Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்புக்கான எச்சரிக்கை அறிகுறிகள் என்ன தெரியுமா?,
அறிகுறிகளைக் கண்டறிவது,  சிறுவர்கள், குழந்தைகளின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை எவ்வாறு செய்வது என்பதை அறிய முயற்சிப்போம்.

FD1-F0020-828-B-4804-893-F-E9193-AD0-A5-

சிறுவர் துஷ்பிரயோகம் என்பது வெறும் கண்களைசுற்றியுள்ள காயத்தை மட்டும் பற்றியது அல்ல. உடல் ரீதியான துஷ்பிரயோகமும் அது விட்டுச்செல்லும் காயங்களை பார்க்கும் போது அதிர்ச்சியளிக்கும் அதே வேளையில், அனைத்து சிறுவர் துஷ்பிரயோக அறிகுறிகளும் வெளிப்படையாக தெரிவதில்லை.

குழந்தைகளின் தேவைகளைப் புறக்கணிப்பது, மேற்பார்வை செய்யப்படாத, ஆபத்தான சூழ்நிலைகளில் வைப்பது, பாலியல் சூழ்நிலைகளுக்கு அவர்களை அம்பலப்படுத்துவது அல்லது பயனற்றதாக அல்லது முட்டாள்தனமாக உணர வைப்பது ஆகியவை குழந்தை துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பின் வடிவங்களாகும் - மேலும் இவை குழந்தைகள் மீது ஆழமான, நீடித்த வடுக்களை விடக்கூடும்.

துஷ்பிரயோகத்தின் வகையைப் பொருட்படுத்தாமல் விடுவதன் விளைவாக மனநலத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுகிறது. ஒரு குழந்தை துஷ்பிரயோகம் அல்லது புறக்கணிப்பால் பாதிக்கப்படுவதாக நீங்கள் சந்தேகித்தால், பேசுவது முக்கியம். பிரச்சினையை சீக்கிரம் கண்டுபிடிப்பதன் மூலம், குழந்தை மற்றும் துஷ்பிரயோகம் செய்பவர் இருவரும் அவர்களுக்கு தேவையான உதவியைப் பெறலாம்.

சிறுவர் துஷ்பிரயோகம், புறக்கணிப்பு பற்றி தெரிந்துகொள்ளதொடங்குவதற்கு முன், சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு பற்றிய உண்மைகளிலிருந்து கட்டுக்கதைகளை பிரிப்பது முக்கியம்:

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு பற்றிய கட்டுக்கதைகள் மற்றும் உண்மைகள்:

கட்டுக்கதை - 1: 
வன்முறையை பிரயோகித்தால் மட்டுமே துஷ்பிரயோகம் 

உண்மை: 
உடல் ரீதியான துஷ்பிரயோகம் என்பது ஒரு வகை குழந்தை துஷ்பிரயோகம் மட்டுமே. குழந்தை புறக்கணிப்பு, பாலியல் மற்றும் உணர்ச்சி ரீதியான துஷ்பிரயோகமும் சேதத்தை ஏற்படுத்தும், மேலும் அவை எப்போதும் வெளிப்படையாக இல்லாததால், மற்றவர்கள் தலையிடுவது குறைவு.

கட்டுக்கதை - 2: 
கெட்டவர்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்கிறார்கள்.

உண்மை: 
துஷ்பிரயோகம் செய்யும் அனைத்து பெற்றோர்களும் அல்லது பாதுகாவலர்களும் வேண்டுமென்றே தங்கள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. பலர் தங்களது வாழ்க்கையில் கூட துஷ்பிரயோகத்தை அனுபவதிருந்திருப்பார்கள். அத்தகைய சூழ்நிலையில் வளர்ந்தவர்களுக்கு சரியான குழந்தைவளர்ப்பைபற்றி தெரிந்திருக்க/அறிந்திருக்க வழியிருந்திருக்காது. மேலும் சிலர் மனநல பிரச்சினைகள் அல்லது போதைப் பொருள் துஷ்பிரயோக சிக்கல்களுடன் போராடிக்கொண்டிருப்பவர்களாக இருக்கும் போது, தாங்கள் என்ன செய்கிறோம் என்ற நிலைமையை அறியாதவகையில் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுகிறார்கள்.

கட்டுக்கதை -3: 
“நல்ல/பண்பான” குடும்பங்களில் துஷ்பிரயோகம் நடக்காது.

உண்மை: 
துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு ஏழைக் குடும்பங்களில் அல்லது மோசமான சுற்றுப்புறங்களில் மட்டும் நடக்காது. இந்த நடத்தைகள் அனைத்து இன, பொருளாதார மற்றும் கலாச்சார எல்லைகளையும் கடந்து செல்கின்றன. சில நேரங்களில், எல்லாவற்றையும் வெளியில் இருந்து பார்க்கும் போது எதுவித பிரச்சனைகளும் இல்லாதது போலதோன்றும் குடும்பங்களின் மூடிய கதவுகளுக்குப் பின்னால் வேறு கதையைக்கூடகூறலாம்.

கட்டுக்கதை -4: 
அந்நியர்கள் மூலமே பெரும்பாலான குழந்தைகள் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.

உண்மை: 
சிறுவர்களை அந்நியர்களாலும் துஷ்பிரயோகம் செய்யப்படும் அதேவேளை, பெரும்பாலான துஷ்பிரயோகம் செய்பவர்கள் குடும்ப உறுப்பினர்கள் அல்லது குடும்பத்திற்கு நெருக்கமானவர்களாகவும் இருக்கின்றனர்.

கட்டுக்கதை -5: 
துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தைகள் எப்போதும் துஷ்பிரயோகம் செய்பவர்களாக வளர்கிறார்கள்.

உண்மை: 
துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தைகள் பெரியவர்களாகியவுடன் மீண்டும் அதே பாதையில் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம், அவர்கள் குழந்தைகளாக அனுபவித்ததை அறியாமலே மீண்டும் செய்கிறார்கள். மறுபுறம், சிறுவர் துஷ்பிரயோகத்தில் தப்பிப்பிழைத்த பல வயதுவந்தோர் தங்கள் குழந்தைகளை அவர்கள் கடந்து வந்தவற்றிலிருந்து பாதுகாக்க மற்றும் சிறந்த பெற்றோர்களாக மாறுவதற்கு ஒரு வலுவான உந்துதலைக் கொண்டுள்ளனர்.


சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பின் விளைவுகள்: 

எல்லா வகையான துஷ்பிரயோகங்களும் புறக்கணிப்பும் நீடித்த வடுக்களை விட்டு விடுகின்றன. இந்த வடுக்கள் சில உடல் ரீதியானதாக இருக்கலாம், ஆனால் மனதில் ஏற்படும் வடு வாழ்நாள் முழுவதும் நீடித்த விளைவுகளை ஏற்படுத்துகிறது, இது குழந்தையின் சுய உணர்வு, அவர்களின் எதிர்கால உறவுகள் மற்றும் வீடு, வேலை மற்றும் பள்ளியில் செயல்படும் திறனை சேதப்படுத்தும். அந்த விளைவுகள் பின்வருமாறு:

1- நம்பிக்கை இல்லாமை மற்றும் உறவுச்சிக்கல்கள்.
உங்கள் பெற்றோரை நம்ப முடியாவிட்டால், நீங்கள் யாரை நம்பலாம்? இந்த அடிப்படையில்லாமல், மற்றவர்களை நம்ப கற்றுக்கொள்வது அல்லது நம்பகமானவர் யார் என்பதை அறிந்து கொள்வது மிகவும் கடினம். இது இளமை பருவத்தில் உறவுகளைப் பேணுவதில் சிரமத்திற்கு வழிவகுக்கும். ஆரோக்கியமற்ற உறவுகளுக்கும் வழிவகுக்கும்.

2- “பயனற்ற/மதிப்பற்ற(Worthless)” என்ற உணர்வு. 
நீங்கள் சிறுவராக இருக்கும் போது முட்டாள் அல்லது நல்லவர் அல்ல என்று மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டால், இந்த தாழ்வுமனப்பான்மை உணர்வுகளை வெல்வது சில சமயங்களில் மிகவும் கடினம். துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தைகள் வளர்ந்து வருகையில் தங்கள் கல்வியை புறக்கணிக்கலாம் அல்லது குறைந்த ஊதியம் பெறும் வேலைகளில் குடியேறலாம், ஏனென்றால் அவர்கள் தாங்கள் அதிக மதிப்புடையவர்கள் என்று அவர்களால் நம்பமுடியாமல் போய்விடும் மேலும், பாலியல் துஷ்பிரயோகத்தில் இருந்து தப்பியவர்கள், துஷ்பிரயோகத்தால் ஏற்ப்பட்ட களங்கம் மற்றும் அவமானத்துடன், பெரும்பாலும் சேதமடைந்த உணர்வுடன் போராடுகிறார்கள்.

3- உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல். 
துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தைகள் உணர்ச்சிகளை பாதுகாப்பாக வெளிப்படுத்த முடியாது. இதன் விளைவாக, அடக்கிவைக்கப்பட்ட உணர்ச்சிகள் , எதிர்பாராத வழிகளில் வெளிவருகின்றன. சிறுவர் துஷ்பிரயோகத்தில் இருந்து தப்பிப்பிழைத்தவர்கள் விவரிக்க முடியாத கவலை, மனச்சோர்வு அல்லது கோபத்துடன் போராடலாம். வலிமிகுந்த உணர்வுகளைத் தணிக்க அவர்கள் மது அல்லது போதைப்பொருட்களை நோக்கித் திரும்பலாம்.

பல்வேறு வகையான சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிந்துகொள்ளல்:

AF394797-3-D9-C-4410-A98-F-BF8-C7-BD46-E

தவறான நடத்தை பல வடிவங்களில் வருகிறது, ஆனால் பொதுவான ஒரு நடத்தை, சிறுவர்களின் உளரீதியான விளைவு/தாக்கம் ஆகும். 
 உடலில் விழும் ஒரு அறை, கடுமையான கருத்துபரிமாற்றம், இறுகிய மெளனம் (stony silence)அல்லது மேஜையில் இரவு உணவு இருக்குமா என்ற கேள்விக்கு விடை தெரியாத நிலை, இப்படியான காரணங்களால் ஒரு குழந்தை/சிறார் பாதுகாப்பற்ற, அக்கறையற்ற, தனிமையை உணர்கிறது.

உளரீதியான/ உணர்வுகளின  மீதான துஷ்பிரயோகம்:- சிலரின் நம்பிக்கைகளுக்கு மாறாக, வார்த்தைகள் புண்படுத்தும் மற்றும் மன உணர்ச்சிகளை பாதிக்கும் துஷ்பிரயோகம் குழந்தையின் மன ஆரோக்கியம் அல்லது சமூக வளர்ச்சியை கடுமையாக சேதப்படுத்தும். உணர்ச்சி துஷ்பிரயோகத்தின் எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:

- தொடர்ந்து குறை கூறுவது, வெட்கப்படுவது, அவமானப்படுத்துவது.
- பெயர்களை மரியாதையின்றி அழைப்பது மற்றும் மற்றவர்களுடன் எதிர்மறையான ஒப்பீடுகள் செய்வது.
- ஒரு குழந்தைக்கு அவர்கள் “நல்லவர்கள் இல்லை,” “பயனற்றவர்கள்,” “கெட்டவர்கள்” அல்லது “ஒரு தவறு” என்று சொல்வது.
- அடிக்கடி கத்துவது, அச்சுறுத்துவது அல்லது கொடுமைப்படுத்துதல்.
- ஒரு குழந்தைக்கான தண்டனையாக புறக்கணித்தல் அல்லது நிராகரித்தல். 
- ஒரு குழந்தையுடன் உடல் ரீதியான தொடர்பைக் கட்டுப்படுத்துதல்-கட்டிப்பிடிப்புகள், முத்தங்கள் அல்லது பாசத்தின் அறிகுறிகள் எதையும் காட்டாமல்விடுதல்.
- ஒரு குழந்தையை மற்றவர்களுக்கு எதிரான வன்முறைக்கு உட்படுத்துவது, அது மற்ற பெற்றோருக்கு எதிரானதாக இருந்தாலும், ஒரு உடன்பிறப்பு அல்லது செல்லப்பிராணியாக இருந்தாலும் சரி

குழந்தையின் தேவைபற்றிய புறக்கணிப்பு: - மிகவும் பொதுவான குழந்தை துஷ்பிரயோகம் -
 ஒரு குழந்தையின் அடிப்படை தேவைகளை வழங்காமல் விடுவது, இதில் போதுமான உணவு, உடை, சுகாதாரம் அல்லது மேற்பார்வை ஆகியவை அடங்கும். குழந்தை புறக்கணிப்பு எப்போதும் கண்டுபிடிக்க எளிதானது அல்ல. சில சமயங்களில்,  பெற்றவர்களால், கடுமையான நோய் அல்லது காயம், அல்லது சிகிச்சை அளிக்கப்படாத மனச்சோர்வு அல்லது பதட்டம் போன்ற காரணங்களால் ஒரு குழந்தையை பராமரிக்க உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ முடியாமல் போகலாம். சில நேரங்களில்,மது அல்லது போதைப்பொருள் பாவனையால் குழந்தையை பாதுகாப்பாக வைத்திருக்கும் திறனையும் இழந்திருக்கலாம்.

உடல் ரீதியான துஷ்பிரயோகம்:-
 குழந்தைக்கு உடல் ரீதியான தீங்கு அல்லது காயம். இது குழந்தையை காயப்படுத்த வேண்டுமென்றே முயற்சித்ததன் விளைவாகவோ அல்லது அதிக உடல் ரீதியான தண்டனையாகவோ இருக்கலாம். உடல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யும் பல பெற்றோர்கள் தங்கள் செயல்கள் வெறுமனே ஒழுக்கத்தின் வடிவங்கள்-குழந்தைகள் நடந்து கொள்ளக் கற்றுக்கொள்வதற்கான வழிகள் என்று வலியுறுத்துகின்றனர். ஆனால் உடல் ரீதியான தண்டனையை ஒழுக்கத்திற்கும் உடல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கும் பயன்படுத்துவதில் பெரிய வித்தியாசம் உள்ளது.

உடல் ரீதியான துஷ்பிரயோகத்துடன் தொடர்பான பின்வரும் கூறுகள் உள்ளன:

கணிக்க முடியாத தன்மை-குழந்தைக்கு பெற்றோரின் எண்ணங்களை விளங்கிக்கொள்ளும் முதிர்ச்சி உடனே வந்துவிடாது, அத்துடன் தெளிவான எல்லைகள் அல்லது விதிகள் எதுவும் இல்லாமை, எந்த நடத்தை உடல் ரீதியான தாக்குதலைத் தூண்டும் என்று ஒருபோதும் உறுதியாக தெரிந்துகொள்ளமுடியாதமையால் குழந்தை கத்தியின் மேல்/ முள்ளின் மேல் நடப்பதைப்போலவே உணரும்.

கோபத்தில் அடித்துக்கொள்வது- துஷ்பிரயோகம் செய்யும் பெற்றோர் கோபத்திலிருந்தும், கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் விருப்பத்திலிருந்தும் செயல்படுகிறார்களேயன்றி, குழந்தைக்கு அன்பாக கற்பிப்பதற்கான உந்துதலால் அல்ல. பெற்றோருக்கு கோபம் கூடக்கூட துஷ்பிரயோகம் மிகவும் தீவிரமாகமாறுகிறது.

பயத்தைப் பயன்படுத்துதல்-துஷ்பிரயோகம் செய்யும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ஒழுங்காக நடந்துகொள்வதற்கு பயத்தைபயன்படுத்த வேண்டும் என்று நம்பலாம், எனவே அவர்கள் “தங்கள் குழந்தையை ஓருங்காக வைத்திருக்க” உடல் ரீதியான துஷ்பிரயோகத்தைப் பயன்படுத்துகிறார்கள். இருப்பினும், குழந்தைகள் உண்மையிலேயே கற்றுக்கொள்வது என்னவென்றால், தாக்கப்படுவதைத் தவிர்ப்பது எப்படி என்பதை மட்டுமே, தனிநபர்களாக எப்படி நடந்துகொள்வது அல்லது வளர்வது என்பதல்ல.

பாலியல் துஷ்பிரயோகம்- 
சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் குறிப்பாக சிக்கலான துஷ்பிரயோகமாகும், 
ஏனெனில் அதன் குற்ற உணர்ச்சி மற்றும் அவமானம். பாலியல் துஷ்பிரயோகம் எப்போதும் உடல் தொடர்புடன் இருக்காது என்பதை அங்கீகரிப்பது முக்கியம். ஒரு குழந்தையை பாலியல் சூழ்நிலைகள் அல்லது பொருள்களுக்கு வெளிப்படுத்துவது பாலியல் துஷ்பிரயோகம், தொடுவது சம்பந்தப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும் கூட.

பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தைகள் பெரும்பாலும் அவமானம் மற்றும் குற்ற உணர்ச்சியால் துன்புறுத்தப்படுகிறார்கள். துஷ்பிரயோகத்திற்கு அவர்கள் தான் காரணம் என்று அவர்கள் தங்களுக்குள் ஒரு முடிவை எடுத்துவிடுகிறஈர்கள். இது வயதாகும்போது சுய வெறுப்பு மற்றும் பாலியல் மற்றும் உறவு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

பாலியல் துஷ்பிரயோகத்தினால் ஏற்பட்ட அவமானத்தினால் குழந்தைகள் இதனை கூறமுன் வருவது மிகவும் கடினம். மற்றவர்கள் தங்களை நம்பமாட்டார்கள், அவர்களிடம் கோபப்படுவார்கள், அல்லது அது அவர்களின் குடும்பத்தைப் பிரிக்கும் என்று அவர்கள் கவலைப்படலாம். இந்த சிரமங்களின் காரணமாக, பாலியல் துஷ்பிரயோகம் குறித்த தவறான குற்றச்சாட்டுகள் பொதுவானவை அல்ல, எனவே ஒரு குழந்தை உங்களிடம் நம்பிக்கை வைத்தால், அவற்றை தீவிரமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்புக்கான எச்சரிக்கை அறிகுறிகள்:

1- உணர்ச்சி துஷ்பிரயோகத்தின் எச்சரிக்கை அறிகுறிகள்:

- அதிகப்படியான தவறு, பயம் அல்லது ஏதாவது தவறு செய்வதில் ஆர்வம்
- நடத்தையில் வித்தியாசமான உச்சநிலையைக் காட்டுதல் (மிகவும்செயலற்ற, ஆக்ரோஷமான, அதிகபடி உரிமையை எடுத்தல், பயமுறுத்துதல்)
- பெற்றோர் அல்லது பராமரிப்பாளருடன் இணைந்து நடக்காமை.
- பொருத்தமற்ற வயதுவந்தோர் மாதிரி நடத்தல். வயதுக்குமீறிய செயல்களை செய்தல் (உதாரனமாக மற்ற குழந்தைகளை கவனித்துக்கொள்வது) அல்லது பொருத்தமற்ற முறையில் குழந்தைமாதிரி நடத்தல் (கட்டைவிரலை உறிஞ்சுவது, முரண்டுபிடிப்பது)

2- உடல் ரீதியான துஷ்பிரயோகத்தின் எச்சரிக்கை அறிகுறிகள்:

- அடிக்கடி காயங்கள் காணப்படுதல் அல்லது விவரிக்கப்படாத காயங்கள் 
- மோசமான ஒன்று நடக்கக் காத்திருப்பதைப் போல எப்போதும் கவனமாகவும்,”எச்சரிக்கையாகவும்” இருத்தல்
- காயங்கள் ஒரு கை அல்லது பெல்ட்டினால் அடித்த காயங்கள் போன்ற வடுக்களை உடலில் காணப்படுதல்
- தொடுதலில் இருந்து விலகி, திடீர் அசைவுகளைக் கண்டு, அல்லது வீட்டிற்குச் செல்ல பயப்படுவதாகத் தெரிகிறது
- சூடான நாட்களில் கூட நீண்ட கை சட்டை போன்ற காயங்களை மறைக்க பொருத்தமற்ற ஆடைகளை அணிந்துகொள்ளுதல்

3- குழந்தையின் தேவையை பற்றிய  புறக்கணிப்பின் எச்சரிக்கை அறிகுறிகள்:

- ஆடைகள் பொருத்தமற்றவை, இழிந்தவை அல்லது வானிலைக்கு பொருத்தமற்றவை
- மோசமான உடல் சுகாதாரத்தை கொண்டிருத்தல் (அவிழ்க்கப்படாத, பொருந்திய மற்றும் கழுவப்படாத முடி, குறிப்பிடத்தக்க உடல் வாசனை)
- சிகிச்சை அளிக்கப்படாத நோய்கள் மற்றும் உடல் காயங்கள்
- அடிக்கடி மேற்பார்வை செய்யப்படாமல் அல்லது தனியாக விடப்படுகிறது அல்லது பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் விளையாட அனுமதிக்கப்படுகிறது
- அடிக்கடி தாமதமாக வருதல் அல்லது பள்ளியில் இருந்து விடுபட்டிருத்தல்

4- குழந்தைகளில் பாலியல் துஷ்பிரயோகத்தின் எச்சரிக்கை அறிகுறிகள்:

- நடக்க அல்லது உட்கார்ந்திருக்க சிரமப்படல்
- பாலியல் செயல்களைப் பற்றிய அறிவை அவர்களின் வயதுக்கு பொருத்தமற்றது, அல்லது கவர்ச்சியான நடத்தை ஆகியவற்றைக் காட்டுதல்
- வெளிப்படையான காரணமின்றி, ஒரு குறிப்பிட்ட நபரைத் தவிர்ப்பதற்கு வலுவான முயற்சிகளை மேற்கொள்ளுதல்
- மற்றவர்களுக்கு முன்னால் ஆடைகளை மாற்றவோ அல்லது உடற்பயிற்சிகளிலோ செயல்பாடுகளில் பங்கேற்கவோ விருப்பம் காட்டாதிருத்தல்
- ஒரு எஸ்டிடி அல்லது கர்ப்பம், குறிப்பாக 14 வயதிற்குட்பட்டவர்கள்
- வீட்டை விட்டு ஓடுதல்

சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்புக்கான ஆபத்து காரணிகள்:

எல்லா வகையான குடும்பங்களிலும் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு நிகழ்கிறது, சில சூழ்நிலைகளில் குழந்தைகள் அதிக ஆபத்தில் உள்ளனர்.

வீடுகளில் ஏற்படும் வன்முறை:
துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெற்றோர் தங்கள் குழந்தைகளைப் பாதுகாக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தாலும், வீட்டு வன்முறை இன்னும் மிகவும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இந்த மாதிரியான சூழ்நிலையிலிருந்து வெளியேறுவது உங்கள் குழந்தைகளுக்கு உதவ சிறந்த வழியாகும்.

மது மற்றும் போதைப்பொருள்: குடிபோதையில் அல்லது போதை அதிகமாக இருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பராமரிக்கவோ, நல்ல பெற்றோருக்குரிய முடிவுகளை எடுக்கவோ அல்லது பெரும்பாலும் ஆபத்தான தூண்டுதல்களைக் கட்டுப்படுத்தவோ முடியாமல் போகலாம். இது உடல் ரீதியான துஷ்பிரயோகத்திற்கும் வழிவகுக்கும்.

சிகிச்சை அளிக்கப்படாத மன நோய்: மனச்சோர்வு, கவலைக் கோளாறு, இருமுனைக் கோளாறு அல்லது மற்றொரு மனநோயால் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர்கள் சிறுவர்களை கவனித்துக்கொள்வதில் மட்டுமல்ல தங்களைக் கவனித்துக் கொள்வதில்கூட சிக்கல் இருக்கலாம்
மனநலம் பாதிக்கப்பட்ட அல்லது அதிர்ச்சியடைந்த பெற்றோர் தங்கள் குழந்தைகளிடமிருந்து தொலைவில் இருக்கக்கூடும், அல்லது ஏன் என்று புரியாமல் கோபத்திற்கு விரைவாக இருக்கலாம். இப்படியானவர்களுக்கு(பெற்றவர்/பராமரிப்பாளர்)சிகிச்சையளிப்பதன் மூலமே குழந்தைகளுக்கு சிறந்த பராமரிப்பபை வழங்கமுடியும்.


பெற்றோரின் குழந்தைவளர்க்கும் திறன் இல்லாமை:
சில பராமரிப்பாளர்கள்/பெற்றவர்கள் நல்ல பெற்றோருக்குத் தேவையான திறன்களைக் கற்றுக்கொள்ளவில்லை. எடுத்துக்காட்டாக, டீன் ஏஜ் பெற்றோர்கள் குழந்தைகளுக்கும் சிறு குழந்தைகளுக்கும் எவ்வளவு கவனிப்பு தேவை என்பது குறித்து நம்பத்தகாத எதிர்பார்ப்புகளைக் கொண்டிருக்கலாம். அல்லது சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு ஆளான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அவர்கள் வளர்த்த விதத்தில் எவ்வாறு வளர்ப்பது என்பது மட்டுமே தெரிந்திருக்கலாம். பெற்றோருக்குரிய வகுப்புகள், சிகிச்சை மற்றும் பராமரிப்பாளர் ஆதரவு குழுக்கள் சிறந்த பெற்றோருக்குரிய திறன்களைக் கற்றுக்கொள்வதற்கான வழிகள்.

மன அழுத்தம் மற்றும் ஆதரவு இல்லாமை:
குறிப்பாக நீங்கள் குடும்பத்தினரிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் ஆதரவில்லாமல் குழந்தைகளை வளர்க்கிறீர்கள் அல்லது உறவு பிரச்சினைகள் அல்லது நிதி சிக்கல்களைச் சமாளிக்கிறீர்கள் என்றால்  குழந்தைவளர்ப்பு மிகவும் நேரத்தைச் செலவழிக்கும், மன அழுத்தத்துடன் கூடிய வேலையாக இருக்கலாம். இயலாமை, சிறப்புத் தேவைகள் அல்லது கடினமான நடத்தைகள் உள்ள குழந்தையைப் பராமரிப்பதும் ஒரு சவாலாகும். உங்களுக்கு தேவையான ஆதரவைப் பெறுவது முக்கியம், அதன்மூலமே நீங்கள் உங்கள் குழந்தையை உணர்ச்சி ரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆதரிக்க முடியும்.

உங்களுக்குள்ளும் உள்ள தவறான நடத்தையை அறிந்துகொள்ளல்:

குழந்தைகளை வளர்ப்பது வாழ்க்கையின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும், மேலும் இது பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் கோபத்தையும் விரக்தியையும் தூண்டும். அலறல், கூச்சல் அல்லது வன்முறை ஆகியவை வழக்கமாக இருந்த ஒரு வீட்டில் நீங்கள் வளர்ந்திருந்தால், சில சமயம் உங்கள் குழந்தைகளை வளர்ப்பதற்கு வேறு வழிதெரிந்திருக்காது

உங்களுக்கு இப்படி ஒரு சிக்கல் இருப்பதை அங்கீகரிப்பது உதவியைப் பெறுவதற்கான மிகப்பெரிய படியாகும். பின்வருவது நீங்கள் துஷ்பிரயோகம் செய்யக்கூடும் என்பதற்கான எச்சரிக்கை அறிகுறிகள்:

- உங்கள் கோபத்தை நிறுத்த முடியாது. பின்புறத்தில் ஒரு சிறு தடியால் தட்டுவது/அடிப்பது எனத் தொடங்கி பல கடினமான அடிகளாக மாறும். நீங்கள் உங்கள் குழந்தையை மேலும் மேலும் அசைத்து, இறுதியாக அவர்களை கீழே எறியலாம். நீங்கள் சத்தமாகவும் கத்துவீர்கள், உங்களைத் தடுக்க முடியாது போய்விடும்.

- உங்கள் குழந்தையிலிருந்து உணர்ச்சி ரீதியாக துண்டிக்கப்படுவதை உணர்கிறீர்கள். உங்கள் குழந்தையுடன் எதையும் செய்ய விரும்பாத அளவுக்கு நீங்கள் அதிகமாக உணரலாம். நீங்கள் தனியாக இருக்க வேண்டும், உங்கள் குழந்தை அமைதியாக இருக்க வேண்டும்.

- உங்கள் குழந்தையின் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்வது சாத்தியமற்றதாகத் தெரிகிறது. ஆடை அணிதல், உணவளித்தல் மற்றும் குழந்தைகளை பள்ளி அல்லது பிற செயல்களுக்குச் சேர்ப்பதில் எல்லோரும் சிரமப்படுகையில், நீங்கள் தொடர்ந்து அதைச் செய்ய முடியாவிட்டால், ஏதோ தவறாக இருக்கலாம் என்பதற்கான அறிகுறியாகும்.

- மற்றவர்கள் கவலையை வெளிப்படுத்தியிருத்தல். கவலையை வெளிப்படுத்தும் மற்றவர்களிடம் முறுக்குவது எளிதாக இருக்கலாம். இருப்பினும், அவர்கள் சொல்வதை கவனமாகக் கவனியுங்கள். நீங்கள் பொதுவாக மதிக்கும் மற்றும் நம்பும் ஒருவரிடமிருந்து வார்த்தைகள் வருகிறதா?

துஷ்பிரயோகத்தின் சுழற்சியை உடைத்தல்:

நீங்கள் சிறுவர் துஷ்பிரயோகத்தினால் பாதிக்கப்பட்ட வரலாறு உங்களிடம் இருந்தால், உங்கள் சொந்த குழந்தைகளை வைத்திருக்கும் போது நீங்கள் அடக்கிவைத்திருக்கும் வலுவான நினைவுகளையும் உணர்வுகளையும் தூண்டக்கூடும். உங்கள் கோபத்தால் நீங்கள் அதிர்ச்சியடைந்து, அதிருப்தி அடையலாம், அதை நீங்கள் கட்டுப்படுத்த முடியாது என நினைக்கலாம். ஆனால் உங்கள் உணர்ச்சிகளை நிர்வகிக்கவும், உங்கள் பழைய வடிவங்களை உடைக்கவும் புதிய வழிகளைக் கற்றுக்கொள்ளலாம்.

உங்கள் குழந்தையின் உலகில் மிக முக்கியமான நபர் நீங்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் - நீங்கள் இதற்கான பாதையில் தனியாக செல்ல வேண்டியதில்லை. உதவி மற்றும் ஆதரவு இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வயதுக்கு எது பொருத்தமானது, எது இல்லாதது என்பதை அறிக:-
குழந்தைகளை, அவர்களது வயதிற்கேற்ப, அவர்களால் என்ன கையாள முடியும் என்ற யதார்த்தமான எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பது சாதாரண குழந்தை நடத்தையில் விரக்தியையும் கோபத்தையும் தவிர்க்க உதவும். உதாரணமாக, புதிதாகப் பிறந்தவர்கள் இரவில் ஒரு தரம் அல்லது இரண்டு தரம் எழும்பாது தூங்கப் போவதில்லை, மேலும் குழந்தைகளால் நீண்ட நேரம் அமைதியாக உட்கார முடியாது.

புதிய பெற்றோருக்குரிய திறன்களை வளர்த்துக் கொள்ளுங்கள்:-பொருத்தமான ஒழுக்க நுட்பங்களையும், உங்கள் குழந்தைகளுக்கு தெளிவான எல்லைகளை எவ்வாறு அமைப்பது என்பதையும் கற்றுக்கொள்வதன் மூலம் தொடங்கவும். பெற்றோர் வகுப்புகள், புத்தகங்கள் மற்றும் கருத்தரங்குகள் இந்த தகவலை வழங்குகின்றன. உதவிக்குறிப்புகள் மற்றும் ஆலோசனைகளுக்காக நீங்கள் மற்ற பெற்றோர்களிடமும் திரும்பலாம்.

ஆரோக்கியமாக இருத்தல்:-
உங்களுக்கு போதுமான ஓய்வு மற்றும் ஆதரவு கிடைக்கவில்லை என்றால் அல்லது நீங்கள் அதிகபளுவை உணர்கிறீர்கள் என்றால், நீங்கள் கோபத்திற்கு ஆளாக நேரிடும். சிறு குழந்தைகளின் பெற்றோருக்கு பொதுவான தூக்கமின்மை, மனநிலையையும் எரிச்சலையும் சேர்க்கிறது. 

தொழில்முறை உதவியைப் பெறுங்கள்:-முறைகேடுகளின் சுழற்சியை உடைப்பது மிகவும் கடினமாக இருக்கும். நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் உங்களைத் தடுக்க முடியாவிட்டால், சிகிச்சை, பெற்றோருக்குரிய வகுப்புகள் அல்லது பிற தலையீடுகள் போன்றவற்றில் உதவி பெற வேண்டிய நேரம் இது. அதற்கு உங்கள் குழந்தைகள் நன்றி கூறுவார்கள்.

உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த கற்றுக்கொள்ளுங்கள்:
நீங்கள் ஒரு குழந்தையாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டால் அல்லது புறக்கணிக்கப்பட்டிருந்தால், உங்கள் உணர்ச்சிகளுடன் இணைந்துபோக உங்களுக்கு மிகவும் கடினமானதாக இருக்கலாம். 

துஷ்பிரயோகம் செய்யப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்ட குழந்தைக்கு எப்படி உதவுவது:

1-DC90-C08-488-B-4073-B2-BF-E4-C17-B5-C2
ஒரு குழந்தை துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக நீங்கள் சந்தேகித்தால் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? அல்லது ஒரு குழந்தை உங்களிடம் நம்பிக்கை வைத்தால்? கொஞ்சம் அதிகமாகவும் குழப்பமாகவும் இருப்பது இயல்பு. சிறுவர் துஷ்பிரயோகம் என்பது ஒரு கடினமான விஷயமாகும், இது ஏற்றுக்கொள்ள கடினமாக இருக்கும், மேலும் உங்களுக்கும் பாதிக்கப்பட்ட குழந்தைக்கும் பேசுவதற்கு கூட கடினமாக இருக்கும். துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தையுடன் பேசும்போது, அவர்களை ஊக்குவிப்பதற்கான சிறந்த வழி அமைதியான உறுதியையும் நிபந்தனையற்ற ஆதரவையும் காட்டுவதாகும். சொற்களைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் இருந்தால், உங்கள் செயல்கள் உங்களுக்காக பேசட்டும்.

மறுப்பதைத் தவிர்த்து அமைதியாக இருங்கள்:-
சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற விரும்பத்தகாத மற்றும் அதிர்ச்சியூட்டும் செய்திகளுக்கு பொதுவான எதிர்வினை மறுப்பு. இருப்பினும், நீங்கள் ஒரு குழந்தைக்கு மறுப்பைக் காட்டினால், அல்லது அவர்கள் சொல்வதில் அதிர்ச்சி அல்லது வெறுப்பைக் காட்டினால், குழந்தை தொடர பயப்படலாம், மேலும் தன் உணர்வுகளை/பயங்களை சொல்லாது மெளனமாகிவிடலாம். எவ்வளவு கடினமாக இருந்தாலும், உங்களால் முடிந்தவரை அமைதியாகவும் உறுதியுடனும் இருங்கள்.

விசாரிக்க வேண்டாம்:- 
என்ன நடந்தது என்பதை குழந்தை அவர்களின் சொந்த வார்த்தைகளில் உங்களுக்கு விளக்கட்டும், ஆனால் குழந்தையை விசாரிக்க வேண்டாம் அல்லது முன்னணி கேள்விகளைக் கேட்க வேண்டாம். இது குழந்தையை குழப்பமடையச் செய்யலாம் மற்றும் அவர்களின் கதையைத் தொடர கடினமாக இருக்கும்.

அவர்கள் எந்த தவறும் செய்யவில்லை என்று குழந்தைக்கு உறுதியளிக்கவும்:-ஒரு குழந்தை துஷ்பிரயோகம் பற்றி கூற முன்வர நிறைய தைரியம் தேவைப்படுகிறது. அவர்கள் சொன்னதை நீங்கள் தீவிரமாக எடுத்துக்கொள்கிறீர்கள் எனவும், அது அவர்களின் தவறு அல்ல என்பதை அவர்களுக்கு உறுதியளிக்கவும்.

பாதுகாப்பு முக்கியம்:-
நீங்கள் தலையிட முயன்றால் உங்கள் பாதுகாப்பு அல்லது குழந்தையின் பாதுகாப்பு அச்சுறுத்தப்படும் என்று நீங்கள் நினைத்தால், அதை நிபுணர்களிடம் விட்டு விடுங்கள். நீங்கள் பின்னர் கூடுதல் ஆதரவை வழங்க முடியும்.

சிறுவர் துஷ்பிரயோகம் அல்லது புறக்கணிப்பைப் புகாரளித்தல்:

ஒரு குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியிருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், அதைப் புகாரளிப்பது மிக முக்கியமானதாகும் - மேலும் இது தொடர்ந்து நிகழ்ந்தால் ஒவ்வொரு தனி நிகழ்வுகளையும் தொடர்ந்து புகாரளிக்கவும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு அறிக்கையும் குடும்பத்தில் என்ன நடக்கிறது என்பதற்கான சாட்சி ஆகும். நீங்கள் வழங்கக்கூடிய கூடுதல் தகவல்கள், குழந்தைக்கு அவர்கள் பெற வேண்டிய உதவியைப் பெறுவதற்கான சிறந்த வாய்ப்பு. நிச்சயமாக, சிறுவர் துஷ்பிரயோகத்தைப் புகாரளிப்பதில் சில மனகசப்புகள், அசெளகரியங்கள் அல்லது கவலைகள் இருப்பது இயல்பு.

வேறொருவரின் குடும்பவிஷயத்ழில் நான் தலையிட விரும்பவில்லை:- 
சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் புறக்கணிப்பு என்பது ஒரு குடும்ப விஷயமல்ல, அமைதியாக இருப்பதன் விளைவுகள் குழந்தைக்கு பேரழிவை ஏற்படுத்தும்.

நான் ஒருவரின் குடும்பகட்டுக்கோப்பை, அவர்களது இருப்பை கேள்விக்குறியாக்கினால் என்ன செய்வது? சிறுவர் துஷ்பிரயோக அறிக்கை என்பது ஒரு குழந்தையை வீட்டிலிருந்து அகற்றப்படும் என்று அர்த்தமல்ல அவர்கள் ஆபத்தில் இல்லாவிட்டால் என்பது தெளிவாக இருந்தால், அவர்கள் வீட்டிலிருந்து அகற்றப்படமாட்டார்கள்.  இவ்வாறான நிலைமைகளில் பெற்றோருக்கு முதலில் வகுப்புகள் அல்லது கோப மேலாண்மை ஆலோசனை போன்ற ஆதரவை வழங்கப்படும். 

நான் தான் அழைத்தேன் என்பது அவர்களுக்குத் தெரிந்தால்?:-
புகாரளித்தல் அநாமதேயமானது. பெரும்பாலான இடங்களில், நீங்கள் சிறுவர் துஷ்பிரயோகத்தைப் புகாரளிக்கும்போது உங்கள் பெயரைக் கொடுக்க வேண்டியதில்லை.

நான் சொல்வது வித்தியாசத்தை ஏற்படுத்தாது:-
ஏதோ தவறு இருப்பதாக உங்களுடைய உள்ளுணர்வுவிற்கு தெரிந்திருந்தால், அதை உரிய இடத்தில் தெரிவித்தால் பின்னாளில் வருத்தப்படதேவையில்லை. முழு விஷயத்தையும் உங்களால் பார்க்க முடியாதிருக்கலாம், சில சமயம் மற்றவர்களும் அறிகுறிகளை கவனித்திருக்கலாம், இவை எல்லாம் சேர்ந்து கவனிக்கப்படாத குழந்தை துஷ்பிரயோகத்தை அடையாளம் காண ஒரு முறை உதவும்.


பின்குறிப்பு:- 
இதை நான் மொழிபெயர்த்து இங்கே இணைத்தமைக்கு காரணம், சில நேரங்களில் இயலுமானவரையில் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் ஒன்றிரண்டு குழந்தையாவது இந்த துன்புறுத்தல்களிலிருந்து தப்பும் என்ற எண்ணத்தினால் மட்டுமே.
மொழிபெயர்ப்பு என்பதால் சில சமயம் சில கருத்துகள் மாறுப்பட்டு இருந்தாலும் கட்டுரையின் மூலக்கருத்திலிருந்து மாறுபடவில்லை.

நன்றி
பிரபா சிதம்பரநாதன்

ஆங்கில மூலம்:- 

https://www.helpguide.org/articles/abuse/child-abuse-and-neglect.htm
Authors: Melinda Smith, M.A., Lawrence Robinson, and Jeanne Segal, Ph.D. Last updated: June 2019.

 

மிக்க நன்றி பிரபா சிதம்பரநாதன். வாழ்ககைக்கு மிக அவசியமான  நீண்ட கட்டுரையை சிரமமெடுத்து மொழி பெயர்தது இங்கு வாசகர்களுக்கு தந்துள்ளீர்கள். 👍👍👍

  • கருத்துக்கள உறவுகள்

சிறுவர் துஸ்பிரயோகம் என்றால், பாலியல் ரீதியான சித்திரவதைகள் மட்டும்தான் என்பது எம்மில் பலரின் நிலைப்பாடாக இருக்குமென்பதில் ஐய்யமில்லை.

ஆனால், உண்மையில், அதைவிடவும் பன்மடங்கு அதிகமானது என்பதை அனைத்து வழிகளிலும் இருந்து அலசியிருக்கிறீர்கள். அல்லது அலசியிருப்பதை தமிழில் பகிந்திருக்கிறீர்கள். முதலில், இந்த நீண்ட அறிக்கையினை தமிழில் மொழிபெயர்த்து வழங்கியமைக்கு நன்றிகள்.

அடுத்ததாக, நீங்கள் குறிப்பிடும் பல விடயங்களை எமது அன்றாட வாழ்வில் எமது பிளைகளுடன் நாம் செய்துவருகிறோம். உதாரணத்திற்கு எமோஷனல் பிளக்மெயிலிங் எனப்படுவது. "நீ படிக்காட்டி, அம்மா செத்துருவன்", "இன்னும் கொஞ்ச நாளைக்குத்தான் எல்லாம், அதுக்குப்பிறகு நாங்கள் இருக்கமாட்டோம், நீ ரோட்டில நிக்கேக்கதான் உனக்குத் தெரியும்", "நாங்கள் சின்னனிலை உங்களை மாதிரி இருக்கேல்ல, உங்களுக்கு எல்லாச் சுதந்திரமும் இருக்கு, ஆனால், நாங்கள் சொல்லுறதக் கேட்க ஏலாமக் கிடக்கோ?"....இப்படிப் பல.

அல்லது, ஒப்பிடுவது. "அவனைப் பார், எவ்வளவு நல்லாப் படிக்கிறான்?", "அவளைப் பார், நல்ல ஸ்கூலுக்குப் போறாள், நீயும் இருக்கிறியே?", "படிக்காம மாடு மேய்க்கப்போறியோ?", "சனியன், எருமைமாடு......."....இப்படி எத்தனை முறை கூறியாயிற்று.

நாங்கள் அவர்களைக் காயப்படுத்துகிறோம் என்று தெரியாமலேயே காயப்படுத்தி வருகிறோம். சின்னச் சின்ன விடயங்களில்.

ஒரு விடயத்தை சொல்லுவதற்கு இருக்கும் சுதந்திரத்தை நாம் அவர்களுக்கு வழங்குவதில்லை. நான் உன்ர அம்மா, அல்லது அப்பா, நான் சொல்வதுதான் சரி, பேசாமல் சொன்னதைச் செய். இப்படி எத்தனை தடைவகள் சொல்லியிருக்கிறோம்.

படிப்பும், வேலையும், தராதரமும் மட்டும்தான் முக்கியம் என்று நினைக்கும் என் போன்றவர்கள் வாழும் சமூகத்தில் பிள்ளைகளின் இளமைப்பருவம் இயல்பாக இருக்குமென்று நான் நம்பவில்லை. "அப்பா, அந்தப் பிள்ளையைப் பாருங்கோ, சனி ஞாயிறென்டால் காணும் தகப்பனோட பாக்குக்கோ அல்லது படம் பாக்கவோ போகுது, சனிக்கிழமை இரவு டிஸ்கோக்குப் போகுது, ஆனால் நான் மட்டும் சனிக்கிழமை என்டால் கிளாஸுக்குப் போறன், இரவில படிக்கவேண்டும், ஸ்கூல் ஹொலிடேயிலையும் கிளாஸ் போட்டிருக்கிறியள்". என்று பிள்ளைகள் சொல்லும்போதெல்லாம், நாம் சொல்லும் ஒற்றைக்காரணம், படிச்சால்த்தான் நல்லாயிருக்கலாம் என்பது. பிள்ளையின் உளவியல் ரீதியான சந்தோசம்பற்றி நாம் நினைத்துக் கூடப் பார்க்கப்போவதில்லை.

"அப்பா, நான் சந்தோஷமாக எனது சிறுபராயத்தை அனுபவிக்கவேண்டிய காலத்தில, படி படி எண்டு சொல்லுறீங்கள், நான் படிச்சு உடலாலும், உள்ளத்தாலும் களைச்சாப் பிறகு, எந்த வயசில அப்பா சந்தோசம் எண்டால் என்னவென்று அனுபவிப்பது?". அதற்கு எம்மிடம் பதிலில்லை. 

எமது கலாசாரமும், வாழ்க்கை முறையும் மிகவும் பழமையானவை. பிள்ளைகளுக்கான சந்தோசத்தினை, அமைதியினை, சுதந்திரத்தை வழங்குவதுபற்றி நாம் இதனாலேயே யோசிப்பதில்லை. அது இப்போதைக்கு மாறும் என்றும் நினைக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நல்லதொரு பதிவு, பலருக்கு பயன்படும், மொழி பெயர்த்து போட்டதிற்கு நன்றிகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எல்லோரது ஊக்கத்திற்கும் நன்றிகள். கூகிளின்துணையோடு மொழிபெயர்த்திருந்தாலும் கருத்துகளை உணர்ந்து, விளங்கி சரிபார்த்து, சில இடங்களில் மாற்றியிருந்தேன் அப்படியிருந்தும் சில பிழைகள் வந்துவிட்டது. மன்னிக்கவும்.

மேலும் நீங்கள் கூறியபடி இது ஒரு நீண்ட கட்டுரைதான். அடுத்த தடவை இவற்றை கருத்தில் கொண்டு ஆக்கங்களை இணைக்கிறேன்.

நான் இந்த ஆக்கத்தை மொழிபெயர்த்து இணைத்தமைக்கு காரணம், கடந்த சில நாட்களாக வரும் செய்திகளைப்பார்த்தும், இங்கே சிட்னியில் ஒரு அமைச்சர் முன்பு இந்த சிறுவர் துஷ்பிரயோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து paroleல் வெளிவந்தபின் மீண்டும் இதே குற்றங்களை செய்துள்ளார் என்ற செய்தியும்.. பொன்மகள் வந்தாள் படத்தின் தாக்கமுமே காரணம்.
எத்தனை முறையானலும் சரி, எந்த வடிவங்களின் மூலமானலும் சரி, மக்களிடம் போய் சேரவேண்டும், விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.

மிகவும் தேவையான , காலத்துக்கு ஏற்ற ஒன்றை வாசிப்பவர்களுக்கு புரிந்து கொள்ளக் கூடிய விதத்தில் மொழிபெயர்த்துள்ளீர்கள். மிக்க நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.