Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன் லெப்டினன்ட் சீலன் (ஆசீர்)

Last updated Jul 14, 2020
 
 

“அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்…. இதோ இந்த அலைகள் போல…….”

 

லெப்டினன்ட் சீலன் (ஆசீர்)
 
ஞானப்பிரகாசம் லூக்காஸ் சாள்ஸ்அன்ரனி
 
புனிதமரியாள் வீதி, திருகோணமலை
 
வீரப்பிறப்பு:11.12.1960
 
வீரச்சாவு:15.07.1983
 
நிகழ்வு:யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முற்றுகையின்போதான சமரில் விழுப்புண்ணடைந்த நிலையில் சகதோழனால் சுடப்பட்டு வீரச்சாவு
“அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்….  இதோ இந்த அலைகள் போல…….”
 
1983ம் ஆண்டு ஜூலை மாதம் 15ம் தேதி.
மாலை 3 மணி.
 
கச்சாய்க் கடலிலிருந்து வீசும் இதமான காற்று.
 
அந்த மீசாலைக் கிராமம்
அமைதியில் தோய்ந்து போயிருக்கிறது.
 
அந்த அமைதியைக் குலைத்துக் கொண்டு, சிறிலங்காவின் இராணுவக் கூலிப்படைகள், அந்தச் சிறிய கிராமத்தைச் சுற்றிவளைக்கின்றன. கச்சாய் வீதியுடன் இணையும் அல்லாரை மீசாலை வீதியை, அரச படைகளின் வாகனங்கள் ஆக்கிரமிக்கின்றன.
 
ஒரு மினி பஸ், இரண்டு ஜீப், ஒரு இராணுவ ட்ரக் வண்டி. நொஈஉ பேருக்கு மேல் சிவிலுடையணிந்த சிங்கள இராணுவ அதிராடிப் படையினர். அந்தக் கிராமம் சிலிர்த்துக் கொள்கிறது.
 
கல்லும் மணலும் கலந்த குச்சு ஒழுங்கைகளுக்கூடாகா, நான்கு இளைஞர்கள் இயந்திரத் துப்பாக்கிகளுடன் சைக்கிளில் விரைந்து கொண்டிருந்தனர்.
 
ஒரு துரோகி காட்டிக் கொடுத்தால் சிங்கள இராணுவம் தங்களது மறைவிடத்தைச் சுற்றிவளைப்பதை உணர்ந்து, அந்த கிராமத்தை விட்டு வெளியேற விரையும் அந்த நான்கு இளைஞர்களும், அதோ அந்த அல்லாரை மீசாலைத் தார் வீதியைக் கடந்து கொண்டிருக்கிறார்கள்.
 
வீதியின் ஒரு புறம் சுடலையருகேயும் மறுபுறம் நெசவுநிலையத்திற்கருகிலும் நின்று கொண்டிருந்த இராணுவ வண்டிகள் இளைஞர்கள் கடந்த ஸ்தலத்தை நோக்கிச் சடுதியாக விரைகின்றன அந்த ஸ்தலத்தில் இராணுவ வண்டிகள் குலுங்கிக்கொண்டு நிற்கின்றன.
 
இராணுவத்தின் குண்டு துளைக்கும் எல்லைக்குள் அந்த இளைஞர்கள் விரைந்து கொண்டிருக்குறார்கள். மினிபஸ்ஸில் இருந்த இராணுவத்தினர் இறங்கி ஓடிப் பனை வடலிக்குள் பாதுகாப்பான இடங்களில் தங்களை நிலைப்படுத்திக் கொள்கின்றனர். மொத்த இராணுவத்தினரில் முப்பதுக்கு மேற்ப்பட்டோர் பனை வடலிக்குள் குழுமுகின்றனர்.
 
தார் வீதியைக் கடந்த இளைஞர்கள் துரதிர்ஸ்டவசமாக இப்போது நின்று கொண்டிருப்பது, வெறும் பொட்டல் வெளியில். சுற்றிலும் சூழ்ந்து கொண்டுவிட்ட அரச படைகளை உறுத்துப் பார்கிறான், அந்த இளைஞர்களின் தலைவன்.
அவன் தான் –
சீலன் !
அரச படைகளின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டிய வீர மறவன்.
 
ஆசீர் –
சீலன் –
இதயச்சந்திரன் –
 
ஆகிய பெயர்களில் அரச படைகள் வெறிகொண்டு தேடும், லூக்காஸ் சார்ல்ஸ் அன்ரனி தமிழீழ விடுதலைப்புலிகளின் இராணுவப் பிரிவுத் தலைவன்.
 
Fire !
“சுடுங்கள்”
 
கட்டளை பிறப்பித்த சீலனின் இயந்திரத் துப்பாக்கி சடசடக்கிறது மற்ற இளைஞர்களும் விரைந்து துப்பாக்கிகளை இயக்குகின்றனர்.
 
வெட்டவெளியில் அந்த வீரமகன் சீலன். அவனுக்கருகில் ஆனந்த் என்னும் அருள் நாதன். உடலும் உள்ளமும் வைரம் பாய்ந்தவன். அவனோடு இன்னுமொரு வீரன்.
 
ஆபத்தின் எல்லைக்கப்பால் அடுத்த வீரன் உறுதி, நிதானம், வேகம், லாவகம் களத்திலே புலிகள்.
 
இளைஞர்களின் எதிர்த்தாக்குதல் சிங்களக் கூலிபடைகளைத் திணறச் செய்கிறது. ஆனாலும் பாதுகாப்பான பனை வடலிக்குள் பதுங்கிக் கொண்டு அந்தக் கூலிகளும் தொடர்ச்சியாகத் தாக்கிகின்றனர்.
 
வெட்டவெளியில் தொடர்ந்து முன்னேறவோ, பின்வாங்கவோ முடியாத இக்கட்டான நிலையில் அவர்கள் சிக்கிக்கொண்டு விட்டனர்…
 
ஆனாலும் ஆயுதங்களோடு அரச படைகளின் கையில் சரணடையும் கோழைகளல்ல இவர்கள் ! பிரபாகரனின் கைகளிலே வளர்ந்தவர்கள். எதிரிகளின் கைகளில் பிடிபடுவதை விட மானத்தோடு சாவது மேல், என்ற வீர மரபில் பயிற்றப்பட்டவர்கள்.
 
இறுதி மூச்சி வரை இந்தப் புலிகள் போராடத் திடங்கொண்டனர்.
 
சுற்றிலும் குவிந்து நிற்கும் கூலிப்பட்டாளம்! வெளியைத் துளைக்கும் சன்னங்கள். மண் தரையில் புழுதி கிளப்பும் குண்டுகள். சீலனின் எந்திரத் துப்பாக்கி தொரர்ந்து சடசடக்கிறது.!
 
ஆனால் கூலிபடையின் துப்பாக்கிச் சன்னம் ஏற்கனவே பெற்றிருந்த சீலனின் வீரத்தழும்புகளைக் கிழித்துக்கொண்டு மார்பில் பாய்கிறது. ரத்தம் பீறிடச் சீலன் தள்ளாடுகிறான்.
 
இரண்டு முறை முன்னரே களத்தில் குருதி சிந்திய அந்த வீரன், தன்னுயிர் போகவில்லை என்பதை உணர்கிறான்.
 
உயிரோடு அகப்பட்டால் கடித்துக் குதரக் காத்திருக்கும் வேட்டை நாய்கள் சுற்றிலும் ! “என்னைச் சுட்டுக் கொன்றுவிட்டு நீங்கள் பின் வாங்குங்கள்” என்று, சீலன்
கட்டளையிடுகிறான்.
 
படைத்தலைவனின் கட்டளை. பணிக்கப்பட்ட இளம் வீரனோ திகைத்துப்போய் நிற்கிறான்.
 
பனை வடலிக்குள் வசதியாகப் பதுங்கி நிற்கும் இராணுவ வேட்டை நாய்களின் தொடர் வேட்டு மழை.
 
சீலனின் கட்டளையை நிறைவேற்றுவதா?
 
ஒரு பாசம் மிக்க தோழனின், ஒரு வீரம் மிக்க போராளியின் மரணம் தன்னால் நிகழ்வதா? அல்லது அவனை உயிருடன் எதிரியின் கையில் பிடிபட விட்டுவிட்டுத் தான் பின்வாங்குவதா? வினாடி நேரத்தில் விடை காணவேண்டிய நிர்ப்பந்தம் அந்த வீரனுக்கு.
 
“என்னைச் சுட்டா சுடு” – சீலனின் கண்டிப்புடன் கூடிய கட்டளை மீண்டும் பிறக்கிறது.
 
நெஞ்சில் வழியும் ரத்தம்;
முகத்தில் துளிர்க்கும் வியர்வை.
சீலன் தல்லாயவாறு கண்டிப்புடன் மீண்டும் கட்டளையிடுகிறான்.
 
லட்சியத் தணலிலே புடம் போட்ட அந்த வீரனின் நெஞ்சில், உறுதி பிறக்கிறது.
 
காண நேரத்திற்குள் சீலனின் தலையில் துப்பாக்கிச் சன்னங்கள் பாய்கிறன. புரட்சி வீரன் சீலனின் உடலை மீசாலை மண் அணைத்துப் பெருமை தேடிக்கொள்கிறது.
 
அதற்குள், குறி பார்த்துச் சுடுவதற்கு வாகன – வாட்ட சாட்டமான தோற்றம் கொண்ட ஆனந்த் குண்டு பட்டுச் சாய்கிறான். ஆனந்த் உயர்ந்தவன் – உயரத்தில், தன்மானத்தில், வீரத்தில்.
 
“என்னையும் சுட்டு விடு” – ஆனந்தின் வேண்டுகோள்.
 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தூய்மைக்கு முத்திரை பதிக்கும் ரத்தச் சாட்சிகள்.
 
பிரபாகரனின் பயிற்சிக் களத்திலே வளர்ந்த வேங்கைகள்.
 
ஆனந்தின் தன்மானம் காக்கிறான் அந்த இளம் வீரன். மீசாலை மண்ணின் இரண்டு மாணிக்கங்கள் தரையில் சரிந்தும் இராணுவக் கூலிப்படை கும்மாளமிட்டது. வீழ்ந்துபட்ட வீரர்களின் துப்பாக்கிகளையும் ஏந்திக்கொண்டு, மற்றுமிரு வீரர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.
 
இறந்து கிடப்பவர்கள் யார்?
 
இராணுவ மிருகங்கள் நெற்றியைச் சுழிக்கின்றன. தங்களின் கைவசமுள்ள ‘தேடப்படுபவர்களின்’ புகைப்படக் குவியலில் இவர்களின் புகைப்படங்கள் இல்லையே!
 
அந்தக் கூலிப்படையின் மேஜர் ஒருவன் சீலனின் சாரத்தை உயர்த்தி, வலது காலைப் பார்க்கிறான். வலது காலின் முழங்கால் மூட்டுக்கு மேற்பகுதியில் ஐந்து துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்த தழும்புகள்.
 
அந்த மேஜர் உரத்துக் கத்துகிறான்: “இவன்தான் சீலன்!”
 
சீலன் இருபத்து மூன்று வயது கூட நிரம்பாத இளைஞன், அழகான முகம், அழகாய்ச் சிரிப்பான். அவனுடைய பேச்சிலே மழலை சொட்டும்.
 
பலகுவதிலே அவன் குழந்தை. யாரையும் கவர்ந்திழுக்கும் வசீகரம் அவனுடையது.
 
ஓரத்தில் உதட்டைக் கடித்துக் கொண்டு, கண்களைச் சுருக்கிக் கொண்டு அவன் சிரிக்கும் அழகு அவனுக்கேயுரியது.
 
இவனோட பழகக் கிடைத்தவர்கள் அதிஸ்டசாலிகள், தான் மட்டுமல்ல தன்னோடு இருப்பவர்களையும் எப்போதும் சிரிக்கவைத்துக் கொண்டிருப்பான்.
 
கூச்ச சுபாவம் உள்ளவன். ஆனால் பழக ஆரம்பித்தால் மிகவும் இனிமையாகப் பழகுவான். அன்பு செலுத்தத் தெரிந்த இவன் அன்பைப் பிரியமாக ஏற்றுக் கொள்வான்.
 
பிரியமானவர்கள் விளையாட்டுக்காகக் கோபித்தால் கூட அதனை அவனால் தாங்கிக்கொள்ள முடியாது. போலித்தனம் இவனுக்குத் தெரியாது. ஆர்ப்பாட்டமே இல்லாதவன்.
 
ஆயுதப்படைகளுக்கு எதிரான அதிரடித்தாக்குதலென்றால் யுத்த சன்னதனாகக்களத்தில் குதிக்கும் இவன், சாதாரணப் பொழுதுகளில் தென்றலாகத் தெரிவான்.
 
அவன் ஆத்மாவை விற்கத் தெரியாத புரட்சிக்காரன்.
பிழைகளைச் சுட்டிக் காட்டுவதில் நக்கீரன். தமிழீழத்தை நோக்கிய அவனது சிந்தனைகளும் செயற்பாடுகளும் திட்டவட்டமானவை.
 
தலைவர் பிரபாகரனின் தலைமையில், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் விடுதலைப் போராட்டத்திலேயே தமிழீழம் வெல்லப்படும் என்பதில், சீலன் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தான்.
 
20046511_609147075947025_602713827251488பிரபாகரனின் நேர்மையிலும் தூய்மையிலும், திறமையிலும் அவன் எல்லையற்ற மதிப்பு வைத்திருந்தான்.
 
தேசிய விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் பணியில், ஒரு தலைமறைவு இயக்கத்தின் ஒழுங்கு கட்டுப்பாடு என்பவற்றைப் பேணுவதில் சீலன் காட்டிய சிரத்தை, அசாதாராணமானது.
 
அந்த அவகியில் தலைவர் பிரபாகரனின் பூரண நம்பிக்கைக்கும், அன்பிற்கும் சீலன் பாத்திரமாக இருந்தான். ஒழுங்கும் கட்டுப்பாடும் இல்லாத சுயநலமிகளும், கூட இருந்தே இயக்கத்திற்குக் குழிபறித்து விட்டு ஓடிய தொரோகிகளும், பிளவுவாத நடவடிக்கையில் ஈடுபட்டு தூய்மையான இயக்கத்தை உடைக்க முயன்றபோது, இயக்கத்தின் கட்டுக்கோப்பைத் தளரவிடாது காப்பதில் பிரபாகரனுடன் உறுதியாக நின்றவர்களில், சீலன் முதன்மையானவன்.
 
பதவி இறக்கப்பட்டதற்க்காக இயக்கத்தை விட்டு ஓடியவர்களைப் பார்த்து சீலன் சிரித்திருக்கிறன. அந்தச் சிரிப்பில் சினமும் தோய்ந்திருக்கும். இயக்கத்தின் ரத்த நாளமாகவே சீலன் திகழ்ந்தான். தான் நம்பியவர்கள் எல்லோரும் பதவிப் பித்தர்களாயும், சுயனலமிகளாயும் வேடங்கட்டித் திரிந்ததைப் பார்த்து பிரபாகரன் விரக்தி கொண்ட கணங்களில், சீலனே இயக்கத்திற்குப் புதிய ரத்தம் பாய்ச்சுவதில் துணை நின்று பெரும் பணியாற்ரியிருக்கிறான்.
சீலன் இராணுவப் படிப்புப் படித்தவன் அல்லான். வெளிநாடுகளில் போர்ப்பயிற்சி பெற்றவனுமல்லன். போர் மூலமாகவே போரை அறிந்தவன். இயக்கத்தின் இராணுவப் பிரிவுத் தலைமை வகித்து இவன் நடத்திய வெற்றிகரமான கெரில்லாத் தாக்குதல்கள், இயக்கத்திற்கு வலிமையைச் சேர்த்து, விடுதலைப் போராட்டத்தையும் முன்னேடுத்ததையும் முன்னெடுத்துச் சென்றிருக்கிறது.
 
தமிழீழத்தின் போராட்ட வராலாற்றில் முதன்மைவாய்ந்த கெரில்லா வீரன் சீலன். படைத் தலைவன் என்பவன் ஆணை பிறப்பிப்பவன் மட்டுமல்ல தானே முன்னுதாரணமாகத் திகழ்ந்து போரை வழி நடத்துபவன் என்பதற்கு, சீலனே ஒரு இலக்கணம்.
%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D.jpg
ஒரு கெரில்லாத் தாக்குதலை மேற்கொள்ளுமுன் அதற்கான தகவல்களைத் திரட்டுவதிலும், அதன் செயற்பாடு, விளைவு, தாக்கம் என்பதனை ஆராய்வதிலும், அவன் கடுமையாக உழைத்தவன். கவனப்பிசகால் எந்தவிதமான தீங்கும் ஏற்பட்டுவடாது பார்த்துக் கொள்வதிலும் அவன் மிகவும் விழிப்புடன் இருப்பான். அசாத்தியமான துணிச்சலும், எதிரிகளின் பலவீனங்களை ஆராய்ந்து அதற்கேற்ப திட்டங்களை வகுக்கும் நுண்ணிய அறிவுமே, குறுகிய காலத்தில் இராணுவப் பிரிவின் தலைவனாக அவனைப் பதவிவகிக்கும் நிலைக்கு உயர்த்தியது.
 
“ஒரு கெரிலாப் போராளியின் வீரம் அவனது எந்திரத் துப்பாக்கியில் இல்லை. அவனது மனதில்தான் இருக்கிறது” என்பது, சீலனின் அனுபவ வாசகம்.
 
அவனது மனவலிமை அபாரமானது. சாவுக்கு அவன் வாழ்க்கை ஒரு சவால்.
 
துப்பாக்கிப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கும் போது முதன்முறை நெஞ்சிலே குண்டு பாய்ந்தது. ரத்தம் பீரியடிக்க விழுந்து கிடாந்த நிலையிலும் கூட…
 
அந்த வீரனின் முகத்தின் புசிரிப்பு மிளிர்ந்ததை இயக்கத் தோழர்கள் என்றும் நினைவு கூர்வர்.
 
மூச்சு விடவும் திராணியற்ருப்போன நிலையிலும் அவன் திணறித் திணறித் சொன்ன வார்த்தைகள்;
 
“இயக்கத்தைக் காட்டிக் கொடுத்திடாதீங்க”
 
பிறகும் பேசுவதற்கு மூச்சு இடந்தந்த போது அவன் சொன்னான்;
 
“இயந்திரத் துப்பாக்கியைக் கொண்டு பொய் பாதுகாப்பான இடத்தில் வையுங்கள்”
 
மரண அவஸ்தையிலும் அந்த மாவீரன், இயக்கம் குறித்து மட்டுமே உதிர்த்த வார்த்தைகள் கண்ணீரோடு மட்டுமல்ல பெருமிதத்தோடும் நினைவுகூறத்தக்கவை. உணமைதான்.
 
சாவுக்குச் சவால் விட்ட அந்த விடுதலை வீரனை இறுதியில் சாவு அணைத்த போது, அவன் இயக்கத்தைக் காட்டிக் கொடுத்திடவும் இல்லை இயந்திரத் துப்பாக்கியைப் பாதுகாப்பான இடத்தில் விட்டுவைக்கவும் தவறவில்லை.
 
சீலன் திருமலையின் வீர மண்ணிலே விளைந்த நல்ல முத்து. சிங்கள இனவெறியாட்சியாளர்களின் நேரடியான ஒடுக்குமுறைக்குள் சிக்குண்டு கிடந்த திருகொனமையின் நடைமுறை அனுபவங்களை அவன் கண் கூடாகக் கண்டவன்.
 
சிறீலங்காவின் திட்ட மிட்ட சிங்கள குடியேற்றங்களும் கடற்படை, விமானப்படையின் அடக்குமுறைகளும் சிங்களக்காடையர்கள், இராணுவம், போலிஸ் ஆகியோரின் அரவணைப்புடன் தமிழ் மக்களைத் துன்புறுத்தும் கொடுமைகளும் திருமலையில் ஏராளம். இந்த ஆக்கிரமிப்பிற்கு இடங்கொடுத்து வந்தால்தான், திருமலை மண்ணையே சிங்களவர்களுக்குப் பறிகொடுக்கும் நிலை வந்தது என்று சீலன் கொதிப்பான்.
 
கல்லூரி நாட்களிலேயே இனவெரிபிடித்து சிங்கள் ஆளும்வர்க்கத்திர்க்க்ர்தினான போறான்ன உணர்வு கண்டவனாகச் சீலன் திகழ்ந்தான்.
 
1978ம் ஆண்டு ஆவணி மாதம் கொண்டுவரப்பட்ட சிறீலங்கா ஐனநாயக சோஷலிசக் குடியரசின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில், ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஐநாதிபதியாகப் பதவியேற்கும் வைபவத்தினைத் தமிழீழ மண்ணில் அமர்க்களமாகக் கொண்டாட அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை அம்பலப்படுத்த, பாடசாலை மாணவனான சீலன் முன்வந்தான். இந்த வைபவத்தினையோட்டித் திருமலை இந்துக் கலூரியில் சிறீலங்காவின் தேசியக் கொடியை ஏற்றிவைக்க ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
 
சீலன் தனக்கேயுரியதான நுட்பமான அறிவைப் பயன்படுத்தி, ‘பொஸ்பரஸ்’ என்னும் இரசாயனத்தை அத்தேசியக்கொடிச் சுருளில் மறைத்து வைத்தான். தேசியக்கொடி ஏற்றப்பட்டபோது அது எரிந்து சாம்பலாகியது.
 
சந்தேகத்தின் பேரில் 18 வயது மாணவனான சீலன் கைது செய்யப்பட்டு, சிங்களக் கூலிப்படையால் சித்திரவதை செய்யப்பட்டான். அந்த வயதிலும் தனக்கு உடந்தையாக இருந்த எவரையும் அவன் காட்டிக் கொடுக்கவில்லை. கொள்கையிலே உறுதிக்கொண்டவர்களைச் சிறைச்சாலைகளும், சித்திரவதைகளும் என்ன செய்துவிடமுடியும்?
 
தனிமனிதரீதியிலான எதிர்ப்புணர்வால் அரச இயந்திரத்தை அழித்து விடமுடியாது என்ற அனுபவத்தையும், இவை சீலனுக்குப் போதித்தன. இந்த அனுபவமே சீலன் தண்ணி ஒரு புரட்சிகர இயக்கத்தில் இணைத்துக்கொள்ள, உந்துசக்தியாக உதவியது.
 
ஆயுதந்தாங்கிய அடக்குமுறையை ஆயுதப் போராட்டத்தின் மூலமே தகர்க்க முடியும் என்ற நம்பிக்கையே சீலனை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலே இணைத்தது ‘ஆயுதப் போராட்டம் மூலம் தமிழீழம்’ என்ற ராஜபாட்டையில் சீலன் கம்பீரமாகவே நடந்திருக்கிறான்.
 
இயக்கத்தில் சேர்வதற்கு முன் விட்டெறிந்து விட்டு வருவதற்கு வளமான வாழ்க்கையோ – கை நிறையக் காசு கிடைக்கும் தொழிலோ சீலனுக்கு இல்லை.
 
ஆனால் இவனையே நம்பி அன்றாடம் சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு வறிய குடும்பம் இருந்தது. வளமான வாழ்க்கையை அல்ல; வரியா குடும்பமொன்றின் எதிர்பார்க்கைகளை நிர்த்தாட்சண்யமாகத் தூக்கி வீசிவிட்டுவரும் பெரும் மனத்திடமும், இலட்சியப்பிடியும் சீலனிடம் இருந்ததன.
 
சாக்குப் படகுகளால் மறைக்கப்பட்ட சிறிய குச்சு வீடு; வேலையோ, நிரந்தரமான வருமானமோ இல்லாத தந்தை வீடுகளில் சமையல் வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்றும் தாய்; இரண்டு அண்ணன்மார்; இரண்டு அக்காமார்; ஒரு தங்கை.
 
சீலன் உணவில்லாமலே வாடிய நாட்கள் ஏராளம்.
சிந்திக்கும் திறன் கொண்ட சீலன் தனது குடும்பம் மட்டுமல்ல, எத்தனையோ குடும்பங்கள் ஏழ்மை நிலையில் வாடுவதைக் கண்டு, நொந்திருக்கிறான்.
 
சீலனின் வாழ்நிலை புரட்சிகரச் சிந்தனைகளின் விளைநிலமானது. மார்க்ஸியச் சிந்தனையில் அவன் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டான். மார்க்ஸிய ஒளியில் தேசிய இனப் பிரச்சினையையை அவன் தெளிவாக விளங்கிக் கொண்டிருந்தான்.
 
உலகெங்கும் நடக்கும் விடுதலைப் போராட்டங்களை ஆர்வத்துடன் அவதானித்து வந்தான். பெண் விடுதலை பற்றிய இவனது அபிப்பிராயங்கள் சுயசிந்தனையின் பாற்பட்டதாகவும் வியக்கத்தக்க வகையில் முற்போக்கானதாகவும் இருந்தன.
 
இத்தகைய அரசியற் பிரக்ஞை கொண்ட சீலன் இராணுவப் பிரிவுத் தலைவநாத் திறனோடு செயற்ப்பட்ட காலம் குறித்து தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் பெருமிதம் கொள்கிறது.
 
குறுகிய காலத்தில் சீலன் சாதித்தவை மகத்தானவை.
 
1981 ஐப்பசி மாதம், பிரிகேடியர் வீரதுங்க சிறீலங்கா அரசால் பதவி உயர்வு பெற்று, இராணுவக் கொமானடராக நியமிக்கப்பட்டபோது, தமிழீழப் போராட்ட வரலாற்றில் முதல் தடவையாக சிறீலங்கா இராணுவக் கூலிப்படைக்கு எதிரான கெரில்லாத் தாக்குதலை வெற்றிகரமாகத் தொடங்கி, இரண்டு வீரர்களைச் சுட்டு விழ்த்திய பெருமை சீலனுக்குரியது.
 
1982 இல் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்காக யாழப்பனத்திர்க்கு ஜே.ஆர் ஜெயவர்த்தனா, விஜயம் செய்வதையொட்டி, காரைநகர் பொன்னாலைப் பாலத்தில் கடற்படை வீரர்களின் ட்ரக் வண்டிகளைச் சிதைக்கும் கெரில்லா நடைவடிக்கையும் சீலனின் தலைமையிலேயே நடந்தது. துரதிர்ஷ்டவசமாக சிறீலங்கா கடற்படைக்கூலிகள் இத்தாக்குதலிலிருந்து தப்பித்துக்கொண்டனராயினும்,இத்தாக்குதல் நடவடிக்கை சிறீலங்கா அரசை நடுக்கமுறச் செய்தது.
 
1982 ஐப்பசி 20ம் திகதி, பாசிஸ வெறியன் ஜே.ஆர் ஜெயவர்த்தனா, மீண்டும் தேர்தலில் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டான்.
 
பொலிஸ் நிலையத்திற்குச் சற்று தள்ளி ஒரு மினிபஸ் நிக்கிறது. மினி பஸ்ஸில் இருந்து இராணுவ உடைதரித்த விடுதலைப் புலிகள், சீலனின் தலைமையில் உப இயந்திரத் துப்பாக்கி (S.M.G), தானியங்கித் துப்பாக்கிகள் சகிதம் மின்வெட்டும் வேகத்தில் பொலிஸ் நிலையத்தினை ஆக்கிரமிக்கின்றனர்.
எதிர்த்தாக்குதல் நடத்த முனைந்த இரண்டு பொலிஸ்காரர்கள் சுடப்பட்டனர். அந்த அதிகாளியின் அமைதியைக் கிழித்துக்கொண்டு துப்பாக்கி வேட்டுக்கள் தொடர்ச்சியாகத் தீர்க்கப்படுகின்றன. சார்ஜ் ரூம் சிதைக்கப்படுகிறது.
 
பயம் அறியாத – சாவறியாத சீலன் முன்னின்று மேற்கொண்ட தாக்குதலில் பொலிஸ் அதிரடிப்படியின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்கானான் வலது காலின் முழங்கால் முட்டிற்குச் சற்று மேலே ஐந்து துப்பாக்கிச் சன்னங்கள் பாய்ந்தன.
 
பொலிஸ் நிலையக் கொம்பவண்டிற்குள் கொண்டுவரப்பட்ட மினிபஸ்ஸிற்குள் ஆயுதங்கள் அனைத்தும் துரிதமாக ஏற்றப்படுகிறன. காலைக் கெந்திக் கெந்தி இழுத்துக் கொண்டு தனது S.M.G யுடன் எதிரியின் துப்பாக்கியையும் இழுத்துக்கொண்டு மினிபஸ்ஸிற்கருகில் வந்து சக போராளிகளின் கைகளில் கொடுத்துவிட்டு, தள்ளாடுகிறான் சீலன், மயக்கமடைகிறான்.
 
இதற்க்கு ஐந்து மாதங்களுக்கு முன்புதான் துப்பாக்கிப் பயிற்சியின்போது நெஞ்சிலே குண்டு பாய்ந்தது, ஆஸ்பத்திரியில் சிகிட்சைபெற்று ஓரளவு உடல் தேறியிருந்த சீலனுக்கு, இது இரண்டாவது காயம்.
 
இந்தத் துப்பாக்கிக் காயம் சீலனை மிகவும் பலவீனப்படுத்தியது. காயம்பட்டுவிட்டால் சீலனை வைத்துப் பராமரிப்பது சிறிய கஷ்டம் தான்.
 
“நோவுது, நோவுது” என்று தொடர்ச்சியாய் முனகிக்கொண்டிருப்பான்.
முதலாவது காயத்தின்போது நோவைத் தணிப்பதற்காக ‘பெதற்றின்’ மருந்து கொடுக்கப்பட்டு, சீலன் அதற்க்குக் கொஞ்சம் பழகிப்போனான். “எனக்குத் தாங்க முடியாது பெதற்றின் தாங்கோ” என்று கெஞ்சும்போது, இந்த விடுதலைப்புலி ஒரு குழந்தையாகும். ஓரிடத்தில் கிடைக்கமாட்டான். புரண்டு புரண்டுகொண்டேயிருப்பான்.
 
ஒரு முறை, காயத்தின் நோவிலிருந்து மீள மன ஆறுதலுக்கு கடவுளை நினைத்துக் கொள் என்று சீலனிடம், வைத்தியசாலியில் அவனைக் கவனித்துக் கொண்ட நண்பன் சொன்னபோது, அவன் தீர்க்கமாக மறுத்து விட்டான்.
 
ஆனால் பின்பொருமுறை, தனது நெருக்கமான அரசியல் நண்பன் உணர்ச்சிச் சுழிப்பு பிரவகித் தோடியிருந்தது.
 
அவன் ஓரளவு குனமாகியிருந்தாலும் கெந்திக் கேந்தித்தன் நடப்பான். ஐந்து மாத இடைவெளியில், நெஞ்சிலும் காலிலுமாக அவன் வாங்கிய துப்பாக்கிக் குண்டுகளின் காயங்களில் இருந்து நலம்பெற்று, அவன் தன்னம்பிக்கையோடுதான் செயற்பட்டான்.
 
நெஞ்சிலே காயம்பட்டு சத்திர சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து ஆஸ்பத்திரியை விட்டு வெளியேறும்போது, ஆஸ்பத்திரியில் நின்ற நாட்களில் அன்பாய் அவனைப் பார்த்துக் கொண்ட நேர்ஸ் அவனிடம் கேட்டாள்:
 
“நீங்கள் குணமானது உங்களின் தன்னம்பிகையினாலா? நண்பர்களினாலா? மருத்துவரினாலா? அல்லது கடவுளின் கிருபையினாலா?”
 
அந்த நேர்ஸ் என்ன பதிலை எதிர்பார்க்கிறாள் என்பது, சீலனுக்குத் தெரியும். விடைபெறுகின்ற நேரத்தில், அவள் எதிர்பார்க்கும் அந்தப் பதிலைச் சீலன் சொல்லிவைக்கலாமே என்று, பக்கத்தில் இருந்த நாண்பர்கள் மனதில் நினைத்துக்கொள்கின்றனர்.
 
அவளுடைய திருப்திக்காகத் தான் ஏற்றுகொள்ளாத ஒரு பதிலை சொல்ல, அவன் தயாராக இல்லை.
 
சிகிச்சை பெற்று ஐந்து மாதம் கூடத் தரிக்காமல் அவன் மீண்டும் தமிழீழத்தின் போராட்டக் களத்தில் இறங்கினான்.
 
1983 வைகாசி மாதம் 18ம் திகதி,
 
சிறீலங்கா அரசு நடாத்தும் உள்ளூராட்சித் தேர்தலுக்கான திகதி ஓட்டுப் பொறுக்கும் அரசியலில் ஊறிப்போன கட்சிகள் தேர்தலில் திளைத்தன. யாழ்.மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியும் ஐக்கிய தேசிய கட்சியும், தமிழ்க் காங்கிரஸ், நவசமசமாஜக் கட்சி ஆகியனவும் தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் இறங்கியிருந்தன.
 
யாழ். உள்ளூராட்சித் தேர்தலைப் பகிஷ்கரிக்கும் பணியில் இயக்கம் தீவிரமாகச் செயற்பட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் சர்ந்தப்பவாத சமரசத் தலைமைகளால் தமிழ் மக்களுக்கு விடிவேற்படாது என்பதை நன்குணர்ந்திருந்த சீலன், அவர்களை மக்களுக்கு இனம் காட்டுவதில் முன்னின்றான். இனவாத அரசின் தேர்தல் மாயையிலிருந்து தமிழீழ மக்கள் விடுபட வேண்டும் என்று, இயக்கம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தபோது, தேர்தல் பகிஸ்கரிப்பு பிரச்சார வேலைகளுக்காக இரவு பகலாக, அரசியல்ரீதியாகவும் இராணுவரீதியாகவும் சீலன் உற்சாகத்துடன் பணியாற்றினான். பாசிஸ இனவெறியன் ஜே.ஆரின் சார்பில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் இயங்கிய மூவர்மீது, சித்திரை 29ம் திகதி இயக்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் சீலன் தலைமையிலேயே மேற்கொள்ளப்பட்டன.
 
வைகாசி 18ம் திகதி, தேர்தல் நிலையங்களின் பாதுகாப்பு பந்தோபஸ்து கருதி சிறீலங்கா அரசு யாழ்.குடாநாடு முழுவதும் ஆயுதப்படைகளைக் குவித்தது. ஒவ்வொரு தேர்தல் வாக்களிப்பு நிலையத்திற்கும் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
 
ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும் ஐந்து ஆயுதம் தாங்கிய பொலிசாரும் ஐந்து ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரும், பாதுகாப்பிற்காக உசார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
 
இதனை விட, ஒரு மணித்தியாலத்திற்கு ஒரு முறை பொலிசாரும் இராணுவத்தினரும் ரோந்துப் பார்த்துக் கொண்டிருந்த வண்ணமாக இருந்தனர்.
 
வைகாசி 18ம் திகதி மாலை 4.15 மணி.
 
கந்தர்மடம் சைவப்பிரகாச மகாவித்தியாலத்தின் வாக்களிப்பு நிலையத்திற்கருகில், மூன்று சைக்கிள்களில் இளைஞர்கள் வந்திருந்திறங்குகிரார்கள். காலைக்கெந்தியவாரு ஒரு சைக்கிளின் பாரிலிருந்து எந்திரத் துப்பாக்கியுடன் இறங்கும் சீலனின் தலைமையில், கட்டளை பிறக்கிறன.
 
பாதைகள் மறிக்கப்பட்டு, வாகனங்கள் திருப்பி அனுப்பபடுகிறன. வீதியைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தபின் இராணுவக் கூலிகளுடன் சீலன் நேருக்கு நேர் நின்று நடத்திய தாக்குதல் சாவைத் துச்சமாக மதித்த ஒருவனின் துணிச்சலுக்கு சாட்சி.
 
இந்தத் தாக்குதல் சம்பவம்பற்றிச் சிங்கள நூலாசிரியர் ஒருவர் விபரிக்கையில், “விடுதலைப் புலிகளோடு பாதுகாப்புப் படையினர் நின்று தாக்குப்பிடிக்ககூடியவர்கள் அல்லர் என்று மக்கள் புலிகளின் இராணுவத் திறமையை மெச்சினர்” என்று குறிப்பிடுகிறார்.
 
கந்தர்மடச் சம்பவம் நடைபெற்று இப்போது ஒன்றரை மாதமாகிவிட்டது.
 
ஜூலை 05ம் திகதி.
 
நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது.
 
கொக்குவில் தாவடியில் ஒரு வீட்டுக்குள் சீலன் இராணுவ உடையில் எந்திரத் துப்பாக்கியுடன் நுழைகிறான். அந்த வீட்டுக்கரனைத் தட்டி எழுப்பி, தாங்கள் குருநகர் இராணுவ முகாமிலிருந்து வந்திருப்பதாகவும், தாவடிச் சந்தியில் தங்கள் ஜீப் பழுதாகி நிற்பதாகவும் வேனைத் தந்துதவுமாறும் கேட்கிறான். அந்த வீட்டுக்காரரும் பவ்வியமாக தனது வேனைக் கொடுக்கிறார்.
 
நள்ளிரவைத் தாண்டி 2.30 மணியளவில், சீலனின் பிற விடுதலைப் போராளிகளும் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிட்சாளையருகில் இந்த வானை நிறுத்திவிட்டு, ஆயுதங்காளோடு தொழிட்சாலைக்குள் நுழைகின்றனர்.
 
துப்பாக்கி முனையில், வாசலில் நின்ற காவலாளிகளையும் நேரப்பதிவாளரையும் கட்டி வைத்துவிட்டு, களஞ்சியப் பொறுப்பாளரின் சாவிகளை எடுத்துக்கொள்கின்றனர். ஐந்தே நிமிடங்களில் நான்கு பெரிய தகர்ப்புக் கருவிகளையும் பிற தேவையான உபகரணங்களையும் எடுத்துக்கொண்டு, தொழிட்சாலையை விட்டு வெளியேறுகின்றனர்.
 
அதிகாலை 4.30 மணியளவில், தாங்கள் பெற்றுக்கொண்ட டெலிக்காவானை மீண்டும் உரியவரிடம் ஒப்படைக்கிறார்கள்.
 
மிகத்திறமையாக சீலன் இயக்கத்துக்கு தேடித்தந்த தகர்ப்புக் கருவிகள், பிற்பட்ட காலத் தாக்குதல் நடவடிக்கைகளின் வெற்றிக்குப் பெருந்துணை புரிந்துள்ளன. ஆனால், இவற்றைத் தேடித்தந்த பின் பத்து நாட்களே சீலன் வாழ்ந்திருந்தான்.
 
1979ம் ஆண்டின் ஆரம்பப் பளுதியில் இயக்கத்தில் சேர்ந்த சீலன், 1981ம் ஆண்டிலிருந்து அரச படைகளால் தேடப்பட்டு வந்தான். இதன் பின், தலைமறைவு கெரில்லா வாழ்க்கையை மேற்கொண்ட சீலனின் புகைப்படங்கள் எதுவுமே அரச படைகளின் கைகளில் சிக்காமையினால் இவன் மக்கள் மத்தியில் வெவ்வேறு பெயர்களில் அரசியல் பணிகளை மேற்கொள்ளவது சாத்தியமா இருந்தது.
 
அரச படையினால் தேடப்பட ஆரம்பித்ததும், தனது வீட்டுக்குப் போவதை பூரணமாக நிறுத்திக்கொண்டு விட்டான். ஆஸ்பத்திரியில் நெஞ்சில் துப்பாகிக் காயத்திற்காக சிகிட்சை பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில்தான், அவனது தந்தை இறந்த செய்தி சில நாட்கள் கழித்தி அவனுக்குத் தெரிய வந்தது. தந்தையும் இல்லாத நிலையில், தன் தாய் பொறுப்பு மிகுந்த அந்தக் குடும்பத்தைக் காப்பாற்ற கஷ்டமுற்றிருப்பாள் என்று, சீலன் நினைக்காமல் இருந்திருப்பான் எனாச் சொல்ல முடியாது. தனது குடும்பப் பிரச்சினைகள் குறித்து நெருங்கிய நண்பர்காளிடம் மிக அபூர்வமாகவே கதைத்திருக்கிறான்.
 
சீலன் லூக்காசிற்கும் செபமாலைக்கும் மட்டுமே தான் சொந்தமானவன் அல்லன் என்று உணர்ந்திருந்தான்.
 
seelan-1.jpgசீலன் இவன்தானா என்று அடையாளம் காணத் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாண ஆஸ்பத்திரியின் சவச்சாலைக்குக் கொண்டுவரப்பட்ட சீலனின் தாய், ஆடாமல் அசையாமல் நின்றால், நெற்றிப்போட்டிலே பாய்ந்த துப்பாக்கிச் சன்னத்தால் தலை சிதைந்த நிலையிலே, தான் பெற்ற அழகுச்செல்வன் கிடத்தப்பட்டிருப்பதை அவள் கண்ணீர் திரையிட உற்று நோக்குகிறாள், நான்கு வருடங்களுக்கு முன் மெல்லியவனாக வீட்டை விட்டு வெளியேறிய மகன், வாட்டசாட்டமாக வளர்ச்சி கொண்டவனாக – அடையாளமே கண்டுபிடிக்க முடியாத அளவு மாறிப்போய் கிடத்தப்பட்டிருக்கிறான். அந்த மச்சம், உதடுகள், சிதைவுக்கூடாகவும் முழுமை காட்ட முயலும் முகம், பெற்றவள் இணங்காண்கிறாள்.
 
அது அவளுடைய செல்வந்தான்.
அரைமணி நேரமாக அவள் அவனைப் பார்த்துக்கொண்டிருக்கிறாள். துயரன்தொந்த அந்தத் தாயின் பக்கத்திலே சீலனின் அண்ணன் அந்த உடலை வெறித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
 
அமைதியை இராணுவப் படையில் ஒருவன் குலைக்கிறான்.
 
“இது ஒண்ட மகனா?” கொச்சைத் தமிழில் கேட்கிறான்.
 
கண்ணீர் வழிய தாய் தலையசைக்கிறாள். தன் மகனின் உடலைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு அந்தத் தாய் அங்கு நின்ற மேஜரிடம் வேண்டுகிறாள்.
 
அவனோ வெறுப்பை உமிழ்கிறான்.
 
அந்தச் ‘செல்வமகனின்’ உடல் அந்தத் தாய்க்குச் சொந்தம் – இது தர்மம்.
 
அந்த ‘விடுதலை வீரனின்’ உடல் அரசுக்கு சொந்தம் – இது சட்டம்.
 
தான் பெற்ற மகனைக் கெளரவமாக அடக்கம் செய்ய நினைத்த அந்த ஏழைத் தாயின் உரிமையைத், ‘தார்மீக’ அரசின் பயங்கரவாதம் நெரித்தது.
 
சீலன் உயிரோடிருந்ததைவிட அவன் மரணித்தபோதுதான் அரசுக்குப் பெரும் சவாலானான். புரட்சிவாதிகளின் வாழ்க்கை சாவுக்குப் பிறகுதான் ஆரம்பமாகிறது.
 
அவனுடைய சடலம் கிடத்தப்பட்டிருந்த வைத்தியசாலை பலமான இராணுவக் காவலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தது.
 
அதற்குப்பின் அந்த தாய்க்கு அந்த வீரமகனின் சடலத்தை பார்க்க முடியவில்லை.
 
லட்சோப லட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயங்களிலே அணையாத புரட்சித் தீயாக ஒழி வீசிக்கொண்டிருக்கும் சீலனின் சடலம், யாருக்கும் தெரியாமல் அவசரகாலச் சட்டத்தின் கிழ் இராணுவ மிருகங்கள் சூழ்ந்து நிற்க எரிக்கப்பட்டது.
 
விடுதலைக்காகவே வாழ்ந்த அந்த வீரமகனை தலைவர் பிரபாகரன் கண்ணீருடன் நினைவு கூர்கிறார்.
 
“எவ்வளவு அற்புதமானவன் என் சீலன் !”
 
“ஆசையாகவல்லவா நான் அவனுக்கு இதயச்சந்திரன் என்று பெயர் வைத்தேன்….!”
 
“இவ்வளவு சீக்கிரமா என்னை விட்டுப் போனான்?”
 
“அவனது மரணச் செய்தி பொய்யாகப் போய்விடாதா என்று என் மனம் நடுங்கியதே…”
 
“எவ்வளவு கஷ்டங்களில் உயிருக்குயிராய் துணை நின்றான்…”
 
“காடுகளில் அவனோடு திரிந்த காலங்கள் தான் எத்தனை மகத்தானவை…”
 
“லட்சியங்களோடு காத்திருந்தானே…”
 
“ஏன் தீடிரென இப்படி இல்லாமல் போனான்?”
 
“மீண்டும்…. மீண்டும்…..
நினைவிற் சுழல்கிறது – அது.
அந்த அழகு முகம்.
அந்த மழலைச் சிரிப்பு.
அந்தப் பாட்டு.
அன்று –
இரவு சூழ்ந்துவிட்டது.
சலசலக்கும் காட்டு மரங்கள்.
சருகுகளின் ஓசை,
சில்வண்டுகளின் ரீங்காரம்.
காற்றின் வருடலில்,
கனலும் தீக்கங்குகள்,
குழுமியிருக்கும் விடுதலை இளவல்கள்.
அவர்களிடையே பல்சுவை நிகழ்ச்சி.
அது சீலனின் முறை.
அவனுக்கு பாட்டு.
அதோ சீலன்!
எப்போதும்போல் கட்டமிட்ட சட்டை;
கணுக்காலுக்கு மேல் மடித்துவிட்ட ஜீன்ஸ்.
அவனிடம் கூச்சம்.
சிரித்துச் சமாளிக்கின்றான்.
நண்பர்களின் தூண்டுதல்.
பாட்டின் ஆரம்பம்.
ஆரவாரமான வரவேற்பு.
உற்சாகமடைகிறான்.
கைகளை அகலவிரித்து கம்பீரமாகப் பாடுகிறான்.”
 
“அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும். இதோ இந்த அலைகள் போல…….”
 
– நெருப்பாற்று நீச்சலின் பத்தாண்டு நூலிலிருந்து

வீர வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

110186252_3038321996235909_4727037142919239338_o.jpg?_nc_cat=103&_nc_sid=8bfeb9&_nc_ohc=DNZd5VHHNWwAX_OP_Ex&_nc_ht=scontent-lht6-1.xx&oh=a7df005c0e89aee64aa03837788d4070&oe=5F34D303

இவன் சிந்திய குருதியின் பெயர் சொல்லி…

சாள்ஸ் அன்ரனி தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த உறுப்பினர்களுள் ஒருவர். தலைசிறந்த கொரில்லா வீரன். திருமலையிற் பிறந்த இந்தத் தியாகச்செம்மல் சிங்கள இனவெறி ஆட்சியாளர்களின் கொடுமைகளையும் ஒடுக்குமுறைகளையும் தன் சிறுவயதிலிருந்தே கண்டுகொண்டவன். அதற்கெதிராய்க் கிளர்ந்தான்.
சிங்களத்தின் திட்டமிட்ட குடியேற்றங்களாலும் கடற்படை, விமானப்படை, இராணுவம், பொலிஸ், காடையர்குழு எனப் பல்வேறு பெயர்களிற் சிங்களப் பேரினவாதிகளால் திருமலை மண் சூறையாடப்பட்டுக் கபளீகரம் செய்யப்பட்டதும் அல்லாமல் அங்கு வாழ்ந்த மக்கள் தமது பூர்வீக நிலங்களிலேயே அகதிகளாக்கப்பட்டதும் கொல்லப்பட்டதும் வணக்க ஸ்தலங்கள் தாக்கப்பட்டதும் சாள்ஸ் அன்ரனியின் மனத்தில் ஆறாத வடுவை ஏற்படுத்தின. இந்த வடு அவனுக்குச் சிங்கள இனவெறிக்கு எதிராகப் போராடும் உந்துசத்தியைக் கொடுத்தது.
தனது பள்ளி நாட்களிலேயே சிங்கள இனவெறிக்கு எதிரான போராட்டத்தினை ஆரம்பித்தான். எவருடைய உதவியுமின்றித் தனித்தே செயற்பட்டு வந்தான்.
1972ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டுவரப்பட்ட சிறீலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் யாப்பின் அடிப்படையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா பதவி ஏற்கும் விழாவைச் சிங்களம், தமிழீழம் எங்கும் அமர்க்களமாகக் கொண்டாட முடிவு செய்தது. அந்த வைபவத்தினையொட்டித் திருமலை இந்துக் கல்லூரியிற் சிறீலங்காவின் தேசியக் கொடியேற்றல் நிகழ்வும் வேறுசில நிகழ்வுகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வேளையில், தனக்கே உரிய திறமையைப் பயன்படுத்தி ‘பொஸ்பரஸ்’ என்னும் இரசாயனப் பொருளை அத்தேசியக் கொடியினுள் மறைத்து வைத்தான். தேசியக்கொடி ஏற்றப்படும்போது ‘பொஸ்பரசின்’ செயற்பாட்டால் கொடி எரிந்து சாம்பலாகியது.
சாள்ஸ் அன்ரனி சந்தேகத்தின் பேரிற் சிங்களப் படையினராற் கைதுசெய்யப்பட்டுச் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டான். விடுதலையை உயிராக நேசிக்கும் எந்த வீரனுக்கும் சித்திரவதைகளும் சிறைக்கூடங்களும் என்னதான் செய்துவிட முடியும்? தனது கொள்கையிலேயே உறுதியாக இருந்தவன் சாள்ஸ் அன்ரனி. தனக்கு உதவிய எவரையும் அவன் காட்டிக்கொடுக்கவில்லை.
தனது தனிமனித செயற்பாடானது சிங்கள அரச அடக்குமுறை இயந்திரத்தை எதிர்ப்பதற்குப் போதுமானதாக இல்லையென்பதை உணர்ந்த அவன் புரட்சிகர இயக்கத்தில் இணைந்து கொண்டான்.
அவன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணையும் போது, வளமான வாழ்க்கையோ வருமானமோ எதுவுமற்ற அவனின் குடும்பத்தின் எதிர்பார்ப்புக்களைத் தூக்கிப்போட்டுவிட்டே இணைந்தான். தலைவர் மீது அசையாத நம்பிக்கையும் பற்றும் கொண்டிருந்தவன், தலைவரின் வழிநடத்தலில் தமிழீழ விடுதலை வெற்றிகொள்ளப்படும் என்பதை உணர்ந்து அன்றைய நாட்களில் தலைவருடன் சேர்ந்து நடைபோட்டான்.
சாள்ஸ் அன்ரனி தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணையும் போது சில உறுப்பினர்களையே இயக்கம் கொண்டிருந்தது. தலைவர் அவர்களிடம் நேரடியாக ஆயுதப் பயிற்சியைப் பெற்ற சாள்ஸ் அன்ரனி, அன்றிலிருந்து தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு மிகவும் நம்பிக்கையாகவும் விசுவாசமாகவும் திகழ்ந்தான். ஒரு கொரில்லா வீரனுக்குரிய ஒழுக்கம்இ கட்டுப்பாடு, சுயநம்பிக்கை, இலட்சியப்பற்று என்பவற்றைப் பேணுவதில் அவன் காட்டிய ஆர்வம் அசாத்தியமானது. அந்த வகையில், தலைவர் அவர்களுக்கும் பெரும் நம்பிக்கைக்குரியவனாக விளங்கினான்.
சாள்ஸ் அன்ரனியின் போர் நுணுக்கம், ஆற்றல் என்பன ஒரு சிறந்த கொரில்லாத் தலைவனாக அவனை மாற்றியது. குறுகியகாலப் போர் வாழ்வில் அவன் சாதித்தவை ஏராளம்.
1981ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் புலிகளை இல்லாமற் செய்வதற்குமாகச் சிறீலங்கா அரசு பிரிகேடியர் வீரதுங்கவை நியமித்து, பதவியுயர்வு வழங்கி யாழ்நகர் அனுப்பி வைத்தது. பிரிகேடியர் வீரதுங்கா யாழ்ப்பாணம் வந்து தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் முன்பே தளபதி சாள்ஸ் அன்ரனி தலைமையிற் புலிகள் களத்திற் குதித்தனர். அக்டோபர் 15ஆம் நாள் யாழ். கஸ்தூரியார் வீதியில் வைத்து இரண்டு சிறீலங்கா இராணுவத்தினரைப் புலிகள் சுட்டுக் கொன்றதுடன், அவர்களின் போர்க்கருவிகளையும் கைப்பற்றினர். சிறீலங்கா இராணுவத்திற்கு எதிரான புலிகளின் முதலாவது தாக்குதல் என்ற வரலாறு அதைக் குறிப்பெடுத்துக்கொண்டது. அதைத் தலைமையேற்று நடாத்தியவன் என்ற வரலாற்றுப் புகழை எங்கள் முன்னோடி சாள்ஸ் அன்ரனி பெற்றுக்கொண்டான்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதற் பிரிவு 1982 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட போது அதன் தளபதியாக சாள்ஸ் அன்ரனி தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டான்.
1982இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இரண்டாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலிற் போட்டியிடுவதற்குத் தேர்தற் பிரச்சாரத்திற்காக யாழ் வந்திருந்த வேளை, புலிகள் ஓர் எதிர்ப்பைக் கொடுக்க எண்ணினர். காரைநகர்க் கடற்படைத் தளத்திலிருந்து ரோந்து சென்ற கடற்படை வாகனத் தொடர்மீது பொன்னாலைப் பாலத்தில் வைத்துப் புலிகள் தாக்குதல் நடத்தினர். துரதிஸ்டவசமாக அந்தத் தாக்குதலிலிருந்து கடற்படையினர் உயிர் தப்பிக்கொண்டபோதும், அன்றைய அரசியல் இராணுவச் சூழ்நிலையில் இத்தாக்குதலானது பாரிய தாக்கத்தை உண்டுபண்ணியமை குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் அக்டோபர் 27ஆம் திகதி, தளபதி சாள்ஸ் அன்ரனி தலைமையிற் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தினுள் உட்புகுந்த அணியினர் நடத்திய அதிரடித் தாக்குதலிற் பொலிஸார் பலர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமுமடைந்தனர். 33இற்கு மேற்பட்ட போர்க்கருவிகளுடன், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன. அன்றைய காலகட்டத்தில் அந்த ஆயுதங்கள் தமிழரின் விடுதலைப் போரை அடுத்த கட்டத்திற்கு இட்டுச்செல்வதைத் தீர்மானிக்கும் பெறுமானம் உள்ளவையாக இருந்தன. இத்தாக்குதலின் போது தளபதி சாள்ஸ் அன்ரனி காலிற் காயமடைய நேர்ந்தது. சாவகச்சேரிப் பொலிஸ் நிலையம் மீதான தாக்குதலானது அதுவரை காலமும் உளவுத்துறை (CID) அழிப்பு, ரோந்துப்படை அழிப்பு என இருந்த கரந்தடி இயக்கத்தினது இராணுவ வளர்ச்சிப் போக்கின் அடுத்த கட்டத்தைப் பறைசாற்றுவதாக அமைந்தது.
இத்தாக்குதல்களாற் போராட்டத்தின் ஆரம்ப நாட்களிற் பெறப்பட்ட இவ்வாயுத பலமானது, அன்றைய நாட்களில் விலை மதிப்பற்றதாகவும் போராட்ட வளர்ச்சிக்கு உயிரூட்டுவதாகவும் இருந்தது.
பின்னர், கந்தர் மடத்தில் இராணுவத்தினர் மீதான தாக்குதல், தேசத்துரோகிகள் அழிப்பு, காங்கேசன்துறைச் சீமெந்துத் தொழிற்சாலையில் வெடிபொருட்கள் மீட்புத் தாக்குதல் என்று அவனது நடவடிக்கைகள் தொடர்ந்தன.
தளபதி சாள்ஸ் அன்ரனி தனது போராட்ட வாழ்வில் மூன்று தடவைகள் விழுப்புண் அடைந்து உயிராபத்தினை எதிர்நோக்கினான். 1982ஆம் ஆண்டு மறைவிடம் ஒன்றில் பயிற்சியின் போது தவறுதலாகத் துப்பாக்கி வெடித்ததில் நெஞ்சில் ஏற்பட்ட காயம் அவனுக்குப் பெரும் பாதிப்பையேற்படுத்தியது. பேச முடியாமல் அவனது மூச்சுத் திணறியது. பேசுவதற்கு அவனது உடல்நிலை இடங்கொடுத்த போதெல்லாம் விக்கித்து விக்கித்து அவன் உச்சரித்த வார்த்தைகள் “ஆயுதத்தை இடம் மாற்றுங்கோ” “இயக்கத்தைக் காட்டிக்கொடுத்திடாதையுங்கோ” மரண அவஸ்தை நேரத்திலும் இயக்கம் குறித்து மட்டுமே உதிர்ந்த வார்த்தைகள் எமது இனத்தின் விடுதலையில் அவன் கொண்டிருந்த பற்றுறுதியை வெளிப்படுத்தின. அது எமது இனத்தின் வீரமரபிற்குத் தலைவர் இட்ட அத்திவாரத்தை வலுப்படுத்தி மக்களுக்கும் போராளிகளுக்கும் முன்மாதிரிகளாயின.
சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுச் சென்ற போது காலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல், எதிரியிடமிருந்து கைப்பற்றிய ஆயுதத்தை வாகனத்தில் ஏற்றிவிட்டு அவ்விடத்திலேயே மயங்கி விட்டார். சற்றுநேரம் கழித்து அரைமயக்க நிலையிலும், “ஆயுதம் எதையும் விடாமல் ஏற்றுங்கள்” இதனையே அவர் வாய் உச்சரித்ததைக் கூடச்சென்ற தோழர்கள் நினைவு கூறுகின்றனர்.
மூன்றாவதாக அவர் சந்தித்த உயிராபத்து, அவரின் போராட்ட வாழ்வின் இறுதி அத்தியாயம் ஆகியது. 15.07.1983 அன்று அவர்கள் இருந்த மறைவிடம் துரோகி ஒருவனாற் காட்டிக்கொடுக்கப்பட்டது. அவ்விடம் நோக்கி முன்னேறிய சிங்களப்படைகளுக்கும் முகாமிலிருந்து வெளியேறிய போராளிகளுக்குமிடையே ஏற்பட்ட நேரடிச் சண்டையின் போது தளபதி சாள்ஸ் அன்ரனி காலிற் காயமடைய நேரிடுகின்றது. கூடநின்ற தோழர்கள் அவரைக் காப்பாற்ற முயற்சி எடுத்த போதும் அங்கிருந்த சூழ்நிலை சாத்தியப்படாததால் எதிரிப்படைகள் மிகவும் நெருங்கிக் கொண்டிருந்தன. ஆபத்தான சூழ்நிலையை உணர்ந்துகொண்ட சாள்ஸ் அன்ரனி விரைந்து முடிவெடுக்கிறான். தன்னைச் சுட்டுவிட்டுத் தனது ஆயுதத்தை எடுத்துக் கொண்டு தப்பிச் செல்லுமாறு கட்டளை இடுகிறான். தோழர்கள் தடுமாறுகின்றனர், தயங்குகின்றனர். மீண்டும் கண்டிப்பான குரலில் கட்டளை பிறந்தது. தோழனின் கையில் இருந்த துப்பாக்கி எங்கள் உயரிய தளபதியின் நெற்றியில் ஒரு ரவையை உமிழ்ந்து ஓய்கின்றது. தமிழீழ மண்ணின் விடுதலைக்கு வித்தாகிய பெருமையுடன் வீரத்தளபதியின் உடல் மண்ணை முத்தமிடுகின்றது. அன்று எங்கள் முதல் தளபதியின் நெற்றியிலிருந்து வடிந்த குருதி பெரும் வீரப்பிரவாகத்தின் ஊற்றாய் மீசாலை மண்ணை நனைக்கின்றது.
தோழர்கள் விரைவாகப் பின்வாங்குகின்றனர். சற்றுநேரத்தில் ஆனந்தனும் சூடுபட தன்தளபதியின் முடிவினையே தானும் வரித்துக்கொண்டான். எஞ்சிய மற்றத் தோழர்கள் துப்பாக்கிகளுடனும் காயங்களுடனும் தளம் திரும்பினர்.
தளபதி சாள்ஸ் அன்ரனியின் உடலைக் கைப்பற்றிய சிங்களப் படைக்கு அவரது உயிரற்ற உடல்கூட அச்சுறுத்தலாக அமைந்தது. அவரது தாயார் பல தடவை கேட்டும் உடல் ஒப்படைக்கப்படவில்லை. உடல் வைக்கப்பட்டிருந்த யாழ் மருத்துவமனை பெருந்தொகை இராணுவத்தினராற் காவலிடப்பட்டிருந்தது. இறுதியில் ஊர்காவற்றுறைக்குச் செல்லும் பிரதான வீதியில் அல்லைப்பிட்டியை அண்டிய கடற்கரை ஓரத்திற் சிங்களப் ‘பேய்கள்’ சுற்றி நிற்க எங்கள் தளபதியின் உடல் தீயிற் சங்கமமாகித் தமிழீழ மண்ணுடன் கலந்தது. “விடுதலைப்புலிகளின் தாக்குதல் தளபதியை அழித்துவிட்டோம்” எனத் திமிருடன் நிமிர்ந்த சிங்களப் படைக்கு, தளபதியை தன் தோழனை இழந்த எங்கள் தலைவர் சாள்ஸ் அன்ரனியின் உடையணிந்தே பதிலடி கொடுக்கப் புறப்பட்டார். ஒருவார இடைவெளியில் திருநெல்வேலியிற் புயல் வீசியது. போராட்ட வரலாற்றில் அது ஒரு பெரும் புயல்தான். தன் தளபதியைப் பறித்த எதிரிக்குத் தலைவர் கொடுத்த பதில் அது. அதுவே வரலாற்றுத் திருப்புமுனையாக அமைந்த 23.07.1983ஆம் நாள் நடந்த திருநெல்வேலித் தாக்குதல்.
தளபதி சாள்ஸ் அன்ரனி உன்னதமான போராளியாவார். எமது இனத்தின் விடுதலைக்காக, இயக்கத்தையும் ஆயுதத்தையும் உயிரிலும் மேலாக நேசித்தான். இரகசியத்தைக் காக்கவும்இ போராட்டத்தின் ஆயுதத்தைக் காக்கவும், தமிழனின் கௌரவத்தைக் காக்கவும் உயிரைவிட்டான். இந்த உன்னத வீரனின் தியாகமும் அர்பணிப்பும் விடுதலைப் போராட்டத்திற் புலிவீரர் ஒவ்வொருவருக்கும் வழிகாட்டி நிற்கின்றன.
அவன் கொண்ட இலட்சிய உறுதியின் சாட்சியாய், அவனது தோழனின் துப்பாக்கி ரவையிலிருந்து சாவை அணைத்துக்கொண்ட அந்த நொடிப்பொழுதில் அவனின் நெற்றியிலிருந்து பெருகிய குருதியின் வீரப்பிரவாகமாய் அவன் பெயர் சொல்லித் தமிழனின் விடுதலையை வென்றெடுக்க, வீரத்தலைவன் வழியில் எம்படையணி நகர்கிறது.
நினைவுப்பகிர்வு: அருணா.
நன்றி: நெருப்பாற்று நீச்சலின் பத்தாண்டுகள் நூல்.

வீர வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

திருமலை தந்த மாவீரன் சீலனுக்கு வீரவணக்கம்.
  தலைவரின் மகனுக்கு இவரின் பெயர் சூட்டப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

வீரவணக்கங்கள்...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.