Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நினைப்பது நிறைவேறும் 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பரம்பொருளே சிவ சிவா பணிந்திடுவோம் சிவ சிவா
அண்ணாமலை தலமிருந்து அருள்வழங்கும் சிவ சிவா

கரம் குவித்தோம் சிவ சிவா காக்கவேண்டும் சிவ சிவா
இருள் விலக்கும் திருவிளக்கே ஏற்றம் தரும் சிவ சிவா

அண்ணாமலைக்கு அரோகரா திருவடிக்கு அரோகரா
தீபஜோதிக்கு அரோகரா சொல்லிடுவோம் அரோகரா

திருவண்ணாமலை ஜோதிக்கு . . . அரோகரா . . .

அன்புருவே சிவ சிவா ஆதரிக்கும் சிவ சிவா
நன்மை தரும் நாயகனே நாடிவந்தோம் சிவ சிவா

முக்தி தரும் சிவ சிவா மூத்தவனே சிவ சிவா
பக்திகொண்டோம் உன்னிடத்தில் பதமளிப்பாய் சிவ சிவா

பற்றிலனே சிவ சிவா பாம்பணிந்தாய் சிவ சிவா
வெற்றிதரும் உன்னருளை வேண்டுகிறோம் சிவ சிவா

நெற்றிக்கண்ணை சிவ சிவா நீ திறந்தால் சிவ சிவா
குற்றமெல்லாம் குறைந்திடுமே குவளையத்தில் சிவ சிவா

மன்மதனை சிவ சிவா எரித்தவனே சிவ சிவா
உன்பதமே தினம்வணங்கி வாழுகிறோம் சிவ சிவா

அன்பர்களை சிவ சிவா ஆட்கொள்ளும் சிவ சிவா
உண்மையான மெய்ப்பொருளே உனைப்பணிந்தோம் சிவ சிவா

கயிலையில் சிவ சிவா இருப்பவனே சிவ சிவா
கனிவுடனே அன்பர்களைப் பார்ப்பவனே சிவ சிவா

உயிரினங்கள் சிவ சிவா உன்படைப்பு சிவ சிவா
அனைவரையும் அன்புடனே ஆதரிப்பாய் சிவ சிவா

கேட்டவர்க்கு சிவ சிவா வரமளிக்கும் சிவ சிவா
போற்றிடுவோம் உனையென்றும் ஈஸ்வரனே சிவ சிவா

காற்றினிலே சிவ சிவா கலந்தவனே சிவ சிவா
கவலையெல்லாம் தீர்த்திடுவாய் கயிலை வாழும் சிவ சிவா

சங்கரனே சிவ சிவா சரணடைந்தோம் சிவ சிவா
மங்களங்கள் வாழ்வினிலே தருபவனே சிவ சிவா

கங்கையினை சிவ சிவா சுமந்தவனே சிவ சிவா
உன்கருணை தரும் பலனை உலகறியும் சிவ சிவா

ஆரமுதே சிவ சிவா அண்டிவந்தோம் சிவ சிவா
பேரொளியே பிறையணிந்த பெம்மானே சிவ சிவா

கார்முகிலே சிவ சிவா கருணைமழை சிவ சிவா
சீர்பெறவே மண்ணுலகில் செய்திடுவாய் சிவ சிவா

ஆரூரா சிவ சிவா அருந்தவமே சிவ சிவா
பாராயோ எங்களை நீ பதம்பணிந்தோம் சிவ சிவா

தீராயோ சிவ சிவா தீவினைகள் சிவ சிவா
தாராயோ அனைவருக்கும் தக்கவரம் சிவ சிவா

 

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பயப்பட வேண்டும் எல்லா உயிரினமும் அது இறைவனின் சந்நிதானம்

 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாகூர் ஆண்டவர் பாமாலை

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அமைதி தேடி அலையும் நெஞ்சமே
அனைத்தும் இங்கு அவரில் தஞ்சமே - 2
நிலையான சொந்தம் நீங்காத பந்தம் - 2
அவரின்றி வேறில்லையே

போற்றுவேன் என் தேவனைப் பறைசாற்றுவேன்
என் நாதனை எந்நாளுமே என் வாழ்விலே - 2
காடு மேடு பள்ளம் என்று கால்கள் சோர்ந்து
அலைந்த ஆடு நாடுதே அது தேடுதே - 2

இறைவனே என் இதயமே இந்த இயற்கையின்
நல் இயக்கமே என் தேவனே என் தலைவனே - 2
பரந்து விரிந்த உலகம் படைத்து சிறந்த படைப்பாய்
என்னைக் கண்ட தேவனே என் ஜீவனே - 2
 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்னையே முழுவதும் உம்மிடம் தருகின்றேன்
என் மனம் அறிந்து நீ உன் கையில் ஏற்றிடுவாய்

1. உண்மைக்காக வாழ்ந்திடும் நெஞ்சம் என்னில் உண்டு
உயிர் கொடுக்கவும் துணிந்திடும் உந்தன் பாதை சென்று
என் நெஞ்சில் வாழ்பவன் நீதானே
இனி அச்சம் கொள்வதும் வீண்தானே
எந்தன் பணியில் ஆயிரம் தடைகள்
வந்திடும் ஆயினும் இயேசுவே
உனது வழியில் பயணம் தொடரும்

2. எந்தன் வாழ்வின் பொருளினை உந்தன் வாழ்வில் கண்டேன்
சுயநலத்தின் திரைகளை களைந்து என்னைத் தந்தேன்
ஒரு ஜீவன் என்னாலே உயிர் வாழ்ந்தால்
அதுதானே உன் முன்னால் பெரிதாகும்
மகிழ்வைத் தேடும் மானிடர் மகிழ்ந்திட
தந்திடும் என்னை இயேசுவே
உனது கரத்தில் ஏற்க வேண்டி

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிருஷ்ணா முகுந்த முரரே ...
கிருஷ்ணா முகுந்தா முரரே
ஜெய கிருஷ்ணா முகுந்தா முரரே
ஜெய கிருஷ்ணா முகுந்தா முரரே


கருணா சாகரா கமலா-நாயகா
கருணா சாகரா கமலா-நாயகா
கனகாம்பர தரி கோபாலா
கனகாம்பர தரி கோபாலா
கிருஷன் முகுந்தா முரரே


கலிங்க-நார்த்தனா கம்ச நிசுதானா
கமலாயதா-நயன கோபால
கிருஷ்ணா முகுந்தா முரரே
ஜெய கிருஷ்ணா முகுந்தா முரரே


குட்டிலா-குந்தலம்
குவலயா-தலனிலம்
மதுரா முரளி தவலோலம்
கோட்டி மதான லாவண்யம்
கோபி புண்யம் பஜாமே கோபாலம்

கோட்டி-ஜன மன மோகன் தியபகா
கோட்டி-ஜன மன மோகன் தியபகா
கோட்டி-ஜன மன மோகன் தியபகா
குவலய தலனிலா கோபாலா
குவலய தலனிலா கோபாலா
குவலய தலனிலா கோபாலா

கிருஷ்ணா முகுந்தா முரரே
கிருஷ்ணா முகுந்தா முரரே
முரரே

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆடாது அசங்காது வா

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அகரமுத லெனவுரைசெய் ஐம்பந்தொ ரக்ஷரமும்
அகிலகலை களும்வெகுவி தங்கொண்ட தத்துவமும்
அபரிமித சுருதியும டங்குந்த னிப்பொருளை எப்பொருளு மாய

அறிவையறி பவரறியும் இன்பந்த னைத்துரிய முடிவை
அடி நடுமுடிவில் துங்கந்த னைச்சிறிய அணுவையணுவினின்
மலமு நெஞ்சுங்கு ணத்ரயமு மற்றதொரு காலம்

நிகழும்வடி வினைமுடிவி லொன்றென்றி ருப்பதனை
நிறைவுகுறை வொழிவறநி றைந்தெங்கு நிற்பதனை
நிகர்பகர அரியதைவி சும்பின்பு ரத்ரயமெ ரித்தபெரு மானும்

நிருபகுரு பரகுமர என்றென்று பத்திகொடு
பரவஅரு ளியமவுன மந்த்ரந்த னைப்பழைய நினதுவழி
அயடிமையும்வி ளங்கும்ப டிக்கினிது ணர்த்தியருள் வாயே

தகுதகுகு தகுதகுகு தந்தந்த குத்தகுகு
டிகுடிகுகு டிகுடிகுகு டிண்டிண்டி குக்குடிகு
குதகெண கெணசெகுத தந்தந்த ரித்தகுத தத்ததகு தீதோ

தனதனன தனதனன தந்தந்த னத்ததன
டுடுடுடுடு டுடுடுடுடு டுண்டுண்டு டுட்டுடுடு
ரரரர ரிரிரிரிரி யென்றென்றி டக்கையுமு டுக்கையுமி யாவும்

மொகுமொகென அதிரமுதி ரண்டம்பி ளக்கநிமிர்
அலகைகர ணமிடவுல கெங்கும்ப்ர மிக்கநட
முடுகுபயி ரவர்பவுரி கொண்டின்பு றப்படுக ளத்திலொரு கோடி

முதுகழுகு கொடிகருட னங்கம்பொ ரக்குருதி
நதிபெருக வெகுமுகக வந்தங்கள் நிர்த்தமிட
முரசதிர நிசிசரரை வென்றிந்தி ரற்கரச ளித்த பெருமாளே

நினதுவழி யடிமையும்வி ளங்கும் படி
இனிது ணர்த்தியருள் வாயே அரச ளித்த பெருமாளே . . .
இந்தி ரற்கரச ளித்த பெருமாளே . . .

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆசை நாலுசது ரக்கமல முற்றினொளி
வீசி யோடியிரு பக்கமொடு றச்செல்வளி
ஆவல் கூரமண்மு தற்சலச பொற்சபையு மிந்துவாகை

ஆர மூணுபதி யிற்கொளநி றுத்திவெளி
யாரு சோதிநுறு பத்தினுட னெட்டுஇத
ழாகி யேழுமள விட்டருண விற்பதியின் விந்துநாத

ஓசை சாலுமொரு சத்தமதி கப்படிக
மோடு கூடியொரு மித்தமுத சித்தியொடு
மோது வேதசர சத்தியடி யுற்றதிரு நந்தியூடே

ஊமை யேனையொளிர் வித்துனது முத்திபெற
மூல வாசல்வெளி விட்டுனது ரத்திலொளிர் யோக
பேதவகை யெட்டுமிதி லொட்டும்வகை யின்றுதாராய் முருகா

வாசி வாணிகனெ னக்குதிரை விற்றுமகிழ்
வாத வூரனடி மைக்கொளுக்ரு பைக்கடவுள்
மாழை ரூபன்முக மத்திகைவி தத்தருண செங்கையாளி

வாகு பாதியுறை சத்திகவு ரிக்குதலை
வாயின் மாதுதுகிர் பச்சைவடி விச்சிவையென்
மாசு சேரழுபி றப்பையும் அறுத்த உமை தந்தவாழ்வே

காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி
ஆரூர் வேலுர் தெவுர் கச்சிமது ரைப்பறியல்
காவை மூதுரரு ணக்கிரிதி ருத்தணியல் செந்தில்நாகை

காழி வேளுர்பழ நிக்கிரி குறுக்கைதிரு நாவ லூர்
திருவெ ணெய்ப்பதியின் மிக்கதிகழ் காதல்
சோலைவளர் வெற்பிலுறை முத்தர்புகழ் தம்பிரானே முருகா

காதல் சோலைவளர் வெற்பிலுறை
முத்தர்புகழ் தம்பிரானே முருகா . . . முருகா

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அருள் வடிவாகிய ஆதி சிவனே அகிலத்தைக் காக்கும் ஜோதி சிவனே
அன்பரின் நெஞ்சினில் வாழும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
வரும்வினையாவும் நீக்கும் சிவனே வாசலை மிதித்திட அருளும் சிவனே
அறனாயங்களை காக்கும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
கண்களில் கருணை மழைதரும் சிவனே கைத்தொழும் பேர்க்கு அருளும் சிவனே
அன்பரின் குறைகளைத் தீர்க்கும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
ஞானியர் யாவரும் போற்றும் சிவனே நல்வழிக் காட்டும் எங்களின் சிவனே
ஆணவ குணத்தை அழித்திடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
திருவிளையாடல் புரிந்திடும் சிவனே தீவினை அழித்திடத் தோன்றும் சிவனே
அறிவின் ஒளியாய் விளங்கிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
பிறவியின் பயனை வழங்கிடும் சிவனே பேருலகாளும் பெரியவன் சிவனே
துறவிகள் போற்றும் தூயவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
விரிசடைக் கொண்ட விந்தை சிவனே விண்ணவர் போற்றும் எங்கள் சிவனே
பரிவுடன் அன்பரை பார்க்கும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
பொறுமையின் வடிவே புண்ணிய சிவனே புலித்தோல் ஆடை அணிந்த சிவனே
வறுமையைத் தீர்க்கும் வள்ளல் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
சூலம் கையினில் ஏந்திய சிவனே சுப்ரமணியனின் தந்தை சிவனே
காலனை அன்று மிரட்டிய சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
மாளவனயனும் காணா சிவனே மலையென உயர்ந்து நின்றாய் சிவனே
பாதம் பணிந்திட வந்தோம் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
தாயென எண்களைக் காத்திடும் சிவனே தாண்டவமாடும் தலைவன் சிவனே
நோயினைத் தீர்க்கும் மருந்தும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
ஊழ்வினையாவும் நீக்கிடும் சிவனே உண்மை அன்பினை ஏற்கும் சிவனே
ஏழிசை யாவிலும் நிறைந்த சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
காமனைக் கண்ணால் எரித்தாய் சிவனே கபாலம் கையில் கொண்டாய் சிவனே
சேமங்கள் தந்திடும் தெய்வம் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
உமையவள் நெஞ்சினில் உறைந்தாய் சிவனே உலகத்தின் இயக்கம் என்றும் சிவனே
வளங்கள் நமக்குத் தருவான் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
நஞ்சினை அருந்திய நாயகன் சிவனே நாடியப்பேருக்கு துணைவரும் சிவனே
நெஞ்சினில் என்றும் நிறைந்த சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
தஞ்சமடைந்தால் காக்கும் சிவனே தன்னிகரில்லா எங்களின் சிவனே
வஞ்சனை எண்ணத்தை மாற்றும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
சஞ்சலம் நீக்கிடும் சங்கரன் சிவனே சாந்தசொரூபன் சக்தியின் சிவனே
வந்தனம் சொல்லிட வரம்தரும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
பஞ்சபூதமாய் விளங்கிடும் சிவனே பார்வதிதேவி நாயகன் சிவனே
அஞ்சிடும் குணத்தை மாற்றும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
ஆடல்கலையில் வல்லவன் சிவனே அணுவினில் இருக்கும் ஆண்டவன் சிவனே
மேன்மைகள் வழங்கும் மேலோன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
மாதொருபாகம் கொண்டவன் சிவனே மண்ணுயிர்க்கெல்லாம் காவல் சிவனே
சோதனை நீக்கிடும் சுந்தரன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
அற்புதம் ஆயிரம் புரிந்திடும் சிவனே அன்புடன் அழைத்திடத் துணைவரும் சிவனே
பொற்பதம் பணிந்தால் பொருள்தரும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
கற்பனைக்கெட்டா நாயகன் சிவனே கைதொழுதாலே பலன்தரும் சிவனே
நற்கதி நாளும் வழங்கிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
கங்கையைத் தலையினில் தாங்கிய சிவனே கமண்டலம் கையினில் ஏந்திய சிவனே
எங்களை என்றும் காத்திடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
பொங்கிடும் கருணை கொண்டவன் சிவனே பூஜைகள் செய்திட மகிழ்ந்திடும் சிவனே
அங்கம் சிலிர்த்திட ஆடிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
எண்ணிய காரியம் முடித்திடும் சிவனே ஏற்றம் வாழ்வில் தந்திடும் சிவனே
பண்ணியப் பாவம் போக்கிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
கண்கள் மூன்று கொண்டவன் சிவனே கனிவுடன் நம்மை பார்ப்பவன் சிவனே
விண்ணையும் மண்ணையும் படைத்தவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
தேவரின் துன்பம் தீர்த்தவன் சிவனே திருவருள் புரிந்திட வருபவன் சிவனே
மாபெரும் சக்தியைக் கொண்டவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
மூர்த்திகள் மூவரில் மூத்தவன் சிவனே முக்தியைக் கொடுக்கும் ஆண்டவன் சிவனே
கீர்த்திகள் வழங்கிடும் தேவனும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
ஆரமுதாக விளங்கிடும் சிவனே ஆலவாயிலே நின்றிடும் சிவனே
ஆரூர் தன்னில் நலம் தரும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
சீருடன் நம்மை வாழ்விக்கும் சிவனே சிந்தையில் புகுந்து செயல்தரும் சிவனே
நாரணன் போற்றும் நாயகன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
உடலினை இயக்கும் உணர்வும் சிவனே உதிரத்தில் கலந்த அணுவும் சிவனே
சுடலை மண்ணைப் பூசிடும் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
கடலின் படகாய் வருவான் சிவனே கைகொடுத்தென்றும் காப்பான் சிவனே
விடைபெற முடியா விளக்கம் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
சூரியனாக ஒளிதரும் சிவனே சூழ்ந்திடும் இடரை நீக்கிடும் சிவனே
ஆலயம் எங்கிலும் நிறைந்தவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
சந்திரனாக குளிர்ந்திடும் சிவனே சமயத்தில் வந்து உதவிடும் சிவனே
சபரிநாதனைத் தந்தவன் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
கிரிவலம் வந்திட துணைவரும் சிவனே கேட்டதை கொடுக்கும் தெய்வம் சிவனே
நெறியுடன் வாழ்ந்திடச் செய்வான் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே
பறவையும் விலங்கும் வணங்கிடும் சிவனே பண்புடன் மனிதனை படைத்ததும் சிவனே
இறைவன் என்றால் அவன்தான் சிவனே அண்ணாமலையில் அருளும் சிவனே

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உதயமே நபி உதயமே... உங்கள் வரவாலே உலகம் சிறந்தது || இசை முரசு E.M.நாகூர் ஹனிபா | ISLAMIC SONGS..

 

இஸ்லாம் எனும் மாளிகைக்கு ஐந்து தூண்கள் 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் நன்றியால் உம்மை நான் துதிப்பேன்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வாதை உந்தன கூடாரத்தை அணுகாது மகனே
பொல்லாப்பு நேரிடாது நேரிடாது மகளே

ஆமென் ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா

1. உன்னதமான கர்த்தரையே உறைவிடமாக்கிக் கொண்டாய்
அடைக்கலமாம் ஆண்டவனை ஆதாயமாக்கிக் கொண்டாய்

2. ஆட்டுக்குட்டி இரத்தத்தினால் சாத்தானை ஜெயித்து விட்டோம்
ஆவி உண்டு வசனம் உண்டு அன்றாடம் வெற்றி உண்டு

3. கர்த்தருக்குள் நம் பாடுகள் ஒரு நாளும் வீணாகாது
அசையாமல் உறுதியுடன் அதிகமாய் செயல்படுவோம்

4. அழைத்தவரோ உண்மையுள்ளவர் பரிசுத்தமாக்கிடுவார்
ஆவி ஆத்துமா சரீரமெல்லாம் குற்றமின்றி காத்திடுவார்

5. நம்முடைய குடியிருப்பு பரலோகத்தில் உண்டு
வரப்போகும் இரட்சகரை எதிர்நோக்கி காத்திருப்போம்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 கந்தன் காலடியை

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்க்கா
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்க்கா
மங்கள வாரம் சொல்லிட வேண்டும்
மங்கள சண்டிகை ஸ்லோகம் இதை
ஒன்பது வாரம் சொல்லுவதாலே
உமையவள் திருவருள் சேரும் (ரக்க்ஷ ரக்க்ஷ)

படைப்பவள் அவளே காப்பவள் அவளே
அழிப்பவள் அவளே சக்தி அபயம்
என்று அவளை சரண் புகுந்தாலே
அடைக்கலம் அவளே சக்தி ஜெய ஜெய
சங்கரி கௌரி மனோகரி அபயம் அளிப்பவள்
அம்பிகை பைரவி சிவ சிவ சங்கரி
சக்தி மஹேஸ்வரி திருவருள் தருவாள் தேவி (ரக்க்ஷ ரக்க்ஷ)

கருணையில் ககை கண்ணணின் தங்கை
கடைக்கண் திறந்தால் போதும்
வருகின்ற யோகம் வளர்பிறை யாகும்
அருள்மழை பொழிவாள் நாளும்
நீலநிறத்தோடு ஞாலம் அளந்தவள்
காளி எனத் திரிசூலம் எடுத்தவள்
பக்தருக்கெல்லாம் பாதை வகுத்தவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள்
நாமம் சொன்னால் நன்மை தருபவள் (ரக்க்ஷ ரக்க்ஷ)

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆதிலக்ஷ்மி தேவிக்கு அழகாய் விளக்கேற்றிப்..
பஞ்சுத் திரி போட்டுப் பசும் நெய் தனை ஊற்றிக்..
குங்குமத்தில் பொட்டிட்டக் கோல மஞ்சள் தானமிட்டுப்..
பூமாலை சூட்டி வைத்துப் பூஜிப்போம் உன்னை............. திருமகளே!
 

திரு விளக்கை ஏற்றி வைத்தோம் திருமகளே வருக!
குலம் விளங்க எங்கள் வீட்டில் கொலுவிருக்க வருக!
அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!
அலைமகளே வருக! ஐஸ்வர்யம் தருக!
(திருவிளக்கை)

வாசலிலே மாக்கோலம் வீட்டினிலே லக்ஷ்மிகரம்
நெற்றியிலே ஸ்ரீசூர்ணம் நெஞ்சினிலே லக்ஷ்மிகரம்
அம்மா நீ ஆதரித்தால் அகிலமெல்லாம் இன்பமயம்
அஷ்டமா சித்தியுடன் லோகமெல்லாம் க்ஷேம மயம்
(அலைமகளே வருக)

மாவிலையும் தோரணமும் மங்களத்தின் அடையாளம்
ஊதுவத்தி எரிவதினால் உள்ளத்திலும் ஓரு வாசம்
அம்மா நீ அருள் புரிந்தால் அகிலமெல்லாம் அலங்காரம்
அன்றாடம் பாடிடுவோம் அஷ்டலக்ஷ்மி திருநாமம்!

சங்கு சக்ரதாரி நமஸ்காரம்!
சகலவரம் தருவாய் நமஸ்காரம்!
பத்ம பீட தேவி நமஸ்காரம்!
பக்தர் தமைக் காப்பாய் நமஸ்காரம்!!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அல்லாஹு... அல்லாஹு... எல்லாம் உன் செயல் 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்
ஆனந்தமாய் புகழ் கீதம் என்றும் பாடுவோம் (2)
அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திட
ஆசையோடு அருள் வேண்டிப் பணிகின்றோம் (2)

தாயின் கருவிலே உருவாகும் முன்னரே 
அறிந்து எங்களைத் தேர்ந்த தெய்வமே
பாவியாயினும் பச்சப் பிள்ளையாயினும் 
அர்ச்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர்
மனிதராகப் புனிதராக வாழப் பணிக்கின்றீர் 
பிறரும் வாழ எங்கள் வாழ்வைக் கொடுக்க அழைக்கின்றீர் 
அஞ்சாதே என்று எம்மைக் காத்து வருகின்றீர்

உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினீர்
உமது பாதையை எங்கள் பாதையாக்கினீர்
உமது மாட்சியை எம்மில் துலங்கச் செய்கின்றீர்
உமது சாட்சியாய் நாங்கள் விளங்கச் சொல்கின்றீர்
அழித்து ஒழிக்கக் கவிழ்த்து வீழ்த்தத் திட்டம் தீட்டினீர்
கட்டி எழுப்ப நட்டு வைக்க எம்மை அனுப்பினீர்
அஞ்சாதே என்று எம்மைக் காத்து வருகின்றீர்

 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அல்லிவிழி யாலு முல்லைநகை யாலு
     மல்லல்பட ஆசைக்      கடலீயும்

அள்ளவினி தாகி நள்ளிரவு போலு
     முள்ளவினை யாரத்     தனமாரும்

இல்லுமிளை யோரு மெல்ல அயலாக
     வல்லெருமை மாயச்     சமனாரும்

எள்ளியென தாவி கொள்ளைகொளு நாளில்
     உய்யவொரு நீபொற்      கழல்தாராய்!

தொல்லைமறை தேடி யில்லையெனு நாதர்
     சொல்லுமுப தேசக்      குருநாதா!

துள்ளிவிளை யாடு புள்ளியுழை நாண
     வெள்ளிவன மீதுற்      றுறைவோனே!

வல்லசுரர் மாள நல்லசுரர் வாழ
     வல்லைவடி வேலைத்      தொடுவோனே!

வள்ளிபடர் சாரல் வள்ளிமலை மேவு
     வள்ளிமண வாளப்      பெருமாளே!

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

திருச்சிற்றம்பலம். 

கரையில்வீண் கதைஎலாம் உதிர்கருங் காக்கைபோல்
கதறுவார் கள்ளுண்டதீக்
கந்தம்நா றிடஊத்தை காதம்நா றிடஉறு
கடும்பொய்இரு காதம்நாற
வரையில்வாய் கொடுதர்க்க வாதம்இடு வார்சிவ
மணங்கமழ் மலர்ப்பொன்வாய்க்கு
மவுனம்இடு வார்இவரை மூடர்என ஓதுறு
வழக்குநல் வழக்கெனினும்நான்
உரையிலவர் தமையுறா துனதுபுகழ் பேசும்அவ
ரோடுறவு பெறஅருளுவாய்
உயர்தெய்வ யானையொடு குறவர்மட மானும்உள்
உவப்புறு குணக்குன்றமே
தரையில்உயர் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்
தலம்ஓங்கு கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே.

                  திருச்சிற்றம்பலம்.

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

படிக்கின் றிலைபழ நித்திரு நாமம் படிப்பவர்தாள்
முடிக்கின் றிலைமுரு காவென் கிலைமுசி யாமலிட்டு
மிடிக்கின் றிலைபர மாநந்த மேற்கொள விம்மிவிம்மி
நடிக்கின் றிலைநெஞ்ச மேதஞ்ச மேது நமக்கினியே.

 

  திருச்சிற்றம்பலம். 

சும்மா தனுவருமோ சும்மா பிணிவருமோ 
சும்மா வருமோ சுகதுக்கம் - நம்மான்முன் 
செய்தவினைக் கீடாச் சிவனருள்செய் விப்பதென்றால் 
எய்தவனை நாடி இரு. 

                 திருச்சிற்றம்பலம். 

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அகிலம் வாழ்ந்திட மகிமை சிறந்திட அகமது நபி பிறந்தார்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீராடும் கண்களோடு

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாடல் வரிகளுடன் அழைக்கிறார் இயேசு ஆண்டவர் பாடல் வடிவம்
பாடல் : சகோ. ஜெசிந்தா மேரி
குரல் : மனோ
இசை : அருட்பணி. அகிலன்
இசை இயக்கம் : நெல்லை ஜேசுராஜன்
தயாரிப்பு : அலைகள் மீடியா

அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம் (2)
அவர் பலியினில் கலந்திட
அவர் ஒளியினில் நடந்திட (2)
சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே
அழைக்கிறார் இயேசு ஆண்டவர்
ஆவலாய் நாம் செல்லுவோம்

தேடியே தேவன் வருகிறார்
தன்னையே நாளும் தருகிறார்
தோள்களில் நம்மைத் தாங்குவார்
துயரினில் அவர் தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் (2)
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்

அன்பினால் உலகை ஆளுவார்
ஆவியால் நம்மை நிரப்புவார்
அமைதியை என்றும் அருளுவார்
ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்
விடியலின் கீதமாக முழங்குவார்
விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் (2)
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம்.

 




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.