Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆரம்ப இசை                பல்லவி

ஆண்குழு :   ஒய் ஒய்யா ஒய்யா ஒய் ஒய்யா
                    ஒய் ஒய்யா ஒய்யா ஒய் ஒய்யா
                    ஒய் ஒய்யா ஒய்யா ஒய் ஒய்யா
                    ஒய் ஒய்யா ஒய்யா ஒய் ஒய்யா
                    ஒய் ஒய்யா ஒய்யா

ஆண்        :   தந்தனத்தானா ஏஏஏஏ
                    தய்யாரே ஏ
                    தந்தனத்தானா ஆஆஆஆஆஆஆஆ

ஆண்        :   கேளம்மா தாய் மரியம்மா

ஆண்குழு :   தந்தனத்தானா

ஆண்         :   கேளம்மா தாய் மரியம்மா

ஆண்குழு  :   ஒய் ஒய்யா

ஆண்         :   வேளை நகருக்கு நாங்கள் யாததிரைப் போறோமே
                     அன்னை என் தாய்மரியே ஆறுதலைத் தா மரியே
                     அன்னை என் தாய்மரியே ஆறுதலைத் தா மரியே

ஆண்         :   கேளம்மா தாய் மரியம்மா

ஆண்குழு  :   தந்தனத்தானா

ஆண்         :   கேளம்மா தாய் மரியம்மா

ஆண்குழு :   ஒய் ஒய்யா

                       (இசை)                         சரணம் - 1

ஆண்         :   யாத்திரை செல்வதற்கு ஒருமனதாய் முடிவெடுத்தோம்
                     சொந்தபந்தம் அனைவருக்கும் சேதியினை சொல்லிவிட்டோம்

ஆண்குழு :   தந்தனதந்தன தந்தனத்தானா
                    தந்தனதந்தன தந்தனத்தானா

ஆண்        :   யாத்திரை செல்வதற்கு ஒருமனதாய் முடிவெடுத்தோம்
                    சொந்தபந்தம் அனைவருக்கும் சேதியினை சொல்லிவிட்டோம்
                    சகாய அன்னையோட திருத்தலத்தில் கூடி நின்றோம்
                    சகாய அன்னையோட திருத்தலத்தில் கூடி நின்றோம்
                    சாந்தோமின் வழியாக அடையாறில் பூசை கண்டோம்
                    சாந்தோமின் வழியாக அடையாறில் பூசை கண்டோம்

ஆண்         :   கேளம்மா தாய் மரியம்மா

ஆண்குழு  :   தந்தனத்தானா

ஆண்         :   கேளம்மா தாய் மரியம்மா

ஆண்குழு  :   ஒய் ஒய்யா

                    (இசை)                          சரணம் - 2

ஆண்        :    சொத்து சுகம் எனக்கு தேவையில்லை தாய்மரியே
                     சென்று வரும் வரையில் காத்தருளும் மாமரியே

ஆண்குழு :   தந்தனதந்தன தந்தனத்தானா
                    தந்தனதந்தன தந்தனத்தானா

ஆண்        :   சொத்து சுகம் எனக்கு தேவையில்லை தாய்மரியே
                     சென்று வரும் வரையில் கர்த்தருளும் மாமரியே
                     கிண்டியின் வழியாக மீனம்பாக்கம் வந்தடைந்தோம்
                     கிண்டியின் வழியாக மீனம்பாக்கம் வந்தடைந்தோம்
                     மறைமலை நகருக்குள்ளே மகிழ்ச்சியாக ஓய்வெடுத்தோம்
                     மறைமலை நகருக்குள்ளே மகிழ்ச்சியாக ஓய்வெடுத்தோம்

ஆண்         :   கேளம்மா தாய் மரியம்மா

ஆண்குழு  :   தந்தனத்தனா

ஆண்         :   கேளம்மா தாய் மரியம்மா

ஆண்குழு :    ஒய் ஒய்யா

                      (இசை)                          சரணம் - 3

ஆண்         :   சூரியன் உதித்திடாத குளிரும் காலை நேரமமம்மா
                     காவி அணிந்ததினால் குறையவில்லை வேகமம்மா

ஆண்குழு :    தந்தனதந்தன தந்தனத்தானா
                     தந்தனதந்தன தந்தனத்தானா

ஆண்       :    சூரியன் உதித்திடாத குளிரும் காலை நேரமம்மா
                     காவி அணிந்ததினால் குறையவில்லை வேகமம்மா
                     சென்னையை அடுத்திருந்த செங்கல்பட்டு வந்ததம்மா
                     சென்னையை அடுத்திருந்த செங்கல்பட்டு வந்ததம்மா
                     ஜெபம் சொல்லி நடந்து வந்தோம் மதுராந்தகம் தெரிந்ததம்மா
                     ஜெபம் சொல்லி நடந்து வந்தோம் மதுராந்தகம் தெரிந்ததம்மா

ஆண்         :   கேளம்மா தாய் மரியம்மா

ஆண்குழு  :   தந்தனத்தானா

ஆண்         :   கேளம்மா தாய் மரியம்மா

ஆண்குழு  :   ஒய் ஒய்யா

                            (இசை)                          சரணம் - 4
 
ஆண்        :    மாலை வரும் முன்னே மரக்காணம் வந்தடைந்தோம்
                     மாமரி உன்னைக் காண மகிழ்ச்சியுடன் நடந்து வந்தோம்

ஆண்குழு :    தந்தனதந்தன தந்தனத்தானா
                     தந்தனதந்தன தந்தனத்தானா

ஆண்         :   மாலை வரும் முன்னே மரக்காணம் வந்தடைந்தோம்
                     மாமரி உன்னைக் காண மகிழ்ச்சியுடன் நடந்து வந்தோம்
                     கடற்கரை சாலை வழி வந்தவருடன் கலந்து விட்டோம்
                     கடற்கரை சாலை வழி வந்தவருடன் கலந்து விட்டோம்
                     காலையில் எழுந்து அந்த பாண்டி எல்லையை கடந்து விட்டோம்
                     காலையில் எழுந்து அந்த பாண்டி எல்லையை கடந்து விட்டோம்

ஆண்        :   கேளம்மா தாய் மரியம்மா

ஆண்குழு :   தந்தனத்தானா

ஆண்        :   கேளம்மா தாய் மரிய்ம்மா

ஆண்குழு :   ஒய் ஒய்யா

                           (இசை)                          சரணம் - 5

ஆண்         :   அரியாங்குப்பத்திலே அளவில்லாத ஆனந்தமாம்
                     கடலூரைக் கடந்ததினால் புவனகிரி வந்ததம்மா

ஆண்குழு :    தந்தனதந்தன தந்தனத்தானா
                     தந்தனதந்தன தந்தனத்தானா

ஆண்         :   அரியாங்குப்பத்திலே அளவில்லாத ஆனந்தமாம்
                     கடலூரைக் கடந்ததினால் புவனகிரி வந்ததம்மா
                     சிதம்பரம் ஊருக்குள்ளே சீக்கிரமா நுழைந்துவிட்டோம்
                     சிதம்பரம் ஊருக்குள்ளே சீக்கிரமா நுழைந்துவிட்டோம்
                     சிதம்பரம் அடுத்து வந்த சீர்காழியில் ஓய்வெடுத்தோம்
                     சிதம்பரம் அடுத்து வந்த சீர்காழியில் ஓய்வெடுத்தோம்

ஆண்         :   கேளம்மா தாய் மரியம்மா

ஆண்குழு :    தந்தனத்தானா

ஆண்        :    கேளம்மா தாய் மரியம்மா

ஆண்குழு :    ஒய் ஒய்யா

                      (இசை)                          சரணம் - 6

ஆண்        :    நள்ளிரவு நேரத்திலே சீர்காழியில் கிளம்பிவிட்டோம்
                     காரைக்கால் வழியாக நாகூரு வந்தடைந்தோம்

ஆண்குழு:    தந்தனதந்தன தந்தனத்தானா
                     தந்தனதந்தன தந்தனத்தானா

ஆண்        :    நள்ளிரவு நேரத்திலே சீர்காழியில் கிளம்பிவிட்டோம்
                     காரைக்கால் வழியாக நாகூரு வந்தடைந்தோம்
                     மாதரசி மாதாவை நாகையிலே வேண்டிக்கொண்டோம்
                     மாதரசி மாதாவை நாகையிலே வேண்டிக்கொண்டோம்
                     நீல வண்ணக் கடலோரம் வேளாங்கண்ணிக்கு நடந்துவந்தோம்
                     நீல வண்ணக் கடலோரம் வேளாங்கண்ணிக்கு நடந்துவந்தோம்

ஆண்         :   கேளம்மா தாய் மரியம்மா

ஆண்குழு  :   தந்தனத்தனா

ஆண்         :    கேளம்மா தாய் மரியம்மா

ஆண்குழு :    ஒய் ஒய்யா

                      (இசை)                          சரணம் - 7

ஆண்       :    அலைகளை கண்டதுமே அளவில்லாத ஆனந்தமாம்
                     அன்னார்ந்து பார்த்ததினால் அன்னைக்கோயில் தெரிந்ததம்மா

                             இசை

ஆண்       :    அலைகளை கண்டதுமே அளவில்லாத ஆனந்தமாம்
                     அன்னார்ந்து பார்த்ததினால் அன்னைக் கோயில் தெரிந்ததம்மா
                     வியாகுல மாமரியை வணங்கி வந்த நேரம்மா
                     வியாகுல மாமரியை வணங்கி வந்த நேரம்மா
                     வெண்ணிறக்கொடி அந்த நீலவானில் பறந்ததம்மா
                     அன்னையை கண்டதும் எங்கள் யாத்திரையோ முடிந்ததம்மா

ஆண்         :   கேளம்மா தாய் மரியம்மா
                
ஆண்குழு  :   தந்தனத்தானா

ஆண்         :   கேளம்மா தாய் மரியம்மா

ஆண்குழு  :    ஒய் ஒய்யா

ஆண்         :    கேளம்மா தாய் மரியம்மா

ஆண்குழு  :   தந்தனத்தானா

ஆண்         :   கேளம்மா தாய் மரியம்மா

ஆண்குழு  :   ஒய் ஒய்யா

ஆண்         :   கேளம்மா தாய் மரியம்மா

ஆண்குழு  :   தந்தனத்தானா

ஆண்         :   கேளம்மா தாய் மரியம்மா

ஆண்குழு  :   ஒய் ஒய்யா

ஆண்         :   கேளம்மா  தாய் மரியம்மா

ஆண்குழு  :   தந்தனத்தானா

ஆண்         :   கேளம்மா தாய் மரியம்மா

ஆண்குழு  :   ஒய் ஒய்யா

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திந்தகத்தோம் திந்தகத்தோம் அய்யப்பா

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முத்து கணேசண் அவன் மோதகம்

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

செம் கேழ் அடுத்த சின வடிவேலும் திருமுகமும்

   பங்கே நிரைத்த நல் பன்னிருதோளும் பதுமமலர்க்

      கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என
         எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே.சந்தான புஷ்பபரி மளகிண் கிணீ முகச்
   சரணயுக ளமிர்தப்ரபா


சந்த்ரசே கரமூஷி காரூட வெகுமோக
   சத்யப்ரி யாலிங்கனச்

சிந்தா மணிக்கலச கரகட கபோலத்ரி
   யம்பக விநாயகன்முதற்

சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வரு
   சித்ரக் கலாபமயிலாம்

மந்தா கிநிப்பிரப வதரங்க விதரங்க
   வனசரோ தயகிர்த்திகா

வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய
   வராசலன் குலிசாயுதத்

திந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண
   இகல்வேல் விநோதன் அருள்கூர்

இமையகிரி குமரிமகன் ஏறுநீ லக்ரீவ
   ரத்னக் கலாப மயிலே.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அல்லா ஹூ ஹூ ஹூ

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இயேசுபிரான் எங்கள் இயேசுபிரான்

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

யார் பிள்ளை யார் பிள்ளை என்ற போது பிள்ளையார் என்று பெயர் கொண்டு வந்த பிள்ளை

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாதினை யடர்ந்த வேல்விழியர் தங்கள்
மாயமதொ ழிந்து, தெளியேனே
மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
மாபதம ணிந்து, பணியேனே
ஆதியொடு மந்த மாகிய நலங்கள்
ஆறுமுக மென்று, தெரியேனே
ஆனதனி மந்த்ர ரூபநிலை கொண்ட
தாடுமயி லென்ப, தறியேனே
நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
நானிலம லைந்து, திரிவேனே
நாகமணி கின்ற நாதநிலை கண்டு
நாடியதில் நின்று, தொழுகேனே
சோதியுணர் கின்ற வாழ்வுசிவ மென்ற
சோகமது தந்து, எனையாள்வாய்
சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
சோலைமலை நின்ற, பெருமாளே

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அன்பான நெஞ்சே உணர்வாயே நீ

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இயற்கையில் உறைந்திடும்
 இணையற்ற இறைவா என் 
இதயத்தில் எழுந்திட வா 
என்றும் இங்கு என்னோடு 
நின்று என்னை அன்போடு 
காத்திடு என் தலைவா 

உந்தன் அன்பு உறவின்றி எனக்கு இங்கு
 சொந்தம் சுற்றம் சூழ்ந்திடா பயன் என்னவோ 
மெழுகாகினேன் திரியாக வா 
மலரகினேன் மணமாக வா 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சர்வேசா விநாயகா சர்வேசா விநாயகா பாசத்தின் அமுதே விநாயகா

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிட்டுக்கு மண் சுமந்து கங்கை தலை சுமந்து

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா?
என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா?
பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா!
பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா!
என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா?
என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா?
பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா!
பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா!
சொப்பனமோ என்தன் அப்பன் திருவருள்?
சொப்பனமோ என்தன் அப்பன் திருவருள்?
கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே
கற்பிதமோ என்ன அற்புதம் இதுவே

ஆடிய பாதனே அம்பலவாணனே!
ஆடிய பாதனே அம்பலவாணனே உன்
ஆழ்ந்த கருணையை ஏழை அறிவேனோ? உன்
ஆழ்ந்த கருணையை ஏழை அறிவேனோ?

என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா?
என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா?
பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா!
பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா!
என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா?
என்னப்பனல்லவா? என் தாயுமல்லவா?
பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா!
பொன்னப்பனல்லவா? பொன்னம்பலத்தவா!

 

Edited by உடையார்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவனிதனி லேபி றந்து மதலையென வேத வழ்ந்து
அழகுபெற வேந டந்து, இளைஞோனாய்
அருமழலை யேமி குந்து குதலைமொழி யேபு கன்று
அதிவிதம தாய்வ ளர்ந்து, பதினாறாய்
சிவகலைக ளாக மங்கள் மிகவுமறை யோது மன்பர்
திருவடிக ளேநி னைந்து, துதியாமல்
தெரிவையர்க ளாசை மிஞ்சி வெகுகவலை யாயு ழன்று
திரியுமடி யேனை யுன்ற, னடிசேராய்
மவுனவுப தேச சம்பு மதியறுகு வேணி தும்பை
மணிமுடியின் மீத ணிந்த, மகதேவர்
மனமகிழ வேய ணைந்து ஒருபுறம தாக வந்த
மலைமகள்கு மார துங்க, வடிவேலா
பவனிவர வேயு கந்து மயிலின்மிசை யேதி கழ்ந்து
படியதிர வேந டந்த, கழல்வீரா
பரமபத மேசெ றிந்த முருகனென வேயு கந்து
பழநிமலை மேல மர்ந்த, பெருமாளே.
 

 

Posted
7 hours ago, உடையார் said:

அன்பான நெஞ்சே உணர்வாயே நீ

 

அருமை! நன்றி! 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடுகிற யாவிலும் வெற்றியை தருகிற வள்ளலே யா அல்லா

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரணாலயம் சரணாலயம்
இயேசுவின் திருவடி சரணாலயம்
(2)

1.பாவங்கள்போக்கிமன்னிப்பைஅருளும்
இயேசுவின் திருவடி சரணாலயம்(2)
மனம்மாறினோரை மகிழ்வுடன்
ஏற்கும் இயேசுவின் திருவடி
சரணாலயம் (2)

2. களைத்தவர் மனதை
இளைப்பாறச் செய்யும்
இயேசுவின் திருவடி சரணாலயம்(2)
குருவினைத்தொடரும்சீஷருக்கெல்லாம்
இயேசுவின் திருவடி சரணாலயம்
(2)
3. திவ்விய வாடிநவினை திருவாடீநு
மலர்ந்த இயேசுவின் திருவடி
சரணாலயம் (2)
தூடீநுமையின்வாடிநவிற்குதூயாவிஅருளும்
இயேசுவின் திருவடி சரணாலயம்
(2)
4. பாவத்தைவென்று உலகினை
ஜெயிக்க இயேசுவின் திருவடி
சரணாலயம் (2)
தீமையைநன்மையால்ஜெயித்திடச்செடீநுத

இயேசுவின் திருவடி சரணாலயம் (2)

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கணபதி என்றிட கலங்கும் வல்வினை
கணபதி என்றிட காலனும் கைதொழும்
கணபதி என்றிட கருமம் ஆதலால்
கணபதி என்றிட கவலை தீருமே

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அண்டர்பதி குடியேற

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாந்தாகாரம் புஜகசயநம் பத்மநாபம் சுரேசம்
விஸ்வாதாரம் ககந ஸத்ருசம் மேகவர்ணம் சுபாங்கம்
லக்ஷ்மீகாந்தம் கமலநயநம் யோகிஹ்ருத்யாநகம்யம்
வந்தே விஷ்ணும் பவபயஹரம் ஸர்வலோகைக நாதம்

அதோ தெரியுது ஏழுமலை எங்கள் பெருமாள் வாழும் மலை
இதோ இதோ என வேகம் வரும் என்றும் தணியாத தாகம் வரும்
கோவிந்த நாம சங்கீர்த்தனம் கோவிந்தம் பஜகோவிந்தம்
கோவிந்த கோவிந்த கோவிந்தா குறை ஒன்றுமில்லை கோவிந்தா
மலையென்று சொன்னால் திருமலையே மனதில் நிற்பது திருமலையே
பதியென்று சொன்னால் திருப்பதியே திருமகள் வாழ்வது திருப்பதியே
பூலோக வைகுந்தம் திருப்பதியே பொன்மழைபொழிவது திருப்பதியே
வேதங்கள் போற்றிடும் திருப்பதியே விதியையும் மாற்றிடும் திருப்பதியே
கருடன் கொணர்ந்தது கருடகிரி ருஷபாசுரனால் ருஷபாத்ரி
நாராயணன் தரும் நாரணகிரி நரசிம்மன் பெயரால் சிம்மகிரி
அஞ்சனை தவத்தால் அஞ்சனாத்ரி ஆதிசேஷனின் ஷேசாத்ரி
ரிடபாசுரனால் ரிஷபகிரி ஏழுமலையானின் வேங்கடகிரி
காண்பது ஒருகணம் என்றாலும் கடவுளை நேரில் காண்போமே
மீண்டும் எப்போதும் இந்த பாக்யம் வேண்டும் வேண்டுமென வேண்டிடுவோம்
எண்ணிலாத்தலங்கள் இருந்தாலும் அப்போதைக்கப்போது கூட்டம் வரும்
ஏழுமலையானை பார்ப்பதற்கோ என்றும் எப்போதும் கூட்டம் வரும்
மலைமேல் கடல் வந்து புகுந்ததுவோ அலைமேல் அலையாய் தலைதெரியும்
திருநாள் எந்நாளும் திருநாள் தான் ஸ்ரீநிவாசன் புகழ் உலகெங்கும்
நின்றத் திருக்கோலம் காண்கையிலே நேரம் போவது தெரியாது
கண்டு கண்டு கண்ணில் நீர்பெருகும் திருப்ப மனமின்றி ஏங்கிடுமே
மலையடிவாரம் சிவபெருமான் லிங்க வடிவில் வீற்றிருப்பார்
கபில தீர்த்தத்தில் குளித்திடுவோம் கலிகோபுரத்தைக் கண்டிடுவோம்
மாலவன் மேனியை அலங்கரித்த மாலைகள் மலையெங்கும் கமகமக்கும்
கோவிந்தன் நாமம் எதிரொலிக்கும் பக்தர்கள் வரிசை காத்திருக்கும்
ஒரே வரிசையில் ஒழுங்காக நவகிரஹநாயகர் நிற்கின்ற
அதிசயம் இங்கே நிகழ்ந்திடுமே ஆழ்வார் பாசுரம் இனித்திருக்கும்
எட்டுதிக்கு பாலகரும் எம்பெருமானை எதிர்பார்ப்பார்
அஷ்டலக்ஷ்மிகள் கூடிடுவார் கங்கை நீராட்ட வந்திருப்பார்
அர்த்ததீர்த்தம் பஞ்சாயுதம் நாரத தீர்த்தம் கிருஷ்ண தீர்த்தம்
பாண்டவர் தீர்த்தம் கோகற்பம் குமார தீர்த்தம் சுத்த தீர்த்தம்
பார்கவ புராண திதிர் தீர்த்தம் பாபவிநாசம் பைரவம்
கணேஷ தீர்த்தம் முதலாக கணக்கில் எண்ணி முடிந்திடுமோ
வராக பெருமான் புஷ்கரணி நீராடியபின் வேங்கடவன்
சந்நிதி காண சென்றிடலாம் சகலசௌபாக்யமும் பெற்றிடலாம்
பறவைகள் பாடும் சங்கீதம் தேவர்கள் ஓதும் நால்வேதம்
பள்ளியெழவே சுப்ரபாதம் கண்ணன் எழுந்தான் வேணுகானம்
தங்கவாசல் தாண்டியபின் நவரத்ன குவியலோ நெடுமாலொ
பச்சை கற்பூர வாசம் வரும் பார்க்க பார்க் மெய்சிலிர்க்கும்
வைகுந்தம் இங்கே வந்ததுவோ சொர்க்கபோகம் தந்ததுவோ
கருமாமணியைக் காண்பதற்கு கண்கள் கொடுத்து வைத்ததம்மா
நெஞ்சில் ஒருபுறம் மஹாலக்ஷ்மி மறுபுறம் அமர்ந்தாள் பத்மாவதி
இங்கே வந்தபின் வேறெதற்கும் அஞ்சேல் என்பான் திருமாலே
ஆயிரம் நிலவுகள் சேர்ந்தனவோ தாயினும் இனியவன் கருணைமுகம்
நம்விழி கூசும் என்றெண்ணி நாம் சற்றே மறைத்ததுவோ
என்னை நானே இழந்துவிட்டேன் ஏகாந்த சேவையில் கரைந்துவிட்டேன்
என்ன அதிசயம் இவன் தோற்றம் எங்கும் காணாத விந்தையம்மா
பாலினில் விழுந்த கருவண்டாய் பார்வை வீசி சிரிக்கின்றான்
வா என புன்னகை முகம் காட்டி ஸ்ரீநிவாசன் அழைக்கின்றான்
விஸ்வரூப தரிசனமே துலங்கி சேவை அற்புதமே
தோமாலை சேவை கண்டதுமே மாலை தொடுக்கச் சொல்லிடுமே
நீலமணிபோல் நெடுமேனி கோலாகுழல்மேல் மணிமகுடம்
வில்போல் புருவங்கள் நடுவினிலே ஸ்ரீபாதரேணு திருநாமம்
சூரிய சந்திரர் விழிகளிலே மகர குண்டலம் செவிகளிலே
வீணை நிமிர்ந்தது நாசியிலே முத்துக்கள் கொட்டின இதழ்களிலே
வானவில்லோ கன்னங்கள் சங்கு கழுத்தில் பதக்கங்கள்
பரந்த தோளில் ஆரங்கள் சங்கு சக்கர வண்ணங்கள்
விரிந்த மார்பில் கௌஸ்துபமும் சஹஸ்ரநாம சங்கிலியும்
மணமகள் பத்மாவதியோடு மஹாலக்ஷ்மியும் கொஞ்சிடுமே
சுந்தர சூழலோ உன்மேலே காஞ்சி மேகலை இடையினிலே
தசாவதார கச்சையிலே சூர்யகட்டாரித் தொங்கிடுமே
உதரபந்தனம் அணிவயிற்றில் வீரக்கழலணி சாரதியோ
வலக்கரம் பாதம் காட்டிடுமே இடக்கரம் அவனிடம் சேர்த்திடுமே
காலைப்பிடித்தால் மேல்வரலாம் காலகாலம் அருகிருந்து
கூடிக்கலந்து குலவிடலாம் குறிப்பை அறிந்துகொள் என்பானோ
தோளைப்பார்த்தவர் தோளே கண்டார் தாழைக் கண்டவர் தாழே கண்டார்
அங்கம் முழுதும் ரசிப்பதற்கு கண்களிரண்டு போதாதே
வானும் மண்ணும் அளந்த அடி பூமாதேவி வருடும் அடி
பெரிய சிறியத் திருவடிகள் இருவரின் சேவைகள் ஏற்றிடுவாய்
ஞாயிறு திங்கள் மங்கள நாள் செவ்வாய் தோறும் தெப்ப உலா
புதனன்று போக ஸ்ரீநிவாசன் கலசாபிஷேகம் ஏற்றிடுவான்
குருநாள் பாவாடை சேவை உண்டு வெள்ளியில் பூரா அபிஷேகம்
சனிநாள் விளக்குகள் ஏற்றிவைத்தால் வினைகள் விலகும் வெற்றிவரும்
அலர்மேல்மங்கை அன்புக்கரம் பற்றியத் திருக்கரம் ஆனந்தம்
ஊஞ்சல் கண்ணாடி சேவைகளே யாவும் அவனின் லீலைகளே
ஆவணி கார்த்திகை தை திங்களில் அழகனுக்கு ப்ரம்மோக்ஷபம்
சித்திரை கோயில் கணக்கர் விழா நரசிங்க யாதவர் பங்குனி விழா
ஸ்ரீஜெயந்தி உரியடி தீபாவளி யுகாதி ஏகாதசி ஸ்ரீராமநவமி
மோஹினி பவனி வைகாசியில் கோயிலையும் ஆழ்வாராய் கொண்டாடுவார்
பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் அதன்மேலும்
ஸ்ரீநிவாசன் புகழ் செழிக்கட்டும் கோவிந்தராஜன் அருள் கொழிக்கட்டும்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யா ரஸூலல்லாஹ் யா ஹபீபல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்.....அல்லாஹ் அல்லாஹ்......
யா ரஸூலல்லாஹ் யா ஹபீபல்லாஹ் அல்லாஹ் அல்லாஹ்......அல்லாஹ் அல்லாஹ்......

தேன் சிந்திடும் மதினாவிலே 
பூமணம் வீசும் தென்றலே 
பூவொன்று பூத்திட்ட மண்ணிலே 
உம்மைக் காண வேண்டும் என் நெஞ்சமே

தேன் சிந்திடும் மதினாவிலே 
பூமணம் வீசும் தென்றலே 
பூவொன்று பூத்திட்ட மண்ணிலே 
உம்மைக் காண வேண்டும் என் நெஞ்சமே

மதினா மதினா எங்கள் மதினா 
மதினா மதினா அழகான மதினா
மதினா மதினா எங்கள் மதினா 
மதினா மதினா அழகான மதினா மதினா மதினா

வெண்ணிலவே நீ கரைவதென்ன 
அதிகாலை நேரம் மறைவதென்ன 
என் காதல் ஹபீப் உலா வரும் நேரம் 
வெட்கம் தானாமல் ஒழிந்தாயோ 

அன்னை ஆயிஷாவின் சூரியன் எங்கே 
இப்புவி சூரியன் நிலவானதே 
அன்னையின் சூரியன் ஒளியாகவே 
உதித்திடும் இரவிலே அவர் வீட்டிலே

தேன் சிந்திடும் மதினாவிலே 
பூமணம் வீசும் தென்றலே 
பூவொன்று பூத்திட்ட மண்ணிலே 
உம்மைக் காண வேண்டும் என் நெஞ்சமே

மதினா மதினா எங்கள் மதினா 
மதினா மதினா அழகான மதினா
மதினா மதினா எங்கள் மதினா 
மதினா மதினா அழகான மதினா மதினா மதினா

சுட்டெரிக்கும் வெயிலில் குளிர் எந்தன் பெருமான் 
வாட்டிடும் குளிரில் இதம் எந்தன் பெருமான் சொல்லிடும்போதே கொண்டாடும் இன்பம் அதை நெஞ்சே நீ என்றறிவாயோ 

உம்மீது நான் கொள்ளும் காதலும் 
தண்ணீரில் வரையும் ஓவியமா 
அதுவல்ல அழியாது எந்நாளுமே 
என் கண்ணில் கண்ணீரின் வடுவாகவே

தேன் சிந்திடும் மதினாவிலே 
பூமணம் வீசும் தென்றலே 
பூவொன்று பூத்திட்ட மண்ணிலே 
உம்மைக் காண வேண்டும் என் நெஞ்சமே

மதினா மதினா எங்கள் மதினா 
மதினா மதினா அழகான மதினா
மதினா மதினா எங்கள் மதினா 
மதினா மதினா அழகான மதினா மதினா மதினா

அன்பே உம்மைக் கானா வாழ்விலே பொழுதெல்லாம் கழிந்தோடும் கண்ணீரிலே வடிந்த கண்ணீர் காய்வதற்கு முன்பே 
அதில் பின்பமாய் வேண்டும் உம் முகமே வைகரையில் வேண்டும் உம் முகமே நித்திரையிலும் உம் முகமே 
ஒரு நொடியும் என் கண்கள் மாறாமலே 
உம் அழகை ரசிக்கனும் எந்நாளுமே

தேன் சிந்திடும் மதினாவிலே 
பூமணம் வீசும் தென்றலே 
பூவொன்று பூத்திட்ட மண்ணிலே 
உம்மைக் காண வேண்டும் என் நெஞ்சமே

மதினா மதினா எங்கள் மதினா 
மதினா மதினா அழகான மதினா
மதினா மதினா எங்கள் மதினா 
மதினா மதினா அழகான மதினா மதினா மதினா

தேன் சிந்திடும் மதினா.........
உயிரே மதினா..........
மதினா மதினா........மதினா மதினா......
ஃபிதாக அபி வ உம்மீ யா ரஸூலல்லாஹ்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன கொடுப்பேன் நான் உமக்கு
என்ன கொடுப்பேனோ ?
என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ?
என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ?

1. ஆபேலைப் போல் மந்தையின் தலையீற்றையோ
நோவாவைப் போல் தகனபலியினையோ
ஆபிரகாமைப் போல் தன் ஒரே மகனையோ
என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ?

2. ஞானியாகப் பிறந்திருந்தால் ஞானத்தைக் கொடுப்பேன்
ஆயனாகப் பிறந்திருந்தால் மந்தையைக் கொடுப்பேன்
தூதனாக இருந்திருந்தால் வாழ்த்து கூறுவேன்
என்ன கொடுப்பேன், நான் என்ன கொடுப்பேன் ?

3. சிறு உள்ளம் தருகின்றேன் நீர் தங்கிட
பரிசுத்தமாய் மாற்றிட நீர் வாருமே
என்னையே நான் தருகின்றேன் உம் மகிமைக்கே
என்னைக் கொடுப்பேன், நான் என்னை கொடுப்பேன் ?

என்னையே நான் தருகின்றேன் (2)
என்னைத் தேடிவந்த தெய்வம் நீரல்லோ ?
என்னைக் கொடுப்பேன், நான் என்னைக் கொடுப்பேன் ?

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருச்சி உச்சி பிள்ளையாரே

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முருகா என்றழைக்கவா? முத்துக் குமரா என்றழைக்கவா?
கந்தா என்றழைக்கவா? கதிர் வேலா என்றழைக்கவா?
எப்படி அழைப்பேன்?
உன்னை எங்கு காண்பேன்?

ஆறுபடை வீடெங்கும் தேடி வந்தேன் அப்பா
அங்கெங்கும் காணாமல் வாடி நின்றேன் அப்பா
அருணகிரி மனம் நொந்து தவித்தபோது – நீ
அருள் கொடுத்து ஒளியாக நின்றாயப்பா!
(உன்னை… முருகா என்றழைக்கவா?)

நாவினிலே வேலால் எழுதிச் சென்றாயப்பா
நற்றமிழ் இசையைப் பாட வைத்தாயப்பா – அந்தப்
பாவினிலே மனமுருகி நின்றாயப்பா – உலகுக்குப்
பண்புமிகும் தமிழ்க் கவியை ஈன்றாயப்பா
(உன்னை… முருகா என்றழைக்கவா?)

முருகாற்றுப்படை பாடி நக்கீரர் அழைக்க – நீ
முன் தோன்றி வழி அமைத்துக் கொடுத்தாயப்பா
கலிவெண்பா படைத்துக் குருபரர் நினைத்தாரப்பா – நீ
கந்தவேளாய் வந்து நின்று சிரித்தாயப்பா
(உன்னை… முருகா என்றழைக்கவா?)

நாளெல்லாம் உன்னைப் பாடுகின்றேன் அப்பா – முருகா
நல்லருள் பொழிந்து ஆடி வருவாயப்பா
என் கண்கள் குளிர வந்து நின்றாடப்பா
என் காலமெல்லாம் என் கண்கள் குளிர வந்து நின்றாடப்பா
என் காலமெல்லாம் துணையாக இருந்தாளப்பா
(உன்னை… முருகா

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஓம் சக்தி ஓம் சக்தி, தாயே ஓம் சக்தி

 




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.