Jump to content

இறைவனிடம் கையேந்துங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள் உன்னை மறப்பதில்லை கலக்கம் கொள்ளாதே 
கடல் கடந்து செல்லும் பொழுதில் உன்னை 
அன்பில் நினைத்தாரே அள்ளி அணைத்தாரே – 2 

ஆழ கடலை தாண்டும் போதும் அருகில் இருந்திடுவார் 
அலையில் நடந்து செல்லும்போதும் கரங்கள் பிடித்திடுவார் – 2  
தவறிப்போன ஆட்டை தேடி காண தவித்திடுவார் – 2 
காணாமல் போன காசு உன்னை (கருத்தாய் தேடிடுவார்) – 2 

பகைவர் உன்னை தாக்கும்போது கோட்டை அரணாவார் 
பள்ளத்தாக்குகள் கடக்கும்போதும் தோளில் சுமந்திடுவார் – 2 
பசுமை நிறைந்த புல்லின் வெளியில் நிதமும் அலைதிடுவார் – 2 
பாலும் தேனும் பொழியும் காணான் (தேசம் நடத்திடுவார்) – 2

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவரே என் ஆண்டவரே உம் குரல் கேட்க ஆசை கொண்டேன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருப்பதி சூழும் திருமலை வாழும்
அருள் நிறை ஆண்டவனே
திருவடித் தாமரை திரு நிழல் தந்தருள்
அடைக்கலம் கோவிந்தனே
உலகொடு கோள்கள் உயிர் புலம் யாவும்
அடைத்தனை மாயவனே
அடைத்த பின் காத்து வளர்த்திடும் பாதம்
அடைக்கலம் மாலவனே
உடல் பொருள் ஆவி கொடுத்ததும் நீயே
ஒளி மலை வேங்கடவா
உயர் குணம் ஓங்கவும் இருவினை நீங்கவும்
அடைக்கலம் நீ தர வா
அருந்தவ நட்பு பொருந்திடும் சுற்றம்
அமைப்பது நீ அல்லவா
அறம் பொருள் இன்பமும் தருவது உன் கடன்
அடைக்கலம் வேங்கடவா
இருப்பதை விட்டு பறப்பதை நாடி
துடிப்பது எங்கள் மதி
அறிவொளி வந்த பின் தெளிவையும் கண்டிட
அடைக்கலம் உந்தன் படி
வெறும் பொருள் செல்வம் பெரும் பொருள் என்றே
விரும்பிடும் என் மனமே
பிறவியில் அன்புடன் திருவருள் சேர்ந்திட
அடைக்கலம் வேங்கடனே
எது எது இங்கே இதில் எதில் சேரும்
அறிந்தவர் யாருமில்லை
நினைப்பதும் இன்பங்கள் குவிப்பதும் உன் திறம்
அடைக்கலம் தெய்வ மலை
வருவதை முன்னாள் உரைத்திட வல்ல
அறிஞர்கள் யாருமில்லை
இனி வரும் யாவையும் விதித்தவன் நீயே
அடைக்கலம் அன்பு மலை
அழுவது துன்பம் சிரிப்பது இன்பம்
இயற்கையில் காணும் நிலை
அதனையும் மாற்றிடும் அருள் நிலை உன் நிலை
அடைக்கலம் உந்தன் மலை
திருவிழிப் பார்வை ஒருநொடி போதும்
பெரும் பயன் உண்டல்லவா
விரைவினில் என் முகம் ஒருமுறை பார்த்தருள்
அடைக்கலம் வேங்கடவா
அறவழி செல்வம் பெருகிட வேண்டும்
அருளெனும் தேன் பொழிக
உடல் நலம் கல்வியும் குறைவற சேர்ந்திட
அடைக்கலம் நீ தருக
உனதருள் இன்றி உலகியல் மேன்மைகள்
பெறுவது பொய் அய்யனே
வினை பெரிதாயினும் விதி வலிதாயினும்
அடைக்கலம் வைகுந்தனே
திருவருள் வேண்டும் திருவடி வேண்டும்
நிதம் உனைப் போற்றுகிறேன்
அதைவிட வேறு நல் கதி கிடையாதென
அடைக்கலம் வேண்டுகிறேன்
திருமகள் வாழும் அழகிய நெஞ்சில்
எனக்கொரு பங்கு உண்டு
படைத்தவன் உன்னிடம் கொடுத்துவிட்டேன் எனை
அடைக்கலம் நானும் இன்று
உணர்வெனும் ஐந்தும் அறிவெனும் ஆறும்
மலர்வது உன்னருளே
உருகிடும் நெஞ்சினில் அமைதியும் வந்திட
அடைக்கலம் தந்தருளே
அணு முதல் தோன்றும் விரிவெளி யாவும்
இயக்கிடும் வேங்கடவா
சிறு மனம் வேண்டிடும் உறவென நீ தரும்
அடைக்கலம் மேலல்லவா
குல நல மேன்மை தலைமுறை சீர்மை
வளர்ந்திட கண் மலர்க
நிலை உயர்ந்தோங்கிட திருமலைக் கோவிலில்
அடைக்கலம் நீ தருக
அழகிய ஏழு மலையெனும் வீட்டில்
திகழ்கிற ஆண்டவனே
அடைக்கலம் திருப்பதி அடைக்கலம் திருமலை
அடைக்கலம் கோவிந்தனே
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குன்றக்குடி ஊர் அழகா! குன்றாடும் வேல் அழகா! முருகன் பாடல்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சாதே ஆண்டவர் துணை இருக்க 
நெஞ்சோடு நித்தம் அவர் நினைவிருக்க- 2
 உன் தாயின் உதிரத்தில் உனைத் தெரிந்தார் 
உன் வாழ்வின் உறவாய் உன்னில் நிறைந்தார் 
அஞ்சாதே ஆண்டவர் துணை இருக்க 
நெஞ்சோடு நித்தம் அவர் நினைவிருக்க 

தீயின் நடுவில் தீமை இல்லை
திக்கற்ற நிலையில் துயரம் இல்லை 
தோல்வி நிலையில் துவண்டு வாடும் 
துன்பம் இனியும் தொடர்ந்திடாது
காக்கும் தெய்வம் காலமெல்லாம் 2
கரத்தில் தாங்கிடுவார் 
அன்பின் கரத்தில் தாங்கிடுவார்


 தூரதேசம் வாழ்க்கைபயணம்
 தேவன் ஏசு உன்னை தொடரும்
 பாவம் யாவும் பறந்து போகும்
 பரமன் அன்பில் பனியை போல
 வாழும் காலம் முழுதும் உன்னில் -2
 வசந்தம் வீசிடுமே 
அன்பின் வசந்தம் வீசிடுமே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் கூடவே இரும் ஓ இயேசுவே
நீரில்லாமல் நான் வாழ முடியாது
என் பக்கத்திலே இரும் ஓ இயேசுவே
நீரில்லமால் நான் வாழ முடியாது - 2

இருளான வாழ்க்கையிலே
வெளிச்சம் ஆனீரே
உயிரற்ற வாழ்க்கையிலே
ஜீவன் ஆனீரே (2)
என் வெளிச்சம் நீரே
என் ஜீவனும் நீரே
எனக்கெல்லாமே நீங்கதானப்பா - 2
                    - என் கூடவே

கண்ணீர் சிந்தும் நேரத்தில்
நீர் தாயுமானீரே
காயப்பட்ட நேரத்தில் நீர்‌
தகப்பனானீரே
என் அம்மாவும் நீரே
என் அப்பாவும் நீரே
எனக்கெல்லாமே நீங்க தானப்பா - 2
                    - என் கூடவே

வியாதியின் நேரத்தில் வைத்தியரானீரே
சோதனை நேரத்தில்
நண்பரானிரே (2)
என் வைத்தியர் நீரே
என் நண்பரும் நீரே
                    - என் கூடவே

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தரணிதனில் அறுபத்து அறுகோடி தீர்த்தமும் சரவ ணத்துள் அடக்கம் சாற்றுமோர் எழுகோடி மந்திரங் களுமுன் சடாக்ஷ ரத்துள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லாஹ்... அல்ஹம்துலில்லாஹ்.. | இசை முரசு E.M.நாகூர் ஹனிபா இசை நிகழ்ச்சி 2002 | ISLAMIC SONGS.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்கள் குளமாகுதம்மா.... கர்பலாவை நினைக்கையிலே || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | ISLAMIC SONGS

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மயில் வாஹனா! வள்ளி மனமோஹனா! மா (மயில்) 
சரவண பவ! வரமருள்வாய்! வா! மா (மயில்) 

கயிலாயம் முதல் மலைகளில் எல்லாம் களித்து 
விளையாடும் பன்னிரு கையா! முருகையா! (மயில்) 

பூர்ண சந்திரன் போலும் அறுமுகா! 
புவனம் எங்கும் நிறை மாயவன் மருகா! 
ஆரணப் பொருளே! அடிமை எனை ஆள 
வா வா வா! இராமதாசன் பணி குஹா!

இராகம்: மோஹனம் 
இயற்றியர்: பாபநாசம் சிவன்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவன் அன்பே சக்தி தரும்

ஆண்டவன் அன்பே சித்தி தரும்

ஆண்டவன் அன்பே புத்தி தரும்

ஆண்டவன் அன்பே முக்தி தரும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி

சுகஸ்வரூபிணி மதுரவாணி

சொக்கநாதர் மனம் மகிழும் மீனாட்சி

பாண்டிய குமாரி பவானி அம்பா

சிவசங்கரி பரமேஸ்வரி

வேண்டும் வரம்தர இன்னும் மனம் இல்லையோ

வேதவேதாந்த நாத ஸ்வரூபிணி

ஜகத் ஜனனி

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லிங்கபைரவி அஷ்டகம் || சுதா ரகுநாதன் || லிங்கபைரவி

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருவேங்கடேசா உன் திரு நாமம் போற்றி
திருமேவும் ஓரேழு மாமலைகள் போற்றி
திருத்தலத்தில் சுரக்கின்ற தீர்த்தங்கள் போற்றி
திருமார்பில் திகழ் லக்ஷ்மி பதம் போற்றி போற்றி
திருப்பதியை நாடி வரும் அடியார்கள் போற்றி
திருக்கோவில் வைபவங்கள் ஒவ்வொன்றும் போற்றி
திருமாலே வேங்கடவா பெருமாளே போற்றி
திருமேனி திருப்பாத மலர் போற்றி போற்றி
நன்னாளைத் தொடங்கி வைக்கும் சுப்ரபாதம் போற்றி
நல்லார்கள் ஆழ்வார்கள் பாசுரங்கள் போற்றி
கருவறையில் விஸ்வரூப தரிசனமும் போற்றி
கண்ணாரக் கண்டோம் உன் எழில் போற்றி போற்றி
தொடர்கின்ற அபிஷேகம் வேதம் ஒலி போற்றி
தோமாலை சேவையெனும் ஆதமலர் போற்றி
கொற்றவைகள் படைக்கின்ற பஞ்சாமிர்தம் போற்றி
கோவிந்தன் அருளாட்சி திறம் போற்றி போற்றி
சஹஸ்ரநாமாவளியின் சங்கீதம் போற்றி
சந்நிதியில் ஒலிக்கின்ற அர்ச்சனைகள் போற்றி
இரவினிலே பள்ளியறை தாலாட்டு போற்றி
ஏகாந்த சேவையதன் இசை போற்றி போற்றி
வியாழனில் திருநேத்ர திருக்காட்சி போற்றி
விழி காண விழி காட்டும் எழில் வண்ணம் போற்றி
மறை நான்கின் கருவான மாயோனே போற்றி
மலராடை அணிகின்ற மால் போற்றி போற்றி
வெள்ளிதனில் நீயாடும் திருமஞ்சனம் போற்றி
வேண்டுகின்ற பெரியாழ்வார் பாசுரங்கள் போற்றி
அறுபத்து நான்கென்னும்  உபசாரம் போற்றி
அணிவிக்கும் சோலைகளின் வகை போற்றி போற்றி
கல்யாணாமூர்த்தி நின் அலங்காரம் போற்றி
கலசாபிஷேகங்கள் ப்ரமோற்சவம் போற்றி
நிகமாந்த தேசிகனாம் கண்டாமணி போற்றி
நித்திய கல்யாணம் நிகழ் தலம் போற்றி போற்றி
அன்னமாச்சார்யார் ஸ்தோத்திரங்கள் போற்றி
ஆதிசங்கரர் தந்த அஷ்டகம் போற்றி
தேனான தியாகராஜர் கீர்த்தனைகள் போற்றி
திருமலையின் புகழ் நூல்கள் தொகை போற்றி போற்றி
நாராயண உபநிஷத்தின் நலன் யாவும் போற்றி
நாமாவளி காயத்ரி மந்திரங்கள் போற்றி
பாலாஜி புகழ் சேர்க்கும் இலக்கியங்கள் போற்றி
பரந்தாமன் திகழ் நல்ல பதி போற்றி போற்றி
அலர்மேலு மங்கை திகழ் திருச்சானூர் போற்றி
த்வாதக திருமலை ஸ்ரீ வேங்கடேசா போற்றி
பங்காரு திருப்பதியின் கோவில்கள் போற்றி
பாதார விந்தங்கள் சரண் போற்றி போற்றி
புதுடில்லி ராமகிருஷ்ணபுரத்தோனே போற்றி
பம்பாயின் பனஸ்வாடி தலத்தோனே போற்றி
வங்கத்தில் வைகுந்த நாதனே போற்றி
வகுள மாளிகை வளர்த்த சுடர் போற்றி போற்றி
ஒப்பில்லா உப்பிலியப்பா உன் மேன்மை போற்றி
உயர் நெல்லை கருங்குளத்தில் தெய்வம் நீ போற்றி
மலைவையாயூர் பிரசன்ன வேங்கடேசா போற்றி
மறவாத பக்தர்க்கு உன் துணை போற்றி போற்றி
திருவல்லிக்கேணி பார்த்தசாரதியே போற்றி
தினம் தொழுவார் மனம் உறையும் பெருமாளே போற்றி
திருவரங்க பள்ளிகொண்ட ஸ்ரீரங்கா போற்றி
அருள்மேவும் அவதார பயன் போற்றி போற்றி
மாதத்தில் உன் மாதம் புரட்டாசி போற்றி
வாரத்தில் உன் வாரம் சனி வாரம் போற்றி
யுகம் நான்கில் உனது யுகம் கலியுகமே போற்றி
கலிதீர்க்கும் பாலானே கழல் போற்றி போற்றி
ஆமுக்தமால்யதா ஆண்டாளும் போற்றி
அவள் மாலை ஆண்டுதொறும் பெறுவாய் நீ போற்றி
அனந்தாழ்வார் ஆண்பிள்ளை பரம்பரையும் போற்றி
அலர்மேலு மணவாளன் அருள் போற்றி போற்றி
தேடிவரும் திருப்பதி குடை ஓராறும் போற்றி
கூடவரும் அழகுமிகும் பட்டாடை போற்றி
ஈடில்லா ஆலயத்தின் பண்டிகைகள் போற்றி
ஏழுமலை ஆண்டவனே தாள் போற்றி போற்றி
மலையாக திகழ் ஆதி சேஷன் புகழ் போற்றி
மணிமார்பில் திகழும் இரு மங்கையரும் போற்றி
நிலையாக வளம் கூட்டும் இறைவனே போற்றி
நின்றபடி வரவேற்கும் நிலை போற்றி போற்றி
ஆகாச ராஜன் அவன் அருளாட்சி போற்றி
அவர் வளர்த்த அருளன்னை பத்மாவதி போற்றி
காதலித்து கைப்பிடித்த கோவிந்தா போற்றி
கற்பூர சந்தனத்தின் சுவை போற்றி போற்றி
நரசிம்ம வடிவான அவதாரம் போற்றி
ஒரு யுகத்தில் ராமன் எனும் திருத்தோற்றம் போற்றி
மறு யுகத்தில் கண்ணன் என வந்தாய் நீ போற்றி
கலியுகத்தின் கோவிந்தா சீர் போற்றி போற்றி
ஆகமத்தின் விதிகாக்கும் வழிபாடு போற்றி
அமைத்திட்ட ராமானுஜர் திருப்பெயரும் போற்றி
ஊழி முதல் நீயே ஸ்ரீ கோவிந்தா போற்றி
உவமையில்லா பெருமாள் உன் ஊர் போற்றி போற்றி
காணிக்கை சேர்த்துவைத்து தருவார்கள் போற்றி
கைமாறாய் பல வளங்கள் பெறுவார்கள் போற்றி
கோரிக்கை நிறைவேற்றும் குலதெய்வம் போற்றி
கோவிந்தா கோவிந்தா பேர் போற்றி போற்றி
சனிக்கிழமை விரதத்தில் இருப்பார்கள் போற்றி
சத்தியமும் தர்மங்களும் காப்பார்கள் போற்றி
வினைதீர்க்கும் பெருமாளே அருளாளா போற்றி
வேண்டுதலை தந்தருளும் குணம் போற்றி போற்றி
ஸ்ரீநிவாசன் உனது திருநாமம் போற்றி
ஸ்ரீபாதரேணு எனும் ப்ரசாதம் போற்றி
மானிடர்க்கும் வானவர்க்கும் கதி நீயே போற்றி
மலை போற்றி மனம் போற்றி அருள் போற்றி போற்றி

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வான்மழை போல் ஈந்த... வள்ளல் சீதக்காதி புகழ் மாலை || முகவை முரசு - ஹாஜி S.A.சீனி முஹம்மது | ISLAMIC.

 

முகவை முரசு ஹாஜி S.A.சீனி முஹம்மது அவர்கள் பாடிய வள்ளல் சீதக்காதியின் சிறப்பைக் கூறும் பாடல் ..
_________________________________________________________________________________________________
சீதக்காதி பதினேழாம் நூற்றாண்டில் தென் தமிழ்நாட்டில் வாழ்ந்த புகழ்பெற்ற வள்ளல் ஆவார். இவர் இயற்பெயர் 'ஷைகு அப்துல் காதிறு மரக்காயர்' என்பதாகும். இவர் பெயர் 'ஷெய்க் அப்துல் காதர்' என்றும் அழைக்கப்பெறும். 

இவரின் தந்தையார் 'மவ்லா சாகிப்' என்ற 'பெரியதம்பி மரக்காயர்' ஆவார். தாயார் 'சய்யிது அகமது நாய்ச்சியார்'. இத்தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள். சீதக்காதி இரண்டாவது பிள்ளை, அதாவது நடுவிலவர். இவரின் முன்பிறந்தவர் பட்டத்து மரக்காயர் என்ற 'முகம்மது அப்துல் காதிறு'; இவரின் தம்பியார் 'ஷைகு இப்றாகீம் மரக்காயர்' ஆவார். சீதக்காதியின் முன்னோர்கள் மரக்கலராயர் மரபில் வந்தவர்கள், அதாவது கப்பலில் வெளிநாடு சென்று கடல் வாணிகம் செய்தவர்கள்; செல்வம் மிக்கவர்கள்; ஊரின் தலைமைக்காரராக விளங்கியவர்கள். சீதக்காதியின் தாயைப்பெற்ற பாட்டனார் 'வாவலி மரக்காயர்' ஆவார். இவர் இறந்தநாள் கி.பி.1614ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் நாள் ஆகும்.இதனைக் கீழக்கரையில் உள்ள வாவலிமரக்காயரின் கல்லறையில் எழுதியுள்ள குறிப்பிலிருந்து அறியலாம்; அதில் கொல்லம் 790 ஆம்ஆண்டு ஆனந்தவருடம் கார்த்திகைமாதம் 26 ஆம்தேதி வெள்ளிக்கிழமை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீயே எமது வழி நீயே எமது ஒளி நீயே எமது வாழ்வு இயேசய்யா

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்மதமே இறைவா
சம்மதமே தலைவா
உன் மாலையிலே ஒரு மலராகவும்
பாலையிலே சிறு மணலாகவும் 
வாழ்ந்திட சம்மதமே - இறைவா
மாறிட சம்மதமே
சம்மதமே இறைவா

தயங்கும் மனதுடைய 
நான் உனக்காகவே உன் பணிக்காகவே
வாழ்ந்திட வரம் தருவாய் - 2
கருவாக எனைப் படைத்து - உயர்
கண்மனியாய் எனை வளர்த்து - 2
கரமதிலே உருபதித்து 
கருத்துடனே எனைக் காக்கின்றாய்  

 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • ரோஜா சொல்லியிருந்தார் ஜெகன் அண்ணா தான் வெல்லுவார் என்று........
    • பஞ்சாப்: இந்திரா காந்தியைக் கொன்றவரின் மகன் முன்னிலை! பஞ்சாப் மாநில நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோண்மணி, பாஜக எனப் பெரும் கட்சிகளின் வேட்பாளர்களையே பின்னுக்குத் தள்ளி முன்னிலை வகிக்கிறார்கள் இரண்டு சுயேச்சைகள்! ஒருவர் சிறையிலிருக்கும் காலிஸ்தான் ஆதரவு தலைவர் அம்ரித்பால் சிங் என்றால்... மற்றொருவர் இந்திரா காந்தியைப் படுகொலைசெய்த மெய்க்காப்பாளரின் மகனான சரப்ஜித் சிங் கால்சா!         அம்ரித்பால் சிங்   பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 13 நாடாளுமன்றத் தொகுதிகளில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலி தளம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் பலமுனைப் போட்டியில் களமிறங்கியிருந்தன. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம், காதூர் சாகிப் (Khadoor Sahib) தொகுதியில் காலிஸ்தான் ஆதரவு போராளி தலைவரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் இருந்துவருபவருமான அம்ரித் பால் சிங் சுயேச்சையாகப் போட்டியிட்டார். பஞ்சாப் (காலிஸ்தான்) தனிநாடு கோரிக்கை விடுத்துவரும் அம்ரித்பால் சிங், இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் `ஆபரேஷன் புளூ ஸ்டார்' மூலம் சுட்டுக்கொல்லப்பட்ட காலிஸ்தான் கிளர்ச்சியாளர் பிந்தரன் வாலேவை அடியொற்றி வளர்ந்துவருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.     அதேபோல, 1984-ல் ஆபரேஷன் புளூ ஸ்டார் மூலம் சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரஸ் பொற்கோவிலை சேதப்படுத்தி, பிந்தரன் வாலே உள்ளிட்ட காலிஸ்தான் போராளிகளை சுட்டுக்கொன்றதற்கு பழிதீர்க்கும் வகையில் இந்திரா காந்தி தனது மெய்க்காப்பாளர்கள் இருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மெய்க்காப்பாளர்களில் ஒருவரான பீன்ட் சிங்கின் மகன்தான் தற்போது பஞ்சாப் மாநிலம், ஃபரித்கோட்(Faridkot) தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டிருக்கும் சரப்ஜித் சிங் கால்சா.     சரப்ஜித் சிங் கால்சா   இந்த நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த இரண்டு சுயேச்சை வேட்பாளர்களும் முன்னிலை வகித்து வருகின்றனர். குறிப்பாக, காதூர் சாகிப் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டிருக்கும் காலிஸ்தான் ஆதரவு போராளி தலைவர் அம்ரித்பால் சிங், அவருக்கு எதிராகப் போட்டியிட்ட காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோண்மணி அகாலிதளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்களைக் காட்டிலும் சுமார் 1,84,088 வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதாவது தற்போதுவரை சுமார் 3,84,507 வாக்குகளைப் பெற்றிருக்கிறார். அதேபோல, இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற மெய்க்காப்பாளர் பீன்ட் சிங்கின் மகனான சரப்ஜித் சிங் மற்ற வேட்பாளர்களைவிட அதிகமாக சுமார் 2,96,922 வாக்குகள் பெற்று, சுமார் 70,246 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.   பஞ்சாப்: இந்திரா காந்தியைக் கொன்றவரின் மகன் முன்னிலை! | Son Of Indira Gandhi's Assassin Set To Win Punjab Lok Sabha Seat - Vikatan
    • தூத்துக்குடியில் எதிர் வேட்பாளர்கள் அனைவரையும் டெபாசிட் இழக்க வைத்த கனிமொழி தூத்துக்குடி மக்களவைத் தொகுதி இறுதிச் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் கனிமொழி 5,37,879 வாக்குகள் பெற்று 3,90,472 வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். அதோடு, கனிமொழியைத் தவிர போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர். 2. சிவசாமி வேலுமணி (அதிமுக)-1,47,407 3. எஸ்.டி.ஆர்.விஜயசீலன் (தமாகா) - 1,21,680 4. ரொவினா ரூத் ஜேன் (நாம் தமிழர்)- 1,19,374 Election 2024: தமிழ்நாடு வேட்பாளர்களின் முன்னணி வெற்றி நிலவரம்... உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்! | Lok sabha election 2024 live updates of tamilnadu - Vikatan
    • கடவுள் என்ற ஒரு சக்தியை  நம்ப ஆரம்பித்தால், எதுவும் எப்போதும் முடியும் தானே என்று சொல்வார்கள் என்று நினைக்கின்றேன்..........😜
    • அப்படியென்றால் நீங்கள் முதலாவதாக வாருங்கள் நான் இரண்டாவது........ எமக்கு அடுத்ததாக மற்றவர்கள் எப்படிப் போனால் எமக்கென்ன...........!  😂
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.