Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நம்பிக்கைகளும் நாங்களும் !

Featured Replies

17 hours ago, ரதி said:

மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காத கடவுள் பக்தியுள்ள தம்பதியினர்...அவர்கள் ஒவ்வொரு வருடமும் அநேகமாய் எல்லா விரதங்களும் முறையாக பிடிப்பார்கள்...அவர்களுக்கு பிள்ளை இல்லை...இதே சிலர் கோயிலுக்கு வந்து உடனேயே அநேகமாய் அவர்கள் கேட்டது கிடைத்து விடும்....ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு அக்கிரமம் செய்யக் கூடியவர்களாய் இருப்பார்கள்...இந்த சிலர் அந்த தம்பதியினரை பார்த்து சொல்வார்கள் இவர்களது மனம் சரியில்லை அது தான் பிள்ளை இல்லாமல் இருக்கினம் என்று இல்லையா?
இதே மருத்துவ  ரீதியாய் பார்த்தால் அந்த தம்பதியினரில் ஒருவருக்கு ஏதாவது குறைபாடு இருக்க கூடும்.. மருத்துவ ரீதியாய் தீர்க்க கூடியதாய் இருக்கும் . சில நேரம் இல்லாமலும் இருக்கும் 
எங்கடையாக்களிட்ட கேட்டால் முற் பிறப்பில்செய்த பாவம் அல்லது விதி என்டுவினம்...கடவுளால் அதை  மாற்ற முடியா விட்டால் பிறகு எதற்கு கடவுள் என்று ஒருவர் தேவை?
வைத்தியர் ஏதாவது சிகிச்சை குழந்தை பிறந்திட்டால் கடவுள் தான் வைத்தியர் வடிவத்தில் வந்தவர் என்று சொல்லும் நாங்கள் அதே குழந்தை பிறக்கா விட்டால் அவர்கள் பாவம் செய்தவர்கள் ,முற்பிறப்பு வினை என்று சொல்வது எந்த விதத்தில் சரி?

சிறந்த தர்ககரீதியான  கருத்து ரதி. பச்சை முடிந்து விட்டது. 

  • Replies 58
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 31/7/2020 at 12:39, தோழி said:

சரி, கியூபா ஒரு உதாரணத்திற்கு எடுக்கப்பட்டது. எப்படி பார்த்தாலும் உலக நாடுகள் பலவற்றிலும் மதம், மொழி சார்ந்த அரசுகளைப்  பார்க்கினும் மதத்தை முன் வைத்து நடாத்தப்படும் ஆட்சிகள்  வெறி பிடித்தவை. இந்நாடுகளில்   சாதாரண மக்களின்  வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டு மனித   உரிமைகள் மறுக்கப்பட்டே வருவது கண்கூடு.

ஒருவேளை கண்கெட்டபின் சூரிய நமஸ்காரமாக இருக்குமோ?

Fidel Castro und Papst Benedikt XVI. | DOMRADIO.DE

வதிக்கான் என்ற நாட்டு தலைவராக உள்ள போப்பை அவரது கியூப விஜயத்தின் போது கியூப நாட்டு அரசுத்தலைவர்  காஸ்ரோ மரியாதை நிமித்தம்வரவேற்பதென்பது உலக ராஜதந்திர நடைமுறை. 

large.987BA428-A547-44D9-9E46-B9BE51F5F01D.jpeg.f73d7bbfcae666d0fa6eafafaae3229a.jpeg

Fidel Castro, the communist leader who received three Fidel Castro died November 25, 2016. Pictured meeting St. Pope John Paul II, Pope Francis and emeritus Pope Benedict XVI, during their respective visits to Cuba. (Credits: CNS photo/Alex Castro, AIN handout via Reuters, CNS photo/Arturo Mari, EPA, and IlSismografo.)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 hours ago, ரதி said:

மற்றவர்களுக்கு தீங்கு விளைவிக்காத கடவுள் பக்தியுள்ள தம்பதியினர்...அவர்கள் ஒவ்வொரு வருடமும் அநேகமாய் எல்லா விரதங்களும் முறையாக பிடிப்பார்கள்...அவர்களுக்கு பிள்ளை இல்லை...இதே சிலர் கோயிலுக்கு வந்து உடனேயே அநேகமாய் அவர்கள் கேட்டது கிடைத்து விடும்....ஆனால் அவர்கள் மற்றவர்களுக்கு அக்கிரமம் செய்யக் கூடியவர்களாய் இருப்பார்கள்...இந்த சிலர் அந்த தம்பதியினரை பார்த்து சொல்வார்கள் இவர்களது மனம் சரியில்லை அது தான் பிள்ளை இல்லாமல் இருக்கினம் என்று இல்லையா?
இதே மருத்துவ  ரீதியாய் பார்த்தால் அந்த தம்பதியினரில் ஒருவருக்கு ஏதாவது குறைபாடு இருக்க கூடும்.. மருத்துவ ரீதியாய் தீர்க்க கூடியதாய் இருக்கும் . சில நேரம் இல்லாமலும் இருக்கும் 
எங்கடையாக்களிட்ட கேட்டால் முற் பிறப்பில்செய்த பாவம் அல்லது விதி என்டுவினம்...கடவுளால் அதை  மாற்ற முடியா விட்டால் பிறகு எதற்கு கடவுள் என்று ஒருவர் தேவை?
வைத்தியர் ஏதாவது சிகிச்சை குழந்தை பிறந்திட்டால் கடவுள் தான் வைத்தியர் வடிவத்தில் வந்தவர் என்று சொல்லும் நாங்கள் அதே குழந்தை பிறக்கா விட்டால் அவர்கள் பாவம் செய்தவர்கள் ,முற்பிறப்பு வினை என்று சொல்வது எந்த விதத்தில் சரி?

பிறர் மனம் நோக பேசுவதை தவிர்க்க வேண்டும்.அது மனித்தன்மை அற்ற செயல். அப்படி பேசுவதை எந்த மதங்களும் நியாயப்படுத்தவில்லை.
படைத்தவன் படியளப்பான் என்பதும் படு முட்டாள்த்தனம்.முயற்சி திருவினையாக்கும்.

  • தொடங்கியவர்
6 hours ago, குமாரசாமி said:

ஒருவேளை கண்கெட்டபின் சூரிய நமஸ்காரமாக இருக்குமோ?

Fidel Castro und Papst Benedikt XVI. | DOMRADIO.DE

6 hours ago, குமாரசாமி said:

ஒருவேளை கண்கெட்டபின் சூரிய நமஸ்காரமாக இருக்குமோ?

Fidel Castro und Papst Benedikt XVI. | DOMRADIO.DE

திரு குமாரசாமி அவர்களுக்கு ,

// வதிக்கான் என்ற நாட்டு தலைவராக உள்ள போப்பை அவரது கியூப விஜயத்தின் போது கியூப நாட்டு அரசுத்தலைவர்  காஸ்ரோ மரியாதை நிமித்தம்வரவேற்பதென்பது உலக ராஜதந்திர நடைமுறை//. - நன்றி Tulpen 

சில ராஜதந்திரோபாயங்களை இப்படியான கருத்துக்களுக்கு பாவிப்பது குழந்தைத்தனமானது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
52 minutes ago, தோழி said:

ராஜ தந்திரோபாயங்கள் வாலிபவயதில் வாராமல் வயது முதிர்ந்த பின் வருவதும் ஒரு வித ஞானோதயம் தான்.

  • தொடங்கியவர்
2 hours ago, குமாரசாமி said:

ராஜ தந்திரோபாயங்கள் வாலிபவயதில் வாராமல் வயது முதிர்ந்த பின் வருவதும் ஒரு வித ஞானோதயம் தான்.

இது கத்தோலிக்க மத குருமாருக்கும் இருப்பதும் வேடிக்கையானதே.  கத்தோலிக்க மதத்தலைவர்களின் சமூக செயற்பாடுகள் அடக்கி வாசிக்கப்படுவதும் அரசியலே!

பெண்களும் குழந்தைகளும் இவர்களால்  உள, உடல் ரீதியில் பாதிக்கப்பட்ட விடயங்களும் காலம் காலமாக நடந்து தான் வருகிறது. நல்லவர்களும் இல்லாமல் இல்லை, இருந்த போதிலும் மதத்தின் பெயரால் சமூகங்கள் நாசமாக்கப்படுவது ஆரோக்கியமானதல்லவே ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தோழி said:

இது கத்தோலிக்க மத குருமாருக்கும் இருப்பதும் வேடிக்கையானதே.  கத்தோலிக்க மதத்தலைவர்களின் சமூக செயற்பாடுகள் அடக்கி வாசிக்கப்படுவதும் அரசியலே!

பெண்களும் குழந்தைகளும் இவர்களால்  உள, உடல் ரீதியில் பாதிக்கப்பட்ட விடயங்களும் காலம் காலமாக நடந்து தான் வருகிறது. நல்லவர்களும் இல்லாமல் இல்லை, இருந்த போதிலும் மதத்தின் பெயரால் சமூகங்கள் நாசமாக்கப்படுவது ஆரோக்கியமானதல்லவே ?

மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்கள் அது அவர்களின் இயலாத தன்மையையே எடுத்துக்காட்டுகின்றது.
நிற்க
இந்த உலகில் நடக்கும்  கலவரங்களும் அடக்கு முறைகளும் மதம் எனும் கோட்பாட்டை மட்டும் நடத்தபடவில்லை. இனம்,நிறம்,நாடு,அரசியல் கொள்கை,முதலாளித்துவம்,சமதர்மம் என பல்வேறு  தரப்பட்ட கொள்கைகளை முன் வைத்தே நடத்தப்படுகின்றது.இலங்கையை பொறுத்தவரைக்கும் தமிழர்களும் சிங்களவர்களும் மத ரீதியில்  கொஞ்சம் ஒன்றுபட்டாலும் மொழி வெறியே அங்கு தலை தூக்கி நிற்கின்றது.தமிழர்களிலும் கிறிஸ்தவர்கள் இருக்கின்றார்கள்.சிங்களவர்களிலும் கிறிஸ்தவர்கள் இருக்கின்றார்கள்.கலவரம் வரும் போது மதத்தை அவர்கள் எடுக்கவில்லை மாறாக சிங்களவன் தமிழன்  என்ற துவேசமே முன்னுக்கு நின்றது.

கிந்தியாவை எதற்குமே உதாரணத்திற்கு எடுக்கமுடியாது.அங்கே மதவாதத்தையும் இனவாதத்தையும் கேளிக்கைகளையும் மட்டுமே வைத்து அரசியல் செய்யும் நாடு.

முன்னேறிய மேற்குலகில்  பாடசாலைகளில் மதம் சம்பந்தப்பட்ட பாட நெறிகளும் உண்டு.ஆனால் அவை வற்புறுத்தப்படுவதில்லை. அதே போல் அரசியலிலும் மதம் முன்னிறுத்தப்படுவதில்லை.அங்கே மக்கள் நலனும் பொது நலனுமே அரசியலாக இருக்கின்றது.

ஒரே மதத்திற்குள் இருப்பவர்களே தங்களுக்குள் தாங்கள் அடிபட்டுக்கொண்டிருகின்றார்கள்.
அதாவது இந்துக்கள் என்றால் சாதிச்சண்டை,வேலிச்சண்டை,ஊர்ச்சண்டை, மொழிச்சண்டை. இங்கே மத ஒற்றுமையும்  இல்லை மத துவேசமும்  எடுபடவில்லை. அதே போல் அமெரிக்காவில் அன்றும் இன்றும் மொழி,மதம் ,ஒரே நாடு என்பதையும் மீறி  நிற பிரச்சனை முக்கியமாக இருக்கின்றது. இங்கேயும் மத சம்பந்தப்பட்ட பிரச்சனை வரவில்லை.

பிழைகளும் தவறுகளும் எங்கேயோ(அரசியல்) இருக்க மக்களுக்கு நன்நெறி சொல்லும் மதங்களை மட்டும் தூற்றுவது ஒரு அறியான்மையே என்பது என் கருத்து.

பெண்களுக்கு நடக்கும் அல்லது சிறுவர்களுக்கு நடக்கும் பாலியல் துர்பிரயோகங்கள் சர்வசாதாரணமாக எல்லா இடங்களிலும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது.அதற்காக அதை சர்வசாதாரணமாக கடந்து செல்லவும் கூடாது.கடுமையான சட்டங்கள் மூலம் அதை களைந்தெறியப்பட வேண்டும். இதற்கு ஸ்திரமான அரசியல் சட்டங்கள் மட்டுமே உதவும்.
இன்றைய தினங்களில் பேசு பொருளாக இருக்கும் ஒரு செய்தி பல பிரபலங்களின் பாலியல் செய்திதான். ஒருவர் விளக்கமறியலில் இருக்கும் போதே தூக்கிலிட்டு உயிரை மாய்த்து தப்பித்துவிட்டார். இன்னும் பலர் பயத்தில் ஊசலாடிக்கொண்டிருக்கின்றனர். 
இந்த விடயத்தில் இப்போது முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டனின் பெயரும் காதோரம் கரடுமுரடாக ஒலிக்கின்றது.பெரிய பிரித்தானியாவின் இளவரசரும் சம்பந்தப்பட்டுள்ளார்.அது படங்களுடன் அத்தாட்சிப்படுத்தப்பட்டு விட்டது. இங்கே மதம் ஒரு துளியளவும் இல்லை

இங்கே நான் சொல்ல வருவது என்னவென்றால் உலகின் பல பிரச்சனைகளுக்கு மதமும் ஒரு காரணம். அதற்காக மதம் தான் காரணம் என நிறுதிட்டமாக கூறிவிட முடியாது.மதத்தில் இருக்கும் நற்சிந்தனைகளையும் வாழ்க்கைக்கு தேவையான அறிவுரைகளையும் எடுத்து விட்டு இடையில் புகுந்த மூட முரட்டு நம்பிக்கைகளை காணாமல் விடுவதே புத்திசாலித்தனம்.

செய்தி சொல்லும் படங்கள்.

Durchsuchung von Epstein-Anwesen in der Karibik - Panorama - SZ.de

Jeffrey Epstein: War Bill Clinton Gast auf Sex-Insel?

Fox News says 'mistakenly' edited Trump out of Epstein, Maxwell ...

மதங்கள் மக்களுக்கு நன்நெறி புகட்டுவது உண்மை என்றால் மத நம்பிக்கை உடையவர்கள்  அவ்வாறான நம்பிக்கை  அற்றவர்கள்களை விட ஒப்பீட்டு ரீதியில்  நல்ல நெறிகளுடன் திகழ வேண்டும். ஆனால் நடை முறையில் அவ்வாறு இல்லை. மனிதர்களில் பொதுவாக உள்ள தீய குணங்களான மற்றயவர்களை வெறுப்பது, பேராசை, அடுத்தவனை ஏமாற்றி பணம் உழைப்பது போன்ற இன்றாரென்ன குணங்கள் பொதுவாகவே பரவலாக உள்ளது. இன்னும் கூறப்போனால் மத நம்பிக்கை உள்ளவர்களிடம் தான் இவ்வாறான தீயகுணங்கள் சற்று அதிகமாகவே உள்ளது. அறிவியலாளன் கண்டு பிடித்த பல அறிவியல் கண்டு பிடிப்புக்களை அழிவு வேலைக்கு உபயோகித்தவர்கள் எல்லோரும் மத நம்பிக்கைப்படி வாழ்ந்தவர்களே.

மத நம்பிக்கை மனிதனை நல்ல நெறியுடையவனாக மாற்றும் என்றால் மதங்கள் தோன்றிய காலத்திற்கு இப்போது வாழும்  மனிதன் அனைத்து உயிர்களையும் நேசிக்கும் மனித நேயம் மிக்க மனிதனாக வாழ்ந்திருப்பான். ஆனால் நடைமுறையில் மற்றய இனங்களை அதிகமாக வெறுக்கும் குறுகிய மனம் கொண்டவர்களாக,  துவேசம் கொண்டவர்களாக  இருப்பவரகள் மிக அதிகமாக புராணங்களை நம்பும் மத நம்பிக்கை கொண்டவர்களே என்பதையே வரலாற்றில் மட்டுமல்ல தற்போதைய  காலத்திலும் கண்கூடாக பார்கிறோம்.          

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.