச்சயமாக்கும். முயற்சிக்கும் அனைவரும் வெற்றி பெறுவதில்லை. வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசம் முயற்சி ஆகும். ஒவ்வொரு மனிதனும் இறந்து போவது உண்மைதான். என்றாலும், அவனோடு அவன் செய்த காரியங்களும், முயற்சிகளும் இறந்து போய் விடுவதில்லை. எவன் ஒருவன் கைவிடுகின்றானோ அப்போது அவனது திறமையும் போய் விடுகின்றது.

டாக்டர் அப்துல்கலாம் விமானியாக வேண்டும் என கனவு கண்டார். எனினும் அவர் அதில் தோல்வியே கண்டார். அப்படியிருந்தும், தோல்வியே வெற்றிக்கு முதல்படி என்ற கருத்திற்கமைய விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற உயர்ந்த இலக்கில் வெற்றி கண்டு, உயர்ந்தார். பிறந்த குழந்தை தவழ முயற்சிக்கின்றது. பின்னர் நடக்க முயற்சி செய்கின்றது. இப்படி ஒவ்வொரு முயற்சியும் தான் அக் குழந்தையை வளர வைக்கின்றது. இவ்வாறு முயற்சியே திருவினையாக்குகின்றது. எமக்கு எதிர்பார்ப்பின்றி கிடைக்கும் எதுவும் இவ்வுலகில் நிலைத்து நிற்காது. நாம் முயற்சி செய்யாமல் வீணாக்கும் ஒவ்வொரு நொடியும் நம் இலக்கை தோல்வியில் நிறுத்தி விடும்.

download.jpeg

ஏதாவது தன்னுடைய வாழ்வில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால், அவர்கள் தமது வாழ்நாளில் புதிதாக ஒரு முயற்சியும் செய்து பார்த்தது இல்லை எனப் பொருள்படும் என்று ஆல்பரட் ஜன்ஸ்டைன் கூறுகின்றார். அது மட்டுமல்ல ஆயிரத்திற்கு மேற்பட்ட புதிய கண்டுபிடிப்பிற்கு சொந்தக்காரனான தோமஸ் அல்வா எடிசன் ஆயிரம் முறை புதுப்புது வழிகளில் முயற்சித்தும் மின்சார விளக்கைக் கண்டு பிடிக்க முடியாமல் போனதை பிறர் கிண்டல் செய்த போது, ஆயிரம் வழிகளில் மின்சார விளக்கு எரியாது என்பதை கண்டுபிடித்து முயற்சிக்கு உதாரணமாக அமைந்தார். சாதனையாளர்கள் முதல் முயற்சியில் வெற்றி பெற்று விடுவதில்லை. நம்மைச் சுற்றி அறிவாளிகள், திறமையுள்ளவர்கள், பணக்காரர்கள் தோன்றி இருப்பார்கள். ஆனால் விடா முயற்சி உள்ளவர்கள் வென்றிருப்பார்கள்.

தோல்விகள் கதவை மூடும்போது, தொடர்ந்து விடா முயற்சியுடன் கதவைத் தட்டித் திறப்பது தான் வெற்றிக்கான சாவி ஆகும். நமக்கு வெற்றிகள் வந்து சேர்வதற்கென்று தனியாக ஒரு நேரம் எதுவும் இல்லை. விடா முயற்சியோடு செயற்படுகின்றவர்களிடம் எந்த நேரத்திலும் வெற்றிகள் வந்து சேரும். வெற்றி பெற்றவர்கள் வரிசையில் இணைய விடா முயற்சியை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

உ.டனன்சியா

2019 வணிகப்பிரிவு

 

https://www.ilakku.org/உனக்கென்று-ஒரு-அடையாளம்/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13177077_1749664968583186_5431993845127582311_n.jpg?_nc_cat=111&ccb=2&_nc_sid=9267fe&_nc_ohc=VD1mdS2lSZgAX_zuyDy&_nc_ht=scontent.fmel3-1.fna&oh=eccfaa25179bf376faa888181f8403e3&oe=5FE4E894

வியாபாரத்தில் வெற்றி பெற்ற பள்ளி மாணவி.
.
நன்றி - தினமலர்
.

பள்ளிப் படிப்பை முடிக்கும் முன்பே தொழில் முனைவோர் ஆன ஜோதி!

நான் ஐந்தாவது படிக்கும் போதே ஐ.ஏ.எஸ்., ஆக வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் பத்தாவது படிக்கும் போது, விபத்தில் அப்பா இறந்துவிட, நான் என் அம்மா, அக்கா, மூவரும் நிலைகுலைந்து போனோம். கண்ணீருடன் பொதுத் தேர்வு எழுதினேன். அதில் 91 சதவீத மார்க் எடுத்தேன்.

இதற்கிடையில், என் அம்மாவும் இறந்து விட, நொறுங்கிப் போய்விட்டோம். என் மாமா, அவருடன் எங்களை அழைத்து சென்று விட்டார். அப்ப, நான் பிளஸ் 1 சேர்ந்திருந்த நேரம், அக்கா, பி.டெக்., முதல் வருடம். இனி என்ன செய்யப் போகிறோம் என்ற பயம் ஏற்பட்டது. அப்போது தான் என் பெற்றோர் நடத்திய டில்லி டெய்லர் கடையை திறக்க முடிவெடுத்தேன்.

என் அம்மா அடிக்கடி என்னை கடைக்கு அழைத்துச் சென்று தொழில் கற்றுக் கொடுத்ததால், அதில் ஓரளவிற்கு அனுபவம் உண்டு. அப்போது, பிளஸ் 1 படித்துக் கொண்டிருந்தாலும், படிப்பு தொழில் என்று பரபரப்பாக இருந்தேன். இப்ப என் கடைக்கு, மக்களிடம் நல்ல வரவேற்பு உண்டு. நான் பொறுப்பேற்ற போது, நான்கு மெஷின்கள் இருந்த இடத்தில் இப்போது, ஒன்பது மெஷின்கள் உள்ளன.

பள்ளிப்படிப்பை முடித்து விட்டு தற்போது, பி.ஏ., சோஷியாலஜி படிக்கிறேன். என் அக்காவை பி.டெக்., படிக்க வைத்தேன். அவர் திருமணத்திற்கு தேவையான நகைகளையெல்லாம் சேர்த்து விட்டேன்.
.

கஷ்டம் என்னை பக்குவப்படுத்தியது!’

நான் இவ்வளவு தூரம் நிமிர்ந்து வந்திருக்கிறதுக்கு என் அக்காவின் உறுதுணையும் காரணம். கூடவே, என் ஐ.ஏ.எஸ்., கனவிற்கான வேலையும் நடக்கிறது. நாங்கள் பட்ட கஷ்டம் என்னை பக்குவப்படுத்தியுள்ளது. எந்த சூழலையும், நம்பிக்கையுடன் எதிர்கொள்ள தைரியத்தை கொடுத்தது.

கஷ்டத்தில் இருந்து மீண்டே ஆக வேண்டும் என்று உறுதியுடன் போராடினால், நிச்சயம் நாளை நம்மை எல்லாரும் நிமிர்ந்து பார்ப்பாங்க!

 

https://www.facebook.com/நல்லதே-நினைப்போம்-நல்லதே-நடக்கட்டும்-1639711246245226/photos/சிந்தனைசெய்-மனமேநன்றி-தே-சௌந்தர்ராஜன்அவன்-சொன்னான்-இவன்-சொன்னான்-என்று-எதையும்-ந/1749664968583186

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

13122996_1745392479010435_3852318611960749556_o.jpg?_nc_cat=101&ccb=2&_nc_sid=9267fe&_nc_ohc=JsmxZTYOwq4AX8iSJj4&_nc_ht=scontent.fmel3-1.fna&oh=06ada78168abecfa59448d0a2f632ed3&oe=5FE9F95C

நம்மால் முடிந்த மட்டும் உதவுவோம் ..!
.

நாம மட்டும் நல்லா இருந்தா போதாதா?

எதுக்கு இன்னொருத்தருக்கு உதவி பண்ணணும்?

பிறருக்கு நன்மை செய்ய நாம் ஏன் கடமைப்பட்டுள்ளோம்?

நாமும் நம்ம குடும்பமும் நன்றாக இருந்தால் போதாதா
என்றே பலரும் நினைக்கின்றனர்..!
.

மாமேதையான ஆல்பர்ட் ஜன்ஸ்டீன் கூறுகிறார்
`சமுதாயமும் தனி மனிதனும்` என்ற புத்தகத்தில்
அவரது எண்ணங்களின் சாரம் இது:

"தனிப்பட்ட நம் வாழ்க்கையை நாம் கூர்ந்து நோக்கினால், நமது பெரும்பாலான எண்ணங்களும் செயல்களும் பிற மனிதர்களின் வாழ்வைச் சார்ந்தே உள்ளதைக் காணலாம். நமது இயல்பே கூடி வாழும் தன்மை உடையது தான்.

பிற மனிதர்கள் பயிராக்கிய தானியங்களையே நாம் உட்கொள்கிறோம், பிறர் நெய்த ஆடைகளையே நாம் உடுத்துகிறோம், பிறர் கட்டிய வீடுகளிலேயே நாம் வசிக்கிறோம். நாம் வாழ்வதற்கான அன்றாட அறிவும் தகவல்களும் நமது நம்பிக்கைகளும், பெரும்பாலும் பிற மனிதர்கள் மூலமே நம்முள் வியாபித்துள்ளன.
சமுதாயம் என்ற சத்தான விளை நிலம் இல்லாமல் எப்படி தனிமனிதனால் வளர்ச்சியடைய முடியாதோ, அதே போன்று, சிந்தனைத் திறன்மிக்க தனிமனிதர்கள் இல்லையென்றால், சமுதாயத்தால் முன்னேற முடியாது" என்பதை அவர் அதில் சொல்லி இருக்கிறார்
.

உதவி செய்வது பற்றிய சிறிய ஒரு கதை...

ஒரு நாள் ஒரு எறும்பு ஒரு குளத்தில் தவறி விழுந்து விட்டது. தண்ணீரில் இருந்து கரைக்கு வர முடியாமல் அது தத்தளித்தது. இதை அக் குளக்கரையில் இருந்த மரத்திலிருந்த ஒரு புறா கவனித்தது அது எறும்புக்கு உதவி செய்ய எண்ணி மரத்திலிருந்து ஒரு இலையைப் பிடுங்கி எறும்பின் அருகில் போட்டது.

இலை தண்ணீரில் மிதந்தது. அந்த இலையின் மேல் ஏறி எறும்பும் கரை சேர்ந்து உயிர் பிழைத்தது தன்னைக் காப்பாற்றிய புறாவிற்கு மனதினுள் நன்றி சொல்லிக் கொண்டது.

பின்னர் ஒரு நாள் அந்தப் புறா மரத்தில் இருக்கும் போது ஒரு வேடன் அதைக் கண்டான். பசியால் உணவு தேடிக் கொண்டிருந்த அவ் வேடன் அதைக் கொல்ல எண்ணி, தன் அம்புவில்லை எடுத்துக் குறி பார்த்தான். வேடன் குறி பார்ப்பதை அந்தப் புறா கவனிக்கவில்லை.
இதை எறும்பு கண்டது. தன்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றிய புறாதான் அது என்பதை அந்த எறும்பு உணர்ந்தது. உடனே வேகமாக ஓடிப்போய் வேடனின் காலில் கடித்தது. வேடன் அலறியபடி காலைக் குனிந்து பார்த்தான். இந்தச் சத்தத்தைக் கேட்டுப் புறா திரும்பிப் பார்த்தது.

தன்னைக் கொல்ல முயன்ற வேடனைக் கண்டது. உடனடியாக மரத்தை விட்டுப் பறந்தது. பறக்கும் போது அவனைக் கடித்த எறும்பைக் கண்டது. தான் முன்னர் காப்பாற்றிய எறும்பு தன்னை இப்போது காப்பாற்றியதை நினைத்து மகிழ்ச்சியால் நெகிழ்ந்தது.

ஓரறிவு உள்ள எறும்பு புறாவுக்கே அடுத்தவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்போது, ஆரறிவு படைத்த மனிதனுக்கு இது அவசியம் இருக்க வேண்டுமல்லவா?
.

மரம் உதவுகிறது நிழல் தந்து ..

புல்லங்குழல் உதவுகிறது இசைக்கு தன் உயிர் தந்து ..

ஏணி கூட உதவுகிறது நம்மை மேலே ஏற்றி விட ...

நாம் சற்று கவனித்தோமானால் எல்லாமே உதவுகின்றன என்று தோன்றும்!

ஆகவே முடிந்த அளவு கண்டிப்பாக பிறர்க்கு உதவி செய்ய வேண்டும்.

அடுத்தவருக்கு உதவி செய்தால் பின்னால் அது உங்களுக்கே திரும்பக் கிடைக்கும்.

நீங்கள் செய்கிற உதவியைப் பெறுபவர் அவர் மனசார வாழ்த்துகிறார்ப்போல் போல் அது இருக்கட்டும் ...

உதட்டால் அல்ல ..!

நாம் செய்தது நமக்கே திரும்ப வரும் என்பதுதான் பிரபஞ்ச விதி ..!

முடிந்த மட்டும் உதவுவோம் ..!

.https://www.facebook.com/நல்லதே-நினைப்போம்-நல்லதே-நடக்கட்டும்-1639711246245226/photos/சிந்தனைசெய்-மனமேநன்றி-தே-சௌந்தர்ராஜன்அவன்-சொன்னான்-இவன்-சொன்னான்-என்று-எதையும்-ந/1745392479010435

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

``ஒற்றை கிட்னியுடன்தான் அனைத்தையும் சாதித்தேன்!"- 17 வருட ரகசியம் உடைத்த அஞ்சு பாபி ஜார்ஜ்

அஞ்சு பாபி ஜார்ஜ்

அஞ்சு பாபி ஜார்ஜ்

பலரும் அஞ்சுவின் இந்த அளப்பரிய சாதனையைப் பாராட்டிப் பதிவிட்டு வருகின்றனர். மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் அஞ்சுவுக்குப் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்திருக்கிறார்.

ஒலிம்பிக் தொடருக்கு அடுத்து, ஒவ்வொரு தடகள வீரர் வீராங்கனையும் சாதிக்கத் துடிக்கும் களம் உலக தடகள சாம்பியன்ஷிப். இந்தியர்களுக்கு என்றுமே தடகளம் சவாலான ஒரு விளையாட்டு பிரிவாகவே இருந்துவருகிறது. இது போன்ற போட்டிகளுக்குத் தகுதி பெறுவதே பெரும் சாதனையாகப் பார்க்கப்பட்டது, இன்றும் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்தான் 2003-ல் நடந்த பாரிஸ் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் நீளம் தாண்டுதலில் 6.70 மீட்டர் தாவி இந்தியாவுக்குப் பதக்கம் வென்று தந்த முதல் வீராங்கனையானார் அஞ்சு பாபி ஜார்ஜ். இன்று வரை உலக தடகள சாம்பியன்ஷிப் அரங்கில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் இவர் மட்டும்தான்.
அஞ்சு பாபி ஜார்ஜ்
 
அஞ்சு பாபி ஜார்ஜ்

இது நடந்து 17 வருடங்களுக்குப் பிறகு சொல்லாமல் மறைத்திருந்த ரகசியம் ஒன்றை நேற்று வெளியிட்டிருக்கிறார் அஞ்சு பாபி ஜார்ஜ். இத்தனை ஆண்டுகளும் தான் ஒற்றை கிட்னியுடன்தான் போட்டியிட்டதாக அவர் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

"நம்பினால் நம்புங்கள். நான் மிகவும் அதிர்ஷ்டம் படைத்தவள். ஒற்றை கிட்னியுடன் உலக அரங்கில் உச்சத்தை என்னால் தொட முடிந்தது. அப்போது சாதாரண வலி நிவாரணிக்குக் கூட எனக்கு ஒவ்வாமை இருந்தது. அதனால் வலியுடன்தான் போட்டியிட்டேன். இத்தனை இருந்தும் என்னால் சாதிக்க முடிந்தது." என்ற அவர் இவை அனைத்தும் எனது பயிற்சியாளரின் மேஜிக்தான் என்றும் அந்தப் பதிவில் குறிப்பிட்டார்.

இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது. பலரும் அஞ்சுவின் இந்த அளப்பரிய சாதனையைப் பாராட்டிப் பதிவிட்டு வருகின்றனர். மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் அஞ்சுவுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்திருக்கிறார்.

 

இதுகுறித்து ஆங்கில செய்தித்தாள் ஒன்றிடம் பேசிய அஞ்சு பாபி ஜார்ஜ். "பிறப்பிலிருந்தே எனக்கு இந்தப் பிரச்னை இருந்திருக்கிறது. இதன் காரணமாகவே எப்போதும் காயங்களிலிருந்து மீண்டுவர எனக்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டது. ரத்தத்தில் எப்போதும் யூரியா அளவானது அதிகமாகவே இருக்கும். அடிக்கடி தசைப்பிடிப்புகளில் வலி ஏற்படும். வலி நிவாரணிகள் எடுத்துக்கொள்ள முயற்சி செய்த சமயங்களில் சுய நினைவை இழந்திருக்கிறேன். இதனால் என்னை உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

2001-ல் எடுத்துக்கொண்ட பரிசோதனையில்தான் நான் ஒற்றை கிட்னியுடன் பிறந்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து விளையாட முடியுமா என்ற கவலை என்னைத் தொற்றிக்கொண்டது. பெரிய சிக்கல்கள் இல்லை தொடர்ந்து ஆடலாம் என மருத்துவர்கள் நம்பிக்கையளித்த பிறகே பயிற்சிகளைத் தொடர்ந்தேன்.

அஞ்சு பாபி ஜார்ஜ்
 
அஞ்சு பாபி ஜார்ஜ்

பாரிஸ் உலக தடகள சாம்பியன்ஷிப்புக்கு ஒரு வாரத்துக்கு முன்பு கூட உடல்நிலையில் ஒரு பிரச்னை ஏற்பட்டது. அதற்கும் இந்த ஒற்றை கிட்னிதான் காரணம். தொடர்ந்து பயிற்சிகளிலும் போட்டிகளிலும் பங்குபெற்று வந்ததால் எனக்கு உடல் சோர்வு ஏற்பட்டது. அதிலிருந்து மீள போதிய நேரம் எனக்குக் கிடைக்கவில்லை. என்னைப் பரிசோதித்த ஜெர்மன் மருத்துவர்கள் ஆறு மாதம் ஓய்வு எடுக்கச் சொன்னார்கள். இருந்தும் போட்டிகளில் பங்குகொண்டேன்.

அப்போது இந்தப் பிரச்னையை வெளியில் சொல்ல தயங்கினேன். இப்போதுதான் இதில் ஒன்றுமில்லை என்ற பக்குவம் எனக்கு வந்திருக்கிறது. இதை இப்போது வெளியில் சொல்வதன் மூலம் பலரையும் ஊக்கப்படுத்தமுடியும் என நம்புகிறேன்" என்றார். இந்த வெற்றிக்குப் பயிற்சியாளரும், தன் கணவருமான ராபர்ட் பாபி ஜார்ஜூம் மிக முக்கிய காரணம் என்றும் கூறினார்.

 

https://sports.vikatan.com/sports-news/reached-the-top-of-the-world-with-a-single-kidney-anju-bobby-georges-revelation-stuns-people

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.