Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கம்பன் விழா தேவையா?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கம்பன் விழா தேவையா?

நாளை கொழும்புக் கம்பன் விழா ஆரம்பமாவதாக பத்திரிகைகளில் படித்திருந்தேன். 90களின் நடுப்பகுதியில் கொழும்பிலுள்ள வர்த்தகர்கள் சிலரின் ஆதரவில் யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்த கம்பன் குழுவினர் இன்று கொழும்பில் தமக்கு சொந்தமான கட்டிடத்துடன் ஆடம்பரமாக வாழ்கின்றனர்.

தமிழ் மொழிக்கு கம்பன் ஆற்றிய சேவையை யாரும் மறுக்கபோவதில்லை ஆணால் கம்பன் தமிழனான இராவணனை அரக்கனாகவும் ஆரியனான இராமனை கடவுள் அவதாரமாகவும் பாடிய ஒருவர். ஒரு திருவள்ளுவருக்கோ தொல்காப்பியருக்கோ விழா எடுத்தால் அது தமிழர் விழா. ஆரியனைப் பாடிய கம்பனுக்கு விழா தேவையா?

முன்னைய வருடங்களில் கம்பன் விழா கவியரங்கத்தில் மட்டும் தமிழ்த் தேசியத்தைப் பற்றி இலைமறைகாயாக ஒரு சிலர் கவிதை பாடுவார்கள். மற்றும்படி எந்த நிகழ்விலும் தமிழ்த் தேசியத்தைப் பற்றி ஒரு வார்த்தை. கடந்த இரண்டு வருடங்களாக கவியரங்கிலும் தமிழ்த் தேசியத்தைப் பற்றி கதைப்பது தடை செய்யப்பட்டுள்ளதாக கம்பவாரிதி இ.ஜெயராஜே மேடையில் மெல்லச் சொன்னார்.

அதே பேச்சாளர்கள் அதே பழைய கதை என திரும்ப திரும்ப அரைத்த மாவை இலக்கியம் என்ற போர்வையில் அரைப்பதே கம்பன் கழகத்தினரின் நோக்கம், இவர்கள் அழைப்பில் ஓரிருமுறை விழாவுக்கு வருகை தந்த நெல்லைக் கண்ணன் எனும் அதிமுக உறுப்பினர் சில நாட்களுக்கு முன்னர் கல்கி வார இதழில் நமது தேசியத்தலைவரை கொலைகாரன் பயங்கரவாதி என குறிப்பிட்டவர். இதே வேளை தமிழ்த் தேசியத்துக்கு ஆதரவாக போராடும் தமிழக ஆதரவாளர்களான பழ நெடுமாறன் கவிஞர் அறிவு மதி போன்றோருடன் குரல் கொடுத்தவரான ஒவ்வொரு கம்பன் விழாவிலும் கலந்துகொள்ளும் வழக்கறிஞர் த இராமலிங்கம் இம் முறை அழைக்கபடவில்லை.

இதே கம்பன் கழகத்தினர் தான் மூன்றாம் ஈழப்போர் உச்சக்கட்டத்தில் இருந்த வேளை புலிகளுக்கு எதிராக கருத்துக்கூறும் பத்திரிகையாளார் இக்பால் அதாஸ்சுக்கும் கம்பன் விழாவில் விருது கொடுத்து மகிழ்ந்தவர்கள். அமைப்பாளர்கள் இதற்க்கான காரணமாக அவர் தமிழுக்கு பல வழிகளில் உதவினார் என சப்பைக்கட்டுக்கட்டினர்.

எனக்கு கம்பன் கழகத்தினர் மீதோ அவர்கள் பேச்சாளர் மீதோ எந்த காழ்ப்புணர்ச்சியும் இல்லை. ஆனால் அவர்கள் சேர்ந்து இயங்கம் சில வர்த்தகர்கள் தம் சுய லாபத்திற்க்காக கம்பன் கழகம் எந்த நோக்கத்திற்க்கு ஆரம்பிக்கப்படாதோஅதை மழுங்கடித்து தம்மை விளம்பரப்படுத்தவே இந்த விழாக்களை பயன்படுத்துகிறார்கள் என்பது வெள்ளிடை மலையாக அனைவரும் அறிந்ததே.

தென் தமிழீழத்தில் பாரிய இடப்பெயர்வுகளும் அழிவுகளும் ஏற்பட்டுள்ள இந்த வேளையில் இந்த விழா தேவையா? வட தமிழீழத்தில் மக்கள் உணவின்றி திறந்த வெளிச் சிறைச்சாலையில் பட்டினியால் வாடும்போது இந்த விழா தேவையா? எல்லாவற்றையும் விட தலைநகர் கொழும்பில் மக்கள் வகைதொகை இன்றி கைது செய்யப்படுவதும் கடத்தப்படுவதுமான இந்த நேரத்தில் இவ் விழா தேவையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராவணன் தமிழனா சிங்களவனா ?? :unsure::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராவணன் தமிழனா சிங்களவனா ?? :unsure::lol:

இராவணன் தமிழன் என்கிறது வால்மீகி இராமயணம் அதேவேளை கம்பராமாயானத்திலும் இராவணன் தமிழன் என்பதாக சில ஆதாரம் இருப்பதாக வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். அதே வேளை கம்பவாரிதி இ ஜெயராஜ் அவர்களை ஒருமுறை கேட்டபோது இராவணன் ஒரு திர்ராவிடன் என்று மட்டும் கூறினார்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடன் வேலை செய்யும் இந்தியாப் பார்ப்பணப் பெண் ஒருவர், சேது சமுத்திரத்திட்டத்தினால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கட்டப்பட்ட இராமர் பாலம் இடிக்கப்படவுள்ளதினைத் தடுக்க இந்தியா அரசுக்கு அப்பாலம் இடிக்காமல் சேது சமுத்திரத்திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும் என்று மனுப் போடச்சொன்னார். இப்பாலம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். அந்தப்பெண்மணிக்கு இந்தியா அரசு இலங்கைக்கு ஆயூத உதவி செய்வதினைத் தடுக்க மனுப் போடச்சொல்ல, அவவிடமிருந்து ஒரு பதிலையும் காணவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னுடன் வேலை செய்யும் இந்தியாப் பார்ப்பணப் பெண் ஒருவர், சேது சமுத்திரத்திட்டத்தினால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கட்டப்பட்ட இராமர் பாலம் இடிக்கப்படவுள்ளதினைத் தடுக்க இந்தியா அரசுக்கு அப்பாலம் இடிக்காமல் சேது சமுத்திரத்திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும் என்று மனுப் போடச்சொன்னார். இப்பாலம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். அந்தப்பெண்மணிக்கு இந்தியா அரசு இலங்கைக்கு ஆயூத உதவி செய்வதினைத் தடுக்க மனுப் போடச்சொல்ல, அவவிடமிருந்து ஒரு பதிலையும் காணவில்லை.

அதுதான் பார்ப்பணர்களின் குணம். இந்தப் பார்ப்பணர்கள் சிலர் இலங்கையிலும் கோலோச்சத் தொடங்கிவிட்டார்கள். ஹரே ராமா ஹரே கிருஷ்ணா போன்ர அமைப்புகள் அத்தகையது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னுடன் வேலை செய்யும் இந்தியாப் பார்ப்பணப் பெண் ஒருவர், சேது சமுத்திரத்திட்டத்தினால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கட்டப்பட்ட இராமர் பாலம் இடிக்கப்படவுள்ளதினைத் தடுக்க இந்தியா அரசுக்கு அப்பாலம் இடிக்காமல் சேது சமுத்திரத்திட்டத்தை நடை முறைப்படுத்த வேண்டும் என்று மனுப் போடச்சொன்னார். இப்பாலம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது என்றார். அந்தப்பெண்மணிக்கு இந்தியா அரசு இலங்கைக்கு ஆயூத உதவி செய்வதினைத் தடுக்க மனுப் போடச்சொல்ல, அவவிடமிருந்து ஒரு பதிலையும் காணவில்லை.

அவள் இந்திய பார்ப்பண தமிழரா ??

இராவணன் தமிழன் என்கிறது வால்மீகி இராமயணம் அதேவேளை கம்பராமாயானத்திலும் இராவணன் தமிழன் என்பதாக சில ஆதாரம் இருப்பதாக வரலாற்றாசிரியர்கள் சொல்கிறார்கள். அதே வேளை கம்பவாரிதி இ ஜெயராஜ் அவர்களை ஒருமுறை கேட்டபோது இராவணன் ஒரு திர்ராவிடன் என்று மட்டும் கூறினார்.

தமிழன் எண்டு குறிப்பாக கூறுகிறதா இல்லை திராவிடன் என்று பொதுமையாக கூறுகிறதா ?

எனக்க்கு அதற்கான குறிப்புகளைத்தர இயலுமா ?

தமிழ் என்ற ரீதியில் பார்க்கும்போது கம்பன் விழா தேவையான, அத்தியாவசியமான ஒன்றே. நான் கூட நல்லூர், கொழும்பில் நடைபெற்ற பல கம்பன் விழாக்களிற்கு சென்று நிகழ்ச்சிகளை கண்டு களித்துள்ளேன். ஆனால், தமிழ்த்தேசியத்திற்கு எதிரான விடயங்கள், மற்றும் துரோகிகள் கம்பன் கழகத்தினுள் ஊடுருவுமாய் இருந்தால் குறிப்பிட்ட விழாவை நாம் பகிஸ்கரிப்பதே பொருத்தமானது. துரோகிகளை இனங்காணமுடியாத அளவிற்கு கம்பன் கழகத்திற்கு தற்போது மூளை போதவில்லையோ?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மொழியின் சிறப்பை சொல்ல.. பரப்ப.. களங்கள் அவசியம். அந்த வகையில் விளம்பரங்கள் தேடாத.. ஒரு கம்பன் விழா அமைவது.. தமிழிற்கு சிறப்பு. கம்பன் கழகமும் ஆரம்பத்தில் அப்படித்தான் இருந்தது.. இப்ப சுய விளம்பரக்காரர்களும்.. வெட்டிப் புகழ்தேடிகளும்.. வர்த்தக விளம்பரதாரர்களும்.. இலக்கியக்கியத்தை முதலீடாக்கி.. காசு பார்க்க வெளிக்கிட்டதால.. மொழிக்கு ஆற்றும் சேவை போய்.. ஆளாளுக்கு கிள்ளிப் பார்த்து பெருமிதப்பட என்ற நிலைக்கு அதைக் கொண்ணாந்திட்டாங்க..! சிந்திப்பார்களாக..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அவள் இந்திய பார்ப்பண தமிழரா ??

மும்பாயில் வசித்த மலையாளி என்று சொன்னார். ஆனால் தொலைபேசியில் அவருடைய உறவுகளுடன் தமிழில் தான் கதைப்பார். நான் வேலையில் இணைத்த போது, தான் பிரமணர் என்றும் , என்னைப் பிராமணரா என்றும் கேட்டார். சில நாட்களின் பின்பு, எனது நண்பரின் திருமணப் புகைப்படத்தினைக் காட்டினேன். அதில் மணமகனும். மாப்பிள்ளைத் தோழனும் தலைப்பாய் அணிந்து ( ஈழத்தமிழர்களின் திருமணங்களில் தலைப்பாய் அணிவது வழக்கம்) இருந்ததைப்பார்க்க, ஏன் தலைப்பாய் அணிந்துள்ளார்கள் என்று கேக்க, நானும் இது தான் சந்தர்ப்பம் என்று , ஈழத்தில் இருப்பவர்களில் பெரும் பாலோர் அரசபரம்பரையினர், அதனால் தான் தலைப்பாய் அணிவது வழக்கம் என்றேன். நானும் அரசபரம்பரையினர் என்றும் பொய் சொன்னேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அவருடன் கதைக்கும் போது தங்கள் பெயர்கள் சம்ஸ்கிருதத்தில் தான் இருக்கும் என்றார். பெரும்பாலோர் மகாவிஸ்ணுவை முதன்மைக் கடவுளாகக் கும்பிடுவதாகவும் சொன்னார்.

பிராமணர் அல்லாத தமிழர்கள் தான் தமிழ்பெயர் சூடுவதாகவும் சொன்னார். ஆனால் ஈழத்தில் உள்ள பிராமணர்களில் சிலர் தூய தமிழில் மாதினி, மாதுளன் , உமையாள் என்ற கடவுள்களின் பெயர்களையும், கடவுள் அல்லாதவர்களின் பெயர்களையும் (செஞ்சுடர்)சூடுவதுடன், போராளிகளாகவும் , மாவீரர்களாகவும் இருக்கிறார்கள்.

ஈழத்தில் சமயம் பற்றிக் கேட்க, ஈழத்தில் இந்துக்களில் பெரும்பாலனவர்கள் சிவனை முதன்முதலாகக் கொண்ட சைவசமயத்தினை உடையவர்கள் என்றும் , அங்கே வைஸ்ணவர்கள் இல்லை என்றும் சொன்னேன். ஆனால் தற்காலத்தில் எல்லாச்சுவாமிகளையும் பலர் கும்பிடுகிறார்கள் என்றும் சொன்னேன். அவர், சிட்னியில் உள்ள ஈழத்தமிழர்களின் பிள்ளையார் கோவிலுக்கு சென்றாராம். அங்கே சிவன், பிள்ளையார், முருகனுக்கு பெரிய சிலைகள் உள்ளது. ஆனால் மகாவிஸ்ணுவுக்கு சிறியசிலையும் அதுவும் ஒரு ஒரத்தில் அமைந்திருப்பதாகவும், தனக்கு இதனால் கோபம் ஏற்பட்டுள்ளது, இனி அக்கோவிலுக்கு செல்ல மாட்டேன் என்று சொன்னார். மகாவிஸ்ணுவின் சிலை இல்லாவிட்டால் பரவாயில்லை, ஏன் அதனை சிறிய சிலையாக வைத்திருக்க வேண்டும் என்று கேட்டார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கம்பன் விழாவில் உச்சக்கட்ட தமிழ்த் தேசியத்துக்கு எதிரான நிகழ்வு நேற்று இடம் பெற்றுள்ளது . யாழ் நூலகம் எரிக்கப்பட்ட நிகழ்வின் நினைவு நாளில் அதனை எரிப்பதற்க்கு உறுதுணையாக இருந்த கனேசலிங்கம்( முன்னாள் கொழும்பு மேயர்) என்ற தமிழ்த்தேசிய எதிர்ப்பளாரின் உருவப்படத்தை திறந்து ஜெயராஜ் தான் ஒரு தமிழ்த் தேசிய விரோதி என்பதை நிரூபித்துவிட்டார். ஜெயராஜின் வயிறு வளர்ப்பதற்காக இப்படி எல்லாம் அவர் இறங்குவது தேவையா?

என்ன செய்வது ஜெயராஜ் சேர்ந்த இடம் அப்படி தமிழ் உணர்வே இல்லாத முதலாளி தெ ஈஸ்வரனுடன் சேர்ந்தால் இதெல்ல இன்னமும் நடக்கும். இவரை அழைத்து புலம் பெயர் நாடுகளில் கெளரவிப்பவர்கள் இனிமேலாவது இவரைப் புறக்கணிப்பார்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை வாந்தி

ஜெயராஜ்சும், புதுவை இரத்தினதுரையும் பல ஆண்டு நண்பர்கள். யாழ்பாணத்தில் இருந்து ஜெயராஜ் கொழும்பு வரக்க, இவரது கம்பன் கழகத்தின் சொத்துக்களைப் பார்த்துப் புலிகளின் தலைவரின் உடமைகள் என்று உள்ளுக்குத் தூக்கிச் சிங்கள அரசு போட்டு வைச்சிருந்தது. பிறகு தேவராஜா தான் வெளியால எடுத்து விட்டவர் போல.

யாழ்பல்கலைக்கழகத்தில நிதர்சனம் செய்த ஒரு விவரணம் தொடர்பாக ஜெயராஜ்சுக்கும், புலிகளுக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டது என்னவோ உண்மை. ஆனால் பின்னர் எக்காரணம் கொண்டும் புலிகள் பற்றியோ, அரசியல் பற்றியோ கதைக்கமாட்டேன் என்று ஜெயராஜ் தானாகவே சத்தியம் செய்தார். அதன் பின்னர் எந்த மேடையிலும் அவர் அவ்வாறு நடந்ததில்லை. இன்றைக்குக் கொழும்பில வாழ்ந்தாலும், அரசியல்ரீதியான எந்த விடயத்துக்கும் அவர் முக்கியத்துவம் கொடுத்ததில்ல.

அவர் கொழும்பில வாழ்வதால சில விடயங்கள் கதைக்கக் கூடாது. ஆனா அவர் என்றைக்கும் தமிழீழப் போராட்டத்துக்கு துரோகம் செய்ததாக அறியல்ல.

யாழ் கம்பன் கழகத் தலைவர் எண்டதால மொரிசியஸ் தூதுவர் ஈஸ்வரன் கூட நட்பு வைச்சிருக்கலாம். ஆனா அவர் தன் கொள்ளையில் இருந்து மாறுபட்டுப் போனார் என்றா சொல்ல முடியும்.

கணேசலிங்கம் யாழ் நூலகம் எரிக்க உறுதிணையாக எப்படி நிண்டவர் என்று சொல்லவாறியள் என்று புரியவில்லை. ஐதேகாவில் இருந்ததால அப்படி அர்த்தப்படுறியளோ தெரியவில்லை. அதற்காகக் கணேசலிங்கம் நல்லவர் என்று சொல்லவரல்ல. உங்களின் கருத்து விளங்கவில்லை

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி மதனராசா

முதலில் என் பெயரை ஒழுங்காக எழுதுங்கோ. நானும் திரு ஜெயராஜின் பேச்சுக்கு அடிமையானவன் தான் அதற்க்காக அவர் செய்யும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றில்லை. ஆனால் முன்னைய காலத்தில் கடந்த வருடம் கூட கம்பன் கழகத்தவர்கள் அந்த வருட்த்தில் இறந்தவ்ர்களை நினைவு படுத்துவது வழமை யார் யாரை நினைவுபடுத்துகிறார்கள் என்பது முன்னரே பத்திரிகளில் வெளிவரும். ஆனால் இந்த வருடம் யாரை நினைவு கூறுவது என்பதை முன்னரே பத்திரிகைகளில் வெளியிடவில்லை.

நீங்கள் குறிப்பிட்டமாதிரி ஜெயராஜ் தேசியத்துக்கு எதிராக இதுவரை எந்த மேடையில் கதைத்ததையும் நான் அறியேன். ஆனால் இக்பால் அதாஸை இவர்கள் கெள்ரவித்ததும் முரளிதரனை கெளரவித்து அவமானப்பட்டதும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். மீண்டும் மீண்டும் இவர் ஏன் இப்படியான தவறுகளைச் செய்கிறார். அவரைக் கேட்டால் அவர் ஈஸ்வரன் பாலேந்திரா போன்றோரின் வற்புறுத்தல் எனச் சொல்வார். ஒரு உண்மை கம்பன் கழக விழாக்களில் மங்கள விளக்கேற்றும் வர்தகர்களிடம் இவர்கள் ரூபா ஒரு லட்சம் வசூலிக்கிறார்கள். என் நண்பர் ஒருவர் சென்ற வருட இசைவேள்விக்கு ஒரு லட்சம் கொடுத்து மங்கள விளக்கேற்றினார்.

கம்பன் கழகம் பற்றிய உங்கள் கருத்துக்கள் சரியானவை ஆனால் அவர்களை பொலிஸ் நிலையத்தில் இருந்து பூபாலசிங்கம் அதிபர் ஸ்ரீதர் சிங் மற்றும் மறைந்த எழுத்தாளர் சோமகாந்தன் இருவரும் தான் மீண்டாரே ஒழிய நீங்கள் கூறியவர் அல்ல. அன்Mஐயில் இதனை அமரர் சோமகாந்தனின் நினைவு நாளில் திரு ஜெயராஜே கூறினார். சென்றமாதம் இந்த நிகழ்வு நடைபெற்றது.

அடுத்து கனேசலிங்கம் விடயம் உங்களுக்கு பழைய வரலாறு தெரியாமல் விட்டால் யாரிடமும் கேளுங்கள். கனேசலிஙகம் இறுதியாக சந்திரிக்காவின் சுதந்திரக் கட்சியில் தன் கொழும்பு மாநகர தேர்தலில் நின்றார். இவருகும் யாழ் நூலகம் எரித்த பங்கு உண்டு என்ப்தை தினக்முரசு ஆசிரியர் அற்புதனின் ஒரு கட்டுரையில் படித்த ஞாபகம்.

மிக முக்கிய குறிப்பு எங்கள் தாயக் கவிஞர் திரு புதுவை திரு ஜெயராஜுக்கும் உள்ள உறவைப் பற்றி திரு ஜெயராஜ் மல்லிகை இதழ் ஒன்றில் அழகாக எழுதியுள்ளார்.

தயவு செய்து என் பெயரை வந்தியத்தேவன் அல்லது வந்தி என எழுதுங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.