Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குதிரையை வண்டிக்கு பின்னால் பூட்டிய தமிழ் அரசியலும் குதிரை வண்டிக்கு முன்னால் பூட்டிய சிங்கள அரசியலும் - மு. திருநாவுக்கரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குதிரையை வண்டிக்கு பின்னால் பூட்டிய தமிழ் அரசியலும் குதிரை வண்டிக்கு முன்னால் பூட்டிய சிங்கள அரசியலும் - மு. திருநாவுக்கரசு

September 4, 2020
  • மு. திருநாவுக்கரசு

பாம்பை வாலில் பிடித்து விளையாட முனையும் பாலகனை போலவும், வானத்தில் பறக்கும் விமானத்தை பார்த்து அதைத் தன்னால் ஓட்ட முடியும் என்று கூறும் 3 வயது சிறுவனைப் போலவும் அரசியல் பிரகடனங்களை செய்யும் தமிழ் தலைவர்களின் அரசியல் உள்ளது.

அளவால் மிகவும் பெரிய சிங்கள பௌத்த இனம் அறிவியல் ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் செயல்முறை ரீதியாகவும் தேர்தல் மூலம் ஒன்றுதிரண்ட பெரும் அசுர பலம் கொண்ட சக்தியாய் உருப்பெற்றிருக்கும் போது , வளம் பொருந்திய ஆனால் அளவால் சிறிய தமிழினம் துண்டுபட்டு , சிதறுண்டு எதிரியின் காலடியில் கையேந்தி கிடக்கின்றது.

 

tamil_potical-leders-1024x684.jpgதமிழ் தலைவர்கள் யார் , எவர் எப்படித்தான் நெஞ்சை நிமிர்த்தி, மீசையை முறுக்கிக் கொண்டு நின்றாலும் தமிழ் மக்களை எதிரியின் காலடியில் வீழ்த்திவிட்டு, தமிழ் மக்களின் முகங்கள் சேற்றில் புதைந்திருக்கும் நிலையின் தங்கள் மீசையில் மண்படவில்லை என்று கூறும் சாகசப் பொம்மை வீரர்களாய் காட்சியளிக்கின்றனர்.

 

“அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி” என்று கூறும் சினிமா பாணி வசனங்களோ , “வானத்தில் இருக்கும் சந்திரனைப் பிடுங்கிவந்து உன் கழுத்தில் பதக்கமாய் தொங்கவிடுவேன்” என்று கூறும் பருவ வயது காதல் வசனங்களோ தமிழ் மக்களுக்கு ஒருபோதும் வாழ்வளிக்காது.

“நீங்கள் வானத்தில் கோட்டைகளைக் கட்டிவைத்திருந்தால் அவை எவ்வித சேதத்துக்கும் உள்ளாக இடமின்றி, நீங்கள் கட்டியவாறு அவை அங்கு அப்படியே இருக்கும். இப்போது நீங்கள் அவற்றிற்கு கீழே அத்திவாரங்களை இடுங்கள்”

 

“If you have built castles in the air your work need not be lost;

that is where they should be.

Now put the foundations under them.””

– Henry David Thoreau

என்ற ஹென்றி டேவிட் தோரோவின் கூற்றிற்கிணங்க தமிழ் மக்கள் கற்பனை அரசியலில் இருந்து விடுபட்டு முற்றிலும் நடைமுறைச் சாத்தியமான அரசியலுக்கு அத்திவாரம் போடவேண்டும்.

சுமாராக கடந்த முக்கால் நூற்றாண்டாய் “பொன்னன் முதல் சம்பந்தன் வரை” நாடாளுமன்ற மைதானத்தில் ஆடிய ஆட்டத்தால் ஓட்டம் எதனையும் எடுக்க முடியவில்லை. மாறாக தொடர்ந்து ஆட்டமிழந்ததே மிச்சம்.

 

தற்போது துடுப்புகள் கைமாறி உள்ளன. பந்தும் கைமாறி உள்ளது. ஒன்றரை இலட்சம் மக்கள் மீது துப்பாக்கி குண்டுகளை வீசிய தளபதி தற்போது நாடாளுமன்ற மைதானத்தில் தன் முதலாவது பந்து வீச்சின் போது “துடுப்பை உயர்த்தினால் தலைக்குப் பந்து வீசுவேன்” என்று தெளிவாக பிரகடனப்படுத்தி உள்ளார்.

“கடந்தக் காலத்தில் சிங்களவர்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் இறுதியில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.” முள்ளிவாய்க்காலில் குண்டு வீசிய தளபதியின் பந்துவீச்சு நாடாளுமன்றத்தில் இப்படி அமைந்துள்ள போது நாடாளுமன்ற துடுப்பாட்டத்தில் எந்தவிதமான விளையாட்டு விதிமுறைகளும் இருக்காது என்பது புலனாகிறது.

 

இரண்டாம் உலக மகா யுத்தம் முடிந்த பின்னான பனிப்போர் புதிய உலக ஒழுங்கின் கீழ் இலங்கையில் ஒரு புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டது போல கொரோனாவின் பின்னான புதிய உலக ஒழுங்கின் கீழ் தற்போது இலங்கையில் ஒரு புதிய அரசியல் யாப்பை உருவாக்கப் போவதாக ஆட்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இத்தருணத்தில் தமிழ் தலைவர்களும், தமிழ் அறிஞர்களும், தமிழ் மக்களும் இரண்டாம் உலக மகா யுத்தம் முடிந்த பின்னான உலக ஒழுங்கின் கீழ் உருவாக்கிய சோல்பரி அரசியல் யாப்பை நோக்கி தமிழ் தலைவர்கள் முன்வைத்த கோரிக்கை என்ன? , அதற்கு ஏற்பட்ட கதி என்ன? தொடர்ந்து தமிழ் தலைவர்கள் முன்வைத்த கோரிக்கைகள் என்ன? அவற்றிற்கெல்லாம் ஏற்பட்ட கதைகள் என்ன? என்ற வகையில் அனைத்தையும் சீர்தூக்கி ஆராய்ந்து சரியான அரசியல் மடிப்பீட்டை முதலில் செய்ததாக வேண்டும்.

எங்கு தொடங்கி எங்கு வந்து நிற்கின்றோம்? எங்களின் கோரிக்கைகளுக்கு எல்லாம் என்ன நடந்தது? இந்த தோழிகளுக்கு எல்லாம் யார் பொறுப்பு? தோல்விகள் ஏற்பட காரணங்கள் என்ன? இவற்றை எல்லாம் புத்திபூர்வமாக சரிவர ஆராய்ந்து விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் சரிவர எடைபோடாமல் நிகழ்கால , எதிர்கால அரசியலை ஒரு போதும் எதிர்கொள்ள முடியாது.

இப்போது தமிழ் அறிஞர்களும் தமிழ் தலைவர்களும் முதலில் கடந்தகால கோரிக்கைகளை சோல்பரி அரசியல் யாப்பில் இருந்து இன்று வரை முதலில் சரிவர பட்டியலிடவேண்டும். அடுத்து அந்தக் கோரிக்கைகள் பின்பு எப்படி தோல்வியடைந்தன என்பதையும் நேர்மையாக மதிப்பீடு செய்ய வேண்டும்.

இறுதி அர்த்தத்தில் குதிரையை வண்டிக்கு பின்னால் பூட்டி குதிரை வேகத்தில் வண்டியை பின்னோக்கி ஓட்டும் கதையாய் தமிழ் மக்களின் அரசியல் சுதந்திரத்திற்குப் பின்னான காலத்தில் இருந்து தன் பயணத்தைத் தொடர்கிறது.

இரண்டாம் உலக மகா யுத்தம் முடிந்த பின்பு தோன்றிய உலக அரசியல் ஒழுங்கை அன்றைய தமிழ் தலைவர்கள் சிறிதும் புரிந்து கொள்ளாமல், உலக அரசியல் போக்குக்கும் புவிசார் அரசியலுக்கும் இடையேயான தொடர்புகளை கண்கொண்டு பார்க்க முடியாமல் , இவற்றிற்கும் சோல்பரி அரசியல் யாப்புக்கும் இடையே உள்ள தொடர்புகளை புரிந்துகொள்ள இயலாமல் தமிழ் தலைவர்கள் இருந்ததுபோல் இன்றைய கொரோனாவின் பின்னான உலக ஒழுங்கை புரிந்துகொள்ள இயலாதவர்களாய் தமிழ் மக்களின் அரசியல் இனியும் இருக்கக் கூடாது.

இந்நிலையில் இன்றைய புதிய உலக அரசியல் போக்கையும் , சர்வதேச உறவுகளையும், புவிசார் அரசியலையும், பட்டுப் பாதை அரசியலையும், இந்தோ– பசிபிக் அரசியலையும் , இலங்கை அரசியலையும் ஈழத்தமிழரின் தலைவிதியையும் ஒன்றிணைத்து பார்க்கவல்ல நடைமுறை சாத்தியமான ஒரு புதிய பார்வையை தமிழ் தலைவர்களும் தமிழ் அறிஞர்களும் முதலில் கைக்கொள்ள வேண்டும்.

அத்தகைய தெளிவான வீரியம்மிக்க ஒரு பார்வையுடன் தமிழ் தலைவர்கள் தமக்கான போராட்ட வழிமுறைகளை வகுத்துக் , கையில் எடுத்துச் செயல்பட வேண்டும்.

அந்த வழிமுறைகள்தான் என்ன? அப்படியான வழிமுறைகளை உருவாக்குவதற்கு முதலில் ஜனநாயக நடைமுறைகளையும் அதற்கான கலாச்சாரத்தையும் கையில் எடுக்க வேண்டும். ஜனநாயகம் வழிமுறைகளும் அதற்கான கலாச்சாரமும் இன்றி ஒரு போதும் எம்மை முதலில் நாம் அணி படுத்த முடியாது , வழிப்படுத்தவும் முடியாது , வலுப்படுத்தவும் முடியாது.

சிங்களத் தலைவர்கள் குதிரைகளை வண்டிக்கு முன்னே பூட்டி , முன்னோக்கி வேகமாக பாய்கிறார்கள்; தமிழ் தலைவர்களோ குதிரைகளை வண்டிக்குப் பின்னால் பூட்டி பின்னோக்கி வேகமாய் பார்க்கிறார்கள். கடந்த முக்கால் நூற்றாண்டு கால அரசியலை கூட்டிக் கழித்துப் பார்த்தால் சிங்கள அரசியல் முன்னோக்கியும் தமிழ் அரசியல் பின்னோக்கியும் எதிர் சார்ப்பு வேகத்தில் பயணிக்கும் போது இடைவழி இரட்டிப்பாகி தமிழ் அரசியல் அதலபாதாளத் தோல்வியில் வீழ்ந்து கொண்டிருக்கின்றது.

இன்னிலையில் காணப்படும் யதார்த்தத்தைக் கணக்கில் எடுத்து தமிழ் மக்களுக்கென ஒரு பரந்த தேசிய அவையை உருவாக்க வேண்டும். இதில் அரசியல்வாதிகளையும், சமய – சமூக தலைவர்களையும், பொது அமைப்புகளின் தலைவர்களையும், அறிஞர்கள், ஊடகவியலாளர்கள், கலைஞர்கள், இலக்கிய கர்த்தாக்கள், ஓய்வுபெற்ற பணியாளர்கள் , மற்றும் பொதுமக்கள் பிரதிகள் என அனைவரையும் உள்ளடக்கிய ஒரு பரந்த தமிழ் தேசிய பேரவையை உருவாக்க வேண்டும்.

கிழக்குக்கான பிரதிநித்துவம், ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கான பிரதிநிதித்துவம், பெண்களுக்கான பிரதிநிதித்துவம் என்பனவெல்லாம் கருத்தில் எடுக்கப்பட்டு பரந்த தமிழ்தேசிய சிந்தனையுடன் இதனை வடிவமைக்க வேண்டும். அனைவரையும் அரவணைக்கவல்ல ஒரு குறியீட்டுப் பெறுமானம்மிக்க தலைவனது தோற்றத்தோடு கூட்டுத் தலைமையை உருவாக்க வேண்டும்.

தமிழ் மக்களின் வாழ்வில் நாடாளுமன்றத் தலைமை முடிவடைந்துவிட்டது. இனியும் மக்களுக்கு”” மாயமான் “” காட்டி தேரோடும் அரசியலை விட்டுவிட்டு புதிய அரசியல் வியூகத்துக்கு தயாராக வேண்டும். இதனை யார் முன்னெடுக்க வல்லவர்களோ அவர்களே மக்களின் தலைவர்கள் ஆவார்கள்.

1977 ஆம் ஆண்டு அசுர பலத்தோடு சிம்மாசனம் ஏறிய யானைகள் நாட்டை இரத்தச் சகதியாக் இறுதியில் இன்று சகதிக்குள் அந்த யானைகள் எல்லாம் வீழ்ந்து கவிழ்ந்து கிடக்கின்றன. தமிழ் மக்களுடன் அவர்களுக்கான உரிமைகளை பகிர்ந்து அமைதியும், சமாதானமும் வளமும் நிறைந்த நாட்டை உருவாக்குவதற்கு பதிலாக தமிழ் மக்களை ஒடுக்குவதற்காக அந்நியர்களிடம் கையேந்தி ஆயுதங்களை வாங்கி இந்த நாட்டையே அன்னியர்களின் வேட்டைக்காடாகவும் இரத்தக் காடாகவும் மாற்றுவதிற்தான் அவர்களின் அரசியல் முடிவடைந்தது. கூடவே அவர்களும் வீழ்ந்து கிடக்கிறார்கள்.

இனப்டுகொலை வெற்றிவாதத்தின் பின்னணியில் தற்போது 2020ஆம் ஆண்டு அசுர பலத்துடன் வாளேந்திய சிங்கங்கள் தாமரை மொட்டுடன் சிம்மாசனத்தில் அமர்ந்தாலும் பசிய தாமரை மொட்டை வெட்டிப் பிளக்கவல்ல பௌத்த மேலாதிக்கத்தின் கூரியவாள் சமாதானத்தை துண்டாடுமே தவிர நாட்டை ஒன்றாக்காது.

கொரானாவின் பின்னான புதிய சர்வதேச சூழலில் தமிழ் மக்களுக்குக் கிடைக்கக்கூடிய சிறிய, பெரிய எத்தகைய வாய்ப்புகளையும் பயன்படுத்தவல்ல புத்திக்கூர்மையும் , சாதுர்யமும் , சீரிய மனப்பாங்கும் கொண்ட தலைவர்கள் வாய்க்கப் பெறுவார்களேயானால் தமிழ் மக்கள் முன்னேற வாய்ப்புண்டு.

 

http://thinakkural.lk/article/66268

 

3 hours ago, கிருபன் said:

குதிரையை வண்டிக்கு பின்னால் பூட்டிய தமிழ் அரசியலும் குதிரை வண்டிக்கு முன்னால் பூட்டிய சிங்கள அரசியலும் - மு. திருநாவுக்கரசு

September 4, 2020
  • மு. திருநாவுக்கரசு

 

அளவால் மிகவும் பெரிய சிங்கள பௌத்த இனம் அறிவியல் ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவும் செயல்முறை ரீதியாகவும் தேர்தல் மூலம் ஒன்றுதிரண்ட பெரும் அசுர பலம் கொண்ட சக்தியாய் உருப்பெற்றிருக்கும் போது , வளம் பொருந்திய ஆனால் அளவால் சிறிய தமிழினம் துண்டுபட்டு , சிதறுண்டு எதிரியின் காலடியில் கையேந்தி கிடக்கின்றது.

தமிழ் தலைவர்கள் யார் , எவர் எப்படித்தான் நெஞ்சை நிமிர்த்தி, மீசையை முறுக்கிக் கொண்டு நின்றாலும் தமிழ் மக்களை எதிரியின் காலடியில் வீழ்த்திவிட்டு, தமிழ் மக்களின் முகங்கள் சேற்றில் புதைந்திருக்கும் நிலையின் தங்கள் மீசையில் மண்படவில்லை என்று கூறும் சாகசப் பொம்மை வீரர்களாய் காட்சியளிக்கின்றனர்.

“அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி” என்று கூறும் சினிமா பாணி வசனங்களோ , “வானத்தில் இருக்கும் சந்திரனைப் பிடுங்கிவந்து உன் கழுத்தில் பதக்கமாய் தொங்கவிடுவேன்” என்று கூறும் பருவ வயது காதல் வசனங்களோ தமிழ் மக்களுக்கு ஒருபோதும் வாழ்வளிக்காது.

“நீங்கள் வானத்தில் கோட்டைகளைக் கட்டிவைத்திருந்தால் அவை எவ்வித சேதத்துக்கும் உள்ளாக இடமின்றி, நீங்கள் கட்டியவாறு அவை அங்கு அப்படியே இருக்கும். இப்போது நீங்கள் அவற்றிற்கு கீழே அத்திவாரங்களை இடுங்கள்”

 

“If you have built castles in the air your work need not be lost;

that is where they should be.

Now put the foundations under them.””

– Henry David Thoreau

 

 

இணைப்புக்கு நன்றி கிருபன்

முகத்தில் அடித்தாற் போர் கூறியுள்ளார் திரு. மு. திருநாவுக்கரசு இவரது அரசியல் ஆய்வுகள் மிகவும் பெறுமதி வாய்ந்தவை. சமாதான காலப்பகுதியில் தமிழீழ தேசிய தொலைக்காட்சியில் (NTT)   அன்றிருந்த விடுதலைப்புலிகளின் தலைமைக்கு பல முறை தனக்கே உரிய பாணியில் சிலேடையாக எச்சரிக்கை விடுத்தார். அதனை புறக்கணித்து அவர் இப்போது கூறியவாறே  அடைந்தால் மகாதேவி இன்றேல் மரண தேவி என்ற ரீதியில் தமிழ் தலைமகள் அனைத்துமே  மேற்கொண்ட அரசியல், இராணுவ அணுகுமுறைகளின் விளைவையே இன்று அனுபவிக்கிறோம். 

இனியாவது எமது தமிழ் தலைமைகள் அறிவு பூர்வமான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.  மிகப்பெரும் பலத்துடன் இருக்கும் சிங்கள தேசியத்திற்கு இணையாயக தமிழ் தேசியத்தையும் எதிர்காலத்தில்  கட்டி எழுப்ப வேண்டுமானால் அதை முதல் காப்பாற்றவேண்டும். 

 எடுத்த‍கெல்லாம் எதிர்க்கும் பழைய பாணி  மோதல் போக்கை தவிர்த்து மென்முகத்தை காட்டும்   அதேவேளை, விட்டுகொடுக்க முடியாத விடயங்களில் மிக கடுமையாக  உறுதியாக நின்று  தமிழ் தேசியத்தை காப்பாற்ற  வேண்டுமானால்  மிக  அதிக எண்ணிக்கையான  ஆற்றலாளர்கள் குழு தமிழ் இனத்திற்கு தேவே. அனைவரும் அரசியல் வேறுபாடுகளுடன் என்றாலும்  இணைந்து தொடர்ந்து  பணியாற்றவும் வேண்டும். இனியும் தனி மனித கதாநாயக பழைய புராணம் பேசும்  சாகச அரசியலுக்கு இடமளிக்காது வேற்றுமையிலும் ஒற்றுமை என்ற ரீதியில் வெவ்வேறு  தமிழ் அரசியல் கட்சிகளில் உள்ள ஆற்றலாளர்கள், மேதைகள் ஒன்று பட்டு செயற்படவேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

Don't Put the Cart Before the Horse

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் தரப்பு, அதாவது இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களும் ஒன்றுசேர்ந்து அரசியலை எந்தவகையில் கொண்டுபோவது என முடிவெடுத்தால் மேற்கூறப்பட்டவிடையம் நிரந்தரமானதுமில்லை. நாம் கலக்கமடையக்கூடிய விடையமும் இல்லை.

இன்னும் மூன்று வருடங்களில் சிறீலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலும் அதற்கடுத்து பாராளுமன்றத்தேர்தலும் வந்துவிடும் இவை நீண்ட காலம் இல்லை.

இன்றே அவர்கள் வேலைத்திட்டங்களை ஆரம்பித்தால் நான் குறிப்பிடும் இலக்கை அடையலாம்.

இலங்கைத்தீவில் கடந்தகாலங்களில் தமிழர்கெதிராக நடந்த வன்முறைகள் அனைத்தும் இனப்படுகொலையே அதன் மூலாதாரமான இனச்சுத்திகரிப்பே அவை அனைத்தும் நடந்தது சர்வதேச விதிமுறைகளை மீறிய  போர்க்குற்றத்தினூடாகவே எனத் தமிழர் தரப்பு ஒரு பக்கத்திலும் 

இல்லை அப்படி எதுவும் நடக்கவில்லை என எம்மில் எவராவது சாதிப்பார்களாகவிருந்தால் அதைப் பொதுவெளியில் நேர்மையாகக் கூறி தற்போதைய டக்ளஸ் அங்கயன் விஜயகலா வகையறாக்களுடன் இன்னுமொருதரப்பாக நின்று எகிர்வரும் தேர்தலை ச் சந்தித்தால் நாம் சரியான பாதையில் பயணம் செய்ய ஆரம்பித்துள்ளோம் எனும் அறுகுறி தென்படும்.

அதைத்தவிர அனைத்துத் தமிழ்தேசியம் பேசும் கட்சிகளும் எதிர்வரும் சிறீலங்காவின் அதிபர் தேர்தலில் பொது வேட்பாளரை அறிவித்து அத்தேர்தலை தமிழர்கான சர்வஜன வாக்கெடுப்பாக மாற்றினால் சர்வதேசத்துக்கு எமது செய்தியச் சுலபமாகக் கூறி அடுத்த கட்டத்துக்கான பயணத்தைத் தொடங்கலாம்.

இது கொக்குத் தலையில் வெண்ணை வைத்து கொக்கைப் பிடிக்கும் வேலை. ஆனால் முயன்றுபார்க்கலாம்.

16 hours ago, Elugnajiru said:

தமிழர் தரப்பு, அதாவது இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களும் ஒன்றுசேர்ந்து அரசியலை எந்தவகையில் கொண்டுபோவது என முடிவெடுத்தால் மேற்கூறப்பட்டவிடையம் நிரந்தரமானதுமில்லை. நாம் கலக்கமடையக்கூடிய விடையமும் இல்லை.

இன்னும் மூன்று வருடங்களில் சிறீலங்காவின் அடுத்த அதிபர் தேர்தலும் அதற்கடுத்து பாராளுமன்றத்தேர்தலும் வந்துவிடும் இவை நீண்ட காலம் இல்லை.

இன்றே அவர்கள் வேலைத்திட்டங்களை ஆரம்பித்தால் நான் குறிப்பிடும் இலக்கை அடையலாம்.

இலங்கைத்தீவில் கடந்தகாலங்களில் தமிழர்கெதிராக நடந்த வன்முறைகள் அனைத்தும் இனப்படுகொலையே அதன் மூலாதாரமான இனச்சுத்திகரிப்பே அவை அனைத்தும் நடந்தது சர்வதேச விதிமுறைகளை மீறிய  போர்க்குற்றத்தினூடாகவே எனத் தமிழர் தரப்பு ஒரு பக்கத்திலும் 

இல்லை அப்படி எதுவும் நடக்கவில்லை என எம்மில் எவராவது சாதிப்பார்களாகவிருந்தால் அதைப் பொதுவெளியில் நேர்மையாகக் கூறி தற்போதைய டக்ளஸ் அங்கயன் விஜயகலா வகையறாக்களுடன் இன்னுமொருதரப்பாக நின்று எகிர்வரும் தேர்தலை ச் சந்தித்தால் நாம் சரியான பாதையில் பயணம் செய்ய ஆரம்பித்துள்ளோம் எனும் அறுகுறி தென்படும்.

அதைத்தவிர அனைத்துத் தமிழ்தேசியம் பேசும் கட்சிகளும் எதிர்வரும் சிறீலங்காவின் அதிபர் தேர்தலில் பொது வேட்பாளரை அறிவித்து அத்தேர்தலை தமிழர்கான சர்வஜன வாக்கெடுப்பாக மாற்றினால் சர்வதேசத்துக்கு எமது செய்தியச் சுலபமாகக் கூறி அடுத்த கட்டத்துக்கான பயணத்தைத் தொடங்கலாம்.

இது கொக்குத் தலையில் வெண்ணை வைத்து கொக்கைப் பிடிக்கும் வேலை. ஆனால் முயன்றுபார்க்கலாம்.

தமிழ் மக்களை பொறுத்தவரை உரிமை போராட்டத்திற்காக போராடிய தரப்புகளுக்கு என்றும் ஆதரவளிப்பவர்களாகவே இருந்துள்ளனர். ஆயுதப்போராட்டத்திற்கு முதலும் சரி ஆயுதப்போராட்ட காலத்திலும் சரி அதே நிலையே இருந்த‍து.  அதுவே எமது வரலாறு. ஆனால் அதை நடத்தியவர்கள் தான் தமது வாக்கு வேட்டை அரசியலுக்காவும்  சர்வதேச அரசியல் பற்றிய தப்பு க‍ணக்குகளாலும் செயற்திறன் அற்ற அரசியல் நகர்வுகளாலும் தனியே ஆயுத‍த்தால் வெல்ல‍லாம் என்ற ம‍மதையினாலும்  இன்றைய   எதிர்மறை நிலைமைக்கு கொண்டுவந்தனர்.  ஆகவே  மக்களின்  பொது வேட்பாளர், சர்வசன வாக்கெடுப்பு போன்றவற்றை செய்வதோடு நிறுத்தாமல் உலக அரசியலை திறம்பட நடத்ததும் வல்லுனர்களே தேவை. இன்றைய பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும்  அரசியல் கட்சிகள் தமது வேறுபாடுகளுக்கு அப்பால் அவ்வாறான அரசியல் வல்லுனர்களை உருவாக்க வேண்டு்ம். எமது பழைய தவறுகளால் வந்த அனுபவங்களை புதியவர்களுக்கு கற்பிக்கவேண்டும். அதன் மூலம் அவர்கள் சிறப்பான செயல் திறனை ஊக்குவிக்க் வேண்டும். 

ஆயுதப்போராட்டம் கூர்மையடைந்து வந்த 1990 களில் இருந்து ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபை முன்னால் நடத்தப்பட்ட அனைத்து ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டடங்கள்  அனைத்திலும் மிக எழுச்சியுடன் தமிழ் மக்கள் கலந்து கொண்டனர். ஆனால் அது பலனளிக்காமல் போனதன் காரணம் அந்த ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்தோர் தனியே மக்கள் எழுச்சி, அதன் மூலம் போராட்டத்திற்கான நிதி சேகரிப்பு  என்று மக்களை தூண்டுவதுடன் நின்றனரே தவிர ஜெனிவா உள்ளே உலக ராஜதந்திரிகளின் மனங்களை வெல்வதற்கான நடவடிக்கைகளில் பெரிதாக ஈடுபடவில்லை. ஒரு சிலர் மட்டும் கடுமையாக அங்கு உழைத்தாலும் அது போதுமானதாக இருக்கவில்லை. சிறந்த ராஜத்தந்திர பொறிமுறையை, அதற்கான வேலைத்திட்டத்தத்தை உருவாக்காமல் மக்களை உசுப்பேற்றி மக்களை பெருமளவில் கூட பண்ணி எழுச்சியை ஏற்படுத்துவதன் மூலம் சாதித்துவிட முடியும் என்று கனவுலகில் அன்றயை அரசியல் ஏற்பாட்டடாளர்கள் வாழ்ந்தனர்.  ஆகவே தற்போது அப்படியான தவறுகளை விடாமல் உலக மட்டதில் எமது அரசியலை கொண்டு செல்ல முயல்வதன் மூலமே எதிர் காலத்திலாவது மாற்றங்களை கொண்டுவர முடியும்.  எல்லோராலும் அதை செய்ய முடியாது. அதற்குரிய அரசியல் அறிவு கொண்டவர்களாலேயே முடியும். 

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

நேற்று நான் எதேச்சையாக ஐ பி சி தமிழ் நடாத்திய கலந்துரையாடல் நிகழ்சியைப் பார்த்தேன்

அதில் தமிழ்தேசிய மக்கள் முண்ணணியைச் சேர்ந்த காண்டீபன் அவர்கள் ஒரு விடையத்தைக் கூறினார் அதாவது ரொகிங்கா முஸ்லீம்கள் மியன்மரிலிருந்து வெளியேற்றியது இனச்சுத்திகரிப்பின் ஒரு வடிவம் எனவும் சீனா மற்றும் மியன்மரின் நிர்வாகம் சர்வதேச மனிதக்குற்றவியல் நீதிமன்றின் ஆவணத்தில், சிறீலங்காபோலவே கைச்சாத்திடாதுவிடினும். ரொகிங்கா முஸ்லீம்கள் இறுதியில் அகதிகளாகத் தஞ்சமடைந்த பங்களாதேசம் தனது விடுதலைக்குப்பின்னரான அண்மைய நாளிலேயே அதில் கைச்சாத்திட்டதனால் பாதிக்கப்பட்ட தரப்பு வந்துசேர்ந்த இடம் வங்களாதேசம் என்பதால் வங்களாதேசமே தன்னிச்சையாக குற்றவியல் நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தது என.

ஆகவே, போர்க்குற்றம் சிறீலங்காவில் நடைபெற்றலும் அந்நாடு குற்றவியல் நீதிமன்றில் கைச்சாத்திடாலிருந்தாலும் அந்நாட்டு மக்கள் அதன் பாதிப்பின் காரணமாக இடம்பெயர்ந்து வாழும் நாடு அப்போர்க்குற்றத்துக்கான விசாரணை கோரி சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் வழக்குத்தொடரலாம் எனும் கோதாவில்.

புலம்பெயர்ந்துவாழும் நாம்  வாழும் நாடுகளின் அரசாங்களைக் தொடர்சியாகக் கோரிக்கைவிடும் பட்சத்தில் சர்வதேசப் போர்க்குற்ற நீதிமன்றில் சிறீலங்காவை முன்னிறுத்தலாம் 

ஆனால் இவை எப்போது சாத்தியமாகுமெனில் காண்டீபன் கூறிய விடையம் நடைமுறையில் சாத்தியமாகுமாஎன்பதிலும் அப்படிச் சாத்தியமானல் புலம்பெயர் தமிழர்களது ஒற்றுமையான் செயற்பாட்டிலுமேயாகும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.