Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சி, பரந்தன் – பூநகரி வீதியூடான போக்குவரத்துகள் நாளை முதல் தற்காலிக நிறுத்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

தற்போதும்  சரி செய்யப்படுகிறது பாலம் தாண்டிய பகுதி காப்பற் வீதிகளாக கொக்கட்டி சோலை வரைக்கும் செல்லலாம் என நினைக்கிறன் 

சிறப்பு 👍🏿

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

வெற்று ரவை கூடுகளை பொறுக்கி அவற்றை, தர வரிசை படுத்தி, ஏனைய மாணவர்களோடு பண்டமாற்று செய்து வாழ்ந்த ஒரு சபிக்கபட்ட சந்ததியின் பிள்ளைகள் நாங்கள்.

உண்மை, நான் செய்திருக்கிறேன்.

கோண்டாவிலில் இருந்த காலங்களில் ஒவ்வொரு சனிக்கிழமை காலையிலும் நானும் தம்பியும் தெல்லிப்பழையில் இருக்கும் எங்கள் அப்பம்மாவின் வீட்டிற்குச் சென்றுவிடுவோம். அப்பாவின் பழைய ரலிச் சைக்கிள்தான் எங்களின் தோழன். தம்பி முன்னாலிருந்து ஒற்றைக்காலால் உளக்கித்தர ஆசை ஆசையாக தெல்லிப்பழை நோக்கிப் பயணமாவோம். உரும்பிராய்ச் சந்தியிலிருந்து மருதனார்மடம் வரை செல்லும் வீதியின் இருமருங்கிலும் இருக்கும் செக்கச் சிவந்த செம்மண் தோட்டங்களும், மரவள்ளிக் கன்றுகளும் கண்ணுக்கு அழகு. தெல்லிப்பழையில் எமது மச்சான்மாரையும் இன்னும் பல நண்பர்களையும் காணப்போகிறோம் என்னும் நினைவே இனிதாக, சைக்கிள் உசாராக உதைப்போம். ஆனால், இதைவிடவும் இன்னொரு காரணமும் இருக்கிறது, அதுதான் ரவுன்ஸ்!

எனது அப்பம்மாவின் வீடு, தெல்லிப்பழை ஆஸ்ப்பத்திரிக்குப் பின்புறமாகச் செல்லும் டச்சு ரோட்டிலிருந்து. தோட்டவெளிகளுக்குள்ளால் செல்லும் பெரிய மண்பாதையில் இருக்கிறது. எமது வீட்டின் பின்னால் கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் பனங்காடு. ஒரு சில கிலோ மீட்டர்களில் பலாலி விமானத் தளம். அடிக்கடி ஏறியிறங்கும் விமானங்களினதும், ஹெலிகளினதும் சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கும். கட்டுவன் சந்தி மற்றும், தையிட்டி பகுதியிலிருந்த புலிகளின் காப்பரண்கள் நோக்கி பெல் 212 ஹெலியிலிருந்து 50 கலிபர் துப்பாக்கிகளால் சிங்களம் பொழிந்து தள்ளும்.

ஹெலி தாக்குதல் முடிந்து சென்றபின்பு எமது வேலை சூடு விழுந்த இடங்களிலிருந்து 50 கலிபர் சன்னங்களின் வெற்று ரவைக் கூடுகளையும், அவற்றுடன் சேர்ந்தே அப்பகுதியெங்கும் வீழ்ந்திருக்கும் பெல்ற் (கறுப்பு நிறத்திலான ரவைச் சங்கிலி) ஆகியவற்ரையும் ஓடியோடிப் பொறுக்குவோம். சில சமயங்களில் வெடிக்காத ரவைகளும் கிடைக்கும், அதன் மவுசே தனி. 

ஞாயிற்றுக்கிழமை மாலை மீண்டும் எமது வெற்றிக் கேடயங்களுடன் (வேறு என்ன, வெற்று ரவைக் கூடுகள் தான்), கோண்டாவில் நோக்கிய எமது சைக்கிள் பயணம் ஆரம்பமாகும். அடுத்தநாள் பள்ளிக்கூடத்தில் நண்பர்களுக்கு விலாசம் காட்ட எடுத்துச் செல்லும் வெற்று ரவைக் கூடுகளின் நினைவுடன் சைக்கிள் பயணம் நடக்கும். 

திங்கட்கிழமை காலையிலேயே வகுப்பில் அருகில் அமர்ந்திருக்கும் மாணவனிடம் லேசாக நான் மறைத்துக் கொண்டுவந்திருக்கும் 50 கலிபர் ரவைக் கூட்டைக் காட்டுவேன். நகர்ப்புற யாழ்ப்பாணத்தில் இவை அரிதென்பதால் அவன் ஆச்சரியத்துடன் அவற்றைப் பார்ப்பான். பின்னர் செய்தி மெது மெதுவாக பக்கத்து வாங்கில், பின்வாங்கில், முன்வாங்கில் என்று பரவவே, எல்லோரும் எனது மேசையினைச் சுற்றிக் கூடிவிடுவார்கள். பிறகென்ன, ரவுன்ஸ் எடுக்க நாங்கள் போட்ட வீரப் பிரதாபக் கதைகளோடு பண்டமற்று நடக்கும். சிலவேளைகளில் ஸ்டிக்கர் அல்லது விளையாடும் மாபிள். அவ்வப்போது பணமும்தான். 

அது ஒரு காலம், பொற்காலம் என்று கூறமுடியாது, வேண்டுமென்றால் பித்தளை என்று கூறலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ரஞ்சித் said:

அது ஒரு காலம், பொற்காலம் என்று கூறமுடியாது, வேண்டுமென்றால் பித்தளை என்று கூறலாம்.

நான் இப்போதும் நினைப்பதுண்டு இது எனது வாழ்வின் பொற்காலமா? இருண்டகாலமா என்று? 

அதி உச்ச சந்தோசத்தையும் அதி உச்ச கவலையையும் தந்த bittersweet காலம் என்பதுதான் சரி.

  • கருத்துக்கள உறவுகள்

அக்காலங்களைப் பொற்காலம் எனக்கூறமுடியாது 

ஆனால் கொம்படிப்பாதைப்பயணமும் கிளாலிக்கடல்பாதைப் பயணமும் செய்த அனுபவம் இனிவரும் காலங்களில் எவருக்கும் கிடையாது.

சிலவேளை Saving Private Ryan எனும் படத்தில் வரும் காட்சியைப்போல நோர்ட் மன்டி தரையிறக்கம் எடுத்த ஸ்டீபன் ஸ்பீல்பேர்க் போல யாராவது ஒரு திரைப்பட இயக்குணர் எங்களில் வந்தால் கிளாலிப்பாதைப் பயணத்தையும் கொம்படிப்பாதைப் பயணத்தையும் பால்ராஜரின் குடாரப்புத் தரையிறக்கத்தையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு படம் வெளிவரலாம் அதுக்கு இன்னமும் ஐந்து சந்ததிகளாவது காத்திருக்கவேண்டும் அப்போது நல்லது நடந்தால்தான் நடக்குமா?

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

கதையோட கதையாக ஒரு விடையம் 
நான் இன்னுமொரு திரியில் புதிய புலம்பெயர் தமிழர் குழுவொன்று இந்தியாவுடைய அனுசரணயுடன் வெளிக்கிட்டு வருகுது அது இந்திய அரசியல் நலனுக்குச் சார்பாக உருவெடுக்குது எனக்கூறியிருந்தேன் அதில் விக்கியரும் அடக்கம் என 

பரந்தராஜன் உட்பட்ட பேர்வளிகலூம் அடக்கம் எனக்கூறி கனடாவில் இப்போது குடியேறியிருக்கும் ரகீம் எனும் கிட்டருடன் திரிந்த ஒருவரும் வெளியால வருகிறார் எனவும் கூறியிருந்தேன் இன்றைய பதிவு இணையத்தளத்தில் அவர் மெல்ல வருகிறார் 
புலிகளிடம் சரணாகதியடைந்த அமைசர் எனும் தலைப்பில் ஆக பூனைக்குட்டிகள் வெளிவரத்தொடங்கிவிட்டன. இந்தப் பதிவினை இயக்குவது ஏழாலை மணியம் விதானையின் மகன்.

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Elugnajiru said:

அந்த காலத்தை எந்த பராயத்தில் தாண்டி வந்தோம் என்பதும் இதில் ஒரு காரணி என நினைகிறேன். இளம் கன்றுகளாக அதிக பயம் அறியாமல் இருந்தோருக்கு அந்த காலத்தின் முழுப் பயங்கரமும் ஆபத்தும் விளங்கியிராது. 

இப்படி ஒரு படம் அப்போது வருவதாயின் அந்த நிகழ்வுகளை இப்போதே நாம் கதைகளாக, நாட்குறிப்புகளாக, ஏன் யாழ்கள பதிவுகளாக பதிந்து வைப்பது அவசியம்.

2100 இல் ஒரு தமிழ் ஸ்பீல்பேர்க் தனது படத்தின் ரிசேர்சுக்காக யாழின் ஆக்கைவ்சை அலசக்கூடும்.

42 minutes ago, Elugnajiru said:

கதையோட கதையாக ஒரு விடையம் 
நான் இன்னுமொரு திரியில் புதிய புலம்பெயர் தமிழர் குழுவொன்று இந்தியாவுடைய அனுசரணயுடன் வெளிக்கிட்டு வருகுது அது இந்திய அரசியல் நலனுக்குச் சார்பாக உருவெடுக்குது எனக்கூறியிருந்தேன் அதில் விக்கியரும் அடக்கம் என 

பரந்தராஜன் உட்பட்ட பேர்வளிகலூம் அடக்கம் எனக்கூறி கனடாவில் இப்போது குடியேறியிருக்கும் ரகீம் எனும் கிட்டருடன் திரிந்த ஒருவரும் வெளியால வருகிறார் எனவும் கூறியிருந்தேன் இன்றைய பதிவு இணையத்தளத்தில் அவர் மெல்ல வருகிறார் 
புலிகளிடம் சரணாகதியடைந்த அமைசர் எனும் தலைப்பில் ஆக பூனைக்குட்டிகள் வெளிவரத்தொடங்கிவிட்டன. இந்தப் பதிவினை இயக்குவது ஏழாலை மணியம் விதானையின் மகன்.

உங்கள் அந்த பதிவை கவனித்தேன். பதிவு.காம் ஐ பார்கிறேன். இது பற்றிய மேலதிக தகவல்கள் கிடைத்தால் பகிரவும்.

இப்போ நாம் இருக்கும் நிலைக்கு இதையும் டிரை பண்ணி பார்க்கலாம்? 

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் தமிழர்களுக்கு காட்டிற அபிவிருத்தி இப்படித்தான் இருக்கும். அவனே எடுக்கிறது பிச்சை இதில.. இவை பெரிசா கனவு காணுறது.. வாக்கை கொடியவன்களுக்கும் கொலைஞர்களுக்கும் அள்ளிப் போடுறது. போட்டிட்டு.. குத்துது குடையுது என்று புலம்புறது. இதுவே வாடிக்கையாகப் போய்விட்டது நம்மவருக்கு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.