Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கே ஓடுது | விளக்கு பூஜை

 

  • Replies 2.9k
  • Views 225.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • உடையார்
    உடையார்

  • Maruthankerny
    Maruthankerny

    இணைப்புக்கு நன்றி உடையாரண்ணா  இவரின் குரலில் சில இஸ்லாமிய பாடல்கள்  மனதையே கொள்ளை கொண்டுவிடும்  சில வருடங்கள் முன்பு ஒரு யூஸ்பி யில் பதிந்து வைத்திருந்தேன்  எங்கோ தவற விட்டுவிட்ட்டேன் ... ம

  • உடையார்
    உடையார்

    யேசுவே எனக்கு என்று யாருமேயில்லை   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உலக மக்கள் யாவருக்கும்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இம்மட்டும் ஜீவன் தந்த கர்த்தாவை அத்தியந்த
எண்ணமாய் ஸ்தோத்தரிப்போமாக

நம்மை ரட்சிக்க வந்து தம்மைப் பலியாய்த் தந்து
நற்சுகம் மேவவும் அற்புதமாகவும்

1. காலம் சொல் போல் கழியும் தண்ணீரைப் போல் வடியும்
கனாவைப் போலேயும் ஒழியும்
வாலிபமும் மறையும் சீலம் எல்லாம் குறையும்
மண்ணின் வாழ்வொன்றும் நிற்க மாட்டாது
கோலப் பதுமைக்கும் நீர்க்குமிழிக்கும் புகைக்குமே
கொண்ட உலகத்தில் அண்ட பரண் எமைக்
கண்டு கருணைகள் விண்டு தயவுடன் – இம்

2. பலவித இக்கட்டையும் திகில்களையும் கடந்தோம்
பரம பாதையைத் தொடர்ந்தும்
வலிய தீமையை வென்றோம் நலியும் ஆசையைக் கொன்றோம்
வஞ்சர் பகைக்கும் தப்பி நின்றோம்
கலி என்றதெல்லாம் விண்டோம் கர்த்தாவின் மீட்பைக் கண்டோம்
காய்ந்த மனதொடு பாய்ந்து விழு கணம்
சாய்ந்து கெடவும் ஆராய்ந்து நெறியுடன் – இம்

3. சன சேதம் வருவிக்கும் கேடுகட்கோர் முடிவு
தந்து நொறுக்கினதைக் கட்டிக்
கன சபையை ஆதரித் தன்பாய் ஆசீர்வதித்துக்
கண்ணோக்கி எல்லார் மேல் அன்றன்று
தினமும் அருள் உதிக்கச் செய்து தமது தேவ
சிந்தை யினோடதி விந்தையதாய் உயிர்
மைந்தனால் எங்களை இந்த விநோதமாய் – இம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுட்ட திருநீறெடுத்து தொட்ட கையில் வேலெடுத்து
தோகை மயில் மீதமர்ந்த சுந்தரம்
அந்த கட்டழகு கொண்டதொரு கந்த வடிவேலவனை
காட்டுவது ஆறெழுத்து மந்திரம்

ஆறெழுத்து மந்திரத்துள் ஆடும் ஒரு சுந்தரத்தை
அந்தி பகல் சிந்தனை செய் நெஞ்சமே
அந்தி பகல் சிந்தனை செய் நெஞ்சமே
அந்த ஆறெழுத்து மந்திரத்தை யார் எடுத்து ஓதிடினும்
ஆறுமுகம் வந்து நிற்கும் முன்னமே
ஆறுமுகம் வந்து நிற்கும் முன்னமே
          (அந்த)
                              (சுட்ட)

கந்தன் அடியை நினைந்து சங்கத்தமிழ் மாலை கொண்டு
வந்தனை செய்வோர்கள் மனம் ஆறுமே
வந்தனை செய்வோர்கள் மனம் ஆறுமே
பரங்குன்று வளர்கின்றதொரு கன்று வழங்கும் நமக்கு
நின்று வளர் செல்வம் பதினாறுமே
நின்று வளர் செல்வம் பதினாறுமே
           (பரங்குன்று)
                                      (சுட்ட)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இருவினை யஞ்ச மலவகை மங்க
இருள்பிணி மங்க, மயிலேறி
இனவரு ளன்பு மொழியக டம்பு
வினதக முங்கொ, டளிபாடக்
கரிமுக னெம்பி முருகனெ னண்டர்
களிமலர் சிந்த, அடியேன்முன்
கருணைபொ ழிந்து முகமும லர்ந்து
கடுகிந டங்கொ, டருள்வாயே
திரிபுர மங்க மதனுடல் மங்க
திகழ்நகை கொண்ட, விடையேறிச்
சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு
திகழந டஞ்செய், தெமையீண
அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை
அமலன்ம கிழ்ந்த, குருநாதா
அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை
அமளிந லங்கொள், பெருமாளே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா
உலகாளும் தாயே அருள்தாருமம்மா – 2

முடமான மகனை நடமாட வைத்தாய்
கடல்மீது தவித்த கப்பலைக் காத்தாய் (2)
பால்கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய் – 2
பொருள்கொண்ட சீமான் உன்பாதம் சேர்த்தாய் – 2

கடல்நீரும் கூட உன் கோயில் காண
அலையாக வந்து உன் பாதம் சேரும் (2)
அருள்தேடி நாங்கள் உன் பாதம் பணிந்தோம் – 2
அன்பாகி எமக்கு அருள் தாருமம்மா – 2

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 மூன்று தமிழ் வாங்க நாலு பொருள் தந்து

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே; 
சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே; 
கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல் கற்பக காமினியே; 
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி; (2)

கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்; 
தானுறு தவஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள்; 
மானுறு விழியால் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்; 
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (2)

சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே; 
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே; 
எங்குலத் தழைத்திட எழில்வடி வுடனே எழுந்தநல் துர்க்கையளே; 
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (2)

தணதண தந்தண தவிலொளி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்; 
கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்; 
பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்; 
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (2)

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே; 
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்தநல் குமரியளே; 
சங்கடம் தீர்த்திடச் சமரது செய்தநற் சக்தியெனும் மாயே; 
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (2)

எண்ணிய படிநீ யருளிட வருவாய் எங்குல தேவியளே; 
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்; 
கண்ணொளி யதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே; 
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (2)

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை யென்றுநீ சொல்லிடுவாய்; 
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்; 
படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்; 
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி! (2)

ஜெயஜெய பாலா சாமுண் டீஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி; 
ஜெயஜெய துர்க்கா ஸ்ரீபர மேஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி; 
ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெயஜெய ஸ்ரீதேவி; 
ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி (2)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இறைவன் தந்த பரிசு
ஏகத்துவத்தின் முரசு
தியாகத்திற்கே சிரசு
தீன் போற்றும் அரசு
வல்ல நாயன் தோழர் மாமணி 
வந்த குர்பானின் மூல காரணி
இபுராகீம் நபியின் வாழ்வெல்லாம் பாடம்  
இறையோனின் வாழ்த்து 
குர்ஆனின் மூலம் 
அவர் வழி போற்ற 
வந்தத் திருநாள் 
வள்ளல் நபி சொன்ன 
ஹஜ்ஜுப் பெருநாள் 
தியாகத்தை போற்றும் திருநாள் 
தீனோரின் ஹஜ்ஜுப் பெருநாள் 
(இறைவன்...)

இறைவனின் ஆணையை
சட்டென முடிப்பதில் முதலாய் நின்றவர் நபி இபுராகிமே 
இது ஏன் எதற்கென 
கேள்வி இல்லாமலே 
எதனையும் செய்ததால் வென்றவர் அவர்களே 
நபி நாதர் மஹ்மூதர் இவர் வம்சமே 
இப்ராகிம் அஹதோனின் உயர் நேசமே
அவர் நினைவேந்தி வந்ததிந்த 
ஹஜ்ஜுப் பெருநாள் 
அகம் நிறைவாக்கும் இந்த 
தியாகத் திருநாள் 
(இறைவன்...)

நெருப்பு குண்டமும் குளிரை தந்ததே 
நிலையில் குழையாத அவர் ஈமான் வென்றதே 
உணவு நேரத்தில் விருந்தினர் இன்றியே உண்ணும் வழக்கமே அவருக்கு இல்லையே 
கனவில் தன் மகனை பலி கொடுக்கக் கண்டார் 
கனம் கூட நில்லாமல் மகனுடன் சென்றார் 
அல்லாஹ் தன் அருளாலே ஆட்டைத் தந்தான் 
அதனாலே குர்பானி கொடுக்கக் கண்டோம் 
(இறைவன்...) 

பாடலாசிரியர் : காயல் R.S. இளவரசு

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல்
என் ஆத்மா வாஞ்சிக்குதே
நீர் மாத்திரம் எந்தன் ஆத்ம நேசர்
உம்மை ஆராதிக்கிறேன்

நீர் என் பெலனும் என் கேடகமாம்
என்னாவி என்றும் உமக்கடிபணியும்
நீர் மாத்திரம் எந்தன் ஆத்ம நேசர்
உம்மை ஆராதிக்கிறேன்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்


அந்த ஆதிசக்தி கருமாரி ஆலயம் வாழ்வு தரும்
மங்கைய ரெல்லாம் போற்றி வணங்கும் மங்கலச் செல்வம்
அதைக் குங்குமத்தாலே அள்ளிக் கொடுக்கும் கலியுக தெய்வம்
ஆயிரம்
ஆனி மறைந்து ஆடி பிறந்ததும் கண் மலரும்
கருமாரியம்மனின் அருள் மழையாலே மண்குளிரும்
முன்னை வினைகளை ஓடிடச் செய்யும் அன்னையின் தீர்ப்பு
அவள் முத்துக் கரங்களில் சூட்டி மகிழ்வோம் சந்தனக் காப்பு

ஆயிரம்...
நதியாய்ப் பாயும் பன்னீராலே அபிஷேகம்
தினம் நாற்பது கோடி நறுமலராலே அலங்காரம்
தங்க ரதத்தில் அம்மன் அமர்ந்து ஊர்கோலம்
அவள் தரிசனம் கண்டு துதிப்பவர்க்கெல்லாம் நலம் சேரும்
ஆயிரம்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

(வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை
     குகனுண்டு குறையில்லை மனமே
          கந்தனுண்டு கவலையில்லை மனமே) ...... (வேலுண்டு)

நீலகண்டன் நெற்றிக் கண்ணில்
     நெருப்பு வடிவாகத் தோன்றி
          நிருதர் குலத்தை அழித்த நிர்மலன் ... முருகன் ...... (வேலுண்டு)

விழிகளொரு பன்னிரண்டு
     உடையவனே என்று சொல்லி
          விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன் ... முருகா ...... (வேலுண்டு)

உலகமென்னும் கடல் தனிலே
     உடல் என்னும் ஓடமது
          உன்னடிக் கரை அடைய அருளுவாய் ... முருகா ...... (வேலுண்டு)

ஓயாது ஒழியாது
     உன் நாமம் சொல்பவர்க்கு
          உயர் கதிதான் தந்திடுவாய் ... முருகா ...... (வேலுண்டு)

கருணையே வடிவமான
     கந்தசாமித் தெய்வமே உன்
          கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் ... கந்தனே ...... (வேலுண்டு)

நெற்றியிலே நீறணிந்து
     நெறியாக உனை நினைந்து
          பற்றினேன் உள்ளமதில் உன்னடி ... முருகா ...... (வேலுண்டு)

நெஞ்ச மதில் வஞ்சமின்றி
     நிர் மலனே நின்னடியைத்
          தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் ... முருகா ...... (வேலுண்டு)

ஆறுபடை வீட்டினிலே
     ஆறுமுக வேலவனே
          ஆதரித்து எனை ஆளும் ஐயனே ... முருகா ...... (வேலுண்டு)

திருப்புகழைப் பாடி உந்தன்
     திருவடியைக் கைதொழுது
          திருவருளைப் பெற்றிட நான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)

கந்தர நுபூதி பாடி
     கந்தனே உன் கழலடியைக்
          கைதொழுது கரைசேர வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)

வேலவனே என்றுபாடி
     வேண்டிடும் அடியவர்க்கு
          வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு)

மந்திரமும் தந்திரமும்
     மருந்துமாக நின்ற உந்தன்
          மலரடியைக் காணவேதான் வந்தேன் ... முருகா ...... (வேலுண்டு)

தெள்ளு தினை மாவும்
     தேனும் பரிந்தளித்த
          வள்ளிக்கு வாய்த்தவனே ... முருகா ...... (வேலுண்டு)

வடிவேலா என்று தினம்
     வாழ்த்துகின்ற அடியவர்க்கு
          கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே ... முருகா ...... (வேலுண்டு)

பரங்குன்று செந்திலும்
     பழனி மலை ஏரகம்
          பலகுன்று பழமுதிரும் சோலையாம் ... முருகா ...... (வேலுண்டு).

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாராயணா என்னும் பாராயணம்

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திக்குத் திகந்தமும் கொண்டாடியே வந்து

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கலங்காதே மனமே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குன்றினில் ஒரு சேவல் கூவுதம்மா

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாத விந்து கலாதி நமோ நம
வேத மந்திர ஸ்வரூபா நமோ நம
ஞான பண்டித ஸ்வாமி நமோ நம                     வெகுகோடி

நாம சம்பு குமாரா நமோ நம
போக அந்தரி பாலா நமோ நம
நாக பந்த மயூரா நமோ நம                                     பரசூரர்

சேத தண்ட வினோதா நமோ நம
கீத கிண்கிணி பாதா நமோ நம
தீர சம்பிரம வீரா நமோ நம                                    கிரிராஜ

தீப மங்கள ஜோதி நமோ நம
தூய அம்பல லீலா நமோ நம
தேவ குஞ்சரி பாகா நமோ நம                              அருள்தாராய்

ஈதலும் பல கோலால பூஜையும்
ஓதலும் குண ஆசார நீதியும்
ஈரமும் குரு சீர்பாத சேவையும்                            மறவாத

ஏழ்தலம் புகழ் காவேரியால் விளை
சோழ மண்டல மீதே மனோஹர
ராஜ கம்பீர நாடாளு நாயக                                       வயலூர

ஆதரம் பயிலாரூரர் தோழமை
சேர்தல் கொண்டவரோடே முன்னாளினில்
ஆடல் வெம்பரி மீதேறி மா                                         கயிலையிலேகி

ஆதி அந்தவுலாவாசு பாடிய
சேர்தல் கொங்குவை காவூர் நன்னாடதில்
ஆவினன்குடி வாழ்வான தேவர்கள்                    பெருமாளே

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திருப்பதி சென்று வந்தால்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம்
 திருச்சி மலையினிலே...
நம் அச்சம் நீங்கவும் ஆனந்தம் பெருகவும்
 அமர்ந்தார் மனதினிலே..
குளு-உச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம்
 திருச்சி மலையினிலே...
நம் அச்சம் நீங்கவும் ஆனந்தம் பெருகவும்
 அமர்ந்தார் மனதினிலே..

சச்சிதானந்த சற்குருவாகிய நிமலன்
 துதி தந்தையானபின் தாயுமான திரு நகரன்
 குளு-சச்சிதானந்த சற்குருவாகிய நிமலன்
 துதி தந்தையானபின் தாயுமான திரு நகரன்
 அச்சுதன் மனம் அன்பினால் மகிழ் மருகன்
 அச்சுதன் மனம் அன்பினால் மகிழ் மருகன்
 எங்கள் ஆனை முகம் கொண்ட ஆதிநாதனாம் இறைவன்
 குளு- அந்த உச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம்
 திருச்சி மலையினிலே...
நம் அச்சம் நீங்கவும் ஆனந்தம் பெருகவும்
 அமர்ந்தார் மனதினிலே..

பாடுதலும் அடி பரவுதலும் தொழிலாகும்
 உனை நாடுதலும் அருள் நண்ணுவதும் நினைவாகும்
 குளு-பாடுதலும் அடி பரவுதலும் தொழிலாகும்
 உனை நாடுதலும் அருள் நண்ணுவதும் நினைவாகும்
 கூடுதலும் கரம் கூப்புவதும் நமதெண்ணம்
 கூடுதலும் கரம் கூப்புவதும் நமதெண்ணம்
 வினை ஓடுவதும் பகை ஒடுங்குதலும் இனி திண்ணம்
 குளு- அருள் உச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம்
 திருச்சி மலையினிலே...
நம் அச்சம் நீங்கவும் ஆனந்தம் பெருகவும்
 அமர்ந்தார் மனதினிலே..
உச்சி பிள்ளையார் கோவில் கொண்ட இடம்
 திருச்சி மலையினிலே...
நம் அச்சம் நீங்கவும் ஆனந்தம் பெருகவும்
 அமர்ந்தார் மனதினிலே..

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

443 B திருவருணை பகுதி 0428 பாடல் மற்றும் விளக்கம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லா புகழும் ............... .............  எல்லா புகழும்  இறைவனுக்கே

....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இடைவிடா நன்றி உமக்குத்தான்
இணையில்லா தேவன் உமக்குத்தான்

1. என்ன நடந்தாலும் நன்றி ஐயா
யார் கைவிட்டாலும் நன்றி ஐயா
நன்றி… நன்றி…

2. தேடி வந்தீரே நன்றி ஐயா
தெரிந்துகொண்டீரே நன்றி ஐயா

3. நிம்மதி தந்தீரே நன்றி ஐயா
நிரந்தரமானீரே நன்றி ஐயா

4. என்னைக் கண்டீரே நன்றி ஐயா
கண்ணீர் துடைத்தீரே நன்றி ஐயா

5. நீதி தேவனே நன்றி ஐயா
வெற்றி வேந்தனே நன்றி ஐயா

6. அநாதி தேவனே நன்றி ஐயா
அரசாளும் தெய்வமே நன்றி ஐயா

7. நித்திய ராஜாவே நன்றி ஐயா
சத்திய தீபமே நன்றி ஐயா

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா
ஆசையெனும் தொட்டினிலே ஆடாதாரே கண்ணா

நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு - என் 
நிழலில் கூட அனுபவத்தில் சோகம் உண்டு
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே - ஆனால்
நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே
நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே

(ஆட்டுவித்தால் யாரொருவர்…)

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள் - அந்த  
பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்ப்பேன் - இன்னும்
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்ப்பேன்
நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்ப்பேன்

(ஆட்டுவித்தால் யாரொருவர்…)

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் - அது 
கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்
உள்ளத்திலே உள்ளது தான் உலகம் கண்ணா - இதை 
உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா
உணர்ந்து கொண்டேன் துன்பமெல்லாம் விலகும் கண்ணா

(ஆட்டுவித்தால் யாரொருவர்…)

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உனைத்தி னந்தொழு திலனுன தியல்பினை
     உரைத்தி லன்பல மலர்கொடுன் அடியிணை
          உறப்ப ணிந்திலன் ஒருதவ மிலனுன ...... தருள்மாறா

உளத்து ளன்பினர் உறைவிடம் அறிகிலன்
     விருப்பொ டுன்சிக ரமும்வலம் வருகிலன்
          உவப்பொ டுன்புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே

கனைத்தெ ழும்பக டதுபிடர் மிசைவரு
     கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
          கதித்த டர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே

கலக்கு றுஞ்செயல் ஒழிவற அழிவுறு
     கருத்து நைந்தல முறுபொழு தளவைகொள்
          கணத்தில் என்பய மறமயில் முதுகினில் ...... வருவாயே

வினைத்த லந்தனில் அலகைகள் குதிகொள
     விழுக்கு டைந்துமெய் உகுதசை கழுகுண
          விரித்த குஞ்சியர் எனுமவு ணரைஅமர் ...... புரிவேலா

மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
     கொடிச்சி குங்கும முலைமுக டுழுநறை
          விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே

தினத்தி னஞ்சதுர் மறைமுநி முறைகொடு
     புனற்சொ ரிந்தலர் பொதியவி ணவரொடு
          சினத்தை நிந்தனை செயுமுநி வரர்தொழ ...... மகிழ்வோனே

தெனத்தெ னந்தன எனவரி யளிநறை
     தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
          திருப் பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எப்படி பாடினாரோ அடியார் 
அப்படிபாட நான் ஆசைகொண்டேன் சிவனே 
அப்பரும் சுந்தரரும் ஆளுடை பிள்ளையும் 
அருள்மணிவாசகரும் பொருளுணர்ந்து உன்னையே ||
குருமணி சங்கரரும் அருமை தாயுமானாரும் 
அருணகிரிநாதரும் அருட்ஜோதி வள்ளலும் 
கருணை கடல் பெருகி காதலினால் உருகி 
கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம் ||

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.