Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயமோகனின் இந்திய ஞானம்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, உடையார் said:

நீங்கள் ஜெயமோகன் சோபாசுத்திகளின் மாய வலையில் விழுந்து எழ முடியாமலிருக்கின்றீர்கள், விரல்களை உங்களை நோக்கி நீட்டுங்கள், மாய வலைகளைவிட்டு வெளிவாருங்கள்,😎

உங்கள் அரைகுறைப் புரிதலுக்கு நன்றி. 😀

இருவரும் ஒருவரை ஒருவர் கருத்தியல் ரீதியாக எதிர்ப்பவர்கள். ஜெயமோகன் அகண்ட இந்திய, இந்து பெருமைளைப் பேசுபவர். அதனால் அவர் ஒரு வலதுசாரி என்று  விமர்சனம் உள்ளது. சோபாசக்தி தன்னை ஒடுக்கப்பட்டவர்களின் குரலாகப் பார்க்கின்றார். இடது சாரிகளுடன் இயங்கும் ஒருவர். தலித் மக்களுக்காகவும் செயற்படுகின்றார். இருவரையும் வழிபடும் பக்தனாக நானில்லை.

இவர்கள் இருவர், இன்னும் பலரைப்போன்ற முரணான சிந்தனையுள்ளவர்களின் எழுத்துக்களைப் படிப்பதனால் எனக்கு என்று சுயமான சிந்தனை வளர்க்கமுயற்சிக்கின்றேன். முரணான  விவாதங்களே சிந்தனையை முன்னகர்த்தும். ஒருவரை அல்லது ஒரு கருத்தியலை அப்படியே நம்புவது தேங்கிய குட்டை நீரைப் போல நாற்றமடிக்கும் என்பதும் தெரிந்ததே. எனவே எதையும் கேள்விக்கு உட்படுத்தவேண்டும். ஆனால், அசட்டுத்தனமாக கேள்விகளைக் கேட்பதும், விதண்டாவாதம் புரிவதும் சரியென்று சொல்லவில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

இன்னொரு திரியில் அகத்தான் தனது வலையில் பல மீன்கள் பட்டிருந்ததாகச் சொல்லியிருந்தார். நீங்கள் பச்சைகூட குத்தியிருந்தீர்கள்.  அகத்தானின் வலைக்கும் கதவைத் தட்டி இயேசு இருக்கின்றார் என்று மதம் மாற்றும் யெகோவா விசுவாசிகளின் வலைக்கும் ஒற்றுமை இருக்கின்றது. சாதாரணர்கள் எப்படியான கேள்விகள் கேட்பார்கள்; அதற்கு எப்படிப் பதில் அழிக்கலாம் என்று பலமுறை பயிற்சி எடுத்து, அப்படியான கேள்விகள் வரும்போதே முகத்தில் புன்சிரிப்புடன் ஏற்கனவே பாடமாக்கிய பதில்களைச் சொல்லுவார்கள். அதைத்தான் அகத்தான் போன்ற சதிக்கோட்பாளர்கள், அல்லது சதிக்கோட்பாட்டை பரப்புவர்கள் செய்கின்றார்கள். எல்லா மொழியின் மூலாதரம் தமிழ் என்பதும் ஒரு சதிக்கோட்பாடுதான்.  

உடையாரும் அகத்தானின் வலையில் பட்டமீன் என்று தெரியும்😜

 

ஒருவர் வலையில் விழுவதற்கு உங்களைபோல அல்ல 🤪🤪🤪😂

இப்படிதான் உங்களை போன்றவர்களால் கீழடி ஆய்வுகள் தடை செய்ய பார்த்தார்கள் முடியவில்லை,  அவர்கள் அங்கு செய்கின்றார்கள், அதை இங்கு நீங்கள் யாழ் இணைய மூலம் செய்யப்பார்க்கின்றீர்கள், ஒருவர் ஆராய வெளிக்கிட்டால் அல்லது கொஞ்ச புத்திசாலியாக இருந்துவிட்டால் / விடயங்கள் தொரிந்து , 

ஓடிசா பாலு எத்தனை முறை கேட்டும், இன்னும் குமரிக்கண்டத்தை ஆரய அரசு முன்வரவில்லை, எனென்றால் அங்கும் உங்களை போன்றவர்களின் முட்டுக்கட்டையால்தான்

எரிச்சல் தன்பாட்டில வரும், அதுவும் புது உறவு என்றால் ஓட ஓட விரட்டுவீர்கள், இவரென்னடா எங்களுக்கு சொல்வதென்று,

ஜெயமோகன் சோபசுத்திகளின் புத்தங்களை வாசித்து அறிவு வளர்க்கும் நீங்கள்.. இன்னும் வளர்க்க வேண்டுகின்றேன். நீங்கள் இன்னும் வளரனும், காணது 😇😇

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, உடையார் said:

இப்படிதான் உங்களை போன்றவர்களால் கீழடி ஆய்வுகள் தடை செய்ய பார்த்தார்கள் முடியவில்லை,

என்னை எனக்கே தெரியாத ஒரு கூட்டத்துடன் சேர்த்துவிட்டீர்கள். சந்தாவை நீங்களே கட்டியிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்😜

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, கிருபன் said:

உடையாரும் அகத்தானின் வலையில் பட்டமீன் என்று தெரியும்😜

 

இந்த திரியில் அகத்தான் பல மீன்கள் அகப்பட்டிருக்கு என்ற பொருள் விளங்காமலா அவருடன் விவாதித்துக்கொண்டிருந்தீர்கள், மன்னித்துங்கொள்ளுங்கள், நீங்கள் பொருள் விளங்கிதான் காருத்தாடுகின்றீர்கள் என நினைத்துவிட்டேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, உடையார் said:

எரிச்சல் தன்பாட்டில வரும், அதுவும் புது உறவு என்றால் ஓட ஓட விரட்டுவீர்கள், இவரென்னடா எங்களுக்கு சொல்வதென்று,

ஓட ஓட விரட்டவில்லை. ஒதுங்கவே முயற்சிக்கின்றேன். சதிக்கோட்பாட்டாளர்களுக்கு மேடைபோட்டுக் கொடுக்கவும், வெளிச்சம் கொடுக்கவும் நான் தயாரில்லை. ஆனால் நீங்கள் ....

7 minutes ago, உடையார் said:

ஜெயமோகன் சோபசுத்திகளின் புத்தங்களை வாசித்து அறிவு வளர்க்கும் நீங்கள்.. இன்னும் வளர்க்க வேண்டுகின்றேன். நீங்கள் இன்னும் வளரனும், காணது 😇😇

நான் வளரணும் என்று எனக்கே தெரியும்😎. ஒவ்வொரு நாளும் எதையாவது புதிதாகக் கற்றுக்கொள்ளவேண்டும் என்ற அவா எப்போதும் உள்ளது.

5 minutes ago, உடையார் said:

இந்த திரியில் அகத்தான் பல மீன்கள் அகப்பட்டிருக்கு என்ற பொருள் விளங்காமலா அவருடன் விவாதித்துக்கொண்டிருந்தீர்கள், மன்னித்துங்கொள்ளுங்கள், நீங்கள் பொருள் விளங்கிதான் காருத்தாடுகின்றீர்கள் என நினைத்துவிட்டேன்

உங்கள் புரிதலுக்கு நன்றி உடையார்🙏🏿

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, கிருபன் said:

ஓட ஓட விரட்டவில்லை. ஒதுங்கவே முயற்சிக்கின்றேன். சதிக்கோட்பாட்டாளர்களுக்கு மேடைபோட்டுக் கொடுக்கவும், வெளிச்சம் கொடுக்கவும் நான் தயாரில்லை. ஆனால் நீங்கள் ....

நான் ஊக்கப்படுத்துவேன், தேவையென்றால் மேடையும் போட்டு கொடுப்பேன் ஒரு தமிழனென்ற வகையிலும் , கள உறவு என்ற ரீதியிலும். நான் இழுந்துவிழுந்துபவனில்லை.

மற்றவர்களை முன்னேறுவதை ஊக்கப்படுத்தமாட்டேன் என வெளிப்படையாக கூறியதிற்கு நன்றி🙏🙏🙏

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
On 30/6/2020 at 14:32, nunavilan said:

தமிழும் சமஸ்கிருதமும் நீண்ட இலக்கியப் பாரம்பரியமுடைய இந்திய மொழிகள். இருமொழி களிலும் தோன்றிய இலக்கியங்களுக்குள்ள பொதுத் தன்மைகளையும் வேறுபாடுகளையும் பற்றிப் பல அறிஞர்கள் ஆராய்ந்துள்ளனர். அவர்களுள் இரா.ராக வையங்கார், எஸ்.வையாபுரிப்பிள்ளை, வ.அய்.சுப்பிர மணியம், கதிர்மகாதேவன் முதலிய அறிஞர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். தமிழறிஞர்கள் மட்டுமன்றி மேலைநாட்டவரும் சமஸ்கிருத மொழியினைத் தமிழோடும் பிற வெளிநாட்டு மொழிகளோடும் ஒப்பாய்வு செய்தனர். கி.பி. 1786இல் சர் வில்லியம் ஜோன்ஸ் என்பவர் கல்கத்தாவிலுள்ள ஆசியக் கழகத்தில் சமஸ்கிருத மொழியினைப் பற்றி ஆய்ந்து ஐரோப்பிய மொழிக்கும், சமஸ்கிருத மொழிக்கும் உள்ள உறவினை வெளிப்படுத்தினார். அவரைத் தொடர்ந்து கோல்புரூக் பாபு, கீரீம், மாக்சுமுல்லர், புருக்மன், விட்னி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்தியாவில் செம்மொழிகள் என்னும் தகுதியைப் பெற்றிருக்கும் தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்குமான உறவு தொன்மையானது. அக்காலத்தில் பாலி, பிராகிருதம், சமஸ்கிருதம் ஆகியவை வடமொழி, வடசொல் என்று வழங்கப்பட்டன. ‘இந்தியாவின் வடக்கு பாகத்தில் வழங்கிய மொழிக்கு தமிழ் இலக்கணத்தார் வடமொழி எனப் பெயரிட்டனர். அதனைத் தற்போது சமஸ்கிருதம் என்று கூறுகிறார்’ பி.எஸ்.சுப்பிரமணி சாஸ்திரியார்1. வடசொல் “சமஸ்கிருத மொழியில் உள்ள சொல்லை வடசொல் என்றும் அம்மொழியினை வடமொழி என்றும் சுட்டுவது தமிழ் மரபு. சமஸ்கிருதத்தைத் தவிர வேறு மொழிகள் வடதிசைக்கண் வழங்கப்பட்டிருந் தாலும் கூடச் சிறப்பு கருதிச் சமஸ்கிருதத்தை வட மொழி என்றும் வேறுமொழிகள் இந்தியாவின் தென் பகுதியில் வழங்கி வந்திருந்தாலும் சிறப்பு கருதித் தமிழைத் தென்மொழி என்றும் பண்டுதொட்டே தமிழறிஞர்கள் வழங்கி வந்திருக்கிறார்கள்.”2

தமிழ்தான் உலகத்தின் எல்லா மொழிகளுக்கும் மூத்த மொழி என்பவர்கள் குறைந்தது நுணா இணைத்த கட்டுரையையாவது படிக்கவேண்டும்.👍🏾

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சங்க காலமும் இந்திய சிந்தனை மரபும்

தமிழ் மரபை எடுத்துப் பார்ப்போம். நமக்குக் கிடைக்கும் ஆகப் பழைய இலக்கியப் பிரதி என்றால் அது நற்றிணை, புறநானூறு, குறுந்தொகை ஆகிய மூன்றுமாக இருக்கலாம். தொல்காப்பியம் காலத்தால் பிற்பட்டது என்பதே இன்றைய ஆய்வாளர் பலரின் கருத்தாகும். இப்பிரதிகள் மூன்றுமே தூய செவ்வியல் பிரதிகள். செவ்வியலின் எல்லா இலக்கணங்களும் கொண்டவை என்பதுடன் சிறிதளவுகூட நாட்டார் கூறுகள் இல்லாதவை என்பதும் நம் கவனத்தைக் கவர்கிறது. செவ்வியல் இலக்கியம் உருவாகிப் பல நூற்றாண்டுகள் வழியாக முதிர்ச்சி அடைந்து முழுமை பெற்றபின் உருவான படைப்புகள் இவை.

 

சங்க காலத்துக்கும் வெகுவாக முந்தைய தாழிகளில் உள்ள எழுத்துருக்கள் அன்று கல்வி மிகப் பரவலாக இருந்ததைக் காட்டுகின்றன என்கிறார் ஐராவதம் மகாதேவன். அத்தகைய முழுமையான கல்வி கொண்ட சமூகம் இயல்பாகவே செவ்வியலை உருவாக்கும் என்று சொல்லலாம்.

 

நாம் சங்க காலகட்டத்தில் செவ்வியல் முழுமையைப் பார்க்கிறோம். அப்படியானால் அக்காலகட்டத்தின் தத்துவங்கள் என்ன? உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், கீதை, சாங்கிய காரிகை, வைசேஷிக சூத்திரங்கள் போன்ற முழுமையான தத்துவ நூல் எதுவும் நமக்கு பழந்தமிழ் மரபில் இருந்து கிடைக்கவில்லை. அப்படி இருந்த நூல்களைப் பற்றிய தகவல்களும் இல்லை. அகத்தியம், ஐந்திரம் போன்ற இன்று கிடைக்காமல் போன நூல்கள் தத்துவ நூல்களே என்று சிலர் சொல்வதுண்டு.

 

சங்க இலக்கியத்தை நாம் படிக்கும்போது அத்தகைய ஒரு சீரான தத்துவ விளக்கத்தைக் காண முடிவதில்லை. தனி வெளிப்பாடுகளாக உள்ள கருத்துகளை இணைத்து நாமே ஒரு தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது. சங்க இலக்கியத்தில் நமக்குக் காப்பியங்கள் இல்லை. சங்கம் மருவிய காலகட்டத்திலேயே காப்பியங்கள் உருவாகின்றன. சீரான தத்துவ விளக்கம் உருவாகாமையினால் காப்பியங்கள் உருவாகவில்லை என்று சொல்வது ஒரு விளக்கம். காப்பியங்கள் கிடைக்காமையினால் தத்துவ விளக்கம் உருவாகவில்லை என்று சொல்வது இன்னொரு விளக்கம்.

இயற்கை தமிழரின் முக்கியமான வழிபடுபொருள் என்பதை இன்றும் தமிழ்நாட்டு மத வழிபாட்டு முறைகளைக்கொண்டு சொல்லிவிட முடியும். நம்முடைய ஆலயங்கள் அனைத்துமே மரங்களின் அடியில் சிறிய கல்பதிட்டைகளாக இருந்திருக்கின்றன. அங்கிருந்துதான் அவை பேராலயங்களாக எழுந்தன. எல்லாக் கோயில்களுக்கும் தல விருட்சங்கள் உள்ளன.

தமிழகத்தில் தொன்மையான இந்துத் தத்துவப் பண்பாட்டுக் கூறுகளின் நேரடிச் செல்வாக்கு நமக்குக் கிடைக்கும் ஆகப் பழைய சங்கப் பாடல்களிலேயே உள்ளது. வேத-வேதாந்தக் கருத்தியலுடன் உரையாடி வளர்ந்த நிலையில் இருக்கும் சிந்தனைகளாகவே நமக்கு சங்க காலப் பாடல்கள் காணக் கிடைக்கின்றன. வைதிக மரபில் இருந்து பெற்ற அறம் பொருளின்பம் என்னும் மூவகை புருஷார்த்தங்கள் (வாழ்க்கைச் சாரங்கள்) நம் சிந்தனையைப் பின்னர் வடிவமைத்தன.

சங்க காலத்துக்கு முன்னரே வேதப் பண்பாடு தமிழகத்திற்கு வந்திருக்கிறது. ஆனால், வைதிகர் எப்போதும் அந்நியராகவே சொல்லப்படுகிறார்கள். எப்போது வைதிகர்கள் குறிப்பிடப்படுகிறார்களோ அப்போதெல்லாம் அவர்களின் தவம், வேள்விச் செயல், அவர்களின் வேதம் ஆகியவற்றைச் சுட்டும் ஒரு மதிப்புடனும் வழிபாட்டுடனும்தான் சொல்லப்படுகிறார்கள். ஆனாலும் அவர்கள் தமிழ்ச் சமூகத்தின் உறுப்பினராகச் சொல்லப்படவில்லை.

தமிழ்ச் சிந்தனையின் மையக் கருத்துகளான இயற்கை வழிபாடு, பிறவிச் சுழற்சி மற்றும் அகப்புறம் ஆகிய மூன்றும் இந்திய சிந்தனை மரபில் தமிழிலிருந்து சென்று வலுப் பெற்றவை என்று சொல்ல வாய்ப்புகள் உள்ளன.

 

 

இந்திய சிந்தனை மரபில் இன்றுள்ள வேதாந்த ஞானம் என்பது பெரும்பாலும் தெற்கின் - தமிழகத்தின் - கொடை என்றால் அது மிகையல்ல.

On 16/7/2020 at 01:57, கிருபன் said:

இன்னொரு திரியில் அகத்தான் தனது வலையில் பல மீன்கள் பட்டிருந்ததாகச் சொல்லியிருந்தார். நீங்கள் பச்சைகூட குத்தியிருந்தீர்கள்.  அகத்தானின் வலைக்கும் கதவைத் தட்டி இயேசு இருக்கின்றார் என்று மதம் மாற்றும் யெகோவா விசுவாசிகளின் வலைக்கும் ஒற்றுமை இருக்கின்றது. சாதாரணர்கள் எப்படியான கேள்விகள் கேட்பார்கள்; அதற்கு எப்படிப் பதில் அழிக்கலாம் என்று பலமுறை பயிற்சி எடுத்து, அப்படியான கேள்விகள் வரும்போதே முகத்தில் புன்சிரிப்புடன் ஏற்கனவே பாடமாக்கிய பதில்களைச் சொல்லுவார்கள். அதைத்தான் அகத்தான் போன்ற சதிக்கோட்பாளர்கள், அல்லது சதிக்கோட்பாட்டை பரப்புவர்கள் செய்கின்றார்கள். எல்லா மொழியின் மூலாதரம் தமிழ் என்பதும் ஒரு சதிக்கோட்பாடுதான்.  

 

 

“வலைக்கும் கதவைத் தட்டி இயேசு இருக்கின்றார் என்று மதம் மாற்றும் யெகோவா விசுவாசிகளின் வலைக்கும் ஒற்றுமை இருக்கின்றது” -  சரக்கு இருந்தால் அவிட்டு விடு இல்ல, சலாம் போட் டு ஓடிவிடு - சினிமாப் பாட்டு.

“வலையில் பல மீன்கள்” - தமிழில்ஒரு சொல் பல பொருள்” என்று ஒரு விடயம் இருக்குது தெரியுங்களா.

தமது அறிவுக்கு வசதியான பொருளைத்தானே ஒருவர் எடுத் துக் கொள்வார். தப்பேயில்ல;  https://youtu.be/6ZPpeNHaFnM?t=40

 

சதிக்கோட்பாளர்கள், அல்லது சதிக்கோட்பாட்டை பரப்புவர்கள் செய்கின்றார்கள்” - ஆக்களைத் தாக்குவது முட்டாள் தனம் என்று இன்னுமா ஏறுதில்ல.

“தண்ணீரிலே தாமரப்பூ தள்ளாடுதோ…” – சினிமாப் பாட்டுதானுங்க.

“சிந்தித் துப்பார்த்து செய்கைய மாத்து, சிறிசாயிருக்கையில் திருத்திக்கோ, தவறு சிறிசாயிருக்கையில் திருத்திக்கோ, தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தால் அது திரும்பவும் வராம பாத்துக்கோ” - சினிமாப் பாட்டு.

எல்லா மொழியின் மூலாதரம் தமிழ் என்பதும் ஒரு சதிக்கோட்பாடுதான்”- அப்ப, “Hypothesis” என்று ஒன்று தெரியவே தெரியாதா. 

Nostratic Family of languages என்று ஒன்று இருக்குது தெரியுமா, "நாய் எப்படி முத்தம் கொடுக்குது" - ரசனை மட்டுந்தான் நமக்கு வருமா?

“..அண்மையில் படித்திருந்தேன்.” - சொந்தமா சிந்தித்து கருத்து சொல்பவர்கள் மற்றவர்களைத் தாக்க மாட்டார்கள்.

சொந்தமாக ஆயுதம் தயாரிப்பவனுடன் பிறரிடம் இரந்து ஆயுதம் வாங்குபவன் சண்டையிட்டு வெல்ல முடியுமாங்க?  வெளியில இருந்து ஆயுதம் வரும் வரைக்கும், தகுந்த சமமான ஆயுதம் இல்லாதபடியால் stock இல இருக்கிற பொருத்தமில்லாத ஆயுதத்தால் தாறுமாறாக அடித்துத் தப்பிக்க மூனைவார்கள்.

“ஆடத்தெரியாதவன் அரங்கம் பிழையெண்டானாம்” - என்று தாக்க எங்களுக்கும் தெரியும்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, அகத்தான் said:

ஆடத்தெரியாதவன் அரங்கம் பிழையெண்டானாம்” - என்று தாக்க எங்களுக்கும் தெரியும்ல.

ஆதி லுமேரிய தொல்குடித் தமிழனின் எச்சமாக இன்றும் வீறாப்புடன் இருக்கும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்  😁

 

1 hour ago, கிருபன் said:

ஆதி லுமேரிய தொல்குடித் தமிழனின் எச்சமாக இன்றும் வீறாப்புடன் இருக்கும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்  😁

 

ஒரு கருத்தை எதிர்த்துக் கேள்வி எழுப்புவது புதிய தேடலுக்கு வலுச்சேர்க்கிறது.

கேள்விதான் அறிவுக்கு உந்துகோல். அந்த வகையில் உங்களது கேள்விகள் நியாயமானது, அது கருப்பொருளோடு தொடர்புடையதாயிருந்தால் இன்னும் நன்றாயிருக்கும்.

அரசாங்கத்தில் எதிர்க்கட்சி அவசியமான ஒரு அங்கம். ஆனால் வாதங்கள் எங்கெயெல்லாமே போகும்.

கேள்விகளுடன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு அறிவூட்டி, நல்வழி காட்டிய தங்கள் பதிவுக்கு நன்றிகள்.

On 16/7/2020 at 02:26, கிருபன் said:

என்னை எனக்கே தெரியாத ஒரு கூட்டத்துடன் சேர்த்துவிட்டீர்கள். சந்தாவை நீங்களே கட்டியிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன்😜

"ஆதி லுமேரிய தொல்குடித் தமிழனின் எச்சமாக இன்றும் வீறாப்புடன் இருக்கும் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்" -  நீங்கள் மற்றவருக்கு செய்யலாமா?

தலையிடியும் காய்ச்சலும் தனக்கு தனக்கு வரும் போதுதான் தெரியும்!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.